Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
music album – Touring Talkies https://touringtalkies.co Mon, 12 Dec 2022 19:02:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png music album – Touring Talkies https://touringtalkies.co 32 32 அஜய் கிருஷ்ணா-ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் ‘ரகட் பாய் காதல்’ இசை ஆல்பம் https://touringtalkies.co/rugget-boy-kaathal-music-album-news/ Mon, 12 Dec 2022 19:01:37 +0000 https://touringtalkies.co/?p=28483 ‘ரகட் பாய் காதல்’ என்கிற பெயரில் ஒரு கிராமத்து மியூசிக் ஆல்பம் உருவாகியுள்ளது. இந்த ஆல்பத்தை ஸ்டார் மியூசிக் நிறுவனம் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது. ஒரு திரைப்படக் கதைக்கான முன்னோட்டமாக இந்த இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. மூவி மெக்கானிக் நிறுவனம் இந்த ஆல்பத்தைத் தயாரித்துள்ளது. இதில் கதாநாயகனாக நடித்துத் தயாரித்துள்ளவர் அஜய் கிருஷ்ணா. இவர் ‘நாடோடிகள்’, ‘நிமிர்ந்து நில்’, ‘போராளி’, ‘தரணி’, ‘அனுக்கிரகன்’, ‘கடப்புறா கலைக் குழு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘கட்டம் போட்ட சட்டை’ என்கிற படத்தையும் […]

The post அஜய் கிருஷ்ணா-ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் ‘ரகட் பாய் காதல்’ இசை ஆல்பம் appeared first on Touring Talkies.

]]>
‘ரகட் பாய் காதல்’ என்கிற பெயரில் ஒரு கிராமத்து மியூசிக் ஆல்பம் உருவாகியுள்ளது. இந்த ஆல்பத்தை ஸ்டார் மியூசிக் நிறுவனம் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது.

ஒரு திரைப்படக் கதைக்கான முன்னோட்டமாக இந்த இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. மூவி மெக்கானிக் நிறுவனம் இந்த ஆல்பத்தைத் தயாரித்துள்ளது.

இதில் கதாநாயகனாக நடித்துத் தயாரித்துள்ளவர் அஜய் கிருஷ்ணா. இவர் நாடோடிகள்’, ‘நிமிர்ந்து நில்’, ‘போராளி’, ‘தரணி’, ‘அனுக்கிரகன்’, ‘கடப்புறா கலைக் குழு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘கட்டம் போட்ட சட்டை’ என்கிற படத்தையும் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் ஸ்மிருதி வெங்கட். இவர் ‘மூக்குத்தி அம்மன்’, ‘வானம்’, ‘தீர்ப்புகள் விற்கப்படும்’, ‘மாறன்’, ‘மன்மத லீலை’, ‘தேஜாவு’ போன்ற படங்களில் நடித்திருப்பவர்.

இசை அமைத்திருப்பவர் டி.எம்.உதயகுமார். இவர் ‘பிரண்ட்ஷிப்’, ‘மை டியர் லிசா’ ஆகிய படங்களில் பணிபுரிந்தவர். அது மட்டுமல்ல குழலி’, ‘கார்முகில்’ போன்ற மியூசிக் ஆல்பங்களுக்கு இசையமைத்தவர்.

இந்த ஆல்பத்தில் பின்னணிப் பாடல் பாடி இருக்கும் பாடகி பிரியங்கா, ‘அவன் இவன்’, ‘உறியடி-2’, ‘பலூன்’, ‘நாச்சியார்’ போன்ற படங்களில் பாடியுள்ளார்.

இதில் பின்னணிப் பாடி இருக்கும் பாடகரான ஜித்தின் ராஜ் ‘பொன்னியின் செல்வன்’ மலையாள வடிவத்தில் பாடி இருப்பவர்.

ஆல்பத்தின் பாடலை எழுதியவர் ராஜா குருசாமி. இவர் ஏராளமான கிராமியப் பாடல்களை எழுதியுள்ளவர். ‘விழா’, ‘பிரண்ட்ஷிப்’, ‘ராஜ வம்சம்’, ‘பபூன்’ போன்ற படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளவர்.

இந்த ஆல்பத்திற்கு ஒளிப் பதிவு செய்துள்ளவர் அருண்குமார்.ஆர். இவர் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்கிற படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர். ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் ‘பருத்தி வீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ போன்ற படங்களில் பணியாற்றியவர்.

இந்த ஆல்பம் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளவர் மணி டான்ஸ் ஸ்டுடியோ உரிமையாளரான எம்.மணிகண்டன். இவர் இதில் ஒரு நடன இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கலை இயக்கம் – கென்னடி, படத் தொகுப்பு – கணேஷ் குமார், டைட்டில் டிசைன்ஸ் – பிரபு மாணிக்கம், நிர்வாகத் தயாரிப்பு – சித்தார்த்தன் பாரதி, பத்திரிகை தொடர்பு – சக்தி சரவணன்.

இந்த இசை ஆல்பத்தை இயக்கியுள்ளவர் ஸ்ரீவித்தகன். இவர் இயக்குநர் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ‘நாடோடிகள்’, ‘நிமிர்ந்து நில்’, ‘போராளி’, ‘வினோதய சித்தம்’ போன்ற படங்களில் பணிபுரிந்தவர்.

பொதுவாக ஆல்பம் என்றாலே நகரப் பின்னணியில் உருவாவதுண்டு. இது ஒரு கிராமத்துக் காதல் கதை. கிராமியப் பின்னணியில் அழகுற காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு பதின் பருவக் காதலால் புலி ஒன்று எப்படி பூனையாக மாறுகிறது என்பதுதான் இந்த ஆல்பத்தின் கதைக் கரு.

