Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
pradheep ranganathan – Touring Talkies https://touringtalkies.co Sat, 10 Dec 2022 15:32:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png pradheep ranganathan – Touring Talkies https://touringtalkies.co 32 32 இந்த வருடத்தின் டாப் 10 படங்களில் ‘லவ் டுடே’ இடம் பிடித்தது https://touringtalkies.co/love-today-movie-gets-top-10-movies-list-of-this-year/ Sat, 10 Dec 2022 15:32:09 +0000 https://touringtalkies.co/?p=28363 பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோரின் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வெளியான, ‘லவ் டுடே’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, OTT தளத்திலும் தற்போது வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு இன்று மதியம் கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாலில் படத்தின் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கிரியேட்டிவ் […]

The post இந்த வருடத்தின் டாப் 10 படங்களில் ‘லவ் டுடே’ இடம் பிடித்தது appeared first on Touring Talkies.

]]>
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோரின் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வெளியான, ‘லவ் டுடே’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, OTT தளத்திலும் தற்போது வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது.

படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு இன்று மதியம் கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாலில் படத்தின் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி, சிஎஃப்ஓ ரங்கராஜன், நிர்வாக தயாரிப்பாளர் வெங்கட் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சிஎஃப்ஓ ரங்கராஜன், “நல்ல கதையம்சம் கொண்ட படம் எப்போதும் வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நல்ல கதை, வசனம் மற்றும் திரைக்கதையுடன் வெளியாகும் படங்களை பார்க்க ரசிகர்கள் கண்டிப்பாக தியேட்டருக்கு வருவார்கள். அதை இப்போது இந்த லவ் டுடே படம் நிரூபித்துள்ளது. இதற்கான அனைத்து பெருமைகளும் இயக்குநர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனுக்கு சொந்தமானது. இதற்கு கல்பாத்தி குடும்பத்தின் சார்பாக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகை மற்றும் ஊடகங்கள் ஏஜிஎஸ்-க்கு ஆரம்பம் முதலே அளவற்ற ஆதரவை அளித்து வருகின்றன. எதிர்காலத்திலும் இது தொடரும் என நம்புகிறேன். ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் திரைப்படத் துறையை சார்ந்தவர்களும் எனது நன்றிகள்…” என்றார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி கூறுகையில், “சிறியதோ பெரியதோ எல்லா படங்களுக்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் ஒரே மாதிரியான முயற்சிகளை செய்கிறது. ஒரு சிறிய படத்துடன் ஒப்பிடும்போது பெரிய படத்திற்கான விளம்பரம் எளிதான முறையில் நடக்கிறது. ‘லவ் டுடே’ படத்திற்கு ஒருமித்த ஆதரவு அளித்த அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறிய படங்கள் மிகவும் முக்கியமானவை. பல சூப்பர் ஸ்டார்களை சிறிய படங்கள் உருவாக்கியுள்ளன. அதை நாம் பார்த்திருக்கிறோம். இதுபோன்ற சிறிய திரைப்படங்களுக்கு பத்திரிகைகளின் ஆதரவு முக்கியமானது. ஊடகங்கள் ஒரு திரைப்படத்தைப் பற்றிய நல்ல விஷயங்களைப் பகிர்வதால், பார்வையாளர்களுக்கு தானாகவே அந்த படத்தை பார்க்க ஆர்வம் ஏற்படும்..” என்று கூறினார்.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, “இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என நான் மிகவும் எதிர்பார்த்தேன். இந்த நம்பிக்கை 50 சதவீதம் என் மேல் இருந்தது, மீதி மீடியா மேல் எனக்குள்ள நம்பிக்கை. ‘லவ் டுடே’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே எங்களுக்கு ஏகப்பட்ட ஆதரவு கிடைத்தது. டிரெய்லர் வெளியான பிறகு படம் நல்லா இருக்கும் என அனைவரும் நம்பினீர்கள். அதனால் எங்களுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. நீங்கள் அளித்த விமர்சனங்கள் ‘லவ் டுடே’வை இந்த வருடத்தின் டாப் 10 படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. உங்கள் ஆதரவு ‘கோமாளி’ திரைப்படத்திற்கும் இப்போது ‘லவ் டுடே’க்கும் கிடைத்தது. எதிர்காலத்திலும் இது தொடரும் என்று நம்புகிறேன். நீங்கள் ஆதரிக்கக் கூடிய திரைப்படங்களை உருவாக்கவும் முயற்சிப்பேன். இந்தப் படத்தின் முதுகெலும்பாக இருந்ததற்கு ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி…” என்று கூறினார்.

