Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
kavingar kannadasan – Touring Talkies https://touringtalkies.co Sat, 12 Dec 2020 06:52:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png kavingar kannadasan – Touring Talkies https://touringtalkies.co 32 32 கவியரசர் கண்ணதாசனின் குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை வெடித்தது..! https://touringtalkies.co/kavingar-kannadasan-family-wealth-dispute-news/ Sat, 12 Dec 2020 06:36:39 +0000 https://touringtalkies.co/?p=10945 தமிழ்ச் சினிமாவில் மறக்க முடியாத திரைப் பாடல்களை எழுதி சாகாவரம் பெற்றிருக்கும் ‘கவியரசர்’ கண்ணதாசன் குடும்பத்தில் இப்போது சொத்துப் பிரச்சினை எழுந்துள்ளது. ‘கவியரசர்’ கண்ணதாசனுக்கு பொன்னழகி என்னும் பொன்னம்மாள், பார்வதி, வள்ளியம்மை என்று மூன்று மனைவிகள். இவர்கள் மூலமாக ‘கவியரசர்’ கண்ணதாசனுக்கு 15 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் ரேவதி சண்முகம், விசாலாட்சி, அலமேலு, கலைச்செல்வி சொக்கலிங்கம், தேனம்மை, விசாலி கண்ணதாசன் என்ற மகள்களும், காந்தி கண்ணதாசன், கமல் கண்ணதாசன், கலைவாணன் கண்ணதாசன், கோபி கண்ணதாசன், சீனிவாசன் கண்ணதாசன், […]

The post கவியரசர் கண்ணதாசனின் குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை வெடித்தது..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்ச் சினிமாவில் மறக்க முடியாத திரைப் பாடல்களை எழுதி சாகாவரம் பெற்றிருக்கும் ‘கவியரசர்’ கண்ணதாசன் குடும்பத்தில் இப்போது சொத்துப் பிரச்சினை எழுந்துள்ளது.

கவியரசர்’ கண்ணதாசனுக்கு பொன்னழகி என்னும் பொன்னம்மாள், பார்வதி, வள்ளியம்மை என்று மூன்று மனைவிகள்.

இவர்கள் மூலமாக ‘கவியரசர்’ கண்ணதாசனுக்கு 15 பிள்ளைகள் உள்ளனர்.

இவர்களில் ரேவதி சண்முகம், விசாலாட்சி, அலமேலு, கலைச்செல்வி சொக்கலிங்கம், தேனம்மை, விசாலி கண்ணதாசன் என்ற மகள்களும், காந்தி கண்ணதாசன், கமல் கண்ணதாசன், கலைவாணன் கண்ணதாசன், கோபி கண்ணதாசன், சீனிவாசன் கண்ணதாசன், கண்மணி சுப்பு, ராமசாமி கண்ணதாசன், அண்ணாதுரை கண்ணதாசன், வெங்கடாச்சலம் கண்ணதாசன் ஆகிய மகன்களும் உள்ளனர்.

இவர்களில் ஒருவரான கோபி கண்ணதாசன், “தனது குடும்பச் சொத்துக்களை தனது மற்றைய சகோதரர்களான காந்தி கண்ணதாசனும், அண்ணாதுரை கண்ணதாசனுமே அனுபவிக்கிறார்கள். கண்ணதாசனின் மற்றைய வாரிசுகளுக்கு உரிய பங்கினைக் கொடுப்பதில்லை” என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

அவர் இது பற்றி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது தந்தையார் ‘கண்ணதாசன் புரொடெக்சன்ஸ்’, ’விசாலாட்சி பிலிம்ஸ்’, ’நேஷனல் பிக்சர்ஸ்’ உள்ளிட்ட 5 தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வந்தார். அவற்றின் மூலமாகத் தயாரிக்கப்பட்ட அனைத்துத் திரைப்படங்களும் இப்போதும் திரையரங்குகள், தொலைக்காட்சிகள், மற்றும் சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.

ஆனால், இதற்கான ராயல்டி தொகை பெருமளவில் வந்தும்கூட கடந்த 45 ஆண்டுகளாக அது கவிஞரின் புதல்வர்கள் அனைவருக்கும் பகிர்ந்து தரப்படவில்லை. அண்ணாதுரை கண்ணதாசன் மட்டுமே அந்தக் காசோலைகளை காசாக்கி அனுபவித்து வருகிறார்.

