Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
mohan – Touring Talkies https://touringtalkies.co Wed, 16 Aug 2023 00:48:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png mohan – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஒரே வாரத்தில் உருவான ஹிட் படம் எது தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-which-hit-film-was-made-in-one-week/ Wed, 16 Aug 2023 00:48:06 +0000 https://touringtalkies.co/?p=35335 பிரபல தயாரிப்பாளராக விளங்கியவர் பாலாஜி. இவருக்கும் அப்போது, பிரபல வசனகர்த்தாவாக இருந்த ஆரூர்தாஸுக்கும் ஒரு பிரச்சினை. ஆகவே தங்கை படத்துக்குப் பிறகு இவர்கள்  இணைந்து செயல்படவில்லை. 17 ஆண்டுக்குப் பிறகு ஆரூர்தாஸை அழைத்த பாலாஜி, புதிய படம் ஒன்றுக்கு வசனம் எழுத வேண்டும் என்று அழைத்தார். ஆரூர்தாஸ் தயங்கினார். பிறகு ஒப்புக்கொண்டார். உடனே பாலாஜி, “ஒரு வாரத்துக்குள் வசனங்களை எழுதித்தர வேண்டும்” என்று சொல்லி, தனது மேசை டிராயரை திறந்தார். அதில் கட்டுக்கட்டாக பணம். “எவ்வளவு வேண்டுமோ […]

The post ஒரே வாரத்தில் உருவான ஹிட் படம் எது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
பிரபல தயாரிப்பாளராக விளங்கியவர் பாலாஜி. இவருக்கும் அப்போது, பிரபல வசனகர்த்தாவாக இருந்த ஆரூர்தாஸுக்கும் ஒரு பிரச்சினை. ஆகவே தங்கை படத்துக்குப் பிறகு இவர்கள்  இணைந்து செயல்படவில்லை.

17 ஆண்டுக்குப் பிறகு ஆரூர்தாஸை அழைத்த பாலாஜி, புதிய படம் ஒன்றுக்கு வசனம் எழுத வேண்டும் என்று அழைத்தார்.

ஆரூர்தாஸ் தயங்கினார். பிறகு ஒப்புக்கொண்டார்.

உடனே பாலாஜி, “ஒரு வாரத்துக்குள் வசனங்களை எழுதித்தர வேண்டும்” என்று சொல்லி, தனது மேசை டிராயரை திறந்தார். அதில் கட்டுக்கட்டாக பணம்.

“எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

மறுத்த ஆரூர்தாஸ், பணியை முடித்தபிறகு வாங்கிக்கொள்வதாக கூறிவிட்டார்.

சொன்னபடி ஏழே நாளில் வசனம் எழுதி முடித்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு வசனத்துக்காகவும் பெயர் பெற்றது.

அந்த படம்தான், கே.விஜயன் இயக்கத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம், சுஜாதா, ஜெய்சங்கர் நடித்த விதி.

இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post ஒரே வாரத்தில் உருவான ஹிட் படம் எது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
இன்னொரு சூப்பர் ஸ்டார், பராக், பராத்! https://touringtalkies.co/93-year-old-ageing-superstar-charuhaasan-in-haraa-movie/ Wed, 02 Aug 2023 05:16:37 +0000 https://touringtalkies.co/?p=34930 நடிகர் மோகன் கடந்த 80 களில் பல வெள்ளிவிழா திரைப்படங்கள் கொடுத்த நிலையில் மீண்டும் ’ஹரா’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார். இந்த படத்தில் மோகனுடன் குஷ்பூ, யோகி பாபு, மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், உள்பட பலர் நடிக்கின்றனர். விஜய் ஸ்ரீ இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஏற்கனவே நடிகர் சாருஹாசன் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் ஏற்கனவே விஜய் ஸ்ரீ இயக்கத்தில் […]

The post இன்னொரு சூப்பர் ஸ்டார், பராக், பராத்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் மோகன் கடந்த 80 களில் பல வெள்ளிவிழா திரைப்படங்கள் கொடுத்த நிலையில் மீண்டும் ’ஹரா’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார்.

இந்த படத்தில் மோகனுடன் குஷ்பூ, யோகி பாபு, மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், உள்பட பலர் நடிக்கின்றனர். விஜய் ஸ்ரீ இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஏற்கனவே நடிகர் சாருஹாசன் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் ஏற்கனவே விஜய் ஸ்ரீ இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’தாதா 87’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

’ஹரா’ படத்தின் படப்பிடிப்பின்போது அவர் மோகன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவருக்கு படக்குழுவினர், ஏஜிங் சூப்பர் ஸ்டார் என பட்டம் கொடுத்துள்ளனர். ஏற்கெனவே, சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த விவாதம் நடந்து வருகையில், இன்னொரு சூப்பர் ஸ்டார் என்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி  இருக்கிறது.

