Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
smruthi venkat – Touring Talkies https://touringtalkies.co Mon, 12 Dec 2022 19:02:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png smruthi venkat – Touring Talkies https://touringtalkies.co 32 32 அஜய் கிருஷ்ணா-ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் ‘ரகட் பாய் காதல்’ இசை ஆல்பம் https://touringtalkies.co/rugget-boy-kaathal-music-album-news/ Mon, 12 Dec 2022 19:01:37 +0000 https://touringtalkies.co/?p=28483 ‘ரகட் பாய் காதல்’ என்கிற பெயரில் ஒரு கிராமத்து மியூசிக் ஆல்பம் உருவாகியுள்ளது. இந்த ஆல்பத்தை ஸ்டார் மியூசிக் நிறுவனம் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது. ஒரு திரைப்படக் கதைக்கான முன்னோட்டமாக இந்த இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. மூவி மெக்கானிக் நிறுவனம் இந்த ஆல்பத்தைத் தயாரித்துள்ளது. இதில் கதாநாயகனாக நடித்துத் தயாரித்துள்ளவர் அஜய் கிருஷ்ணா. இவர் ‘நாடோடிகள்’, ‘நிமிர்ந்து நில்’, ‘போராளி’, ‘தரணி’, ‘அனுக்கிரகன்’, ‘கடப்புறா கலைக் குழு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘கட்டம் போட்ட சட்டை’ என்கிற படத்தையும் […]

The post அஜய் கிருஷ்ணா-ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் ‘ரகட் பாய் காதல்’ இசை ஆல்பம் appeared first on Touring Talkies.

]]>
‘ரகட் பாய் காதல்’ என்கிற பெயரில் ஒரு கிராமத்து மியூசிக் ஆல்பம் உருவாகியுள்ளது. இந்த ஆல்பத்தை ஸ்டார் மியூசிக் நிறுவனம் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது.

ஒரு திரைப்படக் கதைக்கான முன்னோட்டமாக இந்த இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. மூவி மெக்கானிக் நிறுவனம் இந்த ஆல்பத்தைத் தயாரித்துள்ளது.

இதில் கதாநாயகனாக நடித்துத் தயாரித்துள்ளவர் அஜய் கிருஷ்ணா. இவர் நாடோடிகள்’, ‘நிமிர்ந்து நில்’, ‘போராளி’, ‘தரணி’, ‘அனுக்கிரகன்’, ‘கடப்புறா கலைக் குழு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘கட்டம் போட்ட சட்டை’ என்கிற படத்தையும் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் ஸ்மிருதி வெங்கட். இவர் ‘மூக்குத்தி அம்மன்’, ‘வானம்’, ‘தீர்ப்புகள் விற்கப்படும்’, ‘மாறன்’, ‘மன்மத லீலை’, ‘தேஜாவு’ போன்ற படங்களில் நடித்திருப்பவர்.

இசை அமைத்திருப்பவர் டி.எம்.உதயகுமார். இவர் ‘பிரண்ட்ஷிப்’, ‘மை டியர் லிசா’ ஆகிய படங்களில் பணிபுரிந்தவர். அது மட்டுமல்ல குழலி’, ‘கார்முகில்’ போன்ற மியூசிக் ஆல்பங்களுக்கு இசையமைத்தவர்.

இந்த ஆல்பத்தில் பின்னணிப் பாடல் பாடி இருக்கும் பாடகி பிரியங்கா, ‘அவன் இவன்’, ‘உறியடி-2’, ‘பலூன்’, ‘நாச்சியார்’ போன்ற படங்களில் பாடியுள்ளார்.

இதில் பின்னணிப் பாடி இருக்கும் பாடகரான ஜித்தின் ராஜ் ‘பொன்னியின் செல்வன்’ மலையாள வடிவத்தில் பாடி இருப்பவர்.

ஆல்பத்தின் பாடலை எழுதியவர் ராஜா குருசாமி. இவர் ஏராளமான கிராமியப் பாடல்களை எழுதியுள்ளவர். ‘விழா’, ‘பிரண்ட்ஷிப்’, ‘ராஜ வம்சம்’, ‘பபூன்’ போன்ற படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளவர்.

