Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
malayalam film industry – Touring Talkies https://touringtalkies.co Wed, 23 Feb 2022 08:03:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png malayalam film industry – Touring Talkies https://touringtalkies.co 32 32 மலையாளத் திரையுலகத்தின் மூத்த நடிகையான KPAC லலிதா காலமானார் https://touringtalkies.co/malayalam-actress-kpac-lalitha-was-passed-away/ Wed, 23 Feb 2022 07:59:04 +0000 https://touringtalkies.co/?p=20928 மலையாள சினிமாவின் சிறந்த குணசித்திர நடிகையான KPAC லலிதா நேற்று இரவு 10 மணிக்கு கேரளாவில் காலமானார். இவருக்கு வயது 73. மகேஸ்வரி அம்மா என்ற இயற் பெயரைக் கொண்ட லலிதா மலையாளப் படவுலகில் மிக மூத்த நடிகையாவார். இதுவரையிலும் பல்வேறு மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கேரளாவின் காயங்குளத்தில் இருந்த கம்யூனிஸ்ட் நாடகக் குழுவான கே.பி.ஏ.சி.வில்தான் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இதனாலேயே இவருக்கு K. P. A. C. என்ற அடைமொழியும் கிடைத்தது. […]

The post மலையாளத் திரையுலகத்தின் மூத்த நடிகையான KPAC லலிதா காலமானார் appeared first on Touring Talkies.

]]>
மலையாள சினிமாவின் சிறந்த குணசித்திர நடிகையான KPAC லலிதா நேற்று இரவு 10 மணிக்கு கேரளாவில் காலமானார். இவருக்கு வயது 73.

மகேஸ்வரி அம்மா என்ற இயற் பெயரைக் கொண்ட லலிதா மலையாளப் படவுலகில் மிக மூத்த நடிகையாவார். இதுவரையிலும் பல்வேறு மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

கேரளாவின் காயங்குளத்தில் இருந்த கம்யூனிஸ்ட் நாடகக் குழுவான கே.பி.ஏ.சி.வில்தான் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இதனாலேயே இவருக்கு K. P. A. C. என்ற அடைமொழியும் கிடைத்தது.

ஐந்து தசாப்தங்கள் நீடித்த இவரது திரை வாழ்க்கையில், பல்வேறு மொழிகளில் 550- க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.

இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய கூட்டுக் குடும்பம் படம்தான் இவர் நடித்த முதல் திரைப்படமாகும். 1978 ஆண்டு அவர் திரைப்பட இயக்குநர் பரதனை மணந்தார்.

அவரது சினிமா வாழ்க்கையின் இரண்டாவது சுற்று இயக்குநர் பரதனின் காற்றத்தே கிளிக்கூடு படத்துடன் (1983) தொடங்கியது.

மலையாளப் படவுலகின் நகைச்சுவை குணச்சித்திர நடிகர் இன்னசென்ட்டுதான் இவரது ராசியான ஜோடி நடிகராவார். இந்த ஜோடி இணைந்து நடித்த அத்தனை படங்களும் இன்றும் நகைச்சுவைக்கென்றே பார்க்கப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது.

தன்னுடைய வெள்ளந்தியான பாவனை, நகைச்சுவை நடிப்பின் வழியாகத் திரைப்படங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர் லலிதா.

லலிதா இரண்டு முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது, 4 முறை மாநில அரசின் கலை விருதுகளையும் வாங்கியவர். கேரள சங்கீத நாடக அகாதமியின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.

இயக்குனர் பரதன் இயக்கிய அமரம் (1991) திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

இயக்குநர் ஜெயராஜ் இயக்கிய சாந்தம்’(2000) படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை இரண்டாவது முறையாகப் பெற்றார்.

மலையாளம் தவிர, தமிழில் ‘காதலுக்கு மரியாதை’, மணிரத்னத்தின் ‘அலைபாயுதே’,  ‘காற்று வெளியிடை’, ‘பரமசிவன்’, ‘கிரீடம்’, ‘மாமனிதன்’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

‘காதலுக்கு மரியாதை’யில் ஷாலினியின் அம்மாவாக அவரது நடிப்பு விமர்சகர்களின் வெகுவான பாராட்டைப் பெற்றது.

இவருக்கு சித்தார்த் என்கிற மகனும், ஸ்ரீகுட்டி என்கிற மகளும் உள்ளனர்.

லலிதாவின் உடலுக்கு மலையாளத் திரையுலகத்தினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இவருடைய இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் இன்று காலை கேரளாவில் நடைபெற்றது.

