Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
youtube – Touring Talkies https://touringtalkies.co Fri, 29 Dec 2023 02:47:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png youtube – Touring Talkies https://touringtalkies.co 32 32 2023 | மனதை வருடிய திரைப் பாடல்கள்! https://touringtalkies.co/tamil-songs-won-people-hearts-regardless-of-youtube-views/ Wed, 27 Dec 2023 02:45:57 +0000 https://touringtalkies.co/?p=39228 யூடியூபின் வருகைக்குப் பிறகு திரையிசைப் பாடல்களின் தரம் என்பது வியூஸ் அடிப்படையில் கணக்கிடப்படுவது வழக்கமாகிவிட்டது. ஒரு பாடல் மிக சுமாராக இருந்தாலுமே கூட அது 1 மில்லியன் பார்வைகளை பெற்றுவிட்டால் அது ஹிட் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஏராளமான பாடல்கள் வியூஸ்களை வாரிக் குவித்தாலும், யூடியூப் பார்வைகள் என்பதை தாண்டி, சமூக வலைதளங்களிலும் வானொலி சேனல்கள் வாயிலாகவும் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த சில பாடல்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். ‘நெஞ்சமே நெஞ்சமே’ […]

The post 2023 | மனதை வருடிய திரைப் பாடல்கள்! appeared first on Touring Talkies.

]]>
யூடியூபின் வருகைக்குப் பிறகு திரையிசைப் பாடல்களின் தரம் என்பது வியூஸ் அடிப்படையில் கணக்கிடப்படுவது வழக்கமாகிவிட்டது. ஒரு பாடல் மிக சுமாராக இருந்தாலுமே கூட அது 1 மில்லியன் பார்வைகளை பெற்றுவிட்டால் அது ஹிட் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஏராளமான பாடல்கள் வியூஸ்களை வாரிக் குவித்தாலும், யூடியூப் பார்வைகள் என்பதை தாண்டி, சமூக வலைதளங்களிலும் வானொலி சேனல்கள் வாயிலாகவும் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த சில பாடல்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

நெஞ்சமே நெஞ்சமேமாமன்னன்.ஆர்.ரஹ்மான்: இந்த ஆண்டின் அதிகம் முணுமுணுக்கப்பட்ட பாடல் என்று இந்தப் பாடலை சொல்லலாம். ரீல்ஸ், ஷார்ட்ஸ் என பார்வையாளர்களின் மனதில் திரும்ப திரும்ப திணிக்கப்படாமல், எளிமையான இசையும், பாடல் வரிகளும் இந்த பாடலின் வரவேற்புக்கு காரணமாக அமைந்தன. தேவா, சக்திஸ்ரீ கோபாலன், விஜய் யேசுதாஸ் என மூன்று வெர்ஷன்களுமே மனதை உருகச் செய்யக் கூடியவையாக இருந்தன.

ராசாகண்ணுமாமன்னன்.ஆர்.ரஹ்மான்: அதே ‘மாமன்னன்’ படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடல் இது. வடிவேலுவின் குரலில் இருந்து துக்கமும், ஏக்கமும் இந்தப் பாடலை வேறொரு தளத்துக்கு கொண்டு சென்றது. பெரும்பாலும் ஜாலியான பாடல்களை மட்டுமே பாடிவந்த வடிவேலுவை இப்படியும் பாடவைக்கலாம் என காட்டியிருந்தார் ரஹ்மான்.

வழிநெடுக காட்டுமல்லிவிடுதலை பார்ட் 1 – இளையராஜா: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த ‘விடுதலை பார்ட் 1’ படத்தில் இடம்பெற்ற இப்பாடலை இளையராஜாவே எழுதி பாடியிருந்தார். அதிரடியான பாடல்களுக்கே முன்னுரிமை தரும் 2கே தலைமுறையினரையும் முணுமுணுக்க வைத்து இசையில் என்றைக்குமே தான் ராஜாதான் மீண்டும் ஒருமுறை இந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பின் மூலம் நிரூபித்தார் இளையராஜா.

