Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
yasodha movie – Touring Talkies https://touringtalkies.co Mon, 12 Dec 2022 15:43:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png yasodha movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 OTT-யிலும் வெற்றியடைந்தது ‘யசோதா’ திரைப்படம் https://touringtalkies.co/yasodha-movie-hit-in-ott-platforms/ Mon, 12 Dec 2022 15:42:44 +0000 https://touringtalkies.co/?p=28471 சமந்தாவின் சமீபத்திய ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘யசோதா’  ஓடிடி தளத்திலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது நடிகை சமந்தாவுடைய ஆக்‌ஷன்- த்ரில்லர் திரைப்படமான ‘யசோதா’ சமீபத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நல்ல சாதனை படைத்தது. சமந்தாவுடைய வியக்கவைக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் அவருடைய நடிப்பு, திரைக்கதையின் ட்விஸ்ட் இவை எல்லாம் பார்வையாளர்களின் அட்ரிலின் சுரப்பை திரையரங்குகளில் அதிகரித்தது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பின்பு தற்போது அமேசான் பிரைமில் ‘யசோதா’ ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கிறது. ஆச்சரியமாக, திரையரங்குகளில் கிடைத்ததற்கு இணையாக ஓடிடி […]

The post OTT-யிலும் வெற்றியடைந்தது ‘யசோதா’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
சமந்தாவின் சமீபத்திய ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘யசோதா’  ஓடிடி தளத்திலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது

நடிகை சமந்தாவுடைய ஆக்‌ஷன்- த்ரில்லர் திரைப்படமான ‘யசோதா’ சமீபத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நல்ல சாதனை படைத்தது.

சமந்தாவுடைய வியக்கவைக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் அவருடைய நடிப்பு, திரைக்கதையின் ட்விஸ்ட் இவை எல்லாம் பார்வையாளர்களின் அட்ரிலின் சுரப்பை திரையரங்குகளில் அதிகரித்தது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பின்பு தற்போது அமேசான் பிரைமில் ‘யசோதா’ ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கிறது.

ஆச்சரியமாக, திரையரங்குகளில் கிடைத்ததற்கு இணையாக ஓடிடி தளத்திலும் யசோதாவிற்கு பார்வையாளர்களிடையே வரவேற்பு இருக்கிறது. தங்களது விமர்சனங்கள் மூலம் படத்திற்கு அன்பையும் ஆதரவையும் ரசிகர்கள் இணையத்தில் கொடுத்து வருகின்றனர். இதனால், ‘யசோதா’ திரைப்படம் ப்ரைமின் வாட்ச் லிஸ்ட்டில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஸ்ரீதேவி மூவிஸின் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் படத்தைத் தயாரித்து இருக்க, ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் வாடகைத்தாய் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். ‘மெலோடி பிரம்மா’ மணி ஷர்மா படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

உன்னி முகுந்தன் மற்றும் வரலக்‌ஷ்மி இருவரும் சமந்தாவுடன் கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்பிரிடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

The post OTT-யிலும் வெற்றியடைந்தது ‘யசோதா’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
“என் ரசிகர்கள்தான் எனக்கு சக்தி கொடுத்திருக்கிறார்கள்” – நடிகை சமந்தா பேட்டி https://touringtalkies.co/my-fans-are-what-give-me-strength-actress-samanthas-interview/ Wed, 09 Nov 2022 18:58:06 +0000 https://touringtalkies.co/?p=26829 நடிகை சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும்  ‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில், மூவிஸ் பேனரின் கீழ் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். தன்னுடைய உடல்நிலை குறித்து வெளிப்படையாக சமந்தா தெரிவித்த பின்னர் முதன் முறையாக அவரைப் பற்றியும் படம் பற்றியும் ஊடகத்திடம் மனம் திறந்து உரையாடியுள்ளார். “இந்த ’யசோதா’ போன்ற ஒரு […]

The post “என் ரசிகர்கள்தான் எனக்கு சக்தி கொடுத்திருக்கிறார்கள்” – நடிகை சமந்தா பேட்டி appeared first on Touring Talkies.

