Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Rajini Makkal Mandram – Touring Talkies https://touringtalkies.co Sat, 15 Oct 2022 09:30:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Rajini Makkal Mandram – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஏ.வி.எம் சரவணனுக்காக வில்லன் ஆனா ஹீரோ..! https://touringtalkies.co/villain-turned-hero-for-av-m-saravan/ Sat, 15 Oct 2022 09:30:44 +0000 https://touringtalkies.co/?p=25442 தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த சிவாஜி,ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற நடிகர்களுக்கு இணையான நடிகராக இருந்தவர் ஜெய்சங்கர். மேடை நாடக நடிகராக இருந்து தனது நடிப்பு திறமையால் திரைப்படத் துறைக்கு வந்தார். ரசிகர்களால் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என இவருக்கு பெயரும் உண்டு. கதாநாயகன்,நகைச்சுவை நாயகன் ,வில்லன் என்று தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் ஜெய்சங்கர். நாயகனாக இருந்த இவர் வில்லன் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என நினைத்தார் பஞ்சு அருணாச்சலம். இருப்பினும் அதை ஜெய்சங்கரிடம் […]

The post ஏ.வி.எம் சரவணனுக்காக வில்லன் ஆனா ஹீரோ..! appeared first on Touring Talkies.

]]>

மிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த சிவாஜி,ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற நடிகர்களுக்கு இணையான நடிகராக இருந்தவர் ஜெய்சங்கர். மேடை நாடக நடிகராக இருந்து தனது நடிப்பு திறமையால் திரைப்படத் துறைக்கு வந்தார். ரசிகர்களால் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என இவருக்கு பெயரும் உண்டு. கதாநாயகன்,நகைச்சுவை நாயகன் ,வில்லன் என்று தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் ஜெய்சங்கர்.

நாயகனாக இருந்த இவர் வில்லன் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என நினைத்தார் பஞ்சு அருணாச்சலம். இருப்பினும் அதை ஜெய்சங்கரிடம் நேராக கூறுவதற்கு தயக்கம் அவர் தப்பாக நினைத்து விட்டால். என்ன செய்வது என்று ஏவி.எம்.சரவணனிடம் இந்த என்னத்தை கூறியிருக்கிறார் அருணாச்சலம். இதைக் கேட்ட அவர் ஜெயசங்கரிடமே பேசிவிடலாமே என்றாராம்.

பிறகு ஜெய்சங்கரை அழைத்து இந்த விஷயத்தை கூறியிருக்கின்றனர். அதற்கு மறுப்பு எதுவும் கூறாமல் அடுத்த நிமிடமே, நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டார் ஜெய்சங்கர். இதைக் கேட்டு சரவணன் மற்றும் பஞ்சு அருணாச்சலத்துக்கு ஆச்சரியம். ஏன் யோசிக்காமல் சொல்லிவிட்டீர்கள் என்றதுக்கு நீங்கள் கூறினால் சரியாக இருக்கும் அதனால் ஒப்புக்கொண்டேன் என்றாராம்.

ரஜினி நடித்த முரட்டுக்காளை திரைப்படத்தில் தான் ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகமான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஏ.வி.எம் சரவணனுக்காக வில்லன் ஆனா ஹீரோ..! appeared first on Touring Talkies.

]]>
“அரசியலுக்கு வருமாறு அழைத்து வேதனைக்குள்ளாக்க வேண்டாம்” – ரஜினியின் உருக்கமான அறிக்கை https://touringtalkies.co/rajinikanth-appeal-to-his-fans-not-to-invite-enters-in-politics/ Mon, 11 Jan 2021 05:56:19 +0000 https://touringtalkies.co/?p=12016 சென்னையில் நேற்று ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஒன்று திரண்டு நடத்திய போராட்டத்திற்கு ரஜினி பாராட்டு தெரிவித்திருக்கும் அதே நேரத்தில் இது போன்று மீண்டும் மீண்டும் அரசியலுக்கு வரும்படி கோரிக்கை வைத்து தன்னை வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என்று தன் ரசிகர்களிடம் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

The post “அரசியலுக்கு வருமாறு அழைத்து வேதனைக்குள்ளாக்க வேண்டாம்” – ரஜினியின் உருக்கமான அறிக்கை appeared first on Touring Talkies.

]]>
சென்னையில் நேற்று ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஒன்று திரண்டு நடத்திய போராட்டத்திற்கு ரஜினி பாராட்டு தெரிவித்திருக்கும் அதே நேரத்தில் இது போன்று மீண்டும் மீண்டும் அரசியலுக்கு வரும்படி கோரிக்கை வைத்து தன்னை வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என்று தன் ரசிகர்களிடம் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

The post “அரசியலுக்கு வருமாறு அழைத்து வேதனைக்குள்ளாக்க வேண்டாம்” – ரஜினியின் உருக்கமான அறிக்கை appeared first on Touring Talkies.

