Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
அண்ணாத்த திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Thu, 25 Nov 2021 07:18:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png அண்ணாத்த திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘அண்ணாத்த’ திரைப்படம் ஓடிடியில் வெளியானது..! https://touringtalkies.co/annaathea-movie-released-on-ott/ Thu, 25 Nov 2021 07:01:42 +0000 https://touringtalkies.co/?p=19577 ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் கடந்த நவம்பர் 4-ம் தேதியன்று தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்தது. திரையரங்குகளில் வெகு விரைவாக 200 கோடி வசூலைத் தாண்டியதாக பல்வேறு செய்திகள் தெரிவித்தன. இப்போதும் பல திரையரங்குகளில் ‘அண்ணாத்த’ படம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் ‘அண்ணாத்த’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், […]

The post ‘அண்ணாத்த’ திரைப்படம் ஓடிடியில் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் கடந்த நவம்பர் 4-ம் தேதியன்று தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்தது.

திரையரங்குகளில் வெகு விரைவாக 200 கோடி வசூலைத் தாண்டியதாக பல்வேறு செய்திகள் தெரிவித்தன. இப்போதும் பல திரையரங்குகளில் ‘அண்ணாத்த’ படம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் ‘அண்ணாத்த’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காண்பிக்கப்படுகிறது.

இந்தச் செய்தி தமிழ்த் திரையுலகத்தினர் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில், பொதுவாக ஒரு படம் திரையரங்கில் வெளியானால் அது வெளியாகி 4 வாரங்கள் கழித்தே ஓடிடிக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் விதிமுறை.

இந்த விதிமுறையை ஒத்துக் கொண்டு கடிதம் கொடுத்தால் மட்டுமே அந்தப் படத்தினை திரையரங்குகளில் வெளியிடுவார்கள். அதேபோல் ‘அண்ணாத்த’ படத்திற்கும் இது மாதிரியான கடிதத்தைப் பெற்றுக் கொண்டுதான் திரையரங்குகளில் படத்தை வெளியிட்டிருப்பார்கள்.

ஆனால் அந்த விதிமுறைக்கு மாறாக வெறும் 21 நாளிலேயே ‘அண்ணாத்த’ படத்தை ஓடிடியில் வெளியிட்டிருப்பதை பார்த்து திரையுலகத்தினர் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் படம், ரஜினி படம் என்றால் ஒரு நியாயம்.. மற்றவர்களுக்கு ஒரு நியாயமா என்று திரையுலகத்திற்குள் இன்று காலையில் இருந்தே பலவித குமுறல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அதே சமயம் சன் பிக்சர்ஸ் நிறுவனமே ‘சன் நெக்ஸ்ட்’ என்ற ஓடிடி தளத்தை நடத்தி வருகிறது. ஆனால் அதில் ‘அண்ணாத்த’ படத்தை வெளியிடாமல் ‘நெட்பிளிக்ஸ்’ தளத்திற்கு ஏன் கொடுத்தார்கள் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.

இது பற்றி விசாரித்தபோது ‘அண்ணாத்த’ படத்திற்கு தற்போதுவரையிலும் கிடைத்த லாபமாக, போட்ட முதலீட்டில் இருந்து அதிகப்பட்சமாக சில கோடிகள்தான் வந்திருக்கிறதாம்.

‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் பங்கு மார்க்கெட்டில் இருக்கும் நிறுவனம் என்பதால் வருடா வருடம் அதிக லாபத்தைக் காட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இதனால்தான் தன்னுடைய சொந்த நிறுவனத்தைவிட்டுவிட்டு ‘நெட்பிளிக்ஸ்’ கொடுத்த 75 கோடியை வாங்கிக் கொண்டு அந்தப் பணத்தையும் ‘அண்ணாத்த’ படத்தின் லாபத் தொகையில் சேர்த்திருக்கிறது ‘சன் பிக்சர்ஸ்’ என்று வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கிறார்கள்.

The post ‘அண்ணாத்த’ திரைப்படம் ஓடிடியில் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
அண்ணாத்த – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/annaathea-movie-review/ Thu, 04 Nov 2021 10:50:45 +0000 https://touringtalkies.co/?p=19231 இயக்குநர் சிவாவின் படங்களில் அதீதமாக குடும்ப சென்டிமெண்ட்டுகள்தான் இருக்கும். அவருடைய ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் இதே நிலைமைதான். ‘விஸ்வாசம்’ படத்தில் இடம் பெற்ற அப்பா-மகள் சென்டிமெண்ட்டுதான் அந்தப் படத்தையே தூக்கி நிறுத்தியது. இயக்குநர் சிவா அதே பார்முலாவில் தனது பழைய படங்களின் கதையையும், திரைக்கதையும் கலந்து அதில் கிச்சடி செய்து உருவாக்கியிருக்கும் படம்தான் இந்த ‘அண்ணாத்த’. முன்னதில் ‘அப்பா-மகள்’ என்றால் இதில் ‘அண்ணன்-தங்கச்சி’. ‘முள்ளும் மலரும்’, ‘பாட்சா’வை போல அந்த சென்டிமெண்ட்டை ஸ்ட்ராங்காக பதிய […]

The post அண்ணாத்த – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் சிவாவின் படங்களில் அதீதமாக குடும்ப சென்டிமெண்ட்டுகள்தான் இருக்கும். அவருடைய ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் இதே நிலைமைதான். ‘விஸ்வாசம்’ படத்தில் இடம் பெற்ற அப்பா-மகள் சென்டிமெண்ட்டுதான் அந்தப் படத்தையே தூக்கி நிறுத்தியது.

