Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
sibiraj – Touring Talkies https://touringtalkies.co Mon, 05 Sep 2022 16:51:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png sibiraj – Touring Talkies https://touringtalkies.co 32 32 3 வேடங்களில் சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது..! https://touringtalkies.co/sibi-sathyaraj-acting-in-3-charaters-in-a-new-movie/ Mon, 05 Sep 2022 16:51:28 +0000 https://touringtalkies.co/?p=24333 Latha Babu & Durgaini of Duvin studios private limited சார்பில் தயாரிப்பாளர்கள் லதா பாபு & துர்க்கைனி தயாரிப்பில் இயக்குநர் இளையராஜா கலியபெருமாளின் இயக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் புதிய படமொன்றில் நடிக்கிறார். இப்படத்தில் சிபி சத்யராஜூடன் திலீபன் (‘வத்திக்குச்சி’ புகழ்), கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ், ராஜ் அய்யப்பா (‘வலிமை’), பழைய ஜோக் தங்கதுரை, விஜய் டிவி குரேஷி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். கார்த்திக் வெங்கட்ராமன் (ஒளிப்பதிவு), சுந்தரமூர்த்தி KS […]

The post 3 வேடங்களில் சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது..! appeared first on Touring Talkies.

]]>
Latha Babu & Durgaini of Duvin studios private limited சார்பில் தயாரிப்பாளர்கள் லதா பாபு & துர்க்கைனி தயாரிப்பில் இயக்குநர் இளையராஜா கலியபெருமாளின் இயக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் புதிய படமொன்றில் நடிக்கிறார்.

இப்படத்தில் சிபி சத்யராஜூடன் திலீபன் (வத்திக்குச்சி’ புகழ்), கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ், ராஜ் அய்யப்பா (‘வலிமை’), பழைய ஜோக் தங்கதுரை, விஜய் டிவி குரேஷி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

கார்த்திக் வெங்கட்ராமன் (ஒளிப்பதிவு), சுந்தரமூர்த்தி KS (இசை), அருண் சங்கர் துரை (கலை இயக்கம்), சக்தி சரவணன் (சண்டை பயிற்சி இயக்கம்), லாரன்ஸ் கிஷோர் (படத் தொகுப்பு), ராஜ் (புகைப்படங்கள்), பாரதிராஜா (எக்ஸிகியூட்டிவ் மேனேஜர்), ஆகியோர் இந்தப் படத்தில் பணிபுரிகின்றனர்.

இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இதற்கு முன் இயக்குநர்கள் கணேஷ் விநாயக், ஜெகன் ராஜசேகர் மற்றும் வினோத் DL ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

ஒரு கொலையைச் சுற்றி நடக்கும் இன்வஸ்டிகேசன் திரில்லராக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் சிபி சத்யராஜ் 3 வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார். அவருக்கு ஜோடியாக  எந்தப் பெண் முக்கிய கதாப்பாத்திரமும் இருக்காது. ஆனால். இப்படம் 25  முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நகரும் வித்தியாசமான கதையில் உருவாகிறது.

சென்னையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சென்னை மாநகரின் பல இடங்களில் ஒரேகட்டமாக இந்தப் படம் உருவாகவுள்ளது.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு  செப்டம்பர் 5 இன்று காலை  படக் குழுவினர் கலந்து கொள்ள,  எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

The post 3 வேடங்களில் சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது..! appeared first on Touring Talkies.

]]>
‘மதுபானக்கடை’ கமலக்கண்ணனின் புதிய படம் ‘வட்டம்’ டிஸ்னி ஓடிடியில் வெளியாகிறது https://touringtalkies.co/vattam-movie-release-news/ Tue, 26 Jul 2022 01:16:53 +0000 https://touringtalkies.co/?p=23418 ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குநர் கமலக்கண்ணனின் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் ‘வட்டம்’. நம் வாழ்க்கையின் வித்தியாசமான தருணங்களை அழகாகப்  படம் பிடித்துக் காட்டும் இப்படம் வரும் ஜூலை 29-ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக ப்ரீமியர் ஆகிறது. இதையொட்டி ‘வட்டம்’ படக் குழுவினர் இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசும்போது, […]

The post ‘மதுபானக்கடை’ கமலக்கண்ணனின் புதிய படம் ‘வட்டம்’ டிஸ்னி ஓடிடியில் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குநர் கமலக்கண்ணனின் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் வட்டம்’.

