Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
கர்ணன் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Sun, 13 Jun 2021 08:20:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png கர்ணன் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 IMDB தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் https://touringtalkies.co/master-movie-gets-number-one-place-of-imdb-best-movies-list-of-2021/ Sun, 13 Jun 2021 08:19:23 +0000 https://touringtalkies.co/?p=15515 கொரோனா இரண்டாம் அலை தாக்குதலினால் இந்தியாவில் சினிமா துறை முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்தாலும் பல முக்கிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியிடாமல் ஓடிடிக்களில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கின்றன. இந்த நிலையில் IMDB எனப்படும் இணையத்தள திரைப்பட புள்ளியியல் அமைப்பு இந்தாண்டு இதுவரையிலும் வெளியான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. ‘Aspirants’ என்ற வெப் சீரீஸ் 2-வது இடத்தையும், ‘The […]

The post IMDB தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
கொரோனா இரண்டாம் அலை தாக்குதலினால் இந்தியாவில் சினிமா துறை முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்தாலும் பல முக்கிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியிடாமல் ஓடிடிக்களில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கின்றன.

இந்த நிலையில் IMDB எனப்படும் இணையத்தள திரைப்பட புள்ளியியல் அமைப்பு இந்தாண்டு இதுவரையிலும் வெளியான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

‘Aspirants’ என்ற வெப் சீரீஸ் 2-வது இடத்தையும், ‘The White Tiger’ என்ற வெப் சீரீஸ் 3-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

ஜீத்து ஜோஸப் இயக்கிய மோகன்லாலின் ‘திருஷ்யம்-2’ திரைப்படம் 4-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

தமன்னாவின் நடிப்பில் சமீபத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியான ‘நவம்பர் ஸ்டோரி’ திரைப்படம் 5-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

அமேஸான் பிரைமில் வெளியான தனுஷின் ‘கர்ணன்’ 6-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

அதே அமேஸான் பிரைமில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘வக்கீல் சாப்’ திரைப்படம் 7-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

சோனி லைவ் ஓடிடியில் வெளியான ‘மகாராணி’ என்னும் வெப் சீரீஸ் 8-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

ஆஹா ஓடிடி தளத்தில் ‘கிராக்’ என்னும் திரைப்படம் 9-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

அமேஸான் பிரைமில் வெளியான ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ என்ற மலையாளத் திரைப்படம் 10-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

The post IMDB தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
கர்ணன் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/karnan-movie-review/ Fri, 09 Apr 2021 14:06:19 +0000 https://touringtalkies.co/?p=14261 தமிழ் சினிமாவில் இதுவரையிலும் பேசப்படாத அரிய மனிதர்களின் கதைகளைப் பற்றிப் பேசும் படங்களில் மிக முக்கியமானதொரு இடத்தை இந்தக் ‘கர்ணன்’ படம் பிடித்துள்ளது. படம் 1997-ல் ஆரம்பித்து 2007-ல் முடிகிறது. அப்போதைய வ.உ.சிதம்பரனார் மாவட்டத்தில் இருக்கிறது ‘பொடியன்குளம்’ என்ற கிராமம். முழுக்க, முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் இந்தக் கிராமம் முற்றிலும் அந்நியப்பட்டிருக்கிறது. பக்கத்து ஊரான மேலூரில் வசிக்கும் வேறொரு சமூகத்தினர் இவர்களை இகழ்ச்சி செய்து கொண்டேயிருக்கிறார்கள். பொடியன்குளம் கிராமத்தில் பஸ் ஸ்டாப்பிங்கே கிடையாது. அனைவரும் மேலூர் […]

The post கர்ணன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் இதுவரையிலும் பேசப்படாத அரிய மனிதர்களின் கதைகளைப் பற்றிப் பேசும் படங்களில் மிக முக்கியமானதொரு இடத்தை இந்தக் ‘கர்ணன்’ படம் பிடித்துள்ளது.

படம் 1997-ல் ஆரம்பித்து 2007-ல் முடிகிறது. அப்போதைய வ.உ.சிதம்பரனார் மாவட்டத்தில் இருக்கிறது ‘பொடியன்குளம்’ என்ற கிராமம். முழுக்க, முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் இந்தக் கிராமம் முற்றிலும் அந்நியப்பட்டிருக்கிறது. பக்கத்து ஊரான மேலூரில் வசிக்கும் வேறொரு சமூகத்தினர் இவர்களை இகழ்ச்சி செய்து கொண்டேயிருக்கிறார்கள்.

