Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Tamil Movies – Touring Talkies https://touringtalkies.co Mon, 25 Mar 2024 09:55:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Tamil Movies – Touring Talkies https://touringtalkies.co 32 32 வணங்கான் படத்தில் பாலா அடித்தாரா? பிரேமலு பட நாயகி சொன்ன புது தகவல் https://touringtalkies.co/%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%85/ Mon, 25 Mar 2024 09:55:43 +0000 https://touringtalkies.co/?p=40160 இயக்குனர் பாலா தயாரிப்பில் வெளிவர இருந்த திரைப்படம் தான் வணங்கான். இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார்.அதேபோல் இப்படத்தில் இருந்து மமிதா பைஜூ-ம் விலகினார் இப்படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில், தற்போது மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு என சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் தான் பிரேமலு. இப்படத்தின் ஹீரோயினி மமிதா பைஜூ ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்துள்ளார்.மமிதா பைஜூ-வை வணங்கான் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலா அடித்ததாக சில காலங்களுக்கு முன்பு தீயாக செய்திகள் […]

The post வணங்கான் படத்தில் பாலா அடித்தாரா? பிரேமலு பட நாயகி சொன்ன புது தகவல் appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் பாலா தயாரிப்பில் வெளிவர இருந்த திரைப்படம் தான் வணங்கான். இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார்.அதேபோல் இப்படத்தில் இருந்து மமிதா பைஜூ-ம் விலகினார் இப்படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில்,

தற்போது மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு என சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் தான் பிரேமலு. இப்படத்தின் ஹீரோயினி மமிதா பைஜூ ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்துள்ளார்.மமிதா பைஜூ-வை வணங்கான் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலா அடித்ததாக சில காலங்களுக்கு முன்பு தீயாக செய்திகள் பரவின.

இந்நிலையில் பிரேமலு படத்தை தொடர்ந்து தமிழில் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ரிபெல் படத்தில் ஜி.வி பிரகாஷ்டன் ஹீரோயினாக நடித்துள்ளார் மம்தா பைஜூ.சென்னை வந்துள்ள இவரிடம் சமீபத்தில் எடுத்த பேட்டியில் வணங்கான் படத்தில் இயக்குனர் பாலா அடித்ததாக செய்திகள் பரவியதே அது உண்மையா பாலா உங்களை அடித்தாரா என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்‌.

அதாவது, அந்த படத்துல இருந்து விலகிய பிறகு நிறைய மலையாள சேனலுக்கு கொடுத்த பெட்டியில் பாலா சார் உடன் பணியாற்றுவது ஒரு புத்தகத்தை படிப்பது போல் படிக்கிறது நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லி இருந்தேன். லேட்டஸ்ட்டாக அளித்த பேட்டியில் கூட அப்டியே தான் சொன்னேன் ஆனாத் நான் சொன்னதிற்கு முன்பும் பின்பும் கட் பண்ணி எடிட் பண்ணி குறிப்பிட்ட அந்த விஷயத்த மட்டும் வைரல் ஆக்கிவிட்டார்கள்‌.

பாலா சார் அவர்கள் என்னை தங்கச்சி போல் பார்த்துக்கொண்டார்.அதே சுதந்திரத்தை நானும் அவருக்கு கொடுத்திருக்கேன்‌ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லும் போது கவனிக்காம இருந்தால் திட்டுவார்கள் தானே அவர் மிகவும் சாஃப்ட். அந்த படத்திற்காக ரிகர்சல் நடக்கும்போது சென்னையில் ஒரு மாசம் நான் தனியாக இருந்தேன். என்ன தனியாக விடாமல் எப்போதுய் டைரக்ஷன் குழுவுடன் இருக்கிற மாதிரி பார்த்துகிட்டார்.

இந்த அளவுக்கு அவர் என்மீது அக்கறையாக இருந்தார்.ஆனால் நான் மலையாளத்தில் சொன்னதை தமிழில் யாரோ தவறாக சொல்லிட்டார்கள் என்றார்.

The post வணங்கான் படத்தில் பாலா அடித்தாரா? பிரேமலு பட நாயகி சொன்ன புது தகவல் appeared first on Touring Talkies.

