Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
lakshmi – Touring Talkies https://touringtalkies.co Wed, 16 Nov 2022 18:38:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png lakshmi – Touring Talkies https://touringtalkies.co 32 32 “காமெடிக்கு சொன்னது வைரலாயிருச்சு” – நடிகை ஐஸ்வர்யாவின் வருத்தம்..! https://touringtalkies.co/what-was-said-for-comedy-went-viral-actress-aishwaryas-regret/ Wed, 16 Nov 2022 18:37:05 +0000 https://touringtalkies.co/?p=27172 தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான லஷ்மியின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா சமீபத்தில் பல்வேறு யுடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டிகளால் மிகுந்த பரபரப்புக்குள்ளார். அந்தப் பேட்டிகளில் “வீடு, வீடாகச் சென்று சோப் போடுகிறேன்” என்றும், “சாப்பாட்டுக்கே வழியில்லை. இப்போ ஒரு வேளைதான் சாப்பிடுகிறேன்” என்றும், “மளிகைக் கடை அண்ணாச்சிக்கு நான்கு மாதம் பாக்கி” என்று சொல்லி பரபரப்பை ஊட்டியிருந்தார். மேலும் “தற்போது வேலையில்லை என்பதால் டாய்லெட் கழுவுற வேலையிருந்தாலும் செய்வேன்..” என்றும் அதிர்ச்சியையும் கொடுத்திருந்தார். ஆனால் இப்போது மீண்டும் […]

The post “காமெடிக்கு சொன்னது வைரலாயிருச்சு” – நடிகை ஐஸ்வர்யாவின் வருத்தம்..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான லஷ்மியின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா சமீபத்தில் பல்வேறு யுடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டிகளால் மிகுந்த பரபரப்புக்குள்ளார்.

அந்தப் பேட்டிகளில் “வீடு, வீடாகச் சென்று சோப் போடுகிறேன்” என்றும், “சாப்பாட்டுக்கே வழியில்லை. இப்போ ஒரு வேளைதான் சாப்பிடுகிறேன்” என்றும், “மளிகைக் கடை அண்ணாச்சிக்கு நான்கு மாதம் பாக்கி” என்று சொல்லி பரபரப்பை ஊட்டியிருந்தார். மேலும் “தற்போது வேலையில்லை என்பதால் டாய்லெட் கழுவுற வேலையிருந்தாலும் செய்வேன்..” என்றும் அதிர்ச்சியையும் கொடுத்திருந்தார்.

ஆனால் இப்போது மீண்டும் ஒரு பேட்டியளித்திருக்கும் ஐஸ்வர்யா “முன்பு யுடியூப் சேனலில்ல நான் சொன்னதெல்லாம் ச்சும்மா காமெடிக்குத்தான்” என்று சொல்லி மீண்டும் காமெடி செய்திருக்கிறார்.

அவர் இது குறித்து அளித்துள்ள பேட்டியில், “அதெல்லாம் காமெடிக்கு சொன்னது. நெட்டிசன்ஸ் வைரலாக்கிட்டாங்க. அவ்ளோதான். இப்போ நான் ஹேண்ட் மேட் சோப் தயாரிக்கிறேன். யுடியூப் சேனல் நடத்துறேன். இது இரண்டும் எப்பவுமே நிக்காதுன்னு எனக்குத் தெரியும். இது இரண்டுமே என் பெர்ஸனல் கிரியேஷன்ஸ். என்னோட பேபிஸ். சினிமா, சீரியல்ல நான் ஜஸ்ட் எம்ப்ளாயி அவ்ளோதான்.