The post இன்னொரு சூப்பர் ஸ்டார், பராக், பராத்! appeared first on Touring Talkies.

]]>
ஹரா; மோகன், குஷ்பு, யோகிபாபுவுடன் இணையும் வனிதா! https://touringtalkies.co/hara-vanita-joins/ Fri, 07 Jul 2023 00:12:12 +0000 https://touringtalkies.co/?p=34116 ‘ஹரா’ திரைப்படத்தில் வெள்ளிவிழா நாயகன் மோகனுடன் மோதும் சுரேஷ் மேனன், அமைச்சராக அசத்தும் வனிதா விஜயகுமார் வெள்ளி விழா நாயகனாக தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர் மோகன். எத்தனையோ இயக்குநர்கள் – தயாரிப்பாளர்கள் முயற்சித்தும் பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.  இந்த நிலையில், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை விரும்பி,  ‘ஹரா’ திரைப்படத்தில் நடிக்கிறார். இதனால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தவிர, பெரும்பாலான படங்களில் மென்மையான  பாடகராக வந்ததால்  ‘மைக்’ மோகன் […]

The post ஹரா; மோகன், குஷ்பு, யோகிபாபுவுடன் இணையும் வனிதா! appeared first on Touring Talkies.

]]>
‘ஹரா’ திரைப்படத்தில் வெள்ளிவிழா நாயகன் மோகனுடன் மோதும் சுரேஷ் மேனன், அமைச்சராக அசத்தும் வனிதா விஜயகுமார்

வெள்ளி விழா நாயகனாக தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர் மோகன். எத்தனையோ இயக்குநர்கள் – தயாரிப்பாளர்கள் முயற்சித்தும் பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.  இந்த நிலையில், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை விரும்பி,  ‘ஹரா’ திரைப்படத்தில் நடிக்கிறார். இதனால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

தவிர, பெரும்பாலான படங்களில் மென்மையான  பாடகராக வந்ததால்  ‘மைக்’ மோகன் என செல்லமாக அழைக்கப்பட்ட இவருக்கு ஹரா படத்தில் டெரர் கேரக்டர்..  ஆகவே படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

தவிர, இந்த படத்தில், குஷ்பு, சுரேஷ் மேனன் , யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா,  என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்கிறது.

இந்நிலையில், நிஜத்திலேயே அதிரடி நடிகையான வனிதா, இந்த படத்தில் இணைந்துள்ளார். அமைச்சர் கதாபாத்திரத்தில் அதகளம் செய்துள்ளார். இதுவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.படத்தின் முதல் பார்வை, டைட்டில் டீசர் மற்றும் ‘கயா முயா…’ பாடல் என தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வரும் ஹரா, திரைக்கு வருவதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

படம் குறித்து இயக்குநர் விஜய்ஸ்ரீஜி, “எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கமர்சியல் மூவியாக மட்டுமின்றி, மக்களுக்குத் தேவையான கருத்தையும் சொல்லி இருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோம். அதேபோல  ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே ‘ஹரா’ படத்தின் முக்கிய கருத்தாகும்” என்றார்.

 

 

 

The post ஹரா; மோகன், குஷ்பு, யோகிபாபுவுடன் இணையும் வனிதா! appeared first on Touring Talkies.

]]>
மோகனுக்காக பாடிய கமல்! https://touringtalkies.co/kamal-sang-for-mohan/ Mon, 20 Mar 2023 01:33:06 +0000 https://touringtalkies.co/?p=30800 நடிகர் மோகன், தற்போது ஹரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் ரவி, மோகன் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். மோகன், தமிழில் நடித்த முதல் மூன்று படங்களுமே ( மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிளிஞ்சல்கள்) சூப்பர் ஹிட்டானவை. இந்த அதிர்ஷ்டவாய்ப்பு, தமிழில் இதுவரை எந்த நடிகருக்கும் வாய்த்ததே இல்லை. இளையராஜாவின் 100 வது படமான மூடுபனி, 300 வது படமான உதயகீதம் இரண்டுமே மோகன் நடித்த படங்களாகும். இந்திய திரையுலக வரலாற்றிலேயே, ஒரு […]

The post மோகனுக்காக பாடிய கமல்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் மோகன், தற்போது ஹரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் ரவி, மோகன் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

  1. மோகன், தமிழில் நடித்த முதல் மூன்று படங்களுமே ( மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிளிஞ்சல்கள்) சூப்பர் ஹிட்டானவை. இந்த அதிர்ஷ்டவாய்ப்பு, தமிழில் இதுவரை எந்த நடிகருக்கும் வாய்த்ததே இல்லை.
  1. இளையராஜாவின் 100 வது படமான மூடுபனி, 300 வது படமான உதயகீதம் இரண்டுமே மோகன் நடித்த படங்களாகும். இந்திய திரையுலக வரலாற்றிலேயே, ஒரு இசையமைப்பாளருக்கு, ரசிகர்கள் கட்அவுட் வைத்த பெருமைக்குரிய முதல் படமான பயணங்கள் முடிவதில்லை படமும் மோகன் படம் தான். அந்த இசையமைப்பாளர் இளையராஜா தான்.