நம் வாழ்க்கையின் வித்தியாசமான தருணங்களை அழகாகப்  படம் பிடித்துக் காட்டும் இப்படம் வரும் ஜூலை 29-ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக ப்ரீமியர் ஆகிறது.

இதையொட்டி வட்டம்’ படக் குழுவினர் இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசும்போது, “இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கிய மதுபான கடை’ திரைப்படம் எனக்கு பிடித்திருந்தது, அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம்.  இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம்.

சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே ஏதாவது ஒரு குற்ற உணர்வு இருக்கும். அதைத்தான் இந்தப் படம் பேசுகிறது. நடிகர் சிபிதான் இந்தக் கதையை எடுத்து செல்ல சரியாக இருப்பார் என நினைத்து, இந்த படத்திற்குள் அவரை கொண்டு வந்தோம். பின்னர் அதுல்யா, ஆண்ட்ரியா இருவரும் இந்தப் படத்திற்குள் வந்து மேலும் பலம் சேர்த்தனர்.

படத்தில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களும் இந்தப் படத்தை மெருக்கேற்ற தங்களது பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. வரும் ஜூலை 29-ம் தேதி இந்தப் படம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது, அவர்களுடன் இது எங்களுக்கு மூன்றாவது படம். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்…” என்றார்.

நடிகர் சிபிராஜ் பேசும்போது, “இந்த வட்டம்’ படம் எனது திரைப் பயணத்தில் மிக முக்கியமான படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைந்தது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து கதைகளை மையப்படுத்தியே படம் எடுத்து வருகிறார்கள்.

இந்தக் கதையை நான் கேட்கும்போது, நான் தற்போது நடித்து வரும் படங்களிலிருந்து மாறுபட்டு, இந்த கதை ஒரு வித்தியாசமான உணர்வைக் கொடுத்தது. படத்தின் திரைக்கதையும் சிறப்பாக இருந்தது.  இயக்குநர் கமலகண்ணன், இயக்குநர் மணிவண்ணன் போல கருத்துக்கள் கொண்டவர். மிக சிறப்பாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.

இது எனது முதல் ஓடிடி படம். முதல் படமே டிஸ்னி போன்ற பெரிய தளத்தில் அமைந்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. நான் ஆண்ட்ரியாவின் மிகப் பெரிய ரசிகன், அவருடன் பணி புரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது…” என்றார்.

இயக்குநர் கமலகண்ணன் பேசும்போது, “இந்தப் படத்தில் நிறைய வித்தியாசமான தருணங்கள் இருக்கின்றன. எனது முதல் படம் நிறைய வரவேற்பை கொடுத்தது. அந்த படத்தில் இருந்து இந்தப் படம் முழுதாக வேறுபட்டு இருக்கும்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் பணிபுரிந்தபோது, இயக்குநராக எனது வேலையை மட்டுமே செய்யக் கூடிய மன சுதந்திரம் கிடைத்தது.

நாம் அதிகமாக திரில்லர் படங்களை விரும்ப ஆரம்பித்துவிட்டோம். ஆனால்,  இந்த சமூகத்தில் அதைவிட பல திரில்லிங் தருணங்கள் இருக்கிறது. அது இந்த திரைப்படத்திலும் இருக்கிறது.

இது டிஸ்னி ஓடிடி நிறுவனத்தின் மூலம் பலரை சென்றடையும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான பார்வையை இந்தப் படம் முன் வைக்கிறது. படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்…” என்றார்.

நடிகை ஆண்ட்ரியா பேசும்போது, “ட்ரீம் வாரியர் என்ற பெரிய நிறுவனம்தான் இந்த படத்தை இவ்வளவு நாள் தாங்கி பிடித்து இருந்தது. நிவாஸின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது.

சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் இரவில் காரில் ஷூட்டிங்கில் சுற்றி ரோட்டுக் கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் கமலக்கண்ணன் படத்தை மிக தெளிவாக எடுத்துள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு உங்களது ஆதரவை தாருங்கள்…” என்றார்.

