Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Yasmin Ponnappa – Touring Talkies https://touringtalkies.co Sat, 30 Mar 2024 11:25:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Yasmin Ponnappa – Touring Talkies https://touringtalkies.co 32 32 இடி மின்னல் காதல் – திரைவிமர்சனம் https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf/ Sat, 30 Mar 2024 10:25:40 +0000 https://touringtalkies.co/?p=40517 நாயகன் சிபியும், நாயகி பவ்யாவும் காதலிக்கிறார்கள். நாயகன் சிபி வேலை விஷயமாக அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதால் திரும்பி வர மூன்று ஆண்டுகள் ஆகும் என்பதால் இருவருக்கும் இடையே ஒருவித தவிப்பு இருக்கிறது. அதை போக்கி கொள்ள வெளியில் சென்று பேசி மகிழ்ந்து வீடு திரும்புவார்கள். காரில் வரும் போது அன்பு மிகுதியால் முத்தம் கொடுத்து கொள்ள முயலும் போது ஒருவர் காரில் அடிபட்டு உயிரிழக்கிறார். இந்த விபத்து காரணமாக காதலன் வெளிநாடு செல்ல தடையாகிவிடும் என்று கருதிய […]

The post இடி மின்னல் காதல் – திரைவிமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
நாயகன் சிபியும், நாயகி பவ்யாவும் காதலிக்கிறார்கள். நாயகன் சிபி வேலை விஷயமாக அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதால் திரும்பி வர மூன்று ஆண்டுகள் ஆகும் என்பதால் இருவருக்கும் இடையே ஒருவித தவிப்பு இருக்கிறது. அதை போக்கி கொள்ள வெளியில் சென்று பேசி மகிழ்ந்து வீடு திரும்புவார்கள்.

காரில் வரும் போது அன்பு மிகுதியால் முத்தம் கொடுத்து கொள்ள முயலும் போது ஒருவர் காரில் அடிபட்டு உயிரிழக்கிறார். இந்த விபத்து காரணமாக காதலன் வெளிநாடு செல்ல தடையாகிவிடும் என்று கருதிய நாயகி பவ்யா, நாயகனை காரை எடுத்துக் கொண்டு போக சொல்கிறார்.

சாலையில் வரும் போது விபத்தை பார்த்தேன். கார் வேகமாக போய்விட்டது என்று போலீசுக்கு தகவல் கொடுத்து காதலனை காப்பாற்ற பவ்யா முயற்சிக்கிறார். ஆனால், காதலன் சிபி தன்னால் ஒரு உயிர் பலியானதை நினைத்து வருத்தப்படுகிறார். உண்மையை சொல்லி நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்கு பவ்யாவும், சிபியின் நண்பர் ஜெகனும் தடையாக இருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் வெளியே போன தந்தை வீட்டுக்கு வரவில்லை என்று உயிரிழந்தவரின் மகன் ஆதித்யா தேடுகிறார். தாய் இறந்தது முதல் தந்தை தனக்காக வேறு திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்கிறார் என்பதால் அவருக்கு அவரது தந்தையை அதிகம் பிடிக்கும். மேலும் ஆதித்யாவுக்கு மனஅழுத்த வியாதி இருக்கும். இதனால் மயக்கமடையும் வரை கத்தி களேபரம் செய்வார். அவருக்கு அவ்வப்போது யாஷ்மின் என்கிற பெண்மணி உதவியாக இருப்பார்.

இந்த நிலையில் ஆதித்யாவின் தந்தைக்கு கடன் கொடுத்த தாதா வின்செண்ட் நகுல் அடியாட்களுடன் வீடு தேடி வருகிறார். கடனுக்கு பயந்து மகனை தனியாகவிட்டு தலைமறைவானதாக கருதி மகனை தங்கள் இடத்துக்கு கொண்டு சென்றால் தந்தை தேடி வருவான் என்று கணக்கு போடும் தாதா வின்செண்ட் நகுல் காரில் ஆதித்யாவை தூக்கிப் போட முயற்சிக்கிறார்.

அப்போது அங்கு வரும் நாயகன் சிபி, தன்னால் உயிரிழந்தவரின் மகன்தான் ஆதித்யா என்பது தெரியாமல் தாதாவின் அடியாக்களிடமிருந்து ஆதித்யாவை காப்பாற்றி நண்பன் ஜெகனின் இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கிறார்.

