Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ramarajan – Touring Talkies https://touringtalkies.co Mon, 27 May 2024 03:25:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ramarajan – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘சாமானியன்’ படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்! https://touringtalkies.co/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0/ Mon, 27 May 2024 03:25:19 +0000 https://touringtalkies.co/?p=43822 மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து சங்கர நாராயணன் (ராமராஜன்) மற்றும் அவரது நண்பர் மூக்கையா (எம்.எஸ்.பாஸ்கர்) சென்னையில் உள்ள அவர்களது நண்பர் ஃபஸில் பாய்யின் (ராதாரவி) வீட்டிற்கு வருகிறார்கள். மறுநாள், சங்கர நாராயணன் தியாகராயர் நகரில் உள்ள வங்கிக்கு சென்று, வெடிகுண்டும் துப்பாக்கியும் காட்டி மிரட்டி, அந்த வங்கியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். வங்கி ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பிணைக் கைதியாக்குகிறார். அதே நேரத்தில், மூக்கையா வங்கி கிளையின் மேலாளரின் வீட்டையும், ஃபஸில் […]

The post ‘சாமானியன்’ படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்! appeared first on Touring Talkies.

]]>
மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து சங்கர நாராயணன் (ராமராஜன்) மற்றும் அவரது நண்பர் மூக்கையா (எம்.எஸ்.பாஸ்கர்) சென்னையில் உள்ள அவர்களது நண்பர் ஃபஸில் பாய்யின் (ராதாரவி) வீட்டிற்கு வருகிறார்கள். மறுநாள், சங்கர நாராயணன் தியாகராயர் நகரில் உள்ள வங்கிக்கு சென்று, வெடிகுண்டும் துப்பாக்கியும் காட்டி மிரட்டி, அந்த வங்கியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். வங்கி ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பிணைக் கைதியாக்குகிறார்.

அதே நேரத்தில், மூக்கையா வங்கி கிளையின் மேலாளரின் வீட்டையும், ஃபஸில் பாய் துணை மேலாளர் வீட்டையும் துப்பாக்கியால் மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள். மூன்று சீனியர் சிட்டிசன்களின் கோபத்திற்கு என்ன காரணம்? இவர்கள் மூவரின் பின்னணி என்ன? இறுதியில் பிணைக்கைதிகளை காவல்துறை மீட்டதா? என்ற கேள்விகளுக்கு பதிலாக இயக்குநர் இராகேஷின் ‘சாமானியன்’ திரைப்படம்.

தொடக்கத்திலிருந்தே கருத்து ஊசி போட்டபடியே தப்பிக்கும் கதாநாயகன் ராமராஜன், ஆக்‌ஷனிலும் மிரட்டலிலும் சிறிதாக சிரமப்படுகிறார். ஆனால், இறுதிக்காட்சிக்கு முந்தைய சென்டிமென்ட் காட்சிகளில் தான் திறமையை வெளிப்படுத்துகிறார். பாசமும் ஆக்ரோஷமும் கொண்ட கதாபாத்திரத்திற்கு எம்.எஸ்.பாஸ்கர் தனது முதிர்ந்த நடிப்பால் உயிர் கொடுத்துள்ளார். ராதாரவியின் பங்களிப்பும் தேவையான அழுத்தத்தை காட்சிகளுக்கு வழங்கியுள்ளது.நக்‌ஷா சரண் மற்றும் லியோ சிவக்குமார் இரண்டாம் பாதி சென்டிமென்ட் காட்சிகளில் தேவையான உணர்வுகளை உணர்த்தி, கவனத்தை ஈர்க்கிறார்கள்.

‘டெம்ப்ளேட்’ வில்லனாக மைம் கோபி மட்டும் திகழ்கிறார். போஸ் வெங்கட், கே.எஸ்.ரவிக்குமார், தீபா சங்கர், ஸ்மிருதி வெங்கட், முல்லை, அபர்ணதி ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களாக வந்து, தங்கள் வேலையைச் செய்துள்ளனர்.சி.அருள் செல்வனின் ஒளிப்பதிவு படத்திற்கு நேர்மறையான தாக்கத்தை அளிக்கவில்லை. ராம் கோபியின் படத்தொகுப்பு பின்கதையைச் செறிவாக்கத் தவறுகிறது. இளையராஜாவின் இசையிலும் வரியிலும், சரத்தின் குரலிலும் ஒலிக்கும் ‘கண்ணான கண்ணே’ பாடல் மட்டும் பொருத்தமான இடத்தில் மனதைத் தொடுகிறது. அவரது பின்னணி இசை காட்சிகளை மெருகேற்ற உதவியுள்ளது.

