Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
south indian writers association – Touring Talkies https://touringtalkies.co Fri, 16 Sep 2022 07:01:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png south indian writers association – Touring Talkies https://touringtalkies.co 32 32 “இப்போது எதிரிகள் யாரென்றே தெரியவில்லை” – எழுத்தாளர் சங்க விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு https://touringtalkies.co/now-we-dont-know-who-the-enemies-are-k-bhagyarajs-speech-at-the-writers-association-function/ Fri, 16 Sep 2022 07:00:29 +0000 https://touringtalkies.co/?p=24535 தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தலில் வென்ற  புதிய நிர்வாகிகளின்  பதவியேற்பு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிர்வாகி உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்ட  இவ்விழாவினில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக  நடிகர் மற்றும் இயக்குநருமான கே.பாக்கியராஜூம் பதவியேற்று கொண்டார். இவ்விழாவினில் தமிழ் திரைப்பட பிரபலங்கள், இயக்குநர் சங்க உறுப்பினர்கள், பெப்சி உறுப்பினர்கள் பலர் கலந்து வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினர். தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட இயக்குநர் […]

The post “இப்போது எதிரிகள் யாரென்றே தெரியவில்லை” – எழுத்தாளர் சங்க விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தலில் வென்ற  புதிய நிர்வாகிகளின்  பதவியேற்பு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

நிர்வாகி உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்ட  இவ்விழாவினில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக  நடிகர் மற்றும் இயக்குநருமான கே.பாக்கியராஜூம் பதவியேற்று கொண்டார்.

இவ்விழாவினில் தமிழ் திரைப்பட பிரபலங்கள், இயக்குநர் சங்க உறுப்பினர்கள், பெப்சி உறுப்பினர்கள் பலர் கலந்து வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினர்.

தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. இதுவரையிலும் நடந்தது போராட்டம் இல்லை. இனிமேல்தான் நமக்கான போராட்டமே காத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பாவது எதிரி யாரென்று தெரியும். ஆனால், இப்போது எதிரி யாரென்றே தெரியவில்லை.

இந்த வெற்றி அனைவருக்கும் பொதுவானது. எனக்கு கிடைக்கும் பாராட்டு எதிர் அணியினருக்கும் உரித்தானது. சங்கம் சிறக்க அவர்களுடன் இணைந்து வேலை செய்வேன். அளவோடு பேசுபவர்களை உலகம் பாராட்டும். அதனால் அளவோடு பேசுகிறேன்.

உனக்குள்ளே இருக்கும் மனசாட்சிதான் சாமி. அந்த மனசாட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். சினிமாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் எழுத்தாளர்கள்தான். கதை ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவது எங்களது கடமை.  எதுவும் இல்லை என்றால் தர்ணாவில் ஈடுபட்டாவது நமது உரிமையை கேட்போம்.

நான் பெரிதாக எழுத்தாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இருப்பினும் என்னை தேர்தலில் ஜெயிக்க வைத்துள்ளனர். இனி அவர்களுக்காக பாடுபடுவேன். எங்களுக்கு எதிர் அணி என்று எதுவும் இல்லை, எல்லாரும் ஒரே அணிதான். எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுத்து எல்லா உதவிகளும் செய்து தருவேன்…” என்றார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் 2020-ம் ஆண்டு தேர்தலிலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post “இப்போது எதிரிகள் யாரென்றே தெரியவில்லை” – எழுத்தாளர் சங்க விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
சினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக இயக்குநர் கே.பாக்யராஜ் தேர்வு..! https://touringtalkies.co/director-k-bhagyaraj-elected-as-the-president-of-cinema-writers-association/ Sun, 11 Sep 2022 17:17:59 +0000 https://touringtalkies.co/?p=24439 தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ்த் திரையுலகத்தில் எழுத்தாளர்களுக்கென்று பிரத்யேகமாக இருக்கும் சங்கம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம். 2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்கு தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த நிர்வாகிகளின் பதவிக் காலம் தற்போது முடிவடைய இருப்பதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடத்தப்பட்டது. தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு இயக்குநர்கள் லியாகத் அலிகானும், மனோஜ்குமாரும் போட்டியிட்டனர். பொருளாளர் […]

The post சினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக இயக்குநர் கே.பாக்யராஜ் தேர்வு..! appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகத்தில் எழுத்தாளர்களுக்கென்று பிரத்யேகமாக இருக்கும் சங்கம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம்.

