Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
keerthy sanon – Touring Talkies https://touringtalkies.co Sat, 30 Sep 2023 04:03:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png keerthy sanon – Touring Talkies https://touringtalkies.co 32 32 கீர்த்தி சனோன் கவர்ச்சி படங்கள் https://touringtalkies.co/keerthy-sanon-hot-pics/ Sat, 30 Sep 2023 04:03:00 +0000 https://touringtalkies.co/?p=36737    

The post கீர்த்தி சனோன் கவர்ச்சி படங்கள் appeared first on Touring Talkies.

]]>
 

 

The post கீர்த்தி சனோன் கவர்ச்சி படங்கள் appeared first on Touring Talkies.

]]>
பிரபாஸ்-கீர்த்தி சனோன் காதலா..? https://touringtalkies.co/prabhas-keerthi-sanon-love/ Mon, 28 Nov 2022 14:45:45 +0000 https://touringtalkies.co/?p=27765 பாகுபலி ஹீரோவான பிரபாஸ் பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனை காதலிப்பதாக சக பாலிவுட் நடிகரான வருண் தவான் கிசுகிசு செய்தியை பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். நடிகர் பிரபாஸுக்கு தற்போது 43 வயதாகிறது. அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முயற்சித்தாலும் அவர் சினிமாவில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறார். பாகுபலி படத்தில் நடிப்பதற்காக அவர் கிட்டத்தட்ட 5 வருடங்களை ஒதுக்கிய நிலையில், அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி காதலித்து வருகிறார்கள் […]

The post பிரபாஸ்-கீர்த்தி சனோன் காதலா..? appeared first on Touring Talkies.

]]>
பாகுபலி ஹீரோவான பிரபாஸ் பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனை காதலிப்பதாக சக பாலிவுட் நடிகரான வருண் தவான் கிசுகிசு செய்தியை பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்.

நடிகர் பிரபாஸுக்கு தற்போது 43 வயதாகிறது. அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முயற்சித்தாலும் அவர் சினிமாவில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறார். பாகுபலி படத்தில் நடிப்பதற்காக அவர் கிட்டத்தட்ட 5 வருடங்களை ஒதுக்கிய நிலையில், அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி காதலித்து வருகிறார்கள் என முன்பு கிசுகிசுக்கள் வந்தாலும் அதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

அதன் பின் தற்போது பிரபாஸ் ஹிந்தி நடிகை க்ரித்தி சனோன் உடன் காதலில் இருப்பதாக கிசுகிசு தொடங்கி இருக்கிறது. பிரபாஸை திருமணம் செய்ய விரும்புவதாக நடிகை கீர்த்தி சனோன் ஒரு பேட்டியில் ஏற்கெனவே சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகரான வருண் தவான் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கீர்த்தி சனோன் காதல் பற்றி கூறி இருக்கிறார்.

“கீர்த்தி சனோன் சிங்கிள் இல்லை. அவர் பெயர் ஒரு ஆணின் இதயத்தில் எழுதப்பட்டுவிட்டது. அந்த ஆண் தற்போது தீபிகா படுகோன் உடன் ஷூட்டிங்கில் இருக்கிறார்” என கூறியதைடுத்து பாலிவுட் உலகில் பரபரப்பு எழுந்துள்ளது.

தற்போது பிரபாஸ்தான் தீபிகா உடன் ப்ராஜெக்ட் கே என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். அதனால் தற்போது பிரபாஸ் – க்ரித்தி சனோன் காதல் இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது. 

The post பிரபாஸ்-கீர்த்தி சனோன் காதலா..? appeared first on Touring Talkies.

]]>
‘பெடியா’ படத்தின் தும்கேஸ்வரி பாடல் வெளியானது..! https://touringtalkies.co/tumkeshwari-song-from-pediya-released/ Sun, 30 Oct 2022 17:07:04 +0000 https://touringtalkies.co/?p=26264 பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் அமர் கௌஷிக் இயக்கத்தில், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் ‘பெடியா’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் பாடலான ‘தும்கேஸ்வரி’ தற்போது வெளியாகியுள்ளது. கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்துள்ள இந்த பாடலில் வருண் தவான் – கீர்த்தி சனோன் கூட்டணி பட்டையை கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பாடலை பற்றி வருண் தவான் கூறுகையில், “இது போன்ற […]

The post ‘பெடியா’ படத்தின் தும்கேஸ்வரி பாடல் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் அமர் கௌஷிக் இயக்கத்தில், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் ‘பெடியா’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் பாடலான ‘தும்கேஸ்வரி’ தற்போது வெளியாகியுள்ளது.

கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்துள்ள இந்த பாடலில் வருண் தவான் – கீர்த்தி சனோன் கூட்டணி பட்டையை கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாடலை பற்றி வருண் தவான் கூறுகையில், “இது போன்ற ஒரு உற்சாகமான பாடலுக்கு நடனமாடியதில் மகிழ்ச்சியாக உள்ளது. நடனமாடுவதற்காகவே உருவாக்கப்பட்ட பாடல் இது. பாடலின் இசையும் அதன் வரிகளும் ரசிகர்களை கண்டிப்பாக கவரும்..” என்றார்.

