Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
உதயநிதி ஸ்டாலின் – Touring Talkies https://touringtalkies.co Wed, 14 Dec 2022 11:04:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png உதயநிதி ஸ்டாலின் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “மாமன்னன் படமே எனது கடைசி படம்” – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு https://touringtalkies.co/mamannan-film-is-my-last-film-minister-udayanidhis-announcement/ Wed, 14 Dec 2022 11:04:32 +0000 https://touringtalkies.co/?p=28587 நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், “மாமன்னன்’ படமே எனது கடைசி படம். இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன். கமல் படத்திலிருந்து விலகிவிட்டேன்” என்று அறிவித்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி இன்றைய சுப முகூர்த்த நாளில் நல்ல நேரமான காலை 9:30 மணிக்கு தமிழக அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் உள்ள […]

The post “மாமன்னன் படமே எனது கடைசி படம்” – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், “மாமன்னன் படமே எனது கடைசி படம். இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன். கமல் படத்திலிருந்து விலகிவிட்டேன்” என்று அறிவித்துள்ளார்.

நடிகரும், தயாரிப்பாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி இன்றைய சுப முகூர்த்த நாளில் நல்ல நேரமான காலை 9:30 மணிக்கு தமிழக அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் இன்று காலை நடைபெற்றது. உதயநிதிக்கு கவர்னர் ரவி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, ‛‛தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக மாற்றுவதே எனது லட்சியம். என் மீது வரும் விமர்சனங்களுக்கு ஆக்கபூர்வமான என்னுடைய செயல்களால் மட்டுமே பதில் சொல்லுவேன். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான் நடித்துள்ள மாமன்னன்’ படமே எனது கடைசி திரைப்படம். இனி படங்களில் நடிக்க மாட்டேன். கமல் ஸார் தயாரிப்பில் நான் நடிப்பதாக இருந்த படத்திலிருந்து விலகிவிட்டேன். அவரிடமும் அதை தெரிவித்துவிட்டேன். அவரும் ஏற்றுக் கொண்டார்…” என்றார் உதயநிதி.

The post “மாமன்னன் படமே எனது கடைசி படம்” – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
கலகத் தலைவன் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/kalaga-thalaivan-movie-review-2/ Tue, 22 Nov 2022 18:21:45 +0000 https://touringtalkies.co/?p=27455 இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் நாயகன் உதயநிதி ஸ்டாலினே தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க நிதி  அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், ஆரவ், அங்கனா ராய், அனுபமா குமார், ஜீவா ரவி, விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அரோல் கரோலி பாடல்களுக்கு இசையமைத்திருக்க, ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்திருக்கிறார். K.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் மகிழ் திருமேனி எழுதி, இயக்கியிருக்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் ரகசியங்களை […]

The post கலகத் தலைவன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் நாயகன் உதயநிதி ஸ்டாலினே தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க நிதி  அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், ஆரவ், அங்கனா ராய், அனுபமா குமார், ஜீவா ரவி, விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அரோல் கரோலி பாடல்களுக்கு இசையமைத்திருக்க, ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்திருக்கிறார். K.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் மகிழ் திருமேனி எழுதி, இயக்கியிருக்கிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் ஒரு கலகக்காரனின் கதையே இந்தக் ‘கலகத் தலைவன்’ படத்தின் கதை.

டிரக் தயாரிப்பு நிறுவனமான ‘வஜ்ரா’ இந்தியாவிலேயே மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமாகும். அந்நிறுவனம் தற்போது புதிய மாடல் டிரக் ஒன்றைத் தயாரித்துள்ளதாக சொல்லி அந்த வண்டியை அறிமுகப்படுத்துகிறது.

இப்போதுவரையிலும் மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து வகையான டிரெக்குகளைவிடவும் இந்தப் புதிய டிரெக் அதிக மைலேஜ் பிடிக்கும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த டிரெக்கில் இருந்து வெளியாகும் புகை, சுற்றுச் சூழல் துறை அனுமதித்துள்ள அளவைக் காட்டியும் கூடுதலாக இருப்பதைத் தந்திரமாக மறைக்கிறது வஜ்ரா நிறுவனம். ஆனால் இந்த ரகசியத்தை சிலர் வெளியில் அம்பலப்படுத்தி விடுகின்றனர். இதனால் ஷேர் மார்க்கெட்டில் இந்நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்திக்கிறது.