2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்கு தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த நிர்வாகிகளின் பதவிக் காலம் தற்போது முடிவடைய இருப்பதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடத்தப்பட்டது.

தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டியிட்டனர்.

செயலாளர் பதவிக்கு இயக்குநர்கள் லியாகத் அலிகானும், மனோஜ்குமாரும் போட்டியிட்டனர்.

பொருளாளர் பதவிக்கு பாலசேகரனும், ரமேஷ் கண்ணாவும் போட்டியிட்டனர்.

2 துணைத் தலைவர்கள் பதவிக்கு ‘யார்’ கண்ணன், காரைக்குடி நாராயணன், ரவி மரியா, மனோபாலா ஆகியோர் போட்டியிட்டனர்.

4 இணைச் செயலாளர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், சின்னி ஜெயந்த், கவிஞர் முத்துலிங்கம், மதுரை தங்கம், வி.பிரபாகர், சி.ரங்கநாதன், எம்.ரத்னகுமார், பி.சாந்தகுமார், டி.கே.சண்முகசுந்தரம், என்.வேல்முருகன் ஆகிய 10 பேர் போட்டியிட்டனர்.

12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு அஜயன் பாலா, பாலாஜி சக்திவேல், பாபு கணேஷ், ஏகாம்பவாணன், ஹேமமாலினி, வீ.ஜெயப்பிரகாஷ், யுரேகா, பொன்ராமன், பேரரசு, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜா கார்த்திக், ஏ.எல்.ராஜா, கே.ராஜேஸ்வர், ராதாரவி, சாய்ரமணி, சினேகன், ஷரவணன் சுப்பையா, சரண், எம்.சி.சேகர், பி.சாந்தகுமார், த.சிங்கபுலி அண்ணாவி, ஏ.வெங்கடேஷ், பா.விஜய், ந.வேல்முருகன், விவேகா ஆகிய 25 பேர் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தல் இன்று வடபழனி, கமலா தியேட்டர் அருகில் இருக்கும் திரையிசை கலைஞர்கள் சங்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் நடைபெற்றது.

மொத்தமுள்ள 485 வாக்குகளில் 346 வாக்குகள் பதிவாயின. மாலை 4 மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கே.பாக்யராஜ் 192 வாக்குகள் பெற்று 40 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

பொதுச் செயலாளர் பதவிக்கு கே.பாக்யராஜ் அணியில் போட்டியிட்ட இயக்குநர் லியாகத் அலிகான் 292 வாக்குகள் பெற்று பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் மனோஜ்குமார் 151 வாக்குகள் பெற்றிருந்தார்.

2 துணைத் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்டவர்களில் கே.பாக்யராஜ் அணியில் போட்டியிட்ட இயக்குநர் யார் கண்ணன் 194 வாக்குகளையும், ரவி மரியா 162 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர்.

இவர்களுடன் போட்டியிருந்த காரைக்குடி நாராயணன் 155 வாக்குகளையும், மனோபyாலா 146 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தனர்.

4 இணைச் செயலாளர்கள் பதவிக்கு கே.பாக்யராஜ் அணியில் போட்டியிட்ட மங்கை அரிராஜன் மற்றும் கவிஞர் முத்துலிங்கம் இருவரும் வெற்றி பெற்றனர். அதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகர் அணியில் போட்டியிட்ட சி.ரங்கநாதன், வி.பிரபாகர் இருவரும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

12 செயற்குழு உறுப்பினர்களுக்கான போட்டியில்  

1. இயக்குநர் பாலாஜி சக்திவேல்(215) – கே.பாக்யராஜ் அணி

2. பட்டுக்கோட்டை பிரபாகரன்(205) – கே.பாக்யராஜ் அணி

3. பேரரசு(200) – வசந்தம் அணி

4. சரண்(188) – வசந்தம் அணி

5. விவேகா(185) வசந்தம் அணி

6. சிங்கம் புலி(180) வசந்தம் அணி

7. ஹேமமாலினி (179) – கே.பாக்யராஜ் அணி

8. அஜயன் பாலா (177) – கே.பாக்யராஜ் அணி

9. சாய் ரமணி(173) வசந்தம் அணி

10. ராஜா கார்த்திக்(169) – கே.பாக்யராஜ் அணி

11. ஏ வெங்கடேஷ்(160) – வசந்தம் அணி

12. ராதாரவி(159) வசந்தம் அணி

மொத்தமாக இந்தத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் வசந்தம் அணியின்  சார்பில் 10 எழுத்தாளர்களும், கே.பாக்யராஜ் அணியின் சார்பில் 11 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.. !