பொறுப்பின்றி கோயில் காளையாக முரட்டுத்தனமாக அடங்காதவனாக வேலையின்றி பொறுப்பின்றித் திரியும் ஒரு கிராமத்து வாலிபன் காதலில் விழுகிறான். கட்டுக்கடங்காத காளையாக இருந்தவனைக் காதல் எப்படிக் கட்டுத்தறிக் காளையாக மாற்றுகிறது என்பதுதான் இந்தப் பாடலின் மையக் கருத்து.

திருவள்ளூர், திருநின்றவூர், பூண்டி அணைக்கட்டு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்த இசை ஆல்பத்தை நடிகரும், இயக்குநருமான சசிகுமார் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் வெளியிட்டுள்ளார்.

அதன் பிறகு இந்த ஆல்பத்தின் மீதான கவனிப்பும், பரவலின் வீச்சும் அதிகமாகி உள்ளது. ஆயிரக்கணக்கான இசை ரசிகர்கள் இதைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்துள்ளனர்.

தற்போது இந்த மியூஸிக் ஆல்பம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது.  ஸ்டார் மியூசிக்கில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

The post அஜய் கிருஷ்ணா-ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் ‘ரகட் பாய் காதல்’ இசை ஆல்பம் appeared first on Touring Talkies.

]]>
பட தயாரிப்பிற்கு முன்னதாக பாடலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் https://touringtalkies.co/the-production-company-released-the-song-before-the-production-of-the-film/ Mon, 05 Dec 2022 05:27:07 +0000 https://touringtalkies.co/?p=28054 தமிழ் திரையுலகில் கால்பதிக்கும் தயாரிப்பு நிறுவனமான Revgen Film Factory நிறுவனம் படத்தை எடுப்பதற்கு முன்னோட்டமாக படததின் ஒரு பாடலை ஆல்பம் பாடலாக தயாரித்து வெளியிட்டுள்ளது. இப்பாடலை Trend Music இசை நிறுவனம் வெளியிட்டுள்ளது. Revgen Film Factory வழங்கும் இயக்குநர் கோகுல் பிரபு இயக்கத்தில், M S ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் புதுமுகங்கள் நடிப்பில் காதல் கீதமாக உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “உன் கூடவே”.   இளைஞர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலின் […]

The post பட தயாரிப்பிற்கு முன்னதாக பாடலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரையுலகில் கால்பதிக்கும் தயாரிப்பு நிறுவனமான Revgen Film Factory நிறுவனம் படத்தை எடுப்பதற்கு முன்னோட்டமாக படததின் ஒரு பாடலை ஆல்பம் பாடலாக தயாரித்து வெளியிட்டுள்ளது. இப்பாடலை Trend Music இசை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Revgen Film Factory வழங்கும் இயக்குநர் கோகுல் பிரபு இயக்கத்தில், M S ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் புதுமுகங்கள் நடிப்பில் காதல் கீதமாக உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “உன் கூடவே”.  

இளைஞர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலின் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இப்பாடலை Trend Music இசை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் கோகுல் பிரபு பேசிம்போது :
படம் செய்யலாம் என்று இருந்த போது,  தயாரிப்பாளர்  தான் முதலில் நாம் ஒரு பாடல் செய்யலாம் என்றார். ஜோன்ஸை அறிமுகப்படுத்தினார். அவரது குரலை கேட்டவுடன் அவரையே பிக்ஸ் பண்ணிவிட்டோம். மோகன்ராஜ் அழகான வரிகள் தந்தார். விஜி மாஸ்டர் எங்களுக்காக வந்து இந்தப் பாடலின் நடனத்தை அமைத்து தந்தார். சிந்தூரி இந்த பாடல் எடுக்கும் நேரத்தில் சின்ன ஆக்ஸிடெண்ட்  ஆனால் அதை பொருட்படுத்தாமல் மருந்து எடுத்து கொண்டு சூட்டிங்கில் கலந்துகொண்டார். மிக நன்றாக செய்துள்ளார். பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

தயாரிப்பாளர் தேவகுமார் பேசியதாவது :
கார்பரேட் துறையிலிருந்து வந்து இங்கு விழாவில் கலந்துகொள்வது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. உண்மையில் இந்த பாடல் நடக்க இயக்குநர் தான். உதயகுமார் சாருக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு அவரைப்போல எனக்கும் எஸ்பிபி பிடிக்கும். பட்டாசு மாதிரியான இயக்குநர் பேரரசு வந்து எங்களை வாழ்த்துவது மகிழ்ச்சி. நீங்கள் உங்கள் உழைப்பை உண்மையாக தந்தால் கண்டிப்பாக அதில் ஜெயிக்கலாம். நடிகர் லெனின் உண்மையாக உழைக்கிறார். அவருக்கும் நடிகை சிந்தூரிக்கும் என் வாழ்த்துக்கள். ஜோன்ஸ் ரூபர்ட் மிகச்சிறப்பான பாடலை தந்துள்ளார். இந்த டீம் வெற்றி பெறும் வாழ்த்துக்கள்.

நடன இயக்குநர் விஜி சதீஷ் பேசியதாவது :
முதலில் வேறொரு நடன இயக்குநர் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இறுதிக்கட்டத்தில் என்னை அழைத்தார்கள். லெனினை பார்த்த போது ஆடியிருக்கிறீர்களா என்று கேட்டேன் இல்லை என்றார். அவரைத்தான் ஆட வைக்க வேண்டும் என சவாலாக எடுத்து கொண்டு இந்தப்பாடலை எடுத்தோம். இப்பாடலில் நடனம் கற்றுக்கொண்டு மிக அட்டகாசமாக ஆடினர். எல்லோரும் மிக அற்புதமாக ஒத்துழைத்தார்கள். இயக்குநர் என்ன வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தார்.  கிராமத்து லுக்கில் அழகான பாடலை எடுத்துள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள்.

