Friday, April 12, 2024

ஜீவா நடிப்பில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்தியாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 91-வது படம் வரலாறு முக்கியம்’. இப்படம் முழுக்க, முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ளார். நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப் புகழ்) கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் பிரக்யா நாகரா, V.T.V.கணேஷ், K.S.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, T.S.K., E.ராமதாஸ், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், மொட்டை ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த் N.B., நடன இயக்கம் – ராஜு சுந்தரம், பிருந்தா, பாடல்கள் – மதன் கார்க்கி, சந்தோஷ் ராஜன், சண்டை இயக்கம் – R.சக்தி சரவணன், கலை இயக்கம் – மோகன், ஆடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், ஒப்பனை – எஸ்.ஏ.சண்முகம், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா.

அறிமுக இயக்குநரான சந்தோஷ் ராஜன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் சசியிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகர் ஜீவாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது.

ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி’ படத்தினைப் போன்று இப்படத்தினை எதிர்பார்க்கலாம் என்கிறது படக் குழு.

- Advertisement -

Read more

Local News