Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Music school – Touring Talkies https://touringtalkies.co Fri, 12 May 2023 01:39:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Music school – Touring Talkies https://touringtalkies.co 32 32 விமர்சனம்: மியூஸிக் ஸ்கூல் https://touringtalkies.co/review-music-school/ Fri, 12 May 2023 01:39:08 +0000 https://touringtalkies.co/?p=32396 பாடல் ஆசிரியர் ஸ்ரேயா சரண், நாடக ஆசிரியர் ஷர்மன் ஜோஷி இருவரும் ஒரே பள்ளியில் பணிபுரிகிறார்கள். இவர்களது வகுப்பு நேரத்தை பிற பாட ஆசிரியர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் தங்களது வீட்டிலேயே பாடல் மற்றும் நாடக பயிற்சி வகுப்பை துவங்குகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. ஷ்ரேயா நிஜமான பாடல் ஆசிரியர் போலவே தோன்றி இருக்கிறார்.  பிரின்ஸிபால், தங்களை ஒதுக்குவதை கண்டு ஆதங்கப்படுவது, மாணவர்களை அழைத்துக்கொண்டு உற்சாகமாக கோவா செல்வது என ஒவ்வொரு காட்சியிலும் உற்சாகம் […]

The post விமர்சனம்: மியூஸிக் ஸ்கூல் appeared first on Touring Talkies.

]]>
பாடல் ஆசிரியர் ஸ்ரேயா சரண், நாடக ஆசிரியர் ஷர்மன் ஜோஷி இருவரும் ஒரே பள்ளியில் பணிபுரிகிறார்கள். இவர்களது வகுப்பு நேரத்தை பிற பாட ஆசிரியர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் தங்களது வீட்டிலேயே பாடல் மற்றும் நாடக பயிற்சி வகுப்பை துவங்குகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

ஷ்ரேயா நிஜமான பாடல் ஆசிரியர் போலவே தோன்றி இருக்கிறார்.  பிரின்ஸிபால், தங்களை ஒதுக்குவதை கண்டு ஆதங்கப்படுவது, மாணவர்களை அழைத்துக்கொண்டு உற்சாகமாக கோவா செல்வது என ஒவ்வொரு காட்சியிலும் உற்சாகம் துள்ள நடித்து இருக்கிறார்.

ஷர்மன் ஜோஷி இயல்பான நடிப்பு.

பிரகாஷ்ராஜ் கண்டிப்பான  காவல் அதிகாரியாக மட்டுமின்றி, கண்டிப்பான தந்தையாகவும் சிறப்பாக நடித்து உள்ளார்.லீலா சாம்சன் உள்ளிட்டோரும் அருமையான நடிப்பை அளித்து உள்ளனர்.

இளையரஜாவின் இசையில் பாடல்கள் சிறப்புதான். ஆனால் அதிகமான பாடல்கள் சோர்வடைய வைக்கின்றன.

‘மம்மி சொல்லும் வார்த்தை’ என ஆரம்பிக்கும் இப்பாடல் படத்தைப் பற்றிய அறிமுகத்தைத் தரும் வகையிலும், இன்றைய நவீனகால இளைஞர்களைக் கவரும் வகையிலும் அமைந்துள்ளது.

வாழ்வில் ஜெயிக்க மிக உயர்ந்த கல்வித் தகுதியை அடைய வேண்டுமென வற்புறுத்தும், பெற்றோரின் தொடர்ச்சியான ஆதிக்கத்தை நுட்பமாகக் கேலி செய்யும் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ பாடல், குழந்தைகள், பெற்றோரைப் அல்லாமல் சுதந்திரமாக வாழ்வதைப் பற்றியும், நவ நாகரீக இளைஞர்களின் உலகைப் படத்தின் கதாப்பாத்திரங்கள் வழியாக அழகாகச் சித்தரிக்கிறது.

பள்ளி குழந்தைகளுக்கு பாடல்  இசை போன்ற கலை மற்றும் விளையாட்டுகள் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி இருக்கும் படம்.

 

The post விமர்சனம்: மியூஸிக் ஸ்கூல் appeared first on Touring Talkies.