3 பேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் கசிந்தது எப்படி என்பதைக் கண்டறிய வஜ்ரா நிறுவனத்தின் முதலாளி, மிகப் பெரிய மாபியா கும்பலின் தலைவான ஆரவ்வை வேலைக்கு அமர்த்துகிறார். ஆரவ்வும் இந்த ரகசியம் தெரிந்தவர்களை மிகக் கொடூரமாக சித்ரவதை செய்து யாரிடமிருந்து விஷயம் லீக்கானது என்பது பற்றி விசாரிக்கத் துவங்குகிறார்.

இந்த விசாரணை என்ன ஆனது..? எதற்காக இந்த வஜ்ரா நிறுவனத்தின் ரகசியங்கள் வெளியில் கசிந்தன..? உண்மையில் இதன் பின்னணியில் இருந்தது யார்..? என்பதெல்லாம்தான் இந்தக் கலகத் தலைவன்’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை..!

படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களிடமும் சிறப்பான நடிப்பினை வரவழைத்துள்ளார், இயக்குநர் மகிழ் திருமேனி. உதயநிதி ஸ்டாலின் இதுவரையிலும் தான் நடித்த படங்களில் இருந்து வித்தியாசமான ஒரு நடிப்பினை இந்தப் படத்தில் காண்பித்திருக்கிறார். அலட்டிக் கொள்ளாத தன்மையுடன், அமைதியின் திருவுருமாய் காட்சியளித்தபடியே.. கார்பரேட் நிறுவனங்களை தலைகீழாகப் புரட்டிப் போடும் தனது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பை மென்மையாகக் காண்பித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில்கூட சைலண்ட் காட்டியே ஸ்கோர் செய்திருக்கிறார்.

இப்படத்தில் பெரிதும் ஆச்சர்யப்படுத்துவது நடிகர் ஆரவ்வின் வில்லத்தனமான நடிப்புதான். வில்லன் அவதாரத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது முக பாவங்களும், உடல் மொழியும் தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு திறமையான வில்லன் என்றே காட்டுகிறது.

நாயகி நிதி அகர்வால் ச்சும்மா ஸ்கிரீனில் வந்து நின்றாலே அது கவிதையாகும். அந்த அளவுக்கு இயற்கையான அழகைத் தன் வசப்படுத்தியுள்ளார். காதல் காட்சிகளிலும், எமோஷ்னல் காட்சிகளிலும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். இவருக்கு இருக்கும் அழகுக்கு இந்நேரம் தொடர்ந்து 5 படங்களிலாவது நடித்திருக்க வேண்டும். நடிக்காதது ஏன் என்று தெரியவில்லை.

கலையரசனுக்கு நடிப்பினைக் காட்ட பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் கதையின் சஸ்பென்ஸையும், படத்தின் தன்மையையும் புரிந்து கொள்ள கலையின் கர்ப்பிணி மனைவியாக நடித்தவர் பெரிதும் உதவியிருக்கிறார். மேலும் அனுபமா குமார், ஜீவா ரவி, விக்னேஷ் காந்த், மற்றும் அங்கனா ராயின் வில்லித்தன நடிப்பு என்று பலரும் இந்தப் படத்தில் உணர்ந்து நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு, படத் தொகுப்பு உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. ஒளிப்பதிவு முதல் ஷாட்டில் இருந்து கடைசிவரையிலும் ஒன்று போலவே இருப்பது இந்தப் படத்தின் ஸ்பெஷலாட்டி என்றே சொல்லலாம். திருச்சி ரெயில் நிலையத்தில் நடைபெறும் காட்சிகளை மிக அழகாக படமாக்கியிருக்கிறார் கேமராமேன். அந்த ரயில்வே ஸ்டேசன் சீக்வென்ஸில் இருக்கும் சஸ்பென்ஸ், திரில்லர் பீலிங்கை கடைசிவரையிலும் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதேபோல் கிளைமாக்ஸ் சண்டை காட்சியையும் ஒரு பேய்ப் படத்திற்குண்டான திகில் உணர்வோடு படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பின்னணி இசையில் ஒரு ராஜாங்கமே அமைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. பதற்றத்தை ஏற்படுத்தும்வகையிலும் படம் நெடுகிலும் ரசிகனை ஒரு டென்ஷன் மோடிலேயே வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். அடிப்படையில் கெமிக்கல் எஞ்சினியரான நாயகன் உதயநிதி, க்ளைமாக்ஸ் ஃபைட்டில் தனது புத்தி சாதூர்யத்தால் கெமிக்கல் ரியாக்சன்களை வைத்து வில்லன் கோஷ்டியை வீழ்த்துவது எதிர்பாராதது. அதே சமயம் ரசனைக்குரியது. அனைத்து சண்டைக் காட்சிகளையுமே சிறப்பாக வடிவமைத்த சண்டைப் பயிற்சியாளருக்கு  நமது பாராட்டுக்கள்.

