Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
TFPC Election 2020 – Touring Talkies https://touringtalkies.co Fri, 27 Nov 2020 09:01:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png TFPC Election 2020 – Touring Talkies https://touringtalkies.co 32 32 தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முறைகேடு : டி.ராஜேந்தர் புகார் https://touringtalkies.co/producers-union-election-fraud-t-rajender-complaint/ Fri, 27 Nov 2020 09:00:26 +0000 https://touringtalkies.co/?p=10427 நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போலியான ஆவணங்கள், அடையாள அட்டைகள் பயன்படுத்தி பலரும் வாக்களித்துள்ளதாக இயக்குநர் டி.ராஜேந்தர் புகார் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள பதிவுத் துறை அலுவலகத்திற்கு இன்று நேரில் வந்த டி.ராஜேந்தர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொறுப்பாளராக இருந்த பத்திரப் பதிவுத் துறையின் தனி அலுவலர் மஞ்சுளாவிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் “நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போடபட்ட வாக்குகளில் 800 வாக்குகள் […]

The post தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முறைகேடு : டி.ராஜேந்தர் புகார் appeared first on Touring Talkies.

]]>
நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போலியான ஆவணங்கள், அடையாள அட்டைகள் பயன்படுத்தி பலரும் வாக்களித்துள்ளதாக இயக்குநர் டி.ராஜேந்தர் புகார் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பதிவுத் துறை அலுவலகத்திற்கு இன்று நேரில் வந்த டி.ராஜேந்தர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொறுப்பாளராக இருந்த பத்திரப் பதிவுத் துறையின் தனி அலுவலர் மஞ்சுளாவிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் “நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போடபட்ட வாக்குகளில் 800 வாக்குகள் மட்டுமே சரியானது. சுமார் 250 கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளது.

யாரோ ஒரு சிலர் ஒட்டு மொத்தமாய் சந்தா கட்டாத உறுப்பினர்களுக்காக சந்தா கட்டி அவர்களுடைய அடையாள அட்டையை வாங்கிச் சென்றுள்ளனர். அவர்கள் மூலமாக தேர்தலின்போது கள்ள ஓட்டு போடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் இருக்கிறது..” என்று கூறியுள்ளார்.

இது குறித்து சில விளக்கங்களை கேட்டு பதிவுத் துறை அலுவலகத்தில் இயக்குநர் டி.ராஜேந்தர் விண்ணப்பித்துள்ளார்.

மழைவிட்டும் தூவானம்விடவில்லை’ என்பார்கள். அது திரைப்பட சங்கங்களின் தேர்தல்களுக்கு மட்டுமே பொருந்தும் போலிருக்கிறது.

The post தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முறைகேடு : டி.ராஜேந்தர் புகார் appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது..! https://touringtalkies.co/tfpc-election-2020-polling-closed/ Sun, 22 Nov 2020 12:32:38 +0000 https://touringtalkies.co/?p=10301 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்துள்ளது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அதன்படி சென்ற வருடமே தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி நடிகர் விஷாலின் தலைமையில் இருந்த சங்கத்தின் நிர்வாகக் குழுவை கலைத்த தமிழக அரசு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தன் கைவசம் எடுத்துக் கொண்டது. அதன் பின்பு கொரோனா தாக்கத்தின் காரணமாக பல […]

The post தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்துள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அதன்படி சென்ற வருடமே தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி நடிகர் விஷாலின் தலைமையில் இருந்த சங்கத்தின் நிர்வாகக் குழுவை கலைத்த தமிழக அரசு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தன் கைவசம் எடுத்துக் கொண்டது.

அதன் பின்பு கொரோனா தாக்கத்தின் காரணமாக பல மாதங்கள் தள்ளிப் போன தேர்தல் ஒரு வழியாக இன்றைக்குத்தான் நடந்து முடிந்திருக்கிறது.

அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலைக் கல்லூரியில் இந்தத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணியில் இருந்து மாலை 4 மணிவரையிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

காலையில் வாக்குப் பதிவு துவங்குவதற்கு முன்பாக ஓட்டுப் பெட்டிகளை சீல் வைப்பது தொடர்பாக சுயேட்சை உறுப்பினர்களின் சில கருத்துக்களைச் சொல்ல.. அதை மற்றவர்கள் எதிர்க்க சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்கள் தாமதமாக வாக்குப் பதிவு துவங்கியது.

