Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ஈஸ்வரன் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Wed, 13 Jan 2021 08:12:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ஈஸ்வரன் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘ஈஸ்வரன்’ படத்தின் ஸ்டில்ஸ் https://touringtalkies.co/eeswaran-movie-stills/ Wed, 13 Jan 2021 08:11:04 +0000 https://touringtalkies.co/?p=12109 The post ‘ஈஸ்வரன்’ படத்தின் ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.

]]>

The post ‘ஈஸ்வரன்’ படத்தின் ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.

]]>
‘ஈஸ்வரன்’ படத்திற்குத் திடீர் தடை – நீக்கம் – நள்ளிரவில் பரபரப்பு..! https://touringtalkies.co/eeswaran-movie-ban-on-release-by-cinema-theatre-owners-association/ Mon, 11 Jan 2021 18:21:49 +0000 https://touringtalkies.co/?p=12047 இந்த 2021 வருட பொங்கல் தினத்தை மறக்க முடியாதபடிக்கு செய்து கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். அந்த வைரஸின் தாக்கம் அகில உலகத்தையும் உலுக்கிக் கொண்டிருப்பதால் தமிழ்ச் சினிமாத் துறையில் அதில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. இந்த 2021 பொங்கல் தினத்தன்று ‘மாஸ்டர்’ திரைப்படமும், ‘ஈஸ்வரன்’ திரைப்படமும் வெளியாகவுள்ளன. இதில் ‘மாஸ்டர்’ படம் திடீரென்று இணையத்தில் லீக்காகத் துவங்க கோடம்பாக்கமே பெரும் பரபரப்பில் இருக்கிறது. இந்தப் பரபரப்பு முடிவதற்குள் இன்னொரு பக்கம் “ஈஸ்வரன்’ படத்தைத் திரையிட மாட்டோம்…” என்று […]

The post ‘ஈஸ்வரன்’ படத்திற்குத் திடீர் தடை – நீக்கம் – நள்ளிரவில் பரபரப்பு..! appeared first on Touring Talkies.

]]>
இந்த 2021 வருட பொங்கல் தினத்தை மறக்க முடியாதபடிக்கு செய்து கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ்.

அந்த வைரஸின் தாக்கம் அகில உலகத்தையும் உலுக்கிக் கொண்டிருப்பதால் தமிழ்ச் சினிமாத் துறையில் அதில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

இந்த 2021 பொங்கல் தினத்தன்று ‘மாஸ்டர்’ திரைப்படமும், ‘ஈஸ்வரன்’ திரைப்படமும் வெளியாகவுள்ளன.

இதில் ‘மாஸ்டர்’ படம் திடீரென்று இணையத்தில் லீக்காகத் துவங்க கோடம்பாக்கமே பெரும் பரபரப்பில் இருக்கிறது.

இந்தப் பரபரப்பு முடிவதற்குள் இன்னொரு பக்கம் “ஈஸ்வரன்’ படத்தைத் திரையிட மாட்டோம்…” என்று தமிழகத்தில் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தடாலடியாக அறிவிக்க விக்கித்துப் போய் நிற்கிறது கோடம்பாக்கம்.

ஈஸ்வரன்’ படத்திற்குத் தடை விதிக்கக் காரணம் “அந்தப் படம் தியேட்டரில் வெளியாகும் அதே நேரம் ஓடிடி தளத்திலும் வெளியாகும்…” என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்ததுதான். அதுவும் அந்தக் குறிப்பிட்ட ஓடிடி தளத்தில் இந்தியாவைத் தவிர்த்த வேறு வெளிநாடுகளில்தான் ஈஸ்வரன்’ படத்தைப் பார்க்க முடியும் என்று ஏற்பாடாகியிருந்தது.

இந்த அறிவிப்பை கேள்விப்பட்டவுடன் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தங்களது சங்கத்தின் நிர்வாகக் குழுவைக் கூட்டியவர் தடாலடியாக ‘ஈஸ்வரன்’ படத்திற்குத் தமிழகம் முழுவதும் தடை விதித்தனர். இந்தத் தடையை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான ரோகிணி பன்னீர்செல்வம் ஆடியோ வாயிலாக வெளியிட்டார்.

தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் இந்தத் திடீர் முடிவை முற்றிலும் எதிர்பார்க்காத ‘ஈஸ்வரன்’ படத்தின் தயாரிப்பாளரான மாதவ், வேறு வழியில்லாமல் தனது முடிவை உடனடியாக மாற்றிக் கொண்டார்.

“ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்படும். ஓடிடி தளத்தில் வெளியிடப்படாது…” என்றும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அறிவித்துவிட்டார்.

இனிமேல் தியேட்டர் உரிமையாளர்கள் தாங்கள் அறிவித்த தடையை நீக்குவார்களா..? இல்லையா..? என்பது நாளை காலையில்தான் தெரியும்..!

“ஒரு படத்தைத் தியேட்டருக்கு கொண்டு வருவதற்குள் தயாரிப்பாளர்கள் செத்துப் பிழைக்கிறார்கள்…” என்று அடிக்கடி சினிமா மேடைகளில் பல அனுபவசாலி தயாரிப்பாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம்.

இதோ.. இப்போது நேரிலேயே பார்க்கிறோம்..!

The post ‘ஈஸ்வரன்’ படத்திற்குத் திடீர் தடை – நீக்கம் – நள்ளிரவில் பரபரப்பு..! appeared first on Touring Talkies.

]]>
“என் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படத்தைப் பார்க்க வேண்டும்” – நடிகர் சிம்புவின் வேண்டுகோள்..! https://touringtalkies.co/my-fans-will-see-a-master-movie-actor-simbus-statement/ Mon, 04 Jan 2021 06:04:55 +0000 https://touringtalkies.co/?p=11777 “தமிழகத்தில் இருக்கும் சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும்…” என்றும், “எனது ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படத்தையும், விஜய்யின் ரசிகர்கள் ‘ஈஸ்வரன்’ படத்தையும் பார்க்க வேண்டும்” என்றும் நடிகர் சிலம்பரசன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது : “இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும்  எனது அன்பும், வாழ்த்துகளும்! ‘ஈஸ்வரன்’ பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் […]

The post “என் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படத்தைப் பார்க்க வேண்டும்” – நடிகர் சிம்புவின் வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.

]]>
“தமிழகத்தில் இருக்கும் சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும்…” என்றும், “எனது ரசிகர்கள் மாஸ்டர்’ படத்தையும், விஜய்யின் ரசிகர்கள் ‘ஈஸ்வரன்’ படத்தையும் பார்க்க வேண்டும்” என்றும் நடிகர் சிலம்பரசன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும்  எனது அன்பும், வாழ்த்துகளும்!

‘ஈஸ்வரன்’ பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான்.

திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம்.

அதற்காகத்தான் இந்தக் கொரானா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல.

இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதேசமயம்  அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர்’ படம் திரையரங்கிற்கு மட்டுமே வர வேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியமிற்கு அவர் செய்யும் மரியாதை.

அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை’ ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால், திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வர வேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார்.

அதில், எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள்.

திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள்.

என் ரசிகர்கள், ‘மாஸ்டர்’ படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ‘ஈஸ்வரன்’ பாருங்கள்.

திரையரங்குகள் நிறையட்டும். கொரானா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றி பெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக்கும்.

விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும். திரையுலகம் செழிக்க வேண்டும். அதற்கான வாசலை மாஸ்டரும்’, ‘ஈஸ்வரனும்’ செய்யும் என்று நம்புகிறேன்.

கடைகள், மால்கள், கடற்கரை என எல்லாமே முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டன. இதேபோல், திரையரங்குகளும் முழுமையாகத் திறக்கப்பட்டால் ஒழிய அந்தப் பழைய நிலை வராது. வசூல் நஷ்டமே ஏற்படும்.

தமிழக அரசு தயை கூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து,  பாதுகாப்பு விதிகளை அதிகரித்து,  திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து தமிழ்ப் புத்தாண்டிற்குள் நூறு சதவீத இருக்கை குறித்து உத்தரவிட்டால், மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம்…” என்று கூறியிருக்கிறார்.

The post “என் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படத்தைப் பார்க்க வேண்டும்” – நடிகர் சிம்புவின் வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.

