Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
இளையராஜா – Touring Talkies https://touringtalkies.co Wed, 21 Dec 2022 16:09:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png இளையராஜா – Touring Talkies https://touringtalkies.co 32 32 சிவாஜி ரகசியம்…!”: வெளியிட்ட இளையராஜா https://touringtalkies.co/shivaji-secret-published-by-ilayaraja/ Wed, 21 Dec 2022 15:50:31 +0000 https://touringtalkies.co/?p=28854 நடிகர் திலகம் சிவாஜி குறித்து மருது மோகன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில சிவாஜி குடும்பத்தினர், ரஜினி, கமல், இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய இளையராஜா, “ இயக்குனர் எஸ்.பி,முத்துராமன், ‘கலையுலகம் சார்பில் சிவாஜிக்கு ஒரு பரிசு அளிக்க வேண்டும்.  அது  குதிரையில் ஏறி சிவாஜி உட்கார்ந்திருக்கும் விதமாக இருக்க வேண்டும்’ என்றார். இதற்காக  கமல், ரஜினியிடம் நிதி வசூல் செய்துவிட்டு என்னிடம் வந்தார். உடனே நான், ‘ இந்த […]

The post சிவாஜி ரகசியம்…!”: வெளியிட்ட இளையராஜா appeared first on Touring Talkies.

]]>

நடிகர் திலகம் சிவாஜி குறித்து மருது மோகன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இதில சிவாஜி குடும்பத்தினர், ரஜினி, கமல், இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய இளையராஜா, “ இயக்குனர் எஸ்.பி,முத்துராமன், ‘கலையுலகம் சார்பில் சிவாஜிக்கு ஒரு பரிசு அளிக்க வேண்டும்.  அது  குதிரையில் ஏறி சிவாஜி உட்கார்ந்திருக்கும் விதமாக இருக்க வேண்டும்’ என்றார்.

இதற்காக  கமல், ரஜினியிடம் நிதி வசூல் செய்துவிட்டு என்னிடம் வந்தார்.

உடனே நான், ‘ இந்த சிலையில் யார் பெயரும்  இருக்கக் கூடாது’ என கருதி அதற்கான மொத்த பணத்தையும் நானே கொடுத்தேன்.

சிலையை பெற்றுக் கொண்ட சிவாஜி அவரது மனைவியிடம், ‘யாரை மறந்தாலும் கடைசி வரை இளையராஜாவை மட்டும் மறக்கக் கூடாது’ என்றார்.

இதை பெருமைக்காக சொல்லவில்லை.  எந்த அரசும் கலையுலகமும் செய்யாத மரியாதையை நான் தனி ஒருவனாக செய்து காட்டியிருக்கிறேன், இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம் இது ’ என்று கண்கலங்கி பேசினார் இளையராஜா.

The post சிவாஜி ரகசியம்…!”: வெளியிட்ட இளையராஜா appeared first on Touring Talkies.

]]>
ஒரு பாடலுக்கு ஆறு மணி நேரம் ஷூட்டிங் – ரஜினி காந்த் https://touringtalkies.co/six-hours-of-shooting-for-one-song-rajinikanth/ Sun, 18 Dec 2022 17:01:35 +0000 https://touringtalkies.co/?p=28785 ரஜினிகாந்த், விஜயசாந்தி  நடிப்பில் மன்னன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.  முதன் முதலில் அந்த படத்தில் ரஜினி  ஜானகியுடன் இணைந்து பாடியிருப்பார். அப்போது அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. ’’அடிக்குது குளிரு’’ பாடலில் இணைந்து பாட வேண்டும். என்னை பாட சொன்னார்கள் எனக்கு பாட்டு வராது என்றேன் ஆனால் விடாமல் பிடித்து என்னை பாட வைத்து விட்டார் இளையராஜா. வெறும் ஆறு வரிகள் தான் பாடினேன். ஆனால் அதை எடுக்க ஆறு மணி நேரம் […]

The post ஒரு பாடலுக்கு ஆறு மணி நேரம் ஷூட்டிங் – ரஜினி காந்த் appeared first on Touring Talkies.

]]>

ரஜினிகாந்த், விஜயசாந்தி  நடிப்பில் மன்னன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.  முதன் முதலில் அந்த படத்தில் ரஜினி  ஜானகியுடன் இணைந்து பாடியிருப்பார். அப்போது அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

’’அடிக்குது குளிரு’’ பாடலில் இணைந்து பாட வேண்டும். என்னை பாட சொன்னார்கள் எனக்கு பாட்டு வராது என்றேன் ஆனால் விடாமல் பிடித்து என்னை பாட வைத்து விட்டார் இளையராஜா. வெறும் ஆறு வரிகள் தான் பாடினேன். ஆனால் அதை எடுக்க ஆறு மணி நேரம் ஆனது என்றார். நான் பாடிய முதல் பாடலும்  கடைசி பாடலும்  இதுதான்.அதன் பிறகு நான் பாடவில்லை  என்று சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மன்னன் படத்தில் பாடியது குறித்து ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.

The post ஒரு பாடலுக்கு ஆறு மணி நேரம் ஷூட்டிங் – ரஜினி காந்த் appeared first on Touring Talkies.