நான் யோகா பண்ணி ஒரு வேளைதான் சாப்பிடுறேன்னு சொன்னதையே “காசில்லாம ஒருவேளைதான் சாப்பிடுறாராம்”ன்னு கிளிக் பைட் ஆக்கிட்டாங்க. நான் 2016-ம் ஆண்டில் இருந்தே சோப் வித்திட்டிருக்கேன். அது இப்பத்தான் வைரலாகியிருக்கு. கேக் 2012-ல இருந்தே வித்திட்டிருக்கேன். நிறைய பேரு வாங்கியிருக்காங்க. ஆனா அந்த இண்டர்வியூவுக்கு அப்புறமா என்னோட கஸ்டமர் எண்ணிக்கை கூடியிருக்கு. இப்போ நிறைய பேர் சோப்பும் வாங்குறாங்க..” என்றார் மகிழ்ச்சியுடன்..!

The post “காமெடிக்கு சொன்னது வைரலாயிருச்சு” – நடிகை ஐஸ்வர்யாவின் வருத்தம்..! appeared first on Touring Talkies.

]]>
கொடுமை: கதறி அழும் லட்சுமி https://touringtalkies.co/cruelty-crying-lakshmi/ Mon, 14 Nov 2022 08:39:38 +0000 https://touringtalkies.co/?p=27070 சின்னத்திரை நடிகை லட்சுமி வாசுதேவனுக்கு சமீபத்தில் நடந்த சம்பவம் மிகக் கொடுமையானது. இது குறித்து அவர் “நான் செய்த தவறை யாரும் செய்யக்கூடாது என்பதால் வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறேன். கடந்த செப்டம்பர் 11 அன்னைக்கு நீங்க ஐந்து லட்சம் ரூபாய் ஜெயிச்சிருக்கீங்கன்னு ஒரு மெசேஜ் வந்தது. அதோடு  லிங்க் இருந்தது. தெரியாம . அந்த லிங்கை க்ளிக் பண்ணினேன். உடனே  ஒரு ஆப் என் போனில் இன்ஸ்டால் ஆச்சு.  அடுத்த விநாடி, என் போன் ஹேக் ஆகிருச்சு. […]

The post கொடுமை: கதறி அழும் லட்சுமி appeared first on Touring Talkies.

]]>

சின்னத்திரை நடிகை லட்சுமி வாசுதேவனுக்கு சமீபத்தில் நடந்த சம்பவம் மிகக் கொடுமையானது.

இது குறித்து அவர் “நான் செய்த தவறை யாரும் செய்யக்கூடாது என்பதால் வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறேன். கடந்த செப்டம்பர் 11 அன்னைக்கு நீங்க ஐந்து லட்சம் ரூபாய் ஜெயிச்சிருக்கீங்கன்னு ஒரு மெசேஜ் வந்தது. அதோடு  லிங்க் இருந்தது. தெரியாம . அந்த லிங்கை க்ளிக் பண்ணினேன். உடனே  ஒரு ஆப் என் போனில் இன்ஸ்டால் ஆச்சு.  அடுத்த விநாடி, என் போன் ஹேக் ஆகிருச்சு. அது அப்போ எனக்குத் தெரியல.


சில நாள் கழிச்சி,  நீங்க லோன் வாங்கியிருக்கீங்க அதனால அந்த லோனை உடனடியா அடைங்கன்னு தொடர்ந்து மெசேஜ், போன் வர ஆரம்பிச்சது. ரொம்ப ஆபாசமா பேசி  வாய்ஸ் நோட் அனுப்பினாங்க. நீங்க 5000 ரூபாய் லோன் கொடுக்கலைன்னா உங்க ஃபோட்டோவை எல்லாருக்கும் அனுப்புவோம்னு தொடர்ந்து மிரட்டினாங்க. பயந்துபோய் ஹைதராபாத்தில் சைபர்கிரைமில் புகார் கொடுத்தேன். அவங்க விசாரிச்சிட்டு இருக்காங்க.

இதுக்கு நடுவுல என் வாட்ஸ் அப்பிலுள்ள சில நண்பர்கள் எண்களுக்கு , என் பெற்றோர்களுக்கு என்னை மார்பிங் பண்ணி ஆபாசமா காண்பித்த படம் போயிருக்கு.

அதனால் ஏற்பட்ட மன உளைச்சலை தாங்க முடிலை..