நான் காலிகுட் நைட்ஷான் ரோல்டன்: இந்த ஆண்டின் அதிகம் ரீல்ஸ், ஷார்ட்ஸ்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடல் இதுவாக இருக்கலாம். அந்த அளவுக்கு இளம் தலைமுறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றது இந்த பாடல். 80களின் இளையராஜா பாடல்களை ஞாபகப்படுத்தும்படி அமைந்த இந்தப் பாடலை மிகச் சிறப்பாக உருவாக்கி பாடவும் செய்திருந்தார் ஷான் ரோல்டன்.

அகநகபொன்னியின் செல்வன் 2 – .ஆர்.ரஹ்மான்: ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்திலேயே இந்த பாடலின் சிறிய துணுக்கு பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதன் முழு வடிவம் இரண்டாம பாகத்தில் இடம்பெற்றிருந்தது. சக்திஸ்ரீ கோபாலனின் மயக்கும் குரலில் த்ரிஷா, கார்த்தி காதல் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் இந்தப் பாடல் கேட்டதுமே நெஞ்சோடு ஒட்டிக் கொள்வதாக இருந்தது.

அமுத கடல் உனக்குதான்சித்தாசந்தோஷ் நாராயணன்: ’சித்தா’ படம் வெளியாகி மூன்று மாதங்களை கடந்து விட்டாலும் இந்த பாடலுக்கான மவுசு சமூக வலைதளங்களில் இன்னும் குறையவில்லை எனலாம். விவேக்கின் வரிகளில் சந்தோஷ் நாராயணனின் கரகர குரலில் உருவான இந்தப் பாடல் இந்த ஆண்டின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று. தனது ஆர்ப்பாட்டமில்லாத இசையால் கேட்பவர்களை கிறங்கடித்திருந்தார் சந்தோஷ் நாராயணன். படத்தில் இந்தப் பாடல் மட்டும் சந்தோஷ் நாராயணனுடையது.

கண்கள் ஏதோசித்தாதிபு நினன் தாமஸ்: அதே ‘சித்தா’ படத்தில் இடம்பெற்ற காதல் பாடலான இதனை திபு நினன் தாமஸ் இசையமைத்திருந்தார். யுகபாரதியின் வரிகளில் பிரதீப், கார்த்திகாவின் குரலில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல் படத்தில் சித்தார்த், நிமிஷா இடையிலான காதல் உணர்வுகளை மிக அழகிய முறையில் பார்வையாளர்களுக்கு கடத்த உதவியது.

அந்த ஆகாயம்பத்து தல.ஆர்.ரஹ்மான்: சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் சித் ஸ்ரீராமின் குரலில் இடம்பெற்ற இப்பாடல் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க பாடல்களில் ஒன்று. படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை பார்வையாளர்களுக்கு சொல்ல வைக்கப்பட்ட இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

நிரா நிராடக்கர்நிவாஸ் கே.பிரசன்னா: கரோனா காலகட்டத்திலேயே பலரின் ரிங்டோனாக இருந்த இந்த பாடல், படம் வெளியானபோதும் கவனிக்கப்பட்டது. சித் ஸ்ரீராமின் பாடிய இப்பாடலில் கவுதம் வாசுதேவ் மேனனும் ஒரு சிறிய பகுதியை பாடியிருப்பார்.

காற்றோடு பட்டம் போலஅயோத்திஎன்.ஆர்.ரகுநாதன்: ‘அயோத்தி’ படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல் இது. படத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் தனது குரல் வழியாக பார்ப்பவர்களுக்கு செலுத்தி உருக வைத்திருப்பார் பாடகர் பிரதீப்குமார். தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் சோகத்தையும், தந்தையின் மனமாற்றத்தையும் தனது வரிகளில் வடித்திருப்பார் பாடலாசிரியர் சாரதி.

 

The post 2023 | மனதை வருடிய திரைப் பாடல்கள்! appeared first on Touring Talkies.

