Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
isari ganesh – Touring Talkies https://touringtalkies.co Sat, 18 May 2024 08:50:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png isari ganesh – Touring Talkies https://touringtalkies.co 32 32 விரைவில் நல்ல செய்தி வரும்… ரஜினிகாந்த் படத்தை தயாரிக்க போகிறாரா ஐசரி கணேஷ்? https://touringtalkies.co/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81/ Sat, 18 May 2024 08:50:02 +0000 https://touringtalkies.co/?p=43328 ஹிப் ஹாப் தமிழா ஆதி முக்கிய வேடத்தில் நடிக்கும், கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி.டி.சார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். காஷ்மிரா மற்றும் அனிகா சுரேந்திரன், பிரனதி, பிரபு, கே.பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன், முனீஸ் காந்த், மதுவந்தி உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிவடைந்து, வரும் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னையில் நேற்று […]

The post விரைவில் நல்ல செய்தி வரும்… ரஜினிகாந்த் படத்தை தயாரிக்க போகிறாரா ஐசரி கணேஷ்? appeared first on Touring Talkies.

]]>
ஹிப் ஹாப் தமிழா ஆதி முக்கிய வேடத்தில் நடிக்கும், கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி.டி.சார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். காஷ்மிரா மற்றும் அனிகா சுரேந்திரன், பிரனதி, பிரபு, கே.பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன், முனீஸ் காந்த், மதுவந்தி உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிவடைந்து, வரும் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னையில் நேற்று மாலை படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் “எங்கள் நிறுவனத்தில் இந்தப் படத்தை தயாரித்தது மிகுந்த திருப்தியளிக்கிறது.ஆதி இந்த கதையை என்னிடம் கூறியவுடன், உடனே தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.இப்பொழுது படத்தை பார்த்தபோது முழு திருப்தி ஏற்பட்டது.

“பி.டி. சாருக்கும், இங்கிலீஷ் டீச்சருக்கும் இடையிலான காதல், பல இடங்களில் நடந்துகொண்டிருக்கிறது.எனது பள்ளி பருவத்திலும் பிடி சாரும் இங்கிலீஷ் டீச்சரும் காதலித்தனர். அவர்களின் காதலை சேர்த்து வைத்து திருமணம் செய்து வைத்தது நான் தான். அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.இந்த படத்தில் நல்ல செய்தி உள்ளது. குடும்பத்தோடு வந்து பார்க்கும் படமாக இது இருக்கும்,” என்றார்.

அதற்கு பிறகு ஐசரி கணேஷிடம், ரஜினிகாந்த் நடிக்கும் 172-ஆவது படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது அதுபற்றி கூறுங்கள் என செய்தியாளர்கள் கேட்க அதற்கு அவர் இது தொடர்பாக ரஜினிகாந்த்தை சந்தித்தது உண்மை. அவருடன் பேசி உள்ளோம். விரைவில் நல்ல செய்தி வரும், என்று தெரிவித்தார்.

The post விரைவில் நல்ல செய்தி வரும்… ரஜினிகாந்த் படத்தை தயாரிக்க போகிறாரா ஐசரி கணேஷ்? appeared first on Touring Talkies.

]]>
நான் அவர நடிக்க கூடாதுனு சொல்லல இல்லை ஆனா…சிம்பு பற்றி ஐசரி கணேஷ் பேச்சு! https://touringtalkies.co/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%af%81/ Sat, 18 May 2024 07:30:18 +0000 https://touringtalkies.co/?p=43293 நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தை இயக்கிய பிளாக் ஷீப் யூடியூப் சேனலை சேர்ந்த இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலனின் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள பிடி சார் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இதில், ஆதிக்கு ஜோடியாக காஷ்மிரா பர்தேசி நடித்துள்ளார், முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா சுரேந்திரன் நடித்துள்ளார்.இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இந்நிலையில் இப்படவிழாவில் சிம்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஐசரி கணேஷன். மேலும், பாக்யராஜ், பாண்டியராஜன், […]

The post நான் அவர நடிக்க கூடாதுனு சொல்லல இல்லை ஆனா…சிம்பு பற்றி ஐசரி கணேஷ் பேச்சு! appeared first on Touring Talkies.

