Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
jallikattu – Touring Talkies https://touringtalkies.co Sat, 20 May 2023 06:45:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png jallikattu – Touring Talkies https://touringtalkies.co 32 32 “போராளிகளுக்கு வாழ்த்துகள்!”: சூர்யா https://touringtalkies.co/congratulations-to-all-those-who-took-part-in-the-protest-against-jallikattu-ban-actor-surya/ Fri, 19 May 2023 06:44:52 +0000 https://touringtalkies.co/?p=32597 ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து தொடுக்கப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றுவந்தன. இந்நிலையில், ” ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை. ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசின் அவசர சட்டம் செல்லும்” என்று தீர்ப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, “ஜல்லிக்கட்டு நம் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்தது. இதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” […]

The post “போராளிகளுக்கு வாழ்த்துகள்!”: சூர்யா appeared first on Touring Talkies.

]]>
ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து தொடுக்கப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில், ” ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை. ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசின் அவசர சட்டம் செல்லும்” என்று தீர்ப்பு வெளியானது.

இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, “ஜல்லிக்கட்டு நம் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்தது. இதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post “போராளிகளுக்கு வாழ்த்துகள்!”: சூர்யா appeared first on Touring Talkies.

]]>
36 வருடங்களுக்கு முன்பே யூனிவர்ஸ் கொடுத்த சத்யராஜ்! https://touringtalkies.co/tamil-cinema-universe-movie-36-years-ago-sathyaraj-jallikattu/ Sun, 16 Apr 2023 01:00:20 +0000 https://touringtalkies.co/?p=31619 விக்ரம் படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய படமான கைதி படத்தை இணைத்து திரைக்கதை அமைத்திருந்தார். யூனிவர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பாணியிலான படங்களை ஹாலிவுட்டில் மட்டுமே பார்த்து ரசித்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விக்ரம் படம் புதுவித அனுபவத்தை கொடுத்தது என்றே சொல்லலாம். ஆனால் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த யூனிவர்ஸ் பாணி வந்துவிட்டது என ஒரு நிகழ்ச்சியில் சத்யராஜ் தெரிவித்து உள்ளார். சித்ரா ராமு, சித்ரா லட்சுமணன் தயாரிப்பில் மணிவண்ணன் […]

The post 36 வருடங்களுக்கு முன்பே யூனிவர்ஸ் கொடுத்த சத்யராஜ்! appeared first on Touring Talkies.

]]>
விக்ரம் படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய படமான கைதி படத்தை இணைத்து திரைக்கதை அமைத்திருந்தார்.

யூனிவர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பாணியிலான படங்களை ஹாலிவுட்டில் மட்டுமே பார்த்து ரசித்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விக்ரம் படம் புதுவித அனுபவத்தை கொடுத்தது என்றே சொல்லலாம்.

ஆனால் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த யூனிவர்ஸ் பாணி வந்துவிட்டது என ஒரு நிகழ்ச்சியில் சத்யராஜ் தெரிவித்து உள்ளார்.

சித்ரா ராமு, சித்ரா லட்சுமணன் தயாரிப்பில் மணிவண்ணன் இயக்கத்தில் சிவாஜி சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து 1987ல் வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு

இந்த படத்தில் சரத்யராஜ் மாறுவேடத்தில் சென்று வில்லன்களை கொலை செய்வார். இந்த மாறுவேடத்தில் அவர், இதற்கு முன்பு நடித்த படங்களின் கெட்டப்பில் தான் வருவார்.

இதைத்தான், “அப்போதே யுனிவர்ஸ் பாணியை செய்துவிட்டோம்” என சத்யராஜ் தெரிவித்தார்.

 

 

The post 36 வருடங்களுக்கு முன்பே யூனிவர்ஸ் கொடுத்த சத்யராஜ்! appeared first on Touring Talkies.

]]>
ரீ மேக் ஆகிறது சிவாஜியின் மாஸ் ஹிட் திரைப்படம்! https://touringtalkies.co/sivaji-ganesan-mass-hit-movie-jallikattu-remake-soon/ Tue, 07 Feb 2023 01:23:39 +0000 https://touringtalkies.co/?p=30374 1987 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சத்யராஜ், ராதா, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜல்லிக்கட்டு”.. சீதா லட்சுமி ஆர்ட் பிலிம்ஸ் சார்பாக இத்திரைப்படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்தார். படத்தில்,  சத்யராஜ் தனது அண்ணனை கொன்றவர்களை பழிவாங்கச் செல்லும்போது போலீஸாரிடம் மாட்டிக்கொள்வார். அந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வரும். நீதிபதி சிவாஜி கணேசன், சத்யராஜ் நிரபராதிதான் என உணர்ந்துகொள்வார். எனினும் சத்யராஜ்ஜிற்கு எதிராக பல சாட்சியங்கள் இருக்க, சத்யராஜ் தனது வீட்டுச்சிறையில் இருப்பார் என […]

The post ரீ மேக் ஆகிறது சிவாஜியின் மாஸ் ஹிட் திரைப்படம்! appeared first on Touring Talkies.

