Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
santhosh prathap – Touring Talkies https://touringtalkies.co Fri, 26 May 2023 12:50:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png santhosh prathap – Touring Talkies https://touringtalkies.co 32 32  விமர்சனம்: கழுவேத்தி மூர்க்கன்  https://touringtalkies.co/kazhuvethi-moorkan-review/ Fri, 26 May 2023 02:47:06 +0000 https://touringtalkies.co/?p=32798 கரடு முரடான மூர்க்க சாமியும், பொறுப்பான பூமி நாதனும் இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அதை கண்டு கொள்ளாமல் நண்பர்களாய் பழகி வருகின்றனர். இவர்களின் நட்பு அரசியல் தலைவர்களின் ஆதாயத்திற்கு தடையாய் நிற்க இதில் பூமி கொல்லப்படுகிறான். அந்தப்பழி மூர்க்கன் மீது விழுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை! கிடுக்கு மிடுக்கான உடல் மொழியுடன் அனல் பறக்க மூர்க்கனாய் வரும் அருள்நிதி ஆக்ஷனில் மிரட்டுகிறார். இந்தப்படம் அவரது சினிமா கேரியரில் இனி ஆக்ஷன் […]

The post  விமர்சனம்: கழுவேத்தி மூர்க்கன்  appeared first on Touring Talkies.

]]>
கரடு முரடான மூர்க்க சாமியும், பொறுப்பான பூமி நாதனும் இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அதை கண்டு கொள்ளாமல் நண்பர்களாய் பழகி வருகின்றனர். இவர்களின் நட்பு அரசியல் தலைவர்களின் ஆதாயத்திற்கு தடையாய் நிற்க இதில் பூமி கொல்லப்படுகிறான். அந்தப்பழி மூர்க்கன் மீது விழுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை!

கிடுக்கு மிடுக்கான உடல் மொழியுடன் அனல் பறக்க மூர்க்கனாய் வரும் அருள்நிதி ஆக்ஷனில் மிரட்டுகிறார். இந்தப்படம் அவரது சினிமா கேரியரில் இனி ஆக்ஷன் படங்களை அவர் பக்கம் இழுத்து வரும். பூமியாக சந்தோஷ் பிரதாப். அவரால் இயலும் வரைக்கு அவர் நல்ல நடிப்பை கொடுத்து இருந்தாலும் அவர் உடல் மொழி அந்தக் கதாபாத்திரத்தோடு ஒட்டவில்லை. இன்னும் நல்ல தேர்வாக தேர்ந்து எடுத்து இருக்கலாம்.

துஷாரா விஜயனின் திமிரான நடிப்பு ரசிக்க வைக்கிறது. ஆனால் அவரது காதலை இன்னும் ஆழமாக காட்டி இருக்கலாம். இதர நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கின்றனர்.

இரு சமுதாயங்களை பற்றிப் பேசும் கதை என்பதால் மிக மிக கவனமாக கையாள வேண்டிய ஆளுமை இயக்குனருக்கு தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ஆளுமையாக இருந்து படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குநர் கவுதம் ராஜ். முதல் பாதியில் சில இடங்களில் ஏற்கனவே நாம் பார்த்து பழகிய காட்சிகள் இருந்தாலும் இரண்டாம் பாதி முழுக்க அனலின் உச்சமாக இருக்கிறது. டி இமானின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது.

மொத்தத்தில் ரசிக்க வைக்கும் படம்.

The post  விமர்சனம்: கழுவேத்தி மூர்க்கன்  appeared first on Touring Talkies.

]]>
‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..! https://touringtalkies.co/kondraal-paavam-movie-shooting-was-wrapped/ Tue, 15 Nov 2022 17:53:15 +0000 https://touringtalkies.co/?p=27113 EINFACH ஸ்டுடியோஸின் ப்ரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் வழங்கும் அறிமுக இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்தது. வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்து அதன் பெரும்பாலான காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ மோகன் ஹபு அவர்களின் பிரபலமான கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் […]

The post ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..! appeared first on Touring Talkies.

]]>
EINFACH ஸ்டுடியோஸின் ப்ரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் வழங்கும் அறிமுக இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்தது.

வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்து அதன் பெரும்பாலான காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ மோகன் ஹபு அவர்களின் பிரபலமான கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கன்னடம் தான் இதன் மூலக் கதை என்றாலும் தெலுங்கு மற்றும் தமிழிலும் தயாள் பத்மநாபனே இயக்குகிறார். தெலுங்கில் இந்தப் படத்தை அல்லு அரவிந்த் ஆஹா ஒரிஜினல் தளத்திற்காகத் தயாரிக்கிறார்.

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்ததை அடுத்து விரைவில் அடுத்தக் கட்டப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

வரலட்சுமி சரத்குமார் & சந்தோஷ் ப்ரதாப் இருவரும் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயகுமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், டி.எஸ்.ஆர். ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ப்ரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் ஆகியோர் EINFACH  ஸ்டுடியோஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். தயாள் பத்மநாபன் படத்தை இயக்குவதோடு கதை, திரைக்கதையையும் சேர்த்தே கவனிக்கிறார். இந்தப் படத்தை டி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. மேலும், தயாள் பத்மநாபன் படத்தில் ஜான் மகேந்திரனுடன் இணைந்து வசனமும் எழுதுகிறார்.

படத்தின் தொழில் நுட்பக் குழு விவரம்:

கான்செப்ட்: மோகன் ஹபு,
இசை & பின்னணி இசை: சாம் சி.எஸ்.,
ஒளிப்பதிவு: ஆர். செழியன்,
எடிட்டர்: ப்ரீத்தி பாபு,
கலை இயக்குநர்: விதால் கோசனம்,
பாடல் வரிகள்: பட்டினத்தார், கபிலன், தயாள் பத்மநாபன்,
நடன இயக்குநர்: லீலா குமார்,
ஒலிக்கலவை: உதய் குமார்,
எக்ஸிக்யூடிவ் புரொடியூசர்: வினோத் குமார்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா டி’ஒன்,
ஒப்பனை: சண்முகம்,
உடை: சக்ரி,
ஆடை வடிவமைப்பாளர்: மீரா சித்திரப்பாவை,
விளம்பர வடிவமைப்பாளர்: நவீன் குமார்.

The post ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..! appeared first on Touring Talkies.

]]>
வரலட்சுமி-சந்தோஷ் பிரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் https://touringtalkies.co/varalakshmi-santhosh-prathap-will-acting-in-kondraal-paavam-movie/ Fri, 28 Oct 2022 15:11:29 +0000 https://touringtalkies.co/?p=26179 EINFACH ஸ்டுடியோஸ், பிரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் தயாரிப்பில், தயாள் பத்மநாபன் இயக்கும் புதிய படம் ‘கொன்றால் பாவம்.’ இந்தப் படத்தில் வரல‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் இருவரும் படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், TSR ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோரும் நடிக்க உள்ளனர். தயாரிப்பு – EINFACH ஸ்டுடியோஸ்- ப்ரதாப் […]

The post வரலட்சுமி-சந்தோஷ் பிரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
EINFACH ஸ்டுடியோஸ், பிரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் தயாரிப்பில், தயாள் பத்மநாபன் இயக்கும் புதிய படம் ‘கொன்றால் பாவம்.’

இந்தப் படத்தில் வரல‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் இருவரும் படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், TSR ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

தயாரிப்பு – EINFACH ஸ்டுடியோஸ்- ப்ரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார், இணை தயாரிப்பு – தயாள் பத்மநாபன், டி பிக்சர்ஸ், கதை, திரைக்கதை, இயக்கம் – தயாள் பத்மநாபன், வசனம் – தயாள் பத்மநாபன் மற்றும் ஜான் மகேந்திரன், மூலக் கதை – மோகன் ஹப்பு, இசை – சாம்  C.S., ஒளிப்பதிவு – செழியன்.R., படத் தொகுப்பு – ப்ரீத்தி பாபு. கலை இயக்கம் – விதல் கோசனம், பாடல்கள் – பட்டினத்தார், கபிலன், தயாள் பத்மநாபன், நடன இயக்கம் – லீலா குமார், ஒலிக்கலவை – உதயகுமார், நிர்வாகத் தயாரிப்பு – வினோத்குமார், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா- ரேகா  D’One., ஒப்பனை – சண்முகம், உடைகள் – சக்ரி, ஆடை வடிவமைப்பு – மீரா சித்திரப்பாவை, விளம்பர வடிவமைப்பு – நவீன் குமார்.