]]>
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தை இயக்கிய பிளாக் ஷீப் யூடியூப் சேனலை சேர்ந்த இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலனின் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள பிடி சார் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இதில், ஆதிக்கு ஜோடியாக காஷ்மிரா பர்தேசி நடித்துள்ளார், முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா சுரேந்திரன் நடித்துள்ளார்.இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இந்நிலையில் இப்படவிழாவில் சிம்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஐசரி கணேஷன்.

மேலும், பாக்யராஜ், பாண்டியராஜன், பிரபு, தியாகராஜன், பட்டிமன்ற ராஜா மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த வாரம் மே 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது.வேல்ஸ் நிறுவனம் மூன்று படங்களை நடித்து தருவதாக சிம்பு உறுதி அளித்ததாக, கொரோனா குமார் படத்தில் இருந்து விலகியது பஞ்சாயத்தை ஏற்படுத்தியதாகவும் சிம்புவுக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்பதாக ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை வைத்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தில் தற்போது சிம்பு நடித்து வருவதாகவும், அதில் அவர் நடிக்கவே கூடாது என்றும் அவருக்கு தடை விதிக்க வேண்டும் என ஐசரி கணேஷ் கூறியதாகவும், ஆனால் நேற்று நடைபெற்ற பிடி சார் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அதற்கான விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.

நேற்று நடந்த பிடி சார் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஐசரி கணேஷ், சிம்பு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். சிம்பு நடிக்கவே கூடாது என தானே கூறவில்லை என்றும், தனது படத்தை முடித்து கொடுத்துவிட்டு தக் லைஃப் படத்தில் நடிக்கட்டும் என தான் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post நான் அவர நடிக்க கூடாதுனு சொல்லல இல்லை ஆனா…சிம்பு பற்றி ஐசரி கணேஷ் பேச்சு! appeared first on Touring Talkies.

]]>
தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்க கூடாது என புகார்… கிளம்பிய புது பிரச்சினை! https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/ Sat, 11 May 2024 07:12:41 +0000 https://touringtalkies.co/?p=42752 மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் தக் லைஃப் படத்தில சிம்புவும் நடிக்கிறார். படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்த ப்ரோமோ சில நாட்களுக்கு முன்புதான் வெளியாகி பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பை பெற்றது.இந்தச் சூழலில் சிம்புவுக்கு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புகார் அளித்திருக்கிறார் அதில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்கக்கூடாது என புகார் அளித்துள்ளார். முன்னாதக ஒப்புக்கொண்டவாறு கொரோனா குமார் படத்தை சிம்பு […]

The post தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்க கூடாது என புகார்… கிளம்பிய புது பிரச்சினை! appeared first on Touring Talkies.

]]>
மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் தக் லைஃப் படத்தில சிம்புவும் நடிக்கிறார். படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்த ப்ரோமோ சில நாட்களுக்கு முன்புதான் வெளியாகி பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பை பெற்றது.இந்தச் சூழலில் சிம்புவுக்கு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புகார் அளித்திருக்கிறார் அதில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்கக்கூடாது என புகார் அளித்துள்ளார். முன்னாதக ஒப்புக்கொண்டவாறு கொரோனா குமார் படத்தை சிம்பு முடித்துக்கொடுக்க தவறியதால் அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.இது சிம்புவுக்கு மட்டுமின்றி தக் லைஃப் படத்துக்கும் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்க சிம்பு கமிட்டானார். ஆனால் அந்தப் படத்தில் வேறொரு நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் பரவின அதற்கு பிறகு அந்த படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வலம் வந்தன அத்தோடு அந்த படத்தை குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை.

இந்த பிரச்சினை முன்பில் இருந்தே நீடிப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. அதற்கு சிம்புவுக்கு 9 கோடி ரூபாய்வரை சம்பளம் பேசப்பட்டதாகவும் அதில் 4 கோடி ரூபாய்வரை பணம் அவருக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் பணத்தை வாங்கிய சிம்பு கொரோனா குமார் படத்தை தவிர்த்து மற்ற படங்களில் நடித்துவருகிறார் எனவும் அவருக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் அனைத்தும் தங்களிடம் இருப்பதாகவும் வேல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.இவர்களது மனுவை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை சிம்பு அளிக்க வேண்டும் இல்லையென்றால் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்க கூடாது என புகார்… கிளம்பிய புது பிரச்சினை! appeared first on Touring Talkies.

