Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
shoba chandrasekar – Touring Talkies https://touringtalkies.co Sat, 13 Apr 2024 14:38:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png shoba chandrasekar – Touring Talkies https://touringtalkies.co 32 32 நண்பர் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு சென்ற ராகவா லாரன்ஸ்…அனைவரையும் அழைத்து அன்பான வேண்டுகோள்! https://touringtalkies.co/%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/ Sat, 13 Apr 2024 13:04:39 +0000 https://touringtalkies.co/?p=40996 நடிகர் விஜய் கட்டியுள்ள கோவிலுக்கு அவரது தாயாருடன் சென்ற ராகவா லாரன்ஸ் அந்த கோவிலுக்குள் சென்று போது தெய்வீகமான அதிர்வுகளை உணர்ந்ததாகவும் எல்லோரும் அந்த கோவிலுக்கு சென்று சாய் பாபவை தரிசிக்கும்படி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, அனைவருக்கும் வணக்கம்…. நண்பன் விஜய் கொரடூரில் புதியதாக கட்டியிருக்கின்ற சாய் பாபா கோவிலுக்கு அவரது தாயாருடன் இன்று சென்றேன். நான் ராகவேந்திரர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும்பொழுது அவர் கோவிலுக்கு வந்தார் அவர் வந்தது மட்டுமில்லாமல் பாடலையும் பாடி வாழ்த்தினார். […]

The post நண்பர் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு சென்ற ராகவா லாரன்ஸ்…அனைவரையும் அழைத்து அன்பான வேண்டுகோள்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் கட்டியுள்ள கோவிலுக்கு அவரது தாயாருடன் சென்ற ராகவா லாரன்ஸ் அந்த கோவிலுக்குள் சென்று போது தெய்வீகமான அதிர்வுகளை உணர்ந்ததாகவும் எல்லோரும் அந்த கோவிலுக்கு சென்று சாய் பாபவை தரிசிக்கும்படி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது,

அனைவருக்கும் வணக்கம்….

நண்பன் விஜய் கொரடூரில் புதியதாக கட்டியிருக்கின்ற சாய் பாபா கோவிலுக்கு அவரது தாயாருடன் இன்று சென்றேன்.

நான் ராகவேந்திரர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும்பொழுது அவர் கோவிலுக்கு வந்தார் அவர் வந்தது மட்டுமில்லாமல் பாடலையும் பாடி வாழ்த்தினார்.

இன்று நான் இந்த கோவிலுக்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பன் விஜய்க்கு எனது மனபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவிலுக்குள் சென்றவுடன் தூய தெய்வீகமான அதிர்வுகள் ஏற்பட்டதை உணர்ந்தேன். அனைவரும் இந்த கோவிலுக்கு சென்று சாய்பாபாவை தரிசிக்கிமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராகவா லாரன்ஸ்.

என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

The post நண்பர் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு சென்ற ராகவா லாரன்ஸ்…அனைவரையும் அழைத்து அன்பான வேண்டுகோள்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் தன் அம்மா, அப்பா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் https://touringtalkies.co/actor-vijay-files-case-against-his-mother-and-father-in-city-civil-court/ Sun, 19 Sep 2021 06:36:22 +0000 https://touringtalkies.co/?p=18106 நடிகர் விஜய் தனது அம்மாவான ஷோபா சந்திரசேகர் மற்றும், அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்ற ஆண்டு திடீரென்று விஜய்யின் பெயரில் ஒரு கட்சியைத் துவக்கினார். இதற்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போதே தனது பெயரை எந்தக் காலத்திலும் புதிதாகத் தொடங்கியிருக்கும் கட்சி மற்றும் அரசியலில் பயன்படுத்தக் கூடாது என தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வழக்கறிஞர் நோட்டிஸ் ஒன்றையும் அனுப்பியிருந்தார். அதில் தனது தந்தை சந்திரசேகர் மற்றும் அவரது […]