இயக்குநர் சிவா அதே பார்முலாவில் தனது பழைய படங்களின் கதையையும், திரைக்கதையும் கலந்து அதில் கிச்சடி செய்து உருவாக்கியிருக்கும் படம்தான் இந்த ‘அண்ணாத்த’.

முன்னதில் ‘அப்பா-மகள்’ என்றால் இதில் ‘அண்ணன்-தங்கச்சி’. ‘முள்ளும் மலரும்’, ‘பாட்சா’வை போல அந்த சென்டிமெண்ட்டை ஸ்ட்ராங்காக பதிய வைப்பதற்காக மற்ற பகுதிகளில் கோட்டைவிட்டுவிட்டார் இயக்குநர் சிவா.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ‘சூரக்கோட்டை’ என்ற கிராமத்தில் வசிக்கும் காளையன்தான் நாயகன் ரஜினி. இவரே ஊராட்சித் தலைவர். அநியாயத்திற்கு நல்லவர். மக்களுக்கு நல்லது செய்ய வழக்கம்போல துடிப்பவர். கெடுதல் செய்பவர்களை தூக்கிப் போட்டு மிதிப்பவர்.

இந்த ‘மிதிக்கும்’ பணியில் அவ்வப்போது இவரிடம் சிக்கி அல்லல்படுபவர் இவரது எதிரியான பிரகாஷ்ராஜ். இவர்கள் இருவருக்குமான மோதலினால் விஷயம் கோர்ட்டுக்குப் போகிறது. ரஜினிக்கு வக்கீலாக அறிமுகமாகிறார் நயன்தாரா. அப்போது இருவருக்குள்ளும் பற்றிக் கொள்கிறது காதல் என்னும் நெருப்பு.

இன்னொரு பக்கம் காளையனுக்கு ஒரு தங்கச்சி. ‘தங்க மீனாட்சி’ என்ற அந்தத் தங்கத்தின் மீது நிரம்ப பாசம் வைத்திருக்கிறார் அண்ணன் ரஜினி. தங்கச்சிக்கு ஒரு கால்கட்டு போட்டுவிட நினைத்து அவருக்குத் தன்னுடைய எதிரியான பிரகாஷ்ராஜின் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார் ரஜினி.

திருமணத்திற்கு முதல் நாள் கீர்த்தி சுரேஷ் தனது காதலருடன் கொல்கத்தாவிற்கு எஸ்கேப்பாகுகிறார். அதிர்ச்சியாகிறார் ரஜினி. கொல்கத்தா சென்ற கீர்த்தி சுரேஷுக்கு அங்கேயும் ஒரு பெரிய சோதனை காத்திருக்கிறது.

கீர்த்தியின் புருஷனின் சொத்துக்களை அபகரித்து அவரை சிறையிலும் அடைக்கிறார் இன்னொரு வில்லன். இப்போது தங்கச்சியைப் பார்ப்பதற்காக கொல்கத்தா வரும் அண்ணன் ரஜினி, தங்கச்சியின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்றெண்ணியவர், தங்கச்சி மற்றும் தங்கச்சி புருஷன் வாழ்க்கையில் விளையாடியவர்களை அவர்களுக்கே தெரியாமல் தான் பந்தாடுகிறார்.

இந்தப் பந்தாட்டம் எங்கே போய் முடிகிறது என்பதுதான் இந்த ‘அண்ணாத்த’ படத்தின் சுருக்கமான திரைக்கதை.

ரஜினி ‘காலா’, ‘கபாலி’ படங்களைவிடவும் இந்தப் படத்தில் மிகவும் இளமைத் துடிப்புடன் நடித்திருக்கிறார். உற்சாகத்துடன் வலம் வருகிறார். ரஜினியின் ஸ்க்ரீன் ஸ்பேஸ் அவரது ரசிகர்களுக்கு மிக பெரிய உற்சாகத்தைத் தந்திருக்கிறது.

காமெடி காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் 1990-களின் ரஜினியைப் பார்க்க முடிகிறது. தங்கை தங்க மீனாட்சியை தங்கம்’, ‘தங்கம்’ என்று காட்சிக்கு காட்சி கொஞ்சுவதும், கெஞ்சுவதும் நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் ரஜினிக்கு கீர்த்தி சுரேஷ் தங்கச்சியா என்ற கேள்விக்கு பதில் இல்லாததால் அதை நம்மால் முழுமையாக ரசிக்கத்தான் முடியவில்லை.

நயன்தாராவின் அழகை இன்னும் அழகாகக் காட்டியிருக்கலாம். கலர் கரெக்சனிலும், அவருடைய உடையலங்காரத்திலும் அக்கறை காட்டியவர்கள்.. முகத்தில் கோட்டைவிட்டுவிட்டார்கள். வயதானது தெளிவாகத் தெரிகிறது.

நயன்தாராவைவிடவும் மாமோய்’, ‘மாமோய்’ என்று ரஜினியை கொஞ்சிக் கொண்டிருக்கும் குஷ்பூவும், ‘அத்தான்’ என வழியும் மீனாவும் அழகாக இருக்கிறார்கள் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

ரஜினியை ‘காள்ஸ்’ என்று நயன்ஸ் கொஞ்சுவதும், பதிலுக்கு அவரை பட்டு’, ‘பட்டு’ என்று ரஜினி கொஞ்சுவதும் கொஞ்சம் சிலிர்ப்பையும், சிரிப்பையும் வரவழைத்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் போர் அடித்துவிட்டது.  

துவக்கத்தில் ரஜினியும், நயன்தாராவும் இடம் பெறும் காட்சிகள் ஈர்ப்பாகவும், ரசிக்கும்படியும் இருந்தாலும்,. நயன்தாரா திடீரென்று காணாமல் போய் பின்னர் மீண்டு வருவதால் மொத்தமாக இந்தப் படத்திற்குள் அவர் எதுக்கு என்று கேள்விதான் எழுகிறது.