நடிகை அதுல்யா ரவி பேசும்போது, “எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த, தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. இந்த ‘வட்டம்’ படம் என் மனதிற்கு நெருக்கமான படம். இந்த படம் கோயம்புத்தூர் பகுதிகளில் படமாக்கப்பட்டது. நான் நடிக்கும் முதல்  ஓடிடி படம் இது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இப்படம் இருக்கும்..” என்றார்.

நக்கலைட்ஸ் சசி பேசும்போது, “எனக்கும், சிபி சாருக்கும் காம்பினேஷன் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அவருடன் பயணித்த அனுபவம் சிறப்பாக இருந்தது. நடிக்கும் ஆர்வத்துடன் சுற்றி கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய பேனரில் நடித்தது பெருமையாக இருக்கிறது. இயக்குநருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

இசையமைப்பாளர் நிவாஸ் K.பிரசன்னா பேசும்போது, “இந்தப் படத்தில் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் வித்தியாசமான முயற்சிகளை செய்ய நிறைய ஸ்கோப் இருந்தது. தயாரிப்பாளர் பிரபு உடன் இணைந்ததும் மகிழ்ச்சி. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ட்ரீம் வாரியருக்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றிப் படமாக அமையும். இது ஒரு முக்கியமான தத்துவத்தை சொல்லும் படமாக இருக்கும்…” என்றார்.

வரும் ஜூலை 29-ம் தேதியன்று  டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வட்டம்’ நேரடி திரைப்படமாக வெளியாகிறது.

The post ‘மதுபானக்கடை’ கமலக்கண்ணனின் புதிய படம் ‘வட்டம்’ டிஸ்னி ஓடிடியில் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
‘மாயோன்’ இயக்குநருக்கு தங்க சங்கிலி பரிசளித்த நாயகன் சிபிராஜ் https://touringtalkies.co/the-man-who-gifted-the-gold-chain-to-the-director-of-mayon-was-sibraj/ Thu, 30 Jun 2022 17:15:14 +0000 https://touringtalkies.co/?p=22953 தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து, பலத்த போட்டிகளுக்கு இடையே வெளியான திரைப்படம் ‘மாயோன்’. எளிதில் யூகிக்க இயலாத  திரைக்கதை, நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பரிபூரண ஒத்துழைப்பு, ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைக்கும் வகையில் வித்தியாசமான விளம்பர உத்தி, திரையலக  பிரபலங்களின் பாரட்டு.. என பலவித அம்சங்களால் ‘மாயோன்’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. தமிழகம் முழுவதும் ‘மாயோன்’ திரையிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இதனால் படக் […]

The post ‘மாயோன்’ இயக்குநருக்கு தங்க சங்கிலி பரிசளித்த நாயகன் சிபிராஜ் appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து, பலத்த போட்டிகளுக்கு இடையே வெளியான திரைப்படம் ‘மாயோன்’.

எளிதில் யூகிக்க இயலாத  திரைக்கதை, நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பரிபூரண ஒத்துழைப்பு, ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைக்கும் வகையில் வித்தியாசமான விளம்பர உத்தி, திரையலக  பிரபலங்களின் பாரட்டு.. என பலவித அம்சங்களால் ‘மாயோன்’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

தமிழகம் முழுவதும் ‘மாயோன்’ திரையிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இதனால் படக் குழுவினர் உற்சாகமடைந்திருக்கின்றனர்.

எதிர்பார்த்ததைவிட கூடுதல் வெற்றி, ‘மாயோன்’ திரைப்படத்திற்கு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர், பட குழுவினரை அலுவலகத்திற்கு வரவழைத்து, வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்த நிகழ்வில் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு, படத்தின் நாயகனான சிபிராஜ் தங்கச் சங்கிலியொன்றை பரிசளித்தார்.

தமிழில் ‘மாயோன்’ திரைப்படத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்ததால், வரும் ஜூலை 7-ம் தேதியன்று தெலுங்கில் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

இதற்காக ஜுலை 1-ம் தேதியன்று ஹைதராபாத்தில் நடைபெறும் பட விழாவில் தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

இவர்களுடன் ‘கட்டப்பா’ சத்யராஜ் சார் உள்ளிட்ட ‘மாயோன்’ படக் குழுவினரும் கலந்து கொண்டு, தெலுங்கு ரசிகர்களுக்கு ‘மாயம் செய்யும் மணிவண்ணா’வை அறிமுகப்படுத்துகிறார்கள்.

