Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
fefsi union – Touring Talkies https://touringtalkies.co Mon, 23 May 2022 13:38:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png fefsi union – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஜூன் 1-ம் தேதி முதல் ஸ்டிரைக் – திரையுலகத்தில் அடுத்த சலசலப்பு..! https://touringtalkies.co/outdoor-unit-threaten-to-strike-in-film-industry-from-june-1/ Mon, 23 May 2022 13:38:05 +0000 https://touringtalkies.co/?p=22239 தமிழ்த் திரைப்பட துறையில் அடுத்த சலசலப்பினை தென்னிந்திய டிவி அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கத்தினர் துவக்கியிருக்கிறார்கள். வரும் ஜுன் 1-ம் தேதி முதல் தங்களது சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக இந்தச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணங்களாக தமிழ்நாடு சினி அண்ட் டிவி அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன் யூனியனை தங்களது அமைப்பில் இருந்து நீக்கப் போவதாக பெப்சி அமைப்பு எச்சரிக்கைக் கடிதம் கொடுத்திருப்பதும், அவுட்டோர் டெக்னீஷியன் யூனியனில் இருந்து போதுமான ஊழியர்கள் வேலைக்கு […]

The post ஜூன் 1-ம் தேதி முதல் ஸ்டிரைக் – திரையுலகத்தில் அடுத்த சலசலப்பு..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட துறையில் அடுத்த சலசலப்பினை தென்னிந்திய டிவி அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கத்தினர் துவக்கியிருக்கிறார்கள்.

வரும் ஜுன் 1-ம் தேதி முதல் தங்களது சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக இந்தச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணங்களாக தமிழ்நாடு சினி அண்ட் டிவி அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன் யூனியனை தங்களது அமைப்பில் இருந்து நீக்கப் போவதாக பெப்சி அமைப்பு எச்சரிக்கைக் கடிதம் கொடுத்திருப்பதும், அவுட்டோர் டெக்னீஷியன் யூனியனில் இருந்து போதுமான ஊழியர்கள் வேலைக்கு வராமல் இருப்பதும்தான் என்று தென்னிந்திய டிவி அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தென்னிந்திய டிவி அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், “கடந்த சில வருடங்களாகவே திரைப்பட படப்பிடிப்புகளுக்கு லைட்மேன், மற்றும் டெக்னீஷியன்கள் சரிவர வேலைக்கு வராததால் அதிக எண்ணிக்கையில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சம்பள உயர்வுக்குப் பின்னரும் தொழிலாளர்கள் பற்றாக்குறை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதனால் படப்பிடிப்புக்கு அனுப்பும் உபகரணங்களுக்கான தொழிலாளர்களை அனுப்புவதில் ஆட்கள் கிடைக்காமல், குறிப்பிட்ட கால்ஷீட் நேரத்துக்குள் யூனிட்டை அனுப்பி வைப்பது எங்களது சங்கத்தைச் சேர்ந்த அவுட்டோர் யூனிட் உரிமையாளர்களுக்கு பெரும் சவலாக உள்ளது.

மதியம் 2 மணி, மாலை 6 மணி, இரவு 9 மணி கால்ஷீட்டுகளுக்கு சுத்தமாக தொழிலாளர்கள் வேலைக்கு வருவதே இல்லை. இது சம்பந்தமாக கடந்த மார்ச் மாதமே உங்களது சங்க நிர்வாகிகளிடத்தில் நேரில் விளக்கம் அளித்திருக்கிறோம்.

மேலும் லைட்மேன் சங்க நிர்வாகிகளை கடந்த ஏப்ரல் 22-ம் தேதியன்று அழைத்துப் பேசிய பின்னரும், அவர்கள் இப்போதுதான் தங்களது சங்கத்தின் தொழிலாளர்களை வாட்ஸ்அப்பில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனெனில் மொத்தம் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கும் அந்தச் சங்கத்தில் தற்போது வேலை பார்ப்பதே வெறும் 600 தொழிலாளர்கள்தான். இனிமேலும் எங்களால் இந்த நிலைமையைச் சமாளிக்க முடியாது.

மற்றும் திரைப்பட தொழிலாளர் நலனுக்காக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், நாங்களும் இணைந்து உருவாக்கிய தமிழ்நாடு சினி டிவி அவுட்டோர் டெக்னீஷியன் யூனியனை பெப்சி அமைப்பில் இருந்து நீக்கிவிடுவோம் என்று மிரட்டல்  தொனியில் எச்சரிக்கும் கடிதம் பெப்சி அமைப்பில் வந்து வந்துள்ளது.

