Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ilaiyaraja – Touring Talkies https://touringtalkies.co Tue, 02 Apr 2024 11:21:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ilaiyaraja – Touring Talkies https://touringtalkies.co 32 32 தனுஷ் சம்பளம் 100 கோடியா? https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/ Tue, 02 Apr 2024 10:29:55 +0000 https://touringtalkies.co/?p=40628 அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘இளையராஜா’. இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் இளையராஜா பாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்தப் படத்தில் ரஜினி, கமல், ஏ.ஆர்.ரகுமான், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், எஸ்.ஜானகி, வைரமுத்து, பாரதிராஜா, மணிரத்னம், பஞ்சு அருணாசலம் என பலரின் பாத்திரங்களும் இடம்பெற உள்ளன. ஏ.ஆர்.ரகுமானாக சிம்பு, வைரமுத்துவாக விஷால், மணிரத்னமாக மாதவன் நடிக்க போகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இளையராஜா வாழ்க்கை வரலாறு மிக பெரியது. அதை ஒரே படத்துக்குள் சுருக்க […]

The post தனுஷ் சம்பளம் 100 கோடியா? appeared first on Touring Talkies.

]]>
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘இளையராஜா’. இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் இளையராஜா பாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் ரஜினி, கமல், ஏ.ஆர்.ரகுமான், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், எஸ்.ஜானகி, வைரமுத்து, பாரதிராஜா, மணிரத்னம், பஞ்சு அருணாசலம் என பலரின் பாத்திரங்களும் இடம்பெற உள்ளன. ஏ.ஆர்.ரகுமானாக சிம்பு, வைரமுத்துவாக விஷால், மணிரத்னமாக மாதவன் நடிக்க போகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

இளையராஜா வாழ்க்கை வரலாறு மிக பெரியது. அதை ஒரே படத்துக்குள் சுருக்க முடியாது. அதனால், இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இளையராஜா வேடத்தில் நடிக்கும் தனுஷ் ஒரு பாகத்துக்கு ஐம்பது கோடி என்றும் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து நூறு கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post தனுஷ் சம்பளம் 100 கோடியா? appeared first on Touring Talkies.

]]>
இளையராஜாவிடம் தேவா பாடலை பாடி காட்டிய கே.எஸ்.ரவிக்குமார் https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88/ Sat, 30 Mar 2024 06:47:13 +0000 https://touringtalkies.co/?p=40500 ராமராஜன் நடித்துள்ள ‘சாமான்யன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இளையராஜாவிடம் தேவா பாடலை பாடி காட்டிய தகவலையும் அதற்கு இளையராஜாவின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என்பதையும் பகிர்ந்து கொண்டார். நான் பல வருடங்களாக உதவி இயக்குநராக பணியாற்றிய சமயத்தில் அந்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் நான் பணியாற்றிய முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றால் அது ராமராஜன் நடித்த ‘ராஜா ராஜா தான்’. நான் […]

The post இளையராஜாவிடம் தேவா பாடலை பாடி காட்டிய கே.எஸ்.ரவிக்குமார் appeared first on Touring Talkies.

]]>
ராமராஜன் நடித்துள்ள ‘சாமான்யன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இளையராஜாவிடம் தேவா பாடலை பாடி காட்டிய தகவலையும் அதற்கு இளையராஜாவின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

நான் பல வருடங்களாக உதவி இயக்குநராக பணியாற்றிய சமயத்தில் அந்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் நான் பணியாற்றிய முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றால் அது ராமராஜன் நடித்த ‘ராஜா ராஜா தான்’.

நான் அதற்கு முன் பல படங்கள் பணியாற்றி இருந்தாலும் முதன்முதலில் “ஸ்டார்ட் கட் ஆக்சன்” சொன்னது ராமராஜனுக்கு தான்.