]]>
24 மணி நேரத்துக்குள் 100 மில்லியன் பார்வைகள் – ‘சலார்’ ட்ரெய்லர் சாதனை! https://touringtalkies.co/salaar-trailer-marks-100-million-view-in-youtube/ Tue, 26 Dec 2023 02:24:23 +0000 https://touringtalkies.co/?p=39197 பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்துக்குள்ளாகவே யூடியூபில் நூறு மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பிரசாந்த் நீல் ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் இந்தப் […]

The post 24 மணி நேரத்துக்குள் 100 மில்லியன் பார்வைகள் – ‘சலார்’ ட்ரெய்லர் சாதனை! appeared first on Touring Talkies.

]]>
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்துக்குள்ளாகவே யூடியூபில் நூறு மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

பிரசாந்த் நீல் ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘சலார்’.

ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் இந்தப் படம் செப். 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் பணிகள் முடிவடையாததால், டிச.22 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது.

இந்த நிலையில், வெளியான 18 மணி நேரத்தில் ‘சலார்’ ட்ரெய்லர் யூடியூபில் நூறு மில்லியன் (10 கோடி) பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கில் 25 மில்லியன், இந்தியில் 41 மில்லியன், தமிழில் 7.4 மில்லியன், கன்னடத்தில் 8.4 மில்லியன், மலையாளத்தில் 6.5 மில்லியன் பார்வைகளை இந்த ட்ரெய்லர் பெற்றுள்ளது. மேலும் அதிவேகமாக 1 மில்லியன் லைக்குகளை பெற்ற வீடியோ என்ற சாதனையையும் இந்த ட்ரெய்லர் பெற்றுள்ளது.

 

The post 24 மணி நேரத்துக்குள் 100 மில்லியன் பார்வைகள் – ‘சலார்’ ட்ரெய்லர் சாதனை! appeared first on Touring Talkies.

]]>
காந்தியை சுட்ட கோட்சே! மீண்டும்.. கமலின் ‘ஹே ராம்’! https://touringtalkies.co/kamal-haasan-in-the-cult-classic-hey-ram-streaming-today/ Tue, 15 Aug 2023 05:54:19 +0000 https://touringtalkies.co/?p=35323 கடந்த 2000ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடத்து  வெளியான திரைப்படம் ‘ஹே ராம்’. ஷாருக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, ஓம் பூரி, விக்ரம் கோகலே, நாசர், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்து இருந்தார். காந்தியை, கோட்சே கொன்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தையொட்டி இப்படம் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படுகிறது.  

The post காந்தியை சுட்ட கோட்சே! மீண்டும்.. கமலின் ‘ஹே ராம்’! appeared first on Touring Talkies.

]]>
கடந்த 2000ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடத்து  வெளியான திரைப்படம் ‘ஹே ராம்’. ஷாருக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, ஓம் பூரி, விக்ரம் கோகலே, நாசர், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்து இருந்தார்.

காந்தியை, கோட்சே கொன்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.

இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தையொட்டி இப்படம் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படுகிறது.

 

The post காந்தியை சுட்ட கோட்சே! மீண்டும்.. கமலின் ‘ஹே ராம்’! appeared first on Touring Talkies.

]]>
தளபதி விஜய் பிறந்தநாள்! டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் சிறப்பு நிகழ்ச்சி! https://touringtalkies.co/vijay-birth-day/ Thu, 22 Jun 2023 09:31:26 +0000 https://touringtalkies.co/?p=33691 தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு என பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். மேலும் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், விஜய் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு […]

The post தளபதி விஜய் பிறந்தநாள்! டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் சிறப்பு நிகழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு என பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். மேலும் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், விஜய் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் கே.பாக்யராஜ்,  பாடலாசிரியர் விவேக்,  நடிகை ரைச்சல்,  ஜிகேபி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