The post நடிகர் விஜய் தன் அம்மா, அப்பா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் தனது அம்மாவான ஷோபா சந்திரசேகர் மற்றும், அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்ற ஆண்டு திடீரென்று விஜய்யின் பெயரில் ஒரு கட்சியைத் துவக்கினார். இதற்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போதே தனது பெயரை எந்தக் காலத்திலும் புதிதாகத் தொடங்கியிருக்கும் கட்சி மற்றும் அரசியலில் பயன்படுத்தக் கூடாது என தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வழக்கறிஞர் நோட்டிஸ் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

அதில் தனது தந்தை சந்திரசேகர் மற்றும் அவரது விஜய் மக்கள் இயக்கம், செயல்பாடுகள் மூலம் ஏற்படும் எந்தவொரு விளைவிற்கும் தனது கட்சிக்காரர் பொறுப்பேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தன்னுடைய ஒப்புதலின்றி,  ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியும், ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பையும் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ளதற்கு தனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை எனவும் விஜய் குறிப்பிட்டிருந்தார்.

ரசிகர்கள் தனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அந்தக் கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, அந்தக் கட்சியில் பணியாற்றவோ வேண்டாம் என்று தனது ரசிகர்களையும் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்தக் கட்சியை வாபஸ் பெறும் முயற்சியில் எஸ்.ஏ.சி. இறங்கவில்லை. மாறாக புதிதாக உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் ரகசியமாக நியமித்து வந்து கொண்டிருந்தார். இதையறிந்த நடிகர் விஜய் தனது தந்தை மீதும், அந்தக் கட்சியில் செயலாளர் என்று தேர்தல் கமிஷனில் கொடுத்த விண்ணப்பத்தில் சொல்லப்பட்டிருந்த தனது தாயார் ஷோபா மீதும் 15-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவில் தனது தந்தை உட்பட அவரது அமைப்பின் நிர்வாகிகள் தனது பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.

அந்த வழக்கில், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் எந்தவித நடவடிக்கைகளுக்கும் தான் அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும் அவரது கட்சியிலும், அமைப்பிலும் தன் பெயரையும், புகைப்படங்களையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சிவில் வழக்கில் தனது தந்தை, தாயார் மற்றும்அவரது அமைப்பின் நிர்வாகிகள் உட்பட 11 பேரை பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார்.

இந்த மனு வரும் 27-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

The post நடிகர் விஜய் தன் அம்மா, அப்பா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் appeared first on Touring Talkies.

]]>
“கட்சியைப் பதிவு செய்ய வேண்டாம்…” – எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் பல்டி..! https://touringtalkies.co/diector-s-a-chandrasekar-wrote-a-letter-to-election-commission-for-not-to-register-his-party-name/ Sun, 22 Nov 2020 05:15:48 +0000 https://touringtalkies.co/?p=10279 நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனின் பெயரில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒரு கட்சியை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய மனு அளித்திருந்தார். இந்தச் செய்தி வெளியானதும் அதிர்ச்சியான நடிகர் விஜய், “அந்தக் கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம்…” என்றும், “அந்தக் கட்சியில் தனது புகைப்படத்தையோ, தனது பெயரையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடு்ப்பேன்…” என்றும் ஒரு அறிக்கையின் மூலமாக தனது […]

The post “கட்சியைப் பதிவு செய்ய வேண்டாம்…” – எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் பல்டி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனின் பெயரில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒரு கட்சியை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய மனு அளித்திருந்தார்.

இந்தச் செய்தி வெளியானதும் அதிர்ச்சியான நடிகர் விஜய், “அந்தக் கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம்…” என்றும், “அந்தக் கட்சியில் தனது புகைப்படத்தையோ, தனது பெயரையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடு்ப்பேன்…” என்றும் ஒரு அறிக்கையின் மூலமாக தனது அப்பாவையே எச்சரித்திருந்தார்.

இந்த நிலைமையில் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியும், நடிகர் விஜய்யின் அம்மாவுமான ஷோபா சந்திரசேகரும் கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார்.

இதற்கடுத்து கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த பத்மநாபன் என்பவரும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்க.. இப்போதைக்கு அந்தக் கட்சியின் செயலாளராக அறிவிக்கப்பட்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் மட்டுமே தனித்து விடப்பட்டிருந்தார்.

