Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
jallikattu movie – Touring Talkies https://touringtalkies.co Wed, 18 Jan 2023 17:48:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png jallikattu movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘ஜல்லிக்கட்டால் விலங்குகள் துண்புறுத்தப்படுகிறாது – சாக்‌ஷி அகர்வால்! https://touringtalkies.co/jallikattu-and-animal-suruilti-sakshi-agarwal/ Mon, 16 Jan 2023 17:45:00 +0000 https://touringtalkies.co/?p=29611 ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது நமது பாரம்பரிமான அடையாளத்தின் சின்னமாக இருந்த இந்தாலும்  விலங்குகள் சித்ரவதைக்கு அழாக்கப்படுவதை நாம் கவனிக்க வேண்டும். மாடுகளை விளையாட்டு என்ற பெயரில் துண்புருத்துதல் தடுக்கப்பட வேண்டும் என சாக்‌ஷி அகர்வால் கூறியுள்ள்ளார். பொங்கல் பண்டிகையில்  புத்தாடை உடுத்தி, பொங்கல் வைத்து, வாழ்த்துகளை பறிமாறி வருகிறோம். ஏற்றத்தாழ்வு பாகுபாடு இல்லாமல் சமநிலையுடன் எல்லோரும் கொண்டாடும் பண்டிகையாக பொங்கள் இருக்கிறது. நடிகை சாக்‌ஷி அகர்வாலிடம் பொங்கள் பற்றி கேட்ட போது எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை […]

The post ‘ஜல்லிக்கட்டால் விலங்குகள் துண்புறுத்தப்படுகிறாது – சாக்‌ஷி அகர்வால்! appeared first on Touring Talkies.

]]>

ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது நமது பாரம்பரிமான அடையாளத்தின் சின்னமாக இருந்த இந்தாலும்  விலங்குகள் சித்ரவதைக்கு அழாக்கப்படுவதை நாம் கவனிக்க வேண்டும். மாடுகளை விளையாட்டு என்ற பெயரில் துண்புருத்துதல் தடுக்கப்பட வேண்டும் என சாக்‌ஷி அகர்வால் கூறியுள்ள்ளார்.

பொங்கல் பண்டிகையில்  புத்தாடை உடுத்தி, பொங்கல் வைத்து, வாழ்த்துகளை பறிமாறி வருகிறோம். ஏற்றத்தாழ்வு பாகுபாடு இல்லாமல் சமநிலையுடன் எல்லோரும் கொண்டாடும் பண்டிகையாக பொங்கள் இருக்கிறது.

நடிகை சாக்‌ஷி அகர்வாலிடம் பொங்கள் பற்றி கேட்ட போது எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை ஆனால் ஜல்லிக்கட்டில் எனக்கு உடன் பாடு இல்லை. நமது பாரம்பரியம் என்றல் பெயரில் விலங்குகளை அடக்கி துண்புறுத்துதல்,அதனால் பல உயிர்கள் போவதை நான் விரும்புவதில்லை என்றார் சாக்‌ஷி அகர்வால்

The post ‘ஜல்லிக்கட்டால் விலங்குகள் துண்புறுத்தப்படுகிறாது – சாக்‌ஷி அகர்வால்! appeared first on Touring Talkies.

]]>
2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது..! https://touringtalkies.co/jallikattu-malayalam-movie-goest-to-oscar-for-2019-international-best-film/ Wed, 25 Nov 2020 14:01:06 +0000 https://touringtalkies.co/?p=10373 2019-ம் ஆண்டு வெளியான ‘ஜல்லிக்கட்டு’ என்ற மலையாளத் திரைப்படம் 2019-ம் ஆண்டுக்கான ‘ஆஸ்கர் விருது’களில் ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட’த்திற்கான போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கு பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகுதியைப் பெறும் மூன்றாவது மலையாளத் திரைப்படம் இதுவாகும். ஏற்கெனவே 1997-ம் ஆண்டு ராஜீவ் அஞ்சல் இயக்கிய ‘குரு’ என்ற திரைப்படமும், 2011-ம் ஆண்டு சலீம் முகம்மது இயக்கிய ‘ஆதாமிண்டே மகன் அபு’ என்ற திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் சென்ற ஆண்டு […]

The post 2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது..! appeared first on Touring Talkies.