The post ‘மாயோன்’ இயக்குநருக்கு தங்க சங்கிலி பரிசளித்த நாயகன் சிபிராஜ் appeared first on Touring Talkies.

]]>
மாயோன் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/maayoon-movie-review/ Mon, 27 Jun 2022 06:51:58 +0000 https://touringtalkies.co/?p=22861 “கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்” என்று ‘தசாவதாரம்’ படத்தில் கமல் பேசிய வசனத்திற்கு தற்போது 14 வருடங்களுக்குப் பிறகு எங்களது படத்தில் பதில் கிடைத்திருப்பதாக ‘மாயோன்’ படக் குழு தெரிவித்திருந்தது. உண்மையில் அந்தப் பதில் படத்தில் இருந்ததா என்பதை பார்ப்போம். புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் கூறிய “இந்த உலகில் எல்லாமே ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது அல்லது எதுவுமே ஆச்சரியப்படத்தக்க வகையில் இல்லை…” என்கிற கூற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது இந்தப் படத்தின் கதை. இதுவே […]

The post மாயோன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்” என்று ‘தசாவதாரம்’ படத்தில் கமல் பேசிய வசனத்திற்கு தற்போது 14 வருடங்களுக்குப் பிறகு எங்களது படத்தில் பதில் கிடைத்திருப்பதாக ‘மாயோன்’ படக் குழு தெரிவித்திருந்தது. உண்மையில் அந்தப் பதில் படத்தில் இருந்ததா என்பதை பார்ப்போம்.

புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் கூறிய “இந்த உலகில் எல்லாமே ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது அல்லது எதுவுமே ஆச்சரியப்படத்தக்க வகையில் இல்லை…” என்கிற கூற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது இந்தப் படத்தின் கதை. இதுவே படத்தின் டைட்டிலிலும் காட்டப்படுகிறது.

தை மையமாக வைத்துக்கொண்டுதான் இந்தக் கதையை வடிவமைத்து இருக்கிறார் இயக்குநர் கிஷோர். அந்தக் கதைக்கு நியாயம் சேர்ப்பிக்கும் அளவுக்கான  திரைக்கதையை எழுதி, படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாயோன் மலையில் பள்ளி கொண்ட கிருஷ்ணர் கோயில் உள்ளது. இது புராதன கோவில். மகாபாரத் கதையில் இடம் பெற்றிருக்கும் புகழ் பெற்ற கோவிலாகும்.

இந்தக் கோவிலின் உள்ளே புதையல் இருப்பதாக பேச்சுவாக்கில் பரவிய பேச்சு தமிழகம் முழுவதும் உள்ளது. அந்தக் கோவிலில் இரவு நேரத்தில் அமானுஷ்ய சக்திகளின் ஆதிக்கம் இருப்பதால் யாராவது அந்தக் கோவிலில் இரவு நேரத்தில் இருந்தால் சித்தப் பிரமை பிடித்தாற்போலாகிவிடுவார்கள் என்கிற பேச்சும் ஊர் முழுக்க இருக்கிறது.

இந்த நேரத்தில் இந்தக் கோவிலின் புதையல் அறையைக் கண்டுபிடித்து அந்தப் புதையலை அடைய நினைக்கிறார் ஹரிஷ் பெரடி. அவர் தொல்லியல் துறையிலேயே அதிகாரியாக வேலை செய்து வருகிறார். அகில உலக சிலை கடத்தல் கும்பலுடன் நெருங்கிய நட்பு வைத்திருக்கிறார் இவர்.

இவருக்கு இந்த சிலை கடத்தல் மற்றும் புதையலை தேடியெடுக்கும் பணியில் உதவி செய்ய வருகிறார் நாயகன் சிபிராஜ்.  

ஏற்கெனவே அந்தக் கோயிலை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வுக்கு தொல்லியல் துறை அதிகாரியான கே.எஸ்.ரவிக்குமார் தலைமை வகிக்கிறார்.

இப்போது இவருக்குக் கீழே வேலை பார்க்கும் ஹரிஷ் பெரடி, சிபிராஜ் இருவரும் சேர்ந்து அந்தக் கோயிலில் இருக்கும் ரகசிய அறையில் உள்ள புதையலை எடுத்து வெளிநாட்டிற்குக் கடத்த நினைக்கிறார்கள்.

