Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
elvin juliet – Touring Talkies https://touringtalkies.co Mon, 28 Nov 2022 17:57:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png elvin juliet – Touring Talkies https://touringtalkies.co 32 32 அனிருத்திடம் சொன்ன பொய்…இயக்குனர் நெல்சன் https://touringtalkies.co/the-lie-told-to-anirudh-director-nelson/ Mon, 28 Nov 2022 17:56:59 +0000 https://touringtalkies.co/?p=27783 தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் நெல்சன் திலீப்குமார். வேட்டை மன்னன்,கோலமாவு கோகிலா,டாக்டர்,விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். பிரபல இயக்குனராக விலங்கும் நெல்சன் ஒரு பேட்டி ஒன்றில் நீங்கள் யாரிடமாவது பொய் சொன்னீர்களா  என்று கேட்டதற்கு சொல்லிய அனுபவத்தை கூறினார். இசை சீக்கிரம் முடித்து தருவதற்காக அனிருதிடம் பொய் சொல்லியிருக்கிக்கிறேன். அவருக்கு நான் சொல்வது பொய் என்று தெரிந்தாலும், நண்பனாக சிரித்துக் கொண்டு முடித்து கொடுத்து விடுவார் என்றார்.  .

The post அனிருத்திடம் சொன்ன பொய்…இயக்குனர் நெல்சன் appeared first on Touring Talkies.

]]>

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் நெல்சன் திலீப்குமார்.

வேட்டை மன்னன்,கோலமாவு கோகிலா,டாக்டர்,விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். பிரபல இயக்குனராக விலங்கும் நெல்சன் ஒரு பேட்டி ஒன்றில் நீங்கள் யாரிடமாவது பொய் சொன்னீர்களா  என்று கேட்டதற்கு சொல்லிய அனுபவத்தை கூறினார்.

இசை சீக்கிரம் முடித்து தருவதற்காக அனிருதிடம் பொய் சொல்லியிருக்கிக்கிறேன். அவருக்கு நான் சொல்வது பொய் என்று தெரிந்தாலும், நண்பனாக சிரித்துக் கொண்டு முடித்து கொடுத்து விடுவார் என்றார்.

 .

The post அனிருத்திடம் சொன்ன பொய்…இயக்குனர் நெல்சன் appeared first on Touring Talkies.

]]>
சஸ்பென்ஸ், த்ரில்லர் கலந்த ‘ஐமா’ திரைப்படம் https://touringtalkies.co/aimaa-movie-preview-news/ Tue, 15 Nov 2022 17:23:35 +0000 https://touringtalkies.co/?p=27100 புதுமையான உணர்வை கொடுக்கும் தகுதியான படங்களுக்கு  தமிழ் ரசிகர்களிடம் அங்கீகாரமும் வரவேற்பும் கிடைக்கும் காலம் இதுவாகும். அந்த தமிழ் ரசிகர்களின் ரசனையை மட்டும் நம்பி உருவாகி இருக்கும் படம்தான் ‘ஐமா’. ஏனென்றால் இது வழக்கமான த்ரில்லர் படம் அல்ல. புதுமையை விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாகியுள்ள திரைப்படம் இது. தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films )நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ,’ஐமா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகன் யூனஸ், கதாநாயகி எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், […]

The post சஸ்பென்ஸ், த்ரில்லர் கலந்த ‘ஐமா’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
புதுமையான உணர்வை கொடுக்கும் தகுதியான படங்களுக்கு  தமிழ் ரசிகர்களிடம் அங்கீகாரமும் வரவேற்பும் கிடைக்கும் காலம் இதுவாகும். அந்த தமிழ் ரசிகர்களின் ரசனையை மட்டும் நம்பி உருவாகி இருக்கும் படம்தான் ‘ஐமா’. ஏனென்றால் இது வழக்கமான த்ரில்லர் படம் அல்ல. புதுமையை விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாகியுள்ள திரைப்படம் இது.

தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films )நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ,’ஐமா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகன் யூனஸ், கதாநாயகி எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன்,சிஷிரா, சாஜி ஆகியோருடன் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் கே.ஆர்.ராகுல். இவர் பல விளம்பரப் படங்களில் பணியாற்றியுள்ளார். சில குறும் படங்களிலும் சில மலையாள திரைப்படங்களிலும் இசையமைத்துள்ளார். பாடல்களை புது கவிஞரான பாடலாசிரியர்  அருண்மணியன் எழுதியுள்ளார். இந்த திரில்லர் திரைப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் உண்டு.

ஒளிப்பதிவு – விஷ்ணு கண்ணன். படத் தொகுப்பு – அருண் ராகவ். இவரும் சில மலையாளப் படங்களில் பணியாற்றியவர். சண்டைப் பயிற்சி இயக்கம் – அஷ்ரப் குருக்கள், கலை இயக்கம் – ஜீமோன், இப்படத்தை எழுதி இயக்கியவர் ராகுல்.ஆர். கிருஷ்ணா.இவர் தமிழ், மலையாளத்தில் சில குறும்படங்களில் பணி புரிந்துள்ளார். ‘ஆருயிரே’ எனும் குறும் படத்தை இயக்கியுள்ளார். தமிழ் படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட புது இயக்குநர்.

இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் ராகுல்  ஆர்.கிருஷ்ணா பேசும்போது, “ஐமா’ எனும் சொல்லில் (ஐ ) எனும் எழுத்து தெய்வத்தையும், (மா) எனும் எழுத்து வலிமையையும் குறிக்கிறது. ஆகவே ‘ஐமா’ எனும் சொல் இறைவனின் வலிமை என்பதைக் குறிக்கும். எந்த உயிர்களுக்கும் தீங்கு நினைக்காத இரு மனிதர்களுக்கு  ஏற்படும் தடைகளையும், துரோகங்களையும், ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளும் சுவாரசியத்தை சொல்லும் விளையாட்டின் ஆட்டம்தான் இந்த ‘ஐமா’ படம்.

துரோகங்கள், துன்பங்கள், சோதனைகள், வேதனைகள், தடைகள், தடுமாற்றங்கள் இவற்றை எதிர்கொள்ளும் அனுபவத்தில் ஆரம்பிக்கும் ஆற்றலின் விளக்கமே ‘ஐமா’ திரைப்படம். எளிதாக புரியும்படி சொன்னால் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினைகள் கட்டாயம் உண்டு என்பதைச் சொல்லும் படம் இது.

பல தடைகளைத் தாண்டி என் கதையை திரைப்படமாக கொண்டு வந்துள்ளேன்.படத்தை பார்ப்பவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறி காட்சியை பார்க்காமல் தவறினால் படத்தின் கதையே புரியாமல் போகும் வாய்ப்பும் உண்டு.  சஸ்பென்ஸ் ,சுவாரஸ்யம் நிறைந்த ஒரு திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. 9 கதாபாத்திரங்களைச் மட்டும் சுற்றித்தான் இந்த கதையே நடக்கிறது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் குட்டிக்காணம், குமுளி, பாலக்காடு போன்ற பகுதியில் நடைபெற்றுள்ளது.” என்றார்.

The post சஸ்பென்ஸ், த்ரில்லர் கலந்த ‘ஐமா’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
‘ஐமா’ சர்வைவல் – சஸ்பென்ஸ் – த்ரில்லர் கலந்த திரைப்படம் https://touringtalkies.co/aima-is-a-combination-of-survival-suspense-thriller/ Tue, 01 Nov 2022 18:23:50 +0000 https://touringtalkies.co/?p=26376 புதுமையான உணர்வை கொடுக்கும் தகுதியான படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் அங்கீகாரமும், வரவேற்பும் கிடைக்கும் காலம் இதுவாகும். அந்த தமிழ் ரசிகர்களின் ரசனையை மட்டும் நம்பி உருவாகி இருக்கும் படம்தான் ‘ஐமா’. ஏனென்றால் இது வழக்கமான த்ரில்லர் படம் அல்ல. புதுமையை விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாகியுள்ள திரைப்படம். தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films )நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி இந்த ‘ஐமா’ படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் நாயகனாக யூனஸ், நாயகியாக எல்வின் ஜூலியட்டும் நடித்துள்ளனர். […]