கீர்த்தி சுரேஷ் மிகவும் மெலிந்த உடலுடன் காய்ச்சல் வந்து மருத்துவமனையில் படுத்து எழுந்து வந்தவர்போல் இருப்பதால் சகிக்க முடியவில்லை.  இந்த வயசுக்கு கொஞ்சம் பூசுனாப்புல இருந்தாத்தான நல்லாயிருக்கும்..? ஆனால் இடைவேளைக்குப் பின்பு கீர்த்தியை அழு, அழுவென்று அழுக வைத்து படத்திற்கு சிம்பதி கிரியேட் செய்திருக்கிறார் இயக்குநர். இதற்காக இயக்குநருக்கு நமது வன்மையான கண்டனங்கள்.

சூரி, சதீஷ், சத்யன் என்று மூன்று நடிகர்களை வைத்து காமெடியை வரவழைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சிவா. இதில் சத்தியனின் காமெடி மட்டும் சில இடங்களில் ஒர்க் அவுட்டாகி சிரிப்பை ஏற்படுத்துகிறது. இவர்களுடன் சேர்ந்து ரஜினியும் ஏகப்பட்ட லூட்டிகளை அடிக்கிறார். சில காமெடிகள் நன்றாக இருந்தாலும் சில நகைச்சுவை காட்சிகள் மொக்கையாத்தான் இருக்கு.

பச்சக்கிளி’ என்று சூரியை ஒவ்வொரு முறையும் ரஜினி அழைக்கும்போது Definetly’, ‘Musically’, ’Absolutely’, ‘immediately’ என்று பல ‘லீ’ வகை ஆங்கில வார்த்தைகளை பேசியே கொல்கிறார் சூரி.

இவர்கள் எல்லாம் பத்தாது என்று அவ்வப்போது மாமோய்’, ‘மாமோய்’ என்று கூப்பிடும் குஷ்பூ, ‘அத்தான்’, ‘அத்தான்’ என்று கூப்பிடும் மீனாவும் இன்னொரு பக்கம் வேறு மாதிரியாக காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.

குஷ்பூவுக்கும், மீனாவுக்கும் இடையிடையே வந்து போகும் சில காட்சிகளே இருக்கின்றன. இருந்தாலும் இவர்கள் இந்த வயதிலும் கல்யாணத்திற்காகக் காத்திருப்பது போன்ற காட்சியெல்லாம் ரொம்ப டூ மச்சால்லா இருக்கு..?

டி.இமானின் இசையில் அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் மறைந்த எஸ்.பி.பி.யின் மந்திரக் குரலில் மயக்குகிறது. எல்லா பாடல்களுமே கதையோடு தொடர்புடைய பாடல்களாகவும். காட்சிகளாகவும் இருப்பதினால் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது.

வா சாமி’ பாடல் ரஜினி ரசிகர்களுக்கு மிக, மிக பிடித்திருக்கிறது. சார சார காத்தே’ பாடல படமாக்கப்பட்டவிதம் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் தீம் மியூஸிக்கில் கலவரப்படுத்தியிருக்கிறார் டி.இமான்.

ஒளிப்பதிவின் சிறப்பு மதுரை மற்றும் கொல்கத்தாவாகக் காட்டப்பட்ட காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் தெரிகிறது. கலை இயக்குநருக்கும் ஒரு மிகப் பெரிய பாராட்டு. இருப்பிடங்களை வடிவமைப்பது என்பது சாமான்யப்பட்ட வேலையல்ல. அதை அழகாகச் செய்திருக்கிறார் கலை இயக்குநர்.

படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகளுக்கேற்ற உடைகளை வடிவமைப்பு செய்தவர்களையம் பாராட்டியே ஆக வேண்டும். பாடல் காட்சிகளில் கலர், கலராக இருப்பதைவிடவும், கவரக் கூடிய வகையில் ஆடை வடிவமைப்பை செய்திருக்கிறார்கள்.

சண்டை காட்சிகளில் 70 வயதுடைய ஹீரோ நடிப்பதை மனதில் வைத்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் திலீப் சுப்புராயன். சிவாவின் படங்களில் சண்டை காட்சிகளை அதிக ஸ்டைலிஷாகவும் இருக்கும். இதிலும் அப்படியே.. ரஜினியின் ஸ்டைல் மேனரிசத்தை விட்டுவிடாமல் சேர்த்து எடுத்திருக்கிறார்கள்.

படத் தொகுப்பாளரின் கத்திரி எங்கே என்ன செய்வது என்பது தெரியாமல் சென்டிமெண்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்திருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இருந்தும் படத்தில் பழைய வாசனை அடிப்பதை தடுக்க முடியவில்லை.

அண்ணன்-தங்கை பாசப் போராட்டத்தைக் கதைக் களமாக்கிய இயக்குநர் திரைக்கதையில் புதுமை செய்யாமல் அடுத்தக் காட்சி என்னவென்பதை நாமே ஊகித்துவிடும் அளவுக்கு திரைக்கதை எழுதியிருப்பதுதான் சோகமான விஷயம்.

படம் முதல் ஒரு மணி நேரத்தில் எதை நோக்கிச் செல்கிறது என்பதே தெரியாத அளவுக்கு இருக்கிறது. பிரகாஷ்ராஜூடனான சண்டைகள், குஷ்பூ, மீனாவின் கல்யாண கலாட்டா, தங்கச்சி மீதான பாசக் காட்சிகள், நயன்தாராவுடனான திடீர் காதல் என்று கதை பிட்டு பிட்டாக ஓடியதால் கதையுடன் ஒன்ற முடியவில்லை.