]]>
23 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்தது இளையராஜா-ராமராஜன் கூட்டணி https://touringtalkies.co/ilaiyaraja-and-ramarajan-reunite-after-23-years-in-chaamanyan-movie/ Thu, 10 Nov 2022 16:33:02 +0000 https://touringtalkies.co/?p=26923 1980, 1990-களில் ‘மக்கள் நாயகன்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன். கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர். இந்த 45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், தற்போது ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட,  அதேசமயம் தரமான படங்களைத் தயாரிக்கும்  ‘எட்செட்ரா என்டர்டெய்ன்மெண்ட்’ சார்பில் […]

The post 23 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்தது இளையராஜா-ராமராஜன் கூட்டணி appeared first on Touring Talkies.

]]>
1980, 1990-களில் மக்கள் நாயகன்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன்.

கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர்.

இந்த 45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், தற்போது ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட,  அதேசமயம் தரமான படங்களைத் தயாரிக்கும்  ‘எட்செட்ரா என்டர்டெய்ன்மெண்ட்’ சார்பில் V.மதியழகன் இந்த படத்தைத் தயாரித்து வருகிறார்.

நடிகர்களான ராதாரவி, எம்.எஸ்பாஸ்கர் இருவரும் இந்தப் படத்தில் இணை நாயகர்களாக நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத் தொகுப்பை  ராம் கோபி கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார். பத்திரிகை தொடர்பு – A. ஜான்

‘தம்பிக்கோட்டை’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநரான R. ராகேஷ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

‘சாமானியன்’படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மணி மகுடத்தில் வைரம் சூட்டியது போல இந்த படத்திற்கு இசையமைக்க இசை ஞானி’ இளையராஜா தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

எப்போதுமே ராமராஜனையும், இளையராஜாவையும் பிரித்துப் பார்க்க முடியாது.  ராமராஜன் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்து, அவரது வெற்றிக்கு துணை நின்று காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்துள்ளார் ராஜா.

இன்னும் சொல்லப் போனால் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக பல வெற்றிப் பாடல்களை ராமராஜனுக்கு இசைத்துள்ளார் மேஸ்ட்ரோ.

தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிப்பிற்குத் திரும்பியுள்ள ராமராஜனின் படத்திற்கு இசைஞானி  இசையமைப்பதை விட பொருத்தமான அம்சம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

இந்தப் படம் தொடர்பாக நேற்று மேஸ்ட்ரோ ராஜாவை நேரில் சந்தித்து பேசினார் ராமராஜன். அப்போது ராஜாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நெகிழ்ந்தபடி மனம்விட்டு பேசிய ராமராஜன்,  “நான் பல வருடங்கள் கழித்து நடிப்பிற்குத் திரும்பி உள்ளேன். இந்தப் படத்திற்கு நீங்கள்தான் இசையமைக்க வேண்டும்” என உரிமையுடன் கேட்க, இளையராஜாவும் அதற்கு மனப்பூர்வ சம்மதம் தெரிவித்துள்ளார்.

படத்தின் இயக்குநரான R. ராகேஷ் இந்த சந்திப்பு பற்றி கூறும்போது,  “இந்த ‘சாமானியன்’ என்கிற இந்த கதைக்கு மிகப் பொருத்தமானவராக மனதில் தோன்றிய முதல் நடிகர் ராமராஜன்தான்.

காரணம், சாமானிய மக்கள் இன்றும் தங்களில் ஒருவராகத்தான் அவரைப் பார்க்கிறார்கள்.. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக அவர் மறுபிரவேசம் செய்வதற்கு ஏற்ற கதையாக இந்த  படம் அமைந்துள்ளது.

தற்போது இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக் கொண்டது இந்த படத்திற்கான மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.  குறிப்பாக இவர்களது கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால் ராமராஜனின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது உறுதி.

ராமராஜனின் பல வெற்றிப் படங்களை இயக்கி, அவரது திரையுலக பயணத்திற்கு உறுதுணையாக நின்றவர் இயக்குநர் கங்கை அமரன். அவர் மூலமாக இளையராஜாவை அணுகி இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமராஜன், ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் மூவரும் போட்டி போட்டு நடிக்கும் காட்சிகளை இயக்கியது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்.

மிக முக்கியமாக, பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒரு அருமையான பாடலை எழுதியுள்ளார்.  கவிஞர் சினேகனும் அழகான பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளார்.. இந்த படத்தின் வெற்றியின்  அம்சங்களில் ஒன்றாக இசைஞானியின் இசையும் இருக்கும். தற்போது படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.” என்றார்.

இதற்கு முன்னதாக 1999ல் ராமராஜன் நடிப்பில் வெளியான ‘அண்ணன்’ என்கிற படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்தவகையில் 23 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது.

இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

The post 23 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்தது இளையராஜா-ராமராஜன் கூட்டணி appeared first on Touring Talkies.