விழாவின் இறுதியில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிர்வாக தயாரிப்பாளர் வெங்கட் மாணிக்கம் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

The post இந்த வருடத்தின் டாப் 10 படங்களில் ‘லவ் டுடே’ இடம் பிடித்தது appeared first on Touring Talkies.

]]>
பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தின் வசூல் 50 கோடியைத் தாண்டியது..! https://touringtalkies.co/pradeep-ranganathans-love-today-collection-crossed-50-crores/ Thu, 17 Nov 2022 10:11:39 +0000 https://touringtalkies.co/?p=27179 பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள ‘லவ் டுடே’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் ‘கோமாளி’. 90-ஸ் கிட்ஸின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள படம் ‘லவ் டுடே’. 2கே கிட்ஸ்களின் சமகால காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் […]

The post பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தின் வசூல் 50 கோடியைத் தாண்டியது..! appeared first on Touring Talkies.

]]>
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள ‘லவ் டுடே’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் ‘கோமாளி’. 90-ஸ் கிட்ஸின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள படம் ‘லவ் டுடே’.

2கே கிட்ஸ்களின் சமகால காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் நாயகியாக இவானா நடித்துள்ளார். தவிர, யோகிபாபு, சத்யராஜ், ராதிகா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்பாத்தி எஸ்.அகோரம் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் முதல் நாள் ரூ.3 கோடி அளவில் வசூலித்தது. இரண்டாம் நாள் ரூ.5.35 கோடியும், மூன்றாம் நாள் ரூ.6.25 கோடியும் வசூலித்து மொத்தம் மூன்று நாட்களில் படம் கிட்டத்தட்ட ரூ.14 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 11-ஆம் நாள் முடிவில் இப்படம் ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்து இப்படம் முன்னேறி வருகிறது.

The post பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தின் வசூல் 50 கோடியைத் தாண்டியது..! appeared first on Touring Talkies.

]]>
‘லவ் டுடே’ தலைப்புக்காக இயக்குநர் பாலசேகரனுக்கு நன்றி சொல்லாத பிரதீப் ரங்கநாதன்..! https://touringtalkies.co/pradeep-ranganathan-did-not-thanks-to-director-balasekaran-for-the-title-love-today/ Mon, 07 Nov 2022 16:55:24 +0000 https://touringtalkies.co/?p=26751 சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘லவ் டுடே’ படத்தின் தலைப்புக்காக அந்தப் படத்தின் பெயரில் முதலில் படம் இயக்கிய இயக்குநரான ‘லவ் டுடே’ பாலசேகரனுக்கு நன்றி தெரிவிக்காதது திரையுலகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளிவந்த ‘லவ் டுடே’ படத்தை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்திருக்கிறார். இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் இந்தப் படத்தின் கதையும், திரைக்கதையும், இயக்கமும் இருப்பதால் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதே ‘லவ் டுடே’ என்ற பெயரில் 1997-ம் ஆண்டு […]