பொடியன்குளம் கிராமத்தில் பஸ் ஸ்டாப்பிங்கே கிடையாது. அனைவரும் மேலூர் பஸ் ஸ்டாப்பிற்கு வந்துதான் பஸ் ஏற வேண்டும். மேல் சாதீ, கீழ் சாதி என்ற சாதியப் பிரிவினை இந்த மேலூர் சாதிக்கார மக்களிடத்தில் அதிகமாக இருப்பதால் இருவரிடையேயும் பகையுணர்வு உண்டு.

இந்தப் பொடியன்குளத்தைச் சேர்ந்தவர்தான் ‘கர்ணன்’ என்னும் தனுஷ், அம்மா, அப்பா, அக்கா என்ற குடும்பத்துடன் இருப்பவருக்கு உற்ற தோழர் அவரது தாத்தா வயதான ‘ஏமராஜா’ என்னும் லால்.

இந்தக் கிராமத்தில் இருக்கும் இள வயதுக்காரர்களெல்லாம் துடிப்புடன் நாமும் மனிதர்கள்தான் என்ற எண்ணத்தில் இருக்க.. ஊர்ப் பெரியவர்களோ சுற்றுப்பக்க கிராமங்களில் வசிக்கும் மேல் சாதீ மக்களிடையே பணிந்து போய்தான் பிழைப்பை நடத்த வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

சாதி வெறிபிடித்த கண்ணபிரான் என்னும் ‘நட்டி’ நட்ராஜ், அந்த மாவட்டத்துக்கு காவல்துறை கண்காணிப்பாளராக வந்து சேர்கிறார். இந்த நேரத்தில் அந்த ஊரில் பஸ்ஸை நிறுத்த வேண்டும் என்பதற்காக நாயகன் கர்ணன் கோபத்தில் செய்யும் அடிதடி அந்த ஊருக்குள் போலீஸாரை கொண்டு வந்து சேர்க்கிறது.

ஊர்ப் பெரியவர்களை அடித்து உதைக்கிறார் நட்டி நட்ராஜ். இதைத் தட்டிக் கேட்கப் போன கர்ணன் கோபத்தில் போலீஸ் ஸ்டேஷனையே சூறையாடிவிடுகிறார். இதனால் கோபப்படும் மாவட்ட போலீஸ் மொத்தமும் அந்த ஊரையே சூறையாடுகிறது.

இதற்காக கர்ணனை கைது செய்யத் துடிக்கிறார் நட்டி நட்ராஜ். கர்ணன் சிக்கினாரா..? இல்லையா…? என்பதுதான் மீதிக் கதை..!

கர்ணனாக தனுஷ். மீண்டும் ஒரு தேசிய விருது ரெடி என்று சொல்லும் அளவுக்கு தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். சாதாரணமான தோற்றத்தில் கட்டிய கைலியுடன் ஊருக்குள் திரியும் அவர் எப்போதும் தனக்குள் ஒரு கனன்று கொண்டிருக்கும் தீயுடன் திரிகிறார்.

“உன்னைய அடிச்சே கொன்னுருவேன்…” என்று தனுஷ் தனது அம்மா, அப்பா, அக்காள், தாத்தா லால், ஊர்ப் பெரியவர்கள், நண்பர்கள் என்று அனைவரிடமும் கோபப்படுகிறார். அந்த அளவுக்கு வீரமான இளைஞனாக இந்தக் கர்ணனைக் காட்டியிருக்கிறார்கள்.

சாதிய ரீதியாக, அடிமையாக தன்னை யார் நடத்தினாலும் எதிர்க் கேள்வி கேட்பேன் என்ற தைரியமான இளைஞர் கதாபாத்திரத்தை அநாயசமாக செய்திருக்கிறார் தனுஷ்.

தன் கிராமத்து மக்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக அவர் ஓங்கி குரல் கொடுப்பதும்.. அந்தக் குரலுக்கு ஊது குழல்கள் வராதபோது அந்த ஊர் மக்களுக்கு அவர்களின் அடிமைத்தனத்தைக் குத்திக் காட்டிப் பேசுவதுமாக இன்றைய இளைய தலைமுறையின் மனோபாவத்தைக் கச்சிதமாகக் காட்டியிருக்கிறார் தனுஷ்.

