Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
varalaaru mukkiyam movie – Touring Talkies https://touringtalkies.co Wed, 07 Dec 2022 19:22:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png varalaaru mukkiyam movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘வரலாறு முக்கியம்’ படத்தின் ஸ்டில்ஸ் https://touringtalkies.co/varalaaru-mukkiyam-movie-stills/ Wed, 07 Dec 2022 19:22:09 +0000 https://touringtalkies.co/?p=28288 The post ‘வரலாறு முக்கியம்’ படத்தின் ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.

]]>

The post ‘வரலாறு முக்கியம்’ படத்தின் ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.

]]>
எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கும் ‘வரலாறு முக்கியம்’ படம் https://touringtalkies.co/varalaaru-mukkiyam-movie-release-news/ Wed, 07 Dec 2022 18:08:44 +0000 https://touringtalkies.co/?p=28263 சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில், இயக்குநர் சந்தோஷ் ராஜனின் இயக்கத்தில், நடிகர் ஜீவா நாயகனாக நடித்திருக்கும் ‘வரலாறு முக்கியம்’ படத்திற்கு தமிழகத்தில் 300 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ‘வரலாறு முக்கியம்’ திரைப்படம்தான், தற்போது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட்டிங்கில் பேசுபொருளாக உள்ளது. இயக்குநர் சந்தோஷ் ராஜனின் வெற்றி அவரின் அறிமுகத்திலேயே நடிகர் ஜீவா மற்றும் சூப்பர் குட் ஃபிலிம் தயாரிப்பு நிறுவனத்தோடு ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் தொடங்கியது. அந்த வகையில் குடும்பங்களைக் கவர்ந்து திரையரங்குகளில் […]

The post எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கும் ‘வரலாறு முக்கியம்’ படம் appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில், இயக்குநர் சந்தோஷ் ராஜனின் இயக்கத்தில், நடிகர் ஜீவா நாயகனாக நடித்திருக்கும் வரலாறு முக்கியம்’ படத்திற்கு தமிழகத்தில் 300 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ‘வரலாறு முக்கியம்’ திரைப்படம்தான், தற்போது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட்டிங்கில் பேசுபொருளாக உள்ளது.

இயக்குநர் சந்தோஷ் ராஜனின் வெற்றி அவரின் அறிமுகத்திலேயே நடிகர் ஜீவா மற்றும் சூப்பர் குட் ஃபிலிம் தயாரிப்பு நிறுவனத்தோடு ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் தொடங்கியது. அந்த வகையில் குடும்பங்களைக் கவர்ந்து திரையரங்குகளில் பார்த்து கொண்டாடும்படியான படமாக ‘வரலாறு முக்கியம்’ உருவாகி இருக்கிறது.

திறமையும், அழகும் ஒன்றிணைந்த நடிகைகளான காஷ்மீரா பர்தேஷி மற்றும் ப்ரக்யா நாக்ரா ஆகியோர் படத்தின் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விடிவி கணேஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் தங்கள் நகைச்சுவை மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைப்பார்கள். இவர்களுடன் கே.எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் தங்களது இயல்பான நடிப்பின் மூலம் படத்திற்கு வலு சேர்த்து உள்ளனர்.

இசை – சந்தோஷ் நாராயணன், எழுத்து, இயக்கம் – சந்தோஷ் ராஜன், ஒளிப்பதிவு – சக்தி சரவணன், படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த் N.B., கலை இயக்கம் – A.R.மோகன், ஆடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், சண்டைப் பயிற்சி இயக்கம் – சக்தி சரவணன்.

இந்த ‘வரலாறு முக்கியம்’ திரைப்படம் அனைத்து வகையான ரசிகர்களைக் கவரும் வகையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு தமிழகத்தில் 300 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  

தற்போது வெளியாகியுள்ள படத்தின் டிரெயிலர் பார்வையாளர்களை ஈர்த்து, படம் குறித்தான எதிர்ப்பார்பையும் அதிகரித்துள்ளது. மேலும் 100% எண்டர்டெயினராக இருக்கும் என்ற உத்திரவாதத்தையும் டிரெயிலர் கொடுத்துள்ளது.

கமர்ஷியல் மற்றும் பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாபாத்திரங்களை நடிகர் ஜீவா தேர்ந்தெடுத்து நடிக்கும்போது அந்தப் படங்கள் அவருக்கு வெற்றியையே தந்துள்ளன. இந்தப் படமும் அவருக்கான வெற்றியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கும் ‘வரலாறு முக்கியம்’ படம் appeared first on Touring Talkies.

]]>
‘வரலாறு முக்கியம்’ படம் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகிறது https://touringtalkies.co/varalaaru-mukkiyam-movie-will-release-on-december-9/ Mon, 05 Dec 2022 04:24:03 +0000 https://touringtalkies.co/?p=28034 சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “. ரொமாண்டிக் காமெடி ஜானரில் கம்ர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிகுமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை உள்ளிட்ட […]

The post ‘வரலாறு முக்கியம்’ படம் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “.

ரொமாண்டிக் காமெடி ஜானரில் கம்ர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிகுமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் படக்குழுவினர் கலந்துகொள்ள நேற்று இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

நடிகர் டி.எஸ்.கே. பேசும்போது,சூப்பர் குட் பிலிம்ஸில் நான் நடித்தது எனக்கு பெருமையான விஷயம். இயக்குநர் போன்ற ஒரு கூலான மனிதரை பார்க்க முடியாது, மொத்த குழுவையும், நடிகர்களையும் சரியாக வழிநடத்தி படத்தை உருவாக்கியுள்ளார். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்.” என்றார்.