இந்த ஆல்பத்திற்கு ஒளிப் பதிவு செய்துள்ளவர் அருண்குமார்.ஆர். இவர் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்கிற படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர். ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் ‘பருத்தி வீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ போன்ற படங்களில் பணியாற்றியவர்.

இந்த ஆல்பம் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளவர் மணி டான்ஸ் ஸ்டுடியோ உரிமையாளரான எம்.மணிகண்டன். இவர் இதில் ஒரு நடன இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கலை இயக்கம் – கென்னடி, படத் தொகுப்பு – கணேஷ் குமார், டைட்டில் டிசைன்ஸ் – பிரபு மாணிக்கம், நிர்வாகத் தயாரிப்பு – சித்தார்த்தன் பாரதி, பத்திரிகை தொடர்பு – சக்தி சரவணன்.

இந்த இசை ஆல்பத்தை இயக்கியுள்ளவர் ஸ்ரீவித்தகன். இவர் இயக்குநர் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ‘நாடோடிகள்’, ‘நிமிர்ந்து நில்’, ‘போராளி’, ‘வினோதய சித்தம்’ போன்ற படங்களில் பணிபுரிந்தவர்.

பொதுவாக ஆல்பம் என்றாலே நகரப் பின்னணியில் உருவாவதுண்டு. இது ஒரு கிராமத்துக் காதல் கதை. கிராமியப் பின்னணியில் அழகுற காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு பதின் பருவக் காதலால் புலி ஒன்று எப்படி பூனையாக மாறுகிறது என்பதுதான் இந்த ஆல்பத்தின் கதைக் கரு.

பொறுப்பின்றி கோயில் காளையாக முரட்டுத்தனமாக அடங்காதவனாக வேலையின்றி பொறுப்பின்றித் திரியும் ஒரு கிராமத்து வாலிபன் காதலில் விழுகிறான். கட்டுக்கடங்காத காளையாக இருந்தவனைக் காதல் எப்படிக் கட்டுத்தறிக் காளையாக மாற்றுகிறது என்பதுதான் இந்தப் பாடலின் மையக் கருத்து.

திருவள்ளூர், திருநின்றவூர், பூண்டி அணைக்கட்டு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்த இசை ஆல்பத்தை நடிகரும், இயக்குநருமான சசிகுமார் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் வெளியிட்டுள்ளார்.

அதன் பிறகு இந்த ஆல்பத்தின் மீதான கவனிப்பும், பரவலின் வீச்சும் அதிகமாகி உள்ளது. ஆயிரக்கணக்கான இசை ரசிகர்கள் இதைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்துள்ளனர்.

தற்போது இந்த மியூஸிக் ஆல்பம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது.  ஸ்டார் மியூசிக்கில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

The post அஜய் கிருஷ்ணா-ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் ‘ரகட் பாய் காதல்’ இசை ஆல்பம் appeared first on Touring Talkies.

]]>
10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த ‘தீங்கிரை’ பட பாடல் https://touringtalkies.co/theengirai-movie-song-views-10-lakhs-fans/ Sat, 10 Dec 2022 09:53:26 +0000 https://touringtalkies.co/?p=28341 மக்கள் இடையே ஒரு படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டுவது, அப்படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல்கள் ஆகும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘தீங்கிரை’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல் சினிமா ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் ‘தீங்கிரை’ படம் சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் TWD மீடியா நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர் ப்ரியா Y.தர்ஷினி தயாரிப்பில், A.கிருஷ்ணகுமார் மற்றும் T.பிரசாத் அவர்களின் இணை தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஶ்ரீகாந்த்தும், நடிகர் வெற்றியும் முதல்முறையாக […]

The post 10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த ‘தீங்கிரை’ பட பாடல் appeared first on Touring Talkies.