]]>
ஜெயம் ரவியின் ‘ஜீனி’ செகண்ட் லுக் வெளியீடு https://touringtalkies.co/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d/ Thu, 28 Mar 2024 06:46:42 +0000 https://touringtalkies.co/?p=40384 ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் படம், ‘ஜீனி’. இதில் ஜெயம் ரவியுடன் கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி, வாமிகா கப்பி உட்பட பலர் நடிக்க, ஜே.ஆர்.அர்ஜுனன் இயக்கி இருக்கிறார். இவர் ‘பிசாசு’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களில் இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் தோற்றம் வெளியாகி படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இப்போது வித்தியாசமான செகண்ட் லுக் […]

The post ஜெயம் ரவியின் ‘ஜீனி’ செகண்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் படம், ‘ஜீனி’. இதில் ஜெயம் ரவியுடன் கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி, வாமிகா கப்பி உட்பட பலர் நடிக்க, ஜே.ஆர்.அர்ஜுனன் இயக்கி இருக்கிறார். இவர் ‘பிசாசு’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களில் இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் தோற்றம் வெளியாகி படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இப்போது வித்தியாசமான செகண்ட் லுக் வெளியாகி வைரலாகியுள்ளது.

”இந்தப் படத்தில் ஜெயம் ரவியின் அர்பணிப்பும், ஈடுபாடும் கண்டு உண்மையிலேயே பிரமித்துப் போனேன். அவருடன் பணிபுரிவது நல்ல அனுபவமாக இருக்கிறது. காட்சிகளுக்காக கூடுதலாக உழைக்கும் ஜெயம் ரவியிடம் இருந்து நாங்கள் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம்.

குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் வலிமையான பெண் கதாப்பாத்திரங்கள் உள்ளன. தாய், மகள், சகோதரி மற்றும் மனைவியின் உணர்ச்சிகளைச் சுற்றி படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது படத்தின் எழுபத்தி ஐந்து சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இன்னும் மூன்று பாடல்கள் படமாக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார், இயக்குனர் ஜே.ஆர்.அர்ஜுனன்.

The post ஜெயம் ரவியின் ‘ஜீனி’ செகண்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
சிம்புவின் ‘கொரோனா குமார்’ விவகாரம்: 4.5 கோடியா ரூ.1 கோடியா? https://touringtalkies.co/simbus-corona-kumar-case-rs-4-5-crore-or-rs-1-crore/ Wed, 20 Sep 2023 01:41:04 +0000 https://touringtalkies.co/?p=36415 வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்து, நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு, 4.5 கோடி ரூபாய் முன்பணமாக கடந்த 2021-ம் ஆண்டு அளிக்கப்பட்டது; பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், ‘கொரோனா குமார்’ படத்தை முடித்து கொடுக்காமல் […]

The post சிம்புவின் ‘கொரோனா குமார்’ விவகாரம்: 4.5 கோடியா ரூ.1 கோடியா? appeared first on Touring Talkies.

]]>
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்து, நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், ‘படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு, 4.5 கோடி ரூபாய் முன்பணமாக கடந்த 2021-ம் ஆண்டு அளிக்கப்பட்டது; பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், ‘கொரோனா குமார்’ படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு சிலம்பரசன் மற்றும் வேல்ஸ் நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, ஒப்பந்தத்தில் உள்ள படி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிலம்பரசன் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜரானார். அவர், ‘கொரோனா குமார் படத்துக்காக கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 16-ம் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில்,  ஓராண்டிற்குள் படம் தொடங்கவில்லை என்றால் முன் பணத்தை திரும்ப செலுத்த தேவையில்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆகவே ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது. இந்த தகவலை மறைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  சிம்பு  மீது தவறு இல்லாத நிலையில் ஒரு கோடி ரூபாயை திரும்ப செலுத்த தேவையில்லை’ என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு, பதிலளிக்க வேல்ஸ் நிறுவனம் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. அக்டோபர் 6-ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை நடிகர் சிலம்பரசன் தாக்கல் செய்ய வேண்டுமா என்பது குறித்து அன்றைய தினம் ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