]]>
2019-ம் ஆண்டு வெளியான ‘ஜல்லிக்கட்டு’ என்ற மலையாளத் திரைப்படம் 2019-ம் ஆண்டுக்கான ‘ஆஸ்கர் விருது’களில் ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட’த்திற்கான போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கு பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகுதியைப் பெறும் மூன்றாவது மலையாளத் திரைப்படம் இதுவாகும். ஏற்கெனவே 1997-ம் ஆண்டு ராஜீவ் அஞ்சல் இயக்கிய ‘குரு’ என்ற திரைப்படமும், 2011-ம் ஆண்டு சலீம் முகம்மது இயக்கிய ‘ஆதாமிண்டே மகன் அபு’ என்ற திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் சென்ற ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி வெளியாகி உலகமெங்கும் பெரும் வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்தில் அந்தோணி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சுபுமோன் அப்துசமத் மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

எஸ்.ஹரீஸ் என்பவர் எழுதியிருந்த ‘மாவோயிஸ்ட்’ என்னும் சிறுகதையைத் தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

கேரளாவின் உள்ளடங்கிய ஒரு பிரதேசத்தில் பூமாலை என்ற சிற்றூரில் இறைச்சிக்காக கொண்டு வரப்பட்ட ஒரு எருமை மாடு, திடீரென்று யாருக்கும் அடங்காமல் ஊருக்குள்ளேயே ஓடத் துவங்க.. ஒட்டு மொத்த ஊரும் அதை எப்படி ஒன்றிணைந்து பிடிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இதற்கிடையில் அந்த ஊரில் இருக்கும் முக்கியமான சில குடும்பத்தினரின் கதையும் திரைக்கதையில் சேர்ந்து பயணிக்கும்.

விறுவிறுப்பான திரைக்கதையிலும், கவனிக்கத்தக்க நடிப்பாலும், அற்புதமான இயக்கத்தாலும் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்த இத்திரைப்படத்திற்கு கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதினைப் பெற்றுக் கொடு்த்தது.

தற்போது சென்ற வருடத்திற்கான ‘ஆஸ்கர் விருதுப் போட்டி’யில் ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட’த்திற்கான விருதுக்கு இந்தியாவின் சார்பில் இந்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் போட்டியிடப் போகிறது என்பது மிகவும் பெருமையான விஷயமாகும்.

இதுவரையிலும் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு 52 முறை இந்தியத் திரைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் 53-வது திரைப்படமாகும்.

‘ஆஸ்கர் விருது போட்டி’யின் நிபந்தனையின்படி ஒவ்வொரு நாடும் தன்னுடைய நாட்டில் இருந்து ஒரேயொரு திரைப்படத்தை மட்டுமே அனுப்பி வைக்க முடியும். அப்படி வந்து சேரும் திரைப்படங்களில் இருந்து சிறந்த 5 திரைப்படங்களை மட்டுமே போட்டிக்காகத் தேர்வு செய்வார்கள்.

அதன் பின்பு அந்த 5 திரைப்படங்களில் இருந்து மிகச் சிறந்த திரைப்படமாக ஒன்றை தேர்வு செய்வார்கள். இதுதான் நடைமுறை.

இதுவரையிலும் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட திரைப்படங்களில் 1953-ல் அனுப்பப்பட்ட ‘மதர் இந்தியா’ திரைப்படமும், 1988-ம் ஆண்டு அனுப்பப்பட்ட ‘சலாம் பாம்பே’ திரைப்படமும், 2001-ம் ஆண்டு அனுப்பப்பட்ட ‘லகான்’ திரைப்படமும் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றன. ஆனாலும் விருது கிடைக்கவில்லை.