]]>
மக்கள் இடையே ஒரு படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டுவது, அப்படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல்கள் ஆகும்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘தீங்கிரை’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல் சினிமா ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தத் தீங்கிரை’ படம் சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் TWD மீடியா நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர் ப்ரியா Y.தர்ஷினி தயாரிப்பில், A.கிருஷ்ணகுமார் மற்றும் T.பிரசாத் அவர்களின் இணை தயாரிப்பில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் ்ரீகாந்த்தும், நடிகர் வெற்றியும் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக அபூர்வா ராவ் மற்றும் ஸ்முருதி வெங்கட் இருவரும் நடித்துள்ளனர். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடித்திருக்கிறார்.

பிரகாஷ் நிக்கி பாடலில், ஹரிஷ் அர்ஜுன் பின்னணி இசையமைக்கும் இந்த படத்திற்கு யுவராஜ் மனோகரன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குராக என்.கே.ராகுல், படத் தொகுப்பாளராக C.S.பிரேம் குமார் பணியாற்றியுள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் பிரகாஷ் ராகவதாஸ், படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

சைக்கோ கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்தத் தீங்கிரை’ படத்தின் டிரைலரை பார்த்தவர்கள், வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

மேலும் சமீபத்தில் வெளியான சித் ஸ்ரீராம் பாடிய ‘அவிழாத காலை’ என்னும் ரொமான்டிக் பாடல், இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு பத்து லட்ச பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

தற்போது இந்தத் தீங்கிரை’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தை வெளியிட படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

The post 10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த ‘தீங்கிரை’ பட பாடல் appeared first on Touring Talkies.

]]>
வனம் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/vanam-movie-review/ Sun, 28 Nov 2021 12:01:48 +0000 https://touringtalkies.co/?p=19615 இந்தப் படத்தை கோல்டன் ஸ்டார் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜெ.பி.அலெக்ஸ், கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜெ.பி.அமலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் வெற்றி, அனு சித்தாரா, ஸ்மிரிதி வெங்கட், வேல ராமமூர்த்தி, அழகம் பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுத்து, இயக்கம் – ஸ்ரீகந்தன் ஆனந்த், இசை – ரோன் எதன் யோகன், ஒளிப்பதிவு – விக்ரம் மோகன், படத் தொகுப்பு – பிரகாஷ் மாப்பு, கலை இயக்கம் – வீரமணி கணேசன், திரைக்கதை – […]

The post வனம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இந்தப் படத்தை கோல்டன் ஸ்டார் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜெ.பி.அலெக்ஸ், கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜெ.பி.அமலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் வெற்றி, அனு சித்தாரா, ஸ்மிரிதி வெங்கட், வேல ராமமூர்த்தி, அழகம் பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ஸ்ரீகந்தன் ஆனந்த், இசை – ரோன் எதன் யோகன், ஒளிப்பதிவு – விக்ரம் மோகன், படத் தொகுப்பு – பிரகாஷ் மாப்பு, கலை இயக்கம் – வீரமணி கணேசன், திரைக்கதை – சாப் ஜான் எடத்தட்டில், வசனம் – ஐசக் பாஸில் எமரால்டு. இணை இயக்கம் – ஜி.ராகவன், கே.ரபீக் ராஜா, துணை இயக்கம் – எஸ்.ராதாகிருஷ்ணன், உடைகள் வடிவமைப்பு – மீனாட்சி ஸ்ரீதரன், பாடல்கள் – ஞானக்கரவேல், நிர்வாகத் தயாரிப்பு – துளசிராமன் வெங்கடேசன், ஒலி வடிவமைப்பு – கடம் சிவா, விளம்பர வடிவமைப்பு – சோமசேகர், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், பாடல் பதிவு – பொன் அபிஷேக்.

வனங்கள் காக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்திருக்கும் படம் இது. இந்தச் சமூகக் கருத்தோடு முன் ஜென்மக் கதை, பழி வாங்கல் என்று திகில், சஸ்பென்ஸ், திரில்லர், மர்டர் என்று பலவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

‘வண்ணாத்திப்பாறை’ மலைப் பகுதியில் இருக்கும் ஒரு நுண் கலைக் கல்லூரியில் சிற்பக் கலை பயிலும் மாணவர் வெற்றி. அந்தக் கல்லூரியைக் கட்டிக் கொண்டிருக்கும்போதே ‘1053’ என்ற ஹாஸ்டல் அறையில் பெயிண்டர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து போயிருக்கிறார்.