அந்த புதையல் அறை எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடிக்க சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட டீம் முயற்சி செய்கிறது.

திட்டமிட்டபடி அந்தப் புதையல் அறையை அவர்கள் கண்டறிந்தார்களா.. இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு நேர்மையுடன் நடந்து நடித்திருக்கிறார்கள் சிபிராஜும், தான்யாவும்.!

தன் கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சிபிராஜ் நடித்திருக்கிறார். தொல்லியல் துறையின் ஆராய்ச்சியாளரான சிபிராஜ். எந்த ஒரு பழங்காலப் பொருளையும் பார்த்ததுமே அது பற்றிய விவரங்களை சொல்லும் திறமை படைத்தவர்.

உடலை அலட்டிக் கொள்ளாமல் மூளை பலத்துடனேயே இயங்கும் கேரக்டர் என்பதால் செஸ் விளையாட்டை மனதில் இருத்தியே தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளை முடிவு செய்யும் திறமைக்காரர்.  இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சை கடைசிவரையிலும் சரியாகவே செய்திருக்கிறார் சிபி.

பெரிதாக முனைப்பாக நடிக்க வாய்ப்பில்லையென்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் இயக்குநரின் இயக்குதல் திறமையால் நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார் சிபிராஜ். கடைசி டிவிஸ்ட் எதிர்பாராதது என்றாலும் அதை வெளிப்படுத்தும்விதத்தில், அவரது அப்பாவை கொஞ்சமாக ஞாபகப்படுத்தியிருக்கிறார் சிபிராஜ்.

நாயகியான தான்யா ரவிச்சந்திரனும் ஒரு அதிகாரியாக நடித்திருக்கிறார். குளோஸப் காட்சிகளில் அழகாக மிரட்டியிருக்கிறார் தான்யா. இவருக்கும் சிபிராஜூக்குமான காதல் காட்சிகள் இல்லாதது படத்தில் ஒரு குறைதான். ஒரு டூயட்டாவது வைத்திருந்திருக்கலாம்.

வில்லன் ஹரிஷ் பெராடி வழக்கம்போல தன் பார்வையாலும், வசன உச்சரிப்பாலும் மிரட்டி இருக்கிறார். சிபி ராஜின் கூட்டாளியாக வரும் பகவதி பெருமாள் கண்களை உருட்டி விழித்து பேசுவதற்கு இந்த படத்தில் நிறையவே வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தன்னுடைய மெச்சூர்டான அதிகாரி என்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ப நடித்திருக்கிறார். கமிஷன் பேசிவிட்டு செல்லும் அமைச்சரிடம் சாத்வீகமாக நடந்து கொண்டு, கூட இருந்தே குழி பறிக்கும் ஹரீஷிடம் விரட்டி வேலை வாங்கும்விதத்திலும் சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார்.

தொல்லியல் துறையின் உயர் அதிகாரியாக வரும் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். கிருஷ்ணன் கோவிலில் பரம்பரை பாதுகாவலராக வரும் ராதாரவியும் தனது அனுபவ நடிப்பால் எளிதாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் பாராட்டுக்குரியவர்கள் மூன்று பேர். ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், இசையமைப்பாளர்கள்தான்.

ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத் பள்ளி கொண்ட பெருமாளை காட்டியிருக்கும்விதமே கை கூப்ப வைக்கிறது. அந்தப் பிரம்மாண்டமான சிலையை செய்து கொடுத்திருக்கும் கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

பழங்காலத்து கோவில்களும், கோவில் சார்ந்த இடங்களும் கம்பீரமாக ஒளிப்பதிவில் புத்தம் புதியதாக காட்சியளிக்கிறது. கோவில் மற்றும் அதனுள்ளே நடக்கும் மர்மமான சம்பவங்களை மிரட்டும் வகையில் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இரவு நேரத்தில் புதையலை தேடியலையும் அந்தக் காட்சிகள் முழுவதும் கேமிராமேனின் ஆதிக்கம்தான். பாம்பு துரத்தும் காட்சிகளில் எத்தனை கிலோ மீட்டர் தூரம் ஓளிப்பதிவாளர் ஓடினார் என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் காட்சிக்கு அத்தனை நீளம் தேவையில்லை என்பதும் உண்மைதான்.

