Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
keerthi suresh – Touring Talkies https://touringtalkies.co Thu, 02 May 2024 12:04:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png keerthi suresh – Touring Talkies https://touringtalkies.co 32 32 வருகிறாள் ரீவால்வர் ரீட்டா! https://touringtalkies.co/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b0%e0%af%80%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/ Thu, 02 May 2024 12:03:59 +0000 https://touringtalkies.co/?p=42026 நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமாகினார், நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார். கடைசியாக தெலுங்கு படமான ‘தசரா’-வில் நானியுடனும், தமிழ் படங்களான ‘மாமன்னன்’ மற்றும் ‘சைரன்’-இல் நடித்துள்ளார். இந்த படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது, இயக்குநர் சந்துரு இயக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் நடித்திருக்கிறார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் […]

The post வருகிறாள் ரீவால்வர் ரீட்டா! appeared first on Touring Talkies.

]]>
நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமாகினார், நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார். கடைசியாக தெலுங்கு படமான ‘தசரா’-வில் நானியுடனும், தமிழ் படங்களான ‘மாமன்னன்’ மற்றும் ‘சைரன்’-இல் நடித்துள்ளார். இந்த படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்போது, இயக்குநர் சந்துரு இயக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் நடித்திருக்கிறார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு, ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்தப் போஸ்டரை நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். வித்தியாசமான முறையில் வெளியான இந்தப் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை தங்களது எக்ஸ் பக்கத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post வருகிறாள் ரீவால்வர் ரீட்டா! appeared first on Touring Talkies.

]]>
கோடையை கொண்டாட்டமாக்க வரிசைகட்டி நிற்கும் படங்கள்! என்னென்ன பாருங்களேன்‌… https://touringtalkies.co/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0/ Mon, 29 Apr 2024 05:56:38 +0000 https://touringtalkies.co/?p=41604 கமலின் இந்தியன் 2, விக்ரமின் தங்கலான், தனுஷின் ராயன், ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய படங்கள் இந்த கோடைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை சரியான அதிகாரபூர்வ தேதிகள் வெளியாகவில்லை.இருப்பினும், கோடைக்கு ஏற்றபடி சில படங்கள் ரிலீஸுக்கு தயாராகி விட்டன. கமல்ஹாசன், பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி, சுந்தர்.சி.யின் அரண்மனை 4, பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகும் டீன்ஸ் சந்தானம் நடித்த இங்க நான்தான் கிங்கு, கவின் நடித்த ஸ்டார், சாய் தன்ஷிகா, அஷோக் நடித்த […]

The post கோடையை கொண்டாட்டமாக்க வரிசைகட்டி நிற்கும் படங்கள்! என்னென்ன பாருங்களேன்‌… appeared first on Touring Talkies.

]]>
கமலின் இந்தியன் 2, விக்ரமின் தங்கலான், தனுஷின் ராயன், ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய படங்கள் இந்த கோடைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை சரியான அதிகாரபூர்வ தேதிகள் வெளியாகவில்லை.இருப்பினும், கோடைக்கு ஏற்றபடி சில படங்கள் ரிலீஸுக்கு தயாராகி விட்டன.

கமல்ஹாசன், பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி, சுந்தர்.சி.யின் அரண்மனை 4, பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகும் டீன்ஸ் சந்தானம் நடித்த இங்க நான்தான் கிங்கு, கவின் நடித்த ஸ்டார், சாய் தன்ஷிகா, அஷோக் நடித்த தி ஃபுரூப், உள்ளிட்ட படங்கள் மே மாதத்தில் வெளியாகவுள்ளன. இவை ரிலீஸ் ஆகும் என்றாலும், அதிகாரபூர்வ தேதி இன்னும் சில நாட்களில் உறுதி செய்யப்படும் என தெரிகிறது.

கீர்த்தி சுரேஷின் ரீவால்வர் ரீட்டா மற்றும் ரகு தாத்தா ஆகிய இரண்டு படங்களும் வெளியீட்டிற்காக தயாராகி விட்டன. இரண்டில் ஒன்றை திரையிட முயன்றனர். ஆனால், இரண்டு படங்களின் வெளியீடும் தள்ளிப்போகிறது என்று தகவல்.அதேபோல, துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், சூரி நடித்த ‘கருடன்’ படம் வெளியாகும் என்றனர். ஆனால், படத்தின் பேட்ச் வொர்க் இன்னும் முடியாமல் இருப்பதால், அது முடிந்த பிறகு மட்டுமே அறிவிப்பு வெளியாகும்.

மிஷ்கினின் பிசாசு 2, அமீர் நடித்த உயிர் தமிழுக்கு ஆகிய படங்கள் வெளிவரும் எண்ணத்தில் உள்ளன. தற்போது ‘கல்கி 2898 ஏடி’ படத்திற்கே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, அன்னா பென் ஆகியோர் நடிக்கின்றனர்.

அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதியன்று மங்காத்தா மறுவெளியீடு செய்யப்படுகின்றன.

The post கோடையை கொண்டாட்டமாக்க வரிசைகட்டி நிற்கும் படங்கள்! என்னென்ன பாருங்களேன்‌… appeared first on Touring Talkies.

]]>
அப்படியென்ன கீர்த்தி சுரேஷ் புடவ மேல எல்லாருக்கும் ஒரு கண்ணு? ஓமைகாட் விலை தெரிஞ்சா ஆடிபோயிடுவிங்க….‌ https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0/ Thu, 25 Apr 2024 08:57:24 +0000 https://touringtalkies.co/?p=41361 கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நாக் அஸ்வின் இயக்கத்தில் தெலுங்கில் சாவித்திரியாக மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். தமிழில் அவர் கடைசியாக ஜெயம்ரவியுடன் சைரன் படத்தில் நடித்திருந்தார் அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்துக்கு கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த புடவையின் விலை குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் விஜய்யுடன் பைரவா, […]

The post அப்படியென்ன கீர்த்தி சுரேஷ் புடவ மேல எல்லாருக்கும் ஒரு கண்ணு? ஓமைகாட் விலை தெரிஞ்சா ஆடிபோயிடுவிங்க….‌ appeared first on Touring Talkies.

