Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Veera Dheera Sooran – Touring Talkies https://touringtalkies.co Wed, 05 Jun 2024 12:33:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Veera Dheera Sooran – Touring Talkies https://touringtalkies.co 32 32 வீர தீர சூரன் படத்தின் அப்டேட்… இப்போது எங்கு ஷூட்டிங் நடக்கிறது தெரியுமா? https://touringtalkies.co/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa/ Wed, 05 Jun 2024 12:33:42 +0000 https://touringtalkies.co/?p=45187 சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62வது படமாக ‘வீர தீர சூரன்’ 2ம் பாகத்தில் நடிக்கிறார். இதில் எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷரா விஜயன், சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிபு தமின்ஸ் தயாரிக்க, இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் துவங்கி, ஒரு கட்டம் முடிந்துள்ளது. திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. இதுவரை 30 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது […]

The post வீர தீர சூரன் படத்தின் அப்டேட்… இப்போது எங்கு ஷூட்டிங் நடக்கிறது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62வது படமாக ‘வீர தீர சூரன்’ 2ம் பாகத்தில் நடிக்கிறார். இதில் எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷரா விஜயன், சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிபு தமின்ஸ் தயாரிக்க, இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் துவங்கி, ஒரு கட்டம் முடிந்துள்ளது. திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது.

இதுவரை 30 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என கூறப்படுகிறது. இத்திரைப்படம் ஆக்ஷன் மட்டுமல்லாது பல உணர்ச்சி மிகுந்த காட்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post வீர தீர சூரன் படத்தின் அப்டேட்… இப்போது எங்கு ஷூட்டிங் நடக்கிறது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
எனக்கு விக்ரம் சார் முழு சுதந்திரம் கொடுத்திருக்காரு… வீர தீர சூரன் பட இயக்குனர் பெருமிதம்! https://touringtalkies.co/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81/ Tue, 04 Jun 2024 12:29:26 +0000 https://touringtalkies.co/?p=45006 நடிகர் விக்ரம் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இப்படம் தற்போது வரை தள்ளிப்போய் கொண்டே‌ இருக்கிறது.விக்ரம் நடித்த மற்றொரு படம், துருவ நட்சத்திரம், நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, தற்போது அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் விக்ரம் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.படத்தின் இயக்குனர் சமீபத்திய பேட்டியில் பேசியபோது படத்தின் […]

The post எனக்கு விக்ரம் சார் முழு சுதந்திரம் கொடுத்திருக்காரு… வீர தீர சூரன் பட இயக்குனர் பெருமிதம்! appeared first on Touring Talkies.

]]>
LISTEN TO PLAY AUDIO NEWS 👆

நடிகர் விக்ரம் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இப்படம் தற்போது வரை தள்ளிப்போய் கொண்டே‌ இருக்கிறது.விக்ரம் நடித்த மற்றொரு படம், துருவ நட்சத்திரம், நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, தற்போது அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் விக்ரம் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்தப் படத்தில் அவருடன் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.படத்தின் இயக்குனர் சமீபத்திய பேட்டியில் பேசியபோது படத்தின் 30% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிவித்தார். படப்பிடிப்பு தென்காசி உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. படத்தை ஆக்ஷன் திரில்லராக உருவாக்கி வருவதாகவும், சித்தா படத்தின் போல இல்லை, மாறுபட்ட கதைக்களத்துடன் படத்தை இயக்கி வருவதாகவும் அருண்குமார் கூறினார்.

விக்ரமிடம் தொடர்ந்து பல விஷயங்களை கற்றுக்கொள்வதாகவும், அவரது எளிமையான குணம் மிகவும் கவர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விக்ரம் முழு நம்பிக்கையுடன் இப்படத்தில் நடித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.ஆக்ஷனுடன் எமோஷனும் மிகுந்து காணப்படும் இப்படம் ரசிகர்களுக்கு சிறப்பான சினிமா அனுபவத்தை வழங்க முயற்சிக்கின்றது. படத்தை இயக்குவதற்காக விக்ரம் முழு சுதந்திரத்தை அளித்து வருவதாகவும், எனது ஸ்டைலில் படத்தை இயக்க உறுதுணையாக இருந்து வருவதாகவும் அருண்குமார் கூறினார்.

The post எனக்கு விக்ரம் சார் முழு சுதந்திரம் கொடுத்திருக்காரு… வீர தீர சூரன் பட இயக்குனர் பெருமிதம்! appeared first on Touring Talkies.