இந்த ‘ஜல்லிக்கட்டு’ படத்துக்குக் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வருடாவருடம் பிப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில் நடைபெறும் ஆஸ்கர் பரிசளிப்பு விழா இந்தாண்டு கொரோனா நோய் பரவலால் ஒத்தி வைக்கப்பட்டது. அந்த விழா 2021 ஏப்ரல் 25-ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

The post 2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது..! appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-9 – எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய கடிதம் https://touringtalkies.co/cinema-history-9-sivaji-wrote-a-latter-to-mgr/ Fri, 09 Oct 2020 07:59:05 +0000 https://touringtalkies.co/?p=8513 ‘நடிப்பு’ என்றால் என்ன என்பதற்குப் பொருளாக விளங்கிய ‘நடிகர் திலகம்’ என்னும் அந்த மகா கலைஞனோடு பத்திரிகையாளன், பத்திரிகைத் தொடர்பாளன், உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல தகுதிகளில் இணைந்து பணியாற்றக் கூடிய அரிய  வாய்ப்பு பெற்றவன் நான். 1970-ம் ஆண்டு தொடங்கி 15 ஆண்டுகள் நான் நடத்திய ‘திரைக்கதிர்’ பத்திரிகை அதன் ஆரம்பக் கட்டங்களில் சிவாஜி ரசிகர்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிக்கையாகவே  வெளிவந்தது. இதழ்கள் தோறும் ரசிகர்களின் கேள்விகளுக்கான சிவாஜியின் பதில்கள், ‘சிவாஜியின் […]

The post சினிமா வரலாறு-9 – எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய கடிதம் appeared first on Touring Talkies.

]]>

‘நடிப்பு’ என்றால் என்ன என்பதற்குப் பொருளாக விளங்கிய ‘நடிகர் திலகம்’ என்னும் அந்த மகா கலைஞனோடு பத்திரிகையாளன், பத்திரிகைத் தொடர்பாளன், உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல தகுதிகளில் இணைந்து பணியாற்றக் கூடிய அரிய  வாய்ப்பு பெற்றவன் நான்.

1970-ம் ஆண்டு தொடங்கி 15 ஆண்டுகள் நான் நடத்திய ‘திரைக்கதிர்’ பத்திரிகை அதன் ஆரம்பக் கட்டங்களில் சிவாஜி ரசிகர்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிக்கையாகவே  வெளிவந்தது.

இதழ்கள் தோறும் ரசிகர்களின் கேள்விகளுக்கான சிவாஜியின் பதில்கள், ‘சிவாஜியின் டைரி’ என்ற பெயரில் மாதம் முழுவதும் சிவாஜி கலந்து கொள்ளும் படப்பிடிப்புகள் மற்றும் அவரது நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், சிவாஜி படச் செய்திகள் என்று  முழுக்க முழுக்க சிவாஜி பற்றிய செய்திகளே அந்த இதழில் நிறைந்திருக்கும்.

இப்படிப் பத்திரிகையாளனாக அவரோடு தொடங்கிய நட்பு அவரைக் கதாநாயகனாக வைத்து படம் எடுக்கின்ற அளவிற்கு வளரும் என்று நான் கனவில்கூட எண்ணியதில்லை. அதை  இறைவன் எனக்களித்த வரம் என்றுதான் கூறுவேன்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘மண் வாசனை’தான் தயாரிப்பாளராக எனக்கு முதல் படம். அப்படத்தின் நூறாவது நாள் விழாவிற்குத் தலைமை தாங்கிய நடிகர் திலகம்தான், என் இரண்டாவது தயாரிப்பான ‘வாழ்க்கை’ திரைப்படத்தின் நாயகன்.

சிவாஜி என்ற அந்த மாமேதையோடு நானும் என் சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து  தயாரித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத் தயாரிப்பின்போது நடந்த ஒரு  நிகழ்ச்சி என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத  இனிய நிகழ்ச்சியாக அமைந்தது .

ஒரு நாள் காலையில் சிவாஜி சார் அவர்களின் வீட்டிற்குச் சென்ற நான் அவரிடம் “நாளை காலையில் ‘டப்பிங்’கிற்கு ஸ்டுடியோ புக் பண்ணியிருக்கிறேன். நீங்கள் எத்தனை மணிக்கு வருகிறீர்கள்..?” என்று அவரைக் கேட்டேன்.