எத்தகைய கதையாக இருந்தாலும் அதை நேர்த்தியான விதத்தில் திரைக்கதையாக்கினால் படம் மாஸாகிவிடும். இந்தத் திரைக்கதையைக் கட்டும் வித்தை இயக்குநர் மகிழ் திருமேனிக்கு நன்றாகவே தெரியும் போலிருக்கிறது. இந்தப் படத்திலும் திரைக்கதையிலும், இயக்கத்திலும் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

முதலில் மெதுவாக நகரத் துவங்கும் படம், பின்னர் நேரம் செல்லச் செல்ல வேகமெடுத்து ரன் பாஸ்ட்டில் செல்கிறது. மூலக் கதையை விட்டு சிறிதும் விலகிச் செல்லாத நேர்த்தியான திரைக்கதை, படத்திற்கு மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுவதால் நிகழும் பொருளாதார சீர்கேடுகளை இந்தப் படத்தில் வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர். அதோடு அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுக்கும் டொனேஷன். அதன் மூலம் அரசை  அவர்கள் எப்படி கட்டுப்படுத்துகிறார்கள் என்ற உண்மையையும் சொல்லியிருக்கிறார்.

படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் முடிந்தவரையிலும் லாஜிக் பார்க்க முடியாமல் வைத்திருப்பதால் காட்சிகளை ரசிக்க முடிந்திருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் போலீஸே இல்லாத சூழலை காண்பித்திருப்பது படம் முடிந்த பின்புதான் நமக்கே உரைக்கிறது. மிகக் குறைவான குறைகள் மட்டுமே படத்தில் இருப்பதால், நிச்சயமாக இந்தப் படம் உங்களை ஏமாற்றாது.

அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

RATING : 4.5 / 5

The post கலகத் தலைவன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிக்கும் ‘வாழை’ படம் துவங்கியது https://touringtalkies.co/vaazhai-movie-poojai-news/ Mon, 21 Nov 2022 13:56:26 +0000 https://touringtalkies.co/?p=27351 Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.  தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். “பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை […]

The post இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிக்கும் ‘வாழை’ படம் துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது.

இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். 

தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். “பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “மாமன்னன்” படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக “வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.  தற்போது நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் “மாமன்னன்” படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் “வாழை” படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. 

இப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்து கொள்ள, இன்று இனிதே துவங்கியது. இந்நிகழ்வில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, படத்தின் படப்பிடிப்பை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார். 

சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்க சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிறது. மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். 