இசையமைப்பாளர் M S ஜோன்ஸ் ரூபர்ட் பேசியதாவது :
என் தாய் தந்தை குருவிற்கு நன்றி. இந்தக்குழு இப்பாடலில் எனக்கு மிகப்பெரும் ஒத்துழைப்பை தந்தார்கள். ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருந்தது. தீப்தி சுரேஷ் இந்தப்பாடலில் ஒரு ஹம்மிங் பண்ணினார் அவருக்கு நன்றி. மோகன்ராஜன் மிகச்சிறப்பான வரிகள் தந்தார். இந்தப்பாடலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இயக்குநர் பேரரசு பேசியதாவது : “தயாரிப்பாளர் தேவகுமார் சினிமா மீது காதல் கொண்டவராக இருக்கிறார். நாயகன் லெனின் பெயரே நன்றாக உள்ளது. பாடலில் நன்றாக நடித்துள்ளார். படம் ஜெயித்தவுடன் முதல்வர் சீட்டுக்கு ஆசைப்படாதீர்கள். இப்போது அது தான் நடக்கிறது. நாயகி நன்றி மட்டுமே சொன்னார் இந்தகாலத்தில் நன்றியோடு இருப்பது பெரிய விசயம். இசையமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட் சூப்பராக பாடியுள்ளார். இயக்குநர் ஒரு அழகான பாடலை தந்துள்ளார். இன்றைய சினிமாவில் சின்ன படங்களாகவே இருந்தாலும் பெரிய நிறுவனம் வெளியிட்டால்தான் வெற்றி பெறுகிறது. இந்தப்படத்தையும் ரெட் ஜெயண்ட் வாங்குமென நம்புகிறேன் இந்தக்குழு வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் RV உதயகுமார் பேசியதாவது :
ஒரு பாடல் தானே இந்த விழாவிற்கு வர வேண்டுமா என யோசித்தேன். ஆனால் இங்கு வந்து இந்தப்பாடல் பார்த்தபிறகு மிகப்பெரிய மகிழ்ச்சி. மிக சிறந்த ஒரு பாடலை எடுத்துள்ளார்கள். பாடலில் நாயகனும் நாயகியும் நன்றாக ஆடியுள்ளார்கள். இன்னும் கொஞ்சம் உழைத்தால் திரையுலகில் மிகச் சிறப்பான இடத்தை பிடிப்பார்கள். இந்தக்குழு 4 நிமிட பாடலுக்கு மிககடினமான உழைப்பை தந்துள்ளார்கள்.  ஒரு விசயத்தை அர்ப்பணிப்போடு செய்யும்போது கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

நடிகர் தயாரிப்பாளர் லெனின் பேசியதாவது :
இங்கு பெரிய பிரபலங்கள் வந்து வாழ்த்துவது மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்தக் குழு மிகச் சிறப்பான உழைப்பை தந்துள்ளார்கள். என்னை சுற்றி நிறைய நல்லவர்கள் பாசமானவர்கள் இருக்கிறார்கள் அவர்களின் அன்புக்கு நன்றி. ஹைஸ்பீட் ஷாட் என்றால் என்னவென்றே தெரியாது ஆனால் என்னை வைத்து இந்தப் பாடலின் நடனத்தை ஹைஸ்பீட்  ஷாட்டில் எடுத்தார்கள் நடன இயக்குநருக்கு நன்றி. ஜாலியாக இதை எடுக்க வேண்டும் என்று தான் இப்பாடலை எடுத்தோம். இப்போது எல்லோரும் பாராட்டுவது மகிழ்ச்சி. இந்தப் பாடலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள், பார்த்து உங்கள் கருத்துக்களை தாருங்கள் நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்
தயாரிப்பு நிறுவனம் : Revgen Film Factory
இயக்கம் : கோகுல் பிரபு
ஒளிப்பதிவு : சதீஷ் மெய்யப்பன்
நடன அமைப்பு : விஜிசதீஷ்
இசை : M S ஜோன்ஸ் ரூபர்ட்
எடிட்டர் – பவித்ரன்  K
கலை இயக்கம் : L கோபி
பாடல் : மோகன்ராஜன்
உடை வடிவமைப்பு : கார்த்திக்
மேக்கப் – ஜெஷாந்தி & ஜாஸ்மின் ஆண்டனி
தயாரிப்பு – லெனின் , தேவகுமார்

The post பட தயாரிப்பிற்கு முன்னதாக பாடலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் appeared first on Touring Talkies.

]]>
‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலுக்காக நடந்த சுவையான பட்டிமன்றம் https://touringtalkies.co/uchimalai-kaathavarayan-music-album-news/ Sat, 19 Nov 2022 01:37:51 +0000 https://touringtalkies.co/?p=27271 தமிழ் திரையுலகில் படைப்புகளை உருவாக்குவது எளிது. அதனை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவது கடினம். இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே.விஜய், மா.கா.பா.ஆனந்த் மற்றும் ஆஷ்னா ஜாவேரி நடிப்பில்  ‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலை அறிமுகப்படுத்துவதற்காக, திரையுலக பிரபலங்களுக்கு இடையே நடைபெற்ற பட்டிமன்றத்தின் முன்னோட்ட காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவீ இசையில், இயக்குநர் டோங்லீ இயக்கத்தில், நடிகை ஆஷ்னா ஜாவேரி, மா.கா.பா. ஆனந்த் மற்றும் ஆர்.ஜே.விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘உச்சிமலை காத்தவராயன்’ எனும் பாடலை சரிகம நிறுவனம் வெளியிடுகிறது. இதற்காக ரசிகர்களை […]

The post ‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலுக்காக நடந்த சுவையான பட்டிமன்றம் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரையுலகில் படைப்புகளை உருவாக்குவது எளிது. அதனை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவது கடினம்.

இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே.விஜய், மா.கா.பா.ஆனந்த் மற்றும் ஆஷ்னா ஜாவேரி நடிப்பில்  ‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலை அறிமுகப்படுத்துவதற்காக, திரையுலக பிரபலங்களுக்கு இடையே நடைபெற்ற பட்டிமன்றத்தின் முன்னோட்ட காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இசையமைப்பாளர் ஆனிவீ இசையில், இயக்குநர் டோங்லீ இயக்கத்தில், நடிகை ஆஷ்னா ஜாவேரி, மா.கா.பா. ஆனந்த் மற்றும் ஆர்.ஜே.விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘உச்சிமலை காத்தவராயன்’ எனும் பாடலை சரிகம நிறுவனம் வெளியிடுகிறது.

இதற்காக ரசிகர்களை ஆர்வமூட்டும் வகையில், திரை பிரபலங்களான நடிகர் மா.கா.பா.ஆனந்தும், நடிகர் ஆர்.ஜே.விஜயும் தனித்தனி அணியாக பிரிந்து பட்டிமன்றம் நடத்தினர். இதற்கு முன்னதாக ட்வீட்டரில் இருவரும் சுவராசியமான கருத்து மோதல்களில் ஈடுபட்டனர்.

நடிகை ஆஷ்னா ஜாவேரி தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனை பார்வையிட்ட நடிகரும், பாடலாசிரியருமான ஆர். ஜே.விஜய், “அழகே பொறாமைப்படும் பேரழகு..” என பதிவிட்டார்.

உடனடியாக மா.கா.பா.ஆனந்த் ட்விட்டரில், ”தம்பி இது ரொம்ப பழைய விசயம்” என பதிவிட்டதுடன், ”தம்பி அடிபட்டா தேவை மெடிக்கல் கிட்டு.. ஆஷ்னாவ கரெக்ட் பண்ண தேவை ஒரு செமையான ட்வீட்டு.. நீ போயிரு இந்த ஏரியாவை விட்டு..” என பதிவிட்டார்.

பதிலுக்கு ஆர்.ஜே.விஜய் ட்விட்டரில்.. ”க்யூட்டுக்கு எதுக்கு ட்வீட்டு? ஆஷ்னாதான் என்னோட ஹார்ட் பீட்டு” என என பதிவிட்டு, மோதலை தொடங்கினார்.

“மழை வந்தா தேவ அம்பர்லா; பெண்ணே நீதான் மை சிண்ட்ரெல்லா..” என்ற வரிகளைக் குறிப்பிட்டு, இசையமைப்பாளர் ஆனிவீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஆஷ்னா ஜாவேரியின் பிரத்யேக புகைப்படத்தைப் பதிவிட்டார்.

இவர்களின் தீவிரமான மோதலைக் கண்ட இயக்குநரும், தயாரிப்பு நிறுவனமும், ‘வாங்க பேசிக்கலாம்’ என சமாதான ட்வீட்டை பதிவிட்டது.

பிறகு இருவருக்கும் இடையே ‘ஆஷ்னாவிற்காக’ பட்டிமன்றம் நடைபெற்றது. இந்தப் பட்டிமன்றத்தின் இரு அணிகளும் ரைமிங் வேர்ட்ஸ்களாலும், டைமிங் வேர்ட்ஸ்களாலும் மோதிக் கொண்டன.

‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலுக்காக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் நடைபெற்ற இந்த  பட்டிமன்றத்தின் முன்னோட்ட காணொளி தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவில் பாடல் வெளியாகிறது.

பாடலை ரசிகர்களிடம் வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்திய படக் குழுவினரின் முயற்சியை இணையவாசிகளும், திரையுலகினரும் பாராட்டுகிறார்கள்.

The post ‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலுக்காக நடந்த சுவையான பட்டிமன்றம் appeared first on Touring Talkies.

]]>
75 பாடகர்கள் பங்கேற்கும் ‘ஜன கன மன’ இசை நிகழ்ச்சி https://touringtalkies.co/jana-gana-mana-function-press-meet-news/ Sun, 17 Jul 2022 07:08:57 +0000 https://touringtalkies.co/?p=23260 JR-7 நிறுவனத்தினரும், ‘சாதகப் பறவைகள்’ இசைக் குழுவினரும் இணைந்து நம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஒரு இசைத் திருவிழாவாகக் கொண்டாட இருக்கிறார்கள். சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலைத் துறையினரின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகம், உணவகங்கள், கடைகள் இடம் பெறுமாம். இந்நிகழ்ச்சி குறித்து வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைச் செய்தி இது : “இந்தியாவிலேயே முதன்முறையாக 75 பாடகர், பாடகியரை ஒரே மேடையில் […]

The post 75 பாடகர்கள் பங்கேற்கும் ‘ஜன கன மன’ இசை நிகழ்ச்சி appeared first on Touring Talkies.

]]>
JR-7 நிறுவனத்தினரும், ‘சாதகப் பறவைகள்’ இசைக் குழுவினரும் இணைந்து நம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஒரு இசைத் திருவிழாவாகக் கொண்டாட இருக்கிறார்கள்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலைத் துறையினரின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகம், உணவகங்கள், கடைகள் இடம் பெறுமாம்.

இந்நிகழ்ச்சி குறித்து வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைச் செய்தி இது :

“இந்தியாவிலேயே முதன்முறையாக 75 பாடகர், பாடகியரை ஒரே மேடையில் ஒன்றிணைத்து ஒரு நாள் முழுவதும் இசைத் திருவிழாவாக கொண்டாட இருக்கிறோம்.75 பின்னணி மற்றும் முன்னணி பாடகர், பாடகியரும் 75 பாடல்களை பாடும் ஒரு முழு இசை நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி அமையும்.