]]>
என்ன சொல்கிறது ஜி.வி.யின் ரிபெல்? இயக்குனர் நிதேஷ் மனம்திறப்பு… https://touringtalkies.co/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/ Mon, 25 Mar 2024 08:56:22 +0000 https://touringtalkies.co/?p=40134 திரைப்படத்தில் மக்களுக்காய் குரல் கொடுப்பதும் போராடுவதும் என்று படத்தோடு மட்டும் முடித்து கொள்ளும் நடிகர்கள் தான் அதிகம்.ஒரு சில நடிகர்கள் தான் நிஜத்தில் குரல் கொடுக்கின்றனர் அதில் ஜி.வி பிரகாஷ் தமிழர்களுக்காய் என்றும் குரல் கொடுப்பவர் என ரிபெல் இயக்குனர் நிதேஷ் படத்தையும் பற்றியும், ஜி.வி.யை பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர், ரிபெல் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை அழுத்தமாக பேசும் படம்.1980களில் நடந்த கதை இது. மூணாரில் இருந்து பாலக்காட்டிற்கு படிக்க செல்லும் தமிழ் […]

The post என்ன சொல்கிறது ஜி.வி.யின் ரிபெல்? இயக்குனர் நிதேஷ் மனம்திறப்பு… appeared first on Touring Talkies.

]]>
திரைப்படத்தில் மக்களுக்காய் குரல் கொடுப்பதும் போராடுவதும் என்று படத்தோடு மட்டும் முடித்து கொள்ளும் நடிகர்கள் தான் அதிகம்.ஒரு சில நடிகர்கள் தான் நிஜத்தில் குரல் கொடுக்கின்றனர் அதில் ஜி.வி பிரகாஷ் தமிழர்களுக்காய் என்றும் குரல் கொடுப்பவர் என ரிபெல் இயக்குனர் நிதேஷ் படத்தையும் பற்றியும், ஜி.வி.யை பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர், ரிபெல் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை அழுத்தமாக பேசும் படம்.1980களில் நடந்த கதை இது. மூணாரில் இருந்து பாலக்காட்டிற்கு படிக்க செல்லும் தமிழ் மாணவர்களுக்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பதை கேம்பஸ் பொலிட்டிக்கலாய் சொல்லும் வகையில் திரைப்படத்தை அமைத்துள்ளோம்.

மூணாரில் வாழ்ந்த தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை அதிகமாக செலவு செய்து படிக்க வைக்கும் அளவிற்கு வசதி இல்லாமல் இருந்தார்கள் அதனால் கல்வி கட்டணம் குறைவாக உள்ள கேரளக் கல்லூரிகளுக்கு அனுப்பி படிக்க வைப்பார்கள். அங்கு சுற்றி தமிழ் ஆட்கள் நிறைய இருப்பது அவர்களுக்கு சற்று நிம்மதி ஏற்படுத்தும் என்று நினைத்தார்கள்.ஆனால் அப்படி படிக்க செல்லும் மாணவர்களுக்கு மொழி ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளை எதிர்த்து ஒருவன் எப்படி போராடினான் என்பதே ரிபெல் என்கிறார்.

இது உண்மை சம்பவம்.ஒன்றல்ல இரண்டல்ல 1980களில் இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது அவற்றை ஒன்றாக இணைத்து ஒடுக்குமுறைகளை ஒருவன் தைரியமாக எதிர்த்தால் எப்படி இருக்குமென கற்பனையும் கலந்து இத்திரைகதையை அமைத்ததாக கூறினார்‌.

ஜி.வி பிரகாஷ் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலக்காட்டிற்கு படிக்க செல்லும் ஜி.வி பிரகாஷ் தமிழ் மலையாளம் என பிரித்து நடக்கும் ஒடுக்குமுறைகளை எப்படி அணுகிறார் என்பதும் தன்னோடு கல்லூரியில் படிக்கும் மலையாள மாணவியாக சாரா கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ மீது ஏற்படும் காதல் என இப்படம் நகரும்.இவர்களோடு கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கண்டிப்பா அவர் வசனங்கள் நம்மளோட பிரதிபலிப்பு.96 படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்த ஆதித்யா‌ பாஸ்கர், கல்லூரி வினோத் மற்றும் சுப்பிரமணிய சிவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்றார்.

1980 நடந்ததை இப்போ படமாக எடுக்க காரணம் என்ற கேள்விக்கு நான் என்னுடைய சொந்த ஊரான மூணாரில் 1996ல் பிறந்தேன் என் வலி உங்களுக்கு இப்படத்தை பார்த்தால் புரியும்.இப்படத்தை சென்சார்ரில் பார்த்த அதிகாரி பாதிக்கப்பட்ட ஒருவரால் தான் இந்த படத்தை எடுக்கமுடியும் என்றார். ஐ.ஏ.எஸ் படித்த அவர் அங்கு வேலை செய்யும் இடத்தில் இதே பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளார்.இந்த சம்பவங்கள் தற்போது குறைந்து இருக்கலாம் ஆனால் இன்னும் முழுமையாக தீரவில்லை என்றார் அழுத்தமாக சொல்லத்தான் 1980களை தேர்ந்தெடுத்தேன் என்றார்.