அதேபோல் எங்கள் தந்தையார் கடைசிவரையிலும் வாழ்ந்த தி.நகர் வீட்டில் ஒரு சிறு அறையைக்கூட விட்டுவைக்காமல் அதை அவரது படுக்கை அறையாக மாற்றிவிட்டார். அந்த முழுக் கட்டிடத்தையும், வணிகக் கட்டிடமாக காந்தி கண்ணதாசன் பாவித்து வருகிறார். அதன் மூலமாக வருமானமும் பார்த்து வருகிறார்.

இப்படி எங்களது தந்தையாரின் சொத்துக்கள் மூலமாகக் கிடைக்கும் அத்தனை தொகையிலிருந்தும் சிறு பகுதியை ராயல்டியாக எங்களுக்குக் கொடுத்துவிட்டு, எந்தவிதக் கணக்கும், வழக்கும் இல்லாமல் அபகரித்துக் கொண்டிருக்கிறார் எங்களது மூத்த சகோதரரான காந்தி கண்ணதாசன்.

இப்படிப்பட்ட அநீதிகளுக்கு எங்களது இன்னொரு சகோதரரான திரு.அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களையும் அவர் உறுதுணையாக ஆக்கிக் கொண்டு, என் மற்ற சகோதர, சகோதரிகளையும் அவர் வஞ்சித்து வருகிறார்.

இது குறித்து நான் கேள்வி எழுப்பியதால், விக்கிபீடியாவில் ‘கவியரசர்’ கண்ணதாசன் தகவல் பக்கத்தில் இருந்த எனது பெயரான ‘கோபி கண்ணதாசன்’ என்பதில் ‘கண்ணதாசன்’ என்ற எனது தந்தையாரின் பெயரை வன்மமாக நீக்கிவிட்டு ‘கோபாலகிருஷ்ணன்’ என்று மாற்றிவிட்டார்.

இதை நான் பல முறைகள் திருத்தியும்கூட என் பெயரில் எங்களது தந்தையார் பெயர் இல்லாதபடி பார்த்துக் கொள்கிறார்.

எனவே, நீதி கேட்டு நான் விரைவில் சட்டப் போராட்டத்தைத் துவங்கவிருக்கிறேன்.

என் போராட்டங்களுக்கு தமிழக மக்கள் தார்மீக ஆதரவினைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்தடுத்து இது குறித்து விரிவாகப் பேச இருக்கிறேன்..” என்று கூறியிருக்கிறார்.

தமிழக மக்களின் வாழ்வோடு இணைந்து இப்போதும் வாழந்து கொண்டிருக்கும் கவியரசரின் குடும்பத்திலேயே சொத்துப் பிரச்சினைக்காக முட்டல், மோதலா என்று தமிழகமே கவலை கொண்டுள்ளது..!

The post கவியரசர் கண்ணதாசனின் குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை வெடித்தது..! appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-36-படம் எடுத்து பத்து காரை விற்ற கவிஞர் கண்ணதாசன் https://touringtalkies.co/kannadasan-chandrababu-kavalai-illaatha-manithan-movie-news/ Wed, 25 Nov 2020 11:31:11 +0000 https://touringtalkies.co/?p=10371 சந்திரபாபுவை படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்வதற்காக அவர் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசன்  பின் வாசல் வழியாக சந்திரபாபு  போய் விட்டார் என்று தெரிந்ததும்  தான் வாசலில் உட்கார்ந்திருப்பதால் தன்னைப் பார்க்க சங்கடப்பட்டுக் கொண்டு பின் வாசல் வழியாக ஸ்டுடியோ போய் விட்டார் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டார். பின்னர் படப்பிடிப்பு ஒழுங்காக நடைபெறுகிறதா என்று தெரிந்து கொள்ள  ஸ்டுடியோவிற்கு அவர்  தொடர்பு கொண்டபோது  சந்திரபாபுவிற்காகத்தான் எல்லோரும் காத்திருப்பதாகவும் அவர் இன்னமும் வரவில்லை என்றும் அவர்கள் […]

The post சினிமா வரலாறு-36-படம் எடுத்து பத்து காரை விற்ற கவிஞர் கண்ணதாசன் appeared first on Touring Talkies.

]]>
சந்திரபாபுவை படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்வதற்காக அவர் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசன்  பின் வாசல் வழியாக சந்திரபாபு  போய் விட்டார் என்று தெரிந்ததும்  தான் வாசலில் உட்கார்ந்திருப்பதால் தன்னைப் பார்க்க சங்கடப்பட்டுக் கொண்டு பின் வாசல் வழியாக ஸ்டுடியோ போய் விட்டார் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டார்.

