Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
middle class movie – Touring Talkies https://touringtalkies.co Sun, 20 Nov 2022 15:56:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png middle class movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 “எனக்கு ‘அது’தான் பாதுகாப்பு!”: கார்த்தி https://touringtalkies.co/actor-karthi-middle-class-family/ Sun, 20 Nov 2022 15:55:47 +0000 https://touringtalkies.co/?p=27321 நடிகர் கார்த்தி, “என் பெற்றோர் என்னை நடுத்தர  குடும்பத்து பாணியில்தான் வளர்த்தார்கள். பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில்தான் போய் வந்தேன். பிறகு காலேஜுக்கு பஸ் பாஸ்  எடுத்து சென்று திரும்பினேன். இப்படி நடுத்தர வர்க்க வாழ்க்கை முறைதான் நம்மை சரியா வழி நடத்தும்னு நினைக்கிறேன். பணத்தோட அருமை தெரியும். தவிர எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்ளும் மன உறுதியையும் தருது” என்றார் கார்த்தி.

The post “எனக்கு ‘அது’தான் பாதுகாப்பு!”: கார்த்தி appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கார்த்தி, “என் பெற்றோர் என்னை நடுத்தர  குடும்பத்து பாணியில்தான் வளர்த்தார்கள். பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில்தான் போய் வந்தேன். பிறகு காலேஜுக்கு பஸ் பாஸ்  எடுத்து சென்று திரும்பினேன்.

இப்படி நடுத்தர வர்க்க வாழ்க்கை முறைதான் நம்மை சரியா வழி நடத்தும்னு நினைக்கிறேன். பணத்தோட அருமை தெரியும். தவிர எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்ளும் மன உறுதியையும் தருது” என்றார் கார்த்தி.

The post “எனக்கு ‘அது’தான் பாதுகாப்பு!”: கார்த்தி appeared first on Touring Talkies.

]]>
‘மிடில் கிளாஸ்’ படப்பிடிப்பு துவங்கியது https://touringtalkies.co/middle-class-movies-shooting-was-started/ Tue, 28 Jun 2022 07:38:56 +0000 https://touringtalkies.co/?p=22877 Axess Film Factory நிறுவனத்தின் தயாரிப்பாளரான G.டில்லிபாபுவின் தயாரிப்பில் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர் முனிஷ்காந்த் நடிக்கும் நடிக்கும் ‘மிடில் கிளாஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது. தமிழ் திரையுலகில் வித்தியாசமான களங்களில், சிறந்த கதையம்சம் கொண்ட பொழுது போக்கு படங்களை வழங்கியதன் மூலம், மிகச் சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் Axess Film Factory நிறுவனத்தின் தயாரிப்பாளரான G.டில்லி பாபு. இவர் அடுத்ததாக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், நடிகர் முனிஷ்காந்த் முக்கிய வேடத்தில் […]

The post ‘மிடில் கிளாஸ்’ படப்பிடிப்பு துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
Axess Film Factory நிறுவனத்தின் தயாரிப்பாளரான G.டில்லிபாபுவின் தயாரிப்பில் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர் முனிஷ்காந்த் நடிக்கும் நடிக்கும் மிடில் கிளாஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான களங்களில், சிறந்த கதையம்சம் கொண்ட பொழுது போக்கு படங்களை வழங்கியதன் மூலம், மிகச் சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் Axess Film Factory நிறுவனத்தின் தயாரிப்பாளரான G.டில்லி பாபு.

இவர் அடுத்ததாக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், நடிகர் முனிஷ்காந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் மிடில் கிளாஸ்’ என்ற படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தில் விஜயலட்சுமி அகத்தியன், ராதாரவி, மாளவிகா அவினாஷ், வேல. ராமமூர்த்தி, வடிவேல் முருகன் (கோடாங்கி), குரைஷி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். சுதர்சன் சீனிவாசன் (ஒளிப்பதிவு), சந்தோஷ் தயாநிதி (இசை), M.S.P.மாதவன் (கலை), ஷான் லோகேஷ் (படத் தொகுப்பு), டான் அசோக் (சண்டை பயிற்சி இயக்கம்), கார்த்திக் நேத்தா & கதிர்மொழி (பாடல் வரிகள்), S.S.ஸ்ரீதர் (தயாரிப்பு நிர்வாகி), வின்சி ராஜ் (வடிவமைப்பு),J.நந்தா (உடைகள்), வினோத் சுகுமார் (ஒப்பனை), ராஜேந்திரன் (புகைப்படங்கள்), DEC – டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் (புரமோஷன் & டிஜிட்டல் மார்க்கெட்டிங்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), K.V.துரை (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்).