அதன் பின்பு காலை 9 மணியளவில் வாக்குப் பதிவு அரங்கத்தின் வெளியிலேயே ஓட்டளிக்க வரும் அங்கத்தினர்களுக்கு கையில் பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதாகச் சொல்லி செளந்தர், பிரவீண் காந்த், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் ஆதாரத்துடன் குரல் எழுப்பினார்கள்.

இதனால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. பின்பு அவர்கள் அனைவரும் தேர்தல் அதிகாரியான நீதிபதியிடம் புகார் செய்தனர். ஆனாலும் வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த், விஜயகாந்த், தனுஷ், பாரதிராஜா, ஏவி.எம்.சரவணன், எஸ்.பி.பி.சரண் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் வாக்களிக்க வரவில்லை.

வாக்களிக்கத் தகுதியுள்ள மொத்த உறுப்பினர்களான 1304 பேரில் 1050 பேர் மட்டுமே தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர்.

பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு அதே கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.  நாளை இரவுக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் களம் இறங்கும் மூன்றாவது அணி..! https://touringtalkies.co/3rd-front-team-contest-in-tfpc-election-2020/ Sun, 01 Nov 2020 06:33:28 +0000 https://touringtalkies.co/?p=9552 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வரும் நவம்பர் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே இரண்டு அணிகள் போட்டியிடும் நிலையில், மூன்றாவதாக ஒரு அணி களம் இறங்கியுள்ளது. ‘முன்னேற்ற அணி’ என்ற பெயரில் இவர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இந்த அணியில், தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பதவிகளுக்கு யாரும் போட்டியிடவில்லை. அனைவரும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறார்கள். 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் இந்த ’முன்னேற்ற அணி’யின் […]

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் களம் இறங்கும் மூன்றாவது அணி..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வரும் நவம்பர் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் ஏற்கனவே இரண்டு அணிகள் போட்டியிடும் நிலையில், மூன்றாவதாக ஒரு அணி களம் இறங்கியுள்ளது. ‘முன்னேற்ற அணி’ என்ற பெயரில் இவர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

இந்த அணியில், தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பதவிகளுக்கு யாரும் போட்டியிடவில்லை. அனைவரும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறார்கள்.

21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் இந்த ’முன்னேற்ற அணி’யின் வேட்பாளர்களின் அறிமுக விழா நேற்று காலை, சென்னையில் உள்ள பாம்குரோவ் ஓட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் 21 வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

வேட்பாளர்களின் பெயர்கள் வருமாறு :

1.எஸ்.ரங்கா (எ) ரங்கா ரெட்டி

  1. எஸ்.வி.தங்கராஜ் – சுந்தரா டிராவல்ஸ்
  2. ஏ.ஏழுமலை
  3. எஸ்.சீனிவாசன் (எ) பவர் ஸ்டார்
  4. பி.ஜி.பாலாஜி
  5. கே.சுரேஷ் கண்ணன்
  6. பி.ராஜேந்திரன் (எ) கெட்டப் ராஜேந்திரன்
  7. எஸ்.ஜோதி
  8. கே.வி.குணசேகரன்
  9. வின்னர் பூமா ராமச்சந்திரன்
  10. எஸ்.கமலக்கண்ணன்
  11. பி.ராஜசேகரன் (எ) சாந்தகுமார்
  12. ஏ.ஜெமினி ராகவா
  13. எஸ்.சேகர்
  14. கே.ஆர்.சுரேஷ்
  15. Lr.Dr.ஆதிவெங்கடாசலம் MA, ML, D.HUM.,
  16. வி.சி.கணேசன்
  17. பி.ராஜேந்திரன்
  18. பெஞ்சமின்
  19. எம்.எஸ்.யாகூப்தீன்
  20. பி.செல்வகுமார் (எ) நண்டு பாஸ்கி

வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முன்னேற்ற அணியினர் பேசும்போது, “இந்தத் தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளுக்கு நாங்கள் யாரும் போட்டியிடவில்லை. அனைவரும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறோம்.