The post தளபதி விஜய் பிறந்தநாள்! டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் சிறப்பு நிகழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
யூடியூப்பில் வெளியாகும் ‘கள்வா’ https://touringtalkies.co/kalva-short-film-release-in-youtube/ Wed, 21 Jun 2023 07:26:32 +0000 https://touringtalkies.co/?p=33662 மர்யம் தியேட்டர்ஸ் சார்பில் உருவாகியுள்ள குறும்படம், ‘கள்வா’. ஜியா இயக்கியுள்ள இதில் விஜய் சந்துரு, அட்சயா ஜெகதீஷ், காக்கா கோபால் நடித்துள்ளனர். ஜேட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார். ஷரண் தேவ்கர் சங்கர் ஔிப்பதிவு செய்துள்ளார். அப்சல் கதை எழுதியுள்ளார். பிரேம் எடிட்டிங் செய்திருக்கிறார். சர்வதேச பட விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ள இந்தப் படம், ஜூன் 22-ம் தேதி இரவு 7 மணிக்கு கிங் பிக்சர்ஸ் (king pictures) என்ற யூடியூப் சேனலில் வெளியாகிறது. படம் பற்றி ஜியா கூறும்போது, ‘ரொமான்டிக் […]

The post யூடியூப்பில் வெளியாகும் ‘கள்வா’ appeared first on Touring Talkies.

]]>
மர்யம் தியேட்டர்ஸ் சார்பில் உருவாகியுள்ள குறும்படம், ‘கள்வா’. ஜியா இயக்கியுள்ள இதில் விஜய் சந்துரு, அட்சயா ஜெகதீஷ், காக்கா கோபால் நடித்துள்ளனர். ஜேட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார். ஷரண் தேவ்கர் சங்கர் ஔிப்பதிவு செய்துள்ளார். அப்சல் கதை எழுதியுள்ளார். பிரேம் எடிட்டிங் செய்திருக்கிறார். சர்வதேச பட விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ள இந்தப் படம், ஜூன் 22-ம் தேதி இரவு 7 மணிக்கு கிங் பிக்சர்ஸ் (king pictures) என்ற யூடியூப் சேனலில் வெளியாகிறது.

படம் பற்றி ஜியா கூறும்போது, ‘ரொமான்டிக் திரில்லர் கதையை கொண்ட இந்தக் குறும்படம் சர்வதேச பட விழாக்களில் 17 விருதுகளைப் பெற்றுள்ளது. இதில் ஆழமான காதலும் இருக்கிறது” என்றார்.

The post யூடியூப்பில் வெளியாகும் ‘கள்வா’ appeared first on Touring Talkies.

]]>
விஜய்க்கு பெயர் வைத்தது யார்?: வெகுண்ட எஸ்.ஏ.சி.! https://touringtalkies.co/sa-chandrasekhar-condemn-valai-pechu-youtube-channel-vijay-name-actor/ Sun, 08 Jan 2023 01:50:39 +0000 https://touringtalkies.co/?p=29277 மூன்று பேர் சேர்ந்து பேசும் ஒரு, யூடியூப் சேனலில், “நடிகர் விஜயின் தாத்தா, விஜயா வாஹினி ஸ்டுடியோவில் பணியாற்றினார். விஜய் பிறந்தபோது,  விஜய வாஹிணி ஸ்டூடியோ உரிமையளர், நாகி ரெட்டியிடம் தூக்கிச் சென்று ஆசிர்வாதம் வாங்கினர். அவர்தான் விஜய் என்று பெயர் வைத்ததார்” என்று பேசினர்.  இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில், எஸ்.ஏ.சந்திரசேகர், “அவர்கள் கூறியது முழுக்க முழுக்க பொய். விஜய்க்கு நான்தான் பெயர் வைத்தேன். ஆனால் வலைத்தளத்தில் மூன்று பேர் வரிசையாக உட்கார்ந்துகொண்டு விஜய்யின் […]

The post விஜய்க்கு பெயர் வைத்தது யார்?: வெகுண்ட எஸ்.ஏ.சி.! appeared first on Touring Talkies.

]]>
மூன்று பேர் சேர்ந்து பேசும் ஒரு, யூடியூப் சேனலில், “நடிகர் விஜயின் தாத்தா, விஜயா வாஹினி ஸ்டுடியோவில் பணியாற்றினார். விஜய் பிறந்தபோது,  விஜய வாஹிணி ஸ்டூடியோ உரிமையளர், நாகி ரெட்டியிடம் தூக்கிச் சென்று ஆசிர்வாதம் வாங்கினர். அவர்தான் விஜய் என்று பெயர் வைத்ததார்” என்று பேசினர். 