இந்நிகழ்ச்சியின் மூலம் ‘UNITED SINGERS CHARITABLE TRUST’ என்ற அமைப்பிற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாகவும் இது அமையும். இந்நிகழ்ச்சியின் வாயிலாக திரட்டப்படும் தொகையிலிருந்து ஒரு பகுதியை இந்த அமைப்பிற்கு உதவித் தொகையாக வழங்க உள்ளோம்.

அனைத்து துறைகளிலிருந்தும் 75 முக்கிய பிரமுகர்களை இந்நிகழ்ச்சியில் எங்களுடன் இணைந்து கொண்டாட அழைத்திருக்கிறோம்.

இந்நிகழ்ச்சியை நாங்கள் 3 பகுதிகளாக வடிவமைத்து இருக்கிறோம். காலை 10 மணியளவில் இந்நிகழ்ச்சி பிரபலங்களுடன் துவங்கி பின் திரையிசைப் பாடகர்களுடன் பகல் 12 மணிவரை நடை பெறும். அடுத்த பகுதி 3 மணியிலிருந்து 5 மணிவரையிலும், அதற்கடுத்த பகுதி மாலை 6.30 மணியளவில் தொடங்கி நள்ளிரவு 12 மணிவரையிலும் நடைபெறும். கடைசி பகுதியில் நம் திரையிசைத் துறையில் சாதித்த சாதனையாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வழங்க உள்ளோம்.

முதன்முறையாக பார்வையாளர்கள் அனைவரையும் திரையிசைத் துறையின் 75 வருடத்திற்கு முன்னோக்கி அழைத்து செல்ல இருக்கிறோம். இதன் தொடக்கமாக G.ராமநாதன் ஐயர், பாபநாசம் சிவன் மற்றும் S.M.சுப்பையா நாயுடு அவர்கள் இசையமைத்த பாடல்களில் துவங்கி, பின் M.S.விஸ்வநாதன் – ராமமூர்த்தி, K.V.மகாதேவன் மற்றும் V.குமார் அவர்களின் பாடல்களை பாடவிருக்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் ‘இசை ஞானி’ இளையராஜா மற்றும் ‘இசைப் புயல்’ A.R.ரஹ்மான் அவர்களுடைய பாடல்களை தனி பகுதியாகவே பாடத் திட்டமிட்டுள்ளோம். இதன் தொடர்ச்சியாக தேவா, வித்யாசாகர் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுடைய பாடல்களை பாடவிருக்கிறோம். மேலும் இளம் இசையமைப்பாளர்களான D.இமான், அனிருத் ரவிச்சந்தர், சந்தோஷ் நாராயணன் போன்ற பல இசையமைப்பாளர்களின் பாடல்களும் இந்நிகழ்ச்சியில் இடம் பெறும்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக அனைத்து பிரபலங்கள், பாடகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் நம் தேசிய கீதத்தை ஒன்றாக இணைந்து பாடிய பின்பு இந்நிகழ்ச்சி நிறைவு பெறும்.

இந்நிகழ்ச்சிக்கான விளம்பரங்களை வரும் ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து அனைத்து வணிக வளாகங்கள், கடற்கரை, IT நிறுவனங்கள் இதர பொது இடங்களிலும் சிறிய நிகழ்ச்சிகள் மூலம் தொடங்கவிருக்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த நம் மாநிலத்தை சேர்ந்த சாதனையாளர்களுக்கு சாதனையாளர் விருதையும் வழங்க உள்ளோம்.

இந்நிகழ்ச்சிக்கான விளம்பரங்களையும், பிரச்சாரத்தையும் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் செய்யவிருக்கிறோம்.

இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை BOOK MY SHOW வாயிலாகவும், PAYTM வாயிலாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட விழைகிறோம்...” என்று அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

The post 75 பாடகர்கள் பங்கேற்கும் ‘ஜன கன மன’ இசை நிகழ்ச்சி appeared first on Touring Talkies.

]]>
“வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களெல்லாம் சினிமா வாய்ப்பு கேக்குறாங்க” – நடிகர் ‘காதல்’ சுகுமார் பேச்சு https://touringtalkies.co/all-voter-card-holders-are-asking-for-cinema-opportunity-actor-kathal-sukumar-talks/ Sun, 10 Jul 2022 08:55:34 +0000 https://touringtalkies.co/?p=23125 “இப்போது ‘வாக்காளர் அடையாள அட்டை’ வைத்திருப்பவர்களெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கேட்டு வருகிறார்கள்” என்கிறார் நடிகரும், இயக்குநருமான காதல் சுகுமார். சென்னையில் நேற்று மாலை நடந்த ஒரு இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் பேசும்போது ‘காதல்’ சுகுமார் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது, “வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப் பார்’ என்பது போல் ‘சினிமா எடுத்துப் பார்’ என்றும் சொல்லலாம். சினிமா எடுப்பது அவ்வளவு சிரமமானது. நான் 200 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இன்னமும் சினிமாவின் […]

The post “வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களெல்லாம் சினிமா வாய்ப்பு கேக்குறாங்க” – நடிகர் ‘காதல்’ சுகுமார் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
“இப்போது ‘வாக்காளர் அடையாள அட்டை’ வைத்திருப்பவர்களெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கேட்டு வருகிறார்கள்” என்கிறார் நடிகரும், இயக்குநருமான காதல் சுகுமார்.

சென்னையில் நேற்று மாலை நடந்த ஒரு இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் பேசும்போது ‘காதல்’ சுகுமார் இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசும்போது, “வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப் பார்’ என்பது போல் ‘சினிமா எடுத்துப் பார்’ என்றும் சொல்லலாம். சினிமா எடுப்பது அவ்வளவு சிரமமானது. நான் 200 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இன்னமும் சினிமாவின் வெற்றிக்கான சூட்சுமம் எனக்குப் புரியவில்லை.

