Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
short film – Touring Talkies https://touringtalkies.co Thu, 16 Nov 2023 00:03:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png short film – Touring Talkies https://touringtalkies.co 32 32 சர்வதேச திரைப்பட விழாவில் 70 விருதுகளை வென்ற குறும்படம்.! https://touringtalkies.co/the-short-film-won-70-awards-at-international-film-festivals/ Thu, 16 Nov 2023 00:03:56 +0000 https://touringtalkies.co/?p=37956   சர்வதேசத் திரைப்பட விழாக்களில் 70-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள ‘சரஸ்’ என்ற படத்தை ஜூட் பீட்டர் டேமியான் என்பவர் இயக்கியுள்ளார். இவர் சார்ட்டட் அக்கவுன்டன்ட். இதுபற்றி அவர் கூறும்போது, “முதலில் ‘சஷ்தி’ என்ற அரைமணி நேரப் படத்தை இயக்கினேன். இதில் செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி உட்பட பலர் நடித்தனர். கடந்த ஆண்டு 35 சர்வதேச பட விழாக்களில் 75 க்கும் மேற்பட்ட விருதுகளை இது பெற்றது. அடுத்து ‘சரஸ்’ குறும்படத்தை இயக்கினேன். இதில் நீலிமா […]

The post சர்வதேச திரைப்பட விழாவில் 70 விருதுகளை வென்ற குறும்படம்.! appeared first on Touring Talkies.

]]>
 

சர்வதேசத் திரைப்பட விழாக்களில் 70-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள ‘சரஸ்’ என்ற படத்தை ஜூட் பீட்டர் டேமியான் என்பவர் இயக்கியுள்ளார். இவர் சார்ட்டட் அக்கவுன்டன்ட். இதுபற்றி அவர் கூறும்போது, “முதலில் ‘சஷ்தி’ என்ற அரைமணி நேரப் படத்தை இயக்கினேன். இதில் செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி உட்பட பலர் நடித்தனர்.

கடந்த ஆண்டு 35 சர்வதேச பட விழாக்களில் 75 க்கும் மேற்பட்ட விருதுகளை இது பெற்றது. அடுத்து ‘சரஸ்’ குறும்படத்தை இயக்கினேன். இதில் நீலிமா ராணி, என்.ஸ்ரீகிருஷ்ணா, வினைதா சிவகுமார், மாஸ்டர் சஞ்சீவ் ஆகியோர் நடித்தனர். இதுவும் பட விழாக்களில் 70-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

The post சர்வதேச திரைப்பட விழாவில் 70 விருதுகளை வென்ற குறும்படம்.! appeared first on Touring Talkies.

]]>
‘கருவறை’ குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா..! https://touringtalkies.co/ilayaraja-praised-the-director-of-karuvaara-short-film/ Wed, 30 Aug 2023 10:17:30 +0000 https://touringtalkies.co/?p=35783 இவி.கணேஷ்பாபு கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படம். இந்த படத்திற்கு  அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து  இசையமைப்பாளர் இளையராஜா ’கருவறை’ குறும்பட இயக்குனர் இவி.கணேஷ்பாபுவை அழைத்து பாராட்டி இருக்கிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மேதகு தெலுங்கானா ஆளுநர், திரையுலகின் முக்கிய ஆளுமைகள் ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் விருதுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிரபல  OTT தளத்தில் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருவறை முழுமையாக வேறு […]

The post ‘கருவறை’ குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா..! appeared first on Touring Talkies.

]]>
இவி.கணேஷ்பாபு கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படம். இந்த படத்திற்கு  அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து  இசையமைப்பாளர் இளையராஜா ’கருவறை’ குறும்பட இயக்குனர்
இவி.கணேஷ்பாபுவை அழைத்து பாராட்டி இருக்கிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மேதகு தெலுங்கானா ஆளுநர், திரையுலகின் முக்கிய ஆளுமைகள் ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் விருதுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பிரபல  OTT தளத்தில் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருவறை முழுமையாக வேறு எந்த தளத்திலும் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

The post ‘கருவறை’ குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா..! appeared first on Touring Talkies.