1981-களில் நடக்கும் க்ளாஸிக் க்ரைம் த்ரில்லர் கதையான இந்த திரைப்படம், மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.

கன்னடத்தில் இரு முறை மாநில விருதுகளை பெற்ற இயக்குநர் தயாள் பத்மனாபன், இந்தக் கதையை முதலில் கன்னடத்தில் இயக்கினார்.  கன்னடத்தில் இத்திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்கநர் மற்றும் சிறந்த துனை நடிகைக்கான கர்நாடக மாநில விருதுகளை பெற்றது.

பிறகு, பிரபல தயாரிப்பாளாரான அல்லு அரவிந்தின் தயாரிப்பில் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அதை இயக்கிய தயாள் பத்மநாபனே இப்போது தமிழிலும் இயக்க உள்ளார்.

விழுப்புரத்தில் பிறந்த தமிழரான தயாள் பத்மநாபன், கன்னடத்தில் இதுவரையிலும் 18 திரைப்படங்களையும், தெலுங்கில் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் அவர் கன்னட மொழியில் எட்டு திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்தக் கொன்றால் பாவம்’ படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் உள்ள வடபழனி பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதன் படப்பிடிப்பு நவம்பர் 1-ம் தேதி ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்க இருக்கிறது.

The post வரலட்சுமி-சந்தோஷ் பிரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
என் பெயர் ஆனந்தன் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/en-peyar-anandhan-cinema-review/ Tue, 01 Dec 2020 07:07:26 +0000 https://touringtalkies.co/?p=10956 சில படங்களின் திரை மொழி விமர்சனங்களுக்கு உட்பட்டு இருந்தாலும் அப்படங்கள் பேசியிருக்கும் கருத்தும், கதையும் விமர்சனங்களுக்கு அப்பார்ப்பட்டதாக இருக்கும். கிட்டத்தட்ட ‘என் பெயர் ஆனந்தன்’ படமும் அப்படியான ஒன்று. எடுத்துக் கொண்ட கதையும், களமும் மிகவும் கனமானது. இயல், இசை, நாடகம் என்ற நம் தமிழ் மரபுக் கலைகளில் கூத்துக் கலை மிகவும் முக்கியமானது. அதை உரக்கப் பேசிய தமிழ் சினிமாக்கள் பெரிதாக எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை. அந்த உண்மை ஏற்படுத்தி இருக்கும் கோபத்தை ஆதங்கத்தைத்தான் […]

The post என் பெயர் ஆனந்தன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
சில படங்களின் திரை மொழி விமர்சனங்களுக்கு உட்பட்டு இருந்தாலும் அப்படங்கள் பேசியிருக்கும் கருத்தும், கதையும் விமர்சனங்களுக்கு அப்பார்ப்பட்டதாக இருக்கும். கிட்டத்தட்ட ‘என் பெயர் ஆனந்தன்’ படமும் அப்படியான ஒன்று. எடுத்துக் கொண்ட கதையும், களமும் மிகவும் கனமானது.

இயல், இசை, நாடகம் என்ற நம் தமிழ் மரபுக் கலைகளில் கூத்துக் கலை மிகவும் முக்கியமானது. அதை உரக்கப் பேசிய தமிழ் சினிமாக்கள் பெரிதாக எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை.

அந்த உண்மை ஏற்படுத்தி இருக்கும் கோபத்தை ஆதங்கத்தைத்தான் என் பெயர் ஆனந்தன்’ என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன். படத்தின் தயாரிப்பாளரும் அவரே.