தொழில்நுட்ப குழு விவரம் 

எழுத்து இயக்கம் – மாரி செல்வராஜ்

ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர் 

இசை – சந்தோஷ் நாராயணன்

கலை இயக்கம் – குமார் கங்கப்பன்

படத்தொகுப்பு  – சூரிய பிரதமான்

சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன் 

நடனம் – சாண்டி 

பாடல்கள் – யுகபாரதி, வெயில் முத்து 

உடை வடிவமைப்பு – ஶ்ரீ ஸ்வர்ணா 

ஒலி வடிவமைப்பு – சுரேன் G

ஸ்டில்ஸ் – ஜெய்குமார் வைரவன்

உடைகள் – ரவி தேவராஜ் 

மேக்கப் – R கணபதி

விளம்பர வடிவமைப்பு – கபிலன் செல்லையா 

மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – வெங்கட் ஆறுமுகம்

தயாரிப்பாளர் – திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ்

The post இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிக்கும் ‘வாழை’ படம் துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
கலகத் தலைவன்- சினிமா விமர்சனம் https://touringtalkies.co/kalaga-thalaivan-movie-review/ Sat, 19 Nov 2022 01:05:35 +0000 https://touringtalkies.co/?p=27265 கார்ப்பரேட் ரகசியங்களை வெளியில் விற்கும் ஒரு கலகக்காரனின் கதையே இந்தக் ‘கலகத் தலைவன்’ படம். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனி திரைக்கதை இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்த ‘கலகத் தலைவன்’ படம் எப்படி இருக்கிறது?.. வஜ்ரா என்றொரு லாரி உற்பத்தி செய்யும் கம்பெனியின் சென்னை ப்ராஞ்சில் வேலை செய்கிறார் உதய்நிதி. மற்றவர்களுக்கு உதவும் சுபாவம் கொண்ட உதயநிதிக்கு, நிதி அகர்வாலின் நட்பு கிடைக்கிறது. அந்த நட்பு காதலாக மாறும் தருணம்வரை செல்கிறது. இன்னொரு புறம் […]

The post கலகத் தலைவன்- சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
கார்ப்பரேட் ரகசியங்களை வெளியில் விற்கும் ஒரு கலகக்காரனின் கதையே இந்தக் ‘கலகத் தலைவன்’ படம்.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனி திரைக்கதை இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்த ‘கலகத் தலைவன்’ படம் எப்படி இருக்கிறது?..

வஜ்ரா என்றொரு லாரி உற்பத்தி செய்யும் கம்பெனியின் சென்னை ப்ராஞ்சில் வேலை செய்கிறார் உதய்நிதி. மற்றவர்களுக்கு உதவும் சுபாவம் கொண்ட உதயநிதிக்கு, நிதி அகர்வாலின் நட்பு கிடைக்கிறது. அந்த நட்பு காதலாக மாறும் தருணம்வரை செல்கிறது.

இன்னொரு புறம் வஜ்ரா கம்பெனியின் பல சீக்ரெட் விசயங்களை சிலர் வெளியில் போட்டி கம்பெனிக்கு விற்கிறார்கள் என்ற விசயம் வஜ்ரா மேனேஜ்மெண்ட்க்கு தெரிய வருகிறது. அவர்கள் மெகா வில்லன் ஆரவ்விடம் கம்பெனி ரகசியங்களை திருடுபவர்களைப் பிடிக்கச் சொல்கிறார்கள்.

ஆரவ் தனது கொடூரமான விசாரணைகளை நடத்துகிறார். அந்தக் கம்பெனியில் வேலை செய்யும் பலரையும் ரத்தம் தெறிக்க தெறிக்க விசாரிக்கிறார். அவரின் விசாரணை வளையத்திற்குள் கலையரசன் மாட்டுகிறார். அடுத்ததாக அதில் மாட்ட இருப்பவர் உதய்நிதி ஸ்டாலின் என்ற சூழல் வருகிறது. அச்சூழலை உதய்ணா எப்படிச் சமாளித்தார்? வஜ்ரா கம்பெனியின் ரகசியங்கள் யாவை? அதை வெளி கம்பெனிக்கு விற்க வேண்டிய காரணம் என்ன? என பல கேள்விகளுக்குப் படம் பதிலளிக்கிறது

அலட்டிக் கொள்ளாத அமைதியான நடிப்பால் உதயநிதி ஸ்டாலின் ஈர்க்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில்கூட சைலண்ட் காட்டியே ஸ்கோர் செய்கிறார். இப்படத்தில் ஆச்சர்யப்படுத்தியது நடிகர் ஆரவ்வின் நடிப்புதான். வில்லன் அவதாரத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது முகபாவங்களும் உடல்மொழியும் நல்ல வில்லனுக்கான சமிக்‌ஞயை காட்டுகிறது. வாழ்த்துகள் ராசா. அடுத்ததாக நிதி அகர்வால். காதல் காட்சிகள், எமோஷ்னல் காட்சிகள் இரண்டிலுமே நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். கலையரசனுக்கு பெரிதாக வெளி இல்லாவிட்டாலும் கிடைத்திருக்கும் சிறு வாய்ப்பையும் சரியாகவே பயன்படுத்தியுள்ளார்