கிராபிக்ஸ் காட்சிகள்தான் கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இதைவிட சிறப்பாகவும் படமாக்கியிருக்கலாம். ஆனால் படத்தின் பட்ஜெட்டை மனதில் வைத்து இவ்வளவுதான் செய்ய முடிந்ததுபோலும்..!

இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பல இடங்களில் வசனங்களை நிரப்பியிருக்கிறது. மாயோன்’ பாடலும், பாடல் காட்சியும் மனதில் தெய்வீகத் தன்மையைக் கொடுக்கிறது. கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பையும் கூட்டியிருக்கிகிறது.

கிருஷ்ணனின் புல்லாங்குழல் இசையும், கந்தர்வப் பெண்கள் இசைக்கிற இசையும் நம் காதுகளை தேனமுதமாக வந்தடைகிறது. இசைஞானியின் இந்த இசைக் கோர்வை நிச்சயமாக இனிமேல் கர்நாடக இசை கச்சேரிகளில் நாம் கேட்க வேண்டிய இசை என்றே தோன்றுகிறது..!

படத்தின் முக்கியமான களமான மாயோன்’ மலையின் பள்ளி கொண்ட பெருமாள் கோயில் அமைந்திருக்கும் இடமும், அதற்கான புராண விளக்கமும் நம்பும்படியாக எழுதப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் அமைந்த மகாபாரத விளக்கம் அருமை.

மேலும் அந்தக் கோவிலில் நடப்பதாகச் சொல்லப்படும் மாய, மந்திர விஷயங்களுக்கெல்லாம் அறிவியல் ரீதியாக கடைசியில் சிபிராஜ் விளக்கம் கொடுப்பதும் திரைப்படமாக ஏற்கக் கூடியதுதான்.!

இயக்குநர் இடைவேளைக்கு பின்பு படத்தை எப்படி முடிப்பது என்பதில் சற்றுத் தடுமாறியிருந்தாலும் சாமர்த்தியமாக கிளைமாக்ஸ் காட்சியை அமைத்திருக்கிறார். ஆத்திகர்களின் மனம் கோணாமலும், விஞ்ஞானத்தின் உண்மையையும் சொல்லி படத்தை முடித்திருக்கிறார்.

எதிர்பாராத சில டிவிஸ்ட்டுகள் மூலமாக கடைசிவரையிலும் ஒரு திரில்லிங் அனுபவத்தோடு படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

நம் பழங்காலத்து கோவில்களின் பின்னணியையும், அதன் பெருமைகள் மற்றும் அதில் இருக்கும் பொக்கிஷங்கள் மற்றும் அதை பாதுகாக்கும் வழிகளை இந்தப் படத்தின் மூலமாகச் சொல்லியிருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

மாயோன் – அறிவியலையும் மீறிய ஆன்மீகக் கதை..!

RATING : 3.5 / 5

The post மாயோன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
சிபிராஜூக்கு பிரபாஸ் கேட்காமலேயே செய்த உதவி..! https://touringtalkies.co/prabhas-help-to-sibiraju-without-asking/ Wed, 11 May 2022 08:32:46 +0000 https://touringtalkies.co/?p=21940 Boss Movies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் K.செல்லையா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ரங்கா’. இந்தப் படத்தில் சிபிராஜ், நிகிலா விமல் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் வினோத் இயக்கத்தில் பரபரப்பான கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இந்த ‘ரங்கா’ திரைப்படம் வரும் மே 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சில நாட்களுக்கு முன்பாக பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலை இயக்குநர் அருண் பேசும்போது, “இது […]

The post சிபிராஜூக்கு பிரபாஸ் கேட்காமலேயே செய்த உதவி..! appeared first on Touring Talkies.

]]>
Boss Movies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் K.செல்லையா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ரங்கா’.