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில், எஸ்.ஏ.சந்திரசேகர், “அவர்கள் கூறியது முழுக்க முழுக்க பொய். விஜய்க்கு நான்தான் பெயர் வைத்தேன். ஆனால் வலைத்தளத்தில் மூன்று பேர் வரிசையாக உட்கார்ந்துகொண்டு விஜய்யின் பெயர் காரணத்திற்கு வேறு ஒரு கதையை கூறுகிறார்கள்.

மீடியாக்களாகிய நீங்கள் உண்மையைச் சொல்லுங்கள். பொய்களை சொல்லவேண்டாம்” என கடுமையாக விமர்சித்தார் எஸ்.ஏ.சி.

 

The post விஜய்க்கு பெயர் வைத்தது யார்?: வெகுண்ட எஸ்.ஏ.சி.! appeared first on Touring Talkies.

]]>
யு டியுப் விமர்சகர்களுக்கு விஜய் சேதுபதி சூடு! https://touringtalkies.co/vijay-sethupathi-criticizes-youtube-critics/ Fri, 23 Dec 2022 03:27:31 +0000 https://touringtalkies.co/?p=28912 சென்னையில் 20வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15ஆம் தேதி துவங்கியது. சென்னை பிவிஆா் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், அண்ணா சினிமாஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டன. இந்நிலையில் இந்த திரைப்பட விழாவின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு திரைக்கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு அளிக்கப்பட்டது. விருது பெற்ற  விஜய்சேதுபதி பேசியபோது, “திரைப்படங்களில்,  கதையின் மூலம் இயக்குநர்கள்  தெரிவிக்க […]

The post யு டியுப் விமர்சகர்களுக்கு விஜய் சேதுபதி சூடு! appeared first on Touring Talkies.

]]>
சென்னையில் 20வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15ஆம் தேதி துவங்கியது. சென்னை பிவிஆா் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், அண்ணா சினிமாஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டன.

இந்நிலையில் இந்த திரைப்பட விழாவின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு திரைக்கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு அளிக்கப்பட்டது.

விருது பெற்ற  விஜய்சேதுபதி பேசியபோது, “திரைப்படங்களில்,  கதையின் மூலம் இயக்குநர்கள்  தெரிவிக்க விரும்பும் விஷயங்களை புரிந்துகொள்ளுங்கள்; சாதாரணமாக கடந்து போய்விடாதீர்கள்;  ஆரோக்கியமாக விவாதங்களில் ஈடுபடுங்கள்.

வாழ்க்கையின் அனுபவங்கள்தான் திரைப்படங்களாக உருவாகின்றன; வாழ்க்கையை புரிந்துகொள்ள திரைப்படங்கள் உதவுகின்றன.

எந்தப்படத்தையுமே விமர்சனங்களின் வாயிலாக புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டாம்.  இப்போதெல்லாம் யூடியூப்பில் கெட்டது பேசினால்தான் பணம் வருகிறது. விமர்சகர்கள் பார்வையில் திரைப்படங்கள் சரியாக பார்க்கப்படுகின்றதா எனத் தெரியவில்லை. நடிகர் பூ ராமு அவர்களுடன் இணைந்து இந்த விருதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்றார் விஜய்சேதுபதி.

விருதுக்கான பரிசுத்தொகையை விஜய் சேதுபதி, விழாக் கமிட்டிக்கு நன்கொடையாக திருப்பி அளித்தது குறிப்பிடத்தக்கது.

The post யு டியுப் விமர்சகர்களுக்கு விஜய் சேதுபதி சூடு! appeared first on Touring Talkies.

]]>
ப்ளூ சட்டை மாறனுக்கு உதயநிதி அட்வைஸ்..! https://touringtalkies.co/udhayanithi-advice-for-blue-shirt-maran/ Sun, 11 Dec 2022 15:57:51 +0000 https://touringtalkies.co/?p=28402 தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக  உள்நுழைந்து பின் நடிகராக அவதாரம் எடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கண்ணே கலைமானே, ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் பாராட்டை பெற்றவர்.  காமெடி, குடும்ப கதாபாத்திரம், க்ரைம், த்ரில்லர் என தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த உதயநிதி உங்களுக்கு பிடித்த சேனல் என்ன என்ற கேள்விக்கு. எனக்கு ப்ளூ சட்டை மாறன் ரொம்ப பிடிக்கும். அவர் படத்தை பற்றி விமர்சனம் செய்வது, […]

The post ப்ளூ சட்டை மாறனுக்கு உதயநிதி அட்வைஸ்..! appeared first on Touring Talkies.