எளிமையான கதாபாத்திரங்கள், அதிரடி திருப்பம், மாஸ் ட்விஸ்ட், சோகமான பின்கதை, ‘கருத்து ஊசி’ மாநாடு, சுபம் என்று யூகிக்கக்கூடிய ஒரு டெம்ப்ளேட் கதையை எழுதியுள்ளார் வி.கார்த்திக் குமார். புதுமையில்லாத திரைக்கதை என்றாலும், நடிகர்களின் பங்களிப்பால் முடிந்தளவிற்கு விறுவிறுப்பையும் உணர்ச்சியையும் சேர்க்க முயற்சித்துள்ளார் இயக்குநர் இராகேஷ். சில காட்சிகளில் படம் நேராகக் கதைக்குள் நுழைகிறது. அதன் பிறகு லாஜிக் காணாமல் போவதும், பழைய காவல்துறை – கொள்ளையர் காட்சிகளும் டல்லடிக்கின்றன.

இறுதிக்காட்சிக்கு முந்தைய உணர்ச்சியலான காட்சிகள் நன்றாக இருந்தாலும், இயக்குநர் அதோடு சேர்ந்து நான்கு பக்க கருத்து ஊசியையும் குத்துகிறார். வங்கிகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு இடையிலான திருட்டு உறவு, வீட்டுக்கடன் மூலமாக மக்களை எப்படிச் சுரண்டுகிறது என்பது பற்றிய லைன் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தித் திணிப்பு மற்றும் பெருமுதலாளிகளுக்கு வழங்கப்படும் கடன் வாராக்கடனாக ஆவது போன்றவற்றை ஒன்லைனர்களில் கலாய்க்கிறது படம். அதேநேரம், வீட்டுக்கடன் மீதான மோசமான பார்வையை, எந்த தரவுகளுமின்றி முன்வைக்கிறது.

The post ‘சாமானியன்’ படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்! appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் ஸ்டாருக்கு நான் சொன்ன சீன் – Radha Bharathy | Chai with Chithra | Part 5 https://touringtalkies.co/%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/ Wed, 15 May 2024 11:37:09 +0000 https://touringtalkies.co/?p=43013 The post சூப்பர் ஸ்டாருக்கு நான் சொன்ன சீன் – Radha Bharathy | Chai with Chithra | Part 5 appeared first on Touring Talkies.

]]>

The post சூப்பர் ஸ்டாருக்கு நான் சொன்ன சீன் – Radha Bharathy | Chai with Chithra | Part 5 appeared first on Touring Talkies.

]]>
ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன் ! https://touringtalkies.co/%e0%ae%b0%e0%af%80-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be/ Fri, 12 Apr 2024 12:50:08 +0000 https://touringtalkies.co/?p=40945 சுமார் 23 வருடங்களுக்கு பிறகு திரையுலக ஜாம்பவான்களான ராமராஜன் மற்றும் இளையராஜாவை இணைந்துள்ள படம் தான் சாமான்யன்.இப்படத்தை ராக்கேஷ் இயக்குகிறார்‌.தம்பி கோட்டை மற்றும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களை இயக்கியவர் தான் ராக்கேஷ்.இப்படத்தை பற்றி சமீபத்தில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது, இந்த படத்தின் முதல் சாமான்யன் என்பது இளையராஜவும் மற்றொரு சாமான்யன் ராமராஜனும் தான். எந்தவொரு பெரிய பிண்ணனி இல்லாமல் வந்து இசை உலகை ஆளும் இளையராஜாவும், அதே போல சினிமாவில் […]

The post ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன் ! appeared first on Touring Talkies.