ராஜ்கிரண் தயாரிப்பில், கஸ்தூரிராஜா கதை, வசனம் எழுதிய ‘பெத்தவ மனசு’ படத்தில் நான் இணை இயக்குனராக பணியாற்றினேன். அந்த படத்தில் ராமராஜன் ஹீரோ மற்றும் டைரக்டராக இருந்ததால் அவர் நடிக்கும் காட்சிகளை நான் தான் அவருக்கு ஸ்டார்ட் ஆக்சன் சொல்லி இயக்கினேன். அதுதான் என்னுடைய பிள்ளையார் சுழி. அதன்பிறகு ராஜ்கிரன் ஹீரோவாகிவிட்டார். கஸ்தூரிராஜா இயக்குநராகிவிட்டார். நானும் புரியாத புதிர் மூலமாக இயக்குநர் ஆகிவிட்டேன். 1981 லிருந்து 9 வருடங்கள் வரை ராசி இல்லாத சூழல் இருந்த நிலையில் ராசியான மனிதரான ராமராஜன் மூலமாக எனக்கு எல்லாமே சென்டிமென்ட் ஆக மாறியது. இதுதான் எனக்கும் அவருக்குமான பந்தம்.

நான் ‘ராஜா ராஜா தான்’ படத்தில் பணியாற்றிய போது அந்த படத்திற்கு இசையமைத்தது இளையராஜா தான். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து ஏவிஎம் தயாரிப்பில் ‘சக்திவேல்’ என்கிற படத்தை இயக்கியபோது அதற்கு இளையராஜா தான் இசை அமைத்தார். அப்போது ஒரு பாடல் இதுபோல வேண்டும் என நான் உதாரணமாக சொல்லும் போது என்னுடைய முந்தைய படமான ‘புருஷ லட்சணம்’ படத்தில் இருந்து கோலவிழியம்மா என்கிற சாமி பாடலை பாடிக் காட்டினேன்.

அதன் பிறகு வெளியே வந்ததும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் என்னை அழைத்து அது தேவா சார் பாட்டு. அதை ஏன் இளையராஜாவிடம் சொன்னாய், இருவரும் போட்டியாளர்களாச்சே என்று என்னை செல்லமாக கடிந்து கொண்டார்.

அதன் பிறகு மதியம் அதேபோன்று இன்னொரு பாடலுக்காக அமர்ந்த போது இதற்கு என்ன பாடல் இன்ஸ்பிரேஷனாக சொல்லப் போகிறாய் என்று ராஜா சார் கேட்டார். உடனே சுதாரித்துக் கொண்டேன். அப்போது எனக்கு ராமராஜன் சார் தான் ஞாபகம் வந்தது. உடனே மாங்குயிலே பூங்குயிலே போல ஒரு பாடல் வேண்டுமென கேட்டேன். அப்படித்தான் ‘மல்லிகை மொட்டு மனச தொட்டு’ என்று ஒரு பாடலை போட்டு தந்தார். அந்த பாடல் அப்போது மிகப்பெரிய ஹிட் ஆகி இப்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

என்னுடைய வாழ்க்கையில் அந்தந்த சமயங்களில் நடக்கும் சம்பவங்களில் எல்லாமே ஒருவர் உள்ளே வருவார்.. அவர் தான் ராமர்.. ராமராஜன்” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

The post இளையராஜாவிடம் தேவா பாடலை பாடி காட்டிய கே.எஸ்.ரவிக்குமார் appeared first on Touring Talkies.

]]>
“இளையராஜாவிடம் எனக்குப் பிடித்த விஷயம்:  ஏ.ஆர்.ரகுமான் https://touringtalkies.co/a-r-rahman-told-about-ilaiyaraja/ Tue, 21 Mar 2023 00:17:12 +0000 https://touringtalkies.co/?p=30841 சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி பற்றியும், இசைஞானி இளையராஜா பற்றியும் பேசினார். “எனக்கு சைக்கிள் ஓட்றது ரொம்பப் பிடிக்கும். கேரளால இருக்கும்போது ஓட்டிருக்கேன். மியூசிக், மூவி பார்க்குறது தான் பொழுது போக்கு. அது கூட எவ்ளோ நேரம் பாரக்க முடியும்…? டிராவல் பண்றது ரொம்பப் பிடிக்கும். வேற நாட்டுக்கு… வேற மாநிலத்துக்குன்னு போகும் போது நமக்குள்ள ஒரு வைப்ரேஷன் வரும். அது புதுப்புது எண்ணங்களை உண்டாக்கி நம்மை பிரஷாக்கும். ஒரு இசைக்கலைஞன்னா அவன் தண்ணி […]

The post “இளையராஜாவிடம் எனக்குப் பிடித்த விஷயம்:  ஏ.ஆர்.ரகுமான் appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி பற்றியும், இசைஞானி இளையராஜா பற்றியும் பேசினார்.