]]>
நடிகை சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும்  ‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில், மூவிஸ் பேனரின் கீழ் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தன்னுடைய உடல்நிலை குறித்து வெளிப்படையாக சமந்தா தெரிவித்த பின்னர் முதன் முறையாக அவரைப் பற்றியும் படம் பற்றியும் ஊடகத்திடம் மனம் திறந்து உரையாடியுள்ளார்.

“இந்த ’யசோதா’ போன்ற ஒரு கதைதான் நான் உடனடியாக செய்ய விரும்பக் கூடிய படம். வழக்கமாக ஒரு கதையை நான் கேட்ட பிறகு அதை நான் ஒத்துக் கொள்ள ஒரு நாள் எடுத்துக் கொள்வேன். ஆனால், இந்தக் கதையை நான் கேட்ட உடனேயே எந்த ஒரு யோசனையும் இல்லாமல் ஒத்துக் கொண்டேன். அந்த அளவிற்கு இந்த வலுவான கதையை பார்வையாளர்களும் அனுபவிக்க வேண்டும். இயக்குநர்கள் ஹரி & ஹரிஷ் இருவரும் புதிய ஒரு கான்செப்ட்டோடு வந்திருக்கிறார்கள்.

இது ஒரு நல்ல த்ரில்லர் கதை. இந்தப் படத்தில் வேலை செய்த அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் முழு உழைப்பைக் கொடுத்து இருக்கிறார்கள். திரைக்கதையை இயக்குநர்கள் எழுதிய விதம், இதில் உள்ள சண்டைக் காட்சிகள், செட், இசை இது எல்லாமே நீங்கள் பெரிய திரையில் பார்த்து ரசிக்க வேண்டும். 

இந்த ’யசோதா’ படத்தில் நான் கர்ப்பிணியாக, ஒரு சாதரணமான பெண்ணாக நடித்திருக்கிறேன். அதனால், இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடியான ஆக்‌ஷன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. யானிக் மற்றும் வெங்கட் இருவரும் முடிந்த அளவிற்கு சண்டைக் காட்சிகளை இயல்பாக இருக்கும்படி பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். நானும் அதற்கேற்றபடி பயிற்சி எடுத்து நன்றாகவே செய்திருக்கிறேன்.

இந்தக் கதைக்காக நிறைய ஹோட்டல்கள், மருத்துவமனைகள் எல்லாமே பார்த்தோம். ஆனால், சில நடைமுறைப் பிரச்சினைகள் காரணமாக எல்லாமே செட் அமைத்து விட்டோம். படம் பிரம்மாண்டமாக வெளிவர வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் உறுதியாக இருந்தார்.

‘பான் இந்தியா’ என்பது இப்போது ஐந்து மொழிகளில் வெளியாகும் படத்தைக் கூப்பிடும் ஒரு வார்த்தை ஆகி விட்டது. நிச்சயம், இது பான் –  இந்தியா அளவில் வெற்றியும் பெறும்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், மொழிகள் கடந்து இந்தப் படத்திற்கு வரும் ரெஸ்பான்ஸ் நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு மொழிகளிலும் பார்வையாளர்களுக்கு அவர்கள் கலாச்சாரத்திற்கு ஏற்றபடி தனிப்பட்ட ரசனை இருக்கிறது. மொழிகள் கடந்து இந்தப் படத்தின் ட்ரைய்லரை பலரிடமும் எடுத்து சென்ற என்னுடைய சக நண்பர்களான நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, துல்கர், ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் வருண் ஆகியோருக்கு நன்றி.

இந்தப் படத்திற்கு நான்தான் டப்பிங் பேச வேண்டும் என்று முன்பேயே முடிவெடுத்து விட்டேன். ஒரு நடிகர் ஒரு கதாபாத்திரத்தை பிடித்து செய்யும்போது, அதற்கான குரலும் அவர்கள்தான் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அதைத்தான் நானும் செய்திருக்கிறேன். ஆனால், எனக்கு உடல்நிலை சரியில்லாத இந்த சமயத்தில் இது சவாலானதாக இருந்தாலும் டப்பிங் செய்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சிதான்.