]]>
“ஒரு படத்திற்கு 77 விருதுகளா?” ‘சஷ்தி’ குறும் பட விழாவில் ஆச்சர்யப்பட்ட கே.பாக்யராஜ் https://touringtalkies.co/77-awards-for-one-film-k-bhagyaraj-surprised-at-shashti-short-film-festival/ Tue, 29 Nov 2022 18:48:45 +0000 https://touringtalkies.co/?p=27838 குறும் படங்கள் சினிமாவில் நுழைவதற்கான விசிட்டிங் கார்டு என்று சொல்வார்கள். அந்தவகையில் ஒரு சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆக 30 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவரான ஜூட் பீட்டர் டேமியான், டைரக்சன் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவில் நுழையும் முதல்படியாக ‘சஷ்தி’ என்கிற குறும் படத்தை இயக்கியுள்ளார். Cathy & Raphy பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள இந்த குறும் படம், 30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ளது. செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, டாக்டர் SK காயத்ரி, ஹாரிஸ், மாஸ்டர் […]

The post “ஒரு படத்திற்கு 77 விருதுகளா?” ‘சஷ்தி’ குறும் பட விழாவில் ஆச்சர்யப்பட்ட கே.பாக்யராஜ் appeared first on Touring Talkies.

]]>
குறும் படங்கள் சினிமாவில் நுழைவதற்கான விசிட்டிங் கார்டு என்று சொல்வார்கள். அந்தவகையில் ஒரு சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆக 30 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவரான ஜூட் பீட்டர் டேமியான், டைரக்சன் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவில் நுழையும் முதல்படியாக ‘சஷ்தி’ என்கிற குறும் படத்தை இயக்கியுள்ளார்.

Cathy & Raphy பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள இந்த குறும் படம், 30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ளது. செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, டாக்டர் SK காயத்ரி, ஹாரிஸ், மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த ‘சஷ்தி’ குறும்படம் கிட்டத்தட்ட 35 சர்வதேச  திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் 77 விருதுகளை வென்றுள்ளது.

இந்த குறும் பட திரையிடலுடன் கூடிய பத்திரிக்கையாளர் சந்திப்பும் விருது பெற்ற கலைஞர்களை கவுரவிக்கும் நிகழ்வும் நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரைக்கதை மன்னன் இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டார். மேலும் இந்த குறும் படத்தில் பணியாற்றி பல்வேறு பிரிவுகளில் சர்வதேச விருதுகளை வென்ற கலைஞர்களுக்கு அந்த விருதுகளை இயக்குனர் கே.பாக்யராஜ் தன் கைகளால் வழங்கி கௌரவித்தார்.

இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “75 விருதுகள் வாங்கிய ஒரு குறும் படத்திற்கு இவ்வளவு எளிமையாக ஒரு விழா நடப்பது ஆச்சரியமான ஒன்றுதான். சினிமாவிற்காக தான் பார்த்து வந்த வேலையை ஒதுக்கிவைத்துவிட்டு சினிமாவின் மீதான ஆர்வத்தால் இயக்குநர் ஜூட் பீட்டர் டேமியான் இதில் நுழைந்துள்ளார்.

சினிமா ஆசை வந்துவிட்டால் அப்படித்தான். இயக்குநர் லோகேஷ் கனகராஜ்கூட இப்படி வங்கியில் பணிபுரிந்து விட்டு சினிமா மீதான ஆர்வத்தால் அதிலிருந்து வெளியேறி வந்து இன்று மிகப் பெரிய அளவில் சாதித்துள்ளார். வெறுமனே படம் இயக்க ஆசைப்பட்டால் மட்டும் போதாது என அதற்காக ஒரு கோர்ஸ் படிச்சிட்டு வந்து ஜூடு பீட்டர் டேமியன் அதை செய்திருக்கிறார் என்பது இன்னும் ஆச்சரியப்படுத்துகிறது.

நான் படம் இயக்கிய காலகட்டங்களில் படம் ரிலீஸாச்சா, மக்கள் கை தட்டினார்களா அது போதும் என இருந்து விட்டேன். ஆனால் இந்தப் படத்தின் இயக்குனர் எவ்வளவு தெளிவாக இருந்திருந்தால் இத்தனை திரைப்பட விழாக்களுக்கு விண்ணப்பித்து இத்தனை விருதுகளை கைப்பற்றி இருப்பார்..? தயவு செய்து எனக்கும் இந்த திரைப்படங்களை அவார்டுக்கு அனுப்புவது பற்றி கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள்.. காலம்போன கடைசியில் என்றாலும் இன்னும்கூட எனக்கும் வாய்ப்பு இருக்கிறது. தேவைப்படும்போது அதை பயன்படுத்திக் கொள்வேன்.