The post மலையாளத் திரையுலகத்தின் மூத்த நடிகையான KPAC லலிதா காலமானார் appeared first on Touring Talkies.

]]>
“நெடுமுடி வேணு எனக்கு அறிவு வாசலைத் திறந்தவர்” – மம்மூட்டியின் உருக்கமான அஞ்சலி பதிவு https://touringtalkies.co/mammoottys-condolence-message-to-actor-nedumudi-venu/ Wed, 13 Oct 2021 10:51:43 +0000 https://touringtalkies.co/?p=18743 சமீபத்தில் மறைந்த மலையாள திரையுலகதத்தின் மூத்த நடிகரான நெடுமுடி வேணு பற்றி ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் அஞ்சலி பதிவொன்றை எழுதியிருக்கிறார். அதில் “இத்தனையாண்டுகளாக வேணு தனக்கு எல்லாமுமாக இருந்து வந்திருக்கிறார்” என்று புகழ்ந்திருக்கிறார் மம்மூட்டி. மம்மூட்டி எழுதியதன் தமிழாக்கம் இங்கே : 1981-ல் ’கோமரம்’ என்கிற சினிமாவின் படப்பிடிப்பில்தான் நாங்கள் அறிமுகமானோம். எங்கள் நட்பு அங்கேதான் தொடங்கியது. சென்னையில் ஒன்றாக நாங்கள் ரஞ்சித் ஹோட்டலில் முதலில் தங்கினோம். பின்னர் உட்லாண்ட்ஸ் ஹோட்டல் காட்டேஜ் […]

The post “நெடுமுடி வேணு எனக்கு அறிவு வாசலைத் திறந்தவர்” – மம்மூட்டியின் உருக்கமான அஞ்சலி பதிவு appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் மறைந்த மலையாள திரையுலகதத்தின் மூத்த நடிகரான நெடுமுடி வேணு பற்றி ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் அஞ்சலி பதிவொன்றை எழுதியிருக்கிறார்.

அதில் “இத்தனையாண்டுகளாக வேணு தனக்கு எல்லாமுமாக இருந்து வந்திருக்கிறார்” என்று புகழ்ந்திருக்கிறார் மம்மூட்டி.

மம்மூட்டி எழுதியதன் தமிழாக்கம் இங்கே :

1981-ல் ’கோமரம்’ என்கிற சினிமாவின் படப்பிடிப்பில்தான் நாங்கள் அறிமுகமானோம். எங்கள் நட்பு அங்கேதான் தொடங்கியது. சென்னையில் ஒன்றாக நாங்கள் ரஞ்சித் ஹோட்டலில் முதலில் தங்கினோம். பின்னர் உட்லாண்ட்ஸ் ஹோட்டல் காட்டேஜ் வாசம்.. 1985 வரையிலும் இது தொடர்ந்தது.

வேணுவின் நட்பில் எனக்கு நினைவு கூற நிறைய விஷயங்கள் உண்டு. என்னிடம் புதிய காட்சிகளுக்கு, புதிய உலகத்திற்கு புதிய புரிதலுக்கான வாசலை திறந்தது வேணுதான். நாடகம், சங்கீதம், நாட்டுப்புற கலைகள், கதகளி, கூடியாட்டம் என புதிது புதிதாக வாசல்களை திறந்து காண்பித்துக் கொண்டே இருந்தார். வேணுவுடனான அந்தக் காலத்தில் துக்கத்தை நான் அறிந்ததே இல்லை. எப்போதும் புதிதாக சொல்ல வேணுவிடம் விஷயங்கள் இருந்து கொண்டே இருக்கும். எனக்கு அப்படியான விஷயங்கள் எதுவும் வேணுவிடம் பகிர இருந்ததில்லை.

1982-ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருது அவருக்கும், துணை நடிகர் விருது எனக்கும் கிடைத்தது. நாங்கள் இருவரும் ஒன்றாக திருவனந்தபுரம் போய் விருது வாங்கி, எர்ணாகுளம் வந்து உணவை முடித்துவிட்டு, திருச்சூர் ஷூட்டிங் சென்றது இன்றும் நினைவில் இருக்கிறது.

சென்னையில் நாங்கள் ஒன்றாக வசித்த காலங்கள்தான் என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான காலங்கள் என எனக்குத் தோன்றும். அப்போது நிறைய ஷூட்டிங்குகள் மெட்ராஸில் தொடர்ச்சியாக இருந்தன. 1983-84 காலத்தில் மாதக் கணக்கில் நாங்கள் ஒரே அறையில் தொடர்ந்து வசித்ததுண்டு.