இப்போது ஏராளமான பேர் வாய்ப்பு கேட்டு வருகிறார்கள். வாக்காளர் அட்டை உள்ளவர்கள் எல்லாம் வாய்ப்பு தேடி வந்து விட்டார்கள். அந்த அளவிற்குப் போட்டி நிறைந்ததாக இருக்கிறது சினிமாவுலகம்.

எனவே தயாரிப்பாளர் அருண் குமாரசாமி அவர்கள் சினிமாவை நன்றாகத் தெரிந்து கொண்டு படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இங்கே அறிவுரை சொல்வதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். அதேபோல தவறாக வழிகாட்டுபவர்கள்கூட இங்கு அதிகம்.  எனவே சரியான நபர்களைக் தேர்ந்தெடுத்து அவர் படம் எடுக்க வேண்டும்…” என்று கூறினார்.

The post “வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களெல்லாம் சினிமா வாய்ப்பு கேக்குறாங்க” – நடிகர் ‘காதல்’ சுகுமார் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
அஸ்வின் குமார், அஞ்சு குரியன் நடித்திருக்கும் ‘வாடி வாடி’ இசை ஆல்பம் https://touringtalkies.co/vaadi-vaadi-music-album-news/ Sat, 02 Jul 2022 08:36:27 +0000 https://touringtalkies.co/?p=22974 Think Originals’ தொடர்ந்து  இசை பிரியர்களின் இதயம் அள்ளும்  சுயாதீன ஆல்பம் பாடல்களை வழங்கி வருகிறது.   அந்த வகையில் இந்த Think Originals நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘வாடி வாடி’ வீடியோ பாடல் இன்று வெளியானது..! இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இப்பாடல் அதன் அற்புதமான இசை மற்றும் அசத்தலான காட்சிகளுக்காக ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசைக் கோர்வை மற்றும் பாடலாசிரியர் விவேகாவின் நவநாகரீக பாடல் வரிகள் ரசிகர்களை  ஈர்க்கும் […]

The post அஸ்வின் குமார், அஞ்சு குரியன் நடித்திருக்கும் ‘வாடி வாடி’ இசை ஆல்பம் appeared first on Touring Talkies.

]]>
Think Originals’ தொடர்ந்து  இசை பிரியர்களின் இதயம் அள்ளும்  சுயாதீன ஆல்பம் பாடல்களை வழங்கி வருகிறது.  

அந்த வகையில் இந்த Think Originals நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘வாடி வாடி’ வீடியோ பாடல் இன்று வெளியானது..!

இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

இப்பாடல் அதன் அற்புதமான இசை மற்றும் அசத்தலான காட்சிகளுக்காக ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசைக் கோர்வை மற்றும் பாடலாசிரியர் விவேகாவின் நவநாகரீக பாடல் வரிகள் ரசிகர்களை  ஈர்க்கும் அம்சமாக அமைந்துள்ளன.

அஸ்வின் குமார், லக்ஷ்மிகாந்தன் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோரின் அழகான நடிப்பு கெமிஸ்ட்ரி மனதை கொள்ளை கொள்கிறது.

ஒளிப்பதிவு நாயகன் ஆர்.டி.ராஜசேகர் தனது அற்புதமான ஒளிப்பதிவின் மூலம் பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளார். தமிழ் ஆல்பங்களிலேயே மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட முதல் தமிழ் வீடியோ பாடல் ‘வாடி வாடி’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாடி வாடி’ பாடலை கார்த்திக் அரசகுமார் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் ISC யும், படத்தொகுப்பை ஆண்டனியும் செய்துள்ளனர். இந்த பாடலுக்கு சாண்டி நடனம் அமைத்துள்ளார். பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ளார்.

D.R.K.கிரண் (கலை இயக்கம்), போற்றி பிரவின் (காஸ்ட்யூம் டிசைனர்), விக்னேஷ் (இணை இயக்கம்), காமராஜ் (நிர்வாகத் தயாரிப்பாளர்), சரஸ்வதி (நிர்வாக மேலாளர்), திலீப் போர்கர் & ஆகாஷ் போர்கர் (லைன் புரடியூசர்ஸ்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா D’One (பத்திரிகை தொடர்பு).

The post அஸ்வின் குமார், அஞ்சு குரியன் நடித்திருக்கும் ‘வாடி வாடி’ இசை ஆல்பம் appeared first on Touring Talkies.

]]>
ரியோராஜ்-பவித்ரா லஷ்மி நடித்திருக்கும் ‘கண்ணம்மா என்னம்மா’ பாடல் ஆல்பம் https://touringtalkies.co/kannammaa-ennammaa-music-album-song-released/ Fri, 15 Oct 2021 08:39:23 +0000 https://touringtalkies.co/?p=18765 இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தும்வகையிலும், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், Noise and Grains நிறுவனம் புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. ‘அஸ்கமாரோ’, ‘குட்டிப் பட்டாஸ்’ பாடல்களின் பிரம்மாண்டமான வெற்றியினை தொடர்ந்து, Noise and Grains தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக, ரியோ ராஜ் மற்றும் பவித்ரா ல‌ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ‘கண்ணம்மா என்னம்மா’. தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை இயக்குநர் ஜே.பி.பிரிட்டோ […]

The post ரியோராஜ்-பவித்ரா லஷ்மி நடித்திருக்கும் ‘கண்ணம்மா என்னம்மா’ பாடல் ஆல்பம் appeared first on Touring Talkies.