கமர்சியல் சமரசங்கள் அற்ற இப்படத்தின் கதை இதுதான்…

படத்தின் நாயகன் சந்தோஷ் ஒரு குறும்பட இயக்குநர். அவர் இயக்கிய அடிமை சுதந்திரம்’ என்ற குறும்படம் கேன்ஸ் திரைப்பட விருதுவரை செல்கிறது. (நிஜமாகவே படத்தில் வரும் அக்குறும்படம் அழகாக இருக்கிறது) அந்த வெளிச்சமே அவருக்கான வெள்ளித்திரை பட வாய்ப்பைப் பெற்றுத் தருகிறது.

அந்தச் சந்தோசமும், மனைவி அதுல்யா கர்ப்பமாக இருக்கும் சந்தோஷமும் சந்தோஷுக்கு சேர்ந்து கிடைக்க..ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு உற்சாகமாக கிளம்புகிறார். இங்குதான் ட்விஸ்ட்..

படப்பிடிப்புக்குக் கிளம்பி வரும் ஹீரோவை சிலர் பாதி வழியிலே கடத்திச் செல்கிறார்கள்.  அங்கு ஒருவர் நாற்காலியில் ஹீரோவை கட்டி வைத்து சினிமா பற்றிய விசயங்களைப் பேசுகிறார்.

அவர் ஏன் தற்காலச் சினிமாவைப் பற்றிப் பேசுகிறார். அதுவும் கடத்தி வைத்துக் கொண்டு..!? மேலும் கூடவே குண்டாக ஒரு நண்பரையும் வைத்திருக்கிறார். அவர் அவ்வப்போது நடிகர்களின் கெட்டப்களில் வந்து ஹீரோவைப் போலவே நம்மையும் மிரட்டுகிறார். அது ஏன்..?

முடிவில் ஹீரோ சந்தோஷ் அங்கிருந்து தப்பித்தாரா.. இல்லையா..? முடிவில் படம் சொல்லும் நீதி என்ன..? இதுதான் இப்படத்தின் கதை.

படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சந்தோஷ் ஒரு நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக  ஷுட்டிங் இருக்கும் நிலையில் கடத்தி வரப்பட்டதால் அவர் பரிதவிப்பது மிகவும் இயல்பாக இருக்கிறது.

நாயகி அதுல்யாவிற்குப் பெரிதாக வேலைவெட்டி எதுவும் எல்லை. தேமே என்று வந்து போகிறார். படத்தில் திடீர் என ட்விஸ்ட் வைக்கும் அந்த உதவி இயக்குநர் கேரக்டரில் நடித்துள்ள இளைஞர் மிக நன்றாக நடித்துள்ளார்.

மேலும், முகத்தைக் காட்டாமலேயே மணி கெய்ஸ்ட் வெப் சீரீஸ் கும்பல் போல ஒரு முகமூடியைக் கொண்டு வரும் அந்த வில்லன் கேரக்டரும் நல்ல ஷார்ப்.

மிக முக்கியமாய் முன் பாதியில் எல்லாம் நம்மை காண்டு ஏத்தும் அந்த குண்டு இளைஞர் பின்பாதியில் ஒரு அசத்து அசத்திவிடுகிறார். இப்படி நடிகர்களில் யாரும் பெரிதாக குறை வைக்கவில்லை.

புரொடக்‌ஷன் கொடுத்த கேமரா உள்ளிட்ட ஒளிப்பதிவு கருவிகளைக் கொண்டு தன்னால் எவ்வளவு சிறப்பைச் செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பைச் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர்  விக்னேஷ்.  படத் தொகுப்பாளர் விஜய் ஆண்ட்ருஸ் இன்னும்கூட தன் கத்தரிக்கு வேலை கொடுத்திருக்கலாம். ஜோஸ் ப்ராங்க்ளினின் பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே அருமை. அதுவும் பின்பாதியில் வரும் அந்தக் கூத்துப் பாட்டு அருமை.. அருமை.

தங்கள் இஷ்டத்திற்கு பல  கூத்துக்களை படமாக எடுக்கும் இயக்குநர்கள் நம் தாய் மண்ணின் பெருமையான கூத்துக் கலையை படமாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார் இயக்குநர்.

அதை ஒரு செழித்தத் திரைக்கதையாக மாற்ற சிரமப்பட்டிருந்தாலும் இந்த முயற்சி பாரட்டத்தக்கதுதான்.

The post என் பெயர் ஆனந்தன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>