அதனால, லோன் ஆப், லக்கி டிரான்னு எந்த ஆப்பிலிருந்து வர்ற மெசேஜூம் க்ளிக் பண்ணாதீங்க” என்று கலங்கியபடி சொல்கிறார் லட்சுமி.

இது எல்லோருக்குமான எச்சரிக்கைதான்.

The post கொடுமை: கதறி அழும் லட்சுமி appeared first on Touring Talkies.

]]>
என்னிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்த பாரதிராஜா Chai with Chithra with Dir.Ra.Sankaran Part_2 https://touringtalkies.co/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%be-2/ Wed, 15 Sep 2021 08:07:52 +0000 https://touringtalkies.co/?p=17952 The post என்னிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்த பாரதிராஜா Chai with Chithra with Dir.Ra.Sankaran Part_2 appeared first on Touring Talkies.

]]>

The post என்னிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்த பாரதிராஜா Chai with Chithra with Dir.Ra.Sankaran Part_2 appeared first on Touring Talkies.

]]>
‘நாட்டாமை’ படத்தில் குஷ்பூ கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது லஷ்மியா..? https://touringtalkies.co/lakshmi-was-the-first-to-play-the-role-of-khushboo-in-the-film-nattamai/ Tue, 09 Feb 2021 09:07:16 +0000 https://touringtalkies.co/?p=12893 1994-ம் ஆண்டு சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியான திரைப்படம் ‘நாட்டாமை’. இந்தப் படத்தில் சரத்குமார், குஷ்பூ, மீனா நடித்திருந்தனர். சரத்குமார் இதில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஈரோடு செளந்தர் கதை எழுத, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். சரத்குமாரின் அப்போதைய திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றது இத்திரைப்படம். இத்திரைப்படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்டாக இருந்தவர் நடிகை குஷ்பூ. இவரும், சரத்குமாரும் இணைந்து பாடிய ‘கொட்டப் பாக்கு கொழுந்து வெத்தலை’ என்ற […]

The post ‘நாட்டாமை’ படத்தில் குஷ்பூ கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது லஷ்மியா..? appeared first on Touring Talkies.

]]>
1994-ம் ஆண்டு சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியான திரைப்படம் ‘நாட்டாமை’. இந்தப் படத்தில் சரத்குமார், குஷ்பூ, மீனா நடித்திருந்தனர். சரத்குமார் இதில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஈரோடு செளந்தர் கதை எழுத, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

சரத்குமாரின் அப்போதைய திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றது இத்திரைப்படம். இத்திரைப்படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்டாக இருந்தவர் நடிகை குஷ்பூ. இவரும், சரத்குமாரும் இணைந்து பாடிய ‘கொட்டப் பாக்கு கொழுந்து வெத்தலை’ என்ற பாடலும், அதற்கான நடனமும் ரசிகர்களை மிக அதிகமாக கவர்ந்திழுத்தது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் இத்திரைப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டது.

படத்தில் குஷ்பூ நடித்திருந்த கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை லஷ்மிதானாம். வயதான லுக்கில் படத்தில் தோன்ற வேண்டுமென்பதால் லஷ்மிதான் இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

நடிகை லஷ்மியை சந்தித்து கதை சொல்வதற்காக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றிருந்தபோது அங்கே தற்செயலாக குஷ்பூவை சந்தித்திருக்கிறார். குஷ்பூவிடம் சாதாரணமாக இந்தக் கதையையும், கேரக்டரையும் சொல்லி லஷ்மியை சந்திக்க வந்திருப்பதாகச் சொல்ல.. இடைமறித்த குஷ்பூ தானே இந்தக் கேரக்டரை செய்வதாகச் சொல்லி தட்டிப் பறித்துவிட்டாராம்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரே சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இந்த உண்மையைச் சொல்லியிருக்கிறார்.

The post ‘நாட்டாமை’ படத்தில் குஷ்பூ கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது லஷ்மியா..? appeared first on Touring Talkies.

]]>