பின்னர் படப்பிடிப்பு ஒழுங்காக நடைபெறுகிறதா என்று தெரிந்து கொள்ள  ஸ்டுடியோவிற்கு அவர்  தொடர்பு கொண்டபோது  சந்திரபாபுவிற்காகத்தான் எல்லோரும் காத்திருப்பதாகவும் அவர் இன்னமும் வரவில்லை என்றும் அவர்கள் சொன்னதைக் கேட்டவுடன், சிறிது நேரம் கவிஞருக்கு  பேச்சே வரவில்லை.

சந்திரபாபு படப்பிடிப்பிற்கு வராததைவிட அவர் வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கும்போது அவரிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் பின் வாசல் வழியாக வெளியேறியது அவர் மனதை மிகவும் பாதித்தது.

தனக்கு நேர்ந்த மிகப் பெரிய அவமானமாக அந்த சம்பவத்தைக் கருதினார் கண்ணதாசன். படம் என்ன ஆகுமோ என்ற பயமும் கடன்காரர்களுக்கு என்ன பதிலைச்  சொல்வது   என்ற கவலையும் அவரை சூழ்ந்து கொண்டது.

அங்கிருந்து ஸ்டுடியோவிற்குப் போன அவர் தனது துயரத்தை எல்லாம் நடிகவேள்’ எம்.ஆர்.ராதா அவர்களிடம் சொல்லி அழுதார். சந்திரபாபுவிற்காக அவர் வீட்டில் காத்திருந்ததைப் பற்றியும்  அவரிடம்  ஒரு வார்த்தைகூட சொல்லாமல் சந்திரபாபு பின் வாசல் வழியாக சென்றதைப்  பற்றியும் ‘எனது சுய சரிதம்’ என்ற புத்தகத்தில் அப்படியே பகிர்ந்து கொண்டிருக்கிறார் கண்ணதாசன்.

எந்த வீட்டிலும் போய்  நாற்காலியில் காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் எனக்கு வந்தது கிடையாது. மந்திரிகளில் முதன் மந்திரியாக இருந்த என் நண்பர் கருணாநிதியின் விட்டுக்கு மட்டும்தான் போவேன். இன்ன நேரத்தில் சந்திப்பதென்று நேரத்தை முன் கூட்டியே முடிவு செய்து கொண்டுதான் போவேன்.

சந்திரபாபு வீட்டில் இரண்டு மணி நேரம் காத்துக் கிடந்த பிறகு சினிமா நடிகர்களைப் பற்றி எனக்கு ஒரு கெட்ட அபிப்ராயமே ஏற்பட்டது. அளப்பரிய திறமை இருந்தாலும் ஆணவம் ஒரு மனிதனை அழித்துவிடும். 

சந்திரபாபு அளப்பரிய திறமையுடையவர் என்று சொல்ல முடியாது ஆனால் அவருக்கு எல்லையில்லா ஆணவம் இருந்தது. ஆணவத்தால் அழிந்து போனவர்கள் பல பேரை என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். ஆணவத்தால் தொழிலை அலட்சியப்படுத்தியவர்கள் பல பேர் இன்று சோற்றுக்கு அலைகிறார்கள்.

சுமார் இருபத்தி ஐந்தாண்டு காலமாக இந்த பட உலகில் சிலரை வளமாகவும் நிரந்தரமாகவும் ஆண்டவன் வைத்திருக்கிறான்.

தம்பி விஸ்வநாதன், மாமா கே.வி.மகாதேவன், டி.எம்.சவுந்திரராஜன், பி.சுசீலா, நான் ஆகியோர் எங்கள் தொழிலில் காட்டுகின்ற ஆர்வம், பயம், பணிவு ஆகியவைகள்தான் கால் நூற்றாண்டு காலமாக எங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

ஒரு பாட்டிற்கு இசையமைக்கும்போது தயாரிப்பாளருக்கோ, இயக்குநருக்கோ ஒரு மெட்டு பிடிக்கவில்லை என்றால் தம்பி விஸ்வநாதன்  பத்து மெட்டுக்கள் போடுவான். டைரக்டர்களுக்கு பிடித்தாலும் தனக்குப் பிடிக்கவில்லை என்றால் மீண்டும், மீண்டும் போட்டுக் கொண்டே இருப்பான்.