“எனக்கு சைக்கிள் ஓட்றது ரொம்பப் பிடிக்கும். கேரளால இருக்கும்போது ஓட்டிருக்கேன். மியூசிக், மூவி பார்க்குறது தான் பொழுது போக்கு.

அது கூட எவ்ளோ நேரம் பாரக்க முடியும்…? டிராவல் பண்றது ரொம்பப் பிடிக்கும். வேற நாட்டுக்கு… வேற மாநிலத்துக்குன்னு போகும் போது நமக்குள்ள ஒரு வைப்ரேஷன் வரும். அது புதுப்புது எண்ணங்களை உண்டாக்கி நம்மை பிரஷாக்கும்.

ஒரு இசைக்கலைஞன்னா அவன் தண்ணி அடிப்பான். பொண்ணுங்களோட சுத்திக்கிட்டு இருப்பான்.

அவனுக்குக் கேரக்டர் இருக்காது என்கிற களங்கத்தை உண்டுபண்ணிட்டாங்க. இதனால இசைக்கலைஞனா அய்யய்யோ…. அந்தப் பக்கம் போகாதே… நீ பாடப் போறீயா… ஜாக்கிரதையா இரு. இளையராஜா சாருக்கிட்ட தான் பர்ஸ்ட் நான் பார்த்தேன். அந்த களங்கத்தை உடைத்தெறிந்தவர் இளையராஜா.

ஒரு சாமியார் மாதிரி உட்கார்ந்துக்கிட்டு இருப்பாரு.  தண்ணி அடிக்க மாட்டாரு, தம் அடிக்க மாட்டாரு. வேற கெட்டப்பழக்கம் கிடையாது. மியூசிக்னால அவ்ளோ ரெஸ்பெக்ட். அந்த விஷயம் இன்னும் என்னை பாதிச்சிட்டு. அவரைப் பார்க்கும்போது நடுங்குவாங்க. எதனாலன்னா அவரோட கேரக்டரனால. நான் வரும்போது அந்த ஸ்டூடியோவுல அவ்ளோ ரெஸ்பெக்ட்.

ஒரு மனுஷன்னு இருந்தா கலையை விட உள்ளுக்குள்ள இருக்குற ஸ்பிரிச்சுவல் எனர்ஜி… வந்து எந்த விஷயத்துல போனாலும் அதுல நல்லா பண்ணனும்… அந்த இன்டன்சன் இருக்கும்போது அதுல நல்லா ஆயிடுவோம்” என்றார்  ரஹ்மான்.

The post “இளையராஜாவிடம் எனக்குப் பிடித்த விஷயம்:  ஏ.ஆர்.ரகுமான் appeared first on Touring Talkies.

]]>
23 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்தது இளையராஜா-ராமராஜன் கூட்டணி https://touringtalkies.co/ilaiyaraja-and-ramarajan-reunite-after-23-years-in-chaamanyan-movie/ Thu, 10 Nov 2022 16:33:02 +0000 https://touringtalkies.co/?p=26923 1980, 1990-களில் ‘மக்கள் நாயகன்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன். கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர். இந்த 45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், தற்போது ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட,  அதேசமயம் தரமான படங்களைத் தயாரிக்கும்  ‘எட்செட்ரா என்டர்டெய்ன்மெண்ட்’ சார்பில் […]

The post 23 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்தது இளையராஜா-ராமராஜன் கூட்டணி appeared first on Touring Talkies.

]]>
1980, 1990-களில் மக்கள் நாயகன்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன்.

கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர்.

இந்த 45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், தற்போது ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட,  அதேசமயம் தரமான படங்களைத் தயாரிக்கும்  ‘எட்செட்ரா என்டர்டெய்ன்மெண்ட்’ சார்பில் V.மதியழகன் இந்த படத்தைத் தயாரித்து வருகிறார்.