The post சிம்புவின் ‘கொரோனா குமார்’ விவகாரம்: 4.5 கோடியா ரூ.1 கோடியா? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் வேல்ஸ் பல்கலைக் கழகம் https://touringtalkies.co/actor-simbu-gets-honorary-doctorate-from-vels-university/ Sat, 08 Jan 2022 14:28:11 +0000 https://touringtalkies.co/?p=20161 உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக் கழகங்கள், கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள், பல்வேறு பல்கலைக் கழகங்களால் கவுரவிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘வேல்ஸ் பல்கலைக் கழகம்’ நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு, வருகிற ஜனவரி 11-ம் தேதி ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுத்து சிறப்பு […]

The post நடிகர் சிம்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் வேல்ஸ் பல்கலைக் கழகம் appeared first on Touring Talkies.

]]>
உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக் கழகங்கள், கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கம்.

அந்த வகையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள், பல்வேறு பல்கலைக் கழகங்களால் கவுரவிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும்.

அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘வேல்ஸ் பல்கலைக் கழகம்’ நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு, வருகிற ஜனவரி 11-ம் தேதி ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுத்து சிறப்பு செய்யவிருக்கிறது.

இளைஞர்களின் கனவுகளையும், தொலைநோக்குப் பார்வையையும் கணக்கில் கொண்டு தரமான கல்வியை வழங்கிவரும் ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பலருக்கும் இது போல் ‘கவுரவ டாக்டர்’ பட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் நிறுவனரும், தலைவரும் வேந்தருமான டாக்டர்.ஐசரி கே.கணேஷ் பேசும்போது, “மரியாதைக்குரிய நடிகர் சிலம்பரசன் டி.ஆர். அவர்களுக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டத்தைக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்கு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களை கவனமாக ஆய்வு செய்து இறுதிப் பட்டியலை முடிவு செய்வார்கள்.

அந்த வகையில் ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன்.விரைவில் அவருக்கு 39 வயது ஆகப் போகிறது.

ஒருத்தரோட வயதும், அவரோட கேரியரும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன்தான் சிலம்பரசன்.

நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனையைக் கவுரவிப்பதன் பொருட்டே இந்த கவுரவ டாக்டர் என்கிற அங்கீகாரம். அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக் கழகம் வழங்குவதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி…” என்றார்.

The post நடிகர் சிம்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் வேல்ஸ் பல்கலைக் கழகம் appeared first on Touring Talkies.

]]>
சிம்பு-கெளதம் மேனன் படத்தின் தலைப்பு மாறியது ஏன்..? https://touringtalkies.co/why-did-the-title-of-simbu-gautam-menon-movie-change/ Sat, 07 Aug 2021 07:04:56 +0000 https://touringtalkies.co/?p=16832 சிம்புவின் நடிப்பில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘வெந்து தணிந்தது காடு’ என்ற அறவிப்பு நேற்றைக்கு வெளியானது. இந்தத் தலைப்பு நேற்றுதான் அறிவிக்கப்பட்டது என்றாலும் இது அந்தப் படத்தின் முதல் தலைப்பு அல்ல. இரண்டாவது தலைப்பு. இந்தப் படத்திற்கு முதலில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தலைப்பு கெளதம் மேனனுக்கு சரி.. ஆனால் சிம்புவின் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது. என்னதான் இணையத்தில் எழுதினாலும், பேசினாலும்.. […]

The post சிம்பு-கெளதம் மேனன் படத்தின் தலைப்பு மாறியது ஏன்..? appeared first on Touring Talkies.

]]>
சிம்புவின் நடிப்பில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘வெந்து தணிந்தது காடு’ என்ற அறவிப்பு நேற்றைக்கு வெளியானது.