படத்தின் வில்லன்களின் லிஸ்ட்டும் கூடிக் கொண்டே செல்வதும் அலுப்பைக் கூட்டியிருக்கிறது. பிரகாஷ்ராஜ் ஒரு வில்லன். கீர்த்தி சுரேஷின் கணவரிடமிருந்து சொத்தைப் பறிக்கும் வில்லனாக அபிமன்யூ சிங், இதற்குப் பிறகு ஒரு வில்லனாக ஜெகபதிபாபு. அபிமன்யூ சிங்கிற்கும், ஜெகபதிபாபுவுக்கும் இடையிலான மோதல் என்று கதை திரித்து, திரித்துப் போய்க் கொண்டேயிருக்கிறது.

கிளைமாக்ஸில் வில்லனின் ஆட்களை காளையன் அடித்து நொறுக்கிப் போட்டுவிட, அவர்களிடத்தில் “யாருடா உங்களையெல்லாம் அடிச்சது, தயவு செஞ்சு சொல்லுங்கடா” என்று கீர்த்தி சுரேஷ் வரிசையாகக் கேள்வி கேட்கும் காட்சி இருக்கே.. ரொம்பவே ஓவர் மிஸ்டர் இயக்குநர்..!

ரஜினி தன் குடும்பத்துடன் விஜயகாந்த் மற்றும் வடிவேலு சேர்ந்து நடித்த காமெடி காட்சியை பார்ப்பதாக ஒரு காட்சி. அதற்குப் பிறகு வரும் காட்சிகள் தேவையில்லாத ஆணிகளாகவே தெரிகிறது. ரஜினி பேசும் பல பஞ்ச் வசனங்கள் சுத்தமாக எடுபடவில்லை. ஓவர் டோஸாக அமைந்திருக்கின்றன.

அண்ணன்-தங்கச்சி பாசம் காட்சியமைப்பில்தான் இருக்கிறதே தவிர, ரஜினி-கீர்த்தி சுரேஷ் காம்பினேஷனில் எடுபடவே இல்லை. ரஜினி, கீர்த்தி சுரேஷூக்கு அண்ணன் என்ற விஷயம் ரசிகர்கள் மனதில் ஒட்டவேயில்லை என்பதுதான் உண்மை.

இடைவேளைக்குப் பின்பு கீர்த்தி சுரேஷுக்கே தெரியாமல் கொல்கத்தாவில் தங்கியிருந்து தங்கையின் வாழ்க்கையை பாதுகாக்க ரஜினி செய்யும் செயல்களும், சண்டைகளெல்லாம் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளாக, துண்டு துண்டாகத்தான் தெரிகின்றன.  

கதையிலும், திரைக்கதையிலும் கேரக்டர் ஸ்கெட்ச்சிலும் இன்னும் கூடுதலாக சில மாற்றங்களை கொண்டு வந்திருந்தால் இந்த ‘அண்ணாத்த’ மக்களை அண்ணாந்து பார்க்க வைத்திருப்பார்.

RATINGS : 3.5 / 5

The post அண்ணாத்த – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“மீண்டும் அப்பாவுடன் படம் செய்ய வேண்டும்..” – இயக்குநர் சிவாவிடம் செளந்தர்யா ரஜினி வேண்டுகோள் https://touringtalkies.co/i-want-to-do-a-film-with-my-father-again-soundarya-rajinis-request-to-director-siva/ Sun, 31 Oct 2021 08:20:59 +0000 https://touringtalkies.co/?p=19148 “இயக்குநர் சிறுத்தை சிவாவும், ரஜினியும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று ரஜினியின் மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சிவா ஏற்கெனவே இயக்கியிருந்த ‘வீரம்’, ‘விஸ்வாசம்’ போன்ற […]

The post “மீண்டும் அப்பாவுடன் படம் செய்ய வேண்டும்..” – இயக்குநர் சிவாவிடம் செளந்தர்யா ரஜினி வேண்டுகோள் appeared first on Touring Talkies.

]]>
“இயக்குநர் சிறுத்தை சிவாவும், ரஜினியும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று ரஜினியின் மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’.

இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

சிவா ஏற்கெனவே இயக்கியிருந்த வீரம்’, ‘விஸ்வாசம்’ போன்ற படக் கதைகளைப் போலவே இந்தப் படமும் கூட்டு குடும்பப் பின்னணியில்தான் உருவாகியுள்ளது. அண்ணன் – தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக் குழு.

முன்னதாக அண்ணத்த’ படத்தில் இடம் பெற்றுள்ள, ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘சாரல் காற்றே’, ’மருதாணி’, ‘வா சாமி’ ஆகிய பாடல்களும், படத்தின் டீசரும், ட்ரைலரும் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு, வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. கடந்த வாரம் இந்தப் படத்தை ரஜினி தன் குடும்பத்தினருடன் சன் ஸ்டூடியோ தியேட்டரில் பார்த்தார்.

அண்ணாத்த’ படம் பார்த்த செளந்தர்யா ரஜினிகாந்த், இயக்குநர் சிவாவை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், ”அண்ணாத்த’ படத்தில் நீங்கள் செய்துள்ளது மேஜிக். படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீரோடு உங்க கையை பிடிச்சு நன்றி சொன்னேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தலைவருடைய வெறித்தனமான ரசிகை என்ற முறையிலும், அவரது மகள் என்ற முறையிலும் கூறுகிறேன். நீங்கள் அப்பாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

The post “மீண்டும் அப்பாவுடன் படம் செய்ய வேண்டும்..” – இயக்குநர் சிவாவிடம் செளந்தர்யா ரஜினி வேண்டுகோள் appeared first on Touring Talkies.