]]>
‘மியூசிக் ஸ்கூல்’: முக்கிய பிரச்சினையை பேசும் திரைப்படம்! https://touringtalkies.co/music-school-a-film-that-talks-about-the-main-issue/ Mon, 08 May 2023 02:29:47 +0000 https://touringtalkies.co/?p=32226 யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”.  பிவிஆர் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று திரைக்கு வரவுள்ளது. இந் நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.   இயக்குநர் பாப்பாராவ், “இந்த காலத்தில் மாணவர்கள் எப்போதும் எக்ஸாம் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள் அதற்கான அழுத்தத்தில் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். என் காலத்தில் இப்படி இருந்ததே இல்லை. […]

The post ‘மியூசிக் ஸ்கூல்’: முக்கிய பிரச்சினையை பேசும் திரைப்படம்! appeared first on Touring Talkies.

]]>
யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”.  பிவிஆர் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று திரைக்கு வரவுள்ளது. இந் நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.   இயக்குநர் பாப்பாராவ், “இந்த காலத்தில் மாணவர்கள் எப்போதும் எக்ஸாம் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள் அதற்கான அழுத்தத்தில் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். என் காலத்தில் இப்படி இருந்ததே இல்லை. நானெல்லாம் படிப்பு முடிந்து விளையாட்டில் தான் அதிகம் ஈடுபட்டுள்ளேன்.  குழந்தைக் காலத்தில் மிகச் சந்தோஷமாகவே இருந்துள்ளேன். இந்தப் படத்தில் சொல்லும் விஷயம் மிகத்தீவிரமானவை. இக்காலத்தில் மாணவர்களுக்கு இருக்கும் அழுத்தம் பற்றிப் பேசும்போது அதை மியூசிக்கலாக பேசலாம் எனத் தோன்றியது. ஸ்ரேயா சரண் மியூசிக் டீச்சர், ஷர்மன் ஜோஷி டான்ஸ் மாஸ்டராக நடிக்கிறார்கள்” என்றார்.

 

The post ‘மியூசிக் ஸ்கூல்’: முக்கிய பிரச்சினையை பேசும் திரைப்படம்! appeared first on Touring Talkies.

]]>
“மியூஸிக் ஸ்கூல்’ ஒரு படமல்ல பாடம்!: ஸ்ரெயா சரண் https://touringtalkies.co/music-school-a-lesson-shriya-saran/ Sat, 06 May 2023 02:24:25 +0000 https://touringtalkies.co/?p=32212 யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”.  பிவிஆர் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று திரைக்கு வரவுள்ளது. இந் நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வில் நடிகை ஸ்ரேயா சரண், “சென்னை வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷூட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது. இயக்குநர் […]

The post “மியூஸிக் ஸ்கூல்’ ஒரு படமல்ல பாடம்!: ஸ்ரெயா சரண் appeared first on Touring Talkies.

]]>
யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”.  பிவிஆர் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று திரைக்கு வரவுள்ளது. இந் நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

நிகழ்வில் நடிகை ஸ்ரேயா சரண், “சென்னை வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷூட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது. இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மிக இனிமையான குணம் கொண்டவர். இப்படத்திற்கு ஷூட்டிங் செல்வது எனக்கு வீட்டுக்குப் போவது போல் தான் இருந்தது. எனக்கு மிகச்சிறந்த பெற்றோர்கள் இருந்தார்கள், என்னால் நான் நினைத்ததைச் செய்ய முடிந்தது.

என் உறவினர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போராட வேண்டும். அதனால் இந்தக் கதையைக் கேட்ட போது அதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  இது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய கதை. இயக்குநர் மிகச் சிறப்பான முறையில் இதைத் திரையில் கொண்டுவந்துள்ளார்” என்றார்.

 

The post “மியூஸிக் ஸ்கூல்’ ஒரு படமல்ல பாடம்!: ஸ்ரெயா சரண் appeared first on Touring Talkies.

]]>
“மியூசிக் ஸ்கூல்” ஸ்ரேயா சரண் ஆல்பம் + பாடல்! https://touringtalkies.co/ilayaraja-shreya-charans-music-school-movie-song/ Sat, 15 Apr 2023 05:29:43 +0000 https://touringtalkies.co/?p=31571 யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் திரைப்படமான “மியூசிக் ஸ்கூல்” படத்திலிருந்து அழகான ரொமான்ஸ் பாடலாக “ஏனோ என் பாடல் இசைத் தேடுதே” பாடல் வெளியாகியுள்ளது. மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்” படத்திலிருந்து, ‘மம்மி சொல்லும் வார்த்தை’ எனும் முதல் சிங்கிளின் பெரும் வரவேற்பை அடுத்து, தற்போது , ரொமாண்டிக் பாடலான “ஏனோ என் […]

The post “மியூசிக் ஸ்கூல்” ஸ்ரேயா சரண் ஆல்பம் + பாடல்! appeared first on Touring Talkies.