இந்தப் படத்தில் வரல‌ஷ்மி சரத்குமாரின் கதாபாத்திரமும் எனக்குப் பிடித்திருக்கிறது. அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சே எனக்கு பிடித்திருந்தது. இதற்கு மேல் நான் எதுவும் சொன்னால் அது ஸ்பாய்லர் ஆகிவிடும். அதை ஏன் நான் சொல்கிறேன் என படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும்.

இந்த யசோதா படம் நீங்கள் டிரெயிலர் & டீசரில் பார்த்துள்ள காட்சிகளைத் தாண்டி இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும்.

என் மீது என் ரசிகர்கள் காட்டிய அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. என் உடல் நலனில் எனக்கு இப்போது நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இது ஒரு போர்க்களம். இதில் நான் சண்டையிடுவதற்கான வலு அனைத்தையும் ரசிகர்கள்தான் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பெரும் நன்றி..” என்று சொல்லி முடித்தார் நடிகை சமந்தா.

The post “என் ரசிகர்கள்தான் எனக்கு சக்தி கொடுத்திருக்கிறார்கள்” – நடிகை சமந்தா பேட்டி appeared first on Touring Talkies.

]]>
“கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்” – யசோதா பட தயாாிப்பாளர் சொன்ன உண்மை..! https://touringtalkies.co/samantha-agreed-to-act-within-45-minutes-of-hearing-the-story-the-truth-told-by-the-producer-of-yashoda/ Tue, 08 Nov 2022 11:11:48 +0000 https://touringtalkies.co/?p=26784 நடிகை சமந்தா கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கும் ‘யசோதா’ திரைப்படத்தை தெலுங்குலகின் மூத்தத் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தெலுங்கு சினிமா துறையில் 40 வருடங்களாக பணியாற்றி வருகிறார். 450-க்கும் மேற்பட்ட மொழி மாற்றம் செய்த […]

The post “கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்” – யசோதா பட தயாாிப்பாளர் சொன்ன உண்மை..! appeared first on Touring Talkies.

]]>
நடிகை சமந்தா கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கும் ‘யசோதா’ திரைப்படத்தை தெலுங்குலகின் மூத்தத் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தெலுங்கு சினிமா துறையில் 40 வருடங்களாக பணியாற்றி வருகிறார். 450-க்கும் மேற்பட்ட மொழி மாற்றம் செய்த படங்களை ஆந்திராவில் அவர் வெளியிட்டு இருக்கிறார். ‘ஆதித்யா 369’ போன்ற கல்ட் க்ளாஸிக் படங்களை அவர் தயாரித்தும் இருக்கிறார்.

இப்போது அவர் பான் இந்தியா படமான ‘யசோதா’ வை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் நவம்பர் 11ம் தேதி வெளியிட இருக்கிறார். இந்த ‘யசோதா’ படம் குறித்தான சில சுவாரஸ்யமான தகவல்களை ஊடகத்திடம் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் பகிர்ந்து இருக்கிறார்.

“இந்தயசோதா’ படத்தைப் பான் இந்தியா அளவில் வெளியிடவும் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் சரியான நபராக சமந்தா இருப்பார் என நினைத்தோம். ’ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸ் மூலம் தேசிய அளவில் பார்வையாளர்களின் கவனத்தை சமந்தா கவர்ந்திருந்தார்.

அதனால், அவர் இந்தக் கதையைக் கேட்பாரா இல்லையா என்ற சந்தேகமும் இருந்தது. சமந்தா எல்லாருடையக் கதைகளையும் கேட்கத் தயாராக இருப்பதாக அவரின் மேலாளர் மகேந்திரா எங்களுக்கு நம்பிக்கைக் கொடுத்தார்.

கடைசியாக சென்ற வருடம் செப்டம்பர் 8-ம் தேதி அவர் இந்த யசோதா கதையைக் கேட்டதும் உடனே நடிக்க ஒத்துக் கொண்டார். மேலும், பல மொழிகளில் வெளியாவதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார். வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பல முக்கியமான நடிகர்களைத் திரைக்கதையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தோம்.  