இப்படத்திற்கு இசை அமைத்து ஒரு ரீ.என்ட்ரி கொடுத்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. பாடல்களும் கேட்கும் வகையில் இருக்கிறது. முதலில் ஒரு ரீலுக்கு மட்டும் நிறைய வாசித்துத் தள்ளிவிட்டார். காதெங்கும் ஒரே சவுண்ட்ஸ். ஒளிப்பதிவில் இப்படம் கூடுதல் அழகோடு மிளிர்கிறது. திருச்சி ரெயில்நிலைய காட்சிகளை மிக அழகாக எடுத்திருக்கிறார் கேமராமேன். படத்தில் அந்த ரயில்வே ஸ்டேசன் சீக்வென்ஸ் தீப்பொறி பறக்கும் திக் திக் நிமிடங்கள். அந்த சீக்வென்ஸ் மற்ற எல்லாவற்றையும் விட நன்றாக வொர்க்காகியுள்ளது. எடிட்டர் பின் பாதியில் கொஞ்சம் கத்தரியைப் போட்டிருக்கலாம்

வந்த கதையோ,நொந்த கதையோ எந்த கதையாக இருந்தாலும் அதை நேர்த்தியான திரைக்கதையாக்கினால் படம் பக்கா மெட்டிரியல் ஆகிவிடும். அந்தத் திரைக்கதை வித்தை இயக்குநர் மகிழ் திருமேனிக்கு நன்றாக கைவந்துள்ளது. காதல் காட்சிகள் மட்டும் படத்தின் வேகத்திற்கு கொஞ்சம் தடை போடுகிறது. அவற்றை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாம்.

ஆனாலும் இந்த ‘கலகத் தலைவன்’ உலகப் லிட்டிக்ஸ் பேசி அழகுத் தலைவனாக மிளிர்கிறான். மிகக் குறைவான குறைகளே படத்தில் இருப்பதால் நிச்சயமாக இந்தப் படம் உங்களை ஏமாற்றாது.

RATING : 4 / 5

The post கலகத் தலைவன்- சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
‘கலகத் தலைவன்’ படம் பார்த்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் https://touringtalkies.co/chief-minister-m-k-stalin-greeted-the-movie-kalagath-thalaivan/ Thu, 17 Nov 2022 18:04:59 +0000 https://touringtalkies.co/?p=27212 ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’. இப்படம் உலகமெங்கும் நாளை நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘கலகத் தலைவன்’ திரைப்படத்தை படக் குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார். படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக  ‘கலகத் தலைவன்’ படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி […]

The post ‘கலகத் தலைவன்’ படம் பார்த்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Touring Talkies.

]]>
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’. இப்படம் உலகமெங்கும் நாளை நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘கலகத் தலைவன்’ திரைப்படத்தை படக் குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார்.

படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக  ‘கலகத் தலைவன்’ படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக் குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நாளை நவம்பர் 18-ம் முதல் உலகமெங்குமுள்ள ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது ‘கலகத் தலைவன்’.

The post ‘கலகத் தலைவன்’ படம் பார்த்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Touring Talkies.

]]>
“ஹீரோயினா யாரைக் காட்டினாலும் ‘பிடிக்கவில்லை’ என்றார் உதயநிதி” – இயக்குநர் மகிழ் திருமேனி உடைத்த ரகசியம் https://touringtalkies.co/udhayanidhi-said-he-didnt-like-heroines-or-whoever-they-were-shown-director-mizhy-thirumeni-broke-the-secret/ Thu, 10 Nov 2022 17:56:04 +0000 https://touringtalkies.co/?p=26933 இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உதயநிதியும், நிதி அகர்வாலும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘கலகத் தலைவன்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ”2019-ம் ஆண்டே இந்த ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுவிட்டேன். ஆனால் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக படத்தை எடுத்துக் கொண்டே இருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி கொண்டே இருக்கிறார்” என்றார் […]

The post “ஹீரோயினா யாரைக் காட்டினாலும் ‘பிடிக்கவில்லை’ என்றார் உதயநிதி” – இயக்குநர் மகிழ் திருமேனி உடைத்த ரகசியம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உதயநிதியும், நிதி அகர்வாலும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘கலகத் தலைவன்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ”2019-ம் ஆண்டே இந்த ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுவிட்டேன். ஆனால் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக படத்தை எடுத்துக் கொண்டே இருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி கொண்டே இருக்கிறார்” என்றார் உதயநிதி.