மாமா மகாதேவனும் அதே மாதிரிதான். நானும் மற்றவர்களுக்கு திருப்தி ஏற்படுகின்றவரை மாற்றி மாற்றி எழுதிக் கொண்டே இருப்பேன். சுசிலாவும், சவுந்திரராஜனும் பாட்டு நன்றாக அமையும்வரை அலுப்படையாமல் பாடல்கள் பாடுவார்கள்.

எங்களது வெற்றியின் ரகசியம் எங்கள் திறமையில் மட்டும் இல்லை. தொழிலில் உள்ள பொறுப்பு, பயம், ஒவ்வொரு பாட்டும் ரசிக்கப்பட வேண்டும் என்ற ஆசை. இந்தத் தொழில் நம்மை கைவிட்டு விடக்கூடாது என்ற கவலை ஆகிய எல்லாமே அதற்குக் காரணம்.

இவற்றை எல்லாம் நான் குறிப்பிடுவதற்குக் காரணம் தொழிலை தெய்வமாக மதித்து பொறுப்பாகச்  செய்கின்ற எவனையும் இந்தத் தொழில் கைவிடாது. ஆணவம் பிடித்து மற்றவர்களை அலட்சியப்படுத்தினால் ஒரு நாளைக்கு அவர்களுடைய படிக்கட்டிலேயே ஏறி ஐம்பது ரூபாய் யாசகம் கேட்க வேண்டி வரும்.

பண விஷயத்தில் நான் பிடிவாதம் பிடித்தது இல்லை, பேரம் பேசியதில்லை, ரேட்டை திடீர். திடீரென்று உயர்த்தியதில்லை.  கஷ்டப்பட்டு ஒருவர் படம் எடுத்தால் அவர் கொடுப்பதை வாங்கிக் கொள்வேன்.வெற்றிகரமான தயாரிப்பாளர்கள் அவர்களாகவே நான் கேட்பதை கொடுத்துவிடுவார்கள்.

அவர்களுக்கு ஒரு கஷ்டம் வந்தால் நான் இலவசமாகக்கூட ஒத்துழைப்பேன். அதனால்தான் எனக்குக் கஷ்டம் வரும்போது எல்லோருமே உதவி செய்கிறார்கள்.

ஆணவக்காரர்கள் மட்டுமே தொழிலின்றி அலைகிறார்கள், அவர்களில் சந்திரபாபுவும் ஒருவர்  என்பதைச் சொல்ல  வேண்டியது எனது கடமையாகிறது” என்று அந்த  நூலிலே குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்

தனது வாழ்நாளில் கவிஞர் யாரையும் அந்த அளவு கடுமையாக விமர்சித்ததே இல்லை. ‘கவலை இல்லாத மனிதன்’ படத்திலே ‘பிறக்கும் போதும் அழுகின்றாய்’ பாடல் உட்பட மிகச் சிறந்த பாடல்கள் பெற்றிருந்தன. ஆனால், அந்தப் பாடல்களாலும்  படத்தைக் காப்பாற்ற முடியவில்லை. 

முன்பின் தொடர்பில்லாத குழப்பமான கதை, கதாநாயகனாக நடித்த சந்திரபாபுவின் அலட்சியப் போக்கு ஆகிய எல்லாமாகச் சேர்ந்து அந்தப் படத்தை மிகப் பெரிய தோல்விப் படமாக ஆக்கியது. அந்தப் படம் வெளியானபோது ஐந்து லட்சத்து தொண்ணூறு ரூபாய் கடனாளியாகி இருந்தார் கண்ணதாசன்.

அப்போது கண்ணதாசனின் பட நிறுவனத்தில் பதினோரு கார்கள் இருந்தன. அத்தனை கார்களிலும் ஒரே ஒரு பியட் காரை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற கார்கள் அனைத்தையும் அந்த கார்களின் மீது யார் யார் கடன் கொடுத்திருந்தார்களோ  அவர்களது வீட்டில் கொண்டுபோய் விடச் சொன்னார் கண்ணதாசன்.

அடுத்து கம்பெனி இருந்த அலுவலகத்தை  காலி செய்தார். அங்கிருந்த சாமான்கள அனைத்தையும் அள்ளிக் கொண்டு போய் வீட்டிலே போட சொன்னார்.

