Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
director s.a.chandrasekar – Touring Talkies https://touringtalkies.co Sun, 03 Jan 2021 12:56:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png director s.a.chandrasekar – Touring Talkies https://touringtalkies.co 32 32 மீண்டும் ஒரு கட்சியைத் துவக்குகிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்..! https://touringtalkies.co/director-sac-starts-a-new-political-party/ Sun, 03 Jan 2021 12:55:52 +0000 https://touringtalkies.co/?p=11757 நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் அரசியல் கட்சியைத் துவக்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்த முறை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் தன்னுடைய பெயரிலேயே அந்தக் கட்சியைத் துவக்கவிருக்கிறார். சென்ற மாதம் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடிகர் விஜய்யின் பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர். இதன் தலைவராக பத்மநாபன் என்பவரும், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளராக விஜய்யின் அம்மா […]

The post மீண்டும் ஒரு கட்சியைத் துவக்குகிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் அரசியல் கட்சியைத் துவக்கவுள்ளதாகத் தெரிகிறது.

இந்த முறை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் தன்னுடைய பெயரிலேயே அந்தக் கட்சியைத் துவக்கவிருக்கிறார்.

சென்ற மாதம் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடிகர் விஜய்யின் பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர்.

இதன் தலைவராக பத்மநாபன் என்பவரும், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளராக விஜய்யின் அம்மா ஷோபாவும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி வெளியானதும் பதறியடித்து சில மணி நேரங்களிலேயே இதற்கு மறுப்புத் தெரிவித்த நடிகர் விஜய், தன் தந்தை துவக்கியிருக்கும் கட்சிக்கும், தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

இதையடுத்து விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரும், கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த பத்மபநான் என்பவரும் தாமாகவே அந்தக் கட்சியில் இருந்து விலகிவிட்டனர்.

இதற்கடுத்து ஏற்பட்ட சமரசப் பேச்சுவார்த்தையின் பின்பு அந்தக் கட்சியை பதிவு செய்தவதை தான் கைவிட்டுவிட்டதாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பகிரங்கமாக அறிவித்தார்.

ஆனால், அப்படி சொல்லி ஒரு மாதம்கூட இல்லாத சூழலில் மீண்டும் கட்சியைத் துவக்கும் வேலைகளில் மூழ்கிவிட்டார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த முறை அவர் தன்னுடைய பெயரிலேயே கட்சியைத் துவக்கியிருக்கிறார்.

இதற்காக விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிருப்தி நிர்வாகிகளை அரவணைத்து அவர்களை கட்சியின் உறுப்பினர்களாக மாற்றி கையொப்பம் வாங்கியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்சிக்கு அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி’ என்று பெயர் வைத்திருக்கிறாராம்.

வரும் பொங்கல் தினத்தன்று உதயமாக இருக்கும் இந்தப் புதிய கட்சியில் விஜய் மக்கள் மன்றத்தில் இருந்து விலக்கப்பட்ட, விலகிய முன்னாள் நிர்வாகிகளை இணைக்க முடிவு செய்திருக்கிறா் எஸ்.ஏ.சந்திரசேகர்.

இதற்காக இது போன்று விஜய் மீது அதிருப்தியில் இருக்கும் அனைத்து மட்ட நிர்வாகிகளையும் இணைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் எஸ்.ஏ.சி.

அதற்காக இன்று காலை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்லது. இந்தக் கூட்டத்தில் நடந்த ஆலோசனைக்கு பிறகு தன் கட்சிக்கான 20 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களை எஸ்.ஏ.சந்திரசேகர் நியமித்துள்ளார்.

“விஜய்யின் பெயரில் கட்சி இருந்தால்தானே அவர் எதிர்ப்புத் தெரிவிக்க முடியும்..? இது என் பெயரில் இருக்கும் கட்சி.. இனி அவரும் இதில் ஒரு பார்வையாளராகத்தான் இருக்க முடியும். அப்படியே இருக்கட்டும்..” என்று எஸ்.ஏ.சி. தன்னுடைய ஆதரவாளர்களிடத்தில் பேசியிருக்கிறார்.