அப்போது இடைமறித்த இயக்குநர் மகிழ் திருமேனி.. “இந்தப் படம் ஆரம்பித்த உடனேயே இரண்டு முறை கொரோனா லாக் டவுன் வந்துவிட்டது. அதன் பின்னர் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றுவிட்டார். அதன் பிறகு எனக்கு இரண்டு முறை கொரோனா வந்தது. மேலும் எந்த ஹீரோயினையும் பிடிக்கவில்லை என்றார் உதயநிதி. அதனால் ஹீரோயினியைும் இன்னொரு பக்கம் தேடிக் கொண்டே இருந்தேன். இது போன்ற காரணங்களால் இந்தப் படம் தள்ளிக் கொண்டு போனது.” என்றார்.

அதன் பின்னர் மீண்டும் உதயநிதி பேசும்போது, இயக்குநர் மகிழ் திருமேனி 90 நாட்கள் படத்தை எடுத்தார் என்றால்.. மாரி செல்வராஜ் 120 நாட்கள் மேலாக ‘மாமன்னன்’ படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இருவரும் என்னை வச்சி செய்கின்றனர்.

மகிழ் இயக்கிய ‘தடம்’ படத்திலேயே முதலில் நான்தான் நடிக்க இருந்தேன். எனக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனாலும் ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி நடிக்க விடவில்லை. இங்கு வருவோர் எல்லாரும் அவரைப் பார்த்துதான் வணக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அவர்தான் அனைவருக்கும் சம்பளம் நிர்ணயம் செய்கிறார். அந்தப் பாசம்தான் எல்லாருக்கும்…” என்றார் உதயநிதி.

The post “ஹீரோயினா யாரைக் காட்டினாலும் ‘பிடிக்கவில்லை’ என்றார் உதயநிதி” – இயக்குநர் மகிழ் திருமேனி உடைத்த ரகசியம் appeared first on Touring Talkies.

]]>
“தமிழ் சினிமாவை மிரட்டி வைத்திருக்கிறார் உதயநிதி” – இயக்குநர் மிஷ்கின் பேச்சு https://touringtalkies.co/udayanidhi-is-threatening-tamil-cinema-director-mishkins-speech/ Thu, 10 Nov 2022 17:17:32 +0000 https://touringtalkies.co/?p=26929 இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருக்கும் ‘கலகத் தலைவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, “இந்த மாலை நேரத்தில் நான் வருத்தமாக இருக்கிறேன். இன்று நடந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா தோற்றுவிட்டது. ஆனால் தற்போது இந்த விழா மேடையை பார்த்தவுடன் மகிழ்ச்சியாக உள்ளேன். உதயநிதி ஸ்டாலின் […]

The post “தமிழ் சினிமாவை மிரட்டி வைத்திருக்கிறார் உதயநிதி” – இயக்குநர் மிஷ்கின் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருக்கும் ‘கலகத் தலைவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, “இந்த மாலை நேரத்தில் நான் வருத்தமாக இருக்கிறேன். இன்று நடந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா தோற்றுவிட்டது. ஆனால் தற்போது இந்த விழா மேடையை பார்த்தவுடன் மகிழ்ச்சியாக உள்ளேன்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழ் சினிமாவை மிரட்டி தன் கையில் வைத்துள்ளார். இனிமேல் நடிக்க மாட்டேன் என்றும் அடிக்கடி சொல்கிறார். அது தவறு. அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும். ரசிகர்கள்தான் வற்புறுத்தி அவரை நடிக்க வைக்க வேண்டும்.

என்னிடம் நிறைய கதைகள் உள்ளன. எப்போது உதயநிதி நடிக்க ரெடி என்றாலும் நான் அவரை இயக்க ரெடியாக உள்ளேன். சுந்தர்.சி-க்குக் கூட கதை வைத்திருக்கிறேன். வேண்டும் என்று அவர் கேட்டால் நிச்சயமாக தருவேன்.

