Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
thalapathy 67 – Touring Talkies https://touringtalkies.co Sat, 04 Feb 2023 14:04:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png thalapathy 67 – Touring Talkies https://touringtalkies.co 32 32 LEO: தளபதி 67 டைட்டில் வெளியானது https://touringtalkies.co/actor-vijay-s-thalapathy-67-titled-leo/ Fri, 03 Feb 2023 12:01:00 +0000 https://touringtalkies.co/?p=30260 விஜய்யின் 67வது படம் குறித்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு அப்டேட்களை பட நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பது அதிகாரபூர்வமாக முதல் அப்டேட் மூலம் உறுதியானது. அதைத் தொடர்ந்து படக்குழுவினர் காஷ்மீருக்கு முதல்கட்ட படப்பிடிப்பிற்காக புறப்பட்டுச் சென்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் நடிப்பதாக படக்குழு அறிவித்தது. பின்பு விஜய்யின் 67வது பட பூஜையின் புகைப்படங்களை […]

The post LEO: தளபதி 67 டைட்டில் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
விஜய்யின் 67வது படம் குறித்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு அப்டேட்களை பட நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பது அதிகாரபூர்வமாக முதல் அப்டேட் மூலம் உறுதியானது.

அதைத் தொடர்ந்து படக்குழுவினர் காஷ்மீருக்கு முதல்கட்ட படப்பிடிப்பிற்காக புறப்பட்டுச் சென்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.

பின்பு விஜய்யின் 67வது பட பூஜையின் புகைப்படங்களை வெளியிட்டு, விரைவில் படத்தின் பெயரை ப்ரொமோவாக வெளியிட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

அறிவித்தபடி, இந்தப் படத்தின் டைட்டில் ப்ரொமோ நேற்று வெளியிட்டது படக்குழு. நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.

The post LEO: தளபதி 67 டைட்டில் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
தளபதி 67 புது அப்டேட் https://touringtalkies.co/thalapathy-67-title-update/ Fri, 03 Feb 2023 01:58:22 +0000 https://touringtalkies.co/?p=30175 விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலிலும் ரூ. 250 கோடியை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்தது. இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், நேற்று படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையில் உருவாகும் இப்படம் ‘லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ வகையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்துகொண்டே […]

The post தளபதி 67 புது அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலிலும் ரூ. 250 கோடியை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்தது.

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், நேற்று படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையில் உருவாகும் இப்படம் ‘லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ வகையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்துகொண்டே வருகிறது.

இந்த வாரம் தொடர்ந்து இப்படத்தின் அப்டேட் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்த நிலையில், தற்போது படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர் மிஷ்கின், மன்சூர் அலி கான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கவுதம் மேனன், அர்ஜுன் ஆகியோர் இணைந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது. மேலும் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை (03.02.2023) மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளது. இது விக்ரம் பட பாணியில் டைட்டில் டீசராக இருக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது

The post தளபதி 67 புது அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
தளபதி 67 அப்டேட்: ரசிகர்கள் அப்செட்! https://touringtalkies.co/thalapathy-67-official-announcement-fans-upset/ Tue, 31 Jan 2023 07:38:01 +0000 https://touringtalkies.co/?p=30091 விஜய் நடிக்கும் புதிய படமான தளபதி 67 படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்கி வருகிறார். இதில், விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் விஜய்க்கு மொத்தம் 6 வில்லன்களை வைத்து லோகேஷ் கனகராஜ் கதையை உருவாக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, சண்டை பயிற்சியாளர் அன்பறிவு, கலை […]

The post தளபதி 67 அப்டேட்: ரசிகர்கள் அப்செட்! appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடிக்கும் புதிய படமான தளபதி 67 படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்கி வருகிறார். இதில், விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் விஜய்க்கு மொத்தம் 6 வில்லன்களை வைத்து லோகேஷ் கனகராஜ் கதையை உருவாக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

தற்போது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, சண்டை பயிற்சியாளர் அன்பறிவு, கலை இயக்குனர் சதீஷ்குமார், நடன இயக்குனரக தினேஷ் என டெக்னீஷியன்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

ஆனால் விஜய் ரசிகர்களை இது வருத்தப்பட வைத்துள்ளது. ஏனென்றால், லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான, விக்ரம் பட டைட்டில் டீசரை போலவே இந்த படத்துக்கும் இருக்கும் அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கதாநாயகி அப்டேட் இருக்கும் என  எதிர்பார்த்தனர்.  அவை இல்லாததால். ரசிகர்கள் பலரும் தங்கள் வருத்தத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

The post தளபதி 67 அப்டேட்: ரசிகர்கள் அப்செட்! appeared first on Touring Talkies.