The post ‘லவ் டுடே’ தலைப்புக்காக இயக்குநர் பாலசேகரனுக்கு நன்றி சொல்லாத பிரதீப் ரங்கநாதன்..! appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘லவ் டுடே’ படத்தின் தலைப்புக்காக அந்தப் படத்தின் பெயரில் முதலில் படம் இயக்கிய இயக்குநரான ‘லவ் டுடே’ பாலசேகரனுக்கு நன்றி தெரிவிக்காதது திரையுலகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளிவந்த ‘லவ் டுடே’ படத்தை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்திருக்கிறார். இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் இந்தப் படத்தின் கதையும், திரைக்கதையும், இயக்கமும் இருப்பதால் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இதே ‘லவ் டுடே’ என்ற பெயரில் 1997-ம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளிவந்தது. அந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரிதிருந்தார். விஜய், சுவலட்சுமி, மந்த்ரா, ரகுவரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

அந்தப் படம் அப்போது பெரிய வெற்றியைப் பெற்றதால் அப்படத்தை இயக்கிய இயக்குநர் பாலசேகரன் இன்றுவரையிலும் லவ் டுடே’ பாலசேகரன் என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.

இவர் இந்தப் படத்திற்குப் துள்ளித் திரிந்த காலம்’, ‘ஆர்யா’ ஆகிய தமிழ்ப் படங்களையும், தெலுங்கில் சில படங்களையும் இயக்கியுள்ளார்.

எப்போதும் ஒரு படத்தின் தலைப்பை அதன் இயக்குர்கள்தான் முடிவு செய்வார்கள். அந்தவிதத்தில் இயக்குநர் பாலசேகரன் தேர்வு செய்து வைத்த தலைப்புதான் லவ் டுடே’.

ந்தத் தலைப்பை மீண்டும் பயன்படுத்த அப்படத்தின் தயாரிப்பாளரான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரியிடமிருந்து எழுத்து மூலமாக அனுமதியைப் பெற்றுதான் வைக்க முடியும்.

அப்படித்தான் முறைப்படி அனுமதி பெற்று பிரதீப் ரங்கநாதன் தன் ‘லவ் டுடே’ படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் போடும்போது அதன் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி, இந்தப் படத்தின் டைட்டிலில் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, மற்றும் படத்தின் கதாநாயகனான விஜய் ஆகியோருக்கு நன்றி என்று கார்டு போட்டுள்ளார்கள். ஆனால் இந்தத் தலைப்பை யோசித்து வைத்திருந்த இயக்குநர் பாலசேகரனுக்கு நன்றி கார்டு போடவில்லை.  

இது குறித்து பழைய ‘லவ் டுடே’ படத்தில் இயக்குநர் பாலசேகரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரும், எழுத்தாளர், இயக்குநருமான அஜயன் பாலா அவரது பேஸ்புக்கில் தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அஜயன் பாலா இது குறித்து எழுதியிருப்பது இதுதான் :

“நேற்று லவ் டுடே-2022’ பார்த்தேன். தியேட்டரில் தீபாவளி கொண்டாடுகிறார்கள். நடிகர், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்துக்கள். நேரடி ஆபாச வசனங்களை தவிர்த்து இருக்கலாம்.

படத்தில் டைட்டிலில் நான் உதவியாளராக பணி புரிந்த விஜய் நடித்த லவ் டுடே’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரிக்கு நன்றி சொன்ன இயக்குர், கூடவே இயக்குநர் பாலசேகரனுக்கும் ஒரு நன்றியை சொல்லியிருக்கலாம். விசாரித்தபோது அவரிடம் இது குறித்து ஒரு மரியாதை நிமித்தம்கூட யாரும் அனுமதி கேட்கவில்லையாம். டேட்டா உலகில் இன்று தலைப்புதான் ஒரு படைப்பின் அடையாளம். பொதுவாக அவரை ‘லவ் டுடே’ பாலசேகரன் என அழைப்பார்கள். இனி அவரை அப்படி அழைக்க தயங்குவார்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார் அஜயன் பாலா.

