Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
kalaga thalaivan movie – Touring Talkies https://touringtalkies.co Tue, 22 Nov 2022 18:23:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png kalaga thalaivan movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 கலகத் தலைவன் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/kalaga-thalaivan-movie-review-2/ Tue, 22 Nov 2022 18:21:45 +0000 https://touringtalkies.co/?p=27455 இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் நாயகன் உதயநிதி ஸ்டாலினே தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க நிதி  அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், ஆரவ், அங்கனா ராய், அனுபமா குமார், ஜீவா ரவி, விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அரோல் கரோலி பாடல்களுக்கு இசையமைத்திருக்க, ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்திருக்கிறார். K.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் மகிழ் திருமேனி எழுதி, இயக்கியிருக்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் ரகசியங்களை […]

The post கலகத் தலைவன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் நாயகன் உதயநிதி ஸ்டாலினே தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க நிதி  அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், ஆரவ், அங்கனா ராய், அனுபமா குமார், ஜீவா ரவி, விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அரோல் கரோலி பாடல்களுக்கு இசையமைத்திருக்க, ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்திருக்கிறார். K.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் மகிழ் திருமேனி எழுதி, இயக்கியிருக்கிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் ஒரு கலகக்காரனின் கதையே இந்தக் ‘கலகத் தலைவன்’ படத்தின் கதை.

டிரக் தயாரிப்பு நிறுவனமான ‘வஜ்ரா’ இந்தியாவிலேயே மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமாகும். அந்நிறுவனம் தற்போது புதிய மாடல் டிரக் ஒன்றைத் தயாரித்துள்ளதாக சொல்லி அந்த வண்டியை அறிமுகப்படுத்துகிறது.

இப்போதுவரையிலும் மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து வகையான டிரெக்குகளைவிடவும் இந்தப் புதிய டிரெக் அதிக மைலேஜ் பிடிக்கும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த டிரெக்கில் இருந்து வெளியாகும் புகை, சுற்றுச் சூழல் துறை அனுமதித்துள்ள அளவைக் காட்டியும் கூடுதலாக இருப்பதைத் தந்திரமாக மறைக்கிறது வஜ்ரா நிறுவனம். ஆனால் இந்த ரகசியத்தை சிலர் வெளியில் அம்பலப்படுத்தி விடுகின்றனர். இதனால் ஷேர் மார்க்கெட்டில் இந்நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்திக்கிறது.

3 பேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் கசிந்தது எப்படி என்பதைக் கண்டறிய வஜ்ரா நிறுவனத்தின் முதலாளி, மிகப் பெரிய மாபியா கும்பலின் தலைவான ஆரவ்வை வேலைக்கு அமர்த்துகிறார். ஆரவ்வும் இந்த ரகசியம் தெரிந்தவர்களை மிகக் கொடூரமாக சித்ரவதை செய்து யாரிடமிருந்து விஷயம் லீக்கானது என்பது பற்றி விசாரிக்கத் துவங்குகிறார்.

இந்த விசாரணை என்ன ஆனது..? எதற்காக இந்த வஜ்ரா நிறுவனத்தின் ரகசியங்கள் வெளியில் கசிந்தன..? உண்மையில் இதன் பின்னணியில் இருந்தது யார்..? என்பதெல்லாம்தான் இந்தக் கலகத் தலைவன்’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை..!

படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களிடமும் சிறப்பான நடிப்பினை வரவழைத்துள்ளார், இயக்குநர் மகிழ் திருமேனி. உதயநிதி ஸ்டாலின் இதுவரையிலும் தான் நடித்த படங்களில் இருந்து வித்தியாசமான ஒரு நடிப்பினை இந்தப் படத்தில் காண்பித்திருக்கிறார். அலட்டிக் கொள்ளாத தன்மையுடன், அமைதியின் திருவுருமாய் காட்சியளித்தபடியே.. கார்பரேட் நிறுவனங்களை தலைகீழாகப் புரட்டிப் போடும் தனது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பை மென்மையாகக் காண்பித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில்கூட சைலண்ட் காட்டியே ஸ்கோர் செய்திருக்கிறார்.