இதற்கு காரணம், ஒவ்வொரு முறையும் போட்டியிடும் அணி மற்றும் அந்த அணியைச் சார்ந்தவர்கள், சிலருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், சிறு பட தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் மற்றும் தேர்தலுக்கு முன்பு கொடுக்கப்பட்டும் வாக்குறுதிகள் அனைத்தும் கிடப்பில் போடப்படுகின்றன.

எனவேதான் நாங்கள் எந்த அணியையும் சாராமல், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மட்டுமே போட்டிடுகிறோம்.

எங்களது தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி’யில் இருப்பவர்கள் அனைவரும் 15 வருட திரைப்பட தயாரிப்பு அனுபவம் கொண்டவர்கள். அதுமட்டுமின்றி, நாங்கள் அனைவரும் பல வருடங்களாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினர்களாக பதவி வகித்ததோடு, பலரது வெற்றிக்காக உழைத்திருக்கிறோம்.

சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறோம். அதனால், நாங்கள் அனைவரும் வெற்றி பெறுவது உறுதி.

நாங்கள் வெற்றி பெற்று வரும்பட்சத்தில், தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புக்கு யார் வந்தாலும், அவர்களை வரவேற்போம்.

அதே சமயம், எங்களுடைய கோரிக்கைகளையும், சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் நடவடிக்கைகைகளும் அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் செய்யவில்லை என்றால், நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம்.

எங்களுடைய முக்கிய கோரிக்கைகள் என்னவென்றால்,

சிறு முதலீட்டு திரைப்படங்களை தொலைக்காட்சிகள் வாங்க வேண்டும்.

எப்.எம்.எஸ். என்று செல்லக் கூடிய வெளிநாட்டு உரிமம் விற்பனையாக வேண்டும்.

கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தொழில் நுட்பங்களை ஒழுங்கு முறைப்படுத்தி சிறு பட தயாரிப்பாளர்களுக்கு இழப்பீடு ஏற்படாமல் செய்ய வேண்டும்.

இந்தி டப்பிங் உரிமை விற்பனை முறைப்படுத்த வேண்டும்.

இந்த நான்கு கோரிக்கைகளும் அனைத்து சிறு முதலீட்டு படங்களுக்கும் நிறைவேறும் வகையில் நாங்கள் செயல்படுவோம்.

தற்போதைய காலக்கட்டத்தில் முதலீடு செய்து திரைப்படம் தயாரிக்கும் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு வருமானம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆனால், வருமானம் வருவதற்கான அனைத்து சூழல்களும் இருந்தாலும், அவற்றை சிலர் திட்டமிட்டு தடுக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட்டு சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு வருமானம் வரும் வகையில் பணியாற்றுவோம்…” என்றனர்.

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் களம் இறங்கும் மூன்றாவது அணி..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! https://touringtalkies.co/tamil-film-producers-council-election-2020-news/ Sat, 24 Oct 2020 11:19:52 +0000 https://touringtalkies.co/?p=9225 அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில்.. தேர்தல் அறிவிப்பு வந்த நாளைக்கு முதல் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் ஒரு படத்தையாவது தயாரித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு. ஆனால் அப்படி படமே தயாரிக்காமல் தற்போது […]

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! appeared first on Touring Talkies.

]]>
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன.

சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில்.. தேர்தல் அறிவிப்பு வந்த நாளைக்கு முதல் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் ஒரு படத்தையாவது தயாரித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு.

ஆனால் அப்படி படமே தயாரிக்காமல் தற்போது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ  செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

இப்போது டி.ராஜேந்தர் அணியில் அவர் மீதும், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் மன்னன் மீதுமே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை காஞ்சிபுரம் திருவளளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக உள்ள T.ராஜேந்தர், செயலாளராக உள்ள மன்னன், செயற்குழு உறுப்பினராக உள்ள கே.ராஜன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.

இவர்கள் மூவரும் தற்போது நடைபெறும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர், கெளரவச் செயலாளர், பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள்.

