Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
silk – Touring Talkies https://touringtalkies.co Mon, 03 Apr 2023 02:28:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png silk – Touring Talkies https://touringtalkies.co 32 32 நம்பியாருக்கு  அதிர்ச்சி கொடுத்த சில்க்! https://touringtalkies.co/silk-that-shocked-nambiar/ Mon, 03 Apr 2023 02:28:04 +0000 https://touringtalkies.co/?p=31219 80,90களில் கவர்ச்சியில் கொடிகட்டி பறந்த சில்க் ஸ்மிதா,  மறைந்துவிட்டாலும் இன்றும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில், பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்றை, நடன கலைஞர் புலியூர் சரோஜா பகிர்ந்து இருக்கிறார். “சில்க், திரையில் கவர்ச்சி காட்டக்கூடிய நடிகை என்றாலும் அவருடைய குணம் முற்றிலும் மாறுபட்டது. யாருடனும் சகஜமாக பேசாத நடிகை இவர். கவர்ச்சி நடிகையாக லட்சக்கணக்கில் அப்போது அவர் சம்பாதித்தாலும் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. ஒரு […]

The post நம்பியாருக்கு  அதிர்ச்சி கொடுத்த சில்க்! appeared first on Touring Talkies.

]]>
80,90களில் கவர்ச்சியில் கொடிகட்டி பறந்த சில்க் ஸ்மிதா,  மறைந்துவிட்டாலும் இன்றும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில், பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்றை, நடன கலைஞர் புலியூர் சரோஜா பகிர்ந்து இருக்கிறார்.

“சில்க், திரையில் கவர்ச்சி காட்டக்கூடிய நடிகை என்றாலும் அவருடைய குணம் முற்றிலும் மாறுபட்டது. யாருடனும் சகஜமாக பேசாத நடிகை இவர். கவர்ச்சி நடிகையாக லட்சக்கணக்கில் அப்போது அவர் சம்பாதித்தாலும் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை.

ஒரு படத்தில் நம்பியார் வில்லனாக நடித்தார்.  அதில் நம்பியாரும், சில்க் ஸ்மிதாவும் நடனம் ஆடுவது போல் பாடல் காட்சி இருந்தது.  ஆனால் சில்க், ‘வயதான அவருடன் ஆட விருப்பம் இல்லை. இவரை எல்லாம் இப்போது யார் நடிப்பதற்கு வர சொன்னார்கள்’ என்று  அவர் முன்பாகவே பேசிவிட்டார்.

நம்பியார் கோபப்படாமல் பெருந்தன்மையாக சிரித்துவிட்டு பரவாயில்லை என்று சொன்னார்.

ஆனால் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. உடனே சில்க்கிடம்,  ‘முதலில் நம்பியாரிடம் மன்னிப்பு கேள். அடுத்து அவருடன் ஆடு. இல்லாவிட்டால் இனி உன்னுடன் நான் வேலை செய்ய மாட்டேன்ட என்று கோபமாக கூறினேன்.

அதன் பிறகு நம்பியாரிடம் மன்னிப்பு கேட்ட சில்க், நடனமும் ஆடினார்” என கூறியிருக்கிறார் புலியூர் சரோஜா.

 

The post நம்பியாருக்கு  அதிர்ச்சி கொடுத்த சில்க்! appeared first on Touring Talkies.

]]>
“தற்கொலைக்கு முதல்நாள் சில்க் ஸ்மிதா…!”: கண்கலங்கிய மனோபாலா https://touringtalkies.co/silk-who-was-hanged-the-next-day-after-saying-goodbye/ Wed, 29 Mar 2023 01:42:47 +0000 https://touringtalkies.co/?p=31093 80,90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் சில்க் ஸ்மிதா. ஆனால் திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவர் குறித்து இயக்குநர் மனோபாலா, ஒரு யுடியுப் சேனலில் பேசினார். “ஒருமுறை சில்க் ஸ்மிதா ஷூட்டிங்கில் இருந்த போது அந்த பகுதியில் சிலர், குழந்தைகள் விளையாடும் சொப்பு சாமான்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். அதை பார்த்த சில்க் ஸ்மிதா அவர்களிடம் சென்று சிறிய தோசைக்கல், கடாய் சட்டி எல்லாம் வாங்கி வந்தார்.  இதை ஏன் வாங்கியிருக்கிறாய் என கேட்டேன். பதில் சொல்லாமல், சிரிப்புடன் சென்றவிட்டார். மறுநாள் […]

The post “தற்கொலைக்கு முதல்நாள் சில்க் ஸ்மிதா…!”: கண்கலங்கிய மனோபாலா appeared first on Touring Talkies.

]]>
80,90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் சில்க் ஸ்மிதா. ஆனால் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

அவர் குறித்து இயக்குநர் மனோபாலா, ஒரு யுடியுப் சேனலில் பேசினார்.

“ஒருமுறை சில்க் ஸ்மிதா ஷூட்டிங்கில் இருந்த போது அந்த பகுதியில் சிலர், குழந்தைகள் விளையாடும் சொப்பு சாமான்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். அதை பார்த்த சில்க் ஸ்மிதா அவர்களிடம் சென்று சிறிய தோசைக்கல், கடாய் சட்டி எல்லாம் வாங்கி வந்தார்.  இதை ஏன் வாங்கியிருக்கிறாய் என கேட்டேன். பதில் சொல்லாமல், சிரிப்புடன் சென்றவிட்டார்.

மறுநாள் தோசைக்கல்லை காதில் தோடாகவும், குட்டி சட்டியை இடுப்பில் அணிந்த பெல்ட்டுடனும் இணைத்து வந்து ஆச்சரியப்படுத்தினார்.

தற்கொலை செய்துகொள்வதற்கு ஒரு நாள் முன்பாக தேம்பி, தேம்பி அழுதுக் கொண்டிருந்த நிலையில், எதுவும் பேசாமல் என் முகத்தை பார்த்துவிட்டு நான் வரேன் சார் என கூறினார். ஆனால் மறுநாள் தூக்கிட்டு சடலமாக கிடந்தார் என்ற செய்தி என்னை உருக்குலைய வைத்தது” என மனோபாலா உருக்கமாக தெரிவித்தார்.

The post “தற்கொலைக்கு முதல்நாள் சில்க் ஸ்மிதா…!”: கண்கலங்கிய மனோபாலா appeared first on Touring Talkies.

]]>