இப்படத்தில் பெரிதும் ஆச்சர்யப்படுத்துவது நடிகர் ஆரவ்வின் வில்லத்தனமான நடிப்புதான். வில்லன் அவதாரத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது முக பாவங்களும், உடல் மொழியும் தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு திறமையான வில்லன் என்றே காட்டுகிறது.

நாயகி நிதி அகர்வால் ச்சும்மா ஸ்கிரீனில் வந்து நின்றாலே அது கவிதையாகும். அந்த அளவுக்கு இயற்கையான அழகைத் தன் வசப்படுத்தியுள்ளார். காதல் காட்சிகளிலும், எமோஷ்னல் காட்சிகளிலும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். இவருக்கு இருக்கும் அழகுக்கு இந்நேரம் தொடர்ந்து 5 படங்களிலாவது நடித்திருக்க வேண்டும். நடிக்காதது ஏன் என்று தெரியவில்லை.

கலையரசனுக்கு நடிப்பினைக் காட்ட பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் கதையின் சஸ்பென்ஸையும், படத்தின் தன்மையையும் புரிந்து கொள்ள கலையின் கர்ப்பிணி மனைவியாக நடித்தவர் பெரிதும் உதவியிருக்கிறார். மேலும் அனுபமா குமார், ஜீவா ரவி, விக்னேஷ் காந்த், மற்றும் அங்கனா ராயின் வில்லித்தன நடிப்பு என்று பலரும் இந்தப் படத்தில் உணர்ந்து நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு, படத் தொகுப்பு உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. ஒளிப்பதிவு முதல் ஷாட்டில் இருந்து கடைசிவரையிலும் ஒன்று போலவே இருப்பது இந்தப் படத்தின் ஸ்பெஷலாட்டி என்றே சொல்லலாம். திருச்சி ரெயில் நிலையத்தில் நடைபெறும் காட்சிகளை மிக அழகாக படமாக்கியிருக்கிறார் கேமராமேன். அந்த ரயில்வே ஸ்டேசன் சீக்வென்ஸில் இருக்கும் சஸ்பென்ஸ், திரில்லர் பீலிங்கை கடைசிவரையிலும் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதேபோல் கிளைமாக்ஸ் சண்டை காட்சியையும் ஒரு பேய்ப் படத்திற்குண்டான திகில் உணர்வோடு படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பின்னணி இசையில் ஒரு ராஜாங்கமே அமைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. பதற்றத்தை ஏற்படுத்தும்வகையிலும் படம் நெடுகிலும் ரசிகனை ஒரு டென்ஷன் மோடிலேயே வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். அடிப்படையில் கெமிக்கல் எஞ்சினியரான நாயகன் உதயநிதி, க்ளைமாக்ஸ் ஃபைட்டில் தனது புத்தி சாதூர்யத்தால் கெமிக்கல் ரியாக்சன்களை வைத்து வில்லன் கோஷ்டியை வீழ்த்துவது எதிர்பாராதது. அதே சமயம் ரசனைக்குரியது. அனைத்து சண்டைக் காட்சிகளையுமே சிறப்பாக வடிவமைத்த சண்டைப் பயிற்சியாளருக்கு  நமது பாராட்டுக்கள்.

எத்தகைய கதையாக இருந்தாலும் அதை நேர்த்தியான விதத்தில் திரைக்கதையாக்கினால் படம் மாஸாகிவிடும். இந்தத் திரைக்கதையைக் கட்டும் வித்தை இயக்குநர் மகிழ் திருமேனிக்கு நன்றாகவே தெரியும் போலிருக்கிறது. இந்தப் படத்திலும் திரைக்கதையிலும், இயக்கத்திலும் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

முதலில் மெதுவாக நகரத் துவங்கும் படம், பின்னர் நேரம் செல்லச் செல்ல வேகமெடுத்து ரன் பாஸ்ட்டில் செல்கிறது. மூலக் கதையை விட்டு சிறிதும் விலகிச் செல்லாத நேர்த்தியான திரைக்கதை, படத்திற்கு மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுவதால் நிகழும் பொருளாதார சீர்கேடுகளை இந்தப் படத்தில் வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர். அதோடு அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுக்கும் டொனேஷன். அதன் மூலம் அரசை  அவர்கள் எப்படி கட்டுப்படுத்துகிறார்கள் என்ற உண்மையையும் சொல்லியிருக்கிறார்.

படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் முடிந்தவரையிலும் லாஜிக் பார்க்க முடியாமல் வைத்திருப்பதால் காட்சிகளை ரசிக்க முடிந்திருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் போலீஸே இல்லாத சூழலை காண்பித்திருப்பது படம் முடிந்த பின்புதான் நமக்கே உரைக்கிறது. மிகக் குறைவான குறைகள் மட்டுமே படத்தில் இருப்பதால், நிச்சயமாக இந்தப் படம் உங்களை ஏமாற்றாது.

அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

RATING : 4.5 / 5

The post கலகத் தலைவன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
கலகத் தலைவன்- சினிமா விமர்சனம் https://touringtalkies.co/kalaga-thalaivan-movie-review/ Sat, 19 Nov 2022 01:05:35 +0000 https://touringtalkies.co/?p=27265 கார்ப்பரேட் ரகசியங்களை வெளியில் விற்கும் ஒரு கலகக்காரனின் கதையே இந்தக் ‘கலகத் தலைவன்’ படம். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனி திரைக்கதை இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்த ‘கலகத் தலைவன்’ படம் எப்படி இருக்கிறது?.. வஜ்ரா என்றொரு லாரி உற்பத்தி செய்யும் கம்பெனியின் சென்னை ப்ராஞ்சில் வேலை செய்கிறார் உதய்நிதி. மற்றவர்களுக்கு உதவும் சுபாவம் கொண்ட உதயநிதிக்கு, நிதி அகர்வாலின் நட்பு கிடைக்கிறது. அந்த நட்பு காதலாக மாறும் தருணம்வரை செல்கிறது. இன்னொரு புறம் […]

The post கலகத் தலைவன்- சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
கார்ப்பரேட் ரகசியங்களை வெளியில் விற்கும் ஒரு கலகக்காரனின் கதையே இந்தக் ‘கலகத் தலைவன்’ படம்.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனி திரைக்கதை இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்த ‘கலகத் தலைவன்’ படம் எப்படி இருக்கிறது?..

வஜ்ரா என்றொரு லாரி உற்பத்தி செய்யும் கம்பெனியின் சென்னை ப்ராஞ்சில் வேலை செய்கிறார் உதய்நிதி. மற்றவர்களுக்கு உதவும் சுபாவம் கொண்ட உதயநிதிக்கு, நிதி அகர்வாலின் நட்பு கிடைக்கிறது. அந்த நட்பு காதலாக மாறும் தருணம்வரை செல்கிறது.

இன்னொரு புறம் வஜ்ரா கம்பெனியின் பல சீக்ரெட் விசயங்களை சிலர் வெளியில் போட்டி கம்பெனிக்கு விற்கிறார்கள் என்ற விசயம் வஜ்ரா மேனேஜ்மெண்ட்க்கு தெரிய வருகிறது. அவர்கள் மெகா வில்லன் ஆரவ்விடம் கம்பெனி ரகசியங்களை திருடுபவர்களைப் பிடிக்கச் சொல்கிறார்கள்.

ஆரவ் தனது கொடூரமான விசாரணைகளை நடத்துகிறார். அந்தக் கம்பெனியில் வேலை செய்யும் பலரையும் ரத்தம் தெறிக்க தெறிக்க விசாரிக்கிறார். அவரின் விசாரணை வளையத்திற்குள் கலையரசன் மாட்டுகிறார். அடுத்ததாக அதில் மாட்ட இருப்பவர் உதய்நிதி ஸ்டாலின் என்ற சூழல் வருகிறது. அச்சூழலை உதய்ணா எப்படிச் சமாளித்தார்? வஜ்ரா கம்பெனியின் ரகசியங்கள் யாவை? அதை வெளி கம்பெனிக்கு விற்க வேண்டிய காரணம் என்ன? என பல கேள்விகளுக்குப் படம் பதிலளிக்கிறது