பிறகு ஆதித்யாவின் மனஅழுத்தம் பற்றி தெரிந்து கொண்டு அவனுக்கு சிகிச்சை அளித்து அனாதையாக இருக்கும் ஆதித்யாவுக்கு ராதாரவியின் கீழே உள்ள ஹோமில் சேர்த்துவிட முடிவு செய்கிறார். ஆனால், தனது தந்தை இறந்ததற்கு காரணம் சிபி தான் என்று ஆதித்யாவுக்கு தெரிய வருகிறது. இதனால், தாதா ஆட்களுடன் மோதவிட்டு பழி தீர்க்க வேண்டும். சிபியை கொலை செய்ய வேண்டும் என்று ஆதித்யா திட்டம் போடுகிறார்.

அவரது அந்த திட்டம் நிறைவேறியதா? தாதா ஆட்கள் சிபியை என்ன செய்தார்கள்?. பிரச்சினையில் சிக்கிய சிபி வெளிநாடு செல்ல முடிந்ததா? என்பதை மீதி படம் சொல்கிறது.

ஒரு விபத்து மூன்று கதைகளை இணைத்து ஒரே நேர்கோட்டில் பயணிப்பது போல திரைக்கதை அமைத்து படமாக்கி உள்ளனர்.

நாயகனாக நடித்திருக்கும் சிபி காதல் காட்சியிலும், ஆக்சன் காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். தன்னால் ஒரு உயிர் பலியானதை நினைத்து வேதனைப்படும் காட்சியிலும், ஆதித்யாவின் சூழ்நிலையை அறிந்து கவலைப்படும் காட்சியிலும் நேர்த்தியான நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார்.

கதாநாயகி பவ்யா ட்ரிகா காதல் காட்சிகளில் மட்டுமல்ல மனஅழுத்தம் உள்ள ஆதித்யாவை அதிலிருந்து வெளியே கொண்டுவர போராடுகிற காட்சில் அக்கறையுள்ள அன்புகாட்டும் பாத்திரத்தில் நடித்து மனதில் நிற்கிறார்.

கடனுக்கு சிறுவனை தூக்கும் பாத்திரத்தில் வின்செண்ட் நகுல். அவரது பாத்திரத்தை தாதாவா ஹோமோ செக்ஸ் பிரியரா என்று விளங்கி கொள்ள முடியவில்லை. இருப்பினும் ரொம்ப பில்டப்புடன் வருகிறார். அடிக்கிறார். அடிவாங்குகிறார்.

சிறுவனாக நடித்திருக்கும் ஆதித்யா அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற இடங்களில் கோபத்தையும், மனஅழுத்தம் கொண்டு கத்துகிற காட்சில் பரிதாபத்தையும், கொலைவெறி கொள்ளும் போது வழக்கமான வில்லன் நடிப்பையும் வழங்கி அந்த பாத்திரமாகவே தெரிகிறார்.

படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் யாஷ்மின், இயல்பாக நடித்து கதைக்கும் படத்திற்கும் ஒரு பெரிய காரணமாக இருந்திருக்கிறார். காதலால் பெற்றோரை, குடியால் மனைவியை, விபத்தால் மகனை இழக்கும் தந்தையாக மனோஜ். தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

கருணை உள்ளம் கொண்ட பாதிரியாராக ராதாரவி, மற்றவர்களுக்கு உதவும் மனமுள்ள போலீஸாக பாலாஜி சக்திவேல், நண்பனுக்கு உதவும் ஜெகன் என படத்தில் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். எல்லோரும் அவர்களின் பாத்திரங்களுக்கு வலிமை சேர்த்திருக்கிறார்கள்

திரைக்கதையோடு பயணிக்கும் ஜெயசந்தர் பின்னேனியின் ஒளிப்பதிவு, சஸ்பென்ஸ் குறையாமல் காட்சிகளை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவிய சாம் சி எஸ். பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.

ஆசைகள் வாழ்க்கை பயணத்தை முடிக்க காரணமாக இருக்க கூடாது. அது காதலாக இருந்தாலும், காமமாக இருந்தாலும். காதல், காமம் இரு வெவ்வேறு கதைகளை ஒன்றாக இணைத்து அதில் பாதிக்கப்படும் சிறுவனையும் அவன் பிரச்சினையையும் சொல்லும் இயக்குநர் பாலாஜி மாதவன், திரைக்கதை அமைத்தத்தில் வல்லவராக இருக்கிறார். படமாக்கிய விதத்திலும் பாராட்டுக்குரியவராக இருக்கிறார். வில்லன் பாத்திரத்திற்கு பெரிய வேலை கொடுத்து காட்சிகளில் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் இடி மின்னல் காதலை இன்னும் ரசித்திருக்கலாம்.