இந்தப் படத்தில் சிபிராஜ், நிகிலா விமல் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் வினோத் இயக்கத்தில் பரபரப்பான கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இந்த ‘ரங்கா’ திரைப்படம் வரும் மே 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையொட்டி இப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சில நாட்களுக்கு முன்பாக பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலை இயக்குநர் அருண் பேசும்போது, “இது எங்கள் டீமில் இருக்கும் எல்லோருக்கும் முக்கியமான படம். நண்பர் வினோத்தின் பார்வை மிக வித்தியாசமாக பிரம்மாண்டமாக இருக்கும், அவர் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அவர் தரும் இன்புட் துல்லியமாக இருக்கும். காஷ்மீரின் உடைந்த பாலம் ஒன்றை உருவாக்கி ஷீட் செய்தோம். இந்தப் படம் நன்றாக வந்துள்ளது. ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்குமென்று நம்புகிறேன்…” என்றார்.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “இந்த ரங்கா படம் சாதாரணமாக எல்லாரும் நினைப்பது மாதிரி இல்லாமல் வித்தியாசமான படமாக வந்துள்ளது. அதற்கேற்ற செலவில்  நல்ல பட்ஜெட்டில் மிக அருமையாக எடுத்துள்ளார்கள். ரோஜா’ படத்திற்கு பிறகு காஷ்மீரை மிக அற்புதமாக காட்டியுள்ளார்கள். இந்த மாதிரி கதையை வினோத் சொல்லும்போது தயாரிப்பாளர் விஜய் முழுமையாக செய்து எடுத்து வந்ததற்கு வாழ்த்துகள். சிபிராஜ் கதையைத் தேர்ந்தெடுப்பது வித்தியாசமாக இருக்கும். இப்படமும் அதே போல் நல்ல படமாக இருக்கும். இந்த படத்தின் உழைப்புக்கு பலன் கிடைக்கும். வாழ்த்துக்கள்..” என்றார்.

இயக்குநர் வினோத் பேசும்போது, “இந்த ‘ரங்கா’ எனது முதல் படம். நிறைய தடைகளைத் தாண்டிதான் இங்கு வந்துள்ளேன். எல்லோருக்கும் அந்த தடைகள் இருக்கும். அது எனக்கும் குழுவிற்கும் இருந்தது. எல்லாவற்றையும் கடந்து படம் இப்போது ரிலீஸிக்கு வந்தது மகிழ்ச்சி. எனது குடும்பம் மிகப் பெரிய ஆதரவு தந்தார்கள். அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் விஜய்யிடமிருந்துதான் இந்தப் படம் துவங்கியது. அவருக்கு நன்றி.

இந்தக் கதைக்கு சிபிராஜ் சார் கச்சிதமாக இருப்பார் என அவரை அணுகினோம். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. சிபிராஜ் இப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். நிகிலா விமல் இந்தப்படத்தில் மிக முக்கியமான பாத்திரம். இப்படத்தில் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தார்கள்.

இப்படத்தில் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் ஜானர் மாறிக் கொண்டே இருக்கும். மோனிஷூக்கு நீச்சல் தெரியாது. ஆனால் தெரியும் என சொல்லி நடிக்க வந்தார். அவர் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது…” என்றார்.

நடிகர் சிபிராஜ் பேசும்போது, “இந்த ‘ரங்கா’ எனக்கு தற்செயலாக அமைந்த படம். படத்தின் தயாரிப்பாளர் விஜய் கே.செல்லையா எனக்கு நல்ல ஃப்ரண்ட். அவர்தான் ஒரு நாள் எனக்கு போன் செய்து, “வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கதை இருக்கு. கேட்குறீங்களா..?”ன்னு கேட்டார். கதை கேட்டதும் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அதனால் உடனே சம்மதம் தெரிவித்துட்டேன்.

கதைப்படி இந்தப் படத்தின் நாயகனுக்கு ஏலியன் சிண்ட்ரோம் இருக்கும். அவன் நினைப்பதை அவன் கை கேட்காது. இப்படியொரு வித்தியாசமான கதை. இதனாலேயே எனக்கு இந்தக் கதை பிடித்துப் போனது. ஆனால், வினோத் புது இயக்குநர் என்பதால் எப்படி எடுப்பாரோ என்ற தயக்கமும் இருந்தது.