]]>
1987 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சத்யராஜ், ராதா, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜல்லிக்கட்டு”.. சீதா லட்சுமி ஆர்ட் பிலிம்ஸ் சார்பாக இத்திரைப்படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்தார்.

படத்தில்,  சத்யராஜ் தனது அண்ணனை கொன்றவர்களை பழிவாங்கச் செல்லும்போது போலீஸாரிடம் மாட்டிக்கொள்வார். அந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வரும். நீதிபதி சிவாஜி கணேசன், சத்யராஜ் நிரபராதிதான் என உணர்ந்துகொள்வார்.

எனினும் சத்யராஜ்ஜிற்கு எதிராக பல சாட்சியங்கள் இருக்க, சத்யராஜ் தனது வீட்டுச்சிறையில் இருப்பார் என சிவாஜி கணேசன் தீர்ப்பு வழங்கிவிடுவார். இதனை தொடர்ந்து சிவாஜி கணேசனும் சத்யராஜ்ஜும் மிக நெருக்கமாக பழகி வருவார்கள். பிறகு இருவரும் இணைந்து குற்றவாளிகளை எப்படி பழிவாங்கப்போகிறார்கள் என்பதே மீதி கதை.

இதில் சிவாஜி கணேசன், சத்யராஜ் ஆகியோர் மிகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். குறிப்பாக இத்திரைப்படம் சத்யராஜ்ஜிற்கு மிகப்பெரிய திருப்புமுனை  படமாக அமைந்தது.

இந்த நிலையில் “ஜல்லிக்கட்டு” திரைப்படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் “இத்திரைப்படத்தை மீண்டும் தயாரிக்க இருக்கிறேன். இதில் சிவாஜி கணேசன் நடித்த கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.  சத்யராஜ் நடித்த கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் தேர்வானதும் படப்பிடிப்பு துவங்கும்” என்று தெரிவித்து இருக்கிறார்.

The post ரீ மேக் ஆகிறது சிவாஜியின் மாஸ் ஹிட் திரைப்படம்! appeared first on Touring Talkies.

]]>
“கவிஞர் தாமரை வீடு முற்றுகை!”: ஜல்லிக்கட்டு அமைப்பு எச்சரிக்கை https://touringtalkies.co/poet-thamarai-house-siege-jallikattu-organization-warning/ Thu, 26 Jan 2023 04:20:01 +0000 https://touringtalkies.co/?p=29953 பிரபல பாடலாசிரியரான கவிஞர் தாமரை, “ஜல்லிக்கட்டு என்பது மனிதத்தன்மைக்கு எதிரானது. விலங்குகளை வதை செய்வது சரியல்ல. ஆகவே இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும்” என தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் தனது முகநூல் பக்கத்திலும் இதே கருத்தை பதிவிட்டு இருந்தார். “நாட்டு காளைமாடுகளை காக்க ஜல்லிக்கட்டு  தேவை, இது வீர விளையாட்டு, இதை ஒழிக்க வெளிநாட்டு சதி நடக்கிறது என்பதெல்லாம் வெத்து வாதம். தமிழ்ப் பண்பாட்டைக் காக்க வேண்டுமெனில், தமிழில் பேசிப் பழகுங்கள், அம்மா […]

The post “கவிஞர் தாமரை வீடு முற்றுகை!”: ஜல்லிக்கட்டு அமைப்பு எச்சரிக்கை appeared first on Touring Talkies.

]]>
பிரபல பாடலாசிரியரான கவிஞர் தாமரை, “ஜல்லிக்கட்டு என்பது மனிதத்தன்மைக்கு எதிரானது. விலங்குகளை வதை செய்வது சரியல்ல. ஆகவே இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும்” என தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில் தனது முகநூல் பக்கத்திலும் இதே கருத்தை பதிவிட்டு இருந்தார்.

“நாட்டு காளைமாடுகளை காக்க ஜல்லிக்கட்டு  தேவை, இது வீர விளையாட்டு, இதை ஒழிக்க வெளிநாட்டு சதி நடக்கிறது என்பதெல்லாம் வெத்து வாதம். தமிழ்ப் பண்பாட்டைக் காக்க வேண்டுமெனில், தமிழில் பேசிப் பழகுங்கள், அம்மா அப்பா என்று அழையுங்கள், குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுங்கள்…!  விலங்குளை வதைத்து உங்கள் தமிழ் உணர்வை காண்பிக்க வேண்டாம்” என தெரிவித்து இருந்தார்.