]]>
‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு இளையராஜா இசை! https://touringtalkies.co/ponnis-selvan-ilayaraja-music/ Sun, 09 Oct 2022 10:38:07 +0000 https://touringtalkies.co/?p=25013 ”என்னது.. மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் நிலையில், இளையராஜாவின் இசையில் பொ.செ.வா?” என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். உண்மைதான். ‘பொன்னியின் செல்வன்’ கதையை திரைப்படமாக்குவதாய் மணிரத்னம் அறிவித்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ வெப் தொடராகவும் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ‘சிரஞ்சீவியின் பொன்னியின் செல்வன்’ என்று பெயர் வைத்தனர். அஜய் பிரதீப் ஒளிப்பதிவு மற்றும் திரைக்கதை வசனம் எழுதி இயக்கம் செய்வதாகவுமும், இளையராஜா இசையமைக்க போவதாகவும் […]

The post ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு இளையராஜா இசை! appeared first on Touring Talkies.

]]>
”என்னது.. மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் நிலையில், இளையராஜாவின் இசையில் பொ.செ.வா?” என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். உண்மைதான்.

பொன்னியின் செல்வன்’ கதையை திரைப்படமாக்குவதாய் மணிரத்னம் அறிவித்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ வெப் தொடராகவும் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ‘சிரஞ்சீவியின் பொன்னியின் செல்வன்’ என்று பெயர் வைத்தனர். அஜய் பிரதீப் ஒளிப்பதிவு மற்றும் திரைக்கதை வசனம் எழுதி இயக்கம் செய்வதாகவுமும், இளையராஜா இசையமைக்க போவதாகவும் அறிவிப்பு வெளியானது.

அஜய் பிரதீப், “1979-களில் இருந்து, கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சிகள் நடக்காமல் போனதால் பொன்னியின் செல்வன் தொடருக்கு சிரஞ்சீவி என்ற பெயரையும் இணைத்துள்ளேன். திரைக்கதை, வசனம், ஓவியங்கள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என முழு உருவாக்கத்தை பார்த்த இளையராஜா உடனடியாக இசையமைக்க சம்மதித்தார். இந்த வெப் தொடர் 4 மாதங்கள் ஒளிபரப்பாகும். வெப் தொடருக்கு சாபுசிரில் கலை இயக்குனராகவும் ஆண்டனி எடிட்டராகவும் பணியாற்ற உள்ளனர். நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஆகஸ்டு மாதம் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும். எட்டர் நிட்டி மோஷன் கிராப்ட் மற்றும் எட்டர் நிட்டி ஸ்டார் தயாரிக்கும் இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகிறது” என்றார்.

ஆனால் அதற்கான பணிகள் இன்னும் முடியவில்லை. திரைப்படமாக பொ.செ.வாக பார்த்துவிட்டோம். வெப்சீரியலாக வந்தாலும் ரசிக்கத்தானே செய்வோம்… வரட்டும்.

The post ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு இளையராஜா இசை! appeared first on Touring Talkies.

]]>
‘சூப்பர் ஸ்டார்’ படத்தின் கம்போஸிங்கின்போது பிறந்த யுவன் சங்கர் ராஜா..! https://touringtalkies.co/yuvan-shankar-raja-was-born-during-the-composing-of-super-star/ Thu, 01 Sep 2022 11:43:04 +0000 https://touringtalkies.co/?p=24180 ‘இசை ஞானி’ இளையராஜா தனது இளைய மகன் யுவன்சங்கர் ராஜாவின் பிறந்த நாளான நேற்றைக்கு வீடியோ மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் இளையராஜா பேசும்போது, “ஒரு காலக்கட்டத்துல வந்து ஆழியார் டேம்ல போய் கம்போஸ் பண்றது எனக்குப் பழக்கமாச்சு. நிறைய படங்களுக்கு ஆழியார் டேம் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிட்டு, 2 நாள், 3 நாள் தங்கி 4-5 படம் கம்போஸ் பண்றதுனு சொல்லி, புரோகிராம் போட்டுட்டு போயிடுவோம். அந்த மாதிரி ஒரு கம்போசிங்குக்கு […]

The post ‘சூப்பர் ஸ்டார்’ படத்தின் கம்போஸிங்கின்போது பிறந்த யுவன் சங்கர் ராஜா..! appeared first on Touring Talkies.

]]>
இசை ஞானி’ இளையராஜா தனது இளைய மகன் யுவன்சங்கர் ராஜாவின் பிறந்த நாளான நேற்றைக்கு வீடியோ மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் இளையராஜா பேசும்போது, “ஒரு காலக்கட்டத்துல வந்து ஆழியார் டேம்ல போய் கம்போஸ் பண்றது எனக்குப் பழக்கமாச்சு. நிறைய படங்களுக்கு ஆழியார் டேம் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிட்டு, 2 நாள், 3 நாள் தங்கி 4-5 படம் கம்போஸ் பண்றதுனு சொல்லி, புரோகிராம் போட்டுட்டு போயிடுவோம்.

அந்த மாதிரி ஒரு கம்போசிங்குக்கு டைரக்டர் மகேந்திரனும், தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி-யும் என்னை கூப்பிட்டு போனாங்க. நான் என் டீமோட போயிருந்தேன். அப்போவெல்லாம் பக்க வாத்தியம் வாசிக்கிறவங்க எல்லாம்கூட வருவாங்க. அவங்களோட போயிருக்கோம்.

தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி-க்கு கோயம்புத்தூர்ல வீடு இருக்கிறதால, அவர் மட்டும் தன் வீட்டுக்கு போயிட்டு வருவார். அவர் ஒரு நாள் தன் வீட்டிக்குப் போயிட்டு சாயங்காலமா வந்த உடனே “உன் ஒய்ஃப்க்கு டெலிவரி ஆயிடுச்சியா… உனக்கு பையன் பொறந்திருக்கானாம்யா..” அப்படின்னு சொன்னார். கேட்டவுடனேயே சந்தோஷமாத்தான் இருந்தது.

அப்ப நான் பாருங்க… ஒய்ஃப்போட டெலிவரி டைம்லகூட வந்து நான் கம்போசிங் பண்ற மாதிரிதான் இருந்திருக்கேனே தவிர, அவங்கள பக்கத்துல இருந்து பாத்துக்கனும் அப்படிங்கறதெல்லாம் எனக்குத் தெரியலை. அவங்களும் அதை பெருசா எடுத்துக்கல.

அந்த நேரத்துல கே.ஆர்.ஜி. இதை வந்து சொன்னப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அன்னைக்கு கம்போஸ் பண்ண பாட்டு சொனாரிட்டா’ என்ற பாட்டு. அந்த படத்தோட பேரு ‘ஜானி’. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி சார் நடித்த படம். ஹேப்பி பர்த்டே யுவன்” என்று தனது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

The post ‘சூப்பர் ஸ்டார்’ படத்தின் கம்போஸிங்கின்போது பிறந்த யுவன் சங்கர் ராஜா..! appeared first on Touring Talkies.

]]>
இளையராஜா இசையமைத்துள்ள ஆங்கிலப் படம் https://touringtalkies.co/ilaiyaraja-make-music-to-english-movie-a-beautiful-break-up/ Mon, 27 Jun 2022 06:03:22 +0000 https://touringtalkies.co/?p=22846 ‘இசை ஞானி’ இளையராஜா இசையமைத்துள்ள  ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின்  ‘கம் ஃப்ரீ மீ’ பாடல் உலக  இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது. ’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா மற்றும் மேட்டில்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பல முக்கியமான திரைக் கலைஞர்களும், தொழிற் நுட்ப வல்லுநர்களும் இப்படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள். இப்படத்திற்கான […]

The post இளையராஜா இசையமைத்துள்ள ஆங்கிலப் படம் appeared first on Touring Talkies.

]]>
இசை ஞானி’ இளையராஜா இசையமைத்துள்ள  ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின்  ‘கம் ஃப்ரீ மீ’ பாடல் உலக  இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது.

’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா மற்றும் மேட்டில்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பல முக்கியமான திரைக் கலைஞர்களும், தொழிற் நுட்ப வல்லுநர்களும் இப்படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள்.

இப்படத்திற்கான ‘இசை ஞானி’ இளையராஜாவின் பங்கு, படத்தின் பிம்பத்தை பெரிய அளவில் உயர்த்துகிறது. உலகெங்கிலும் பலகோடி ரசிகர்களைக் கொண்ட ஒரு இசை மேதை இப்படத்திற்காக தனது சிறந்த இசையை வழங்கியுள்ளது பெருமைக்குரியதாகும்.

‘இசை ஞானி’ வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு திகில் படத்திற்குள் தன்னை இணைத்துக் கொள்ளும் திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கான பின்னணி இசை, அவரின் பரந்த இசை ஞானத்திலிருந்து மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்காக BOW TIE Symphony Orchestra-ல் மாயாஜாலமான அசல் ஒலிப்பதிவுகளை இளையராஜா உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் இளையராஜா அளித்திருந்த ஒரு நேர்காணலில்கூட, ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தையும், அதன் இயக்குநரையும் வெகுவாக பாராட்டி பேசியிருந்தார். 

‘இசை ஞானி’யின் இசை தொடரியல், முற்றிலும் தனித்துவமானதாக இருப்பதால், மேற்கத்திய பார்வையாளர்கள் அதனை மொத்தமாக கொண்டாடுகிறார்கள். எனவே, ‘இசை ஞானி’யின் PR டீம், இந்தப் படத்தின் இசையை சாதாரணமாக விளம்பரப்படுத்தாமல், ஆஸ்கார் கிராமி, கோல்டன் குளோப் போன்ற பிற பொருத்தமான, தகுதியான மன்றங்களில் போட்டிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் மூலம், 12-வது தாதாசாஹேப் பால்கே திரைப்பட விழா விருதுகளில் சிறந்த பின்னணி இசையை வென்றது மட்டுமல்லாமல், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) பிரிவில் ஸ்ரீகாந்த் கண்டாலாவுக்கு சிறந்த படத்திற்கான விருதையும் A Beautiful Breakup பெற்றது. மேலும் சில சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கு பெற்று, சிறந்த படமாக தேர்வாகியுள்ளது.

The post இளையராஜா இசையமைத்துள்ள ஆங்கிலப் படம் appeared first on Touring Talkies.

]]>
ஐஸ்வர்யா ரஜினிக்கு இளையராஜாவின் அட்வைஸ்..! https://touringtalkies.co/aishwarya-rajini-meets-isaignani-ilaiyaraja/ Tue, 12 Apr 2022 14:05:29 +0000 https://touringtalkies.co/?p=21739 நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா நேற்று இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்தித்தார். அப்போது இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா நேற்று தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படங்களுடன், “என்னுடைய திங்கள்கிழமை மதியம் இசையுடன் கழிந்தது. என் இனிய இளையராஜாவுடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சிகரமான ஒன்று” என்று குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவில் ‘வொர்க் மோட்’ என குறிப்பிட்டுள்ளதால் ஐஸ்வர்யா இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு இளையராஜா இசையமைக்கப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் […]

The post ஐஸ்வர்யா ரஜினிக்கு இளையராஜாவின் அட்வைஸ்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா நேற்று இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்தித்தார்.