]]>
இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தும்வகையிலும், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், Noise and Grains நிறுவனம் புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

‘அஸ்கமாரோ’, ‘குட்டிப் பட்டாஸ்’ பாடல்களின் பிரம்மாண்டமான வெற்றியினை தொடர்ந்து, Noise and Grains தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக, ரியோ ராஜ் மற்றும் பவித்ரா ல‌ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ‘கண்ணம்மா என்னம்மா’. தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை இயக்குநர் ஜே.பி.பிரிட்டோ இயக்கியுள்ளார்.

இயக்கம் – பிரிட்டோ JB, இசை – தேவ் பிரகாஷ், பாடல்கள் – A.S.தாவூத், பாடியவர்கள் – ஷாம் விஷால், நடன இயக்கம் – அபு & சால்ஸ், ஒளிப்பதிவு – S.மணிகண்ட ராஜா, படத் தொகுப்பு – கிருஷ்ணா குமார், கிரியேட்டிவ் டைரக்டர் – கார்த்திக் ஶ்ரீனிவாஷ், பிஸினஸ் டைரக்டர் – மஹாவீர் அசோக், கண்டன்ட் டைரக்டர் – டோங்க்லி ஜம்போ, கலை – சசிகுமார், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், கலரிஸ்ட் – ப்ராங்ளின்.V, பப்ளிசிட்டி டிசைனர் – சிவா தமிழரசன், எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – வைஷாலி S.V.

இப்பாடலின் வெளியீட்டு விழா சின்னத்திரை பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் பாடகர்கள் கலந்து கொள்ள… பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கலை நிகழ்வுகள், நடனம் என கோலகலமாக நடைபெற்றது. பாடலை நடன இயக்குநர் சாண்டி வெளியிட பிரபலங்கள் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட செஃப் தாமுவும், நடிகை சுனிதாவும் கண்ணம்மா என்னம்மா’ பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

இந்த விழாவில் நடிகர் ரியோ பேசும்போது, “என் நட்புக்காக இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஒரே நாளில் இதை பிளான் பண்ணி இயக்குநர் பிரிட்டோ மிக அழகாக எடுத்து விட்டார். ஷாம் விஷால் அருமையாக பாடியுள்ளார். Noise & Grains நிறுவனத்தினர் இதை மிகப் பிரம்மாண்டமாக வெளியிட்டு விட்டார்கள், அவர்களுக்கு நன்றி. இது அவர்களுக்கு ஆரம்பம்தான். இன்னும் நிறைய செய்வார்கள், எல்லோரும் பாடலை பார்த்து ரசியுங்கள்…” என்றார்.

நடிகை பவித்ரா ல‌ஷ்மி பேசும்போது, “ஒரு இசை வெளியீடூ என்பது ஒவ்வொரு நடிகருக்கும் கனவு. அது பெரிய படம், பெரிய நடிகர் இருந்தால்தான் நடக்கும் என்றில்லாமல், திறமையிருந்தால் அனைவருக்கும் அந்த மேடை கிடைக்கும் என்பதை நிரூபித்த Noise & Grains நிறுவனத்திற்கு நன்றி.

இந்த பாடலை ஷாம் விஷால் பாடியிருக்கிறார் என்றவுடனே, நான் இந்த ஆல்பத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன். சூப்பர் சிங்கரிலிருந்தே அவருக்கு நான் ரசிகை. பிரிட்டோ இதனை அற்புதமாக இயக்கியிருக்கிறார்…” என்றார்.

*Noise & Grains சார்பில் கார்த்திக் பேசும்போது, *எங்களை அணுகும் சுயாதீன கலைஞர்களை வைத்து, பல வருடங்களாகவே நாங்கள் தனி ஆல்பங்களை உருவாக்கி வருகிறோம். கொரோனாவிற்கு பிறகு ஒரு மார்க்கெட் ஓபனாகியுள்ளது, அதனை சரியான வகையில் உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். அதைத்தான் தற்போது செய்து வருகிறோம்.

‘குட்டிப் பட்டாஸ்’ பாடல் செய்து கொண்டிருந்தபோது, ஏதேச்சையாக ரியோவை சந்தித்தபோது, எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் இந்த ஐடியா பற்றி சொன்னார். அது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக செய்யலாம் என முடிவு செய்து இந்த பாடலை உருவாக்கினோம்…” என்றார்.

இயக்குநர் பிரிட்டோ பேசும்போது, “ரீகன்தான் இந்தப் பாடல் குறித்து முதலில் சொன்னான். ரியோவிடம் சொன்ன போது அவன் வேண்டாம் என்றுதான் சொன்னான். அதன் பின் பாடலை கேட்ட பிறகு, அவனுக்கு பிடித்து, அதை வீடியோ செய்யலாம் என முடிவு செய்து, சின்னதாக நாங்களே மொட்டை மாடியில் எடுத்தோம்.

அதை ரியோ அவரது நண்பர்களான அபு மற்றும் சால்ஸ் இருவரிடமும் காட்ட, அவர்களுக்கு இது பிடித்து போய் உதவி செய்ய, இந்தப் பாடல் பெரிய அளவில் உருவானது.

ஒளிப்பதிவாளர் S.மணிகண்ட ராஜாவின் உதவியில் இந்தப் பாடலை ஒரே நாளில் உருவாக்கினோம். இந்தப் பாடல், இவ்வளவு பெரிய அளவில் வெளியாவது மிகப் பெரும் மகிழ்ச்சி..” என்றார்.

The post ரியோராஜ்-பவித்ரா லஷ்மி நடித்திருக்கும் ‘கண்ணம்மா என்னம்மா’ பாடல் ஆல்பம் appeared first on Touring Talkies.