தனக்குக் கிடைத்த வேலையைக் கூட தனது இன மக்களுக்காக தியாகம் செய்துவிட்டு அவர்களுக்காக ஒரு கொலையையும் செய்துவிட்டு தண்டனையை அனுபவிக்கும் அந்தத் தியாக கதாபாத்திரத்திற்கு தனது நடிப்பின் மூலமாக மிக, மிக நியாயம் சேர்த்திருக்கிறார் தனுஷ்.

ஒரு பக்கம் தனது சமூகம் பற்றிய கவலை.. இன்னொரு பக்கம் தனது காதலியுடனான பிரச்சினை.. இரண்டையுமே சக களத்தில் சந்தித்து நொடியில் புன்னகை சிந்தும் அந்த நொடியில் அகாசய நடிகன்டா நீ என்ற பெயரை தனுஷ் எடுக்கிறார்.

அவருடைய தோற்றமும், உடல் வாகுவும் தனுஷுக்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். இது போன்ற கேரக்டர்களை மிக அலட்சியமாகத் தட்டித் தூக்கிவிடும் வகையில் தனது உடல் மொழியையும் பல காட்சிகளில் கொடுத்திருக்கிறார் தனுஷ். முக்கியமாக பஸ்ஸை அடித்து, உடைக்கும் காட்சியில் அவரது ஒட்டு மொத்த உடலும் சேர்ந்தே நடித்திருக்கிறது.

‘நட்டி’ நட்ராஜின் இறுதி நிமிடத்தில் தனுஷ் பேசும் அந்தக் கொலைவெறி வசனம்தான் அவரது நடிப்பின் உச்சக்கட்டம் என்றே சொல்லலாம். வெல்டன் தனுஷ். நிச்சயமாக அடுத்த வருடமும் தேசிய விருது உங்களுக்குத்தான்..!

அடுத்து மனதில் நிற்கும் கதாபாத்திரத்தைச் செய்திருப்பவர் மலையாள நடிகர் லால். அவரின் தோற்றமே இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது எனலாம். ‘ஏமராஜா’ என்ற பெயரில் இவர் ஏற்றிருக்கும் அந்தக் கேரக்டருக்கு இவரைத் தவிர வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

தனுஷூடன் வயது, வித்தியாசம் பார்க்காமல் பழகுவதும்.. பேருந்தில் இருந்து கீழே விழுந்த தனுஷை சமாதானம் செய்யப் போய் அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு உண்மையை ஒப்புக் கொள்ளும் காட்சியில் தனுஷையே மிஞ்சிவிட்டார் லால்.

மிக, மிக யதார்த்தமான கதாபாத்திரமாக இதனைப் படைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். தனது இறந்து போன மனைவியை நினைத்து அந்தப் பாடல் காட்சியில் உருகும்போதும், தனுஷை வேலைக்குப் போய் சேரும்படி கெஞ்சிக் கூத்தாடி அனுப்பி வைக்கும்போதும் அவரது கதாபாத்திரம் மிகவும் ரசிக்கத்தக்கதாக மாறிவிட்டது. இறுதியில் தன்னைத் தானே தியாகியாக்கிக் கொண்டு ஊர் மக்களைக் காப்பாற்றும் அந்தத் தருணத்தில் இந்தப் படத்தின் மறக்க முடியாத ஒரு கேரக்டராகவே மாறிவிட்டார் லால். வெல்டன் ஸார்..

காதலியான ரெஜிஷா விஜயனின் துறுதுறு ஆட்டமும், பேச்சும், ஓட்டமும் இளம் காதலிகளைக் காட்டினாலும் சரியாக நடிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர். தனது அண்ணனுக்காக நியாயம் கேட்கப் போய் காதலனை கோபிப்பதும், அதே காதலனிடம் திரும்பி வந்து மன்னிப்பு கேட்டு “என்னை மன்னிச்சுக்கோ” என்று சொல்லவிட்டு கட்டிப் பிடிப்பதும் காதல் கவிதையாய் தனது கண்களால் நம்மைக் கட்டிக் கொள்கிறார் ரெஜிஷா. பாடல் காட்சிகளில் இவரது குளோசப் ஷாட்டுகள்தான் திரையை ஆக்கமிரக்கின்றன.