]]>
சுமார் 23 வருடங்களுக்கு பிறகு திரையுலக ஜாம்பவான்களான ராமராஜன் மற்றும் இளையராஜாவை இணைந்துள்ள படம் தான் சாமான்யன்.இப்படத்தை ராக்கேஷ் இயக்குகிறார்‌.தம்பி கோட்டை மற்றும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களை இயக்கியவர் தான் ராக்கேஷ்.இப்படத்தை பற்றி சமீபத்தில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதாவது, இந்த படத்தின் முதல் சாமான்யன் என்பது இளையராஜவும் மற்றொரு சாமான்யன் ராமராஜனும் தான். எந்தவொரு பெரிய பிண்ணனி இல்லாமல் வந்து இசை உலகை ஆளும் இளையராஜாவும், அதே போல சினிமாவில் பல வெற்றி படங்களையும் சாதனைகளையும் படைத்த ராமராஜனும் தான் சாமன்யன்கள் என்றார்.இப்படத்தில் நடித்திருக்கும் ராமராஜன் புகைபிடித்தல் மது அருந்துதல் இல்லாத கதைகளையே தேர்வு செய்து சமூக எண்ணத்தோடு நடிப்பவர்‌. அதேபோலலே சமூக கருத்துகள் கலந்த கமர்சியல் படமாக இருக்கும்.

இந்த படம் ரொம்ப ஈசியா ஆடியன்ஸ் உடன் கனெக்ட் ஆகும் அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சினை பற்றி தான் இந்த படம் பேச போது, தினசரி வாழ்க்கையில் பொருளாதார பிரச்சினை சந்திக்காதவங்க அப்படினு யாரும் இல்லை.பணம் சார்ந்த பிரச்சினை ஒருத்தருக்கு எப்படியெல்லாம் கஷ்டத்தை ஏற்படுத்தும்னு இந்த படத்தில சென்டிமென்ட்டா எமோஷனலா கண்ணு முன்னாடி கொண்டு வந்துருப்பேன் என்றார்.

இந்த படத்துக்கு முதல்ல ஹீரோ இவர் இல்ல. தயாரிப்பாளர் மதியழகன் அவங்க தான் ராமராஜன் சார்ர இந்த படத்தோட கதாபாத்திரத்தில நடிக்க வைச்சா எப்படி இருக்கமுனு கேட்க என் மைண்ட் வாய்ஸ் ஆமா அட இது நல்லா இருக்கேனு சொல்ல ராமராஜன் சார் தான் இந்த படத்துக்கு ஹீரோனு முடிவு பண்ணியாச்சு. அதே சமயம் ஒரு யதார்த்தமான முகம் தேவைப்பட்டுச்சு அத இவரு பூர்த்தி பண்ணிட்டாரு.

ராமராஜன் அவர்கள் கிட்ட கதை சொல்றதுக்கு முன்னாடி என் நீங்க நடிக்கறது இல்லனு கேட்க அதுக்கு அவரு, என்னுடைய ரசிகர்கள் அப்படியே இருக்காங்க, சில ரசிகர்கள் டிவி நிகழ்ச்சிகளாவது நடிங்கனு சொல்லுவாங்க ஆன டிவில நடிக்க ஆர்வம் இல்லை. சினிமா தான் உலகம்னு இருந்த எனக்கு பலனா இப்போ இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்குனு சொன்னாங்க.

கதையை சொல்றதுக்கு முன்னாடியே குடி, புகை, போதைனு எதுவும் இருக்க கூடாதுனு சொல்லிட்டாரு.ராமராஜன் சார் மேலூர் கணேஷ் தியேட்டரில் வேலை பார்த்தவரு, பழைய முதலாளி மேல இருந்த பாசத்தால அங்க சென்டிமென்டா சில நாள் சூட்டிங் பண்ணோம்.முதல்ல எதிர்பார்த்தளவுக்கு அவர் நடிக்கல ஆனா கொஞ்சம் நாள் அப்புறம் கம் பேக் கொடுத்து அசத்தி நடிச்சாரு.அவரு நடிச்ச காட்சிகள் பார்த்து அவரே கண்கலங்கிட்டார்.