]]>
மருத்துவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் என்னால் கேட்க முடியும்-மன்றத்தினருக்கு அதிர்ச்சியளித்த ரஜினி..! https://touringtalkies.co/rajini-speech-at-makkal-mandra-sexretaries-meeting/ Mon, 30 Nov 2020 10:43:02 +0000 https://touringtalkies.co/?p=10469 சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி மக்கள் மன்றத்தின் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்று பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார். “காசு சம்பாதிக்கணும்னு வர்றவங்க என்னை நம்பி வராதீங்க. மன்றத்துலேயும் இருக்காதீங்க. வேண்டாம்… போயிடுங்க. ஏற்கனவே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் இப்போதைய கொரோனா காலத்தில் டாக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நான் செய்ய முடியும். மன்ற நிர்வாகிகள் பலரும் […]

The post மருத்துவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் என்னால் கேட்க முடியும்-மன்றத்தினருக்கு அதிர்ச்சியளித்த ரஜினி..! appeared first on Touring Talkies.

]]>
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி மக்கள் மன்றத்தின் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்று பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

“காசு சம்பாதிக்கணும்னு வர்றவங்க என்னை நம்பி வராதீங்க. மன்றத்துலேயும் இருக்காதீங்க. வேண்டாம்… போயிடுங்க.

ஏற்கனவே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் இப்போதைய கொரோனா காலத்தில் டாக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நான் செய்ய முடியும்.

மன்ற நிர்வாகிகள் பலரும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். எனக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்துகிறார்கள்.. அவங்களோட லிஸ்ட்டு என்னிடம் இருக்கு. இனிமேல் நான் கடுமையான  நடவடிக்கை எடுப்பேன். சரியில்லாத மாவட்ட நிர்வாகிகளை மாற்றப் போகிறேன். புதிய மாநில நிர்வாகிகளை நியமிக்கப் போகிறேன்.

நான் உங்களை அழைத்தால் இங்கே வந்து நன்றாகப் பேசுகிறீர்கள். ஆனால், ஃபீல்டுக்குப் போனால்… சொதப்பி விடுகிறீர்கள். உங்களுக்கு அரசியலில் அனுபவம் போதாது. உங்களில் 15 சதவிகிதம் பேரின் செயல்பாடுகள்தான் சரியாக இருக்கின்றன. இன்னும் பலரது செயல்பாடுகள், வேலைகளில் எனக்குத் திருப்தியில்லை.

மக்கள் நலத் திட்டப் பணிகளைத் தீவிரமாக செய்வீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனால், நீங்கள் சரி வரச் செய்யலை. இப்போ இந்த ஒரு வருஷமா நான் அரசியலுக்கு வர மாட்டேன்னு நினைச்சு பலரும் மன்ற வேலைல இருந்த ஒதுங்கீட்டீங்க.

அப்படியே நாம் தேர்தலில் போட்டியிட்டாலும் மிக அதிபட்சமாக 15% ஓட்டுகளை வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இப்படி 10-15% ஓட்டு வாங்குவதால் எந்தப் பயனுமே இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் சினிமாவில் ஜெயித்திருக்கிறேன். அதனால் அரசியலுக்குப் போனாலும் தேர்தலுக்குப் போனாலும் நான் ஜெயித்தாக வேண்டும். அது சாத்தியமே இல்லை என்கிறபோது எதற்காகக் கட்சியை தொடங்க வேண்டும்..?

நான் தெருவுக்கு வந்து பிரசாரம் செய்தால்தான் ஜெயிக்க முடியும்னு நினைக்கிறேன். கொரோனா சீஸன் என்பதாலேயே யோசிக்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார் ரஜினி.

இதற்கு நிர்வாகிகள் “சமூக வலைதளங்களில் விஷுவல் மீடியாவில் பிரசாரம் செய்யலாம்… என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை ரஜினி ஏற்றுக் கொள்ளவில்லையாம். “அதெல்லாம் சரிப்பட்டு வராது. மக்கள் என்னை நேரில் எதிர்பார்ப்பார்கள். அத்தனை தொகுதிகளுக்கும் நேரில் போகத்தான் வேண்டும்..” என்றாராம்.

கடைசியாக, “நீங்கள் அரசியலில் கால் வைக்கச் சொன்னால் வைக்கிறோம்.. வேண்டாம் என்றால் இதுவரையிலும் எப்படியிருந்தோமே அது போலவே இருந்து கொள்கிறோம்…” என்று பெருவாரியான மாவட்டச் செயலாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதனால் அரசியலில் இறங்கலாமா.. வேண்டாமா.. என்பது பற்றி முடிவெடுக்கம் அதிகாரத்தை ரஜினியிடமே விட்டுவிட்டார்கள்.

ரஜினியின் இன்றைய வெளிப்படையான பேச்சுக்களால் ஆடிப் போயிருக்கிறார்கள் மக்கள் மன்ற நிர்வாகிகள்.