’யசோதா’ படத்தின் கதையைக் கேட்ட நொடியில் இருந்து அவர் கதையுடன் பயணம் செய்ய ஆரம்பித்தார். ’சாகுந்தலம்’ படம் முடித்ததும் அவருடைய கவனம் முழுவதும் இந்தப் படம் மீதுதான் இருந்தது.

சமந்தாவின் உடல் நிலை பற்றி டப்பிங்கின்போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது. அவர் தெலுங்கில் டப்பிங் பேசிய அதே சமயம் தமிழிலும் அவரே டப்பிங் பேசினார். அப்போது அவர் எனர்ஜி லெவல் குறைவாகவே இருந்தது. வேறு டப்பிங் கலைஞரைக் கொண்டு வரலாம் என நாங்கள் கருத்து தெரிவித்தோம்.

அவர் குரல் தமிழில் அனைவருக்கும் தெரியும் என்பதால் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் டப்பிங் பணிகளை மேற்கொண்டார்.  அவரின் அர்ப்பணிப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். இந்தியில் சமந்தாவுக்கு சின்மயி குரல் கொடுத்துள்ளார்...” என்றார் தயாரிப்பாளர்.

The post “கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்” – யசோதா பட தயாாிப்பாளர் சொன்ன உண்மை..! appeared first on Touring Talkies.

]]>
சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ‘யசோதா’ சென்சார் சான்றிதழ் பெற்றது..! https://touringtalkies.co/yasodha-movie-gets-u-a-certificate-in-censor/ Fri, 04 Nov 2022 17:49:53 +0000 https://touringtalkies.co/?p=26564 இதற்கு முன்பு பார்த்திராத அதிதீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்ட ‘யசோதா’ படத்தில் சமந்தா நடித்திருக்கிறார். அதிக எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் இந்தப் படம் தற்போது ‘யூ/ஏ’ சான்றிதழுடன் சென்சார் பெற்றுள்ளது. வாடகைத் தாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஷன் மற்றும் எமோஷன் உள்ளடக்கிய கதை என்பது படத்தின் ட்ரைய்லர் காட்சிகளில் தெளிவாகியுள்ளது. இது மட்டுமல்லாது, சமந்தாவின் திறமையான நடிப்பு, பிரம்மாண்டமான தயாரிப்புப் பணிகள் மற்றும் கதைக்கு வலுவூட்டும் பின்னணி இசை பார்வையாளர்களின் அட்ரிலின் […]

The post சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ‘யசோதா’ சென்சார் சான்றிதழ் பெற்றது..! appeared first on Touring Talkies.

]]>
இதற்கு முன்பு பார்த்திராத அதிதீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்ட ‘யசோதா’ படத்தில் சமந்தா நடித்திருக்கிறார். அதிக எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் இந்தப் படம் தற்போது ‘யூ/ஏ’ சான்றிதழுடன் சென்சார் பெற்றுள்ளது.

வாடகைத் தாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஷன் மற்றும் எமோஷன் உள்ளடக்கிய கதை என்பது படத்தின் ட்ரைய்லர் காட்சிகளில் தெளிவாகியுள்ளது.

இது மட்டுமல்லாது, சமந்தாவின் திறமையான நடிப்பு, பிரம்மாண்டமான தயாரிப்புப் பணிகள் மற்றும் கதைக்கு வலுவூட்டும் பின்னணி இசை பார்வையாளர்களின் அட்ரிலின் சுரப்பை அதிகப்படுத்தி பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டும் கதையாக அமையும்.