அப்போது இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா நேற்று தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

அந்தப் புகைப்படங்களுடன், “என்னுடைய திங்கள்கிழமை மதியம் இசையுடன் கழிந்தது. என் இனிய இளையராஜாவுடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சிகரமான ஒன்று” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது பதிவில் வொர்க் மோட்’ என குறிப்பிட்டுள்ளதால் ஐஸ்வர்யா இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு இளையராஜா இசையமைக்கப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் இளையராஜா இன்றைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவுக்கு பதிலளித்துள்ளார்.

அதில், “உன்னை சந்தித்ததிலும், உன்னுடன் நேரம் செலவிட்டதிலும் எனக்கு மகிழ்ச்சி. ஒருவரின் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடக்கும். ஆனால் ஒன்று மற்றும் மாறாது. அது உண்மையான காதல். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இரு. எல்லாமே மாறும். ஆனால் ஒன்று மட்டும் மாறாது. அது காதல்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் தனது காதல் கணவரான நடிகர் தனுஷிடமிருந்து தான் பிரிவதாக ஐஸ்வர்யா அறிவித்திருப்பதால், “தனுஷ்-ஐஸ்வர்யா காதலைக் குறிப்பிட்டுத்தான் இளையராஜா இப்படிப் பேசியிருக்கிறார். அதனால் இது நிச்சயமாக அவர் ஐஸ்வர்யாவுக்கு கொடுத்திருக்கும் அட்வைஸ்தான்…” என்று சமூக வலைத்தளங்களில் தற்போது தீவிரமாக பேசி வருகிறார்கள்.

The post ஐஸ்வர்யா ரஜினிக்கு இளையராஜாவின் அட்வைஸ்..! appeared first on Touring Talkies.

]]>
இசைஞானி இளையராஜா புதிய ஸ்டூடியோவைத் துவக்கினார்..! https://touringtalkies.co/ilayarajas-new-studio-inaguration-today/ Wed, 03 Feb 2021 05:56:57 +0000 https://touringtalkies.co/?p=12696 இசைஞானி இளையராஜா தனக்கென்று புதிதாக ஒரு இசைக் கூடத்தை சென்னையில் நிறுவியிருக்கிறார். கடந்த ஆண்டுவரையிலும் சாலிகிராமம் பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவை பல்லாண்டு காலமாக பயன்படுத்தி வந்த இசைஞானி இளையராஜா, அந்த ஸ்டூடியோவின் நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அங்கிருந்து வெளியேறினார். அதன் பின்பு பல முறை, பல வழிகளில் முயற்சித்தும் அந்த பிரசாத் ரிக்கார்டிங் தியேட்டர் அவருக்குக் கை கூடவில்லை. ஆனாலும், மனம் தளராமல் தனக்கென்று தனியாக ஒரு ரிக்கார்டிங் ஸ்டூடியோவை அமைத்துவிட்டார் இசைஞானி இளையராஜா. நுங்கம்பாக்கத்தில் […]

The post இசைஞானி இளையராஜா புதிய ஸ்டூடியோவைத் துவக்கினார்..! appeared first on Touring Talkies.

]]>
இசைஞானி இளையராஜா தனக்கென்று புதிதாக ஒரு இசைக் கூடத்தை சென்னையில் நிறுவியிருக்கிறார்.

கடந்த ஆண்டுவரையிலும் சாலிகிராமம் பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவை பல்லாண்டு காலமாக பயன்படுத்தி வந்த இசைஞானி இளையராஜா, அந்த ஸ்டூடியோவின் நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அங்கிருந்து வெளியேறினார்.

அதன் பின்பு பல முறை, பல வழிகளில் முயற்சித்தும் அந்த பிரசாத் ரிக்கார்டிங் தியேட்டர் அவருக்குக் கை கூடவில்லை. ஆனாலும், மனம் தளராமல் தனக்கென்று தனியாக ஒரு ரிக்கார்டிங் ஸ்டூடியோவை அமைத்துவிட்டார் இசைஞானி இளையராஜா.

நுங்கம்பாக்கத்தில் புகழ் பெற்ற பிரிவியூ தியேட்டராக இருந்த எம்.எம்.தியேட்டரைத்தான் இசைஞானி இப்போது முழுமையாக விலைக்கு வாங்கி அதைத் தனது பெயரிலேயே ‘இளையராஜா ரிக்கார்டிங் ஸ்டூடியோ’வாக மாற்றியிருக்கிறார்.

புத்தம் புதிய பொலிவுடன் அந்தக் கட்டிடமே மாற்றியமைக்கப்பட்டு இசைஞானியின் அமைதிக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்றைக்குத்தான் அந்த ஸ்டூடியோ முழு வீச்சில் இயங்கத் துவங்கியுள்ளது. இன்றைய முதல் நாளிலேயே இசைஞானி இளையராஜா, இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் படத்திற்கு ஒரு பாடலை இசையமைத்துத் தந்திருக்கிறார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின்போது அந்தப் படக் குழுவினரும், இசைஞானி இளையராஜாவின் குடும்பத்தினரும், இயக்குநர் வெற்றி மாறனும் உடன் இருந்துள்ளனர்.