]]>
‘அண்ணாத்த’ படத்தை வெளியிட 37 இண்டர்நெட் சேவை நிறுவனங்களுக்குத் தடை https://touringtalkies.co/37-internet-service-providers-banned-from-releasing-annatha-movie/ Sat, 30 Oct 2021 08:38:08 +0000 https://touringtalkies.co/?p=19137 ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தை இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிடப்படுகிறது. இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி […]

The post ‘அண்ணாத்த’ படத்தை வெளியிட 37 இண்டர்நெட் சேவை நிறுவனங்களுக்குத் தடை appeared first on Touring Talkies.

]]>
ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த’ திரைப்படத்தை இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்ட விரோதமா இணைய தளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிடப்படுகிறது.

இயக்குர் ‘சிறுத்தை’ சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சட்ட விரோதமாக இணையத் தளங்களில் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், “காப்புரிமை சட்டத்தின்படி அண்ணாத்த’ திரைப்படத்தின் வெளியிடும் உரிமை, விநியோக உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமே உள்ளது. இந்தப் படத்தை வேறு எந்த நிறுவனமும் வெளியிட உரிமை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் இப்போதை காலக்கட்டங்களில் சட்ட விரோதமாக பல இணையத் தளங்களில் பல புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

BSNL, புதுடெல்லி மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட், பாரதி ஏர்டெல், ஏர்செல் செல்லுலார் லிமிடெட், மும்பையைச் சேர்ந்த ஹாத்வே கேபிள் டேட்டா காம், புதுடெல்லி எக்சைடெல் பிராட்பேண்ட், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் இன்பிராஸ்டக்சர், டாடா டெலிசர்வீஸ், சென்னையைச் சேர்ந்த சிபி டெக்னாலஜிஸ், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஏசியாநெட் சாட்டிலைட் கம்யூனிகேஷன், டாட்டா இன்போசிஸ் கோவையைச் சேர்ந்த ரெடி லிங்க் இண்டர்நெட் சர்வீஸ், கோவையைச் சேர்ந்த நெக்ஸ்ட் ஜென் கம்யூனிகேஷன், தெலுங்கானாவை சேர்ந்த விர்கோ குளோபல் மீடியா, ஈரோட்டை சேர்ந்த மை நெட் சர்வீஸஸ், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த லிம்ராஸ் ஏரோநெட் பிராட்பேண்ட் சர்வீஸஸ், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஆர்.எஸ்.பிராட்பேண்ட் சர்வீஸஸ், மயிலாப்பூரை சேர்ந்த பல்சே டெலிசிஸ்டம் உள்ளிட்ட 37 இண்டர்நெட் சேவை நிறுவனங்கள் திரைப்படப் பாடல்கள், காட்சிகள் போன்றவற்றை மறு தயாரிப்பு செய்து சிடி, டிவிடி, விசிடி புளு ரே டிஸ்க், கம்ப்யூட்டர் டிரைவ், பென் டிரைவ் ஆகியவற்றில் பதிவு செய்து வெளியிட்டு வருகின்றன.

மிகக் குறைந்த விலையில் இவற்றை பொதுமக்களுக்கு விற்பனையும் செய்கின்றன. சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களின் அனுமதி பெறாமல் தியேட்டர்களில் ரெக்கார்டிங் செய்தும் வருகின்றன.

இந்த நிறுவனங்களுக்கு சன் நெட்வொர்க் ‘அண்ணாத்த’ திரைப்படம் தொடர்பான எந்த உரிமையையோ, அனுமதியையோ தரவில்லை.

டேட் டவுன் என்ற முறையில் பல இணையத் தளங்களும் சட்ட விரோதமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து வெளியிட்டு வருகின்றன. பல வலைத்தளங்கள் சட்ட விரோதமாக செயல்பட்டதால் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த இணையத்தளங்களும், வலைத்தளங்களும் வேறு பெயரில் உலா வருகின்றன.

‘தோப் டிவி’ என்ற ஒரு இணையத்தளம் கூகுள் குரோமை பயன்படுத்தி விதிகளுக்கு முரணாக இணையத் தள செயலிகளை வெளியிட்டு வருகிறது.

எங்களது நிறுவனம் எந்த இணையத்தள நிறுவனத்திற்கும், ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் உரிமையைக் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை சட்ட விரோதமாக வெளியிட்டால் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும்.

எனவே, ‘அண்ணாத்த’ திரைப்படத்தை அனைத்து இணையத்தளங்கள், டெலிகிராம், தோப் டிவி, சபாரி, குரோம், டிஜான் மொபைல் பிரவுசர் போன்றவற்றில் சட்ட விரோதமாகப் பதிவிறக்கம் செய்யவோ, பதிவேற்றம் செய்யவோ, வெளியிடவோ கூடாது என்று என்று தடைவிதித்த உத்தரவிட வேண்டும்..” என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் சினேகா ஆஜராகி “அண்ணாத்த படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்…” என்று வாதிட்டார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘அண்ணாத்த’ படத்தினை இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்ட விரோதமான இணையத் தளங்களில் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

The post ‘அண்ணாத்த’ படத்தை வெளியிட 37 இண்டர்நெட் சேவை நிறுவனங்களுக்குத் தடை appeared first on Touring Talkies.