The post மருத்துவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் என்னால் கேட்க முடியும்-மன்றத்தினருக்கு அதிர்ச்சியளித்த ரஜினி..! appeared first on Touring Talkies.

]]>
“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..! https://touringtalkies.co/rajinis-secret-statement-about-his-political-entry/ Wed, 28 Oct 2020 05:24:32 +0000 https://touringtalkies.co/?p=9365 வரும் சட்டமன்றத் தேர்தலின் கூட்டணி குறித்து அனைத்துக் கட்சிகளிலும் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்த திட்டமிட்டும், அது ஒரே ஒருவரால் தடைக்கல்லாகி நிற்கிறது. காரணம் ரஜினி. அவர் அரசியலுக்கு வருவாரா.. கட்சி ஆரம்பிப்பாரா.. தேர்தலில் நிற்பாரா.. யாருடன் கூட்டணி வைப்பார் என்பதெல்லாம் தெரியாமல் அனைத்துக் கட்சிகளிலும் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ரஜினி தனது நலன் விரும்பிகளுக்கு எழுதியதாகச் சொல்லப்படும் ஒரு கடிதம் நேற்று முதல் பரபரப்பாக வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. […]

The post “அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..! appeared first on Touring Talkies.

]]>
வரும் சட்டமன்றத் தேர்தலின் கூட்டணி குறித்து அனைத்துக் கட்சிகளிலும் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்த திட்டமிட்டும், அது ஒரே ஒருவரால் தடைக்கல்லாகி நிற்கிறது. காரணம் ரஜினி.

அவர் அரசியலுக்கு வருவாரா.. கட்சி ஆரம்பிப்பாரா.. தேர்தலில் நிற்பாரா.. யாருடன் கூட்டணி வைப்பார் என்பதெல்லாம் தெரியாமல் அனைத்துக் கட்சிகளிலும் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ரஜினி தனது நலன் விரும்பிகளுக்கு எழுதியதாகச் சொல்லப்படும் ஒரு கடிதம் நேற்று முதல் பரபரப்பாக வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று இரவு சமூக வலைத்தளங்களிலும் இந்தக் கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் கடிதத்தில் ரஜினி தன்னுடைய உடல் நிலை காரணமாகவும், கொரோனா நோய்த் தாக்குதலின் பயம் காரணமாகவும் அரசியலுக்கு வருவதற்கு யோசிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இந்தக் கடிதம் உண்மையா.. அல்லது போலியா.. என்பது குறித்து ரஜினி வட்டாரங்கள் இப்போதுவரையிலும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அந்தக் கடிதம் இதுதான் :

“என்னை வாழ வைத்த தெய்வங்களான என் அன்புக்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்குக் கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் – அரசியல் மாற்றத்துக்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.

இந்தக் கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை.

2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016-ம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்குச் சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரிலுள்ள மயோ கிளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.

கொரோனா தொற்று எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில், எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன்.

அதற்கு மருத்துவர்கள், “கொரோனாவுக்கு ஒரே தீர்வு தடுப்பூசிதான். அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும், அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக் கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரிய வரும்.

இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்கு சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக் கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல் நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும்.

ஆகையால், இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

எனக்கு என் உயிர் பற்றிய கவலை இல்லை. என்னை நம்பி வருவோரின் நலன் குறித்துத்தான் கவலை. நான் தொடங்குவதோ புதுக் கட்சி. மக்களை நேரில் சந்திக்காமல், மாநாடுகள் நடத்தாமல், பொதுக் கூட்டங்கள் கூட்டாமல் வெறும் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால், நான் எதிர்பார்க்கும் அரசியல் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கி, அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது.

மருத்துவர்களின் ஆலோசனையை மீறி கட்சி ஆரம்பித்து, இடையில் என் உடல்நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும்.

இதை இப்போதே சொல்லக் காரணம், என்னை ஆதரிப்போரின் மத்தியில் நான் அரசியலுக்கு வருவேன் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிவரும் சூழலில், இந்த கொரோனா பிரச்னை தொடரும் நிலையில், கடைசி நேரத்தில் இந்தக் காரணங்களைக் காட்டி ஒருவேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால், அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும்.

நான் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதை எதிர்வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும். இது தீர்க்கமாக யோசித்து, தீர ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு.

எனவே, அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, என் உடல்நலத்தில் அக்கறையுள்ள, என்னை வாழ வைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய ரசிகர்களும், மக்களும்… என்னை என்ன முடிவு எடுக்கச் சொன்னாலும் அதனை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

வாழ்க தமிழ் மக்கள்!

வளர்க தமிழ்நாடு!!

ஜெய்ஹிந்த்!!!’

இப்படி எழுதப்பட்டிருக்கிறது அந்தக் கடிதம்.

இந்தக் கடிதத்தின்படி தனக்கு கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்பதை ரஜினி மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறார்.

இதனை அவரது ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை..!!!

The post “அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..! appeared first on Touring Talkies.

]]>