The post சினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக இயக்குநர் கே.பாக்யராஜ் தேர்வு..! appeared first on Touring Talkies.

]]>
எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டி..! https://touringtalkies.co/k-bhagyaraju-and-s-a-chandrasekhar-are-contesting-for-the-post-of-president-of-the-writers-association/ Fri, 26 Aug 2022 15:25:12 +0000 https://touringtalkies.co/?p=24019 தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டியிடுகின்றனர். தமிழ்த் திரையுலகத்தில் எழுத்தாளர்களுக்கென்று பிரத்யேகமாக இருக்கும் சங்கம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம். 2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்கு தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த நிர்வாகிகளின் பதவிக் காலம் தற்போது முடிவடைய இருப்பதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க மீண்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி வரும் செப்டம்பர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதாக அறிவித்துள்ளார்கள். சங்கத்தின் தேர்தலை நடத்தித் […]

The post எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டி..! appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டியிடுகின்றனர்.

தமிழ்த் திரையுலகத்தில் எழுத்தாளர்களுக்கென்று பிரத்யேகமாக இருக்கும் சங்கம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம்.

2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்கு தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த நிர்வாகிகளின் பதவிக் காலம் தற்போது முடிவடைய இருப்பதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க மீண்டும் தேர்தல் நடத்தப்படுகிறது.

இதன்படி வரும் செப்டம்பர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதாக அறிவித்துள்ளார்கள்.

சங்கத்தின் தேர்தலை நடத்தித் தருவதற்காக ச.செந்தில்நாதன் என்னும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தத் தேர்தலில் பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள்(2 நபர்கள்), இணைச் செயலாளர்கள்(4 நபர்கள்), செயற்குழு உறுப்பினர்கள் 12 நபர்கள் என்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இதற்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 24-ம் தேதிவரையிலும் வழங்கப்பட்டது. வேட்பு மனு பரிசீலனை இன்று நடைபெற்றது.

இதன் முடிவில் தற்போது தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார், யார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டியிடுகின்றனர்.

செயலாளர் பதவிக்கு இயக்குநர்கள் லியாகத் அலிகானும், மனோஜ்குமாரும் போட்டியிடுகின்றனர்.

பொருளாளர் பதவிக்கு பால சேகரனும், ரமேஷ் கண்ணாவும் போட்டியிடுகின்றனர்.

2 துணைத் தலைவர்கள் பதவிக்கு ‘யார்’ கண்ணன், காரைக்குடி நாராயணன், ரவி மரியா, மனோபாலா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

4 இணைச் செயலாளர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், சின்னி ஜெயந்த், கவிஞர் முத்துலிங்கம், மதுரை தங்கம், வி.பிரபாகர், சி.ரங்கநாதன், எம்.ரத்னகுமார், பி.சாந்தகுமார், டி.கே.சண்முகசுந்தரம், என்.வேல்முருகன் ஆகிய 10 பேர் போட்டியிடுகின்றனர்.

12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு அஜயன் பாலா, பாலாஜி சக்திவேல், பாபு கணேஷ், ஏகாம்பவாணன், ஹேமமாலினி, வீ.ஜெயப்பிரகாஷ், யுரேகா, பொன்ராமன், பேரரசு, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜா கார்த்திக், ஏ.எல்.ராஜா, கே.ராஜேஸ்வர், ராதாரவி, சாய்ரமணி, சினேகன், ஷரவணன் சுப்பையா, சரண், எம்.சி.சேகர், பி.சாந்தகுமார், த.சிங்கபுலி அண்ணாவி, ஏ.வெங்கடேஷ், பா.விஜய், ந.வேல்முருகன், விவேகா ஆகிய 25 பேர் போட்டியிடுகின்றனர்.

சங்கத் தேர்தல் செப்டம்பர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வடபழனி, கமலா தியேட்டர் அருகில் இருக்கும் திரையிசை கலைஞர்கள் சங்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் நடைபெறும்.

வாக்குப் பதிவுகள் முடிந்ததும் அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

The post எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டி..! appeared first on Touring Talkies.

]]>