பிரபல நடிகர்களான உன்னி முகுந்தன், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் வெளியாகக் கூடிய இந்த பான் இந்தியா படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

’யசோதா’ திரைப்படம் சமந்தாவின் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கக் கூடியத் திரைப்படம் மட்டுமல்ல முதல் முறையாக பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வெளியாக இருக்கக் கூடிய முதல் கதாநாயகியை மையப்படுத்தியப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாடகைத் தாயாக சமந்தா நடித்திருக்கும் இந்தப் படம் திறமையான இயக்குநர்களான ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில், தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் உலகம் முழுவதும் வரும் நவம்பர் மாதம் 11-ம் தேதி வெளியாக இருக்கிறது.

The post சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ‘யசோதா’ சென்சார் சான்றிதழ் பெற்றது..! appeared first on Touring Talkies.

]]>
ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரை வியக்க வைத்த சமந்தாவின் அர்ப்பணிப்பு! https://touringtalkies.co/samanthas-commitment-surprised-the-hollywood-fighting-coach/ Thu, 03 Nov 2022 16:00:32 +0000 https://touringtalkies.co/?p=26466 நடிகை சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘யசோதா’ ஹரி- ஹரிஷ் இயக்கத்தில் இந்த வருடம் நவம்பர் மாதம் 11-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படம் மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது என்பதை சமீபத்தில் வெளியான அதன் ட்ரைய்லர் காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது. படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான டிரெய்லரில் பார்த்த ஆக்‌ஷன், எமோஷன் மற்றும் த்ரில்லான பரபரப்புக் […]

The post ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரை வியக்க வைத்த சமந்தாவின் அர்ப்பணிப்பு! appeared first on Touring Talkies.

]]>
நடிகை சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘யசோதா’ ஹரி- ஹரிஷ் இயக்கத்தில் இந்த வருடம் நவம்பர் மாதம் 11-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படம் மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது என்பதை சமீபத்தில் வெளியான அதன் ட்ரைய்லர் காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது.

படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான டிரெய்லரில் பார்த்த ஆக்‌ஷன், எமோஷன் மற்றும் த்ரில்லான பரபரப்புக் காட்சிகளை நாம் விரைவில் திரையரங்குகளில் காண இருக்கிறோம்.  

படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்குக் கிடைத்து வரும் நல்ல வரவேற்பால் மகிழ்ச்சியடைந்துள்ள சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென், இந்த அதிதீவிரமான சண்டைக் காட்சிகளில் சமந்தா நடித்துள்ளது குறித்து பகிர்ந்துள்ளார்.

சமந்தாவின் தீவிரமான அர்ப்பணிப்பும் ஆர்வமும் மட்டுமே இந்த சண்டைக் காட்சிகளை அடுத்த நிலைக்கு எடுத்து சென்று பார்வையாளர்களுக்கு பரபரப்பூட்டுவதாக மாற்றியுள்ளது” எனவும் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு யானிக் பென் சமந்தாவுடன் ‘தி ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸில் இணைந்து பணியாற்றினார். தற்போது சிறந்த ஆக்‌ஷன் காட்சிகளுக்காக மீண்டும் ‘யசோதா’ படத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.

ஐகிடோ, கிக் பாக்ஸிங், ஜீத் குனே டோ, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் மணல் பயிற்சியில் நிபுணத்துவம் பெற்றவரான யானிக் பென் புகழ் பெற்ற ஹாலிவுட் படங்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட தெலுங்கு மற்றும் இந்தி படங்களுக்கு சண்டைப் பயிற்சி கொடுத்துள்ளார்.

‘ட்ரான்ஸ்போர்ட்டர் 3’, கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்செப்ஷன்’, ‘டன்கிர்க்’, ஷாருக்கானின் ‘ரயீஸ்’, சல்மான் கானின் ‘டைகர் சிந்தா ஹை’, பவன் கல்யாணின் ‘அத்தாரிண்டிகி தரேதி’, மகேஷ் பாபுவின் ’1- நேனோக்கடைன்’, அல்ல் அர்ஜூனின் ‘பத்ரிநாத்’, சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ மற்றும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

The post ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரை வியக்க வைத்த சமந்தாவின் அர்ப்பணிப்பு! appeared first on Touring Talkies.