“இது சங்க விதிமுறைகளின்படி விதிமீறல். எனவே, இவர்களது வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும்” என தேர்தல் அதிகாரியிடம் தற்போதைய தேர்தலில் போட்டியிடும் முரளி ராமசாமி தலைமையிலான அணியின் சார்பில் ராதாகிருஷ்ணன், சிவசக்தி பாண்டியன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் டி.ராஜேந்தரின் இந்தச் செயலால் அதிருப்தி அடைந்துள்ளனராம்.

விநியோகஸ்தர்கள் சங்க விதிப்படி அந்தச் சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்பில் உள்ளவர்கள் வேறொரு சினிமா சங்கத்தின் நிர்வாகத்தில் பங்கெடுக்க முடியாதாம்.

ஆனால் இந்த விதியை தளர்த்த வேண்டி, சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டி நம் சங்கத்தின் நி்ர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், வேறொரு சங்கத்திலும் பொறுப்புக்கு வரலாம் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றியிருக்கிறார் டி.ராஜேந்தர். ஆனால், இந்தத் தீர்மானத்திற்கு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.

பொதுக் குழு அனுமதி கொடுக்காதபோது அந்தத் தீர்மானம் அதுவரையிலும் செல்லாது’ என்றுதான் அர்த்தம். “இந்த நிலைமையில் செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது எங்களது சங்க விதிகளின்படி சட்ட விரோதம்…” என்று கொந்தளிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்.

எனவே, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் T.ராஜேந்தர், மன்னன் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முக்கியமான உறுப்பினர்களும், முன்னாள் நிர்வாகிகளும் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

இது குறித்தும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலரிடம் இவர்களும் புகார் கூற உள்ளார்களாம்.

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – மூவரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை.. https://touringtalkies.co/tfpc-election-2020-singaravelan-complaint-ltter-news/ Sat, 24 Oct 2020 06:47:33 +0000 https://touringtalkies.co/?p=9194 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலைமையில் இதுவரையிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தவர்களில் சிலருக்கு தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ  செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெற்றிருக்கவில்லை என்று துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான தயாரிப்பாளர் சிங்காரவேலன் […]

The post தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – மூவரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை.. appeared first on Touring Talkies.

]]>

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலைமையில் இதுவரையிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தவர்களில் சிலருக்கு தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ  செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெற்றிருக்கவில்லை என்று துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான தயாரிப்பாளர் சிங்காரவேலன் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்த பின்பு ரீலீஸ் செய்யப்பட்ட படத்தை நிர்வாக பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள், தங்களுக்கான தகுதியாக அதைக் குறிப்பிட முடியாது என்பதால் இவர்களது வேட்பு மனுக்களின் தகுதி கேள்விக்குறியாகியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மூன்று பேரின் வேட்பு மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  தேர்தல் அதிகாரியிடம் தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் செய்துள்ளார்.

இது சம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்…

“தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975-ம் ஆண்டின் கீழ் பதிவு செய்யப்பட்டது என்பது தாங்கள் அறிந்ததே. நமது சங்கத்தின் விதிமுறைகள் அனைத்தும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975-க்கு உட்பட்டது.

தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 விதி எண் 58-ன் படி, சங்கத்தின் சார்பில் ஒரு அறிவிப்பு கொடுக்கப்படுமேயானால், அந்த அறிவிப்பு அன்றைய தேதியிலிருந்தே அமலுக்கு வந்து விடுகிறது.

அதன்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தலையும், தேர்தலுக்கான அட்டவணையையும் கடந்த 09-10-2020 தேதியிலும், தேர்தல் விதிகளை 15-10-2020 அன்றும் வெளியிட்டீர்கள்.

15-10-2020 அன்று உங்களால் வெளியிடப்பட்ட விதிமுறைகளில்,                                       விதி எண் 2-ல் “சங்க விதிமுறை எண் 13-ன்படி கடந்த 5 ஆண்டுகளுக்குள் நேரடி தமிழ்ப் படம் தயாரித்து,  வெளியிட்ட தயாரிப்பாளர், உறுப்பினர்களுக்கு மட்டும்தான் தலைவர், துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் ஆகிய நிர்வாகக் குழு பதவிகளுக்கு போட்டியிடும் உரிமை உண்டு…” என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

உங்கள் அறிவிப்பின்படி 15-10-2015 முதல் 14-10-2020 வரை உள்ளடக்கிய ஐந்து ஆண்டு காலத்திற்குள் ஒரு தயாரிப்பாளர் படத்தை தயாரித்து அதனை வெளியிட்டிருந்தால் மட்டுமே அவரால் தற்போதைய தேர்தலில் நிர்வாகக் குழு பதவிகளுக்கு போட்டியிட முடியும்.