மேலும் சாதி வெறி பிடித்த எஸ்.பி.யாக நட்டி’ நட்ராஜ் வெறுமனே வார்த்தைகளாலேயே அடுத்து நடக்கப் போவதைச் சொல்லிக் காட்டுகிறார். தனது அதிகாரத் திமிரைவிடவும் சாதித் திமிரை போலீஸ் ஸ்டேஷனில் காட்டும்விதத்தில் ‘அம்மாடி’ என்று பயமுறுத்தியிருக்கிறார்.

யோகிபாபுவுக்கு குணச்சித்திர வேடம் கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ். அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக அவரை தனுஷ் அடிக்கப் போக.. அதே அடி அவரது வீட்டில் அவரது அக்காள் லஷ்மி பிரியா மூலமாகத் தனுஷூக்குக் கிடைப்பதும் சுவையான திரைக்கதை. இந்தக் காட்சியில் மொத்த நடிப்பையும் கொட்டியிருக்கிறார் லட்சுமி பிரியா. இந்த நல்ல நடிகைக்கு ஏன் ஒரு நல்ல வாய்ப்பு இதுவரையிலும் கிடைக்கவில்லை என்பது தெரியவில்லை.

நண்பனா வில்லனா என்பதையே கண்டறிய முடியாத பக்கா சகுனியாக அழகம் பெருமாள்.. ஊர்ப் பெரிசுகளாக ஜி.எம்.குமார், மற்றும் சண்முகராஜன் இருவரும் தங்களது அனுபவ நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். போலீஸிடம் அடி வாங்கிய பின்பு தங்களது தயக்கத்தை உடைத்து தனுஷூக்கு ஆதரவுக் கரம் நீட்டும்போது இருவரும் மிளிர்கிறார்கள்.

லாலின் மதினியாக நடித்தக் கிழவியின் சில நிமிட காட்சி படத்திலேயே ஒரு கவிதையாக படிந்திருக்கிறது. மேலும் கெளரி ஜி.கிஷன், குதிரையோட்டும் சிறுவன், சுபத்ராவின் மகனாக நடித்த சிறுவன், மற்றும் ஊர்க்கார மக்கள் என்று அனைவருமே மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இயக்கத்திற்குப் பிறகு பாராட்டுக்குரியது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவுதான். முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் தனது கேமிராவின் ஆதிக்கத்தினால் காட்சியமைப்புகளை சிறப்பாகக் காட்டி திரையையும் ஜொலிக்க வைத்திருக்கிறார்.

இடைவேளை போர்ஷனில் அடுத்தடுத்து காட்டப்படும் காட்சிகளிடையே கேமிராவின் கோணங்களும், பல்வேறு காட்சிகளும், இதற்காகவே இசைக்கப்பட்ட இசைக் கோர்வையும் ஒரு சேர அப்போதே கை தட்டலை பெற்றுவிட்டது.

சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘கண்டா வரச்சொல்லுங்க’, ‘மஞ்சணத்திப் புராணம்’, ‘தட்டான் தட்டான்’ என்ற மூன்று பாடல்களுமே ரிலீஸுக்கும் முன்பாக மெகா ஹிட்டடித்திருக்கின்றன.

‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலில் பல கிராமத்திய மனிதர்களின் முகங்களைக் காட்டி நம்மை ஈர்த்திருக்கிறார் இயக்குநர். அந்தப் பாடல் வரிகளை அவர்கள் அழுத்தமாகப் பாடும் காட்சி மனதை உருக்குகிறது.

இதைவிடவும் பின்னணி இசை அபாரம். இடைவேளை பிளாக்கிலும், இறுதிக் காட்சியிலும் அவர் காட்டியிருக்கும் பின்னணி இசை அந்தக் காட்சிகளை நமது மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிறது. பாராட்டுக்கள்..!

மேலும் இன்னொரு பாராட்டுக்குரியவர்.. கலை இயக்குநர் ராமலிங்கத்தின் கடும் உழைப்பு. 1996-களின் தூத்துக்குடி மாவட்ட கிராமத்தையும், போலீஸ் ஸ்டேஷனையும் அப்படியே வடிவமைத்து கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள். சண்டை காட்சிகளை வடிவமைத்தவரையும் பாராட்ட வேண்டும். ஆனால் நீளம்தான் அதிகம். அதைச் சற்றுக் குறைத்திருக்கலாம்.