]]>
யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் திரைப்படமான “மியூசிக் ஸ்கூல்” படத்திலிருந்து அழகான ரொமான்ஸ் பாடலாக “ஏனோ என் பாடல் இசைத் தேடுதே” பாடல் வெளியாகியுள்ளது.

மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்” படத்திலிருந்து, ‘மம்மி சொல்லும் வார்த்தை’ எனும் முதல் சிங்கிளின் பெரும் வரவேற்பை அடுத்து, தற்போது , ரொமாண்டிக் பாடலான “ஏனோ என் பாடல் இசைத் தேடுதே” எனும் அழகிய பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் ஏப்ரல் 12 ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது.இளையராஜா இசையமைப்பில் “ஏனோ என் பாடல் இசைத் தேடுதே” பாடலை, பா விஜய் எழுதியுள்ளார். ஜாவேத் அலி, ஸ்ரேயா கோஷல் இப்பாடலைப் பாடியுள்ளனர். நடன இயக்குநர் ஆடம் முர்ரே இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். அழகான ரொமான்ஸ் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலில் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி நடித்துள்ளனர்.

மொத்தம் பதினொரு பாடல்களுடன், மியூசிகல் படமாக உருவாகும் இப்படத்தை ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து திரைப்படைப்பாளியாக மாறியிருக்கும் பாப்பாராவ் பிய்யாலா இயக்கியுள்ளார். இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தைக் கூறுவதுடன், “மியூசிக் ஸ்கூல்” திரைப்படம், பள்ளி குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.கல்விச் சாதனைகள் மற்றும் கல்வியல்லாத மற்ற செயல்பாடுகளின் சமநிலையை வலியுறுத்துகிறது. இப்படத்தின் 11 பாடல்களில் மூன்று பாடல்கள் இந்திய ரசிகர்களைக் கவரும் வகையில், கிளாசிகல் மியூசிக் முறையில் உருவாகியுள்ளது.

முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இசைப் பள்ளியின் மற்ற நடிகர்கள் பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, மோனா அம்பேகன்கர், லீலா சாம்சன், பக்ஸ் பார்கவா, வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், வக்கார் ஷேக், ஃபானி ஆகியோருடன் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.வண்ணங்கள் குழைத்த அழகிய காட்சிகளை ஒளிப்பதிவாளர் கிரண் தியோஹன்ஸ் படம்பிடித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த யாமினி பிலிம்ஸ் வழங்கும் இந்தப் பன்மொழி திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. பிவிஆர் இந்தி, தமிழ்ப் பதிப்புகளையும், தில் ராஜு தெலுங்கு பதிப்பையும் 12 மே 2023 அன்று வெளியிடுகிறார்கள்.

மியூஸிக் ஸ்கூல் ஸ்ரேயா பாடல்

The post “மியூசிக் ஸ்கூல்” ஸ்ரேயா சரண் ஆல்பம் + பாடல்! appeared first on Touring Talkies.

]]>
இளையராஜா இசையில் பன்மொழி திரைப்படமாக உருவாகும் ‘மியூசிக் ஸ்கூல்’ https://touringtalkies.co/music-school-to-be-made-as-a-multilingual-film-with-music-by-ilayaraja/ Sat, 08 Apr 2023 03:02:53 +0000 https://touringtalkies.co/?p=31387 பப்பா ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மியூசிக் ஸ்கூல்’. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த […]

The post இளையராஜா இசையில் பன்மொழி திரைப்படமாக உருவாகும் ‘மியூசிக் ஸ்கூல்’ appeared first on Touring Talkies.

]]>
பப்பா ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மியூசிக் ஸ்கூல்’. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து, இப்படத்தின் முதல் பாடலான ‘மம்மி சொல்லும் வார்த்தை’ பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post இளையராஜா இசையில் பன்மொழி திரைப்படமாக உருவாகும் ‘மியூசிக் ஸ்கூல்’ appeared first on Touring Talkies.

]]>