]]>
சிம்புவிற்கு புத்தம் புது காரை பரிசளித்த அவரது தாயார்..! https://touringtalkies.co/usha-rajendar-gives-new-model-car-to-her-son/ Sun, 29 Nov 2020 15:01:42 +0000 https://touringtalkies.co/?p=10463 சிம்பு சிறந்த நடிகர் என்பதில் தமிழ் சினிமா உலகில் உள்ள எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவரிடம் இருந்த மிகப் பெரிய குறை படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வராதது மட்டுமே. ஆனால், இப்போது தன்னுடைய பழக்க வழக்கங்களை முற்றிலும் மாற்றிக்கொண்டுள்ள சிம்பு சொன்ன நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வது மட்டுமின்றி சமீபத்தில் நாற்பதே நாட்களில் இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய முழு காரணமாக இருந்திருக்கிறார். அந்த படத்திற்காக மட்டும் தொடர்ந்து […]

The post சிம்புவிற்கு புத்தம் புது காரை பரிசளித்த அவரது தாயார்..! appeared first on Touring Talkies.

]]>
சிம்பு சிறந்த நடிகர் என்பதில் தமிழ் சினிமா உலகில் உள்ள எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவரிடம் இருந்த மிகப் பெரிய குறை படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வராதது மட்டுமே.

ஆனால், இப்போது தன்னுடைய பழக்க வழக்கங்களை முற்றிலும் மாற்றிக்கொண்டுள்ள சிம்பு சொன்ன நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வது மட்டுமின்றி சமீபத்தில் நாற்பதே நாட்களில் இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய முழு காரணமாக இருந்திருக்கிறார். அந்த படத்திற்காக மட்டும் தொடர்ந்து 33 நாட்கள் அவர் பணியாற்றி இருக்கிறார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் சென்னைக்கு வந்து ஒரே ஒரு நாள் மட்டுமே ஓய்வெடுத்த சிம்பு, மறுநாளே வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டு இருக்கின்ற ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பாண்டிச்சேரி சென்றார். இப்போது பாண்டிச்சேரியில் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சிம்புவின் அயராத உழைப்பை பாராட்டுகின்ற வகையிலே புத்தம் புதிய கார் ஒன்றினை வாங்கி சிம்புவுக்கு பரிசாக அளித்துள்ளார் சிம்புவின் தாயாரான உஷா ராஜேந்தர்.

அவர் பரிசளித்துள்ள அந்தக் கார் சிம்பு நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கார் என்பதால் அளவில்லாத மகிழ்ச்சியோடு அந்த காரில் இப்போது சவாரி செய்து கொண்டிருக்கிறார் சிம்பு.

The post சிம்புவிற்கு புத்தம் புது காரை பரிசளித்த அவரது தாயார்..! appeared first on Touring Talkies.

]]>
சிம்பு-நிதி அகர்வால்-சுசீந்திரன் இணையும் ‘ஈஸ்வரன்’ படத்தின் டீஸர் https://touringtalkies.co/eeswaran-movie-teaser/ Sat, 14 Nov 2020 05:34:13 +0000 https://touringtalkies.co/?p=10026 Eeswaran Teaser Musicians Credits : Programmed & Arranged By Thaman S Live Percussions – Sukumar Krishna Kishore Buddhar Kalai Kuzhu Thumba Raja Veda Lakhsmi Narayan Raju Team Kaviraj & Sruthi Additional Percussions – Thamania Harmonies – Ananthu Deepak & Team Chennai String Section – Conducted By Prabhakar Assisted By Ravi Raghav Additional Solar Horns – […]

The post சிம்பு-நிதி அகர்வால்-சுசீந்திரன் இணையும் ‘ஈஸ்வரன்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.

]]>
Eeswaran Teaser Musicians Credits : Programmed & Arranged By Thaman S Live Percussions – Sukumar Krishna Kishore Buddhar Kalai Kuzhu Thumba Raja Veda Lakhsmi Narayan Raju Team Kaviraj & Sruthi Additional Percussions – Thamania Harmonies – Ananthu Deepak & Team Chennai String Section – Conducted By Prabhakar Assisted By Ravi Raghav Additional Solar Horns – Osho V Recorded At V Studios ( Chn ) Yrf ( Mumbai ) Vgp ( Chn ) Mixed & Mastered By Shadab Rayeen At New Edge ( Mumbai ) & New Edge Ny Assisted By Abhishek & Tapas Musicians Co Ordinator – Manigandan Studio Assistance – Kannan Seenu & Lingam Balaji Kesavan | Sekar B | Yugabharathi | Dinesh Kasi | Shobi | Uthra Menon | Antony Xavier | Sarath Nivash | Hariharasuthan | Aakash Balaji | BeatRoute | Daboo Ratnani | Tuney John, 24 AM | Arun Arunachalam Produced by Balaji Kappa.

The post சிம்பு-நிதி அகர்வால்-சுசீந்திரன் இணையும் ‘ஈஸ்வரன்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.

]]>