The post ‘லவ் டுடே’ தலைப்புக்காக இயக்குநர் பாலசேகரனுக்கு நன்றி சொல்லாத பிரதீப் ரங்கநாதன்..! appeared first on Touring Talkies.

]]>
லவ் டுடே – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/love-today-movie-review/ Sun, 06 Nov 2022 18:21:10 +0000 https://touringtalkies.co/?p=26687 இன்றைய 2-கே தலைமுறையினர் எதிர்கொள்ளும் காதல், மற்றும் உறவு சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசுகிறது. காதலில் நம்பிக்கைதான் முக்கியம் என்பதை செல்போன் பரிமாற்றத்தின் மூலமாக உணர்த்துகிறது இந்தப் படம். படத்தின் நாயகன் ப்ரதீப் ரங்கநாதனும், நாயகி இவனாவும் காதலர்கள். உருகி, உருகி காதலிக்கும் இவர்களின் காதலுக்கு ஓகே சொல்ல, இவானாவின் அப்பாவான சத்யராஜ் ஒரு வித்தியாசமான நிபந்தனையை விதிக்கிறார்.   “உங்கள் காதலை நான் எதிர்க்கலை. ஆனால் நீங்கள் இருவரும் ஒரேயொரு நாள் உங்களின் மொபைல் போன்களை […]

The post லவ் டுடே – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இன்றைய 2-கே தலைமுறையினர் எதிர்கொள்ளும் காதல், மற்றும் உறவு சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசுகிறது. காதலில் நம்பிக்கைதான் முக்கியம் என்பதை செல்போன் பரிமாற்றத்தின் மூலமாக உணர்த்துகிறது இந்தப் படம்.

படத்தின் நாயகன் ப்ரதீப் ரங்கநாதனும், நாயகி இவனாவும் காதலர்கள். உருகி, உருகி காதலிக்கும் இவர்களின் காதலுக்கு ஓகே சொல்ல, இவானாவின் அப்பாவான சத்யராஜ் ஒரு வித்தியாசமான நிபந்தனையை விதிக்கிறார்.  

“உங்கள் காதலை நான் எதிர்க்கலை. ஆனால் நீங்கள் இருவரும் ஒரேயொரு நாள் உங்களின் மொபைல் போன்களை மாத்தி வைச்சுக்கணும். அந்த ஒரு நாள் முடிந்த பின்னும் உங்களுக்குள் இதேபோல் காதல் இருந்தால், நான் உங்கள் காதலை ஏற்றுக் கொள்கிறேன்” என்கிறார் சத்யராஜ்.

இதைக் கேட்டவுடன் ப்ரதீப், இவானா இருவருக்குள்ளும் பதட்டம் வருகிறது. ஏனென்றால் காதலர்கள் இருவருமே நாங்கள் ஒன்றுதான் என்று சொல்லிக் கொண்டாலும் அவர்களுக்குள்ளும்  தனித்தனி ரகசியங்கள் இருக்கின்றன. அது அவர்களின் மொபைல் மாற்றத்தால் வெட்டவெளிச்சமாகிறது.

இருவரும் மற்றவர் செல்போனை பயன்படுத்தத் தொடங்க, அதுவரை வெளியில் தெரியாத பல பூதங்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் கிளம்பி, அவர்கள் காதலை புட்பால் ஆடி விடுகிறது.

இதன் பின்னர் இருவரும் நிறைய சண்டை போடுகிறார்கள். முடிவில் இவர்கள் இணைந்தார்களா… இல்லையா.. என்பதை இன்றைய தலைமுறையினர் கொண்டாடும் வகையில் ரசனையோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதன்.