]]>
“யசோதா’ படத்தில் கதைதான் ஹீரோ..” – சொல்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்! https://touringtalkies.co/the-story-is-the-hero-in-yashoda-says-actress-varalakshmi-sarathkumar/ Tue, 01 Nov 2022 11:22:35 +0000 https://touringtalkies.co/?p=26367 நடிகை சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ வரும் நவம்பர்  11-ம் தேதி ஐந்து மொழிகளிலும் இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. திறமையான இயக்குநர்களான ஹரி & ஹரீஷ் இந்தப் படத்தை இயக்க, மூத்த தயாரிப்பாளரான சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ’யசோதா’ படத்தில் நடித்தது பற்றி நடிகை வரலட்சுமி பேசும்போது, “இந்தக் […]

The post “யசோதா’ படத்தில் கதைதான் ஹீரோ..” – சொல்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்! appeared first on Touring Talkies.

]]>
நடிகை சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ வரும் நவம்பர்  11-ம் தேதி ஐந்து மொழிகளிலும் இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

திறமையான இயக்குநர்களான ஹரி & ஹரீஷ் இந்தப் படத்தை இயக்க, மூத்த தயாரிப்பாளரான சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த ’யசோதா’ படத்தில் நடித்தது பற்றி நடிகை வரலட்சுமி பேசும்போது, “இந்தக் கதை ஒரு அறிவியல் புனைவு. முதலில் இது போன்ற கதையையும் கதாபாத்திரங்களையும் எப்படி எழுதினார்கள் என்றுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதைப் பற்றி நான் இயக்குநர்களிடமும் கேட்டேன்.

இந்தப் படத்தில் நான் வாடகைத் தாய் மையத்தின் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் வசதியான பணத்தை விரும்பக் கூடிய ஒருத்தி. என்னுடைய உண்மையான குணாதிசியம் வாழ்க்கை முறை, நான் உடுத்தும் உடை என பலவற்றில் இருந்தும் இந்தக் கதாபாத்திரம் முற்றிலும் வேறானது.

என்னுடைய கதாபாத்திரம் மிகவும் அமைதியாக இருக்கும். கதையின் போக்கில்தான் என்னுடைய எதிர்மறைத் தன்மை வெளிப்படும். எனக்கும் சமந்தாவுக்கும் இடையில் இருக்கும் உறவு பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டுவதாக அமையும்.

என்னுடைய கதாபாத்திரம் சமந்தாவுக்கு இணையாக கதையில் பயணித்துக் கொண்டே இருக்கும். யசோதாவிற்கு யாருடைய உதவியாவது அவளுடைய வாழ்க்கையில் வேண்டும் என்ற நிலையில் இருக்கும்போதுதான் என்னுடைய கதாபாத்திரம் உள்ளே வரும்.

படத்தை இயக்கிய இரண்டு இயக்குநர்களும் மிகவும் அமைதியானவர்கள். இவர்களைப் போன்ற அமைதியான இயக்குநர்களை இதற்கு முன்பு நான் பார்த்தது இல்லை. ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் அவர்கள் வலுவான ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதும் தெரியும்.

வாடகைத் தாய் முறை என்பது அத்தனை சிக்கலானது கிடையாது. சில நடிகர்கள் அதை முயற்சி செய்ததால் அது மிகப் பெரிய விஷயமாக மாறி விட்டது. வாடகைத் தாய் என்பது படத்தில் ஒரு வரிதான். அதன் நன்மை, தீமை பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. இது கற்பனைக் கதை என்று நினைப்பவர்களுக்கு இது போன்ற சில மனிதர்களும் உண்மையில் இருக்கிறார்கள் என்பதை காண்பித்து இருக்கிறோம்.

சமந்தாவை கடந்த பத்து, பன்னிரெண்டு வருடங்களாகவே எனக்குத் தெரியும். செட்டில் ஜாலியாக இருந்தோம். அவர் ஒரு வலுவான பெண்மணி. இந்தக் கதாபாத்திரத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார்.