பாடலில் பல வண்ண உடை அணிந்து வரும் கீர்த்தி சனோன் அழகு பதுமையாக தோன்றுகிறார். அவரது அனுபவத்தை பற்றி கீர்த்தி கூறுகையில், “இந்த ‘தும்கேஸ்வரி’ பாடலில் நான் மிகவும் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் நடித்துள்ளேன். பல வருடங்களுக்கு பிறகு வருணுடன் இப்படத்தில் நடித்துள்ளதில் மகிழ்ச்சியாக உள்ளது. இது மிகவும் பிரமாண்டமான முறையில் உருவாகியுள்ள படம். இந்த அனுபவம் எப்போதும் என் நினைவில் இருக்கும்.” என்றார்.

சிறப்புமிக்க இந்த பாடலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்விதமாக நடிகை ஷ்ரத்தா கபூரும் இதில் நடனமாடியுள்ளார். சிகப்பு ஆடையில் வருணுடன் இவர் போட்டுள்ள ஆட்டம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். இயக்குநர் அமர் கௌஷிக்கின் முந்தைய படமான ‘ஸ்திரீ’ படத்திலும் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்பாடலில் மட்டும் தோன்றுகிறாரா அல்லது படத்திலும் வருகிறாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இசையமைப்பாளர் சச்சின்-ஜிகார் கூறுகையில்,” ‘பெடியா’ படத்தில் உள்ள உற்சாக மனநிலையை இந்த ‘தும்கேஸ்வரி’ பாடல் பிரதிபலிக்கும். ரசிகர்களை நடனமாட வைக்கும்விதமாக இந்த பாடலின் இசை, வரிகள் மற்றும் காட்சியமைப்பு உருவாகியுள்ளன.” என்றார்.

சச்சின்-ஜிகார் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு அமிதாப் பட்டாச்சார்யா வரிகள் எழுதியுள்ளார். இப்பாடலை கார்த்திக் மற்றும் அனுஷா மணி பாடியுள்ளனர். ‘தும்கேஸ்வரி’ பாடலை கேட்ட பிறகு இந்த ஆல்பத்தில் உள்ள மற்ற பாடல்களை கேட்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகமாகியுள்ளது.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள இந்த ‘பெடியா’ படம் வரும் நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

The post ‘பெடியா’ படத்தின் தும்கேஸ்வரி பாடல் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் வெளியானது https://touringtalkies.co/aadhipurush-movie-teaser-was-released-in-ayodhya/ Mon, 03 Oct 2022 10:05:17 +0000 https://touringtalkies.co/?p=24805 பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் மற்றும் ஐம்பதடி உயர போஸ்டர், ராமரின் பிறந்த பூமியான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதி புருஷ்’. இதில் ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சயீப் […]

The post நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் மற்றும் ஐம்பதடி உயர போஸ்டர், ராமரின் பிறந்த பூமியான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதி புருஷ்’.

இதில் ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சன்சிட் பல்ஹாரா மற்றும் அன்கிட் பல்ஹாரா சகோதரர்கள் இசையமைத்திருக்கிறார்கள்.

ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், கிருஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடர், ராஜேஷ் நாயர் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

‘ஆதி புருஷ்’ இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது.

இப்படத்தின் கதையின் நாயகனான ஸ்ரீ ராமபிரான் பிறந்த புனித இடமாக கருதப்படும் அயோத்தி மாநகரில் உள்ள சரயு நதிக்கரையில், பிரம்மாண்டமான ஒலி ஒளி அமைப்பு, லேசர் விளக்குகள் மற்றும் வாண வேடிக்கைகளுடன் டீசரும், போஸ்டரும் வெளியிடப்பட்டது.

நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் போஸ்டர், 50 அடி உயரத்திற்கு தயாரிக்கப்பட்டு, சரயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் நடிகர்கள் பிரபாஸ், கீர்த்தி சனோன், இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

ராமபிரான், மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரம் என்பதும், தசரத சக்கரவர்த்தி சரயு நதிக்கரையில் மேற்கொண்ட புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாக அவருக்கு மகனாக பிறந்தவர். அவர் நன்மைக்கும், தீமைக்கும் இடையேயான போட்டியில் , வானர படைகளின் உதவியுடன் தீமையின் வடிவமான இராவணனை வென்றார் என்பதுதான் ராமாயணம்.

இந்தப் படத்தின் டீசரில் ராமனாக நடித்திருக்கும் நடிகர் பிரபாஸ், நீருக்கடியில் தியானம் செய்து கொண்டிருக்கும் காட்சியும், பனி படர்ந்த பிரதேசத்தில் ராவணனாக நடித்திருக்கும் சயீப் அலி கான் தோன்றும் காட்சியும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.

ராமாயண காவியத்தை தற்போதைய இணைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் ‘ஆதி புருஷ்’ தயாராகி இருப்பதால் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் வெளியான குறுகிய காலத்தில் அனைத்து மொழிகளிலும் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி அன்று ஐமேக்ஸ் மற்றும் 3டி வடிவிலும் உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் வெளியானது appeared first on Touring Talkies.

]]>