]]>
அண்ணாத்த படத்தில் எஸ்.பி.பி. பாடிய பாடல் https://touringtalkies.co/singer-spb-sing-a-song-in-annathea-movie/ Mon, 04 Oct 2021 12:32:44 +0000 https://touringtalkies.co/?p=18495 Presenting the official lyrical video of the song “Annaatthe Annaatthe” – the first single from the movie “#Annaatthe“, Sung by #SPBalasubrahmanyam, starring Super Star #Rajnikanth, Nayanthara, Keerthy Suresh in lead roles. The movie produced by Sun Pictures, Directed by Siva, and Music composed by D.Imman. SONG CREDITS: Song: ANNAATTHE ANNAATTHE… Music: D.Imman Singer: S.P. Balasubrahmanyam […]

The post அண்ணாத்த படத்தில் எஸ்.பி.பி. பாடிய பாடல் appeared first on Touring Talkies.

]]>
Presenting the official lyrical video of the song “Annaatthe Annaatthe” – the first single from the movie “#Annaatthe“, Sung by #SPBalasubrahmanyam, starring Super Star #Rajnikanth, Nayanthara, Keerthy Suresh in lead roles. The movie produced by Sun Pictures, Directed by Siva, and Music composed by D.Imman. SONG CREDITS: Song: ANNAATTHE ANNAATTHE… Music: D.Imman Singer: S.P. Balasubrahmanyam Lyricist: Viveka MOVIE CREDITS: Cast: Rajinikanth, Kushbu, Meena, Nayanthara, Keerthi Suresh, Soori, Prakash Raj, Jagapathi Babu, Abimanyu Singh Director: Siva Production House: Sun Pictures Director Of Photography: Vetri Palanisamy Music: D.Imman Editor: Ruben Art: Milan Stunts: Dhilip Subbarayan Choreography: Brinda, Prem Rakshith Lyrics: Thamarai, Viveka, Yugabharathi, Arun Bharathi, Arivu, Mani Amuthavan Production Controllers: D. Ramesh Kuchirayar, Suresh Maniyan Rs Co-Writer: Adi Narayana Co-Director: R. Rajasekar Sound Design: Udhayakumar VFX: Harihara Suthan ADR: Vignesh Guru SFX: Sethu Colorist: K.S Rajasekaran Stills: Sittrarasu Publicity Design: Kabilan Production Executives: Thandavakrishnan, R. Anbazhagan PRO: Riaz K Ahmed Makeup: Kuppusamy Costumes: Rajan Dialogues: Siva, Chandran, Savari Muthu, Anthony Bhagyaraj Costume Design: Anu Vardhan, Dhatsha Pillai, Shravya Varma, Anu Parthasarathy, Sangeetha MUSIC CREDITS: Music production: Ranjan,D.Imman Acoustic and Bass guitars: Keba Jeremiah Indian Percussions Conducted by: Kaviraj Performed by: Babu,Pradeep,Raja,Balu,Manoj,Saravanan,David,Chiranjeevi,Azhagiri Chennai Strings Orchestra conducted by: Yensone Bagyanathan Violins: Rex Isaac,Ramachandran,Sasi,Murali,B.G.Venkatesh,George,Mohan,Dhayalan,David Ling,Samson,Prabhu,Ruben,Baskar,Vijayabaskar,Jayakumar,Selva,Shiva,Sekar,Seenu,Narayana Rao,Manoj. Violas: Sebastian,Balu,Hemanth,Girijan,Selva,Gopi,Chandran,Anita,Joseph,Cyril,Dinakar,Vinaykumar Cellos: Sekar,Somnath,Francis,Seenu Basses: Bidhyut, Suresh Trumpet: Maxwell. Harmony: Santosh Hariharan, Deepak, Shenbagaraj, Aravind Srinivas, Narayanan, Vignesh Narayanan, Veena Murali, Sowmya, Mahadevan, Deepthi Suresh, Abinaya Shenbagaraj, Ala B Bala, Soundarya, Nandakumar Kids: Sahana,Aditya Suresh Elfe Choir: Roe Vincent, Angelin Nisha, Sheryl Suraj, Deepa Shankar, Nisha Sharon, Krithika Konda, Sneha Sathya, Padmaja Sreenivasan, Snigdha Chandra, Anuj Mathew, Rohit Sridhar, Reshwin Nishith, Aneesh Solomon Elfe Choir conducted by Maria Roe Vincent Song composed, arranged, recorded, and mixed by D.Imman Song digitally recorded at: D.Imman’s Sound Factory(Audio suite A and B), Chennai,D. Imman Studio Manager: Peter Strings recorded at Voice and Vision Studio, Recordist: Lijesh Kumar Studio Manager: Ashok Kumar System Consultant: Audio Visuals Inc., Tamilselvan Mastered by D.Imman Project Co-ordinator: David.

The post அண்ணாத்த படத்தில் எஸ்.பி.பி. பாடிய பாடல் appeared first on Touring Talkies.

]]>
‘அண்ணாத்த’ இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காக ரஜினி கொல்கத்தா செல்கிறார் https://touringtalkies.co/rajini-going-to-kolkata-for-the-final-shoot-of-annatha/ Tue, 13 Jul 2021 07:26:58 +0000 https://touringtalkies.co/?p=16138 ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. எடுத்தவரைக்குமான காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடிக்கப்பட்டுவிட்டாலும் படத்தில் இன்னமும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளனவாம். அவற்றை கொல்கத்தாவில் செட் போட்டு படமாக்குகிறார்கள். எப்படியும் வரும் தீபாவளி தினமான நவம்பர் 4-ம் தேதியன்று படத்தைத் திரைக்குக் கொண்டு வருவதில் தயாரிப்பு தரப்பினர் உறுதியாக இருப்பதால்தான் கொல்கத்தா ஷூட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டதாம். இதனால்தான் ரஜினியும் கொஞ்சம் சீக்கிரமாகவே அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். இந்தப் படப்பிடிப்புக்காக ரஜினி நாளை கொல்கத்தா […]

The post ‘அண்ணாத்த’ இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காக ரஜினி கொல்கத்தா செல்கிறார் appeared first on Touring Talkies.