இந்த விதிகள் மற்றும் உங்கள் அறிவிப்பின்படி 09-10-2020 முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்து விடுவதாலும், 15-10-2020 அன்று நீங்கள் வெளியிட்ட விதிகளின்படி, 14-10-2020-க்கு பிறகு படத்தை திரையிட்டவர்கள் நிர்வாகக் குழு பதவிகளுக்கு போட்டியிடும் தகுதியை தானாகவே இழந்து விடுகிறார்கள்.

இந்நிலையில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.ராதா கிருஷ்ணன், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு.கதிரேசன், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தங்களது படங்களை                                14-10-2020 தேதிக்கு பிறகு வெளியிட்டிருப்பதால் இந்த 2020-2022 ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் தகுதியை தானாகவே இழக்கிறார்கள்.

எனவே, ஐயா அவர்கள்…

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975-ன் விதிகளின்படியும், உங்களால் வெளியிடப்பட்ட தேர்தல் விதிகளின்படியும் மேற்கண்ட மூன்று நபர்களின் வேட்பு மனுக்களையும் நிராகரிக்கும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – மூவரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை.. appeared first on Touring Talkies.

]]>
தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையிலான அணி வேட்பு மனு தாக்கல் செய்தது..! https://touringtalkies.co/producer-murali-ramasamy-team-files-a-nomination-paper-in-tfpc-election-2020/ Fri, 23 Oct 2020 11:34:04 +0000 https://touringtalkies.co/?p=9164 அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் பிரபல தயாரிப்பாளரான, தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையில் தயாரிப்பாளர்களின் நலம் காக்கும் அணி போட்டியிடுகிறது. இந்த அணியின் சார்பில் தலைவராக முரளி ராமசாமி போட்டியிடுகிறார். கெளரவச் செயலாளர்கள் பதவிக்கு இராதாகிருஷ்ணனும், கே.ஜே.ஆர்.ராஜேஷூம் போட்டியிடுகின்றனர். பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின் போட்டியிடுகிறார். துணைத் தலைவர்களாக சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் இருவரும் போட்டியிடுகின்றனர். இன்று காலை இந்த அணியினர் மொத்தமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வந்து தங்களது […]

The post தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையிலான அணி வேட்பு மனு தாக்கல் செய்தது..! appeared first on Touring Talkies.

]]>
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் பிரபல தயாரிப்பாளரான, தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையில் தயாரிப்பாளர்களின் நலம் காக்கும் அணி போட்டியிடுகிறது.

இந்த அணியின் சார்பில் தலைவராக முரளி ராமசாமி போட்டியிடுகிறார்.

கெளரவச் செயலாளர்கள் பதவிக்கு இராதாகிருஷ்ணனும், கே.ஜே.ஆர்.ராஜேஷூம் போட்டியிடுகின்றனர்.

பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின் போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர்களாக சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் இருவரும் போட்டியிடுகின்றனர்.

இன்று காலை இந்த அணியினர் மொத்தமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வந்து தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

பின்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் முரளி ராமசாமி, “சிறிய பட்ஜெட் தயாரிப்பாளரின் நலன்களைக் காப்பாற்ற வேண்டித்தான் நாங்கள் தேர்தலில் நிற்கிறோம். எங்களது அணி வெற்றி பெற்றால் முதல் விஷயமாக நின்று போயிருக்கும் உறுப்பினர்களுக்கான நலத் திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்குவோம்.

முந்தைய நிர்வாகத்தில் நடந்த பண மோசடி, நிர்வாகக் குளறுபடிகளுக்கான சட்டப்பூர்வமான நீதியை நாங்கள் பெற்றுத் தருவோம்.