]]>
பிப்ரவரி 1 விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான நாள்…! ஏன் தெரியுமா? https://touringtalkies.co/february-1-important-day-vijay-fans-thalapathy-67-lokesh-kanagaraj/ Tue, 24 Jan 2023 16:49:00 +0000 https://touringtalkies.co/?p=29890 விஜய் நடித்த வாரிசு படம், பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகி வெற்றி பெற்றது.  தற்போது அவர்,  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். ‘தளபதி 67’ என்ற அடையாளத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் அப்டேட்களை விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம்,  தளபதி […]

The post பிப்ரவரி 1 விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான நாள்…! ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடித்த வாரிசு படம், பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகி வெற்றி பெற்றது.  தற்போது அவர்,  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். ‘தளபதி 67’ என்ற அடையாளத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் அப்டேட்களை விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம்,  தளபதி 67 குறித்து அப்டேட் வழங்குமாறு அங்குள்ள மாணவர்கள் கேட்டனர். இதற்கு அவர், “தளபதி 67 குறித்து ஒரு முக்கிய குறிப்பு மட்டும் தருகிறேன், பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளை குறித்து வைத்து கொள்ளுங்கள்” என்றார்.

ஆகவே, அன்றைய தினம் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

The post பிப்ரவரி 1 விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான நாள்…! ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
‘வாரிசு’ லோகேஷ்: தளபதி 67 குறித்து அப்டேட் https://touringtalkies.co/lokesh-kanagaraj-about-vijay-anirudh-thalapathy-67-update/ Wed, 11 Jan 2023 03:10:00 +0000 https://touringtalkies.co/?p=29383 விஜய் நடித்து வெளியாகி உள்ள வாரிசு படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அவரது அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், வாரிசு படத்தைப் பார்த்தார். அவர், “படம் சிறப்பாக உள்ளது.. இதற்காகத்தான் காத்திருந்தேன்” என்று தெரிவித்தார். மேலும் தளபதி 67 படம் குறித்து அப்டேட்டும் கொடுத்துள்ளார். இப்படத்தில் விஜயுடன் திரிஷா நடிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த […]

The post ‘வாரிசு’ லோகேஷ்: தளபதி 67 குறித்து அப்டேட் appeared first on Touring Talkies.

]]>

விஜய் நடித்து வெளியாகி உள்ள வாரிசு படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

அவரது அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், வாரிசு படத்தைப் பார்த்தார். அவர், “படம் சிறப்பாக உள்ளது.. இதற்காகத்தான் காத்திருந்தேன்” என்று தெரிவித்தார்.

மேலும் தளபதி 67 படம் குறித்து அப்டேட்டும் கொடுத்துள்ளார்.

இப்படத்தில் விஜயுடன் திரிஷா நடிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் வாரிசு படம் பார்த்த லோகேஷ், “சென்னையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்ல இருக்கிறது படக்குழு” என்றார்.

 .

The post ‘வாரிசு’ லோகேஷ்: தளபதி 67 குறித்து அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
“விஜயின் எனர்ஜி”: தளபதி 67 பட அப்டேட்! https://touringtalkies.co/thalapathy-67-update-by-manobala-vijay-actor/ Tue, 03 Jan 2023 02:39:00 +0000 https://touringtalkies.co/?p=29126 வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள  ‘வாரிசு’ படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பது அனைவரும் அறிந்த செய்தி.    இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றதும் தெரியும். இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும், வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு  நேற்று முதல் தொடங்கியுள்ளதாக இயக்குநரும் நடிகருமான மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது […]

The post “விஜயின் எனர்ஜி”: தளபதி 67 பட அப்டேட்! appeared first on Touring Talkies.

]]>
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள  ‘வாரிசு’ படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பது அனைவரும் அறிந்த செய்தி.    இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றதும் தெரியும்.

இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும், வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு  நேற்று முதல் தொடங்கியுள்ளதாக இயக்குநரும் நடிகருமான மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தளபதி 67 படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. விஜய் மற்றும் லோகேஷை சந்தித்தேன். அதே எனர்ஜியுடனும் முழு முனைப்போடும் இருக்கிறார்கள். முதல் நாளே தூளாக இருந்தது” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

‘தளபதி 67’ படத்தைப் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழுவிடம் இருந்து வெளியாகாத நிலையில் மனோபாலா தற்போது படத்தைப் பற்றி கூறியிருப்பது ரசிகர்களுக்கு  ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.

The post “விஜயின் எனர்ஜி”: தளபதி 67 பட அப்டேட்! appeared first on Touring Talkies.

]]>