நடிகர்களான ராதாரவி, எம்.எஸ்பாஸ்கர் இருவரும் இந்தப் படத்தில் இணை நாயகர்களாக நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத் தொகுப்பை  ராம் கோபி கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார். பத்திரிகை தொடர்பு – A. ஜான்

‘தம்பிக்கோட்டை’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநரான R. ராகேஷ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

‘சாமானியன்’படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மணி மகுடத்தில் வைரம் சூட்டியது போல இந்த படத்திற்கு இசையமைக்க இசை ஞானி’ இளையராஜா தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

எப்போதுமே ராமராஜனையும், இளையராஜாவையும் பிரித்துப் பார்க்க முடியாது.  ராமராஜன் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்து, அவரது வெற்றிக்கு துணை நின்று காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்துள்ளார் ராஜா.

இன்னும் சொல்லப் போனால் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக பல வெற்றிப் பாடல்களை ராமராஜனுக்கு இசைத்துள்ளார் மேஸ்ட்ரோ.

தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிப்பிற்குத் திரும்பியுள்ள ராமராஜனின் படத்திற்கு இசைஞானி  இசையமைப்பதை விட பொருத்தமான அம்சம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

இந்தப் படம் தொடர்பாக நேற்று மேஸ்ட்ரோ ராஜாவை நேரில் சந்தித்து பேசினார் ராமராஜன். அப்போது ராஜாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நெகிழ்ந்தபடி மனம்விட்டு பேசிய ராமராஜன்,  “நான் பல வருடங்கள் கழித்து நடிப்பிற்குத் திரும்பி உள்ளேன். இந்தப் படத்திற்கு நீங்கள்தான் இசையமைக்க வேண்டும்” என உரிமையுடன் கேட்க, இளையராஜாவும் அதற்கு மனப்பூர்வ சம்மதம் தெரிவித்துள்ளார்.

படத்தின் இயக்குநரான R. ராகேஷ் இந்த சந்திப்பு பற்றி கூறும்போது,  “இந்த ‘சாமானியன்’ என்கிற இந்த கதைக்கு மிகப் பொருத்தமானவராக மனதில் தோன்றிய முதல் நடிகர் ராமராஜன்தான்.

காரணம், சாமானிய மக்கள் இன்றும் தங்களில் ஒருவராகத்தான் அவரைப் பார்க்கிறார்கள்.. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக அவர் மறுபிரவேசம் செய்வதற்கு ஏற்ற கதையாக இந்த  படம் அமைந்துள்ளது.

தற்போது இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக் கொண்டது இந்த படத்திற்கான மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.  குறிப்பாக இவர்களது கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால் ராமராஜனின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது உறுதி.

ராமராஜனின் பல வெற்றிப் படங்களை இயக்கி, அவரது திரையுலக பயணத்திற்கு உறுதுணையாக நின்றவர் இயக்குநர் கங்கை அமரன். அவர் மூலமாக இளையராஜாவை அணுகி இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமராஜன், ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் மூவரும் போட்டி போட்டு நடிக்கும் காட்சிகளை இயக்கியது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்.

மிக முக்கியமாக, பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒரு அருமையான பாடலை எழுதியுள்ளார்.  கவிஞர் சினேகனும் அழகான பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளார்.. இந்த படத்தின் வெற்றியின்  அம்சங்களில் ஒன்றாக இசைஞானியின் இசையும் இருக்கும். தற்போது படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.” என்றார்.

இதற்கு முன்னதாக 1999ல் ராமராஜன் நடிப்பில் வெளியான ‘அண்ணன்’ என்கிற படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்தவகையில் 23 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது.

இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

The post 23 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்தது இளையராஜா-ராமராஜன் கூட்டணி appeared first on Touring Talkies.

]]>
இளையராஜா இசையமைத்துள்ள ஆங்கிலப் படம் https://touringtalkies.co/ilaiyaraja-make-music-to-english-movie-a-beautiful-break-up/ Mon, 27 Jun 2022 06:03:22 +0000 https://touringtalkies.co/?p=22846 ‘இசை ஞானி’ இளையராஜா இசையமைத்துள்ள  ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின்  ‘கம் ஃப்ரீ மீ’ பாடல் உலக  இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது. ’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா மற்றும் மேட்டில்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பல முக்கியமான திரைக் கலைஞர்களும், தொழிற் நுட்ப வல்லுநர்களும் இப்படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள். இப்படத்திற்கான […]

The post இளையராஜா இசையமைத்துள்ள ஆங்கிலப் படம் appeared first on Touring Talkies.