அக்காலத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைதான் ஷூட்டிங் விடுமுறை உண்டு. ஊருக்குப் போக முடியாது. ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவை தின வாடகைக்கு அழைத்து காலையில் கிளம்புவோம். சின்ன ஷாப்பிங், மலையாளி ஹோட்டலில் மூக்குமுட்ட உணவு, மேட்னி, செகண்ட் ஷோ சினிமா முடித்து அறைக்கு வருவோம்.

ஒரே நேரத்தில் இரண்டு, மூணு சினிமாக்களில் நடித்த காலம் அது. மதிய இடைவேளையில், கிடைக்கும் இடத்தில் நியூஸ் பேப்பரில் படுத்து உறங்குவோம். வெயில் வரும் நேரம், வேணு என்னை எடுத்து தலையணையில் படுக்க வைத்த பல நேரங்கள் உண்டு.

ஒரு நாள் மதிய நேரம் கிடைத்த பாறையின் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். விழிக்கும்போது காரின் பின் சீட்டில் இருந்தேன். என்னை தூக்கி காரில் படுக்க வைக்கும் அளவுக்கு வேணு பலசாலியாக இருந்தார். நான் அன்று இத்தனை கனமாக இல்லை. இப்படியாக வேணு என் நண்பரானார்..

சினிமாவில் அவர் எனக்கு அண்ணன், அப்பா, மாமா என பல கதாபாத்திரங்கள் செய்திருக்கிறார். கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவு, சொந்த வாழ்க்கையிலும் தொடர்ந்ததாக எனக்குத் தோன்றியதுண்டு.. அந்த கதாபாத்திரங்களுக்கு அப்புறமும் அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார்.

கடந்த என் பிறந்த நாளிலும் எனக்கு வாழ்த்து அனுப்பியிருந்தார். வாண வேடிக்கை போன்ற பிரம்மாண்ட பிறந்த நாள் வாழ்த்துகளால் நிரம்பிய தினமாக அது இருந்தது. அதற்கு இடையிலும், அந்த சிறு தீபத்தின் ஒளியை நான் கையில் வாங்கினேன். என்றும் அந்த வெளிச்சம், என் வழிகாட்டியாய் இருந்திருக்கிறது. இருக்கும்.

கடந்த என் பிறந்த நாளைக்கும் சுசீலா அம்மாவின்(வேணுவின் மனைவி) புதிய வேட்டியும், கடிதமும் எனக்கு வந்திருந்தது.

நான் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் பீஷ்ம பர்வம்’, ‘புழு’ ஆகிய இரு படங்களிலும் வேணு என்னுடன் நடித்துக் கொண்டிருந்தார்.

வேணு என்னை தம்பியைப் போல் கருதிய என் சகோதரன், என் வழிகாட்டி, என் நண்பன், எனக்கு அறிவுரை சொன்ன என் தாய் மாமன். நிறைய நேசித்த என் தகப்பன். அதற்கு அப்புறமும் நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத எல்லாமுமாயிருந்தார்.

என்னால் அவருக்கு விடை தர முடியாது. என்றும் என் மனதில் அவர் இருப்பார். ஓவ்வொரு மலையாளியின் மனதிலும் மங்காத நட்சத்திரமாக ஜொலித்து நிற்பார். நான் கண்களை மூடி, கைகளை கூப்பி நிற்கிறேன்…” என்று உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார் மம்மூட்டி.

The post “நெடுமுடி வேணு எனக்கு அறிவு வாசலைத் திறந்தவர்” – மம்மூட்டியின் உருக்கமான அஞ்சலி பதிவு appeared first on Touring Talkies.

]]>
மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் ஒத்தி வைப்பு..! https://touringtalkies.co/amma-association-gb-meeting-postponed/ Fri, 25 Jun 2021 07:43:23 +0000 https://touringtalkies.co/?p=15762 மலையாள திரைப்பட நடிகர்களின் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர், நடிகைகள் அனைவரும் சேர்ந்து ‘அம்மா’ என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்பு துவக்கப்பட்டு 27 வருடங்களாகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்திய கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று இந்தச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் நடிகர், நடிகைகள் பலரும் ஆர்வத்துடன் வந்து கலந்து கொள்வார்கள். கடந்த வருடம் […]

The post மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் ஒத்தி வைப்பு..! appeared first on Touring Talkies.

]]>
மலையாள திரைப்பட நடிகர்களின் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மலையாள நடிகர், நடிகைகள் அனைவரும் சேர்ந்து ‘அம்மா’ என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்பு துவக்கப்பட்டு 27 வருடங்களாகிறது.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்திய கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று இந்தச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் நடிகர், நடிகைகள் பலரும் ஆர்வத்துடன் வந்து கலந்து கொள்வார்கள்.