நாயகன் ப்ரதீப் ரங்கநாதன் தன் நடிப்பில் தனுஷ், பிரபுதேவா, எஸ்.ஜே.சூர்யா ஆகிய மூவரின் மேனரிசம், நடிப்பு இரண்டையும் கலந்து கொடுத்துள்ளார். காமெடி, காதல், எமோஷ்னல் என எல்லா ஏரியாவிலும் நடிப்பில் நல்ல கவனம் பெறுகிறார் பிரதீப். புதுமுக நடிகராக அவரது நடிப்பு எந்த வியப்பையும் ஏற்படுத்தவில்லை என்றபோதும் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் எட்டிப் பார்க்கிறது.

நாயகி இவானா மிக அழகு. தன் கதாபாத்திரத்திறகு ஏற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஆபாச வசனங்களைக்கூட கொஞ்சமும் சங்கடமில்லாமல் பேசி நடித்திருக்கிறார்.  ஒரு முக்கியமான போன் கான்வர்சேஷன் காட்சியில் கண் கலங்க வைக்கும்படி நடித்துள்ளார்.  

வேணு சாஸ்திரி கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் பக்காவாக பொருந்திப் போகிறார். வீணை வாசித்தபடியே பேசுவது, கறாரான தந்தையாகவும், அதேசமயம் எதிலும் பர்ஃபெக்‌ஷன் பார்க்கும் நபராகவும் குறைந்த நேரம் திரையில் தோன்றினாலும் ரசிக்க வைத்திருக்கிறார். வாட்டர் கேன் போடும் பையனிடம் ஒரு ரூபாய்க்காக அவர் செய்யும் ரவுசு, அசத்தல் காமெடி.

ப்ரதீப்பின் அம்மாவாக வரும் ராதிகா சரத்குமார் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒட்டு மொத்தமாக எல்லோர் நடிப்பையும் ஓரங்கட்டி விடுகிறார். படத்தில்  அவர் பேசும் வசனங்கள்தான் படம் சொல்ல வரும் நீதி..!

யோகிபாபு என்ற காமெடி ப்ளஸ் குணச்சித்திர நடிகனை இந்தப் படத்தில் மிகச் சரியாக பயன்படுத்தியுள்ளார் இயக்குநர். காமெடியனாகத் தெரியும் யோகிபாபு, க்ளைமாக்ஸுக்கு முந்தையக் காட்சியில் மனதை உருக்கும்படி நடித்துள்ளார். ப்ரதீப்பின் அக்காவாக வரும் ரவீணாவும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.

மேலும் ஹீரோவின் நண்பர்களாக நடித்த அனைவருமே நல்ல தேர்வு. குறிப்பாக ஆதித்யா கதிர் அடிக்கும் சில பன்ச் வசனங்களுக்குத் தியேட்டரில் சிரிப்பலை எழுகிறது.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, பாடல்கள் இரண்டுமே, இன்றைய இளைஞர்களின் பல்சை பதம் பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவும் படத்தை கூடுதல் எனர்ஜியாக்கியுள்ளது.

போன் பரிமாற்றம் என்ற சின்ன லைனை வைத்துக் கொண்டு காமெடி, எமோஷனல் என அழகாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர். உறவுகளுக்குள் முதல் தேவை நம்பிக்கைதான் என்பதை நச்சென்று சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதற்காக அவர் தனது முதல் படமான கோமாளி’ படத்தின் மையப் பொருளான செல்போனையே இந்தப் படத்திலும் ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

படத்தின் முதல் பாதி வழமையான காதல் காட்சிகள், காதல் பாடல்கள் என்றே நகர்கிறது. செல்போன்கள் கை மாறிய பின்புதான் திரைக்கதை வேகமெடுக்கிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், டின்டர் போன்ற நவீன இளைஞர், இளைஞிகள் அதிகமாக வசித்து வரும் இத்தளங்களில் நிகழும் அத்துமீறல்கள் சில இடங்களில் காமெடியாகவும், பல இடங்களில் பயம் தரும் விதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளன.