]]>
இசை ஞானி’ இளையராஜா இசையமைத்துள்ள  ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின்  ‘கம் ஃப்ரீ மீ’ பாடல் உலக  இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது.

’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா மற்றும் மேட்டில்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பல முக்கியமான திரைக் கலைஞர்களும், தொழிற் நுட்ப வல்லுநர்களும் இப்படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள்.

இப்படத்திற்கான ‘இசை ஞானி’ இளையராஜாவின் பங்கு, படத்தின் பிம்பத்தை பெரிய அளவில் உயர்த்துகிறது. உலகெங்கிலும் பலகோடி ரசிகர்களைக் கொண்ட ஒரு இசை மேதை இப்படத்திற்காக தனது சிறந்த இசையை வழங்கியுள்ளது பெருமைக்குரியதாகும்.

‘இசை ஞானி’ வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு திகில் படத்திற்குள் தன்னை இணைத்துக் கொள்ளும் திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கான பின்னணி இசை, அவரின் பரந்த இசை ஞானத்திலிருந்து மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்காக BOW TIE Symphony Orchestra-ல் மாயாஜாலமான அசல் ஒலிப்பதிவுகளை இளையராஜா உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் இளையராஜா அளித்திருந்த ஒரு நேர்காணலில்கூட, ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தையும், அதன் இயக்குநரையும் வெகுவாக பாராட்டி பேசியிருந்தார். 

‘இசை ஞானி’யின் இசை தொடரியல், முற்றிலும் தனித்துவமானதாக இருப்பதால், மேற்கத்திய பார்வையாளர்கள் அதனை மொத்தமாக கொண்டாடுகிறார்கள். எனவே, ‘இசை ஞானி’யின் PR டீம், இந்தப் படத்தின் இசையை சாதாரணமாக விளம்பரப்படுத்தாமல், ஆஸ்கார் கிராமி, கோல்டன் குளோப் போன்ற பிற பொருத்தமான, தகுதியான மன்றங்களில் போட்டிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் மூலம், 12-வது தாதாசாஹேப் பால்கே திரைப்பட விழா விருதுகளில் சிறந்த பின்னணி இசையை வென்றது மட்டுமல்லாமல், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) பிரிவில் ஸ்ரீகாந்த் கண்டாலாவுக்கு சிறந்த படத்திற்கான விருதையும் A Beautiful Breakup பெற்றது. மேலும் சில சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கு பெற்று, சிறந்த படமாக தேர்வாகியுள்ளது.

The post இளையராஜா இசையமைத்துள்ள ஆங்கிலப் படம் appeared first on Touring Talkies.

]]>
இளையராஜா-யுவன்சங்கர்ராஜா மீது பகிரங்கமாக புகார் எழுப்பிய இயக்குநர் சீனு ராமசாமி https://touringtalkies.co/director-seenu-ramasamy-complaint-againts-ilayaraja-and-yuvan/ Fri, 17 Jun 2022 17:49:54 +0000 https://touringtalkies.co/?p=22704 யுவன்சங்கர் ராஜாவின் YSR FILMS நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் ‘மாமனிதன்’. இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். குடும்ப, டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. Studio 9 நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.K.சுரேஷ் இப்படத்தை வெளியிடுகிறார்.  இதையொட்டி இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று படக் குழுவினர் கலந்து கொள்ள பிரசாத் லேப் […]

The post இளையராஜா-யுவன்சங்கர்ராஜா மீது பகிரங்கமாக புகார் எழுப்பிய இயக்குநர் சீனு ராமசாமி appeared first on Touring Talkies.

]]>
யுவன்சங்கர் ராஜாவின் YSR FILMS நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் மாமனிதன்’.

இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

குடும்ப, டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. Studio 9 நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.K.சுரேஷ் இப்படத்தை வெளியிடுகிறார். 