தற்போது நமக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் தமிழ்நாடு சினி அண்ட் டிவி அவுட்டோர் டெக்னீஷியனை முடக்கும் செயலில் பெப்சி அமைப்பு இறங்கியுள்ளது.

இது சார்ந்த அனைத்து விஷயங்களிலும் ஒரு நல்ல முடிவை எடுக்கும்விதமாக வரும் ஜூன் 1-ம் தேதி முதல் எங்களது செளத் இந்தியன் டிவி அவுட்டோர் யூனிட் ஓனர்ஸ் அசோஸியேஷன் உறுப்பினர்கள் யாரும் படப்பிடிப்புகளுக்கு உபகரணங்களை அனுப்புவதில்லை என முடிவு செய்திருக்கிறோம் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்..” என்று குறிப்பிட்டுள்ளனர்.

பெப்ஸி அமைப்புக்கும் தமிழ்நாடு சினி அண்ட் டிவி அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன் அமைப்புக்கும் என்ன பிரச்சினை என்று விசாரித்தபோது, அந்தச் சங்கத்தினர் தங்களது சங்கத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணமாக மூன்று லட்சம் ரூபாயை வசூலிக்கும்படி பெப்ஸி சொல்கிறதாம்.

உறுப்பினர்களின் கட்டணத்தை இப்படி அதிரடியாக உயர்த்தியதற்காக அவுட்டோர் யூனிட் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால்தான் “எங்களது அறிவுறுத்தலை ஏற்காவிட்டால் எங்களது அமைப்பில் இருந்து உங்களது சங்கத்தை நீக்கிவிடுவோம்” என்று பெப்ஸி அமைப்பு, டெக்னீஷியன் யூனியனுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாம்.

தற்போது அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கத்தினரின் இந்தத் தடாலடி முடிவால், வரும் ஜுன் 1–ம் தேதி முதல் படப்பிடிப்புகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக சினிமா, டிவி படப்பிடிப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வேலை நிறுத்தம் நடந்தால் அது திரைப்பட துறையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்.

இது தொடர்பாக விரைவில் திரையுலகத்திற்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

The post ஜூன் 1-ம் தேதி முதல் ஸ்டிரைக் – திரையுலகத்தில் அடுத்த சலசலப்பு..! appeared first on Touring Talkies.

]]>
சிம்பு பட ஷூட்டிங்கிற்கு தயாரிப்பாளர் சங்கமும் அனுமதி கொடுத்தது – ஆர்.கே.செல்வமணியின் விளக்கம் https://touringtalkies.co/producers-association-also-gave-permission-for-simbu-film-shooting-rk-selvamanis-explanation/ Sun, 08 Aug 2021 05:37:59 +0000 https://touringtalkies.co/?p=16866 நடிகர் சிம்பு விவகாரத்தில் பெப்சி அமைப்பு தயாரிப்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டதாக சொல்லி ‘பெப்சி’யுடனான அனைத்து ஒப்பந்தங்களில் இருந்தும் விலகிக் கொள்வதாக நேற்று காலை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்தது. இதையடுத்து நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த ‘பெப்சி’ அமைப்பின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இது குறித்து தன்னிலை விளக்கம் அளித்த கையோடு இது குறித்து பெப்சியின் சார்பில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டார். அது இங்கே :

The post சிம்பு பட ஷூட்டிங்கிற்கு தயாரிப்பாளர் சங்கமும் அனுமதி கொடுத்தது – ஆர்.கே.செல்வமணியின் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்பு விவகாரத்தில் பெப்சி அமைப்பு தயாரிப்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டதாக சொல்லி ‘பெப்சி’யுடனான அனைத்து ஒப்பந்தங்களில் இருந்தும் விலகிக் கொள்வதாக நேற்று காலை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்தது.

இதையடுத்து நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த ‘பெப்சி’ அமைப்பின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இது குறித்து தன்னிலை விளக்கம் அளித்த கையோடு இது குறித்து பெப்சியின் சார்பில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்.

அது இங்கே :

The post சிம்பு பட ஷூட்டிங்கிற்கு தயாரிப்பாளர் சங்கமும் அனுமதி கொடுத்தது – ஆர்.கே.செல்வமணியின் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>