இத்திரைப்படம் நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்வவங்களை மையப்படுத்தி, அசத்தலான பொழுதுபோக்கு குடும்ப டிராமா திரைப்படமாக உருவாகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பினை இன்று காலை திரைப்பட இயக்குநர் ராம்குமார் தனது குரலில் ‘ஆக்ஷன் கேமரா ரோல்’ கூறி முதல் ஷாட்டைத் தொடங்கி வைக்க, பேச்சிலர்’ புகழ் இயக்குநர் சதீஷ் கிளாப் போர்டு தட்டி இப்படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.

நடிகர் முனிஷ்காந்தை முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குர் ராம்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

முனிஷ்காந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘மிடில் கிளாஸ்’ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டது இனிமையான தருணமாக அமைந்திருந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் முடிக்க படக் குழு திட்டமிட்டுள்ளது.

The post ‘மிடில் கிளாஸ்’ படப்பிடிப்பு துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
முனீஸ்காந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம் https://touringtalkies.co/middle-class-movie-preview-news/ Fri, 06 Nov 2020 05:24:11 +0000 https://touringtalkies.co/?p=9741 இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அனைவருமே வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். படங்களில்கூட வேகம், விறுவிறுப்பு என்ற சூழல் வந்தவுடன் குடும்பப் பாங்கான படங்களின் வருகை என்பது குறைந்துவிட்டது. அதிலும், குடும்பப் படங்களில் முழுக்க, முழுக்க நகைச்சுவையை முன்னிலைப்படுத்தியது குறைந்தேவிட்டது என்று கூறலாம். ஏனென்றால், குடும்பங்களில்தான் அவ்வளவு காமெடி கலாட்டாக்கள் இருக்கும். அதைக் கதைக் களமாகக் கொண்டு நம்மை மகிழ்விக்க ஒரு கலகலப்பான குடும்பக் கதை ஒன்று தற்போது தயாராகவுள்ளது. ‘அறம்’ தொடங்கி சமீபத்திய ‘க/பெ.ரணசிங்கம்’வரை எப்போதுமே புதுமையான நம்பிக்கைக்குரிய […]

The post முனீஸ்காந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அனைவருமே வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். படங்களில்கூட வேகம், விறுவிறுப்பு என்ற சூழல் வந்தவுடன் குடும்பப் பாங்கான படங்களின் வருகை என்பது குறைந்துவிட்டது. அதிலும், குடும்பப் படங்களில் முழுக்க, முழுக்க நகைச்சுவையை முன்னிலைப்படுத்தியது குறைந்தேவிட்டது என்று கூறலாம்.

ஏனென்றால், குடும்பங்களில்தான் அவ்வளவு காமெடி கலாட்டாக்கள் இருக்கும். அதைக் கதைக் களமாகக் கொண்டு நம்மை மகிழ்விக்க ஒரு கலகலப்பான குடும்பக் கதை ஒன்று தற்போது தயாராகவுள்ளது.

‘அறம்’ தொடங்கி சமீபத்திய ‘க/பெ.ரணசிங்கம்’வரை எப்போதுமே புதுமையான நம்பிக்கைக்குரிய கதைகளுக்குக் கை கொடுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கோடப்பாடி ஜே.ராஜேஷ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார்.

இவருடன், ‘டோரா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஸ் ராமசாமியின் கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட் நிறுவனமும் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் முனீஸ்காந்த், ‘கலக்கப் போவது யாரு’ ராமர் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  இதர நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஆச்சரியமூட்டும் நடிகர்கள் பட்டியல் வெளியாகும் என்கிறது படக் குழு.

தயாரிப்பு நிறுவனம் – கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், கெளஷ்துப் எண்டர்டயின்மெண்ட், தயாரிப்பாளர் – கே.ஜே.ஆர் ராஜேஷ், தாஸ் ராமசாமி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கிஷோர் எம்.ராமலிங்கம், நிர்வாக தயாரிப்பாளர் – டி.ஏழுமலையான், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – மனோஜ் குமார், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – சி.ஆர்.மணிகண்டன், ஒளிப்பதிவாளர் – ஆர்வி, இசை – சந்தோஷ் தயாநிதி, படத் தொகுப்பு – ஆனந்த் ஜெரால்டின், கலை இயக்கம் – ஏ.ஆர்.மோகன், ஆடை வடிவமைப்பு – கீர்த்தி வாசன், புகைப்படங்கள் – நரேந்திரன், மக்கள் தொடர்பு – யுவராஜ்.

எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான இந்தக் கதை எழுதி, இயக்கவுள்ளார் கிஷோர் எம்.ராமலிங்கம். இவர் ‘களவாணி’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தது மட்டுமன்றி ‘இது வேதாளம் சொல்லும் கதை’ மற்றும் ‘பூமிகா’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

‘மிடில் கிளாஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.

தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

The post முனீஸ்காந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>