]]>
தங்கலான் படத்துக்கு என்னதான் ஆச்சு?‌‌ புலம்பும் ரசிகர்கள்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/ Tue, 28 May 2024 06:12:24 +0000 https://touringtalkies.co/?p=44003 ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில வேலைகள் காரணமாக அந்தப் படத்தின் வெளியீடு தாமதமாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், தேர்தல் சூழ்நிலை காரணமாக தங்கலான் திரைப்படம் ஜூன் மாதத்திற்கு தள்ளப்பட்டதாக கூறப்பட்டது.ஜூன் மாதமும் நெருங்கும் வரும் […]

The post தங்கலான் படத்துக்கு என்னதான் ஆச்சு?‌‌ புலம்பும் ரசிகர்கள்… appeared first on Touring Talkies.

]]>
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சில வேலைகள் காரணமாக அந்தப் படத்தின் வெளியீடு தாமதமாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், தேர்தல் சூழ்நிலை காரணமாக தங்கலான் திரைப்படம் ஜூன் மாதத்திற்கு தள்ளப்பட்டதாக கூறப்பட்டது.ஜூன் மாதமும் நெருங்கும் வரும் நிலையில், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இதுவரை எந்தவொரு வெளியீட்டு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தங்கலான் மட்டுமின்றி கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஜூன் மாதத்தில் தனுஷ் நடித்துள்ள ராயன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சியான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியாகுமா என சந்தேகிக்கப்படுகிறது. அப்படி வெறியானலும் ஜூன் இறுதியில் வெளியாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன, காரணம் பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படம் ஜூன் 27-ஆம் தேதி வெளியாகிறது.

ஜூலை மாதத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ளதால், தங்கலான் படக்குழு அந்த மாதத்திலும்‌ படத்தை வெளியிட‌ தயங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பெரிய நடிகர்களுடன் போட்டி போட வேண்டிய சூழ்நிலையில் தங்கலான் படம் அப்படங்களுக்கு சரியான போட்டியாக அமையுமா என்ற தயக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

செப்டம்பர் மாதம் கோட், அக்டோபர் மாதம் வேட்டையன் என அடுத்தடுத்த படங்கள் வரிசையாக காத்திருப்பதால், ஆகஸ்ட் மாதம் மட்டும் தான் படத்தை வெளியிட வாய்ப்பு உள்ளது. எனவே, தங்கலான் படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியானால் எளிதாக இருக்கும், இல்லையெனில் அடுத்த ஆண்டுக்கு தள்ளப்படும் என்று கூறப்படுகிறது. அதற்குள் வீர தீர சூரன் படமே வெளியாகிவிடும் போல என கூறப்படுகிறது.

The post தங்கலான் படத்துக்கு என்னதான் ஆச்சு?‌‌ புலம்பும் ரசிகர்கள்… appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் ஹிட் இயக்குனருக்கு வலைவீசும் சியான் விக்ரம்? https://touringtalkies.co/%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d/ Thu, 16 May 2024 12:52:45 +0000 https://touringtalkies.co/?p=43121 விக்ரம், அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் பாகம் இரண்டு படத்தில் நடித்து வருகிறார்.இதற்கான ஷூட்டிங் வெகுவாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப் படங்களை காணாத விக்ரம், இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.அதேபோல் தங்கலான் படமும் ரிலீஸ் ஆக உள்ளது. வீர தீர சூரன் பாகம் இரண்டு டைட்டில் டீசர் வெளியாகி, மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.விக்ரம், அந்த மாஸ் டைரக்டரை அடிக்கடி சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. […]

The post சூப்பர் ஹிட் இயக்குனருக்கு வலைவீசும் சியான் விக்ரம்? appeared first on Touring Talkies.