இதற்கு ல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம்  எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

“கவிஞர் தாமரை திரைப்பட பாடல் எழுதுவதில் தனது கருத்துக்களை சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளட்டும். தமிழனின் மரபுகளை மறக்கடிக்க, ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு வேறு கூட்டத்துடன் சேர்ந்து அவர் சதி செய்கிறாரா என்ற சந்தேகம் உள்ளது. கவிஞர் தாமரை தனது கருத்திற்கு மறுப்பு தெரிவித்து அறிவிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம். தமிழகம் முழுவதும் அவரது கொடும்பாவியை எரிப்போம்” என்று தெரிவித்துள்ளது.

The post “கவிஞர் தாமரை வீடு முற்றுகை!”: ஜல்லிக்கட்டு அமைப்பு எச்சரிக்கை appeared first on Touring Talkies.

]]>
“குதிரை பந்தயம் மிருக வதை இல்லையா..?” – காரி பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் கேள்வி https://touringtalkies.co/horse-racing-is-not-animal-cruelty-kari-film-producer-laxman-kumar-question/ Thu, 24 Nov 2022 09:36:32 +0000 https://touringtalkies.co/?p=27547 ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம்.. வாழ்வியல்.. ஆனால் இது பற்றி எதுவுமே தெரியாத சில விலங்குகள் நல ஆர்வலர்களும், வெளிநாட்டை சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் நாம் காளைகளை துன்புறுத்துவதாக கூறி அதை தடைசெய்யும் அளவுக்கு துணிந்தனர். கடந்த 2018-ல் தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்று கூடி போராடி மெரினா புரட்சி மூலம் மீண்டும் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். கடந்த சில வருடங்களாக எந்த பிரச்சினையுமின்றி ஜல்லிக்கட்டு நடந்து வரும் நிலையில், தற்போது பீட்டா […]

The post “குதிரை பந்தயம் மிருக வதை இல்லையா..?” – காரி பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் கேள்வி appeared first on Touring Talkies.

]]>
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம்.. வாழ்வியல்.. ஆனால் இது பற்றி எதுவுமே தெரியாத சில விலங்குகள் நல ஆர்வலர்களும், வெளிநாட்டை சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் நாம் காளைகளை துன்புறுத்துவதாக கூறி அதை தடைசெய்யும் அளவுக்கு துணிந்தனர்.

கடந்த 2018-ல் தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்று கூடி போராடி மெரினா புரட்சி மூலம் மீண்டும் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர்.

கடந்த சில வருடங்களாக எந்த பிரச்சினையுமின்றி ஜல்லிக்கட்டு நடந்து வரும் நிலையில், தற்போது பீட்டா உள்ளிட்ட சில அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி தொடர்ந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழக அரசு ஜல்லிக்கட்டு மீது தடை விதிக்க கூடாது என தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது.

இதன் தீர்ப்பு எந்த விதமாக வரும் என்கிற எதிர்பார்ப்பும் பரபரப்பும் தமிழகத்தில் உருவாகிவிட்டது. இந்தநிலையில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள காரி திரைப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளதால் ரசிகர்களிடம் இந்த படம் திடீர் கவனம் பெற்றுள்ளது.

அறிமுக இயக்குநர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். சர்தார் என்கிற வெற்றி படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். வரும் நவம்பர் 25-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.

ஜல்லிக்கட்டு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் துவங்கியுள்ள நிலையில், இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டு எந்தவிதமாக இடம் பெற்றுள்ளது மற்றும் அது எப்படி நமது வாழ்வியலுடன் கலந்துள்ளது என்பது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் சசிகுமார், இயக்குநர் ஹேமந்த், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், நாயகி பார்வதி அருண் ஆகியோர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இயக்குநர் ஹேமந்த் பேசும்போது, “படத்தில் ஜல்லிக்கட்டு ஒரு முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. அதேசமயம் இதில் மூன்று வர்க்கத்தை சேர்ந்தவர்களின் பிரச்சனைகளும் அவர்களின் வாழ்வியலும், அவற்றை ஜல்லிக்கட்டு மையப்புள்ளியாக இருந்து எப்படி இணைக்கிறது என்பதையும் பற்றி கூறியுள்ளோம்.