உதயநிதி என் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஓகே சொன்னால், புதிய கதையில் அவரை இயக்குவேன். அதே சமயம்சைக்கோ’ படத்தின் பார்ட்-2-வை எடுக்கும் திட்டமில்லை.. ” என்றார் மிஷ்கின்.

The post “தமிழ் சினிமாவை மிரட்டி வைத்திருக்கிறார் உதயநிதி” – இயக்குநர் மிஷ்கின் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
“வெந்து தணிந்தது காடு பார்ட்-2-வுக்காகக் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு https://touringtalkies.co/i-am-waiting-for-vendu-satnuthanu-kadu-part-2-producer-udayanidhi-stalins-speech/ Thu, 10 Nov 2022 16:02:21 +0000 https://touringtalkies.co/?p=26913 Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K.கணேஷின் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்களின் வரவேற்பில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தின் 50-வது நாள் வெற்றி விழா திரை பிரபலங்கள் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக் குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவினில் […]

The post “வெந்து தணிந்தது காடு பார்ட்-2-வுக்காகக் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K.கணேஷின் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்களின் வரவேற்பில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் 50-வது நாள் வெற்றி விழா திரை பிரபலங்கள் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக் குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவினில் நடிகர் சரத்குமார் பேசும்போது, “இந்த படத்தை பல சிக்கலை தாண்டி தயாரிப்பாளர் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஸ்டைலிஷ் இயக்குனருடன், கடின உழைப்பாளி  சிம்பு இணைந்துள்ள இந்த படம் சிறப்பான ஒன்றாக அமைந்தது.  படத்தின் பாடல்களை தாமரை, பிருந்தா, ஏ.ஆர்.ரகுமான் சிறப்பானதாக உருவாக்கியுள்ளனர். படத்தில் பங்கேற்ற நடிகர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர்.  இப்படத்தின் வெற்றிக்கு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...” என்றார்.

நடிகை ராதிகா பேசும்போது, “இந்த படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.  பல ஆண்டுகளாக வெற்றி விழா என்று ஒன்று மறைந்துபோய் இருந்தது. இந்த படத்திற்கு  அது நிகழ்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஒரு பெரிய பலப்பரிட்சை தான். இந்த படம் கௌதம் மேனனின் பாணியில் இருந்து முழுவதுமாக மாறுபட்டு இருந்தது.  சிம்பு இதில் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். இந்த படத்தை பல தடைகளை தாண்டி உருவாக்கிய தயாரிப்பாளருக்கு எனது நன்றிகள். படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்…” என்றார்.

கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் எப்பொழுதும் சிறப்பான படத்தை கொடுப்பதற்காக உழைக்கிறார்கள். பல திறமையாளர்களை அவர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.  இந்த திரைப்படத்தில் பல திறமைசாலிகள் இணைந்துள்ளனர்.  அவர்களது கடின உழைப்பில் இந்த படம்  சிறப்பானதாக மாறியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டது இந்த படத்திற்கு கூடுதல் பலமாக மாறிவிட்டது. இந்த வெற்றிப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசும்போது, “இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உதயநிதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்காக பலருக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.  பல மேடைகளில் அதை கூறியும் இருக்கிறேன். இந்த படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றிவிழாவை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டும் என்ற முடிவெடுத்து, அதை விழாவாக எடுத்த ஐசரி கணேஷ் அவர்களுக்கு நன்றி…” என்றார்.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “இந்த ‘வெந்து தணிந்தது காடு’ படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக  அமைந்ததற்கு இயக்குநர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிலம்பரசன், சிம்பு ரசிகர்கள்தான் காரணம். அதற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.  படத்தை முதலில் நான்தான் பார்த்தேன், படம் பார்த்தவுடன் இந்த படம் வெற்றிப் படமாக அமையும் என்று நான் கூறினேன். சிம்பு  இப்படத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என கூறினார். அவர் கேட்டுக் கொண்டதால்தான் நான் இந்தப் படத்தை வெளியிட்டேன். அவர் கூறிய வார்த்தைகளின்படி படம் மிகப்ப ெரிய வெற்றியடைந்தது. படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ‘வெந்து தணிந்தது காடு’ பாகம் இரண்டிற்காக  நான் ஆவலாக  இருக்கிறேன்..” என்றார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசும்போது, “இந்தப் படத்தில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை கௌரவிப்பதற்காகத்தான் இந்த விழா நடத்தப்படுகிறது. ரெட் ஜெயண்ட் இந்தப் படத்தை வாங்கியவுடன் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது. இந்த படத்தின் சிறப்பம்சமே நடிகர் சிம்புதான். இதுபோன்ற பல வெற்றிகளை நீங்கள் குவிக்க வேண்டும். இயக்குநர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த வருடத்தின் சிறந்த ஆல்பத்தை கொடுத்துள்ளார். எல்லோர்க்கும் எனது வாழ்த்துக்களையும். நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்..” என்றார்.