கடந்த வருடம் கொரோனா நோய்த் தொற்றின் தீவிரத்தில் இந்தப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறவில்லை. இப்போது இரண்டாவது முறையாக, இந்த வருடமும் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்த முடியாமல் போய்விட்டது.

கேரளாவில் பொதுக் கூட்டங்களுக்கு அந்த மாநில அரசு தற்போது தடை விதித்துள்ளது. “இதனாலேயே அம்மா’ அமைப்பின் பொதுக் குழுவுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை” என்கிறார்கள் சங்க நிர்வாகிகள்.

“ஆனால், அதே நேரம் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” என்று சங்க நிர்வாகம் கருதியுள்ளது. இதற்காக தங்களது உறுப்பினர்கள் ஊசி போட்டுக் கொள்வதற்காக ஒரு சிறப்பு முகாம் ஒன்றை வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. அதற்காக இதுவரையிலும் 150 நடிகர், நடிகைகள் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார்களாம்.

“கேரள மாநில அரசு பொதுக்கூட்டங்களை நடத்தலாம் என்று அனுமதியளித்த பின்பு அம்மா’ அமைப்பின் பொதுக் குழு கூட்டம் நடத்தப்படும்…” என்று அந்த அமைப்பின் செயலாளரான நடிகர் எடவலா பாபு தெரிவித்துள்ளார்.

The post மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் ஒத்தி வைப்பு..! appeared first on Touring Talkies.

]]>
நடிகை கடத்தப்பட்ட வழக்கு – விசாரணையை நிறுத்தி வைக்க கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு https://touringtalkies.co/actress-abduction-case-high-court-order-stop-the-enquiry-to-seassion-court/ Mon, 02 Nov 2020 13:08:45 +0000 https://touringtalkies.co/?p=9616 கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபலமான நடிகையொருவர் நள்ளிரவில் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைவரையிலும் நிறுத்தி வைக்கும்படி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை எர்ணாகுளத்தில் உள்ள அடிஷனல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. பிரபல மலையாள நடிகரான திலீப், இந்த வழக்கில் 8-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். திலீப் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 84 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்பு தற்போது அவர் ஜாமீனில் வெளியில் உள்ளார். இந்த நிலையில் […]

The post நடிகை கடத்தப்பட்ட வழக்கு – விசாரணையை நிறுத்தி வைக்க கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Touring Talkies.

]]>
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபலமான நடிகையொருவர் நள்ளிரவில் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைவரையிலும் நிறுத்தி வைக்கும்படி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை எர்ணாகுளத்தில் உள்ள அடிஷனல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது.

பிரபல மலையாள நடிகரான திலீப், இந்த வழக்கில் 8-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். திலீப் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 84 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்பு தற்போது அவர் ஜாமீனில் வெளியில் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் “திலீப் சில சாட்சிகளை கலைக்க முயல்கிறார் என்பதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்…” என்று சொல்லி அரசுத் தரப்பு விசாரணை நீதிமன்றத்தில் மனு அளித்தது. ஆனால், அந்த மனுவை நீதிபதி கிடப்பில் போட்டுவிட்டார்.

அதோடு ஒரு நாள் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வராத சூழலில் அந்த வழக்கறிஞருக்கு எதிராக எழுதப்பட்ட மொட்டை கடிதத்தை நீதிபதி நீதிமன்றத்தில் படித்துக் காட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கே வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஒரு மனுவை அளித்தார். ஆனால் அந்த மனுவை நிராகரித்த நீதிபதி இந்த வழக்கின் விசாரணை இதே நீதிமன்றத்தில் தொடர்ந்து நடக்கும். வரும் நவம்பர் 3-ம் தேதி முதல் குறுக்கு விசாரணை மீண்டும் துவங்கும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட அந்த நடிகை இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

“எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நான் சாட்சி சொல்ல வந்தபோது 20 வழக்கறிஞர்கள் தன்னைச் சுற்ற நின்று கொண்டார்கள். தன்னால் தனது வழக்கறிஞருடன் சுதந்திரமாக பேசவோ, செயல்படவோ முடியவில்லை..” என்று சொல்லி மனு அளித்திருந்தார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞரும் கேரள உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், “இந்த வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைவரையிலும் எர்ணாகுளம் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது…” என்று இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்து வழக்கினை தள்ளி வைத்துள்ளது.

The post நடிகை கடத்தப்பட்ட வழக்கு – விசாரணையை நிறுத்தி வைக்க கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Touring Talkies.

]]>