இந்தப் படத்தில் 18 வகையான காளைகள், அதேபோல 18 வகையான வீரர்கள் என ஒரு நிஜ ஜல்லிக்கட்டையே நடத்தியுள்ளோம். அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்த விதிமுறைகளை கடைபிடித்து மிகுந்த சிரமத்திற்கு இடையே அந்த காட்சிகளை படமாக்கினோம். நிச்சயமாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைப்பதாக இருக்கும்.

இந்த படத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வசனங்கள் இடம் பெற்றுள்ளதே தவிர, யாருக்கும் எதிரான வசனங்கள் எதுவும் இல்லை. இந்த விஷயத்தை ஆர்ப்பாட்டமாக சொல்லாமல் கதைக்கு எது தேவையோ அதை மட்டும் கூறியிருக்கிறோம்.

கிராமத்தில் இன்றும் சில பிரச்சினைகளுக்கு பாரம்பரிய முறையில் தீர்வு காணவே விரும்புகிறார்கள். அதற்கு ஒரு வழிமுறையாக ஜல்லிக்கட்டும் இருக்கிறது என்பதை இந்த படத்தில் கூறியுள்ளோம். ஊர் மக்களின் நம்பிக்கை ஜல்லிக்கட்டு, திருவிழா இவற்றை சார்ந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நாம் என்ன செய்கிறோம், ஜல்லிக்கட்டு நமக்கு என்ன செய்கிறது என்பதை என்னுடைய பார்வையில் நான் கூறியுள்ளேன்

இதில் சசிகுமார் குதிரைப் பந்தய ஜாக்கியாகவும், ஆடுகளம் நரேன் குதிரைப் பந்தய பயிற்சியாளராகவும் நடித்துள்ளனர். குறிப்பாக குதிரை பந்தயத்திற்கும் ஜல்லிக்கட்டுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.

அப்படிப்பட்ட ஒரு நாயகன் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும்போது குதிரை பந்தயத்திற்காக தான் கற்ற நுணுக்கங்களை வைத்து ஜல்லிக்கட்டை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை அழகாக காட்டியுள்ளோம்.” என்றார்.

நாயகன் சசிகுமார் பேசும்போது, “ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இது பற்றி நாம் விரிவாக பேசமுடியாது. தற்போது ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் நம் தமிழக அரசு சரியான முறையில் மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எப்படியும் நமக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்ல, ஜல்லிக்கட்டை யாராலும் தடுக்க முடியாது. இந்த படம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான படம்.

மாடுகளில் இப்போதைக்கு எனக்கு பிடித்தது காரி காளை மாடுதான். அதேசமயம் படப்பிடிப்பின்போது எந்த ஜல்லிக்கட்டு காளையுடனும் நாம் நெருங்கி பழக முடியாது. காரணம் ஜல்லிக்கட்டு நடக்கும்போது மாடு நமக்கு எதிராக இருக்கும். அது எந்தப் பக்கம் போகும், நம் மீது பாயுமா என்பதெல்லாம் அந்த நொடியில்கூட கணிக்க முடியாது. சில மாடுகள் நம்மைத் தாண்டி சென்றுவிட்டு மீண்டும் தாக்குவது போல் திரும்பி வந்ததும் உண்டு..  அதேசமயம் முறைப்படி அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு காட்சிகளை படமாக்கியதால் இந்த படத்திற்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை.” என்று கூறினார்.

தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது, “சில அமைப்புகள், திரையுலகை சேர்ந்த சிலர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது அவர்களது தனிப்பட்ட கருத்தாக இருக்குமே தவிர, ஒட்டு மொத்த திரையுலகின் கருத்து அல்ல..

ஜல்லிக்கட்டு என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை. ஜல்லிக்கட்டை யார் எதிர்த்தாலும் அவற்றை உயிராக நினைக்கும் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். இந்த படத்தை நாங்கள் எடுத்து இருப்பதே அந்த நம்பிக்கையை ஊர்ஜிதப்படுத்த வேண்டும் அதை விட்டுவிடக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கவேண்டும் என்றுதான். எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும். அதை இந்த படம் மூலம் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளோம்.

ஜல்லிக்கட்டு மட்டும்தான் மிருக வதையா? குதிரை பந்தயத்தில் அது இல்லையா? அதற்கு மட்டும் தடை விதிக்காமல் ஏன் ஜல்லிக்கட்டை மட்டுமே குறி வைக்கிறார்கள் என்றால், குதிரைப் பந்தயம் பணக்காரர்களின் விளையாட்டு.. ஜல்லிக்கட்டு ஏழைகளின் விளையாட்டு.. அவ்வளவுதான் இதில் உள்ள அரசியல்…” என்றார்.

The post “குதிரை பந்தயம் மிருக வதை இல்லையா..?” – காரி பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் கேள்வி appeared first on Touring Talkies.

]]>