இப்படத்திற்கு திரைக்கதை எழுதும்போதே தமிழுக்காய் நிற்பவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.தமிழுக்காய் தமிழர்களுக்காய் எப்போதும் நிற்பவர் ஜி.வி பிரகாஷ் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் கதை கேட்ட ஸ்டுடியோ க்ரீன் ஜி.வி தான் நடிக்க வேண்டும் என்றார்கள். தமிழுக்கான கதை என்றதும் ஜி.வி அவர்கள் மிகவும் ஆர்வமாக கதை கேட்டார் கண்டிப்பாக இந்த படத்தில் நான் நடிப்பேன் என்று உறுதிக்கொடுத்து நடித்தும் கொடுத்தார்.இவர் திரை பயணத்தில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றார் இயக்குனர் நிதேஷ்.

The post என்ன சொல்கிறது ஜி.வி.யின் ரிபெல்? இயக்குனர் நிதேஷ் மனம்திறப்பு… appeared first on Touring Talkies.

]]>
ஓரு காசு கூட வாங்காமல் என் படத்தில் நடித்த ரஜினி- CHAI WITH CHITHRA -Director/ Actor MOULEE https://touringtalkies.co/%e0%ae%93%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9/ Sat, 18 Sep 2021 09:24:32 +0000 https://touringtalkies.co/?p=18092 The post ஓரு காசு கூட வாங்காமல் என் படத்தில் நடித்த ரஜினி- CHAI WITH CHITHRA -Director/ Actor MOULEE appeared first on Touring Talkies.

]]>

The post ஓரு காசு கூட வாங்காமல் என் படத்தில் நடித்த ரஜினி- CHAI WITH CHITHRA -Director/ Actor MOULEE appeared first on Touring Talkies.

]]>
ஒரே நேரத்தில் ஓடிடி-தியேட்டர்களில் படத்தை வெளியிடுவது சாத்தியம்தானா..? https://touringtalkies.co/is-it-possible-to-release-the-film-in-ott-theaters-simultaneously/ Mon, 19 Jul 2021 13:37:02 +0000 https://touringtalkies.co/?p=16345 தமிழ்த் திரையுலகத்தில் ஓடிடியின் வளர்ச்சி தியேட்டர் உரிமையாளர்களுக்கு கோபத்தைத் தந்தாலும், தற்போதைய கொரோனா லாக்டவுன் காலத்தின் யதார்த்த நிலைமையைப் புரிந்து கொண்டு அவர்கள் அமைதி காக்கிறார்கள். தியேட்டர்கள் திறக்கப்பட்டு பழையபடி ரசிகர்களின் வருகை அதிகரிக்கத் துவங்கினால் பட அதிபர்கள் தங்களைத் தேடித்தான் ஓடி வரப் போகிறார்கள் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் சில தயாரிப்பாளர்கள் தங்களது படத்தை ஒரே நேரத்தில் ஓடிடியிலும், தியேட்டர்களிலும் வெளியிட்டால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு சம்மதித்தால் படங்களை தியேட்டருக்குக் கொடுக்கலாம். […]

The post ஒரே நேரத்தில் ஓடிடி-தியேட்டர்களில் படத்தை வெளியிடுவது சாத்தியம்தானா..? appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகத்தில் ஓடிடியின் வளர்ச்சி தியேட்டர் உரிமையாளர்களுக்கு கோபத்தைத் தந்தாலும், தற்போதைய கொரோனா லாக்டவுன் காலத்தின் யதார்த்த நிலைமையைப் புரிந்து கொண்டு அவர்கள் அமைதி காக்கிறார்கள்.

தியேட்டர்கள் திறக்கப்பட்டு பழையபடி ரசிகர்களின் வருகை அதிகரிக்கத் துவங்கினால் பட அதிபர்கள் தங்களைத் தேடித்தான் ஓடி வரப் போகிறார்கள் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் சில தயாரிப்பாளர்கள் தங்களது படத்தை ஒரே நேரத்தில் ஓடிடியிலும், தியேட்டர்களிலும் வெளியிட்டால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதற்கு சம்மதித்தால் படங்களை தியேட்டருக்குக் கொடுக்கலாம். இல்லாவிட்டால் தியேட்டர்களில் வசூலாகும் பணத்தில் முக்கால்வாசியை கூடுதலாக ஓடிடி நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொண்டு ஓடிடியிலேயே படத்தை வெளியிட்டு விடலாம் என்று எண்ணி வருகிறார்கள்.