தற்போது அதே அறையில் வெற்றி தனது நண்பர்களுடன் தங்குகிறார். அப்போது திடீரென்று அவருடைய நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் இறந்து போகிறார்கள்.

அதே நேரம் அந்தக் கல்லூரியை முன் வைத்து ஒரு டாக்குமெண்ட்ரி தயாரிப்பதற்காக வருகிறார் நாயகி ஸ்மிருதி வெங்கட். அவருக்கும் இந்த மர்ம மரணங்கள் ஆச்சரியமாக இருக்க வெற்றியும், ஸ்மிருதியும் இணைந்து இந்தக் கல்லூரியின் பூர்வாசிரமம் பற்றி விசாரிக்கத் துவங்குகிறார்கள்.

1960-களில் அந்த ஊரில் வாழ்ந்த ஜமீன்தார் வேல ராமமூர்த்தி மனைவி, பிள்ளைகள் இல்லாதவர். தன் வீட்டில் வேலை செய்த பெண்களை மிகவும் கொடுமைப்படுத்துகிறார். ஆனால் தனக்குப் பின்பு தன்னைப் பற்றிப் பலரும் புகழ்ந்து பேச வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்.

தான் வாழும் காலத்திலேயே ஒரு கல்லூரியை நிறுவி அதில் தன் சிலையை வைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதற்காக வண்ணாத்திப்பாறை அருகே கல்லூரி அமைக்க முயல்கிறார்.

அந்தப் பகுதியில் ஏற்கெனவே வசித்து வரும் ஆதிவாசிகளான பளியர்கள் இதை எதிர்க்கிறார்கள். அவர்களில் இருக்கும் மல்லி’ என்னும் அனு சித்தாரா அவர்களுக்கு வழி காட்டும் பெண்ணாகத் திகழ்கிறார்.

போலீஸை வைத்து அந்த மலைவாழ் மக்களை கொலை செய்தும், அடித்து விரட்டிய பின்பும்தான் அந்த இடத்தில் இந்த நுண் கலைக் கல்லூரியை வேல.ராமமூர்த்தி நிறுவியிருக்கிறார் என்பதை படித்துத் தெரிந்து கொள்கிறார்கள் வெற்றியும், ஸ்முருதியும்.

அதனால்தான் பழிக்குப் பழியாக இங்கே மரணங்கள் நிகழ்கின்றன என்பதை அறிந்து கொண்டவர்கள் அடுத்து மேலும் மரணம் நிகழாமல் தடுக்கப் போராடுகிறார்கள். அது அவர்களால் முடிந்ததா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

நாயகனாக வெற்றி நடித்திருக்கிறார். உடம்புக்கேற்ற சட்டை என்பதை போல அதிகமாக நடிப்பைக் காட்ட தேவையில்லாத கதை என்பதால் இந்தப் படத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் வெற்றி. எந்த எமோஷனையும் காட்டாமல் அமைதியாக வந்தது தெரியாமல், போனது தெரியாமல் ஸ்கிரீனில் இருக்கிறார்.

மல்லி’யாக நடித்திருக்கும் அனு சித்தாராவுக்கு மலையாளத்தில் பெரும் ரசிகப் பட்டாளமே உண்டு. ஆனால் தமிழில் இவருக்கான இடம் இன்னும் கிடைக்கவில்லை. இந்தப் படத்தில் வலுவான கதாபாத்திரம்தான். பெயர் சொல்லும்விதமாக நடித்திருக்கிறார்.

ஸ்முருதி வெங்கட் ‘மூக்குத்தி அம்மனில்’ ஆர்.ஜே.பாலாஜிக்கு தங்கையாக நடித்தவர். இந்தப் படத்தில் கதையை நகர்த்துவதற்கு பெரிதும் உதவியிருக்கிறார்.