அந்தப் படத்திற்குப் பிறகு பாடல்கள் எழுதி அவர் சம்பாதித்த பணம் முழுவதும் கடன்காரர்களுக்கு வட்டித் தொகை செலுத்தவே சரியாக இருந்தது.

சேலம் மாடர்ன் தியேட்டர்சில் கண்ணதாசன் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சேலம் டவுனில் டாக்டர் செரியன் என்று ஒரு  பல் டாக்டர் இருந்தார். அந்த டாக்டருக்கு கைரேகை பார்த்து பலன் சொல்வது என்றால் மிகவும் இஷ்டம்.

அவருடன் ஒரு முறை கண்ணதாசன் பேசிக் கொண்டிருந்தபோது கண்ணதாசனின் கையைப் பார்த்துவிட்டு “இந்தக் கை லட்சம் லட்சமாக சம்பாதிக்கும். ஆனால் பணம் வருவதற்கு முன்பே கடன் வந்து விடும். ஐம்பது வயதிற்கு மேல் ஐம்பத்தி ஆறாவது வயதிற்குள் நீ சந்நியாசியாகவோ ஏகாந்தத்தை நாடுகிறவனாகவோ ஆகி விடுவாய் என்று அவரிடம் கூறினாராம்.

‘கவலை இல்லாத மனிதன்’ பட தோல்விக்கு பிறகு ஏற்பட்ட சூழ்நிலையைப் பார்த்தவுடன் கண்ணதாசனுக்கு அவர் நினைவுதான் வந்தது

கவலை இல்லாத மனிதன்’ என்று படத்திற்கு பெயர் வைத்ததினாலேயே கடவுள் என்னைத் தண்டித்து விட்டார். மனிதன் எப்படி கவலை இல்லாமல் இருக்க முடியும் என்று கடவுள் என்னிடம் சவால் விட்டதாகவே நான் உணர்ந்தேன் என்று ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தை எடுத்த அனுபவம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் கண்ணதாசன்.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-36-படம் எடுத்து பத்து காரை விற்ற கவிஞர் கண்ணதாசன் appeared first on Touring Talkies.

]]>
“ஜென்டில்மேன்’ படம் கவியரசர் கண்ணதாசனின் ‘கருப்புப் பணம்’ படத்தில் இருந்து உருவானதுதான்…” https://touringtalkies.co/gentleman-movie-story-inspiration-from-karuppu-panam-movie/ Fri, 23 Oct 2020 07:10:14 +0000 https://touringtalkies.co/?p=9150 “ஜென்டில்மேன்’ திரைப்படத்தின் கதை, கவியரசர் கண்ணதான் தயாரித்து, நடித்த ‘கருப்புப் பணம்’ படத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான்…” என்று கவியரசர் கண்ணதாசனின் மகனும், பாடலாசிரியர், வசனகர்த்தாவுமான கண்மணி சுப்பு கூறியுள்ளார். 1993-ம் ஆண்டு அர்ஜூன், மதுபாலா நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் ‘ஜென்டில்மேன்’. நன்கு படித்திருந்தும் இட ஒதுக்கீடு காரணமாக கல்லூரியில் படிக்க வாய்ப்பில்லாமல் போனதால் கோபமடையும் நாயகன் அர்ஜூன், முறைகேடாக பணம் சம்பாதித்து பதுக்கி வைத்திருக்கும் பணக்காரர்களிடத்தில் கொள்ளையடித்து அதனை ஏழைகளிடம் கொடுப்பதுதான் இந்த ‘ஜென்டில்மேன்’ […]

The post “ஜென்டில்மேன்’ படம் கவியரசர் கண்ணதாசனின் ‘கருப்புப் பணம்’ படத்தில் இருந்து உருவானதுதான்…” appeared first on Touring Talkies.

]]>

“ஜென்டில்மேன்’ திரைப்படத்தின் கதை, கவியரசர் கண்ணதான் தயாரித்து, நடித்த ‘கருப்புப் பணம்’ படத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான்…” என்று கவியரசர் கண்ணதாசனின் மகனும், பாடலாசிரியர், வசனகர்த்தாவுமான கண்மணி சுப்பு கூறியுள்ளார்.