]]>
விக்ரம், அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் பாகம் இரண்டு படத்தில் நடித்து வருகிறார்.இதற்கான ஷூட்டிங் வெகுவாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப் படங்களை காணாத விக்ரம், இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.அதேபோல் தங்கலான் படமும் ரிலீஸ் ஆக உள்ளது. வீர தீர சூரன் பாகம் இரண்டு டைட்டில் டீசர் வெளியாகி, மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.விக்ரம், அந்த மாஸ் டைரக்டரை அடிக்கடி சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனால், இவர்கள் சந்திப்பு அவரது மகன் துருவ்விக்ரம் படத்திற்காகவே என்று அனைவரும் நம்பும் நிலையில், விக்ரம் புதிய படத்தில் கமிட் ஆக போவதாக கூறப்படுகிறது.இதற்கிடையில் விக்ரமின் மகன் துருவ்விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் கபடியை மையமாக கொண்ட படக்கதையில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் சூர்யா, கங்குவா படத்தைத் தொடர்ந்து புறநானூறு படத்தில் நடிக்க இருந்தார்.சுதா கொங்காரா மற்றும் சூர்யா இருவரும் புறநானூறு படத்திற்கு கமிட் செய்யப்பட்டிருந்தனர். ஆனால் பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின், இந்த படம் தற்போதைக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்போது சுதா கொங்காராவிற்கு விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் அடுத்த புராஜெக்ட்டில் இணைவதற்கு தயாராக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.சூர்யா நடிக்கவிருந்த புறநானூறு படத்தில் விக்ரம் நடிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.இருப்பினும் இவர்கள் கூட்டணி குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சூப்பர் ஹிட் இயக்குனருக்கு வலைவீசும் சியான் விக்ரம்? appeared first on Touring Talkies.

]]>
தென்காசியில் கலக்கும் வீர தீர சூரன்! தீவிர படப்பிடிப்பில் சீயான் விக்ரம்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80/ Tue, 14 May 2024 10:47:11 +0000 https://touringtalkies.co/?p=42885 நடிகர் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த ஆண்டு வெளிவந்து அவருக்கு சிறந்த விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இதைத் தொடர்ந்து, பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிய தங்கலான் படத்தில் விக்ரம் தனது நடிப்பை இறுதிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படமும் ரிலீஸுக்குத் தயாராகி, ஆனால் இன்னும் வெளிவராமல் உள்ளது. இந்தப் படங்களின் ரிலீஸ் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில், அருண்குமார் இயக்கத்தில் […]

The post தென்காசியில் கலக்கும் வீர தீர சூரன்! தீவிர படப்பிடிப்பில் சீயான் விக்ரம்… appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த ஆண்டு வெளிவந்து அவருக்கு சிறந்த விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இதைத் தொடர்ந்து, பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிய தங்கலான் படத்தில் விக்ரம் தனது நடிப்பை இறுதிப்படுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படமும் ரிலீஸுக்குத் தயாராகி, ஆனால் இன்னும் வெளிவராமல் உள்ளது. இந்தப் படங்களின் ரிலீஸ் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழலில், அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் “வீர தீர சூரன்” படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.நேற்று தென்காசியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை ஒட்டி, படக்குழுவினர் விக்ரம் மற்றும் துஷாரா இணைந்து இருக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதில் விக்ரமும் துஷாரா விஜயனும் இருசக்கர வாகனத்தில் பயணிக்கின்றனர்.இந்தப் படத்தில் விக்ரம் மூன்று வேடங்களில் நடிப்பார் என்றும், இப்படத்தில் பெரிய மாஸ் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகும் எனக் கூறப்படுகிறது. விக்ரம் இங்கே ஒரு சாதாரண மனிதனாக தோன்றுகிறார், ஆனால் அவரது நடவடிக்கைகள் அதற்கு மாறாக இருக்கும் எனத் டைட்டில் டீசர் காட்டுகிறது.டீசரில், விக்ரம் ஒரு சாதாரண மளிகைக்கடை நடத்தி, தன்னுடைய எதிரிகளை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவதை டீசரில் கண்டோம் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தென்காசியில் கலக்கும் வீர தீர சூரன்! தீவிர படப்பிடிப்பில் சீயான் விக்ரம்… appeared first on Touring Talkies.

]]>
வீர தீர சூரன் வெளியிட்ட வீடியோ!‌ கிராமத்து கெட்டப்பில் கலக்கும் விக்ரம்… https://touringtalkies.co/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5/ Sat, 27 Apr 2024 05:56:24 +0000 https://touringtalkies.co/?p=41526 வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.இதுகுறித்து விக்ரம் மட்டுமின்றி படக்குழுவினர் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.சித்தா பட இயக்குனர் அருண்குமாருடன் இயக்கும் இப்படத்தில் விக்ரம், எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.பிரமோக்களில் கிராமத்து கெட்டப்பில் உள்ள விக்ரம் இந்த சூட்டிங் ஸ்பாட் வீடியோவிலும் கிராமத்து கெட்டப்பில் கெத்தாக இருக்கிறார். சியான் 62 படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியான சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்ரம் […]

The post வீர தீர சூரன் வெளியிட்ட வீடியோ!‌ கிராமத்து கெட்டப்பில் கலக்கும் விக்ரம்… appeared first on Touring Talkies.