]]>
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நாக் அஸ்வின் இயக்கத்தில் தெலுங்கில் சாவித்திரியாக மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

தமிழில் அவர் கடைசியாக ஜெயம்ரவியுடன் சைரன் படத்தில் நடித்திருந்தார் அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்துக்கு கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த புடவையின் விலை குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ என வரிசையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.வெகுவாக அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே சம்பாதித்தார். ஆனால் சைரன் படத்தை தவிர வேறேதும் தமிழில் பெரிதாக வாய்ப்பு வராமல் சைலன்டாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அண்மையில் பிரமாண்டமாக நடந்த இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் கீர்த்தி சுரேஷ்ம் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் கவரக்கூடிய புடவையில் வந்த கீர்த்தி சுரேஷ்ன் அந்தப் புடவையின் விலை குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி அந்தப் புடவையின் விலை சுமார் மூன்று லட்சம் ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது இதை அறிந்த ரசிகர்கள் இவ்வளவு ரூபாய் ஒரு புடவைக்கு செலவு செய்கிறாரே என ஆச்சரியத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.

The post அப்படியென்ன கீர்த்தி சுரேஷ் புடவ மேல எல்லாருக்கும் ஒரு கண்ணு? ஓமைகாட் விலை தெரிஞ்சா ஆடிபோயிடுவிங்க….‌ appeared first on Touring Talkies.

]]>
அஸ்வத்தாமா அவதாரம் எடுத்த அமிதாப்… அப்போ கல்கியா வரப்போறது கமல்லா? https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/ Tue, 23 Apr 2024 08:20:26 +0000 https://touringtalkies.co/?p=41174 இயக்குநர் நாக் அஸ்வின் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் எடுத்து வெளியிட்டு பிரமாண்டமான வெற்றியை கண்டார். அந்த திரைப்படத்தில் படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. நடிகையர் திலகம் படத்தை தொடர்ந்து சுமார் 500 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக பல வருடங்கள் கழித்து பிரபாஸை வைத்து நாக் அஸ்வின் உருவாக்கியுள்ள கல்கி படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் குறித்த […]

The post அஸ்வத்தாமா அவதாரம் எடுத்த அமிதாப்… அப்போ கல்கியா வரப்போறது கமல்லா? appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் நாக் அஸ்வின் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் எடுத்து வெளியிட்டு பிரமாண்டமான வெற்றியை கண்டார். அந்த திரைப்படத்தில் படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

நடிகையர் திலகம் படத்தை தொடர்ந்து சுமார் 500 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக பல வருடங்கள் கழித்து பிரபாஸை வைத்து நாக் அஸ்வின் உருவாக்கியுள்ள கல்கி படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.இப் படத்தில் கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது பலர் அறிந்ததே.

இப்படத்தில் பிரபாஸ் பைரவா கதாபாத்திரத்திலும் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா கதாபாத்திரத்திலும் அசத்த வருகின்றனர். அப்போது கல்கி ஆக கமல்ஹாசன் நடித்து உள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமாக கல்கி அவதாரம் என கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் அமிதாப்பச்சனின் கதாபாத்திரம் குறித்த அறிமுக வீடியோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதே போல அமிதாப் பச்சனின் கதாபாத்திர வீடியோ அதிரடியாக வெளியானது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு குருவாக இருந்த துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா அனுமான் போலவே இன்னும் இந்த பூமியில் உயிருடன் உலாவி வருவதாக புராணக் கதைகள் இருக்கின்றன. அதை மையமாக வைத்து அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைத்திருக்கிறார் நாக் அஸ்வின்.

The post அஸ்வத்தாமா அவதாரம் எடுத்த அமிதாப்… அப்போ கல்கியா வரப்போறது கமல்லா? appeared first on Touring Talkies.

]]>
ஜிம் உடையில் கீர்த்தி சுரேஷ்!  https://touringtalkies.co/keerthi-suresh-shares-gym-look-photos/ Sun, 21 May 2023 00:39:14 +0000 https://touringtalkies.co/?p=32665 படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.   அவ்வப்போது யோகா, ஒர்க் அவுட் என போட்டோக்களை வெளியிடுகிறார். இந்நிலையில் ஜிம் உடையில் கிளாமராக எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர், “உடற்பயிற்சி அனைவருக்கும் அவசியம். உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற பல லட்சம் செலவு.. அதோடு வாழ்க்கையே குலைந்துவிடுகிறது. ஆகவே எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடலை கட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியம்” என்று தெரிவித்து உள்ளார்.  

The post ஜிம் உடையில் கீர்த்தி சுரேஷ்!  appeared first on Touring Talkies.

]]>
படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.   அவ்வப்போது யோகா, ஒர்க் அவுட் என போட்டோக்களை வெளியிடுகிறார்.

இந்நிலையில் ஜிம் உடையில் கிளாமராக எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர், “உடற்பயிற்சி அனைவருக்கும் அவசியம். உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற பல லட்சம் செலவு.. அதோடு வாழ்க்கையே குலைந்துவிடுகிறது. ஆகவே எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடலை கட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியம்” என்று தெரிவித்து உள்ளார்.

 

The post ஜிம் உடையில் கீர்த்தி சுரேஷ்!  appeared first on Touring Talkies.

]]>