படத்தின் வசனங்களில் அரசியலை வைப்பார்கள். ஆனால் அரசியலிலேயே வசனங்களைத் துவைத்து எடுத்திருப்பது இந்தப் படத்தில்தான். ‘எப்படியாவது பொழச்சுக்கணும்னு நாம நினைக்கறதாலதான், அவன் நம்மளை ஏறி மிதிக்கிறான்..” என்றும், “அவன் பஸ்ஸை அடிச்சதுக்காக அடிக்கலய்யா.. நான் நிமிந்து பார்த்ததுக்காக அடிச்சான்” என்று தனுஷிடம் ஊர்ப் பெரிசுகள் சொல்லி அழுவதும் இதயத்தைத் தொடும் வசனங்கள்..!

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது முதல் படமான பரியேறும் பெருமாள்’ படத்தில் இரு சாதியினரிடையே இருக்கும் முரண்பாடுகளை பேசியே தீர்த்துக் கொள்ளலாம் என்று மிக உயர்வான அறிவுரையை வழங்கியிருந்தார். அது இரு தரப்பினருக்குமே பிடித்திருந்தது.

இப்போது இந்தப் படத்தின் வாயிலாக நம் எதிரி எந்த ஆயுதத்தைக் கையில் எடுக்கிறானோ அதே ஆயுதத்தை நாமும் எடு்த்தாக வேண்டும் என்று போதித்திருக்கிறார். இரண்டாவது படத்திலேயே ஏன் இந்த முரண்பாடு என்று தெரியவில்லை. முதலில் சமாதானத்திற்கு யார் கொடியைப் பிடிப்பது என்பது பிரச்சினையல்ல. சமாதானமாகி போவதுதான் பிரச்சினை. ஒருவேளை நடந்த சம்பவத்தைப் படமாக்கியிருக்கிறேன். அதனால் என்று சொல்வாரோ என்னவோ..!

படத்தில் பல குறியீட்டுச் சம்பவங்களைத் தொகுத்தளித்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

அனைத்து சாதியினரும் தங்களது குல வழக்கப்படி வணங்கும் தங்களது வீட்டில் இளம் வயதில் மரணமடையும் பெண் குழந்தைகளை தெய்வமாக வணங்குவது.. காலம்காலமாக நாட்டார் தெய்வ வழிபாடு என்பதை விதந்தோதியது. அது தொடர்பான சாமி ஏறுதல்’ என்ற வழிபாடு.. வருடத்திற்கு ஒரு முறை வீரனைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறை என்று அந்தக் காலத்திய அவர்களது பழக்க வழக்கங்களையும் சேர்த்தே வழங்கியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் முற்பாதியில் அடிக்கடி காண்பிக்கப்படும் கால் கட்டப்பட்ட கழுதை.. சிறுவன் ஓட்டி வரும் குதிரை.. போலீஸ் ஸ்டேஷனில் ஊர்ப் பெரியவர்களை அடித்து உதைக்கும்போது ஒரு பட்டுப்பூச்சி அடங்கி ஒடுங்குவது.. அதே போலீஸ் ஸ்டேஷனை தனுஷ் துவம்சம் செய்யும்போது சிரித்தபடி தென்படும் அம்பேத்கரின் புகைப்படம்.. பேருந்து நிற்காமல் செல்வதற்கு கண்டக்டர் சொல்லும் காரணம்.. தலையில்லாத சுவர் ஓவியம்.. அது பின்பு கடைசியில் ஏமராஜாவாக காட்சியளிப்பது கண் கொள்ளாக் காட்சி.. தலையில்லாத புத்தரின் சிலை, பெயரில் ஒளிந்திருக்கும் சாதி வெறி.. என்று படம் நெடுகிலும் குறியீடுகள் நிறையவே இருக்கின்றன.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய குறைகள் என்று பார்த்தால் அது கதாபாத்திரங்கள் பேசும் நெல்லை வட்டார மொழி. அதனை சட்டென்று புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. இரண்டு, படத்தின் வெகுவான நீளம். படத்தின் முற்பாதியில் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைக் கலாச்சாரத்தைச் சொல்வதாக நிறைய காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குநர். இதில் கொஞ்சம் கத்திரியை போட்டிருக்கலாம். இந்தக் குறையை இரண்டாம் பாகத்தில் நேர் செய்திருக்கிறார் இயக்குநர். அது ஒரே நேர்க்கோட்டில் கச்சிதமாகச் சென்று முடிகிறது.