ஆனால், காஷ்மீரில் ஃபர்ஸ்ட் ஷெட்யூலிலேயே இயக்குநரின் திறமை தெரிந்துவிட்டது. மிக, மிக அட்டகாசமாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். நானே ஒரு தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளேன். ஆனால், காஷ்மீர் போய் ஷூட் செய்ய வேண்டும் என்பதை நான் ஒத்துக் கொண்டிருக்கவே மாட்டேன்,  ஆனால், தயாரிப்பாளர் விஜய் ஸார், இதற்கு பெரிய மனதுடன் ஒத்துக் கொண்டு இந்தப் படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுத்துள்ளார். அவருக்கு நன்றி.

இப்படத்தின் டிரெயிலரை பிரபாஸ் சாருக்கு, அப்பாதான் அனுப்பியிருக்கிறார். எல்லோருக்கும் அனுப்புவதுபோல அவருக்கும் அனுப்பியிருக்கார். பிரபாஸ் ஸாருக்கு ட்ரைலர் பிடித்ததும், “நானும் ஷேர் பண்றேன்” என்று சொல்லி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார்.

இங்கே நாம் கேட்டால்கூட சிலர் ஷேர் செய்யமாட்டாங்க. ஆனால், நான் கேட்காமலேயே பிரபாஸ் சார் ஷேர் செய்து  அந்த டிரெயிலர் நிறைய பேரை சென்றடைய உதவினார்.

1000 கோடிவரை வசூல் செய்த ‘பாகுபலி’ பட ஹீரோ எந்தவிதப் பந்தாவும் இல்லாமல் என்னைப் போன்ற ஒரு வளர்ந்துவரும் நடிகரை இப்படி ஊக்கப்படுத்தும்விதம் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது.

இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட வாய்ப்புகள் வந்தாலும் திரையரங்கிற்குக் கொண்டு வருவதில்தான் பிடிவாதமாக இருந்தார் தயாரிப்பாளர் விஜய். படத்தை சக்திவேல் சார் ரிலீஸ் செய்வதில் மிகவும் மகிழ்ச்சிதான். எப்போதும், என்னுடைய படங்களுக்கு ஆதரவு தந்துள்ளீர்கள். அதேபோல் இந்தப் படமும் உங்களுக்கு பிடிக்கும்…” என்றார்.

The post சிபிராஜூக்கு பிரபாஸ் கேட்காமலேயே செய்த உதவி..! appeared first on Touring Talkies.

]]>
‘கபடதாரி’ டீசரை வெளியிடும் ‘இசைப் புயல்’ பத்ம பூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்! https://touringtalkies.co/a-r-rahman-release-kabadathaari-movie-teaser/ Thu, 12 Nov 2020 07:36:17 +0000 https://touringtalkies.co/?p=9984 கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன் தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. G.தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை-வசனம் எழுத, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் நவம்பர் 13-ம் தேதி டீசர் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 13-ம் தேதி மாலை 5 மணிக்கு ‘கபடதாரி’ டீசரை வெளியிடுகிறார். திரைப்பட ‌வெளியீடு மற்றும் தயாரிப்பு என தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும் […]

The post ‘கபடதாரி’ டீசரை வெளியிடும் ‘இசைப் புயல்’ பத்ம பூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்! appeared first on Touring Talkies.

]]>
கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன் தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’.

G.தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை-வசனம் எழுத, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் நவம்பர் 13-ம் தேதி டீசர் வெளியாக உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 13-ம் தேதி மாலை 5 மணிக்கு ‘கபடதாரி’ டீசரை வெளியிடுகிறார்.

திரைப்பட ‌வெளியீடு மற்றும் தயாரிப்பு என தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும் தயாரிப்பாளர் G.தனஞ்ஜெயனின் தயாரிப்பில் கடந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற ‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு ‘கபடதாரி’ வெளியாக உள்ளதால் ரசிகர்களிடமும், திரையுலகிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ‘கபடதாரி’ படத்தின் டீசரை வெளியிடுவதால், அப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

‘கபடதாரி’ தரத்துடன் மற்றும் வித்தியாசமான திரைக்கதையோடு ரசிகர்களை வெகுவாக கவரும் படமாக இருக்கும் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஸைமன் கே.கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.

டிசம்பர் மாதம் ‘கபடதாரி’ திரைக்கு வரவிருக்கிறது.

The post ‘கபடதாரி’ டீசரை வெளியிடும் ‘இசைப் புயல்’ பத்ம பூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்! appeared first on Touring Talkies.

]]>