Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
hotstar – Touring Talkies https://touringtalkies.co Fri, 18 Aug 2023 06:57:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png hotstar – Touring Talkies https://touringtalkies.co 32 32 விமர்சனம்: மத்தகம் https://touringtalkies.co/mathagam-web-series-review/ Fri, 18 Aug 2023 06:57:21 +0000 https://touringtalkies.co/?p=35414 அதர்வா, ஜெய்பீம் மணிகண்டன் நிகிலா விமல் நடித்து டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இன்று (ஆகஸ்ட் 18 ஆம் தேதி)  வெளிவர உள்ள வெப் தொடர் மத்தகம். மத்தகம் என்றால் யானையின் நெற்றிப் பகுதி என்று அர்த்தம்.பிரசாத் முருகேசன் இயக்க,  ஸ்க்ரீன் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் ஒரு லோக்கல் தாதாவை கைது செய்கிறார்கள். தாதா படாளாம் சேகர் என்ற தாதாவிற்காக வேலை செய்வதாக சொல்கிறான். காவல் துறையின் ஆவணங்களின் […]

The post விமர்சனம்: மத்தகம் appeared first on Touring Talkies.

]]>
அதர்வா, ஜெய்பீம் மணிகண்டன் நிகிலா விமல் நடித்து டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இன்று (ஆகஸ்ட் 18 ஆம் தேதி)  வெளிவர உள்ள வெப் தொடர் மத்தகம்.

மத்தகம் என்றால் யானையின் நெற்றிப் பகுதி என்று அர்த்தம்.பிரசாத் முருகேசன் இயக்க,  ஸ்க்ரீன் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் ஒரு லோக்கல் தாதாவை கைது செய்கிறார்கள். தாதா படாளாம் சேகர் என்ற தாதாவிற்காக வேலை செய்வதாக சொல்கிறான். காவல் துறையின் ஆவணங்களின் படி படாளாம் சேகர் இறந்து விட்டதாக இருக்கிறது.

இந்த நிலையில், தாதா சேகர் திரைமறைவில் இருந்துகொண்டு  பிறந்தநாள் விழாவிற்கு ஏற்பாடு செய்கிறான்.

படாளத்தை பின் தொடர்ந்து தாதாக்களை கண்டு பிடித்து அழிக்க முயற்சிசெய்கிறார் காவல் துறை அதிகாரி அஸ்வத்.

மத்தகம் இது வரை அதிகம் சொல்லாத கேங்ஸ்டர் திரில்லர் வகையை சேர்ந்தது. தொடர் தொடங்கி முதல் எபிசோட்டின் முதல் காட்சியிலிருந்து பரபரப்பாக நகர தொடங்கி விடுகிறது. கதை ஒரு நேர்கோட்டில் பயணித்தாலும் எங்கேயும் சுவாரசியம் குறையவில்லை.ஒவ்வொரு காட்சியையும் மிகவும் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார் டைரக்டர். தேவையில்லாத ஒரு காட்சியோ, கேரக்டரோ இல்லை. ஒடிடி யில் மட்டுமே தொடராக ரசிக்கும் படியான திரைக்கதையை விரிவாக தந்துள்ளார் இயக்குநர்.

ஒரு நேர்மையான காவல் அதிகாரியாகயும், ஒரு சரராசரி குடும்ப தலைவனாகவும் சிறந்த நடிப்பை தந்துள்ளார் அதர்வா. நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் நன்றாக நடிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தியுள்ளார். நிகிலா அன்புக்கு ஏங்கும் ஒரு மனைவியாக உள்வாங்கி உணர்வுகளை தந்துள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவருகிறார் மணிகண்டன்.அறிவை பயன்படுத்தி தாதா வேலையை செய்யும் மாறுபட்ட படாளம் சேகர் காதாபாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளார் மணிகண்டன்.

மூணார் ரமேஷ், தில்னாஷ் இராணி, கெளதம் மேனன் உடப்பட அனைவரும் சரியான நடிப்பை தந்துளார்கள். எட்வின் சாகோவின் ஒளிப்பதிவு தொடரை சில படிகள் மேலே உயர்த்த உதவி உள்ளது.சிறந்த ஓ டி டி தொடர் படங்களின் வரிசையில் மத்தகம் தொடருக்கு முக்கிய இடம் உள்ளது. அதிகம் ரத்தம் சிந்ததாத இந்த கேங்ஸ்டர் திரில்லர் கதையை குடும்பத்துடன் ரசிக்கலாம்.

The post விமர்சனம்: மத்தகம் appeared first on Touring Talkies.

]]>
  “மத்தகம்” வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் ! https://touringtalkies.co/mathagam-web-series/ Tue, 02 May 2023 04:12:43 +0000 https://touringtalkies.co/?p=32113 இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த வெப் சீரிஸான ‘மத்தகம்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. Screen Scene Media Entertainment தயாரிப்பில், உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸை இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும், இந்த வெப் சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி […]

The post   “மத்தகம்” வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் ! appeared first on Touring Talkies.

]]>
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த வெப் சீரிஸான ‘மத்தகம்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.

Screen Scene Media Entertainment தயாரிப்பில், உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸை இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார்.

நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும், இந்த வெப் சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியை குறிக்கும் சொல் ஆகும். யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும்.

இயக்குநர் பிரசாத் முருகேசன் படம் குறித்துக் கூறுகையில்..
30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் சீரிஸ் தான் “மத்தகம்”.

ஒரு இரவில் நாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தைப் படம்பிடித்தது சவாலானதாக இருந்தது. இந்த சீரிஸ் ரசிகர்களுக்குக் கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.

இந்த வெப் சீரிஸுக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார், எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார்.

இந்த சீரிஸுன் பரப்பரப்பான ஆக்சன் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார். சுரேஷ் கல்லரி கலை இயக்கம் செய்துள்ளார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது இந்தியாவில்  பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது

The post   “மத்தகம்” வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் ! appeared first on Touring Talkies.

]]>