The post ‘ஐமா’ சர்வைவல் – சஸ்பென்ஸ் – த்ரில்லர் கலந்த திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
புதுமையான உணர்வை கொடுக்கும் தகுதியான படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் அங்கீகாரமும், வரவேற்பும் கிடைக்கும் காலம் இதுவாகும். அந்த தமிழ் ரசிகர்களின் ரசனையை மட்டும் நம்பி உருவாகி இருக்கும் படம்தான் ‘ஐமா’. ஏனென்றால் இது வழக்கமான த்ரில்லர் படம் அல்ல. புதுமையை விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாகியுள்ள திரைப்படம்.

தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films )நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி இந்த ‘ஐமா’ படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் நாயகனாக யூனஸ், நாயகியாக எல்வின் ஜூலியட்டும் நடித்துள்ளனர். மேலும், அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன், சிஷிரா, சாஜி ஆகியோருடன் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு செய்துள்ளவர் விஷ்ணு கண்ணன். இவர் சில படங்களில் பணியாற்றி உள்ளார். படத்தொகுப்பு அருண் ராகவ். இவரும் சில மலையாளப் படங்களில் பணியாற்றியவர். இசையமைத்துள்ளவர் கே.ஆர்.ராகுல். இவர் பல விளம்பரப் படங்களில் பணியாற்றியுள்ளார். சில குறும் படங்களிலும் சில மலையாள திரைப்படங்களிலும் இசைஅமைத்துள்ளார். பாடல்களை பாடலாசிரியர் அருண் மணியன் எழுதியுள்ளார். சண்டைப் பயிற்சி இயக்கத்தை அஷ்ரப் குருக்களும், கலை இயக்கத்தை ஜீமோனும் செய்துள்ளனர்.

இப்படத்தை எழுதி இயக்கியவர் ராகுல்.ஆர்.கிருஷ்ணா.இவர் தமிழ், மலையாளத்தில் சில குறும் படங்களில் பணி புரிந்துள்ளார். ‘ஆருயிரே’ எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் ராகுல் ஆர்.கிருஷ்ணா கூறும்போது, “ஐமா’ எனும் சொல்லில் (ஐ) எனும் எழுத்து தெய்வத்தையும் (மா) எனும் எழுத்து வலிமையையும் குறிக்கிறது. ஆகவே ‘ஐமா’ எனும் சொல்லுக்கு ‘இறைவனின் வலிமை’ என்று அர்த்தமாகும். எந்த உயிர்களுக்கும் தீங்கு நினைக்காத இரு மனிதர்களுக்கு ஏற்படும் தடைகளையும், துரோகங்களையும், ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளும் சுவாரசியத்தை சொல்லும் விளையாட்டின் ஆட்டம்தான் இந்த ‘ஐமா’ திரைப்படம்.

துரோகங்கள், துன்பங்கள், சோதனைகள், வேதனைகள், தடைகள், தடுமாற்றங்கள் இவற்றை எதிர்கொள்ளும் அனுபவத்தில் ஆரம்பிக்கும் ஆற்றலின் விளக்கமே இந்த ‘ஐமா’ திரைப்படம். எளிதாக புரியும்படி சொன்னால் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினைகள் கட்டாயம் உண்டு என்பதைப் புரிய வைக்கும் படம் இதுவாகும்.

பல தடைகளை தாண்டி என் கதையை திரைப்படமாக கொண்டு வந்துள்ளேன். படத்தை பார்ப்பவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறி காட்சியை பார்க்காமல் தவறினால் படத்தின் கதையே புரியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. சஸ்பென்ஸ் சுவாரஸ்யம் நிறைந்த ஒரு திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. 9 கதாபாத்திரங்களை சுற்றித்தான் இந்த கதையே நடக்கிறது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் குட்டிக்காணம், குமுளி, பாலக்காடு போன்ற பகுதியில் நடைபெற்றுள்ளது..” என்றார்.

The post ‘ஐமா’ சர்வைவல் – சஸ்பென்ஸ் – த்ரில்லர் கலந்த திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>