நான் அப்படிக் கேட்டவுடன் சிவாஜியின் கூரிய கண்கள் என்னை ஒரு முறை ஊடுருவிப் பார்த்தன. “அண்ணனைப் பத்தி நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே? உன்னை என் தம்பி மாதிரி நினைச்சி பழகறதினாலே எப்படி வேணும்னாலும் என்னோட ‘டீல்’ பண்ணலாம்னு நினைச்சிட்டியா…?  உன் இஷ்டத்துக்கு டப்பிங் தியேட்டரை புக் பண்ணிட்டு என்னை டப்பிங்கிற்கு வரச் சொல்லி கூப்பிடறே…?” என்றார் அவர் .

சிவாஜி  அப்படி என்னிடம் கடுமையாக என்றும் பேசியதேயில்லை. ஆகவே ஒரு நிமிடம் என்ன பதில் பேசுவது என்று எனக்குப் புரியவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று யோசித்துப் பார்த்தபோதுதான் எவ்வளவு பெரிய  தவறு செய்திருக்கிறேன் என்று எனக்குப் புரிந்தது.

“எப்போது டப்பிங் பேசுகிறீர்கள்…?” என்று அவரைக் கேட்டுவிட்டு  அவர் என்று பேசுகிறேன் என்று சொல்கின்றாரோ அந்தத் தேதியில் ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்யாமல் நானாக ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்துவிட்டு அவரை அழைப்பது எந்த வகையில் நியாயம்…?

என் தவறை உணர்ந்த அடுத்த நிமிடம் அவரிடம், ”மன்னிச்சிக்கங்க சார்.  ஏதோ அவசரத்தில் தவறு செய்து விட்டேன். நாளைக்கு தியேட்டரை கேன்சல் செய்து விடுகிறேன். உங்களுக்கு எப்போது முடியுமோ… அப்போது சொல்லுங்கள் தியேட்டரை புக் செய்கிறேன்..” என்று சொல்லிவிட்டு  கிளம்புவதற்காக  சோபாவை விட்டு எழுந்தேன்.

உடனே தன் கைகளால் என் தோளைத் தொட்டு என்னை அமர்த்திய  சிவாஜி “எனக்காக தியேட்டரை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டாம். நான் நாளைக்கு  காலையில் டப்பிங் பேச வர்றேன். ஆனால் ஒரு கண்டிஷன்..” என்றார்.

“எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் சார்.. செய்யறேன்..” என்றேன்.

“நாளை முதல் டப்பிங் முடியறவரைக்கும் நீ என் கூடத்தான் காலையில டிபன் சாப்பிடணும். சம்மதம்னா சொல்லு.. டப்பிங் பேச வர்றேன்…” என்றார்.

கரும்பு தின்னக் கூலியா..?  உடனே ‘சரி’ என்று ஒப்புக் கொண்டேன். இரண்டே நாட்களில் முழு படத்திற்கான டப்பிங்கையும் அவர்  பேசி முடித்து விட்டார். அந்த இரண்டு நாளும் அவர் கொண்டு வந்த டிபனில் நான் மட்டுமல்ல, அந்த தியேட்டர் ஒலிப்பதிவாளர், டைரக்டர், உதவி டைரக்டர்கள் என்று பத்து பேருக்கு மேல் சாப்பிட்டோம்.

1980-களில் தயாரிப்பாளர்கள் எந்த அளவிற்கு கவுரவமாக நடத்தப்பட்டார்கள்  என்பதைத் தெரிவிப்பதற்கு ‘வாழ்க்கை’ திரைப்படத் தயாரிப்பின்போது நடந்த இன்னொரு சம்பவம்  ஒரு  நல்ல உதாரணம்.

‘வாழ்க்கை’ படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாரானபோது படத்தில் நடித்ததற்காக 50 சதவிகித சம்பளத்தைத்தான் பெற்றிருந்தார் சிவாஜி.  1984-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதியன்று படத்தை வெளியிடுவது என்று முடிவெடுத்திருந்த நிலையில் மீதி சம்பளப் பணத்தைக் கொடுப்பதற்காக ஏப்ரல் 12-ம் தேதியன்று சிவாஜியைத் தொடர்பு கொண்டேன்.

