Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
writer movie – Touring Talkies https://touringtalkies.co Sat, 01 Jan 2022 07:31:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png writer movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரைட்டர் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/writer-movie-review/ Thu, 30 Dec 2021 09:24:16 +0000 https://touringtalkies.co/?p=20003 தொடர்ந்து மானுட விடுதலையைப் பேசும் படங்களை தயாரித்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்து தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்துள்ள படம் ‘ரைட்டர்’. பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணி புரிந்த ப்ராங்க்ளின் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். தனது உதவியாளர்கள் படம் செய்வதற்கான முழுத் தகுதியோடு இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ரஞ்சித் தயங்குவதே இல்லை. அந்த வகையில் அவருக்கு ஒரு நீல வணக்கம். ரைட்டரின் கதை என்ன? காவல் துறையில் எழுத்தர் பணி என்பது மிக முக்கியமான […]

The post ரைட்டர் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
தொடர்ந்து மானுட விடுதலையைப் பேசும் படங்களை தயாரித்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்து தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்துள்ள படம் ‘ரைட்டர்’.

பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணி புரிந்த ப்ராங்க்ளின் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தனது உதவியாளர்கள் படம் செய்வதற்கான முழுத் தகுதியோடு இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ரஞ்சித் தயங்குவதே இல்லை. அந்த வகையில் அவருக்கு ஒரு நீல வணக்கம்.

ரைட்டரின் கதை என்ன?

காவல் துறையில் எழுத்தர் பணி என்பது மிக முக்கியமான பணி. அந்தப் பணியை மிக நேர்மையாக செய்து வருகிறார் திருச்சி அருகேயிருக்கும் திருவெறும்பூர் காவல் நிலைய எழுத்தரான சமுத்திரக்கனி. அவருக்கு இரண்டு மனைவிகள். ஒரு மனைவியோடு காலந்தள்ளுவதே இந்தக் காலத்தில் குதிரைக் கொம்பு. இரு மனைவிகள் என்றால் நிலைமை எப்படி இருக்கும்? ஆனால் சமுத்திரக்கனி எமோஷ்னலாக இருவரிடம் பாசக்காரராக இருக்கிறார்.

காவல் துறைக்கு என்று தனிப்பட்ட முறையில் ஒரு யூனியன் வேண்டும் என்பது சமுத்திரக்கனியின் கனவு.  அதற்காக அவர் சலிப்பின்றி கோர்ட் வாசல் ஏறுகிறார். ஆனால் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் போஸ் வெங்கட்டிற்கு அது சிறிதும் பிடிக்கவில்லை. போஸ் வெங்கட் சமுத்திரக்கனியை சென்னையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு டிரான்ஸ்பர் செய்து விடுகிறார்.

சென்னையில் பணியில் சேர வரும் சமுத்திரக்கனிக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. ஒரு லாட்ஜில் ஒரு இளைஞனை அடைத்து வைத்து அங்கு கனியை காவல் இருக்கச் சொல்கிறார்கள். அந்த இளைஞன் மீது எந்தத் தவறும் இல்லை என்று சமுத்திரக்கனிக்கு தெரிய வருவது.

மேலும், அந்த இளைஞன் வசமாக காவல்துறை வைத்த பொறியில் சிக்க சமுத்திரக்கனியும் ஒரு காரணமாக இருக்கிறார்.   அந்த குற்றவுணர்ச்சி அவரைத் துன்புறுத்த  இளைஞனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முயற்சிக்கிறார். அவர் முயற்சி பலித்ததா? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

போலீஸ் ஸ்டேசன் ரைட்டராக சமுத்திரக்கனி கதைக்கேற்றபடி தன் உடலையும், உடல் மொழியையும் மாற்றியிருக்கிறார். அவர் நடிப்பில் சின்ன மெனக்கெடல் தெரிகிறது.

அப்பாவி இளைஞனாக வரும் ஹரி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். மெட்ராஸ்’ படத்தில் ஜானியாக நடித்தவர்தான் இந்த ஹரி. தொடர்ந்து இவர் கவனம் ஈர்த்து வருகிறார்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கியமான கேரக்டர்  சுப்பிரமணிய சிவா. ஹரியின் அண்ணனாக அப்பாவி கிறிஸ்துவனாக வாழ்ந்திருக்கிறார். மிக தேர்ந்த நடிப்பு அவருடையது. படத்தில் சில காட்சிகளில் பார்வையாளர்களுக்கு கண்ணீர் பொங்கும் என்றால் அதற்கு காரணம் சுப்பிரமணிய சிவாவின் நடிப்புதான். இனிய சில காட்சிகள் என்றாலும் நல்ல நடிப்பைக் காண்பித்திருக்கிறார். வடமாநில காவல் உயரதிகாரியாக நடித்தவர் மிரட்டி இருக்கிறார். அதேபோல் கவிதா பாரதி கேரக்டரும் அருமை.