இசைஞானி இளையராஜாவின் இந்தப் புதிய பாதை சிறப்பாக அமைய மனதார வாழ்த்துகிறோம்..!

The post இசைஞானி இளையராஜா புதிய ஸ்டூடியோவைத் துவக்கினார்..! appeared first on Touring Talkies.

]]>
இளையராஜாவுக்கு ‘முதல் மரியாதை’ படம் பிடிக்காமல் போனது ஏன்..? https://touringtalkies.co/why-did-ilayaraja-not-like-the-film-mudhal-mariyaathai/ Wed, 06 Jan 2021 10:06:57 +0000 https://touringtalkies.co/?p=11853 ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் இயக்கத்தில் 1985-ம் ஆண்டு வெளியான ‘முதல் மரியாதை’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு, இன்றுவரையிலும் பாரதிராஜாவின் படைப்புகளிலேயே தலை சிறந்ததாகவும் அமைந்திருக்கிறது. இதுவரையிலும் வெளிவந்த சிறந்த தமிழ்த் திரைப்படங்களில் முதல் 10 படங்களின் பட்டியலில் அந்தப் படமும் இடம் பெறும். அந்த அளவுக்கு பல்வேறு சிறப்புக்களைப் பெற்றிருந்த அத்திரைப்படத்தின் பாடல்கள், இன்றளவும் மறக்க முடியாத பாடல்களாக தமிழர்களிடையே ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இத்திரைப்படம் இன்றுவரையிலும் ‘இசைஞானி’ இளையராஜாவுக்குப் பிடிக்காத படமாகவே இருக்கிறது. […]

The post இளையராஜாவுக்கு ‘முதல் மரியாதை’ படம் பிடிக்காமல் போனது ஏன்..? appeared first on Touring Talkies.

]]>
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் இயக்கத்தில் 1985-ம் ஆண்டு வெளியான ‘முதல் மரியாதை’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு, இன்றுவரையிலும் பாரதிராஜாவின் படைப்புகளிலேயே தலை சிறந்ததாகவும் அமைந்திருக்கிறது.

இதுவரையிலும் வெளிவந்த சிறந்த தமிழ்த் திரைப்படங்களில் முதல் 10 படங்களின் பட்டியலில் அந்தப் படமும் இடம் பெறும். அந்த அளவுக்கு பல்வேறு சிறப்புக்களைப் பெற்றிருந்த அத்திரைப்படத்தின் பாடல்கள், இன்றளவும் மறக்க முடியாத பாடல்களாக தமிழர்களிடையே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இத்திரைப்படம் இன்றுவரையிலும் ‘இசைஞானி’ இளையராஜாவுக்குப் பிடிக்காத படமாகவே இருக்கிறது. “ஏன் பிடிக்கவில்லை..?” என்பதற்கு இளையராஜா இன்றுவரையிலும் எந்தப் பதிலும் சொல்லாமலேயே இருக்கிறார். “எனக்குப் பிடிக்கலை…” என்று ஒற்றை வரியில் மட்டுமே பதில் சொல்லியிருக்கிறார் இளையராஜா.

இந்தப் படத்தின் ரீரெக்கார்டிங் பற்றியும், இந்தப் படம் பற்றிய இளையராஜாவின் மதிப்பீடுகள் பற்றியும் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தனது யுடியூப் தளத்தில் சமீபத்தில் பேசியிருக்கிறார்.

அதில், “முதல் மரியாதை திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு டபுள் பாஸிட்டிவ்வை சவேரா ஓட்டலில் இருந்த தியேட்டரில் நான் இளையராஜாவுக்கு போட்டுக் காட்டினேன். அவனுக்குப் படம் பிடிக்கலை. “என்ன நீ எடுத்திருக்க..? இந்தக் காலத்துல போயி இதெல்லாம் எடுபடுமா..? இப்போதைய இளைஞர்களுக்கு இது பிடிக்குமா..? என்றெல்லாம் கேட்டான்.

ஆனால், நான் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்தேன். இந்தப் படம்தான் என் கேரியரில் தலை சிறந்த திரைப்படமாக இருக்கும் என்று அப்போதே நான் நம்பியிருந்தேன்.

ரீரெக்கார்டிங்கிற்காக இளையராஜா பிரசாத் தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தான். முதல் ரீலை பார்த்துவிட்டு மறுபடியும், “என்னய்யா இது.. முதல் காட்சியே இப்படித்தான் இருக்கணுமா..?” என்றான். “அதெல்லாம் நீ பீல் பண்ணாத.. பி.ஜி.எம்.மை போட்டுக் கொடு..” என்றேன்.

இளையராஜாவுக்கு அந்தப் படம் பிடிக்கவில்லைதான். ஆனால் அதற்காக தரமான இசையைக் கொடுக்காமல் இல்லை. அவனுடைய ரீரெக்கார்டிங் பணியிலேயே இந்தப் படம்தான் பெஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு அற்புதமான பின்னணி இசையை ‘முதல் மரியாதை’ படத்திற்காகப் போட்டுக் கொடுத்தான்.