The post இடி மின்னல் காதல் – திரைவிமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
படத்துல கதையே ஒரு காரும் ஆறு பேரும்… இடி மின்னல் காதல் https://touringtalkies.co/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Mon, 25 Mar 2024 09:46:19 +0000 https://touringtalkies.co/?p=40153 அட சில படத்தோட தலைப்பு ஈர்க்குற விதமா இருக்கும்.அதே மாதிரியான தலைப்போட சீக்கிரம் வெளிவர இருக்குற படம் தான் இடி மின்னல் காதல். ஈர்க்குற விதமா இருக்குற இந்த படத்த பத்தி இந்த படத்தை இயக்குன அறிமுக இத இயக்குனரா இருக்குற பாலாஜி மாதவன் பல தகவல்களை பகிர்ந்துகிட்டாரு. வாங்க அத பத்தி பாப்போம். ஒரு இடத்துல ஒரு கார் விபத்து நடக்குது அதை சுத்தி நடக்குற சம்பவம் எல்லாமும் தான் படத்தோட கதையா இருக்கு.இந்த கதையோட […]

The post படத்துல கதையே ஒரு காரும் ஆறு பேரும்… இடி மின்னல் காதல் appeared first on Touring Talkies.

]]>
அட சில படத்தோட தலைப்பு ஈர்க்குற விதமா இருக்கும்.அதே மாதிரியான தலைப்போட சீக்கிரம் வெளிவர இருக்குற படம் தான் இடி மின்னல் காதல். ஈர்க்குற விதமா இருக்குற இந்த படத்த பத்தி இந்த படத்தை இயக்குன அறிமுக இத இயக்குனரா இருக்குற பாலாஜி மாதவன் பல தகவல்களை பகிர்ந்துகிட்டாரு. வாங்க அத பத்தி பாப்போம்.

ஒரு இடத்துல ஒரு கார் விபத்து நடக்குது அதை சுத்தி நடக்குற சம்பவம் எல்லாமும் தான் படத்தோட கதையா இருக்கு.இந்த கதையோட மையமா ஆறு கேரக்டர் இருக்கும். அந்த ஆறு பேருமே இந்த விபத்துனால பாதிக்கப்பட்டவங்களா இருப்பாங்க ஏதோ ஒரு விதத்துல. இந்த ஆறு பேர சுத்தி தான் கதை ஓடும். ஒரு வாரத்துல நடக்குற கதைதான் இந்த இடி மின்னல் காதல் படம். நவம்பர் 7ஆம் தேதி ஆரம்பிக்கிற கதை 14ஆம் தேதி முடியுது ஆனால் அப்படி தேதி படியே கத போகாது என்றார்.

எல்லாருக்கும் நல்லாவே தெரிஞ்சா பிக் பாஸ் சிபி, அப்புறம் ஜோ படத்துல நடிச்சிருந்த பவ்யா த்ரிகா, ஆரண்ய காண்டம் யாஸ்மின், பாலாஜி சக்திவேல், ராதா ரவி, ஜெகன் இந்த ஆறு பேரும் தான் அந்த ஆறு விதமான கேரக்டர். சிபி இந்த படத்துல ஹீரோவா நடிச்சிருக்காரு ஆனா அவர் என்னவா நடிச்சிருக்காரு அப்டின்றது தான் இந்த படத்துல இருக்குற சஸ்பென்ஸ்.

இவருக்கு அப்புறம் பவ்யா ஆர்கிடெக் அப்படி என்ற கேரக்டர்லயும், பல வருடங்களுக்கு அப்புறம் ஆரண்ய காண்டம்ல நடிச்சிருந்த யாஸ்மின் நடிச்சு இருக்காங்க, அவங்களுக்கு இது இரண்டாவது படம். இவங்க ஹீரோவோட பக்கத்து வீட்டுக்காரராவும், ஹெட் கான்ஸ்டபிளா பாலாஜி சக்திவேல், சர்ச் பாதராக ராதாரவி, ஜெகன் வந்து மெக்கானிக்காகவும், கயல் படத்தில நடிச்ச வின்சென்ட் தான் இந்த படத்தோட வில்லன் ரோல். இவங்க கூட ஒரு குட்டி பையனும் நடிச்சிருக்கான் அவன் பெயர் தான் ஆதித்யா.