ஒரு சமூகமாகக் கிளர்ந்தெழுந்து போராடினால்தான் வெற்றி பெற முடியும் என்பதை தமிழ்ச் சினிமாவின் வழக்கமான நாயக பிம்பத்திற்காக நாயகனை முன்னிறுத்தி கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

நமது உரிமைகளுக்காக யாரிடமும் வெறுமனே கெஞ்சி கொண்டிருந்தால் மட்டும் அது கிடைத்துவிடாது. தைரியமாக எதிர்த்துப் போராட வேண்டும். போராடினால் மட்டுமே அந்த உரிமை அவர்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்பதைத்தான் இந்தப் படத்தில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

நிச்சயமாக இந்தக் ‘கர்ணன்’ பல விருதுகளுக்குத் தகுதியானவன்தான்.

Rank : 4.5 / 5

The post கர்ணன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“கர்ணன்’ திட்டமிட்டபடி நாளைய தினம் வெளியாகும்…” – தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு https://touringtalkies.co/karnan-movie-will-release-on-schedule-producer-thaanu-statement/ Thu, 08 Apr 2021 10:36:20 +0000 https://touringtalkies.co/?p=14245 கொரோனா இரண்டாவது பரவலைத் தடுக்கும் பொருட்டு இன்று காலை மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதில் தியேட்டர்களில் 50 சதவிகிதம்தான் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் நாளை வெளியாகும் திரைப்படங்களுக்கு நிச்சயமாக பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ணன்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த 50 சதவிகித இருக்கைகளுக்கு […]

The post “கர்ணன்’ திட்டமிட்டபடி நாளைய தினம் வெளியாகும்…” – தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
கொரோனா இரண்டாவது பரவலைத் தடுக்கும் பொருட்டு இன்று காலை மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

அதில் தியேட்டர்களில் 50 சதவிகிதம்தான் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் நாளை வெளியாகும் திரைப்படங்களுக்கு நிச்சயமாக பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இந்த 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அரசின் விதிமுறையால் ‘கர்ணன்’ திரைப்படம் பாதிக்கப்படுமே என்னும் சந்தேகம் திரையுலகத்தினருக்கு எழுந்தது.

காரணம் ‘கர்ணன்’ மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் ஒரு படம். தியேட்டரிலேயே 50 சதவிகிதம்தான் அனுமதி என்றால் இப்போதைய நிலவரப்படி அந்தப் படம் அனைத்துத் தியேட்டர்களிலும் 30 நாட்கள் தொடர்ந்து ஓடினால்தான் வெற்றிக் கிட்டும் என்ற சூழல் உலவுகிறது.

ஆனால், படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு சற்று நேரத்திற்கு முன்பாக வெளியிட்ட டிவீட்டர் செய்தியில், “கர்ணன்’ திட்டமிட்டபடி வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “சொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின்படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும்,  #Karnan திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்…” என்று தெரிவித்துள்ளார்.

The post “கர்ணன்’ திட்டமிட்டபடி நாளைய தினம் வெளியாகும்…” – தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
‘கர்ணன்’ படப் பாடல் வரிகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு..! https://touringtalkies.co/a-case-files-in-madurai-high-court-for-karnan-movie-songs/ Fri, 19 Mar 2021 09:39:40 +0000 https://touringtalkies.co/?p=13720 கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் நடிகர் தனுஷின் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. மேலவளவு பஞ்சாயத்து யூனியனின் தலைவரான முருகேசன் கொலை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறதாம். இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகின்றனர். இதுவரையிலும் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. இதில் ‘பண்டாரத்தி சக்களத்தி’ என்ற பாடல் மிகப் பெரிய அளவுக்கு வெற்றியைப் பெற்றுள்ளது. இப்போது இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள சில […]

The post ‘கர்ணன்’ படப் பாடல் வரிகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு..! appeared first on Touring Talkies.

]]>
கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் நடிகர் தனுஷின் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’.

மேலவளவு பஞ்சாயத்து யூனியனின் தலைவரான முருகேசன் கொலை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறதாம்.

இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகின்றனர். இதுவரையிலும் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன.