“பணம் எல்லாம் நான் அப்புறம் வாங்கிக்கறேன். நீ நாளை மறுநாள்  காலையில புறப்பட்டு முதல்ல தஞ்சாவூர்ல நாங்க கட்டியிருக்கிற சாந்தி-கமலா தியேட்டர் திறப்பு விழாவிற்கு வர்ற வேலையைப் பாரு. உனக்கு  ஃபிளைட்ல டிக்கட்  எல்லாம்கூட போட்டாச்சி…” என்றார் அவர்.

தஞ்சாவூரில் தியேட்டர் திறப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்ததும் சூரக்கோட்டையில் நண்பகல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தியேட்டரைத் திறந்து வைத்த எம்.ஜி.ஆர். நண்பகல் விருந்து முடிந்து நீண்ட நேரம் சிவாஜியோடு உரையாடிவிட்டு பிறகு சென்னை திரும்பினார்.

அவ்விழா நடந்த பிறகு ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக  வீரபாண்டி கோவிலுக்குச் சென்றுவிட்டு  ஒரு வாரத்துக்குப்  பிறகுதான் நான் சென்னை திரும்பினேன். அதற்குப் பிறகே மீதி சம்பளத்துக்கான காசோலையை பெற்றுக் கொண்டார் சிவாஜி.

எம்.ஜி.ஆர்.  அவர்களும், சிவாஜி அவர்களும் எதிரும் புதிருமானவர்கள் என்ற எண்ணம் இன்றுவரை தமிழக மக்கள் மனதில்  நிலவி வருகின்றது. ஆனால் அதை பலமாக பல தடவை மறுத்திருக்கிறார் சிவாஜி. 

“தனிப்பட்ட முறையில் எங்களுக்கிடையே நல்லுறவு இல்லையென்றால் எதற்காக கடிதம் எழுதி என்னை அமெரிக்கா வரச் சொல்லுகிறார் எம்.ஜி.ஆர்..? எதற்காக நான் ‘சார்ட்டர்ட் ஃப்ளைட்’ வைத்துக் கொண்டு பால்டிமோர் சென்று அவரைப் பார்க்கிறேன்..? எதற்காக அவர் காலமாவதற்கு நான்கு நாட்கள் முன்பு “வீட்டிற்கு வா முக்கியமான பொறுப்பை உன்னிடம் கொடுக்கணும்” என்று சொல்லப் போகிறார்..? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தனிப்பட்ட முறையில் நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்” என்று தன் வாழ்க்கை வரலாற்றுப்  புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் சிவாஜி.

எம்.ஜி ஆர்.-சிவாஜி  இருவரது நெருக்கத்தையும்  உணர்கின்ற ஒரு வாய்ப்பு சிவாஜி அவர்கள் ‘டாக்டர்’ பட்டம் பெற்றதையொட்டி அவருக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தியபோது எனக்குக் கிடைத்தது.

அந்த பாராட்டு விழாக் குழுவில்  பாரதிராஜா, ஏவி.எம்.சரவணன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மேஜர் சுந்தரராஜன் ஆகியோரோடு நானும் முக்கிய பொறுப்பு  ஏற்றிருந்தேன்.

அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். விழாவிற்கு தலைமை  தாங்கினால் நன்றாக இருக்கும் என்று விழாக் குழுவினர் அனைவரும் முடிவெடுத்தோம். அதில் சிக்கல் என்னவென்றால் விழா நடைபெற இருந்ததற்கு முதல் நாள்தான் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவதாக இருந்தார். ஆகவே தனது பாராட்டு விழாவிற்கு  தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிவாஜியே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி அவரை அழைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

அந்த கடிதத்தை இயக்குநர் பாரதிராஜா  தில்லிக்கு  எடுத்துச் சென்று எம்.ஜி.ஆரிடம் தந்து விழாவிற்கு எம்.ஜி.ஆரை தலைமை தாங்கக் கேட்டுக் கொள்வது என்றும் திட்டமிடப்பட்டது.