முதல் ரீலை எடுத்து அடுத்து 2-வது ரீலையும் எடுத்தான். அதுக்கும் மியூஸிக் போட்டுட்டு மூணாவது ரீலையும் எடுத்தப்பவும் ஆர்க்கெஸ்ட்ட்ரால ஒருத்தர்கூட எந்திரிச்சு வெளில போகலை. அப்படியொரு இறுக்கமா உக்காந்திருந்தாங்க.

இளையராஜா அப்பத்தான் என்கிட்ட கேட்டான், “என்னய்யா இது.. இவங்களுக்கெல்லாம் படம் பிடிச்சிருக்கு போல.. ஒருத்தர்கூட எந்திரிக்கலை..” என்றான். அப்பவே எனக்கு நம்பிக்கை வந்திருச்சு. இது நமக்குப் பெருமை சேர்க்கிற படமா இருக்கும்ன்னு..!

ரீல், ரீலா இளையராஜா பின்னணி இசை அமைக்க.. அமைக்க.. அந்தப் படம் உருவாகி வரும்போதே எனக்கு அந்தப் படத்தின் வெற்றி கண்ணுக்குத் தெரிஞ்சிருச்சு. அந்த அளவுக்கு உயிரோட்டமான இசையைக் கொடுத்திருந்தான் இளையராஜா.

ராதா படகில் இருந்து இறங்கும்போது தரையில் காலை வைத்தவுடன் குடிசையில் கட்டிலில் படுத்தியிருக்கும் சிவாஜியின் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும். அதற்கு ஒரு இசை கொடுத்திருப்பான் பாருங்க. நமக்கே ஒரு ஜெர்க் ஆகும்.

அதே மாதிரி ராதா, சிவாஜியின் கையைப் பிடித்து அதற்குள் சிவாஜியின் தலைமுடியில் பாசி மணி செய்து வைத்திருக்கும் அந்த பாசி மாலையை வைப்பார். வைத்துவிட்டு கையை எடுப்பார். பாசி மணி இப்போது வெளியில் தெரியும். இந்த இடத்திலும் கண்ல தண்ணி வர்ற அளவுக்கு இளையராஜாவின் பி.ஜி.எம். இருக்கும்.

இந்த ரீரெக்கார்டிங் வேலைகள் நடந்துக்கிட்டிருக்கும்போது திடீர்ன்னு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் வீட்டில் இருந்து எனக்கு ஒரு போன் வந்துச்சு. “எம்.ஜி.ஆர். உங்களை வரச் சொல்றாரு. வர முடியுமா”ன்னு கேட்டாங்க.

இன்னும் ஒரு ரீல் பாக்கியிருந்தது. இளையராஜா வேற ராத்திரி 8 மணிக்கு மேல வேலை பார்க்க மாட்டான். வீட்டுக்குக் கிளம்பிருவான். நாம கிளம்பினால் வேலை கெட்டிருமேன்னு தவிச்சேன்.

இளையராஜாதான் “நீ போயிட்டு வா. நான் போட்டு வைச்சிருக்கேன்…” என்று சொல்லி அனுப்பி வைத்தார். நான் ராமாவரம் தோட்டத்துக்குப் போயி எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசிவிட்டு நேரா பிரசாத்துக்குத்தான் வந்தேன். வந்தால் இளையராஜா வீட்டுக்குப் போகாமல் அப்படியே ஸ்டூடியோவில் அமர்ந்திருந்தான்.

“என்னடா போகலியா..?” என்றேன். “இல்ல.. உனக்குப் பிடிக்கலைன்னா அப்புறம் ‘அதை மாத்து’.. ’இதை மாத்து’ன்னு சொல்லுவ.. அதான் இருந்து காட்டிட்டுப் போலாம்ன்னு உக்காந்தேன்…” என்றான்.

கடைசி ரீலை போட்டுக் காட்டினான். கிளைமாக்ஸில் ராதா டிரெயினில் போகும்போது இறக்கும் காட்சியிலும், உள்ளத்தை உருக்குற மாதிரி இசையைப் போட்டிருந்தான் இளையராஜா. எனக்குப் பார்க்கப் பார்க்க கண்ல தண்ணி வந்துச்சு..

அவனுக்குப் படம் பிடிச்சதோ.. பிடிக்கலையோ.. ஆனால், அவன் அந்தப் படத்துக்கு நியாயமான இசைக் கோர்ப்பை வழங்கியிருந்தான். அதுதான் எனக்கு அவனிடம் ரொம்பவும் பிடிச்ச விஷயம்..” என்று சொல்லியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

The post இளையராஜாவுக்கு ‘முதல் மரியாதை’ படம் பிடிக்காமல் போனது ஏன்..? appeared first on Touring Talkies.