]]>
ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

எடுத்தவரைக்குமான காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடிக்கப்பட்டுவிட்டாலும் படத்தில் இன்னமும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளனவாம். அவற்றை கொல்கத்தாவில் செட் போட்டு படமாக்குகிறார்கள்.

எப்படியும் வரும் தீபாவளி தினமான நவம்பர் 4-ம் தேதியன்று படத்தைத் திரைக்குக் கொண்டு வருவதில் தயாரிப்பு தரப்பினர் உறுதியாக இருப்பதால்தான் கொல்கத்தா ஷூட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டதாம். இதனால்தான் ரஜினியும் கொஞ்சம் சீக்கிரமாகவே அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.

இந்தப் படப்பிடிப்புக்காக ரஜினி நாளை கொல்கத்தா செல்லவிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மொத்தமாக 20 நாட்கள் நடைபெறும் ஷூட்டிங்கில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்படுகின்றன. ரஜினி 4 அல்லது 5 நாட்கள் அங்கேயிருப்பார் என்று தெரிய வந்துள்ளது.

The post ‘அண்ணாத்த’ இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காக ரஜினி கொல்கத்தா செல்கிறார் appeared first on Touring Talkies.

]]>
ரஜினி அமெரிக்கா செல்வது எப்போது..? https://touringtalkies.co/when-will-rajini-go-to-america/ Fri, 07 May 2021 10:02:38 +0000 https://touringtalkies.co/?p=14946 தற்போது தமிழ் திரையுலகத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரும் மாஸ் திரைப்படம் ‘அண்ணாத்த’ என்பதால் அனைவரின் கவனமும் அந்தப் படத்தின் மீது பாய்ந்துள்ளது. ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் திட்டமிட்டபடி வரும் 10-ம் தேதி முடிவடைய வேண்டும். ஆனால் அதன் பின்னாலும் ஷூட்டிங் நடக்கும்போல தெரிகிறது. ஏனெனில், ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சற்று மெதுவாகே நடந்து வருகிறதாம். கொரோனா பாதிப்பினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தினமும் ஷூட்டிங் துவங்கும்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து.. ஒவ்வொருவரின் உடல் தட்பவெப்ப நிலையை செக் செய்து.. […]

The post ரஜினி அமெரிக்கா செல்வது எப்போது..? appeared first on Touring Talkies.

]]>
தற்போது தமிழ் திரையுலகத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரும் மாஸ் திரைப்படம் ‘அண்ணாத்த’ என்பதால் அனைவரின் கவனமும் அந்தப் படத்தின் மீது பாய்ந்துள்ளது.

‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் திட்டமிட்டபடி வரும் 10-ம் தேதி முடிவடைய வேண்டும். ஆனால் அதன் பின்னாலும் ஷூட்டிங் நடக்கும்போல தெரிகிறது. ஏனெனில், ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சற்று மெதுவாகே நடந்து வருகிறதாம்.

கொரோனா பாதிப்பினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தினமும் ஷூட்டிங் துவங்கும்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து.. ஒவ்வொருவரின் உடல் தட்பவெப்ப நிலையை செக் செய்து.. பதிவு செய்து.. சானிடைசரைப் பயன்படுத்தி அனைத்து இடங்களையும் சுத்தம் செய்துவிட்டு படப்பிடிப்பைத் துவக்கவே காலையில் கால தாமதம் ஆகிறதாம். அதோடு இரவிலும் இதே வேலையை திரும்பவும் செய்வதால் லேட்டாக ஆரம்பித்து சீக்கிரமாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக் குழுவினர்.

ஆனால், எப்படியிருந்தாலும் மீண்டும் ஒரு முழு லாக் டவுன் வந்தாலும் வரலாம் என்ற எண்ணத்தில் எப்படியாவது ஒரே மூச்சில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வருமாறு தயாரிப்பு நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாம்.

இந்தப் பிரச்சினைக்கிடையில் ரஜினி மீண்டும் அமெரிக்கா போக வேண்டியிருக்கிறது என்கிறார்கள். அவரது உடல் நிலையை பரிசோதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால்.. கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து 5 ஆண்டுகள் நிறைவடையப் போவதால் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு செல்லவிருக்கிறாராம் ரஜினி.

இதை முன்பேயே திட்டமிட்டு தற்போது அமெரிக்கா சென்றுள்ள தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ரஜினியை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள்.

‘அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணியை இந்த மாதக் கடைசிக்குள் முடித்துவிட்டு ரஜினி அமெரிக்கா கிளம்புவார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.

The post ரஜினி அமெரிக்கா செல்வது எப்போது..? appeared first on Touring Talkies.

]]>
‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் – பகிர்கிறார் கவிஞர் பிறைசூடன் https://touringtalkies.co/kavingar-piraisoodan-describes-working-experience-of-annathea-movie-shooting-with-rajini/ Thu, 31 Dec 2020 09:39:20 +0000 https://touringtalkies.co/?p=11620 கவிஞர் பிறைசூடன் தமிழ்த் திரையுலகத்தில் கவிஞர், பாடலாசிரியர், உரையாடல் ஆசிரியர் என்று பல்வேறு பணிகளிலும் திறமை பெற்றவர். இப்போது நடிகராகவும் உருமாறியிருக்கிறார். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தற்போது நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கவிஞர் பிறைசூடனும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார் கவிஞர் பிறைசூடன். அவர் ‘அண்ணாத்த’ படம் பற்றிச் சொல்லும்போது, “நான் சென்ற வருடத்தின் இறுதியில் ஒரு நாள் கல்கத்தாவில் என் மகள் வீட்டில் இருக்கும்போது […]

The post ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் – பகிர்கிறார் கவிஞர் பிறைசூடன் appeared first on Touring Talkies.