இடையில் பல நாட்கள் அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில் பல சமரசப் பேச்சுக்கள் நடைபெற்று வந்தது இறுதியில் ஒரு தீர்வுக்கு வந்திருக்கிறது.

இதனால், “விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டாம்…” என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆக, நடிகர் விஜய்யை வைத்து உருவான ஒரு மாத கால சர்ச்சை சட்டென்று முடிவுக்கு வந்திருக்கிறது.

The post “கட்சியைப் பதிவு செய்ய வேண்டாம்…” – எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் பல்டி..! appeared first on Touring Talkies.

]]>
“எஸ்.ஏ.சந்திரசேகர் முதலில் தன் வீ்ட்டில் இருக்கும் குழப்பத்தை சரி செய்யட்டும்..” – நடிகை கஸ்தூரியின் அட்வைஸ் https://touringtalkies.co/actress-kasthuri-advise-to-sachandrasekar/ Thu, 19 Nov 2020 04:40:59 +0000 https://touringtalkies.co/?p=10176 சென்னையில் நேற்று ஒரு தனியார் அமைப்பு நடத்திய விழாவில்  கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, விழா முடிந்த பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “எனக்கு இப்போதும் பல கட்சிகளில் இருந்தும் அழைப்பு வருகிறது. ஆரம்பித்த கட்சி, ஆரம்பிக்கப் போகும் கட்சி என்றில்லாமல் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் அழைப்பு வந்தவண்ணம் உள்ளது. ஆனால், பெண்களை எந்தக் கட்சி மரியாதையாக நடத்துகிறதோ.. பெண்மையை எந்தக் கட்சி போற்றுகிறதோ.. நான் வணங்கும் இந்து மதத்தையும், இந்து மதக் கடவுளர்களையும் யார் […]

The post “எஸ்.ஏ.சந்திரசேகர் முதலில் தன் வீ்ட்டில் இருக்கும் குழப்பத்தை சரி செய்யட்டும்..” – நடிகை கஸ்தூரியின் அட்வைஸ் appeared first on Touring Talkies.

]]>
சென்னையில் நேற்று ஒரு தனியார் அமைப்பு நடத்திய விழாவில்  கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, விழா முடிந்த பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “எனக்கு இப்போதும் பல கட்சிகளில் இருந்தும் அழைப்பு வருகிறது. ஆரம்பித்த கட்சி, ஆரம்பிக்கப் போகும் கட்சி என்றில்லாமல் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் அழைப்பு வந்தவண்ணம் உள்ளது.

ஆனால், பெண்களை எந்தக் கட்சி மரியாதையாக நடத்துகிறதோ.. பெண்மையை எந்தக் கட்சி போற்றுகிறதோ.. நான் வணங்கும் இந்து மதத்தையும், இந்து மதக் கடவுளர்களையும் யார் அவதூறு பேசாமல் இருக்கிறார்களோ.. அந்தக் கட்சியில்தான் நான் இணைவேன்..” என்றார்.

“எஸ்.ஏ.சந்திரசேகர் துவக்கியுள்ள கட்சியில் சேர்வீர்களா..?” என்று கேட்டதற்கு, “அவர் எல்லாருக்கும் அப்பாதான். எனக்கும் அப்பாதான். நான் அவருடைய இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன்.

இப்போது அவர்ஆரம்பித்திருக்கும் கட்சியினால் அவருடைய வீட்டிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவருடைய மனைவியும், மகன் விஜய்யும் அதை எதிர்த்திருக்கிறார்கள்.

முதலில் எஸ்.ஏ.சி. தன் வீட்டில் இருக்கும் குழப்பத்தை சரி செய்ய வேண்டும். பின்பு கட்சி வேலைகளை அவர் பார்ப்பது அவருக்கும் நல்லது.. எல்லாருக்கும் நல்லது..” என்று அட்வைஸ் செய்தார்.

The post “எஸ்.ஏ.சந்திரசேகர் முதலில் தன் வீ்ட்டில் இருக்கும் குழப்பத்தை சரி செய்யட்டும்..” – நடிகை கஸ்தூரியின் அட்வைஸ் appeared first on Touring Talkies.

]]>