இசைஞானி இளையராஜா கிட்ட கதை சொல்லறப்ப பாடல்களே நாங்க வைக்கல.ராஜா சார் நானும் ராமராஜனும் சேர்ந்தாலே பாட்டுதான் பிரமாதம்னு சொல்லி முதல பாட்டு இல்லமா ஷூட் பண்ணி கொண்டு வர சொல்லிட்டார்.பாட்டு எந்த எடத்துலனு வரும்னு அவரு கேட்க ஹீரோயினி இல்ல அதனால பாட்டு வைக்கலனு சொன்னோம், அதுக்கு உன் படத்துல ரெண்டு பாட்டு ஒளிஞ்சிருக்குனு சொல்லி அதற்கான இடத்தையும் தேர்வு செஞ்சி தத்திவா…தத்திவா…னு ஒரு பாட்டும் ஒளிவீசும் எதிர்காலம் வாழ்வின் வைபோகம் என்ற பாட்டையும் எழுதி இசையமைத்து பாடி கொடுத்தாரு என்றார் இந்த சாமான்யன் படம் ராமராஜன் அவர்களுக்கு நிச்சயம் கம் பேக்காக அமையும் என்று கூறினார்.

The post ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன் ! appeared first on Touring Talkies.

]]>
ராமராஜன் ஒதுக்கிய இசை அமைப்பாளர்! யார் தெரியுமா? https://touringtalkies.co/ramarajan-assigned-music-director/ Wed, 12 Jul 2023 04:01:30 +0000 https://touringtalkies.co/?p=34286 ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வந்தவர் நடிகர் ராமராஜன். அவரது படங்கள் அனைத்துக்குமே அப்போது இளையராஜாதான் இசை அமைத்து வந்தார். பாடல்களும் சூப்பர் ஹிட்.  படத்தின் வெற்றிக்கு இசையும் ஒரு காரணம் என அப்போது பலரும் கூறிவந்தார்கள். இந்த நிலையில்,‘மனசுக்கேத்த மகராசா’ என்கிற படத்தில்  ராமராஜன் கமிட் ஆனார். படத்துக்கு இசையமைப்பாளர் தேவா என  தயாரிப்பாளர் முடிவெடுத்துவிட்டார். ஆனால், இதற்கு ராமராஜன் ஒப்புக்கொள்ளவே இல்லை. ‘யார் தேவா?’ என ராமராஜன் கேட்க அவர் நிறைய […]

The post ராமராஜன் ஒதுக்கிய இசை அமைப்பாளர்! யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வந்தவர் நடிகர் ராமராஜன். அவரது படங்கள் அனைத்துக்குமே அப்போது இளையராஜாதான் இசை அமைத்து வந்தார். பாடல்களும் சூப்பர் ஹிட்.  படத்தின் வெற்றிக்கு இசையும் ஒரு காரணம் என அப்போது பலரும் கூறிவந்தார்கள்.

இந்த நிலையில்,‘மனசுக்கேத்த மகராசா’ என்கிற படத்தில்  ராமராஜன் கமிட் ஆனார். படத்துக்கு இசையமைப்பாளர் தேவா என  தயாரிப்பாளர் முடிவெடுத்துவிட்டார். ஆனால், இதற்கு ராமராஜன் ஒப்புக்கொள்ளவே இல்லை.

‘யார் தேவா?’ என ராமராஜன் கேட்க அவர் நிறைய பக்தி பாடல்களுக்கு இசையமைத்தவர் என சொல்ல ராமராஜன் மேலும் கடுப்பானார். ‘பக்தி பாடல்களை போடுபவர் எல்லாம் என் படத்துக்கு இசையமைப்பதா? வேண்டவே வேண்டாம்’ என மறுத்துவிட்டார். ஆனால், தேவாவிடம் மெட்டுக்கள் வாங்கி பாடல்களை பதிவு செய்து ராமராஜனிடம் போட்டு காட்ட அவருக்கு பிடித்தவிட்டது.  ஆகவே அந்த படத்துக்கு மட்டுமல்ல.. அதன் பிறகு  அவரது சில படங்களுக்கு தேவா இசை அமைத்தார்.

பின்னர் தேவா ‘வைகாசி பொறந்தாச்சி’ படத்திற்கு இசையமைத்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் வரை இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.

The post ராமராஜன் ஒதுக்கிய இசை அமைப்பாளர்! யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
23 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்தது இளையராஜா-ராமராஜன் கூட்டணி https://touringtalkies.co/ilaiyaraja-and-ramarajan-reunite-after-23-years-in-chaamanyan-movie/ Thu, 10 Nov 2022 16:33:02 +0000 https://touringtalkies.co/?p=26923 1980, 1990-களில் ‘மக்கள் நாயகன்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன். கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர். இந்த 45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், தற்போது ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட,  அதேசமயம் தரமான படங்களைத் தயாரிக்கும்  ‘எட்செட்ரா என்டர்டெய்ன்மெண்ட்’ சார்பில் […]

The post 23 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்தது இளையராஜா-ராமராஜன் கூட்டணி appeared first on Touring Talkies.