இந்த கதையில பார்த்தீங்க அப்படின்னா சென்னையில் தான் முழுசா இந்த கதை நடக்குது. வல்லநாடு மலையிலிருந்து வில்லன் குரூப் ஒன்னு சென்னைக்கு வராங்க.சென்னையில போர் நினைவுச்சின்னம் இருக்கிற இடம் தான் முக்கியமான ஸ்பாட்டா இந்த கதையில இருக்கும்‌. அந்த ரவுண்டானால தான் கார் விபத்து நடக்குது இதுவரைக்கும் எந்த படத்தோட ஷூட்டிங்ம் இந்த இடத்துல நடந்தது இல்ல‌ ஆனா நாங்க இராணுவத்துகிட்ட எந்த அளவுக்கு விதத்தில இந்த கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் விளக்குனதுக்கு அப்புறம் தான் ராணுவம் அனுமதி கொடுத்தாங்க….

சுவாரசியமா இருக்கிற விஷயம் இந்த படத்துல என்னன்னா, ஆறு கேரக்டருமே ஆடியன்சை ஈசியா எமோஷன்ஸ கனெக்ட் பண்ணிடுவாங்க. எல்லாமே ஒன்னோடு ஒன்னு சேருரப்ப இது ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் மாதிரி இருக்கும் அதனால தான் இந்த படத்துக்கு இடி மின்னல் காதல் டைட்டில். ஆண் பெண் காதல் அப்படினு மட்டும் இல்லாம ஒட்டுமொத்தமா மனுஷங்க மேல இருக்கிற காதலை சொல்லி இருப்போம் மனிதநேயத்தை பத்தி கண்டிப்பா இந்த படம் பேசும் உணர்த்துர விதமாக இருக்கும் என தெரிவித்தார் .

அவரின் திரைப்பயணத்தை பற்றி கேட்டபோது, நான் இயக்குனர் மிஷ்கின் கிட்ட தான் முதன் முதலில் சேர்ந்து அவரோட 4 வருஷம் வர்க் பண்ணேன். அப்புறம் கோ டைரக்டரா ‘ரிச்சி’ அப்டின்ற படத்துல வொர்க் பண்ண அதுக்கப்புறம் சாய்பல்லவி நடிச்ச ‘கார்கி’ படத்துல ஸ்கிரிப்ட் ரைட்டிங் டீம் ஓட வேல செஞ்சேன் .அது மட்டும் இல்லாம மாதவன் சார் ஓட ராக்கெட் படத்துல அசோசியேட் டைரக்டர் வொர்க் பண்ணி தமிழ் இங்கிலீஷ் வெர்சனுக்கு இன்சார்ஜ் நான் இருந்தேன். இப்போ இயக்குனரா ஆக கரெக்ட்டான சந்தர்ப்பம் கிடச்சது நானும் கேமரா மேன் ஜெயச்சந்திரன் சேர்ந்து தான் இந்த இடி மின்னல் காதல் படத்தை தயாரிச்சிருக்கோம் என்று பகிர்ந்து கொண்டார் இயக்குனர் பாலாஜி மாதவன்.

The post படத்துல கதையே ஒரு காரும் ஆறு பேரும்… இடி மின்னல் காதல் appeared first on Touring Talkies.

]]>
அன்று பணப்பையோடு கெத்தாக சென்றவர் 13 வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி – யாஷ்மின் பொன்னப்பா… https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95/ Mon, 25 Mar 2024 09:36:40 +0000 https://touringtalkies.co/?p=40147 ஆரண்ய காண்டம் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் பணப்பையோடு கெத்தாக சென்ற யாஸ்மின் பொன்னப்பா கோலிவுட்-ல் வலம் வருவார் என எதிர்பார்த்த நிலையில் அந்தப் படத்தோடு காணாமல் சென்றவர் தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு ரி என்ட்ரி கொடுக்க உள்ளார். இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஆரண்ய காண்டம். இவருடைய இயக்கத்தில் ஜாக்கி ஷெராப், சம்பத், குரு சோமசுந்தரம் ஆகியோருடன் யாஸ்மின் பொன்னப்பாவும் நடித்திருப்பார். திரைப்படத்தின் இறுதியில் கிளைமாக்ஸ் கட்சியில் கெத்தாக பணப்பையுடன் […]

The post அன்று பணப்பையோடு கெத்தாக சென்றவர் 13 வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி – யாஷ்மின் பொன்னப்பா… appeared first on Touring Talkies.