3.ஒரே ஆண்டில் அதிகபடங்களில் நடித்த சாதனையைப் புரிந்துள்ள மிகச்சில தமிழ் நாயக நடிகர்களுள் மோகனும் ஒருவர்.

  1. மோகனை, கோகிலா மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் பாலுமகேந்திரா. ஆனால் அவருடைய இயக்கத்தில், முழுநீள கதாநாயகனாக, மோகன் ஒரே ஒருபடத்தில் மட்டுமே நடித்துள்ளார். அப்படம், “ரெட்டைவால் குருவி”.

5.கால்ஷீட் விஷயத்தில் குளறுபடி செய்யாதவர் மோகன் என்ற நற்பெயரும் உண்டு.

  1. மோகன் நடித்த ஒரு தமிழ் படத்தில், பின்னணி பாடலொன்றை, கமல் பாடியுள்ளார் என்ற விவரம், பலரும் அறியாதது. “ஓ மானே! மானே!” என்ற படத்தில் இடம் பெற்ற “பொன்மானை தேடுதே!” என்ற பாடலை, கமல் பாடியுள்ளார்.

7.திரையுலக மறுபிரவேசத்திலும், கதாநாயகனாகவே நடிக்க விரும்பிய மோகன், தன்னைத்தேடிவந்த பல பட வாய்ப்புகளை நிராகரித்தார்.

  1. “அன்புள்ள காதலுக்கு” என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் சொந்தமாக இயக்கி, தயாரித்து, நடித்துள்ளார் மோகன்.

 

The post மோகனுக்காக பாடிய கமல்! appeared first on Touring Talkies.

]]>
”யார் சூப்பர் ஸ்டார்?” : சொல்கிறார் ‘மைக்’ மோகன் https://touringtalkies.co/there-may-be-many-stars-in-tamil-cinema-but-only-superstar-ever-actor-mohan-rajini/ Tue, 10 Jan 2023 03:37:41 +0000 https://touringtalkies.co/?p=29356 நடிகர் அஜித் நடித்த துணிவு மற்றும் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு  ஆகிய படங்கள் வெளியாக இருக்கும் நிலையில், யார் சூப்பர் ஸ்டார் என்கிற விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலையில், நடிகர் மோகன் தான் நடித்துள்ள ஹரா திரைப்படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இன்றைய சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. “அப்போதிலிருந்தே இப்போது வரையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு போட்டி உள்ளது. பல ஸ்டார்கள் இருக்கலாம். ஆனால் அந்த பட்டம் […]

The post ”யார் சூப்பர் ஸ்டார்?” : சொல்கிறார் ‘மைக்’ மோகன் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜித் நடித்த துணிவு மற்றும் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு  ஆகிய படங்கள் வெளியாக இருக்கும் நிலையில், யார் சூப்பர் ஸ்டார் என்கிற விவாதம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் மோகன் தான் நடித்துள்ள ஹரா திரைப்படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் இன்றைய சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

“அப்போதிலிருந்தே இப்போது வரையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு போட்டி உள்ளது. பல ஸ்டார்கள் இருக்கலாம். ஆனால் அந்த பட்டம் யாரிடம் உள்ளது என பார்க்க வேண்டும். அது ரஜினி சார் வசம் மட்டும்தான் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

The post ”யார் சூப்பர் ஸ்டார்?” : சொல்கிறார் ‘மைக்’ மோகன் appeared first on Touring Talkies.

]]>
மோகனுக்கு வாய்ப்பு தேடி அலைந்தேன்- Stills Ravi | Chai with Chithra | Part – 1 https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf/ Fri, 17 Sep 2021 05:22:35 +0000 https://touringtalkies.co/?p=18039 The post மோகனுக்கு வாய்ப்பு தேடி அலைந்தேன்- Stills Ravi | Chai with Chithra | Part – 1 appeared first on Touring Talkies.

]]>

The post மோகனுக்கு வாய்ப்பு தேடி அலைந்தேன்- Stills Ravi | Chai with Chithra | Part – 1 appeared first on Touring Talkies.

]]>