அலட்டிக் கொள்ளாத அமைதியான நடிப்பால் உதயநிதி ஸ்டாலின் ஈர்க்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில்கூட சைலண்ட் காட்டியே ஸ்கோர் செய்கிறார். இப்படத்தில் ஆச்சர்யப்படுத்தியது நடிகர் ஆரவ்வின் நடிப்புதான். வில்லன் அவதாரத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது முகபாவங்களும் உடல்மொழியும் நல்ல வில்லனுக்கான சமிக்‌ஞயை காட்டுகிறது. வாழ்த்துகள் ராசா. அடுத்ததாக நிதி அகர்வால். காதல் காட்சிகள், எமோஷ்னல் காட்சிகள் இரண்டிலுமே நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். கலையரசனுக்கு பெரிதாக வெளி இல்லாவிட்டாலும் கிடைத்திருக்கும் சிறு வாய்ப்பையும் சரியாகவே பயன்படுத்தியுள்ளார்

இப்படத்திற்கு இசை அமைத்து ஒரு ரீ.என்ட்ரி கொடுத்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. பாடல்களும் கேட்கும் வகையில் இருக்கிறது. முதலில் ஒரு ரீலுக்கு மட்டும் நிறைய வாசித்துத் தள்ளிவிட்டார். காதெங்கும் ஒரே சவுண்ட்ஸ். ஒளிப்பதிவில் இப்படம் கூடுதல் அழகோடு மிளிர்கிறது. திருச்சி ரெயில்நிலைய காட்சிகளை மிக அழகாக எடுத்திருக்கிறார் கேமராமேன். படத்தில் அந்த ரயில்வே ஸ்டேசன் சீக்வென்ஸ் தீப்பொறி பறக்கும் திக் திக் நிமிடங்கள். அந்த சீக்வென்ஸ் மற்ற எல்லாவற்றையும் விட நன்றாக வொர்க்காகியுள்ளது. எடிட்டர் பின் பாதியில் கொஞ்சம் கத்தரியைப் போட்டிருக்கலாம்

வந்த கதையோ,நொந்த கதையோ எந்த கதையாக இருந்தாலும் அதை நேர்த்தியான திரைக்கதையாக்கினால் படம் பக்கா மெட்டிரியல் ஆகிவிடும். அந்தத் திரைக்கதை வித்தை இயக்குநர் மகிழ் திருமேனிக்கு நன்றாக கைவந்துள்ளது. காதல் காட்சிகள் மட்டும் படத்தின் வேகத்திற்கு கொஞ்சம் தடை போடுகிறது. அவற்றை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாம்.

ஆனாலும் இந்த ‘கலகத் தலைவன்’ உலகப் லிட்டிக்ஸ் பேசி அழகுத் தலைவனாக மிளிர்கிறான். மிகக் குறைவான குறைகளே படத்தில் இருப்பதால் நிச்சயமாக இந்தப் படம் உங்களை ஏமாற்றாது.

RATING : 4 / 5

The post கலகத் தலைவன்- சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
‘கலகத் தலைவன்’ படம் பார்த்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் https://touringtalkies.co/chief-minister-m-k-stalin-greeted-the-movie-kalagath-thalaivan/ Thu, 17 Nov 2022 18:04:59 +0000 https://touringtalkies.co/?p=27212 ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’. இப்படம் உலகமெங்கும் நாளை நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘கலகத் தலைவன்’ திரைப்படத்தை படக் குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார். படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக  ‘கலகத் தலைவன்’ படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி […]

The post ‘கலகத் தலைவன்’ படம் பார்த்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Touring Talkies.

]]>
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’. இப்படம் உலகமெங்கும் நாளை நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘கலகத் தலைவன்’ திரைப்படத்தை படக் குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார்.

படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக  ‘கலகத் தலைவன்’ படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக் குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நாளை நவம்பர் 18-ம் முதல் உலகமெங்குமுள்ள ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது ‘கலகத் தலைவன்’.

The post ‘கலகத் தலைவன்’ படம் பார்த்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Touring Talkies.

]]>