Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Prabhakaran – Touring Talkies https://touringtalkies.co Fri, 07 Oct 2022 06:47:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Prabhakaran – Touring Talkies https://touringtalkies.co 32 32 பிரபாகரன்-ராஜராஜ சோழன் வாழ்க்கைக் கதையை படமாகத் தயாரிக்கப் போகும் சீமான் https://touringtalkies.co/seeman-is-going-to-make-a-film-about-the-life-story-of-prabhakaran-rajaraja-cholan/ Fri, 07 Oct 2022 06:46:37 +0000 https://touringtalkies.co/?p=24937 சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரையுலகத்தையும் தாண்டி தமிழ் சமூகப் பரப்பில் அரசியல் களத்தையும் சூடாக்கியிருக்கிறது. ராஜராஜ சோழன் தமிழனா, இந்தியனா என்கிற சர்ச்சையை இயக்குநர் வெற்றி மாறன் ஆரம்பித்துவிட.. இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் போதும், போதும் என்று சொல்லும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் இப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நேரத்தில் “ராஜராஜ சோழன் இந்து இல்லை” என்ற கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், நடிகரும், […]

The post பிரபாகரன்-ராஜராஜ சோழன் வாழ்க்கைக் கதையை படமாகத் தயாரிக்கப் போகும் சீமான் appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரையுலகத்தையும் தாண்டி தமிழ் சமூகப் பரப்பில் அரசியல் களத்தையும் சூடாக்கியிருக்கிறது.

ராஜராஜ சோழன் தமிழனா, இந்தியனா என்கிற சர்ச்சையை இயக்குநர் வெற்றி மாறன் ஆரம்பித்துவிட.. இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் போதும், போதும் என்று சொல்லும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் இப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நேரத்தில் “ராஜராஜ சோழன் இந்து இல்லை” என்ற கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், நடிகரும், இயக்குநருமான சீமான் ராஜராஜ சோழன் மற்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுத்தம்பி பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை  சினிமாவாக தான் தயாரிக்கப் போவதாகவும், அந்தப் படங்களை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில், “தமிழர்களின் போற்றுதலுக்குரிய மூதாதை’, ‘எங்கள் பாட்டன்’, ‘அரசனுக்கரசன்’, அருள்மொழி சோழன் அவர்களின் உண்மையான வரலாற்றையும்,

இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி, எங்கள் அண்ணன், ‘தமிழ்த் தேசியத் தலைவர்’ மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச் சிறந்த கலை வடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத் தம்பி வெற்றி மாறன் இயக்குவார்.

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள் தங்களுக்கான வரலாற்றை தாங்களே எழுதுவார்கள்’  என்ற ‘அறிவாசான் அண்ணல்’ அம்பேத்கர் அவர்களின் புரட்சி மொழிக்கேற்ப ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்குத் தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரிய வரும்..” என்று குறிப்பிட்டுள்ளார் சீமான்.

The post பிரபாகரன்-ராஜராஜ சோழன் வாழ்க்கைக் கதையை படமாகத் தயாரிக்கப் போகும் சீமான் appeared first on Touring Talkies.

]]>
‘மேதகு-2’ படம் ஓடிடியில் வெளியாகிறது https://touringtalkies.co/methagu-2-movie-will-released-on-ott/ Tue, 09 Aug 2022 04:10:34 +0000 https://touringtalkies.co/?p=23671 கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான ‘மேதகு’ படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, ‘மேதகு திரைக்களம்’ சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல்பட்டு இந்த படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்பட தயாரிப்பு நிர்வாகத்தில் தமிழன் சதீஸ், முனீஸ், பிரபாகரன் மற்றும் தங்க […]

The post ‘மேதகு-2’ படம் ஓடிடியில் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு’ படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, ‘மேதகு திரைக்களம்’ சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல்பட்டு இந்த படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்பட தயாரிப்பு நிர்வாகத்தில் தமிழன் சதீஸ், முனீஸ், பிரபாகரன் மற்றும் தங்க பிரபா ஆகியோர் உறுதுணையாக பணி புரிந்துள்ளார்கள்.

சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கு சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இதில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.

குறிப்பாக தமிழர்களுக்கு துரோகம் இழைத்த ஒருவரை களை எடுப்பதாகவும் அவர்களை சிங்கள அரசு தேட ஆரம்பிக்க, அவர்கள் காட்டுக்குள் தலைமறைவு ஆவதாகவும் முதல் பாகம் முடிவடைந்தது.

இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்குவதையும் அதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகள், அவர்களுக்கு ஏற்படும் உணர்வு மிக்க சம்பவங்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், தியாகங்கள் என இந்த இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது.

1983-ம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை முழுவதும் நாடளாவிய பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை நடைபெற்ற கருப்பு ஜூலை கலவரத்தையும், அதனால் ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் அகதிகளாக புலம் பெயர்ந்த துயர நிகழ்வையும் இதில் காட்டுவதுடன் அதற்கு காரணம் என்ன, அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

அதே போன்று 1981-ம் ஆண்டு தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கிய துயரமான சம்பவம் நடைபெற்றது. பெரிய அளவில் வெளியே தெரியாத இந்த சம்பவத்தின் பின்னணியையும் இதன் மூலம் தெரியப்படுத்தி உள்ளனராம்.

கதாநாயகனாக தமிழீழ தலைவர் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர்  நடித்துள்ளார்.  கெளரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார். இரா.கோ யோகேந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை மற்றும் வரலாற்று ஆய்வில் மேதகு திரைக்கள குழுவினருடன் சுபன் முன்னின்று உதவி புரிந்துள்ளார்.

இசையமைப்பாளர் பிரவின் குமார், ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், படத்தொகுப்பு ஆதித்யா முத்தமிழ் மாறன் (குவியம் ஸ்டுடியோ) கலை இயக்குர் இன்ப தினேஷ், சண்டை பயிற்சி ஜாக்குவார் தங்கம் மற்றும் அவரது மகன் விஜய் ஜாக்குவார் தங்கம்,  பாடகர்கள் சைந்தவி,  புதுவை சித்தன் ஜெயமூர்த்தி என இந்தப் படத்தின் தொழில் நுட்பக் குழுவும் மிகப் பெரிய பங்களிப்பை இந்தப் படத்திற்காக வழங்கியுள்ளனர்.

வரும் ஆகஸ்ட்-19-ம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்போதே ஐரோப்பா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகியவற்றில் முன் பதிவு துவங்கியுள்ளது.

ஏற்கனவே மேதகு’ படத்தின் முதல் பாகத்திற்கு இந்தியாவில் சென்சார் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதால் இந்த இரண்டாம் பாகத்திற்கும் சென்சார் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து அனைத்து மக்களுக்கும் இந்த படம் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த படத்தை வெளியிடுவதற்காகவே தமிழில் tamils OTT என்கிற புதிய ஓடிடி தளத்தையும் துவங்கியுள்ளனர்.

தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தை திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப் படத்தைப் பார்க்க முடியும்.

இதற்கு முன்னதாக பழ.நெடுமாறன், பெ.மணியரசன், அரசியல் தலைவர்கள் – திருமாவளவன், ராமதாஸ், வேல்முருகன், தனியரசு,  நடிகர்கள் – சத்யராஜ், சசிகுமார், விஷால், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ‘மேதகு-2’ படம் ஓடிடியில் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
பதுங்கு குழியில் படமான ‘சல்லியர்கள்’ திரைப்படம் https://touringtalkies.co/salliyargal-movie-preview-news/ Mon, 17 Jan 2022 19:22:58 +0000 https://touringtalkies.co/?p=20285 போர்க் களத்தை மையப்படுத்தி தமிழில் வெகு சில படங்களே வெளியாகியுள்ளன. அந்த வகையில் சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில், ஈழத்தில் நடந்த போரை மையப்படுத்தி ‘சல்லியர்கள்’ என்கிற படம் உருவாகியுள்ளது. நடிகர் கருணாஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளதுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக ‘களவாணி’ புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். மற்றபடி […]