இந்தத் தலைப்பு நேற்றுதான் அறிவிக்கப்பட்டது என்றாலும் இது அந்தப் படத்தின் முதல் தலைப்பு அல்ல. இரண்டாவது தலைப்பு. இந்தப் படத்திற்கு முதலில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தலைப்பு கெளதம் மேனனுக்கு சரி.. ஆனால் சிம்புவின் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது.

என்னதான் இணையத்தில் எழுதினாலும், பேசினாலும்.. சட்டென்று வாயில் வராத பெயராகவும், கவனத்தை ஈர்க்கும் பெயராகவும் இல்லாமல் கவிதைத்தனமாக இருப்பதை சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் பலவிதங்களில் சொல்லிக் காட்டினார்கள்.

பொதுவாகவே கெளதம் மேனனின் படங்களின் தலைப்புகளெல்லாம் வித்தியாசமாகத்தான் இருக்கும். சராசரி படங்களின் தலைப்பு போல இருக்கவே இருக்காது.

அவரது முதல் படமான ‘மின்னலே’ துவங்கி, ‘காக்க காக்க’. ‘வேட்டையாடு விளையாடு’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘நடுநசி நாய்கள்’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘என்னை அறிந்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ என்று கடைசி படம் வரையிலும் தலைப்பிலேயே ஒரு வித்தியாசத்தைக் காட்டியிருந்தார் கெளதம் மேனன்.

இருந்தாலும் இந்த ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற தலைப்பு ரசிகர்களிடமிருந்து சிம்புவை ரொம்பவே பிரிக்கிறது என்பதை கெளதமிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் தயாரிப்பாளர் ஐசரி கணேஷூம், நாயகன் சிம்புவும்.

இதனால் தலைப்பை மாற்ற ஒத்துக் கொண்ட கெளதம், கடைசியில் கதையையே மாற்றிவிட்டார். இதற்குக் காரணம் சிம்புவின் இன்னொரு பிடிவாதம்.

தனுஷ் நடிப்பில் வெளியாக அசுர வசூல் சாதனை படைத்த ‘அசுரன்’ படம் போலவே தானும் ஒரு படம் செய்ய வேண்டும். “கிராமத்துக் கதையாகவும் இருக்க வேண்டும். அனைவருக்கும் பிடித்ததுபோலவும் இருக்க வேண்டும்” என்ற சிம்புவின் விருப்பத்திற்காக தான் தயாராக வைத்திருந்த கதையைத் தள்ளி வைத்துவிட்டு சிம்புவுக்காக வேறு கதை தேடி ஆரம்பித்தார் கெளதம் மேனன்.

எழுத்தாளர் ஜெயமோகனின் கதையான ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்ற சிறுகதை ‘அசுரன்’ பாணியில் உருவாகியிருக்கும் கதையாகத் தென்பட அதையே படமாக்கத் துணிந்துவிட்டார் கெளதம் மேனன். ஜெயமோகனையே இந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதவும் சொல்லியிருக்கிறார் கெளதம் மேனன்.

இதனாலேயே மகாகவி பாரதியார் எழுதிய ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்ற பாடலில் ஒளிந்திருந்த இந்த ‘வெந்து தணிந்தது காடு’ என்ற வரிகளைத் தேடிப் பிடித்துத் தலைப்பாக்கியிருக்கிறார் கெளதம்.

இருந்தாலும் இப்போதும் சிம்புவின் ரசிகர்களுக்கு இந்தத் தலைப்பும் பிடிக்கவில்லையாம். “முன்னது கவிதைபோல் இருந்தது.. இப்போது கவிதையாகவே மாறிவிட்டது” என்று சிணுங்குகிறார்கள்.

எப்படியிருந்தாலும் நேற்றைக்கு திருச்செந்தூரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் துவக்கிவிட்டார்கள். இனிமேல் தலைப்பில் திருத்தம் இருக்காது என்றாலும் ‘இது கெளதம் மேனன் படம்’ என்ற ஒற்றை விளம்பரத்தை வைத்து படத்தைத் தூக்கி நிறுத்திவிடுவார்கள் என்றே தெரிகிறது.

The post சிம்பு-கெளதம் மேனன் படத்தின் தலைப்பு மாறியது ஏன்..? appeared first on Touring Talkies.

]]>