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து திரையிடல் கட்டணப் பிரச்சினையை எதிர்கொண்டு அதைத் தீர்க்க முயல்வோம்.

ஓடிடி நிறுவனங்களுடன் கலந்து பேசி சின்ன பட்ஜெட் திரைப்படங்களையும் வாங்க வைப்போம்..” என்று தெரிவித்தார்.

The post தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையிலான அணி வேட்பு மனு தாக்கல் செய்தது..! appeared first on Touring Talkies.

]]>
“கோமா ஸ்டேஜில் இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தைக் காப்பாற்றத்தான் நான் போட்டியிடுகிறேன்….” – டி.ராஜேந்தர் விளக்கம் https://touringtalkies.co/producer-t-rajendar-interview-about-tfpc-election-2020/ Fri, 23 Oct 2020 08:16:30 +0000 https://touringtalkies.co/?p=9157 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020 தேர்தலில் போட்டியிட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தரான டி.ராஜேந்தர் தலைமையில் போட்டியிடும் அணியினர் இன்று தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். டி,ராஜேந்தர் அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு மன்னன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு கே.ராஜன் போட்டியிடுகிறார். மேலும் துணைத் தலைவர் பதவிக்கு பி.டி.செல்வக்குமாரும், துணைச் செயலாளர் பதவிக்கு போஸும் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மனோபாலா, சரவணன், மனோஜ்குமார், ஆர்.வி.உதயக்குமார், ஷக்தி சிதம்பரம், திருமலை, […]

The post “கோமா ஸ்டேஜில் இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தைக் காப்பாற்றத்தான் நான் போட்டியிடுகிறேன்….” – டி.ராஜேந்தர் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020 தேர்தலில் போட்டியிட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தரான டி.ராஜேந்தர் தலைமையில் போட்டியிடும் அணியினர் இன்று தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

டி,ராஜேந்தர் அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு மன்னன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு கே.ராஜன் போட்டியிடுகிறார்.

மேலும் துணைத் தலைவர் பதவிக்கு பி.டி.செல்வக்குமாரும், துணைச் செயலாளர் பதவிக்கு போஸும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மனோபாலா, சரவணன், மனோஜ்குமார், ஆர்.வி.உதயக்குமார், ஷக்தி சிதம்பரம், திருமலை, கே.ஜி.பாண்டியன், செல்வம், அசோக் சாம்ராஜ், ஷாம், ஸ்ரீதர், வை.ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் அனைவரும் இன்று காலை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் நாற்காலியில் அமர்வதற்காக என்னைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

இந்தத் தலைவர் பதவியில் உட்காரத் தகுதியுள்ள ஒரு நபராக, தயாரிப்பாளராக, போராளியாக, பேச்சாளனாக, விஷயம் அறிந்தவனாக.. எந்தச் சபையிலும் பேசக் கூடியவனாக.. சட்டத்தோடு சொல்ல வேண்டும்.. அடக்கத்தோடு சொல்ல வேண்டும்.. உரக்கச் சொல்ல வேண்டும்.. ஒரு தந்தையாக சொல்ல வேண்டும் என்ற தகுதியுடைய ஒருவர் வேண்டும் என்பதால் இவர்களெல்லாம் சேர்ந்து என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றி..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதிப் பற்றாக்குறை உள்ளது. இருக்கின்ற நிதி மிகவும் குறைவாக இருப்பதால் அதை வெளியில் சொல்வதற்குக்கூட எனக்கு விருப்பமில்லை. சங்கம் இப்போது கோமா ஸ்டேஜில் உள்ளது.

இந்தக் கோமா ஸ்டேஜில் இருக்கும் சங்கத்தை சினிமா ஸ்டேஜாக மாற்றவும், அடிமட்டத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்குத் தோள் கொடுத்துத் தூக்கி நிறுத்தி செயல்பட வைக்கவும்தான் எனது அணி நிச்சயமாகச் செயல்படும்.