]]>
1980, 1990-களில் மக்கள் நாயகன்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன்.

கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர்.

இந்த 45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், தற்போது ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட,  அதேசமயம் தரமான படங்களைத் தயாரிக்கும்  ‘எட்செட்ரா என்டர்டெய்ன்மெண்ட்’ சார்பில் V.மதியழகன் இந்த படத்தைத் தயாரித்து வருகிறார்.

நடிகர்களான ராதாரவி, எம்.எஸ்பாஸ்கர் இருவரும் இந்தப் படத்தில் இணை நாயகர்களாக நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத் தொகுப்பை  ராம் கோபி கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார். பத்திரிகை தொடர்பு – A. ஜான்

‘தம்பிக்கோட்டை’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநரான R. ராகேஷ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

‘சாமானியன்’படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மணி மகுடத்தில் வைரம் சூட்டியது போல இந்த படத்திற்கு இசையமைக்க இசை ஞானி’ இளையராஜா தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

எப்போதுமே ராமராஜனையும், இளையராஜாவையும் பிரித்துப் பார்க்க முடியாது.  ராமராஜன் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்து, அவரது வெற்றிக்கு துணை நின்று காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்துள்ளார் ராஜா.

இன்னும் சொல்லப் போனால் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக பல வெற்றிப் பாடல்களை ராமராஜனுக்கு இசைத்துள்ளார் மேஸ்ட்ரோ.

தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிப்பிற்குத் திரும்பியுள்ள ராமராஜனின் படத்திற்கு இசைஞானி  இசையமைப்பதை விட பொருத்தமான அம்சம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

இந்தப் படம் தொடர்பாக நேற்று மேஸ்ட்ரோ ராஜாவை நேரில் சந்தித்து பேசினார் ராமராஜன். அப்போது ராஜாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நெகிழ்ந்தபடி மனம்விட்டு பேசிய ராமராஜன்,  “நான் பல வருடங்கள் கழித்து நடிப்பிற்குத் திரும்பி உள்ளேன். இந்தப் படத்திற்கு நீங்கள்தான் இசையமைக்க வேண்டும்” என உரிமையுடன் கேட்க, இளையராஜாவும் அதற்கு மனப்பூர்வ சம்மதம் தெரிவித்துள்ளார்.

படத்தின் இயக்குநரான R. ராகேஷ் இந்த சந்திப்பு பற்றி கூறும்போது,  “இந்த ‘சாமானியன்’ என்கிற இந்த கதைக்கு மிகப் பொருத்தமானவராக மனதில் தோன்றிய முதல் நடிகர் ராமராஜன்தான்.

காரணம், சாமானிய மக்கள் இன்றும் தங்களில் ஒருவராகத்தான் அவரைப் பார்க்கிறார்கள்.. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக அவர் மறுபிரவேசம் செய்வதற்கு ஏற்ற கதையாக இந்த  படம் அமைந்துள்ளது.

தற்போது இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக் கொண்டது இந்த படத்திற்கான மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.  குறிப்பாக இவர்களது கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால் ராமராஜனின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது உறுதி.

ராமராஜனின் பல வெற்றிப் படங்களை இயக்கி, அவரது திரையுலக பயணத்திற்கு உறுதுணையாக நின்றவர் இயக்குநர் கங்கை அமரன். அவர் மூலமாக இளையராஜாவை அணுகி இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமராஜன், ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் மூவரும் போட்டி போட்டு நடிக்கும் காட்சிகளை இயக்கியது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்.

மிக முக்கியமாக, பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒரு அருமையான பாடலை எழுதியுள்ளார்.  கவிஞர் சினேகனும் அழகான பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளார்.. இந்த படத்தின் வெற்றியின்  அம்சங்களில் ஒன்றாக இசைஞானியின் இசையும் இருக்கும். தற்போது படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.” என்றார்.

இதற்கு முன்னதாக 1999ல் ராமராஜன் நடிப்பில் வெளியான ‘அண்ணன்’ என்கிற படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்தவகையில் 23 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது.

இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

The post 23 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்தது இளையராஜா-ராமராஜன் கூட்டணி appeared first on Touring Talkies.

]]>
கீர்த்தி சுரேஷை பாராட்டிய நடிகர் ராமராஜன்..! https://touringtalkies.co/actor-ramarajan-praised-keerthy-suresh/ Sun, 23 Oct 2022 13:25:21 +0000 https://touringtalkies.co/?p=25878 “நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்” என்று நடிகர் ராமராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். நடிகர் ராமராஜன் மிக நீண்ட வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தவர் இப்போதுதான் ‘சாமான்யன்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பற்றி அவர் அளித்த பேட்டியில்தான் கீர்த்தி சுரேஷையும் பாராட்டித் தள்ளியிருக்கிறார். ராமராஜன் அளித்த பேட்டியில், “தமிழ் சினிமாவில் இப்போது எல்லோருமே நன்றாகத்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் டிவியில்தான் பாடல்கள், காமெடி காட்சிகளையெல்லாம் பார்க்கிறேன். சினிமாவில் […]

The post கீர்த்தி சுரேஷை பாராட்டிய நடிகர் ராமராஜன்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்” என்று நடிகர் ராமராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் ராமராஜன் மிக நீண்ட வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தவர் இப்போதுதான் ‘சாமான்யன்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படம் பற்றி அவர் அளித்த பேட்டியில்தான் கீர்த்தி சுரேஷையும் பாராட்டித் தள்ளியிருக்கிறார்.

ராமராஜன் அளித்த பேட்டியில், “தமிழ் சினிமாவில் இப்போது எல்லோருமே நன்றாகத்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் டிவியில்தான் பாடல்கள், காமெடி காட்சிகளையெல்லாம் பார்க்கிறேன்.

சினிமாவில் வரும் ஹீரோக்கள் பல கஷ்டங்கள், அவமானங்கள் எல்லாத்தையும் தாண்டித்தான் அந்த இடத்தில் வந்து நிற்கிறார்கள். கஷ்டப்படாமல் யாரும் வந்திருக்க மாட்டார்கள். அதனால்தான் ஒருத்தரோட இடத்தை இன்னொருத்தரால் நிரப்பிட முடியாமல் இருக்கிறது.

இங்கே திறமை, உழைப்பு எல்லாவற்றையும் தாண்டி நேரமும், காலமும் சரியா அமையணும். அந்தக் காலத்து கதாநாயகிகளில் சரோஜாதேவி, சாவித்திரி, கே.ஆர்.விஜயா என்று பலரும் இன்றும் தமிழகத்து மக்கள் மனதில் இருக்கிறார்கள்.

இப்போது அப்படிப்பட்டவராக கீர்த்தி சுரேஷ்தான் இருக்கிறார். காரணம் என்னவென்றால், அவருடைய நடிகையர் திலகம்’ படம். அதில் அவரின் நடிப்பு அவ்வளவு சிறப்பா இருந்தது. அதேபோல் மனோரமா ஆச்சியும் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அந்தப் பெருமை இப்போ யாருக்குமே இல்லை..” என்றார் ராமராஜன்.

The post கீர்த்தி சுரேஷை பாராட்டிய நடிகர் ராமராஜன்..! appeared first on Touring Talkies.

]]>
“சினிமாவை வெறுத்தேன்! ஆனால் 41 வருடமாய் நடிக்கிறேன்!” : நளினி https://touringtalkies.co/i-am-the-one-who-hates-cinema-i-have-been-traveling-for-41-years-nalini-kk/ Wed, 19 Oct 2022 14:06:19 +0000 https://touringtalkies.co/?p=25650 தமிழில் முன்னணி நடிகர்களான விஜயகாந், மோகன்லால், மம்முட்டி, சத்யராஜ் மற்றும் மோகன் ஆகியோருடன் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நளினி. அந்த சமயத்தில் நடிகர் ராமராஜனை காதிலித்து 1987ல் திருமணம் செய்து கொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.இவர்களுக்கு அருணா மற்றும் அருண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ” எனக்கு சினிமாவில் நடிப்பதே பிடிக்கவில்லை. ஆகவேதான் யாரையாவது திருமணம் செய்து கொள்ளலாம்.. அப்படி […]

The post “சினிமாவை வெறுத்தேன்! ஆனால் 41 வருடமாய் நடிக்கிறேன்!” : நளினி appeared first on Touring Talkies.