பிரதீப் – நிகிதா காதலை மட்டும் விவரிக்காமல், அதையொட்டியே பயணிக்கும் ரவீணா – யோகிபாபு கதையும் திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்த உதவுகிறது. இரண்டாம் பாதியில் திரைக்கதையில் தடுமாற்றம் இருப்பதை உணர முடிகிறது. சில காமெடி காட்சிகள் கதையோட்டத்திற்கு கை கொடுக்கின்றன. என்றாலும், மேற்கொண்டு பலவும் ஆபாச வார்த்தைகளாகவும், முகம் சுளிக்க வைக்கும் வகையிலும் இருப்பதால் நம்மால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. நகைச்சுவை என்ற பெயரில் படத்தில் இருக்கும் சில, பல ஆபாச வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.

2-கே இளைஞர்களை மையப்படுத்தி, காதலுக்குள் நம்பிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தும் இந்த ‘லவ் டுடே’ படம், நவீன காலக்கட்டத்தை காட்சிப்படுத்துவதாக சொல்லிவிட்டு நிறைய பழமைவாத, ஆணாதிக்க கருத்துக்களைப் போதிக்கிறது என்பதும் உண்மைதான்..!

மொத்தத்தில் படத்தின் மெயின் கதையை விட்டுவிட்டு எங்குமே தடம் மாறாமல் பயணிக்கும் இப்படத்தின் திரைக்கதைக்காகவும், படத்தின் முடிவில் சொல்லப்படும் ஒரு மெசேஜுக்காகவும் இப்படத்தைப் பார்க்கலாம்தான்..!

RATING :  3.5 / 5

The post லவ் டுடே – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
காதலை காமெடியுடன் சொல்லும் ‘லவ் டுடே’ படம் https://touringtalkies.co/love-today-movie-preview-news/ Thu, 06 Oct 2022 06:52:43 +0000 https://touringtalkies.co/?p=24894 தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ‘கோமாளி’ பட இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நாயகனாக நடிக்கும், குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய கலகலப்பான பொழுது போக்கு திரைப்படமான ‘லவ் டுடே’ படத்தின் டிரெயிலரை நடிகர் சிம்பு இன்று வெளியிட்டார். இப்படத்தை ‘கோமாளி’ படத்தை இயக்கிய இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ […]

The post காதலை காமெடியுடன் சொல்லும் ‘லவ் டுடே’ படம் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ‘கோமாளி’ பட இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நாயகனாக நடிக்கும், குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய கலகலப்பான பொழுது போக்கு திரைப்படமான ‘லவ் டுடே’ படத்தின் டிரெயிலரை நடிகர் சிம்பு இன்று வெளியிட்டார்.

இப்படத்தை ‘கோமாளி’ படத்தை இயக்கிய இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா ‘லவ் டுடே’ படத்தின் நாயகியாகவும், சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ.ராகவ் படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கலை வடிவமைப்பை எம்.கே.டி., கையாண்டுள்ளார். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும், நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம்.வெங்கட் மாணிக்கமும் பணியாற்றுகிறார்.

“அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய நகைச்சுவை ததும்பும் பொழுது போக்கு படமாக இந்த ‘லவ் டுடே’ படம் இருக்கும்.  மேலும், இன்றைய காதல் மற்றும் 2-கே தலைமுறையினர் எதிர்கொள்ளும் உறவு சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசும். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களோடு பார்வையாளர்களை ‘லவ் டுடே’  ஈர்க்கும்” என்று படக் குழு கூறுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் இன்று வெளியான டிரெயிலரும் அமைந்துள்ளது.

சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘லவ் டுடே’ என்ற தலைப்பைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்த சூப்பர் குட் பிலிம்ஸின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மற்றும் அந்தப் படத்தில் நாயகனாக நடித்திருந்த நடிகர் விஜய்க்கு இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்தப் படம் வரும் நவம்பர் 4-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

The post காதலை காமெடியுடன் சொல்லும் ‘லவ் டுடே’ படம் appeared first on Touring Talkies.

]]>