வேல ராமமூர்த்தியும், அழகம் பெருமாளும்தான் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஜமீன்தாரான வேல ராமமூர்த்திக்கு அவருடைய முகமும், உடலமைப்பும் பொருத்தமாக இருந்திருக்கிறது. அழகம் பெருமாளின் கடைசி நேர டிவிஸ்ட் ரசிக்கும்படி இருக்கிறது. அவருடைய இயல்பான நடிப்பே அவரது கதாபாத்திரங்களை எல்லா படங்களிலும் காப்பாற்றி வருகிறது. இதிலும் அப்படியே..!

படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவுதான். வனப் பகுதிகள்தான் படத்தின் கதைக் களம் என்றான பின்பு அதை பிரம்மாண்டமாக காட்டாமல் விடக் கூடாதே..? வனத்திற்கே உரித்தான பசுமையையும், மர்மத்தையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன். ரான் ஈத்தன் யோஹானின் பின்னணி இசையும் குறிப்பிடும்படி இருக்கிறது. ஆனால், பாடல்கள் மனதில் ஒட்டவில்லை.

தப்புத் தண்டா’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீகந்தன் ஆனந்த்தின் அடுத்த படம் இது. முதல் படத்தை திருட்டை மையமாக வைத்து உருவாக்கியவர், இந்தப் படத்தை சஸ்பென்ஸ்-திரில்லர் டைப்பில் இயக்கியிருக்கிறார்.

படத்தின் மிகப் பெரிய மைனஸே திரைக்கதைதான். எடுத்துக் கொண்ட கதைக் களம் திகில் ஃபேண்டஸி என்றாலும் காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லாததால் பார்க்கும் நமக்கு எந்தவிதத் தாக்கமும் ஏற்படவில்லை.

தொடக்கம் முதல் இறுதிவரையிலும் ரசிகர்களால் எளிதில் ஊகிக்கக் கூடிய காட்சிகள்தான் இருக்கின்றன. அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட் மட்டுமே திருப்தியடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அழுத்தம் இல்லாததால் அதுவும் எடுபடாமல் போய்விட்டது.

ஸ்மிருதி வெங்கட்டை ஆவணப்பட இயக்குநர் என்பதோடு நிறுத்தியிருக்கலாம். தேவையில்லாமல், அவர் நாயகனின் சிறு வயது தோழி என்ற ஒரு புதிய திரைக்கதையை எழுதி, அதை சட்டென்று நாயகன் கண்டறிந்து “என்னைத் தெரியலையா..?” என்றெல்லாம் கேட்டுவிட்டு ஒரு டூயட் பாடுவது இந்தத் திரைக்கதைக்கு பொருத்தமே இல்லாமல் போய்விட்டது.

இதேபோல அனு சித்தாரா வேல ராமமூர்த்தியிடம் பழங்குடியின மக்களின் கஷ்டங்களைப் பற்றிப் பேசும் காட்சிகளெல்லாம் வலிந்து திணிக்கப்பட்டவையாக தோன்றுகின்றன.

திகில், ஃபேண்டஸி, பீரியட் என்று மூன்று தளங்களில் இந்தப் படம் மாறி மாறிப் பயணித்தாலும் ஒரு கட்டத்தில் திகில் படமாகவும் இல்லாமல், ஃபேண்டஸி படமாகவும் இல்லாமல் தடுமாறிவிட்டது.

படத்தின் டைட்டிலுக்குப் பின்பு பட்டாம்பூச்சி ஒன்று கூட்டிலிருந்து புறப்படும் காட்சியும், அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று நம்மை கூர்ந்து கவனிக்க வைத்தன.  ஆனால், அதன் பிறகு வரும் காட்சிகளில் பார்வையாளர்களை திகிலூட்ட இயக்குநர் எடுத்திருக்கும் காட்சிகள் புஸ்வானமாகிவிட்டன.

மொத்தத்தில் மறு பிறவி, முன் ஜென்ம தோற்றத்தைக் காட்டும் மாயக் கண்ணாடி, வன தேவதை என்று சுவாரஸ்யமான கதைக் களங்களை கையில் வைத்துக் கொண்டு அழகாக எடுத்திருக்க வேண்டிய படத்தை முழுமையாக்க இயக்குநர் தவறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

RATINGS : 2.5 / 5

The post வனம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>