ஆனால், இது மிகப் பெரிய நடிகர்கள், இயக்குநர்கள், பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே சாத்தியமானது. 100-க்கு 5 சதவிகிதப் படங்கள் மட்டுமே இப்போது ஓடிடிக்கு செல்கின்றன. மற்ற 95 சதவிகித படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்க மறுக்கின்றன.

அவர்களை தரம் இல்லாதவை.. அல்லது ஸ்டார் வேல்யூ இல்லாதவை.. மக்கள் பார்வைக்கு செல்லும் வாய்ப்பு இல்லாதவை என்று எதையாவது சொல்லி இவைகளை புறக்கணிக்கின்றன ஓடிடி தளங்கள். இந்த மாதிரியான படங்களுக்கு இனிமேல் தியேட்டர்களைவிட்டால் வேறு வழியில்லைதான்.

ஆனால் அங்கும் இருக்கும் ஒரு சிக்கல்.. இது மாதிரியான சின்ன பட்ஜெட் படங்கள்.. அறிமுகம் இல்லாதவர்கள் நடித்திருக்கும் படங்கள்.. போன்றவைகளுக்கு ரசிகர்களிடையே ஆதரவே இல்லை. தியேட்டர்களில் கூட்டமே வருவதில்லை. பின்பு எப்படி அந்தப் படங்களை தியேட்டர்காரர்கள் போடுவார்கள்..?

அதே நேரம் ஒரே நேரத்தில் ஓடிடியிலும், தியேட்டரிலும் படத்தை வெளியிட்டால் அது தியேட்டர் வசூலை பெரிய அளவுக்கு பாதிக்கும் என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. இது நடந்துள்ளது ஹாலிவுட்டில்.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தான் தயாரித்த Godzilla vs. Kong, Mortal Kombat  படங்களை திரையரங்குடன் சேர்த்து, HBO Max தளத்திலும் வெளியிட்டது. இதற்கு அமெரிக்காவில் திரையரங்குகள் வைத்துள்ள பல நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்தன. “வரும் காலங்களில் வார்னர் பிரதர்ஸின் படங்களை திரையிட மாட்டோம்..” என எச்சரித்தன. 

இந்நிலையில் டிஸ்னி நிறுவனமும் தனது புதிய படமான Black Widow-வை கடந்த ஜுலை 9-ம் தேதி திரையரங்கிலும், டிஸ்னி ஓடிடி தளத்திலும் ஒரே நேரத்தில் வெளியிட்டது. இதற்கு அமெரிக்காவின் National Association of Theatre Owners (NATO) கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனாலும் எதிர்ப்பை மீறி படம் இரு முறைகளிலும் வெளியானது. முதல் வார இறுதியில் ‘பிளாக் விடோ’ யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 80 மில்லியன் டாலர்களை வசூலித்தது. கொரோனா பேரிடருக்குப் பிறகு முதல் வார இறுதியில் அதிக தொகையை வசூலித்த திரைப்படம் என்ற பெருமை ‘பிளாக் விடோவு’க்கு கிடைத்தது.

ஆனால், இரண்டாவது வார இறுதியில் இந்த வசூல் 69 சதவீதம் குறைந்து, வெறும் 26 மில்லியன் டாலர்களை மட்டுமே ‘பிளாக் விடோ’ வசூலித்தது. இந்த வசூல் வீழ்ச்சிக்கு படத்தை டிஸ்னி ஓடிடி தளத்தில் வெளியிட்டதுதான் காரணம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

“இந்தப் போக்கு தொடர்ந்தால், டிஸ்னியின் படங்களை இனிமேல் வெளியிட மாட்டோம்” என சில திரையரங்கு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

தற்போது இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே திரையரங்குகள் செயல்படுகின்றன. அதுவும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், திரையரங்குகளில் படத்தை எப்படி வெளியிட முடியும்…?

திரையரங்கு உரிமையாளர்களின் எச்சரிக்கையை படத் தயாரிப்பாளர்கள் பொருட்படுத்துவார்களா என தெரியவில்லை. கொரோனா கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பிய பிறகு திரையரங்குகளின் கை ஒருவேளை  ஓங்கலாம். அதுவரை ஓடிடிக்கு அவர்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும். இதுதான் தற்போதைய யதார்த்த கள நிலவரம்.

The post ஒரே நேரத்தில் ஓடிடி-தியேட்டர்களில் படத்தை வெளியிடுவது சாத்தியம்தானா..? appeared first on Touring Talkies.

]]>