The post பதுங்கு குழியில் படமான ‘சல்லியர்கள்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
போர்க் களத்தை மையப்படுத்தி தமிழில் வெகு சில படங்களே வெளியாகியுள்ளன. அந்த வகையில் சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில், ஈழத்தில் நடந்த போரை மையப்படுத்தி ‘சல்லியர்கள்’ என்கிற படம் உருவாகியுள்ளது.

நடிகர் கருணாஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளதுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி’ புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். மற்றபடி பெரும்பாலும் புதுமுகங்களே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – கருணாஸ், இணை தயாரிப்பு – நேசமணி ராஜேந்திரன் & ராவணன் குமார், எழுத்து, இயக்கம் – கிட்டு, ஒளிப்பதிவு – சிபி சதாசிவம், இசை – பிரவீண் குமார், படத் தொகுப்பு – சி.எம்.இளங்கோவன், கலை இயக்கம் – முஜிபூர் ரஹ்மான், சண்டை இயக்கம் – எஸ்.ஆர்.சரவணன், ஒப்பனை – அப்துல், வி.எப்.எக்ஸ். – சதீஷ் சேகர், மக்கள் தொடர்பு – A.ஜான்.

தலைவர் பிரபாகரனின் ஆரம்பக் கட்ட வாழ்க்கையை மையப்படுத்தி உருவான ‘மேதகு’ படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுதான் இந்த ‘சல்லியர்கள்’ படத்தையும் இயக்கியுள்ளார்.

போர்க் களத்தில்கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி, குறிப்பாக போர் மருத்துவம் பற்றியும் போர்க் களத்தில் இறங்கி பணியாற்றிய மருத்துவர்கள் பற்றியும் போர்க் களத்தில் எத்தனை உயிர்களைக் காப்பாற்றினார்கள்? தமிழ் வீரர்கள் மட்டுமல்லாது எதிரி வீரர்களையும் காப்பாற்றினார்களா என்பது பற்றியும் இந்தப் படம் ரொம்பவே ஆழமாக விவரிக்கும்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் கிட்டு கூறும்போது, “ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே நம் தமிழர்களின் போர்ப் படையில் மருத்துவ பிரிவு இருந்துள்ளது. அப்படி ராஜேந்திர சோழனின் படைப் பிரிவில் முக்கியமான படைப் பிரிவாக சல்லியர்கள்’  என்பவர்கள் பணியாற்றி உள்ளனர்.

போரின்போது வீரர்கள் உடலில் பாய்ந்த ஆயுதங்களை அகற்றி காயங்களுக்கு மருத்துவம் பார்ப்பது இவர்களின் பணியாக இருந்துள்ளது. திருமுக்கூடல் கல்வெட்டில் இதற்கான ஆதாரங்களும் உள்ளன.

தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத ஒரு புதிய லேயரை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள். இது போன்ற கதைகள், இன்னும் சொல்லப்படாமால் இருக்கும் வலிகள் நிறைய இருக்கின்றன.

நான் இயக்கிய மேதகு’ படத்தை பார்த்துவிட்டு என்னை அழைத்து கதைகேட்ட கருணாஸ் மறுநாளே அட்வான்ஸ் கொடுத்து படத்தை ஆரம்பிக்கச் சொன்னார்.

படத்தில் முக்கால் மணி நேரம் ஒரு முக்கிய பகுதியில் காட்சிகள் நடைபெறும். அப்படி ஒரு களத்தை இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பொதுவாக நம் படங்களில் போர்க்கள மருத்துவமனை என்றாலே இதுவரை வெட்டவெளியில் ஒரு டெண்ட் அமைத்து சிகிச்சை அளிப்பது போலத்தான் காண்பித்திருப்பார்கள். ஆனால் முதன் முறையாக இந்தப் படத்திற்காக பதுங்கு குழிக்குள் காட்சிகளைப் படமாக்கி இருக்கிறோம்.