The post “வெந்து தணிந்தது காடு பார்ட்-2-வுக்காகக் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள் https://touringtalkies.co/kamal-and-manirathnam-rejoins-a-new-movie/ Sun, 06 Nov 2022 14:36:20 +0000 https://touringtalkies.co/?p=26676 நடிகர் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் 234-வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார் என்பதுதான் இன்றைய தமிழ்ச் சினிமாவின் ஹாட்டஸ்ட் செய்தி. நாளைய தினம் கமல்ஹாசனின் 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை இதற்கான அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. மணிரத்னம் இயக்கத்தில் கமல் 1987-ம் ஆண்டு நடித்த ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இருவரும் இணையவில்லை. […]

The post கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் 234-வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார் என்பதுதான் இன்றைய தமிழ்ச் சினிமாவின் ஹாட்டஸ்ட் செய்தி.

நாளைய தினம் கமல்ஹாசனின் 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை இதற்கான அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் 1987-ம் ஆண்டு நடித்த ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இருவரும் இணையவில்லை. இப்போது 35 ஆண்டு காலம் கழித்து இருவரும் இந்தப் படத்திற்காக ஒன்றிணைகிறார்கள். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இது குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “35 வருடங்களுக்கு முன், மணிரத்னத்துடன் நாயகன் படத்தில் பணிபுரியத் தொடங்கும்போது, இ​தே அளவு உற்சாகமாக இருந்தேன். தற்போதும் அதே மனநிலை என்னுடன் ஒத்துழைப்பது ஊக்கமளிக்கிறது. இந்த தூண்டுதலில் திரு.ரஹ்மானும் அடங்குவர். திரு.உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து எடுக்கவிருக்கும் இந்தப் படத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்…” என்று சொல்லியிருக்கிறார்.

இது குறித்து மணிரத்னம் பேசும்போது, “கமல் ஸாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்..” என்றார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விக்ரம் மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியன்-2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசனின் 234-வது படத்தை வழங்குவதற்காக கமல் சாருடன் இணைவது எனக்குக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு. சிறப்பான கதையில் உருவாகும் இந்த படத்தை தயாரிப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். கமல் சார் மற்றும் மணி சார் இருவருமே உலக அளவில் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர்கள், இந்த இரண்டு சாதனையாளர்களின் தீவிர ரசிகனாகவும் நான் இருந்து வருகிறேன். இந்த சிறந்த வாய்ப்புக்கு கமல் ஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார்.”

இந்தப் படம் அடுத்தாண்டு மத்தியில் துவங்கி 2024-ம் ஆண்டு வெளியாகுமாம்.

The post கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள் appeared first on Touring Talkies.

]]>
உதயநிதி-மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் ‘மாமன்னன்’ பட ஷூட்டிங் முடிந்தது https://touringtalkies.co/maamannan-movie-shooing-was-wrapped/ Wed, 14 Sep 2022 18:04:42 +0000 https://touringtalkies.co/?p=24517 உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே நிறைவு பெற்றது. […]

The post உதயநிதி-மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் ‘மாமன்னன்’ பட ஷூட்டிங் முடிந்தது appeared first on Touring Talkies.

]]>
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே நிறைவு பெற்றது. படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வினை கேக் வெட்டி கொண்டாடினர்.

The post உதயநிதி-மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் ‘மாமன்னன்’ பட ஷூட்டிங் முடிந்தது appeared first on Touring Talkies.

]]>