]]>

தமிழில் முன்னணி நடிகர்களான விஜயகாந், மோகன்லால், மம்முட்டி, சத்யராஜ் மற்றும் மோகன் ஆகியோருடன் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நளினி.

அந்த சமயத்தில் நடிகர் ராமராஜனை காதிலித்து 1987ல் திருமணம் செய்து கொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.இவர்களுக்கு அருணா மற்றும் அருண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ” எனக்கு சினிமாவில் நடிப்பதே பிடிக்கவில்லை. ஆகவேதான் யாரையாவது திருமணம் செய்து கொள்ளலாம்.. அப்படி நடந்துவிட்டால் சினிமாவில் நடிக்க வேண்டி இருக்காது என நினைத்தேன். அந்த நேரத்தில்தான் ராமராஜன் என்னை காதலிப்பதாக சொன்னார். உடனே ஒப்புக்கொண்டேன். திருமணமும் நடந்தது. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக காலத்தை கழிக்க வேண்டும் என்றே விரும்பினேன்.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் திரைப்படங்களிலும் டிவி தொடர்களிலும் நடித்துவருகிறேன்.. அப்படியே 41 வருடங்கள் ஆகிவிட்டன” என்றார்.

The post “சினிமாவை வெறுத்தேன்! ஆனால் 41 வருடமாய் நடிக்கிறேன்!” : நளினி appeared first on Touring Talkies.

]]>
“100 கோடி கொடுத்தாலும் தரமற்ற படங்களில் நடிக்க மாட்டேன்” – நடிகர் ராமராஜன் பேச்சு https://touringtalkies.co/even-if-i-give-100-crores-i-will-not-act-in-low-quality-films-actor-ramarajans-speech/ Tue, 20 Sep 2022 06:35:29 +0000 https://touringtalkies.co/?p=24598 1990-களில் பிசியாக இருந்தவர் நடிகர் ராமராஜன். அவர் நடித்த பல படங்கள் 100 நாட்கள், வெள்ளி விழா என தொடர் வெற்றிகளை கண்டது. ‘கரகாட்டக்காரன்’, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ ஆகியவை இவர் நடிப்பில் வெளியான முக்கியமான படங்கள். கடைசியாக 2012-ம் ஆண்டு வெளியான ‘மேதை’ என்ற படத்தில் நடித்திருந்தார் ராமராஜன். தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘சாமானியன்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் ராமராஜன். இந்தப் படத்தில்  ராதாரவி […]

The post “100 கோடி கொடுத்தாலும் தரமற்ற படங்களில் நடிக்க மாட்டேன்” – நடிகர் ராமராஜன் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
1990-களில் பிசியாக இருந்தவர் நடிகர் ராமராஜன். அவர் நடித்த பல படங்கள் 100 நாட்கள், வெள்ளி விழா என தொடர் வெற்றிகளை கண்டது. கரகாட்டக்காரன்’, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ ஆகியவை இவர் நடிப்பில் வெளியான முக்கியமான படங்கள். கடைசியாக 2012-ம் ஆண்டு வெளியான மேதை’ என்ற படத்தில் நடித்திருந்தார் ராமராஜன்.

தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘சாமானியன்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் ராமராஜன். இந்தப் படத்தில்  ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.  நக்ஷரா என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார்.

அச்சு ராஜாமணி இசையில் உருவாகும் இப்படத்திற்கு அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராகேஷ் இயக்குகிறார். எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.  தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் ஒரே நேரத்தில் இந்தப் படம் தயாராகிறது. இது ராமராஜனின் 45-வது படமாகும்.

இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னையில் தி.நகர் கிருஷ்ண வேணி தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராமராஜன் பேசும்போது, “இப்போது 10 வருடங்களுக்கு பிறகு நான் நடிக்க வந்திருக்கிறேன். அப்போதே தொடர்ந்து நடித்திருப்பேன். ஆனால், அரசியல் பணிகள் வந்ததால் நடிக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரு பெரிய விபத்தில் சிக்கி வருடக் கணக்காக ஓய்வெடுக்க வேண்டியதாகி விட்டது.