படத்தில் யசோதா கதாபாத்திரம் மிகவும் வலுவானது. சமந்தா அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். எனக்குப் படத்தில் எல்லாக் கதாபாத்திரங்களும் பிடிக்கும். ஏனென்றால் கதைதான் படத்தின் ஹீரோ…” என்றார் நடிகை வரலட்சுமி.

The post “யசோதா’ படத்தில் கதைதான் ஹீரோ..” – சொல்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்! appeared first on Touring Talkies.

]]>
சமந்தா நடிக்கும் ‘யசோதா’ நவம்பர் 11-ம் தேதி வெளியாகிறது! https://touringtalkies.co/samanthas-yasodha-movie-will-release-on-november-11/ Mon, 17 Oct 2022 10:58:41 +0000 https://touringtalkies.co/?p=25580 பான் இந்திய நடிகையான சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் நவம்பர் 11-ம் தேதியன்று வெளியாகிறது. ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்‌ஷனின் 14வது படமாக, சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க ஹரி மற்றும் ஹரிஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளனர். இந்தப் படத்தில் சமந்தாவுடன் வரலஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா […]

The post சமந்தா நடிக்கும் ‘யசோதா’ நவம்பர் 11-ம் தேதி வெளியாகிறது! appeared first on Touring Talkies.

]]>
பான் இந்திய நடிகையான சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் நவம்பர் 11-ம் தேதியன்று வெளியாகிறது.

ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்‌ஷனின் 14வது படமாக, சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க ஹரி மற்றும் ஹரிஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளனர்.

இந்தப் படத்தில் சமந்தாவுடன் வரலஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை: மணிஷர்மா, வசனம்: புலகம் சின்நாராயனா, Dr. செல்லா பாக்யலஷ்மி, பாடல்: ராமஜோகியா சாஸ்த்ரி, கிரியேட்டிவ் டைரக்டர்: ஹேமம்பர் ஜஸ்தி, கேமரா: M. சுகுமார், கலை: அஷோக், சண்டைப் பயிற்சி: வெங்கட், யானிக் பென், படத் தொகுப்பு: மார்தாண்ட். K.வெங்கடேஷ், லைன் புரொடியூசர்: வித்யா சிவலெங்கா, இணை தயாரிப்பாளர்: சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, எக்ஸிக்யூடிவ் புரொடியூசர்: ரவிக்குமார் GP, ராஜா செந்தில், இயக்கம்: ஹரி மற்றும் ஹரிஷ், தயாரிப்பாளர்: சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், பேனர்: ஸ்ரீதேவி மூவிஸ்.

படம் குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பேசுகையில், “இந்த ’யசோதா’ படம் இப்போதுள்ள காலத்திற்கு ஏற்ற ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக இருக்கும். புதிர் மற்றும் உணர்ச்சிமயமான கதையமைப்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், இந்தப் படம் குறித்து ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இருக்கை நுனியில் அமரும்படியான கதையமைப்பைக் கொண்டது. இந்தக் கதைக்காகவும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவும் சமந்தா அவரது இரத்தமும் வியர்வையும் கொடுத்து உழைத்திருக்கிறார். பின்னணி இசையில் இதுவரை நீங்கள் கேட்டிராத மணிஷர்மாவின் இசையை கேட்டு மகிழ்வீர்கள்.

இப்போதைக்கு, இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷன் சென்சார் செய்யப்பட்டுள்ளது. மற்ற மொழிகளுக்கான சென்சார் விரைவில் முடிவடைந்து விடும். இந்தப் படத்தின் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு செலவுகளில் எந்தவொரு காரணத்திற்காகவும் நாங்கள் சமரசம் செய்யவில்லை. மிகப் பெரிய பொருட்செலவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை 100 நாட்களில் முடித்துள்ளோம்.

இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு வரக்கூடிய த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு இந்த ‘யசோதா’ நிச்சயம் பிடிக்கும். வரும் நவம்பர் 11 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது” என்று கூறினார்.

The post சமந்தா நடிக்கும் ‘யசோதா’ நவம்பர் 11-ம் தேதி வெளியாகிறது! appeared first on Touring Talkies.

]]>