]]>

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக  உள்நுழைந்து பின் நடிகராக அவதாரம் எடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கண்ணே கலைமானே, ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் பாராட்டை பெற்றவர்.

 காமெடி, குடும்ப கதாபாத்திரம், க்ரைம், த்ரில்லர் என தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர்.

சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த உதயநிதி உங்களுக்கு பிடித்த சேனல் என்ன என்ற கேள்விக்கு. எனக்கு ப்ளூ சட்டை மாறன் ரொம்ப பிடிக்கும். அவர் படத்தை பற்றி விமர்சனம் செய்வது, கலாய்ப்பது,எந்த பயமும் இல்லாமல் அசால்ட்டா பேசுவார்.

படம் எடுக்குறவங்களுக்கு சில நேரம் அவர் பண்றது கோபம் வரும். அவர் கடுமையாக படத்தை விமர்சனம் பண்ணுவதை குறைத்து கொண்டால் நல்லா இருக்கும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.

The post ப்ளூ சட்டை மாறனுக்கு உதயநிதி அட்வைஸ்..! appeared first on Touring Talkies.

]]>
உரிமம் இல்லாமல் படத்தை வெளியிட்டதால் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மீது மும்பை போலீஸார் வழக்கு https://touringtalkies.co/a-case-files-against-google-and-youtube-ceos-by-mumbai-police/ Thu, 27 Jan 2022 08:55:28 +0000 https://touringtalkies.co/?p=20453 கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான சுனில் தர்ஷன்,  ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ என்ற படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி உள்ளார். இதில் சிவ தர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் உபென் படேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இன்னும் திரைக்கு வராத நிலையில் அத்திரைப்படம் யூ டியூப்பில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக யூ […]

The post உரிமம் இல்லாமல் படத்தை வெளியிட்டதால் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மீது மும்பை போலீஸார் வழக்கு appeared first on Touring Talkies.

]]>
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான சுனில் தர்ஷன்,  ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ என்ற படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி உள்ளார். இதில் சிவ தர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் உபென் படேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இன்னும் திரைக்கு வராத நிலையில் அத்திரைப்படம் யூ டியூப்பில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக யூ டியூப் நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் அது நீக்ககப்படவில்லை என்று அவர் புகார் தெரிவித்துள்ளார்.  

“அத்திரைப்படத்தை எனது கட்சிக்காரர் யாருக்கும் விற்கவில்லை. இணையத்தில் வெளியிடவும் இல்லை, இருப்பினும், அது லட்சக்கணக்கான பார்வைகளுடன் யூ டியூப்பில் வலம் வருகிறது. யூ டியூப் நிர்வாகம் விளம்பரங்கள் மற்ற ஆதாரங்கள் வழியே இத்திரைப்படத்தின் மூலம் பெரும் வருவாயை ஈட்டியுள்ளது..” என்று சுனீல் தர்ஷனின் வழக்கறிஞர் ஆதித்யா தெரிவித்துள்ளார். 

காப்புரிமை சட்டத்தை மீறி யூ டியூப்பில் இத்திரைப்படம் பதிவேற்றப்பட்டது தொடர்பாக சுனில் தர்ஷன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய மும்பை காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து கூகுள் முதன்மை செயல் அதிகாரி  சுந்தர் பிச்சை, யூ டியூப் நிறுவனத்தின் சி.இ.ஓ. கெளதம் ஆனந்த் மற்றும் 3 ஊழியர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மீது மும்பை போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். 

The post உரிமம் இல்லாமல் படத்தை வெளியிட்டதால் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மீது மும்பை போலீஸார் வழக்கு appeared first on Touring Talkies.

]]>