இந்த குறும் படத்தை பார்த்தபோது கடைசியாக அந்த சிறுவன் தனது தாய் பற்றி கேட்கும் கேள்வி மட்டும் சற்று நெருடலாக இருந்தது. தாயின் அன்பை சந்தேகப்பட்டாலும் அது கொஞ்சம் வேறு மாதிரி இருந்திருக்கலாமோ என்கிற எண்ணமும் தோன்றியது. இயக்குநர் ஜூடு பீட்டர் டேமியன் சினிமாவிலும் கால் பதித்து மிகப்பெரிய வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினார் கே.பாக்யராஜ்.

The post “ஒரு படத்திற்கு 77 விருதுகளா?” ‘சஷ்தி’ குறும் பட விழாவில் ஆச்சர்யப்பட்ட கே.பாக்யராஜ் appeared first on Touring Talkies.

]]>
சாதிக்க நினைப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் ‘தனித்திரு’ குறும் படம்..! https://touringtalkies.co/thanithiru-short-film-gives-confidence-to-those-who-want-to-achieve/ Thu, 24 Nov 2022 10:02:30 +0000 https://touringtalkies.co/?p=27554 சென்னை அரசு எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரியின் தலைவர் நடிகர் ராஜேஷ் முன்னிலையில் இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.ஆர்.  வெளியிட்ட குறும் படம் ‘தனித்திரு’. திரைப்படக் கல்லூரி மாணவரும், நடிகர் கமல்ஹாசன்  மற்றும் இயக்குநர் ஜி.என்.ஆர் குமரவேலனிடம் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய S.K.செந்தில் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார். புறக்கணிப்பின் வலி இளம் வயதில் மிகக் கொடியது. அதை கடந்து வெல்வது என்பது பெரும் போராட்டம். அதிலும் சினிமாவில் சாதிப்பது மரணப் போராட்டம். பல கோடி […]

The post சாதிக்க நினைப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் ‘தனித்திரு’ குறும் படம்..! appeared first on Touring Talkies.

]]>
சென்னை அரசு எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரியின் தலைவர் நடிகர் ராஜேஷ் முன்னிலையில் இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.ஆர்.  வெளியிட்ட குறும் படம் ‘தனித்திரு’.

திரைப்படக் கல்லூரி மாணவரும், நடிகர் கமல்ஹாசன்  மற்றும் இயக்குநர் ஜி.என்.ஆர் குமரவேலனிடம் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய S.K.செந்தில் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார்.

புறக்கணிப்பின் வலி இளம் வயதில் மிகக் கொடியது. அதை கடந்து வெல்வது என்பது பெரும் போராட்டம். அதிலும் சினிமாவில் சாதிப்பது மரணப் போராட்டம். பல கோடி கனவுகளில் ஒன்றிரன்டே நனவாகும். மற்றனைத்தும் தொடர் அவமானங்களால் மரித்துப் போகும். அப்படியிருந்தும் சினிமாவில் சாதிக்க மட்டும் ஏன் இத்தனை துடிப்பு? மற்ற எந்த துறையினரையும்விட இதில் வெல்பவர்கள் அடையும் அங்கீகாரமும், பெரும் செல்வமும், இறவாப் புகழுமே காரணம்.

அந்த வகையில் யார் உன்னை புறக்கணித்தாலும் தன்னம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம்.  நீ வென்ற பிறகு உன்னை ஒதுக்கியவர்களே உன் தயவைத் தேடி வருவார்கள் என்பதை பொட்டில் அடித்தாற் போல் சொல்லவரும் குறும் படம்தான் இந்த ‘தனித்திரு’.

தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் பயின்று,  சன் தொலைக்காட்சியில் தலைமை நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றிய S.K.செந்தில்  இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தற்போது சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வாழ்கையில் ஜெயிக்கப் போராடும் அனைவருக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கும்.

இந்தப் படத்தில் விஜய் ஷங்கர் புதுமுகமாக அறிமுகமாகி உள்ளார். இக்குறும்படத்தில் ஊர்வசி அர்ச்சனா, இயக்குநர் சமுத்திரகனி, இயக்குநர், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், எம். எஸ். பாஸ்கர் ஆகியோருடன்  திரையுலகின் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்களும்  தங்கள் பங்களிப்பை தந்திருக்கின்றனர் என்பது ‘தனித்திரு’ குறும்படத்தின் தனிச் சிறப்பு.