]]>
கவிஞர் பிறைசூடன் தமிழ்த் திரையுலகத்தில் கவிஞர், பாடலாசிரியர், உரையாடல் ஆசிரியர் என்று பல்வேறு பணிகளிலும் திறமை பெற்றவர். இப்போது நடிகராகவும் உருமாறியிருக்கிறார்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தற்போது நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கவிஞர் பிறைசூடனும் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார் கவிஞர் பிறைசூடன்.

அவர் ‘அண்ணாத்த’ படம் பற்றிச் சொல்லும்போது, “நான் சென்ற வருடத்தின் இறுதியில் ஒரு நாள் கல்கத்தாவில் என் மகள் வீட்டில் இருக்கும்போது எனக்கு போனில் ஒரு அழைப்பு வந்தது. “அண்ணாத்த படத்தில் உங்களுக்கு ஒரு வேலை இருக்கு. வர முடியுமா…?” என்றார்கள்.

நான் அவசரமாக என் மனைவியுடன் சென்னைக்கு வந்து அவரை சென்னையில்விட்டுவிட்டு நான் மட்டும் ஹைதராபாத்துக்கு பேனா, பேப்பர்களோடு பயணித்தேன். எப்படியும் பாட்டெழுதத்தான் அழைத்திருக்கிறார்கள் என்று நினைத்துதான் போனேன்.

ஆனால் ஹைதராபாத்தில் அந்த செட்டுக்குப் போன பின்புதான் என்னை நடிக்க அழைத்திருக்கிறார்கள் என்பதே தெரியும். கொடுத்த உடையை போட்டுக் கொண்டு செட்டில் அமர்ந்திருந்தேன்.

அப்போது ரஜினி ஸார் அழைப்பதாகச் சொல்லி என்னை அழைத்துச் சென்றார்கள். ரஜினி எழுந்து நின்று என்னை வரவேற்றார். பக்கத்தில் உட்காரச் சொல்லி உபசரித்தார். அதுக்கப்புறம் வரிசையா மரியாதைகளும், உசரிப்புகளும், ‘காபி, வேணுமா.. டீ வேணுமா.. ஜூஸ் வேணுமா.. சூப் வேணுமா’ன்னு வரிசையா விசாரணைகளும் நடந்தன.

ஷூட்டிங்ல ஒரு மழை சீன். அதுல ரஜினி ஸார் நடிச்சார். மார்கழி மாசம் வேற. பக்கத்துலேயே அவருக்காக ஹீட்டர்லாம் வைச்சிருந்தாங்க. இருந்தாலும் அவர் ஷாட் முடிஞ்சப்புறம் போகாமல். பக்கத்துலேயே நின்னு மத்தவங்க என்ன நடிக்கிறாங்கன்னு அப்படியே ஈரத்தோடு நின்னு பார்த்துக்கிட்டேயிருந்தாரு.

நானாச்சும் இடைல, இடைல கேரவன் வேனுக்குப் போயிட்டு வந்தேன். ஆனால், அவரு சேர்லயே உக்காந்திருந்தாரு.. உள்ள வரும்போதுகூட எல்லார் பக்கமும் திரும்பி வணக்கம்ன்னு சொல்லிட்டுத்தான் உக்காருவார். அவர் இப்போ இருக்குற ஸ்டேஜ்ல இதெல்லாம் செய்யணும்ன்னு அவசியமே இல்லை. ஆனால் செய்றாரு பாருங்க. அதுதான் இப்போவரைக்கும் அவரை சூப்பர் ஸ்டாரகவே வைச்சிருக்கு..” என்று பாராட்டுகிறார் கவிஞர் பிறைசூடன்.

The post ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் – பகிர்கிறார் கவிஞர் பிறைசூடன் appeared first on Touring Talkies.

]]>
‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்குமா..? https://touringtalkies.co/annaatthea-movie-shooting-news/ Sun, 04 Oct 2020 15:05:15 +0000 https://touringtalkies.co/?p=8352 ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அரங்கங்கள் அமைக்கின்ற வேலைகள் கடந்த 10 தினங்களாக சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் ரஜினிகாந்த் அந்தப் படத்தினுடைய படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது.  ஆனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழ்நிலைக்கு ‘அண்ணாத்த’ படக் குழு இப்போது தள்ளப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 200 பேர்கள் அதில் கலந்து கொள்ள வேண்டுமாம். ஆனால், இப்போது […]

The post ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்குமா..? appeared first on Touring Talkies.

]]>

‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அரங்கங்கள் அமைக்கின்ற வேலைகள் கடந்த 10 தினங்களாக சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த மாத இறுதியில் ரஜினிகாந்த் அந்தப் படத்தினுடைய படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது.  ஆனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழ்நிலைக்கு ‘அண்ணாத்த’ படக் குழு இப்போது தள்ளப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.

‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 200 பேர்கள் அதில் கலந்து கொள்ள வேண்டுமாம். ஆனால், இப்போது அரசு விதித்துள்ள விதிகளின்படி அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே படப்பிடிப்பிலேயே பங்கு பெற முடியும்.

இந்தக் காரணத்தினால்தான் ‘அண்ணாத்த’  திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போகிறது. குறைந்தபட்சம் 200 பேர்களுடன் படப்பிடிப்பை நடத்த அரசு அனுமதி தந்ததற்கு பின்புதான் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குமாம்.

The post ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்குமா..? appeared first on Touring Talkies.

]]>