இதையொட்டி இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று படக் குழுவினர் கலந்து கொள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது படத்தின் பாடல் உருவாக்கத்திலும், பின்னணி இசை சேர்ப்பின்போதும் இசைஞானியும், யுவன் சங்கர் ராஜாவும் தன்னை அருகிலேயே விடவில்லை. தன்னை அழைக்கவேயில்லை. தனக்குத் தெரியாமலேயே இந்த வேலைகளை செய்து முடித்தனர் என்று பகிரங்கமாக புகார் தெரிவித்தார்.

அவர் பேசும்போது, “இத்திரைப்படம் மூலமாக உலகமே விஜய் சேதுபதியை திரும்பிப் பார்க்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தக் கதை இதே திரையுலகத்தில் பல நாயகர்களால் நிராகரிக்கப்பட்ட கதைதான். அப்போதுதான் விஜய் சேதுபதி என்னை அழைத்தார். பின்னர் இந்த படம் ஆரம்பமானது.

முதலில் இந்த படத்தில் கார்த்திக் ராஜா – யுவன் சங்கர் ராஜா – இளையராஜா மூவரும் இணைந்து இசையமைப்பதாக இருந்தது. பின்னர் கார்த்திக் ராஜா ஒரு சில காரணங்களால் விலகிவிட்டார்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தை தயாரிக்க முடிவெடுத்தபோது, நான் அவர்களுக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படியே, இந்தப் படத்தின் காட்சிகள் இளையராஜா அவர்கள் வாழ்ந்த இடத்தில் படமாக்க விரும்பினேன். அவர் பிறந்து, வாழ்ந்த தேனி, பண்ணைபுரத்தில் இந்தப் படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டது.

நான் பல நடிகைகளிடம் இந்தப் படத்திற்கா கதை சொன்னேன். பலருக்கு இரண்டாம் பாதியில் விருப்பம் இல்லை. அதனால் நடிக்க மறுத்துவிட்டார்கள். அப்போது காயத்ரிதான் தைரியமாக முன் வந்து இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். இந்தக் படத்திற்காக காயத்ரிக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும்.

நடிகர்களுக்குள் இருக்கும் இயல்புணர்ச்சியை என்னுடைய ஒவ்வொரு படத்திலும் வெளிக்கொண்டு வருகிறேன். இந்த படத்தை ஜீவா மற்றும் இளையராஜாவிற்கு அர்ப்பணித்து இருக்கிறேன். நம்மை சுற்றியுள்ள மாமனிதர்களை அடையாளப்படுத்தும் படம்தான் இது.

ஆனால், இந்தப் படத்தில் எனக்கு மோசமான சம்பவங்களும் நேர்ந்துள்ளது. இசைஞானி இளையராஜாவும் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்தார்கள். படத்தின் பாடல் பதிவின் போதும், பின்னணி இசை சேர்ப்பின் போதும் ஒரு இயக்குநராக அவர்கள் என்னை அழைக்கவேயில்லை. என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை. படத்தின் பாடல்கள் எழுதிய கவிஞர்கள்கூட யாரும் என்னிடம் அவர்கள் எழுதிய பாடல் வரிகளை காண்பிக்கவில்லை.

படத்தின் இயக்குநரான என்னிடம் எதுவும் கேட்காமல் யுவன் ஷங்கர் ராஜாவும், இசைஞானியும் இப்படி தன்னிச்சையாக நடந்து கொண்டது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. யுவனின் கூடா நட்பால்தான் நான் இந்த அளவுக்கு நிராகரிக்கப்பட்டேன்…” என மிகவும் வேதனையுடன் பேசியவர் சில நிமிடங்கள் பேச முடியாமல் மேடையிலேயே அழுதார். விஜய் சேதுபதி எழுந்து வந்து சீனு ராமசாமியை அணைத்து ஆறுதல் சொல்லித் தேற்றினார்.

படத்தின் தயாரிப்பாளரான யுவன் சங்கர் ராஜா இன்றைய நிகழ்ச்சிக்கு வராததும், அவரைப் பற்றியும், அவரது தந்தையான இசைஞானியைப் பற்றியும் இயக்குநர் சீனு ராமசாமி வெளிப்படையாக வைத்த குற்றச்சாட்டும் தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

The post இளையராஜா-யுவன்சங்கர்ராஜா மீது பகிரங்கமாக புகார் எழுப்பிய இயக்குநர் சீனு ராமசாமி appeared first on Touring Talkies.

]]>