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை பராவாயில்லை. சின்ன பட்ஜெட் என்ற தாக்கம் எங்கும் தெரியாத வகையில் கேமராமேன் ஷாட்களை அமைத்துள்ளார்.

முன் பாதியில் படம் சற்று மெதுவாக மூவ் ஆவது சின்ன மைனஸ். பின் பாதியில் படம் சரசரவென பறக்கிறது. முக்கியமாக காவல் துறையில் நடக்கும் தீண்டாமையை கண் முன்னே கொண்டு வந்த வகையில் இந்த ‘ரைட்டர்’ ஈர்க்கிறார்.

RATING : 4 / 5

The post ரைட்டர் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் ‘ரைட்டர்’ படம்..! https://touringtalkies.co/writer-movie-release-news/ Fri, 17 Dec 2021 06:24:50 +0000 https://touringtalkies.co/?p=19878 ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தனது ‘நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய இயக்குநர் பா.இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குநரான ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரைட்டர்’ படத்தினை தயாரித்திருக்கிறது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம். இப்படத்திற்கு ‘96’ பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த […]

The post தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் ‘ரைட்டர்’ படம்..! appeared first on Touring Talkies.

]]>
‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தனது ‘நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய இயக்குநர் பா.இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார்.

தற்போது அறிமுக இயக்குநரான ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரைட்டர்’ படத்தினை தயாரித்திருக்கிறது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்.

இப்படத்திற்கு ‘96’ பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது.

சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல் துறையில் எழுத்தராக(ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். 

காவல் நிலையத்தில் பணியாற்றும் எழுத்தர்களின் வலியை அழுத்தமாக இயக்குநர் பதிவு செய்திருப்பதை படத்தின் ட்ரெய்லர் மூலம் காண முடிந்தது.

போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’… ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்து கிடக்கும் மனித உரிமை’ உள்ளிட்ட பல வசனங்கள் தற்கால வாழ்வியலில் நடக்கும் ஒரு வலியை வெளிக்கொண்டுவரும் படமாக இந்த ரைட்டர்’ இருக்கும் என்று தோன்றுகிறது.

பலரின் எதிர்பார்ப்பையும் நாளுக்கு நாள் எகிற வைத்துக் கொண்டிருக்கிறது இந்த ‘ரைட்டர்’ திரைப்படம். ரைட்டரின் தாக்கம் தமிழ் சினிமாவில் பெரும் வலியை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கிறிஸ்துமஸ் வெளியீடாக இம்மாதம் 24-ம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

The post தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் ‘ரைட்டர்’ படம்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம்..! https://touringtalkies.co/director-pa-ranjith-produced-writer-movie/ Tue, 13 Apr 2021 07:54:49 +0000 https://touringtalkies.co/?p=14333 இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது தன்னிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய 5 இயக்குநர்களை வைத்து 5 புதிய படங்களை தனது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.. இதில் ஒரு படத்தை இயக்குநர் சுரேஷ் மாரி என்பவர் இயக்கி வருகிறார். இதையடுத்து ஜோஸப் பிராங்ளின் என்பவர் இயக்கவிருக்கும் படத்தையும் தயாரிக்கிறார் பா.ரஞ்சித். இந்தப் படத்திற்கு ‘ரைட்டர்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இந்தப் படத்தில் படத்தின் நாயகனாக சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். […]

The post இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது தன்னிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய 5 இயக்குநர்களை வைத்து 5 புதிய படங்களை தனது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்..

இதில் ஒரு படத்தை இயக்குநர் சுரேஷ் மாரி என்பவர் இயக்கி வருகிறார். இதையடுத்து ஜோஸப் பிராங்ளின் என்பவர் இயக்கவிருக்கும் படத்தையும் தயாரிக்கிறார் பா.ரஞ்சித்.

இந்தப் படத்திற்கு ‘ரைட்டர்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இந்தப் படத்தில் படத்தின் நாயகனாக சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பிரதீப் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். மணி படத் தொகுப்பு செய்கிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது.

The post இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>