செட் போட்டு படமாக்கினால் அதில் செயற்கைத் தன்மை அப்பட்டமாக வெளியில் தெரியும் என்பதால், இந்த மருத்துவமனை காட்சிகள் இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நிஜமாகவே மண்ணுக்கு கீழே பதுங்கு குழி தோண்டி அதில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்பதில் கலை இயக்குநர் முஜிபூர் ரஹ்மான் உறுதியாக இருந்தார். அப்படி அமைக்கப்பட்ட மருத்துவமனைக்குள்தான் முக்கால் மணி நேர காட்சிகளைப் படமாக்கினோம்.

அப்படி மண்ணுக்கடியில் சென்று இந்த காட்சிகளை படமாக்கியது மிகப் பெரிய சவாலாக இருந்தது. போர்க் களம் மற்றும் பதுங்கு குழி காட்சிகளை சிவகங்கை பகுதியில் படமாக்கினோம். போர்க் கள சண்டைக் காட்சிகளை பிரபாகரன் என்பவர் அழகாக வடிவமைத்துக் கொடுத்தார்.

தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. படத்தை தியேட்டர்களில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்…” எனக் கூறினார்.

The post பதுங்கு குழியில் படமான ‘சல்லியர்கள்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
வெற்றி மாறனின் இயக்கத்தில் பிரபாகரனாக சூர்யா நடிக்கிறாரா..? https://touringtalkies.co/actor-surya-will-act-as-ltte-leader-prabhakaran-directed-by-ventrimaaran/ Thu, 29 Oct 2020 07:39:31 +0000 https://touringtalkies.co/?p=9416 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுத்தம்பி பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை இயக்குநர் வெற்றிமாறன் படமாக்கப் போவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே பிரபாகரனின் வாழ்க்கைக் கதை என்று சொல்லி ‘சீறும் புலி’ என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் பாபி சிம்ஹா பிரபாகரனாக நடித்து வருகிறார். ஜி.வெங்கடேஷ் குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குநர் வெற்றி மாறனும் பிரபாகரனின் வாழ்க்கைக் கதையை படமாக்கப் போகிறாராம். இந்தப் படத்தில் […]

The post வெற்றி மாறனின் இயக்கத்தில் பிரபாகரனாக சூர்யா நடிக்கிறாரா..? appeared first on Touring Talkies.

]]>
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுத்தம்பி பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை இயக்குநர் வெற்றிமாறன் படமாக்கப் போவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே பிரபாகரனின் வாழ்க்கைக் கதை என்று சொல்லி ‘சீறும் புலி’ என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் பாபி சிம்ஹா பிரபாகரனாக நடித்து வருகிறார். ஜி.வெங்கடேஷ் குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இயக்குநர் வெற்றி மாறனும் பிரபாகரனின் வாழ்க்கைக் கதையை படமாக்கப் போகிறாராம். இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவை பிரபாகரன் வேடத்தில் நடிக்க வைக்கப் போகிறார் என்றும் செய்திகள் கூறுகின்றன.

ஏற்கெனவே வெற்றி மாறன் சூர்யாவை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து வாடிவாசல் படத்தை உருவாக்கப் போகிறார். இதையடுத்து தனுஷின் இயக்கத்தில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அதற்குப் பின்னர்தான் இந்த பிரபாகரன் கதை தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாகரனின் வாழ்க்கைக் கதையை 2 மணி நேரத்தில் சொல்லிவிட முடியாது என்பதால் அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கிய சம்பவத்தை மட்டும் மையக் கருத்தாக எடுத்துக் கொண்டு வெற்றிமாறன் அதனைப் படமாக்குவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post வெற்றி மாறனின் இயக்கத்தில் பிரபாகரனாக சூர்யா நடிக்கிறாரா..? appeared first on Touring Talkies.

]]>