அந்த கடிதத்தில் கையெழுத்திட வேண்டிய சிவாஜி அவர்கள் அப்போது கோபிசெட்டிப்பாளையத்தில் ‘மண்ணுக்குள் வைரம்’ படப்பிடிப்பில் இருந்தார். கோபிச்செட்டிபாளையம் சென்று எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதும் கடிதத்தில் கையெழுத்து வாங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.  அதன்படி நான் கோபிசெட்டிபாளையம் சென்று சிவாஜி அவர்களிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டு சென்னை திரும்பினேன்.

எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய ஒரே கடிதம் அதுவாகத்தான் இருக்கும் என்பதால் புகழ் பெற்ற அக்கடிதத்திற்கு ஒரு பிரதியை எடுத்து அப்போதே  பத்திரப்படுத்துக் கொண்டேன்.

இத்தனை தீவிர முயற்சிகளுக்குப் பிறகும் அந்த விழாவில் எம்.ஜி.ஆர். அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அது நீண்ட நாட்களுக்கு என் மனதிற்குள் ஒரு குறையாகவே இருந்தது. அந்தக் குறையை நானும் எனது சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து தயாரித்த ‘ஜல்லிக்கட்டு’ நூறாவது நாள் விழாவில் தீர்த்துக் கொண்டேன். அதற்கு பெரிதும் உதவியாக இருந்தவர் ‘ஜல்லிக்கட்டு’ படத்தின் நாயகனான சத்யராஜ்.

சிவாஜியும், சத்யராஜும் இணைந்து  நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் 100-வது நாள் விழாவிற்கு எம்.ஜி.ஆர்.தான் தலைமை வகித்தார். ”பல்லாண்டு காலம் திரையுலகை ஆண்ட ஈடு இணையற்ற கலைச் சக்ரவர்த்திகளாக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இருந்த போதிலும் சிவாஜி நடித்த ஒரு திரைப்படத்தின் 100-வது நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொள்வது இதுவே முதல் முறை” என்று அந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

‘ஜல்லிக்கட்டு’ நூறாவது நாள் விழாவின்போது நடந்த இன்னொரு ரசமான நிகழ்ச்சி என்னால் எப்போதும் மறக்க முடியாத ஒன்று.

‘ஜல்லிக்கட்டு’ நூறாவது நாள் விழா அழைப்பிதழின் முகப்பில் எம்.ஜி.ஆர். படத்தையும், நடுப்பக்கத்தில் சத்யராஜ் படத்தையும். கடைசி பக்கத்தில் சிவாஜி படத்தையும்  அச்சிட்டிருந்தோம்.

அந்த அழைப்பிதழை எப்படி வேண்டுமானாலும் மடிக்கலாம் என்பதால் சிவாஜி அவர்களிடம் அழைப்பிதழைக் கொடுக்கும்போது சிவாஜி அவர்கள் படம் முதலில் வரும்படி மடித்து அவரிடம் கொடுத்தேன்.

அந்த அழைப்பிதழைப் படித்துப் பார்த்துவிட்டு அழைப்பிதழை என்னிடம் சிவாஜி திரும்பக் கொடுத்தபோது அதன்  முதல் பக்கத்தில்  எம்.ஜி.ஆர். இருப்பது போல மடித்து என்னிடம் கொடுத்தார் சிவாஜி.

என் மனதைக் காயப்படுத்தாமல் அதே நேரத்தில் இதற்கெல்லாம் நான் அப்பாற்பட்டவன்  என்று அவர் சொல்லாமல் சொன்ன விதம் இருக்கிறதே… அது இன்றளவும் என் மனதில் ஆழப் பதிந்துள்ள ஒன்று.

சிவாஜி போன்ற இமாலயத் திறமை கொண்ட நடிகரை இனி எக்காலத்திலும் இந்தத் திரையுலகம் சந்திக்கப் போவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ… அதைப் போல நூறு மடங்கு உண்மை, சிவாஜி போன்று பழகுவதற்கு எளிமையான, இனியவரான  மனிதனை இந்தத் திரையுலகம் இனி எந்தக் காலத்திலும் சந்திக்கப் போவதில்லை என்பதும்தான்.

The post சினிமா வரலாறு-9 – எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய கடிதம் appeared first on Touring Talkies.

]]>