1993-ம் ஆண்டு அர்ஜூன், மதுபாலா நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் ஜென்டில்மேன்’. நன்கு படித்திருந்தும் இட ஒதுக்கீடு காரணமாக கல்லூரியில் படிக்க வாய்ப்பில்லாமல் போனதால் கோபமடையும் நாயகன் அர்ஜூன், முறைகேடாக பணம் சம்பாதித்து பதுக்கி வைத்திருக்கும் பணக்காரர்களிடத்தில் கொள்ளையடித்து அதனை ஏழைகளிடம் கொடுப்பதுதான் இந்த ‘ஜென்டில்மேன்’ படத்தின் கதை.

இந்தக் கதையில் ‘பணக்காரர்களிடத்தில் கொள்ளையடித்து ஏழைகளுக்கு வழங்குவது’ என்ற ‘ஜென்டில்மேன்’ படத்தின் மையக் கருத்து கவியரசு கண்ணதாசனின் ‘கருப்புப் பணம்’ படத்தில் இருந்து கையாளப்பட்டிருக்கிறது என்று கவியரசர் கண்ணதாசனின் மகனான கண்மணி சுப்பு கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்ட கண்மணி சுப்பு, “ஜனநாயக சோஷலிஸ சிந்தாத்தை மக்களுக்குச் சொல்வதற்காக ஒரு படத்தை உருவாக்க நினைத்தார் அப்பா. அதுதான் இந்தக் கருப்புப் பணம்’ திரைப்படம். இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க யாரும் முன் வர மாட்டார்கள் என்பது தெரிந்ததால் அப்பாவே நாயகனாக நடித்தார்.

‘ஜனநாயக சோஷலிஸம்’ என்பது ‘பணம் எந்த இடத்திலும் தேங்கக் கூடாது. பதுக்கல் கூடாது. பணம் எல்லா சமூகத்தினருக்கும் கிடைக்க வேண்டும்’ என்பதுதான். அப்போது அப்பா இருந்த காலக்கட்டத்தில் கருப்பு சந்தை, கருப்புப் பணமெல்லாம் இருந்தது. அதை உணர்த்துவதற்காகத்தான் அப்பா அந்தக் ‘கருப்புப் பணம்’ படத்தை எடுத்தார்.

அப்படியெடுக்கும்போது அப்பட்டமா அந்த சிந்தாத்தத்தை சொல்ல முடியாது அல்லவா..? அதுக்காக அவருக்கு ஒரு கதை தேவைப்பட்டது. அவரே நாயகனா நடிச்சதால, நான் சின்ன வயசுல நிறைய படிக்கணும்ன்னு நினைச்சேன். ஆனால் பணமில்லாததால் என்னால் படிக்க முடியலை. அதனால் யார், யாரெல்லாம் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைச்சிருந்தாங்களோ.. அவங்ககிட்டேயெல்லாம் பணத்தைக் கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு படிப்புக்காக கொடுத்தேன். பள்ளிக் கூடம் கட்டினேன். கல்லூரிகளை கட்டினேன். இதெல்லாம் தப்பா…?’ன்னு படத்தின் கிளைமாக்ஸ்ல கேட்பார்.

சுருக்கமா சொல்லணும்ன்னா இந்தப் படத்தின் மையக் கரு என்னவென்றால், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களிடத்தில் பணத்தைக் கொள்ளையடித்து ஏழை, எளிய மக்களிடத்தில் அவர்கள் படிப்பதற்காகக் கொடுப்பது. இதைத்தான் ‘ஜென்டில்மேன்’ படத்தில் வைத்திருக்கிறார்கள். அப்படியே வைத்தால் சரி வராது என்பதால்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி.. இட ஒதுக்கீடு என்று சிலவற்றையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் எங்க அப்பாவின் கருப்புப் பணம்’ படத்தின் இன்ஸ்பிரேஷன்தான் ஜென்டில்மேன்’ படம். இதில் எனக்கு சந்தேகமில்லை. அப்போதே திரையுலகில் பல பேர் என்னிடம் இதைப் பற்றிச் சொன்னார்கள். ‘ஜென்டில்மேன்’ படத்தின் கதை, உங்க அப்பாவோட கருப்புப் பணம்’ படத்தின் கதைதான் என்றார்கள். ஆனால், கோர்ட், வழக்கு என்று போக எனக்கு விருப்பமில்லை. அதனால்விட்டுவிட்டேன்..” என்றார்.

The post “ஜென்டில்மேன்’ படம் கவியரசர் கண்ணதாசனின் ‘கருப்புப் பணம்’ படத்தில் இருந்து உருவானதுதான்…” appeared first on Touring Talkies.

]]>