]]>
ஆரண்ய காண்டம் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் பணப்பையோடு கெத்தாக சென்ற யாஸ்மின் பொன்னப்பா கோலிவுட்-ல் வலம் வருவார் என எதிர்பார்த்த நிலையில் அந்தப் படத்தோடு காணாமல் சென்றவர் தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு ரி என்ட்ரி கொடுக்க உள்ளார்.

இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஆரண்ய காண்டம். இவருடைய இயக்கத்தில் ஜாக்கி ஷெராப், சம்பத், குரு சோமசுந்தரம் ஆகியோருடன் யாஸ்மின் பொன்னப்பாவும் நடித்திருப்பார். திரைப்படத்தின் இறுதியில் கிளைமாக்ஸ் கட்சியில் கெத்தாக பணப்பையுடன் சென்ற அவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவரின் நடிப்பு திறமையை கண்ட பலரும் நிச்சயமாக கோலிவுடில் இவர் வலம் வருவார் என எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் போனார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நான் எங்கேயும் செல்லவில்லை காணாமல் போனவர்கள் பட்டியலில் என்னை சேர்க்காதீர்கள் என்னுடைய சொந்த ஊர் பெங்களூரில் தான் நான் இருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த வேலைகளை செய்து செய்து கொண்டிருந்தேன் நான் ஒரு யோகா டீச்சர் என்று பதில் அளித்தார். நான் பெங்களூரில் யோகா சென்டர் நடத்துகிறேன் நான் எப்போதும் அங்கு மிகவும் பிசியாகவே இருந்து விட்டேன் இதிலேயே 13 வருடங்கள் கடந்து விட்டது.

கடைசியாக ஆரண்ய காண்டம் படத்தில் நடித்ததோடு பிறகு ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு, நான் நடிக்க வேண்டும் என்றால் எனக்கு கதை பிடித்திருக்க வேண்டும். என்னை தேடி எனக்கு பிடித்தது போல் எந்த எந்த கதையும், கதாபாத்திரமும் வரவில்லை அப்படி தேடி வருபவர்கள் எல்லாம் ஆரண்ய காண்டத்தில் நடித்த அதே மாதிரியான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றார்கள் ஆனால் அது ஒரு கிளாசிக் படம் மீண்டும் அதே போல எடுத்தாலும் அதன் அந்த அளவிற்கு அதே உயரத்தை எட்ட இயலாது‌ எனவே நான் மறுத்து விட்டேன்.

கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு நீங்கள் ரீ என்ட்ரி கொடுக்க காரணம் என்று கேள்வி எழுப்பிய போது, இடி மின்னல் காதல் என்ற படத்தில் இயக்குனர் பாலாஜி மாதவன் என்னை நடிக்க கேட்டிருந்தார் ஆனால் நான் முதலில் முடியாது என்று மறுத்து விட்டேன் ஆனால் அவர் என்னை நேரில் தேடி வந்து முழு கதையும் கூறினார் பிறகு எனக்கு அந்த கதையின் மீது ஈர்ப்பு இருந்தது எனக்கு பிடித்திருந்தது அதனால் நான் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டேன். புதிய தலைமுறைய இயக்குனர்கள் புதிய குழுவுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் தனியாக தெரியும் என்று நம்புகிறேன் என்றார்.

தமிழ் சினிமாவில் தற்போது உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டபோது, நான் சொல்ல ஆரம்பித்தால் பட்டியல் நீண்டு கொண்டே போகும் குறிப்பாக விஜய் சேதுபதி நன்றாக நடிக்கிறார் அவர் மிகவும் டேலண்ட் ஆனவர் என கூறினார்.

ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு நீங்கள் காணாமல் போனது போல இந்த படத்திற்கு பிறகும் காணாமல் போய்விடுவீர்களா என்ற கேள்விக்கு, அப்படி இல்லை இனிமே சினிமா ஸ்கிரீன்கள் வழியாக நான் கண்டிப்பாக உங்களுக்கு தென்பட்டுக் கொண்டே இருப்பாள் என்றால் யாஸ்மின் பொன்னப்பா. இந்த இடி மின்னல் காதல் படம் செகண்ட் இன்னிங்ஸ் தான் என்று தெரிவித்துள்ளார்.

The post அன்று பணப்பையோடு கெத்தாக சென்றவர் 13 வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி – யாஷ்மின் பொன்னப்பா… appeared first on Touring Talkies.

]]>