நடிகர் ஷாரா பேசியதாவது :
”இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஜீவா சார், சூப்பர் குட் பிலிம்ஸ், இயக்குனர் சந்தோஷ் மூவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் சக்தி, காமெடி சீனை கொரியோகிராப் செய்வார், அது பலரிடத்தில் இருப்பது இல்லை. SMS போன்று இதுவும் ஒரு ஜாலியானா படமாக இருக்கும். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்.

நடிகை பிரக்யா நாக்ரா பேசியதாவது :
”இது என்னுடைய முதல் படம். அதற்கு இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றிகள். நான் முதன்முதலில் பார்த்த தமிழ் படம் ‘சிவா மனசுல சக்தி’ படம்தான். ஜீவா போன்ற சிறந்த நடிகருடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. இது எனது கனவு நிஜமான தருணம். முதல் படத்திலயே மிகப் பெரிய நட்சத்திரங்களுடன் நடித்தது எனக்கு மிகப் பெரிய விஷயம். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு திரைப்படம். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. நன்றி.

இயக்குநர் சந்தோஷ் ராஜன் பேசியதாவது :
இந்தப் படத்தில் கலகலப்பான ஜீவாவை மீண்டும் பார்க்கலாம். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் படம் செய்வது எனது கனவு அது நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரக்யா குஜராத்தி பெண். ஆனால் அவர் ஒரு மலையாளி என அனைவரையும் நம்ப வைத்துவிட்டார். அந்தளவு கதாப்பாத்திரத்தில் ஒன்றி நடித்தார். காஷ்மீரா அற்புதமாக நடித்துள்ளார். இந்தப் படம் மிக ஜாலியான படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.

நடிகர் ஜீவா பேசியதாவது :
“SMS படத்திற்கு பிறகு அது போன்று ஒரு படம் வேண்டும் என்று அனைவரும் என்னை கேட்டார்கள். அப்படி ஒரு படமாகத்தான் இந்த ‘வரலாறு முக்கியம்’ படம் வந்துள்ளது. இந்தப் படத்தின் இயக்குநரான சந்தோஷ்ராஜன் மிகவும் அதிகமான காமெடி உணர்வு உள்ளவர். அது படத்திலும் பிரதிபலித்துள்ளது. கோவிட் காலகட்டத்தில்தான் இந்த படத்தை உருவாக்கினோம். மக்கள் சந்தோஷமாக படம் பார்க்க வேண்டுமென இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

ஹீரோயின் பிரக்யா மற்றும் காஷ்மீரா இருவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியை தருகிறது. காஷ்மீரா இதில் மலையாளம் கலந்த தமிழ் பேசி அசத்தியுள்ளார். பிரக்யாவை முன்னதாகவே சோஷியல் மீடியா மூலம் தெரியும். அவருடன் பகிர்ந்துகொண்டதும், படப்பிடிப்பு தளத்திலும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. 

நல்ல நகைச்சுவை படங்களை கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக ‘லவ் டுடே’ திரைப்படம் சிறந்த உதாரணம். அதுபோல இந்த திரைப்படமும் நிறைய நகைச்சுவையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ‘சிவா மனசுல சக்தி’ படம் போன்று இது அமைந்திருக்கும். அனைவரது கூட்டு முயற்சியிலும் இந்த படம் உருவாகி உள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இத்திரைப்படத்தில், ஜீவா மற்றும் காஷ்மீரா பரதேசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பிரக்யா நாக்ரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், ஷாரா சரண்யா, டி எஸ் கே, சித்திக் மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சக்தி சரவணன் (ஒளிப்பதிவு), ஸ்ரீகாந்த் N.B. (எடிட்டிங்), மோகன் (கலை), சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), பிருந்தா (நடனம்), மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு ) பணிகளை செய்துள்ளனர்.

The post ‘வரலாறு முக்கியம்’ படம் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
ஜீவா நடிப்பில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ படம் https://touringtalkies.co/varalaaru-mukkiyam-movie-preview-news/ Tue, 04 Jan 2022 08:07:43 +0000 https://touringtalkies.co/?p=20091 தென்னிந்தியாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 91-வது படம் ‘வரலாறு முக்கியம்’. இப்படம் முழுக்க, முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ளார். நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப் புகழ்) கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் பிரக்யா நாகரா, V.T.V.கணேஷ், K.S.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, T.S.K., E.ராமதாஸ், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், மொட்டை ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ […]

The post ஜீவா நடிப்பில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ படம் appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்தியாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 91-வது படம் வரலாறு முக்கியம்’. இப்படம் முழுக்க, முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ளார். நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப் புகழ்) கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் பிரக்யா நாகரா, V.T.V.கணேஷ், K.S.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, T.S.K., E.ராமதாஸ், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், மொட்டை ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த் N.B., நடன இயக்கம் – ராஜு சுந்தரம், பிருந்தா, பாடல்கள் – மதன் கார்க்கி, சந்தோஷ் ராஜன், சண்டை இயக்கம் – R.சக்தி சரவணன், கலை இயக்கம் – மோகன், ஆடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், ஒப்பனை – எஸ்.ஏ.சண்முகம், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா.

அறிமுக இயக்குநரான சந்தோஷ் ராஜன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் சசியிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகர் ஜீவாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது.

ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி’ படத்தினைப் போன்று இப்படத்தினை எதிர்பார்க்கலாம் என்கிறது படக் குழு.

The post ஜீவா நடிப்பில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ படம் appeared first on Touring Talkies.

]]>