என்னுடைய ‘கரகாட்டக்காரன்’ படம் இதே கிருஷ்ணவேணி தியேட்டரில் அன்று 300 நாட்கள் ஓடியது. இன்று அதே தியேட்டரில் என்னுடைய படத்தின் விழா நடப்பது சந்தோஷமாக இருக்கிறது. அது மட்டுமா… என்னுடைய பட விழா ஒன்றில் இத்தனை மைக், இத்தனை  கேமராக்களை நான் பார்ப்பது இதுதான் முதல்முறை.

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு வார்த்தை கொல்லும்; ஒரு வார்த்தை வெல்லும்’ என்பதுபோல இப்போது மீண்டும் ஹீரோவாகவே திரும்பி வந்துள்ளேன்.

இந்தப் படத்தில்  நான்  ஹீரோ என்பதைவிட  கதையும், திரைக்கதையும்தான் ஹீரோ என்று சொல்லலாம். இந்தப் படத்தின் டீசரை பார்த்துவிட்டு ராமராஜன் துப்பாக்கி புடிச்சு என்ன பண்ணப் போறார் என்றுதான் பலரும் கேட்பார்கள். அதற்கான விடை இந்த படத்தில் இருக்கிறது. 

இத்தனை வருடங்களில் எத்தனையோ கதைகள் கேட்டேன். சரியாக அமையவில்லை. ஆனால் எவ்வளவு கோடி கொடுத்தாலும் தரம் கெட்டுப் போய் மோசமான படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் நான் பின் தொடர்வது புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பாதையை. அதனால்தான் தம் அடிக்கவும் தண்ணி அடிக்கவும் எனக்கு பிடிக்காது. 

இந்த 45 வருடங்களில் 45 படங்களில் நடித்துவிட்டேன். சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போதுவரை நான் தாடி வைத்ததே இல்லை. இந்தப் படத்திற்காக முதன்முறையாக தாடி வைத்து நடிக்கிறேன்.

இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் கூறியபோது அவர் சொன்ன இன்டர்வல் காட்சியை கேட்டு திகைத்துவிட்டேன். இதுவரை தமிழ் சினிமாவிலேயே வந்திராத அப்படி ஒரு இன்டர்வெல். அதுமட்டுமல்ல இந்தப் படத்தின் டைட்டில் என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது.

ஒரு படத்தின் டைட்டில் என்பது படத்திற்கு உயிர் போன்றது. படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கும்போதுகூட அதற்கென தனியாக ஒரு டைட்டில் வைக்க வேண்டும். முதல் குழந்தை பிறந்தபோது நாள், நேரமெல்லாம் கணித்து அலசி ஆராய்ந்து, கண்ணன் என பெயர் வைத்துவிட்டு இரண்டாவது குழந்தை பிறக்கும்போது கண்ணன்-2 என யாராவது பெயர் வைக்கிறார்களா..? என்னிடம்கூட ஒரு சிலர் கரகாட்டக்காரன் 2’ எடுக்கலாமா என கேட்டபோது அப்படியே அவர்களை ஆஃப் பண்ணிவிட்டேன். இயக்குர் விஜய் மில்டன் கோலிசோடா-2’-வில் நடிக்கிறீர்களா என கேட்டு வந்தபோது மறுத்துவிட்டேன்.

50 படங்களில் நடித்துவிட்டு அதன் பிறகு டைரக்சன் பக்கம் போய்விடலாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனால் சூழ்நிலை அப்படியே மாறிவிட்டது. இப்போது இது என்னுடைய 45-வது படம். இது போதும் எனக்கு.

முதல்முறையாக எனது படம் 5 மொழிகளில் வெளியாகிறது என்பதை இப்போது நினைத்தாலும் இது கனவா இல்லை நனவா என்றுதான் நினைக்க தோன்றுகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் ராகேஷை பார்க்கும்போது என்னை முதன்முதலாக நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் வி. அழகப்பன் போன்றே எனக்கு தோன்றுகிறார்.

இந்த நேரத்தில் எனக்கு இப்படி ஒரு படத்தை கொண்டு வந்ததற்காக தயாரிப்பாளர் மதியழகன் அவர்களுக்கும் இயக்குநர் ராகேஷுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.

The post “100 கோடி கொடுத்தாலும் தரமற்ற படங்களில் நடிக்க மாட்டேன்” – நடிகர் ராமராஜன் பேச்சு appeared first on Touring Talkies.

]]>