]]>
“இளையராஜாவை வி்ட்டுப் பிரிந்தது ஏன்..?” – கவிஞர் பிறைசூடனின் விளக்கம் https://touringtalkies.co/why-r-the-part-of-a-way-from-ilayaraja-told-kavingar-piraisoodan/ Fri, 01 Jan 2021 13:35:21 +0000 https://touringtalkies.co/?p=11650 ஒரு காலத்தில் இளையராஜாவுடன் அவருடைய ரிக்கார்டிங் தியேட்டரிலேயே வசித்து வருகிறார் என்று சொல்லும் அளவுக்கு இளையராஜாவுடன் நெருக்கமாக இருந்த கவிஞர் பிறைசூடன், ஒரு கட்டத்தில் இளையராஜாவுடன் பிணக்கு ஏற்பட்டு அவரிடமிருந்து விலகினார். அதற்கான காரணம் என்ன என்பது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கவிஞர் பிறைசூடனே சொல்லியிருக்கிறார். “நான் அவருடன் இருந்த காலக்கட்டத்தில் இளையராஜா தன்னைச் சுற்றியிருந்த கவிஞர்களுக்கு ஒவ்வொரு படம் கொடுப்பதாகச் சொன்னார். அதன்படி காமகோடியனுக்கு ஒரு படம் கொடுத்தார். மு.மேத்தாவுக்கு ‘வேலைக்காரன்’ படத்தை கொடுத்தார். […]

The post “இளையராஜாவை வி்ட்டுப் பிரிந்தது ஏன்..?” – கவிஞர் பிறைசூடனின் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
ஒரு காலத்தில் இளையராஜாவுடன் அவருடைய ரிக்கார்டிங் தியேட்டரிலேயே வசித்து வருகிறார் என்று சொல்லும் அளவுக்கு இளையராஜாவுடன் நெருக்கமாக இருந்த கவிஞர் பிறைசூடன், ஒரு கட்டத்தில் இளையராஜாவுடன் பிணக்கு ஏற்பட்டு அவரிடமிருந்து விலகினார்.

அதற்கான காரணம் என்ன என்பது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கவிஞர் பிறைசூடனே சொல்லியிருக்கிறார்.

“நான் அவருடன் இருந்த காலக்கட்டத்தில் இளையராஜா தன்னைச் சுற்றியிருந்த கவிஞர்களுக்கு ஒவ்வொரு படம் கொடுப்பதாகச் சொன்னார்.

அதன்படி காமகோடியனுக்கு ஒரு படம் கொடுத்தார். மு.மேத்தாவுக்கு ‘வேலைக்காரன்’ படத்தை கொடுத்தார். எனக்குப் ‘பெரிய வீட்டுப் பண்ணைக்காரன்’ படத்தைக் கொடுத்தார்.

அந்தப் படத்துக்கு பாடலுக்குரிய சிச்சுவேஷனைக் கேட்டுட்டு வந்துட்டேன். அந்த நேரத்தில் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சங்கிலி முருகன் என் வீட்டுக்கு வந்தார்.

“பொதுவா என்னுடைய படங்கள்ல கங்கை அமரன்தான் பாட்டெழுதுவார். அதனால் இதுலேயும் அவரே எழுதட்டும். அதனால், நீங்க இந்தப் படத்துக்குப் பாடல் எழுத வேண்டாம்…” என்றார் சங்கிலி முருகன்.

“எழுதிட்டனே..?” என்றேன். “இல்லை.. உங்களுக்குரிய சம்பளத்தை நான் கொடுத்திடறேன். நீங்க எழுத வேண்டாம்…” என்றார் சங்கிலி முருகன். “சரி.. ஓகே”ன்னு டியூன் இருந்த கேஸட்டை அவர்கிட்டயே கொடுத்திட்டேன்.

அப்புறம் இளையராஜாகிட்ட அதைச் சொன்னேன். “இப்ப உங்களுக்குக் கஷ்டம்ன்னா ஏதாவது பணம் வாங்கிக்குங்க…” என்றார். நான் அப்படி வாங்க விரும்பவில்லை.

அதோட ஆர்.சுந்தர்ராஜனின் ‘ராஜாதிராஜா’ படத்தில் ‘மீனம்மா’ பாட்டு செம ஹிட். அதே மாதிரி பி.வாசுவின் ‘உழைப்பாளி’ படத்தில் ‘சைலன்ஸ்’ பாடலும் ஹிட்டாயிருச்சு. ஒரு டைரக்டர்கிட்ட வேலை செஞ்சு ஒரு பாட்டு ஹிட்டாயிருச்சுன்னா அடுத்தப் பாட்டு கொடுக்கணுமா.. வேண்டாமா..?

அதோட ஒரு இயக்குநர் செலக்ட் செஞ்ச பல்லவியை இவர் ‘வேண்டாம்’ன்னு சொல்லிருவாரு. அது ஒரு கவிஞனா என்னை ரொம்பப் பாதிச்சது. ‘ஒண்ணு பிச்சை போடுங்க. இல்லாட்டி போயிடறேன்’னு சொன்னேன். ‘நான் தமிழ்நாட்டுல தலை நிமிர்ந்து நடக்கணும்ன்னு நினைக்கிறேன். இங்க தலை குனிஞ்சு நடந்து, வெளில போய் தலை நிமிர்ந்து நடக்கணும்ன்னா அது என்னால முடியாது.. அதுனால விலகிக்கிறேன்’னு சொல்லிட்டு நானே வந்துட்டேன்..” என்கிறார் கவிஞர் பிறைசூடன்.

The post “இளையராஜாவை வி்ட்டுப் பிரிந்தது ஏன்..?” – கவிஞர் பிறைசூடனின் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>