]]>
12 மொழிகளில் உருவாகும் 75-வது சுதந்திர தின பாடல் ‘பெருங்காற்றே’ https://touringtalkies.co/75th-independence-day-song-in-12-languages/ Sat, 31 Jul 2021 07:08:04 +0000 https://touringtalkies.co/?p=16634 இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு தினத்தையொட்டி இந்தாண்டு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் புதிய பிரம்மாண்டமான ஆல்பம் ஒன்று வெளியாகவுள்ளது. இந்த ஆல்பம் பற்றிய அறிமுக நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில், தி.நகர் ரெசிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது இதனைத் தயாரிக்கும் சக்ரா அறக்கட்டளையின் நிறுவனர் ‘சக்ரா’ ராஜசேகர் இது குறித்து விரிவாகப் பேசினார். அவர் பேசும்போது, “இந்தியாவின் சுதந்திர தின 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது. ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் […]

The post 12 மொழிகளில் உருவாகும் 75-வது சுதந்திர தின பாடல் ‘பெருங்காற்றே’ appeared first on Touring Talkies.

]]>
இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு தினத்தையொட்டி இந்தாண்டு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் புதிய பிரம்மாண்டமான ஆல்பம் ஒன்று வெளியாகவுள்ளது.

இந்த ஆல்பம் பற்றிய அறிமுக நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில், தி.நகர் ரெசிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது.

அப்போது இதனைத் தயாரிக்கும் சக்ரா அறக்கட்டளையின் நிறுவனர் சக்ரா’ ராஜசேகர் இது குறித்து விரிவாகப் பேசினார்.

அவர் பேசும்போது, “இந்தியாவின் சுதந்திர தின 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது.

கப்பலோட்டிய தமிழன்’ என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-ம் தேதியிலிருந்து தொடங்குகிறது.

இந்திய சுதந்திர போருக்கு எப்படி தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்ததோ, அதுபோல இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கும், தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

50-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் பரத்பாலா அவர்களின் இயக்கத்தில், ‘தாய் மண்ணே வணக்கம்’ – ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டு இந்திய அளவில் பிரபலமானது.

வரும் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழர்களின் தியாகத்தை உணர்த்தும்விதமாகவும் இந்தியாவெங்கும் இருக்கும் சுதந்திர வீரர்களின் பெருமைகளை போற்றும்படியும் ஏ.ராஜசேகர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக மற்றுமொரு பாடல் உருவாகிறது.

தமிழில் தொடங்கி இந்தியாவில் திரைப்படங்கள் உருவாகும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி உள்ளிட்ட 12 மொழிகளில் இந்த பாடல் உருவாகிறது.

இந்தியாவில் உள்ள முன்னணி திரைப்பட கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்பாடல் உருவாக்கத்தில் பங்கு கொள்ளவிருக்கிறார்கள்.

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு இடங்களிலும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களிலும் இப்பாடல் படமாக்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட இருக்கிறது.

இப்படப்பிடிப்பின் சிறப்பு நிகழ்வாக கனெக்டிங் இந்தியா வித் கலர்ஸ் (Connecting India With Colors) என்ற தலைப்பில் உலக சாதனை முயற்சியாக 6 கி.மீ. நீளத்திற்கு கேன்வாஸ் பெயிண்டிங் (Canvas Painting) வரையப்படுகிறது.

தமிழகம் தொடங்கி இந்தியாவெங்கும் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்று நிகழ்வுகள் வரையப்படுகிறது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 முன்னணி ஓவியக்கலைஞர் வரைகிறார்கள்.

இந்த உலக சாதனையை (Guinness book of records, limca book of records and Asian book of records) -ல் பதிவு செய்யப் போகிறோம்.

இந்த பாடலின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் (FIRST LOOK MOTION POSTER) வெளியீடு வரும் செப்டம்பர் 5-ல் தொடங்கும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது ஆண்டு விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.

இவ்விழாவில், வ.உ.சி. எழுதிய அனைத்து நூல்களையும் உள்ளடக்கிய வ.உ.சி பெட்டகம்’ வெளியிடப்பட இருக்கிறது.

வ.உ.சி-யின் 150-வது ஆண்டை குறிக்கும் பொருட்டு உலகெங்கும் இருக்கும் 150 தமிழ் ஆளுமைகள் எழுதும் ‘வ.உ.சி 150’ என்ற புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.

இந்தியாவில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களில் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்குத்தான் முதன் முதலில் அரசியல் வாழ்க்கை வரலாறு 1906-ல் எழுதப்பட்டது.

வெள்ளையர்களால் இந்தியாவில் தடை செய்யப்பட்டு லண்டன் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுவிட்ட அந்த நூலை மீட்டெடுத்து (நூலகர் மற்றும் ஆய்வாளர் திரு.ரங்கையா முருகன்) தமிழில் தமிழ் பெருஞ்சொல் வ.உ.சி.’ என்றும் ஆங்கிலத்தில் ‘தி பிக் வேர்ட் வி.ஒ.சி. THE BIG WORD V.O.C.’ என்ற பெயரிலும் வெளியிடுகிறோம்.

இவையனைத்தும் ஆடியோ புத்தகமாகவும் (AUDIO BOOK ), வீடியோ புத்தகமாகவும் (VIDEO BOOK), கிண்டில் வர்ஷனாகவும் (KIDLE VERSION) வ.உ.சி. செயலியாகவும் (V.O.C. MOBILE APP) இலவசமாக டிஜிட்டலில் பதிவேற்றுகிறோம்…” என்று பேசினார்.

இந்த விழாவில் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த மாபெரும் இந்நிகழ்வை நல்லறிஞர்களின் துணை கொண்டு சக்ரா அறக்கட்டளை நிறுவனர் சக்ரா ராஜசேகர் மற்றும் விதை புத்தக வெளியீட்டு நிறுவனர் ஆ.சுப்ரமணியன் இணைந்து முன்னெடுத்திருக்கிறார்கள்.

The post 12 மொழிகளில் உருவாகும் 75-வது சுதந்திர தின பாடல் ‘பெருங்காற்றே’ appeared first on Touring Talkies.

]]>