Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
radha – Touring Talkies https://touringtalkies.co Mon, 29 Jan 2024 03:14:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png radha – Touring Talkies https://touringtalkies.co 32 32 டான்ஸ் மாஸ்டர் இல்லமல் தானே ஆடிய ராதா! எந்த பாட்டுக்குத் தெரியுமா? https://touringtalkies.co/radha-danced-by-herself-without-a-dance-master-do-you-know-which-song/ Mon, 29 Jan 2024 03:14:22 +0000 https://touringtalkies.co/?p=39537 சின்ன கவுண்டர், எஜமான் , வனஜா கிரிஜா , ரெட்டை ஜடை வயசு , ஒரு ஊலா ஒரு ராஜகுமாரி, எதிரும் புதிரும், வானவில் ராஜிஜ்யம்,  உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஏ.கார்த்திக் ராஜா. பாக்யராஜ், ஆர்.வி. உதய குமார், தரணி, மனோஜ் குமார் உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய இவர், பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். ஒரு படத்தில், டான்ஸ் மாஸ்டர் இல்லாமல் தானாகவே பாடலுக்கு நடனமாடிய ராதா […]

The post டான்ஸ் மாஸ்டர் இல்லமல் தானே ஆடிய ராதா! எந்த பாட்டுக்குத் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
சின்ன கவுண்டர், எஜமான் , வனஜா கிரிஜா , ரெட்டை ஜடை வயசு , ஒரு ஊலா ஒரு ராஜகுமாரி, எதிரும் புதிரும், வானவில் ராஜிஜ்யம்,  உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஏ.கார்த்திக் ராஜா.

பாக்யராஜ், ஆர்.வி. உதய குமார், தரணி, மனோஜ் குமார் உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய இவர், பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஒரு படத்தில், டான்ஸ் மாஸ்டர் இல்லாமல் தானாகவே பாடலுக்கு நடனமாடிய ராதா குறித்தும் இந்த பேட்டியில் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.

அது எந்த படம்… எந்த பாடல்..

அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post டான்ஸ் மாஸ்டர் இல்லமல் தானே ஆடிய ராதா! எந்த பாட்டுக்குத் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
ராதாவுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-how-radha-got-her-chance/ Mon, 12 Jun 2023 04:38:45 +0000 https://touringtalkies.co/?p=33384 பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாக, ஹீரோயினாக பலகாலம் வலம் வந்தவர் ராதா. இந்த முதல் வாய்ப்பு கிடைத்தது குறித்து ராதா தெரிவித்து உள்ளார். “எனக்கு அம்பிகா உள்ளிட்ட இரு சகோதரிகள். எங்கள் மூவரின் படங்களையும் பாரதிராஜாவிடம் கொடுத்தார் என் அம்மா. மற்ற இருவரின் முகத்தில் மலையாள சாயல் இருக்கிறது. ஆகவே ராதாவை நடிக்கவைக்கிறேன்” என்று பாரதிராஜா கூறினார். அப்போது நான் ஒன்பதாம் வகுப்புதான் படித்துக்கொண்டு இருந்தேன். இன்னொரு விசயம்..  என் உண்மையான பெயர் உதயசந்திரிக்கா. […]

The post ராதாவுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாக, ஹீரோயினாக பலகாலம் வலம் வந்தவர் ராதா.

இந்த முதல் வாய்ப்பு கிடைத்தது குறித்து ராதா தெரிவித்து உள்ளார்.

“எனக்கு அம்பிகா உள்ளிட்ட இரு சகோதரிகள். எங்கள் மூவரின் படங்களையும் பாரதிராஜாவிடம் கொடுத்தார் என் அம்மா.

மற்ற இருவரின் முகத்தில் மலையாள சாயல் இருக்கிறது. ஆகவே ராதாவை நடிக்கவைக்கிறேன்” என்று பாரதிராஜா கூறினார்.

அப்போது நான் ஒன்பதாம் வகுப்புதான் படித்துக்கொண்டு இருந்தேன். இன்னொரு விசயம்..  என் உண்மையான பெயர் உதயசந்திரிக்கா. சினிமாவிற்காக ராதா என்று மாற்றியவர் பாரதிராஜா தான்” என்று ராதா தெரிவித்து உள்ளார்.

The post ராதாவுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சிவக்குமாரின் படம் திரையிடப்படுகிறது..! https://touringtalkies.co/actor-sivakumars-movie-will-screened-in-kerala-film-festival-2022/ Tue, 15 Mar 2022 10:19:45 +0000 https://touringtalkies.co/?p=21253 கேரளாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் சிவக்குமார், ராதா நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய தேசிய விருது பெற்ற ‘மறுபக்கம்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது. கேரளாவில் வருடந்தோறும் நடைபெறும் கேரள சர்வதேச திரைப்பட விழா, இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டிருந்தது. அது தற்போது வரும் மார்ச் 18-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை இந்த திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. துவக்க விழா வரும் […]

The post கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சிவக்குமாரின் படம் திரையிடப்படுகிறது..! appeared first on Touring Talkies.

]]>
கேரளாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் சிவக்குமார், ராதா நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய தேசிய விருது பெற்ற ‘மறுபக்கம்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

கேரளாவில் வருடந்தோறும் நடைபெறும் கேரள சர்வதேச திரைப்பட விழா, இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

அது தற்போது வரும் மார்ச் 18-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை இந்த திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. துவக்க விழா வரும் மார்ச் 18-ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த திரைப்பட விழாவில் 14 திரையரங்குகளில் சுமார் 180 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. மேலும், கடந்த வருடம் முதல் தற்போதுவரையிலும் மறைந்த திரைப்பட கலைஞர்களுக்கு உரிய முறையில் அஞ்சலியும் செலுத்தப்பட இருக்கிறது.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் மறைந்த பிரபல இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய தமிழ் திரைப்படமான மறுபக்கம்’ இந்த விழாவில் திரையிடப்படுகிறது.

“K.S.சேதுமாதவனின் மலையாளப் படங்கள் பற்றி கேரள ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தமிழில் அவர் இயக்கிய தேசிய விருதுகள் பெற்ற மறுபக்கம்’ படத்தை பற்றி இங்குள்ள ரசிகர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த படம் இந்த விழாவில் திரையிடப்படுவதாக…” விழாக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

1991-ல் வெளியான இந்த மறுபக்கம்’ படத்தில் சிவகுமார் கதாநாயகனாக நடித்திருந்தார். ராதா மற்றும் ஜெயபாரதி இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது.

மேலும் மறுபக்கம்’ படம்  திரையிடப்படும்போது நடிகர் கமல்ஹாசனுக்கும் அதில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்படும் என்றும் விழாக் குழுவினர் கூறியுள்ளனர்.

கமல் நடித்த நம்மவர்’ படத்தை கே.எஸ்.சேதுமாதவன்தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சிவக்குமாரின் படம் திரையிடப்படுகிறது..! appeared first on Touring Talkies.

]]>