இந்தச் சங்கத்தில் இருந்து சிலர் விலகி வேறு சங்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களை நான் குறை சொல்லவில்லை. ஆனால் அது நடப்பு சங்கம் என்பதால் எங்களுடைய சங்கத்தைக் கிடப்பில் போட முடியாது. இந்தச் சங்கத்தைத் தூக்கி நிறுத்தி துடிப்போடு செயல்பட வைப்போம் என்பதற்காகத்தான் நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

இப்போதைய கொரோனா காலத்திற்குப் பின்பு தமிழ்த் திரைப்பட துறையில் பல மாற்றங்கள் ஆகியிருக்கிறது. பல கோரிக்கைள் எழுந்திருக்கின்றன. தியேட்டர்களில் படத்தை வெளியிட கியூப் நிறுவனத்திற்குக் கட்ட வேண்டிய திரையிடல் கட்டணத்தை நாங்கள் கட்ட மாட்டோம் என்று முன்பேயே தயாரிப்பாளர்கள் சங்கம் சொல்லியிருக்கிறது. புதிதாகத் துவக்கப்பட்ட  தயாரிப்பாளர்கள் சங்கமும் சொல்லியிருக்கிறது. எங்களுடைய விநியோகஸ்தர்கள் சங்கமும் இதையேதான் சொல்கிறது.

இதனால் சில கோரிக்கைகளை தயாரிப்பாளர் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் இணைந்து முன் வைத்து போராட வேண்டியிருப்பதால்.. இரண்டு மாடுகளும் ஒன்று போல இருந்தால்தான் வண்டி ஓடும் என்பதால்தான் நான் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தாலும் எங்களுடைய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டி சட்ட விதிகளை திருத்தி அனுமதி பெற்று இந்தத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் போட்டியிடுகின்றேன். நாங்கள் நிச்சயமாக ஜெயிப்போம். நல்ல நிர்வாகத்தைத் தருவோம்..” என்றார்.

The post “கோமா ஸ்டேஜில் இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தைக் காப்பாற்றத்தான் நான் போட்டியிடுகிறேன்….” – டி.ராஜேந்தர் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
டி.ராஜேந்தர் அணியில் போட்டியிட நடிகர் பார்த்திபன் மறுப்பு https://touringtalkies.co/actor-parthiban-refuses-to-contest-in-tfpc-election-2020/ Tue, 20 Oct 2020 07:24:31 +0000 https://touringtalkies.co/?p=9046 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணி, தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணி, சிறிய பட தயாரிப்பாளர்கள் தனி அணி என்று 3 அணிகள் போட்டியிடவுள்ளதாகத் தெரிகிறது. இதில் டி.ராஜேந்தர் அணியில் அவர் தலைவர் பதவிக்கும், மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். இந்த அணியில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட நடிகர் பார்த்திபனை அழைத்திருக்கிறார் டி.ராஜேந்தர். ஆனால் பார்த்திபனோ தனது அடுத்தப் பட […]

The post டி.ராஜேந்தர் அணியில் போட்டியிட நடிகர் பார்த்திபன் மறுப்பு appeared first on Touring Talkies.

]]>

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணி, தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணி, சிறிய பட தயாரிப்பாளர்கள் தனி அணி என்று 3 அணிகள் போட்டியிடவுள்ளதாகத் தெரிகிறது.

இதில் டி.ராஜேந்தர் அணியில் அவர் தலைவர் பதவிக்கும், மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.

இந்த அணியில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட நடிகர் பார்த்திபனை அழைத்திருக்கிறார் டி.ராஜேந்தர். ஆனால் பார்த்திபனோ தனது அடுத்தப் பட வேலைகளில் மும்முரமாக இருப்பதால் இந்த முறை சங்கத்தில் எந்தப் பதவிக்கும் போட்டியிடப் போவதில்லை என்று சொல்லிவிட்டாராம்.

பார்த்திபன் விஷால் தலைமையில் அமைந்திருந்த சென்ற நிர்வாகக் குழுவில் துணைத் தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது அணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான மொத்த வேட்பு மனுக்களையும் இன்றைக்கு டி.ராஜேந்தர் வாங்கிச் சென்றுள்ளார்.

அவர் அணியின் மொத்த வேட்பாளர்களும் நாளை அல்லது நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post டி.ராஜேந்தர் அணியில் போட்டியிட நடிகர் பார்த்திபன் மறுப்பு appeared first on Touring Talkies.

]]>