இதில் ‘பண்டாரத்தி சக்களத்தி’ என்ற பாடல் மிகப் பெரிய அளவுக்கு வெற்றியைப் பெற்றுள்ளது.

இப்போது இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள சில வரிகளை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த புல்லட் பிரபு என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இது தொடர்பாக பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் நடிப்பில் வெளியாக உள்ளது கர்ணன்’ என்ற திரைப்படம்.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘பண்டாரத்தி – சக்களத்தி’ என்ற வார்த்தைகள் தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. பண்டார சமுதாய மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. அவர்களை தாழ்த்தி பேசும் வகையில் உள்ளது. எங்கள் சமுதாய மக்கள் சுதந்திரத்திற்குப் பின்னரும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கியுள்ளனர்.

சக்களத்தி’ என்று அந்த பாடல் வரி அமைந்துள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் வாழும் ‘பண்டாரம்’, ‘ஆண்டிப் பண்டாரம்’, ‘ஜங்கம்’, ‘யோகிஸ்வரர்’ ஆகிய சமுதாய மக்களின் உணர்வுகளையும், நன்மதிப்பையும் கெடுக்கும் வண்ணம் உள்ளது. இந்தப் பாடல் வரிகள், சினிமா கிராபிக்ஸ் சட்டம் 1952க்கு எதிரானது.

இது ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை இழிவுபடுத்தும், நன்மதிப்பை கெடுக்கும் வகையில், பாடல் வரிகள் அமைந்துள்ளன. இந்தப் படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை என்று தணிக்கை துறை சான்றிதழ் வழங்கியுள்ளது. இது ஏற்புடையதல்ல. சினிமாட்டோகிராபி சட்டத்தின்படி ஏற்புடையது அல்ல.

‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடலில் உள்ள ‘பண்டாரத்தி – சக்காளத்தி’ என்ற பாடல் வரிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட உத்தரவிட வேண்டும். பண்டாரத்தி – சக்களத்தி’ என்ற பாடலை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்.

அதுமட்டுமின்றி, தனுஷ் நடித்து ஏப்ரல் 9-ம் தேதி வெளியாக உள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தினை வெளியிட தடை விதிக்க வேண்டும்…” என்று அந்த மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மேலும், மனுதாரர் கோரிக்கை குறித்து, தணிக்கை துறையின் அலுவலர், தயாரிப்பாளர் கலை புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் , உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post ‘கர்ணன்’ படப் பாடல் வரிகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு..! appeared first on Touring Talkies.

]]>
“கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன்…” – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி..! https://touringtalkies.co/i-was-amazed-to-see-the-movie-karnan-composer-santosh-narayanan-is-happy/ Tue, 26 Jan 2021 06:52:04 +0000 https://touringtalkies.co/?p=12455 ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் 2-வது திரைப்படம் ‘கர்ணன்’. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். உடன் ‘நட்டி’ நட்ராஜ், யோகிபாபு, ரஜிஷா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கிறார். இசை சந்தோஷ் நாராயணன். படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போதுதான் முழுவதுமாக முடிவடைந்தது. தனுஷின் நடிப்பில் வெளியான ‘அசுரனின்’ அடுத்தப் படம் ‘கர்ணன்’ […]

The post “கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன்…” – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.

]]>
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் 2-வது திரைப்படம் ‘கர்ணன்’.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். உடன் ‘நட்டி’ நட்ராஜ், யோகிபாபு, ரஜிஷா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கிறார். இசை சந்தோஷ் நாராயணன். படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போதுதான் முழுவதுமாக முடிவடைந்தது. தனுஷின் நடிப்பில் வெளியான ‘அசுரனின்’ அடுத்தப் படம் ‘கர்ணன்’ என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கும் நிலையில் படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் “படத்தைப் பார்த்து தான் அசந்துவிட்டதாகச்” சொல்லியிருக்கிறார்.

“இதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ் மற்றும் படக் குழுவினரைப் பார்த்து தான் மிகவும் பெருமைப்படுவதாகவும்” சந்தோஷ் நாராயணன் சொல்லியிருக்கிறார்.

கடைசியாக “கர்ணன் அனைத்தையும் கொடுப்பான்” என்று சொல்லி படக் குழுவினருக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார்.

The post “கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன்…” – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.

]]>