கிளைமேக்சில் வரும் திருப்புமுனை காட்சி படத்தின் நாயகனுக்கு மட்டுமல்ல, கொஞ்சம் ரூட்டை மாற்றி வண்டியை திருப்பினால் யார் வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற ஆகப் பெரும் நம்பிக்கையை நமக்குள் விதைக்கும்.

ஆசைப்பட்டது கிடைக்காமல் போனால் என்ன? செத்தா விட்டோம்? விரும்பிய ஒன்று கைகூடா விட்டால் வாழ்க்கை அதோடு முடிந்துவிடப் போவதில்லை! சற்று மாற்றி யோசித்தால் உலகையே நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கலாம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, தற்கொலை எண்ணமே நமக்குள் வேண்டாம் என்றும் சொல்கிறது ‘தனித்திரு’ குறும்படம்.

இந்தப் படத்தின் வெளியீட்டு விழா தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் மாணவர்கள் மற்றும் கல்லூரி தலைவர் நடிகர் ராஜேஷ் முன்னிலையில் இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.ஆர். அவர்கள் வெளியிட இனிதே நடந்தேறியது.

‘தனித்திரு’ குறும் படத்தை பார்த்த மாணவர்களும் இப்படம் தங்கள் வாழ்வில் தன்னம்பிக்கை ஏற்படுத்தி இருப்பதாக இயக்குநர் S.K.செந்தில் உடன் நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர்.

இயக்குநர் S.K.செந்தில் விரைவில் வெள்ளித்திரையில் படம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சாதிக்க நினைப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் ‘தனித்திரு’ குறும் படம்..! appeared first on Touring Talkies.

]]>
இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு குறும் படம் https://touringtalkies.co/corona-awareness-short-film-directed-by-music-director-ss-kumaran/ Mon, 24 May 2021 11:17:52 +0000 https://touringtalkies.co/?p=15251 கடந்த வருடம் தொடங்கிய கொரோனாவின் தாக்கம், இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலையாக உருமாறி, இந்திய மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி, மருந்துகள் என அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இன்னொரு பக்கம் ஒவ்வொரு தனி நபரும் இந்தச் சூழலில் சுய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக வெளியில் செல்லும்போது எப்போதும் முக கவசம் அணிதல் என்பது, ஒரு அனிச்சை செயலாகவே நமக்குள் நடந்திட […]

The post இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு குறும் படம் appeared first on Touring Talkies.

]]>
கடந்த வருடம் தொடங்கிய கொரோனாவின் தாக்கம், இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலையாக உருமாறி, இந்திய மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது.

ஒரு பக்கம் தடுப்பூசி, மருந்துகள் என அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இன்னொரு பக்கம் ஒவ்வொரு தனி நபரும் இந்தச் சூழலில் சுய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாக வெளியில் செல்லும்போது எப்போதும் முக கவசம் அணிதல் என்பது, ஒரு அனிச்சை செயலாகவே நமக்குள் நடந்திட வேண்டும். இது கொரோனா தொற்றில் இருந்து நம்மையும், நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பாதுகாத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்தவிதமாக பொது இடங்களில் முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இசையமைப்பாளரும், இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன், நோ கொரோனா மூவ்மென்ட்’ என்கிற பெயரில் ஒரு விழிப்புணர்வு குறும் படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

தெருவில் சுற்றும் பிச்சைக்காரர் ஒருவர்கூட, முக கவசம் அணிய வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் உணர்த்தும் விதமாக இந்த குறும் படம் தயாராகியுள்ளது.

இந்தக் குறும் படத்தை சாய் வில்லேஜ் ட்ரஸ்ட்’ என்கிற தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார் எஸ்.எஸ்.குமரன்.

இந்தக் கொரோனா காலகட்டத்தில் மக்கள் தங்கள் சுய பாதுகாப்பில் சிறிதளவு அலட்சியம் காட்டினாலும்கூட, அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை வலியுறுத்தும்விதமாகத்தான் இந்த குறும் படம் உருவாகியுள்ளது.

இந்த குறும் படத்திற்கான படப்பிடிப்பை அரசு அறிவித்திருக்கும் சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து இயக்கியுள்ளார் எஸ்.எஸ்.குமரன். சென்னை அசோக் நகர் பகுதிகளில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்தக் குறும் படத்தை நடிக சுஹாசினி மணிரத்னமும், நடிகர் காளி வெங்கட்டும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இந்தக் குறும் படம் வெளியாகி பெரும் பாராட்டினைப் பெற்று வருகிறது.

The post இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு குறும் படம் appeared first on Touring Talkies.

]]>