]]>
வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.இதுகுறித்து விக்ரம் மட்டுமின்றி படக்குழுவினர் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.சித்தா பட இயக்குனர் அருண்குமாருடன் இயக்கும் இப்படத்தில் விக்ரம், எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.பிரமோக்களில் கிராமத்து கெட்டப்பில் உள்ள விக்ரம் இந்த சூட்டிங் ஸ்பாட் வீடியோவிலும் கிராமத்து கெட்டப்பில் கெத்தாக இருக்கிறார்.

சியான் 62 படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியான சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்ரம் பிறந்த நாளான்று படத்தின் டைட்டில் பிரமோவுடன் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த வீடியோ பதிவை ரெடி ஜூட் என்றும் குறிப்பிட்டுள்ள விக்ரம். கார்களில் இருந்து வந்து இறங்கும் விக்ரம் மற்றும் துஷாரா கேரவனுக்குள் சென்று கிராமத்து கெட்டப்புகளில் மாற்றமாகி வந்து நடிக்கின்றனர.அதோபோல் ஆக்ஷன் என்று இயக்குனர் சொல்வதும்‌ அன்புடன் சம்பவம் ஆரம்பம் என்றும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் துவங்கியுள்ள வீர தீர சூரன் சூட்டிங் மொத்தமாக எடுத்து முடித்து இந்த ஆண்டிலேயே படம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். முன்னதாக விக்ரமின் தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம் படங்கள் தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் வெளியாக தயாராக உள்ள நிலையில் இப்படம் நிச்சயமாக விக்ரம்க்கு மாஸ் வரவேற்பை கொடுக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

The post வீர தீர சூரன் வெளியிட்ட வீடியோ!‌ கிராமத்து கெட்டப்பில் கலக்கும் விக்ரம்… appeared first on Touring Talkies.

]]>
வீர தீர சூரனுக்கு வில்லன் ரெடி… டாப் மலையாள நடிகரை உள்ளே இழுத்த சித்தா இயக்குனர்… https://touringtalkies.co/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a9/ Wed, 24 Apr 2024 08:35:53 +0000 https://touringtalkies.co/?p=41255 நடிகர் சியான் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெங்சாரமுடு உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள படம் த் வீர தீர சூரன். விக்ரமின் பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த ஆண்டில் வெளியாகியதை தொடர்ந்து தங்கலான் படம் பா ரஞ்சித் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஆனால் கவுதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் படம் மட்டும் ரிலீசுக்கு தள்ளாடி வருகிறது. இந்த இரு படங்களிலும் இருவேறு வெர்ஷன்களில் விக்ரம் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என […]

The post வீர தீர சூரனுக்கு வில்லன் ரெடி… டாப் மலையாள நடிகரை உள்ளே இழுத்த சித்தா இயக்குனர்… appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சியான் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெங்சாரமுடு உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள படம் த் வீர தீர சூரன். விக்ரமின் பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த ஆண்டில் வெளியாகியதை தொடர்ந்து தங்கலான் படம் பா ரஞ்சித் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

ஆனால் கவுதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் படம் மட்டும் ரிலீசுக்கு தள்ளாடி வருகிறது. இந்த இரு படங்களிலும் இருவேறு வெர்ஷன்களில் விக்ரம் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆசையுடன் காத்திருக்கின்றனர்.

விக்ரமின் 62வது படமாக வீர தீர சூரன் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. சித்தா படத்தின்மூலம் கவனம் பெற்ற அருண்குமார் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் ஹெச் ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கவுள்ளார் .இந்தப் படத்தின் அறிமுக டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.

தற்போது சில தினங்களுக்கு முன்பு விக்ரமின் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டிலும் டீசருடன் வெளியாகி படத்தின் பெயர் வீர தீர சூரன் என்று அறிவிக்கப்பட்டதும் ரசிகர்கள் கெத்தாக கொண்டாடினர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் 350க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்த பிரபல நடிகர் சுராஜ் இணைந்துள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இவரது கதாப்பாத்திரத்திம் மிகவும் ஆழமானதாக அமையும் என்று கூறப்படுகிறது.

The post வீர தீர சூரனுக்கு வில்லன் ரெடி… டாப் மலையாள நடிகரை உள்ளே இழுத்த சித்தா இயக்குனர்… appeared first on Touring Talkies.

]]>