மேலும், இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “கடந்த டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் தினத்தன்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தேன் என்றும், அப்போது விஜய் தன்னை கட்டியணைத்து தனக்கு மோதிரம் ஒன்றை அணிவித்ததாகவும்..” கூறியிருக்கிறார்.

இந்தச் செய்தி அவருடன் இணைந்துள்ள விஜய் மன்றத்தின் பழைய நிர்வாகிகளுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

ஆனால், இந்தத் தகவல்களையெல்லாம் அறிந்த நடிகர் விஜய் மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post மீண்டும் ஒரு கட்சியைத் துவக்குகிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்..! appeared first on Touring Talkies.

]]>
“கட்சியைப் பதிவு செய்ய வேண்டாம்…” – எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் பல்டி..! https://touringtalkies.co/diector-s-a-chandrasekar-wrote-a-letter-to-election-commission-for-not-to-register-his-party-name/ Sun, 22 Nov 2020 05:15:48 +0000 https://touringtalkies.co/?p=10279 நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனின் பெயரில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒரு கட்சியை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய மனு அளித்திருந்தார். இந்தச் செய்தி வெளியானதும் அதிர்ச்சியான நடிகர் விஜய், “அந்தக் கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம்…” என்றும், “அந்தக் கட்சியில் தனது புகைப்படத்தையோ, தனது பெயரையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடு்ப்பேன்…” என்றும் ஒரு அறிக்கையின் மூலமாக தனது […]

The post “கட்சியைப் பதிவு செய்ய வேண்டாம்…” – எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் பல்டி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனின் பெயரில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒரு கட்சியை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய மனு அளித்திருந்தார்.

இந்தச் செய்தி வெளியானதும் அதிர்ச்சியான நடிகர் விஜய், “அந்தக் கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம்…” என்றும், “அந்தக் கட்சியில் தனது புகைப்படத்தையோ, தனது பெயரையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடு்ப்பேன்…” என்றும் ஒரு அறிக்கையின் மூலமாக தனது அப்பாவையே எச்சரித்திருந்தார்.

இந்த நிலைமையில் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியும், நடிகர் விஜய்யின் அம்மாவுமான ஷோபா சந்திரசேகரும் கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார்.

இதற்கடுத்து கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த பத்மநாபன் என்பவரும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்க.. இப்போதைக்கு அந்தக் கட்சியின் செயலாளராக அறிவிக்கப்பட்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் மட்டுமே தனித்து விடப்பட்டிருந்தார்.

இடையில் பல நாட்கள் அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில் பல சமரசப் பேச்சுக்கள் நடைபெற்று வந்தது இறுதியில் ஒரு தீர்வுக்கு வந்திருக்கிறது.

இதனால், “விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டாம்…” என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆக, நடிகர் விஜய்யை வைத்து உருவான ஒரு மாத கால சர்ச்சை சட்டென்று முடிவுக்கு வந்திருக்கிறது.

The post “கட்சியைப் பதிவு செய்ய வேண்டாம்…” – எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் பல்டி..! appeared first on Touring Talkies.

]]>
“நடிகர் விஜய்யை சுற்றி பல கிரிமினல்கள் உள்ளனர்…” – தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புகார்.. https://touringtalkies.co/vijay-s-a-chandrasekar-political-party-issues/ Sun, 08 Nov 2020 06:00:41 +0000 https://touringtalkies.co/?p=9814 தனது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் கூறியிருந்த நிலையில் அந்த கட்சியில் இருந்து எஸ்.ஏ.சி.யின் மனைவியும் விஜய்யின் தாயுமான ஷோபாவும் விலகியுள்ளார். இந்த நிலையில் இந்த நிகழ்வுகள் பற்றிப் பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய எஸ்.ஏ.சி., “நான் அரசியல் கட்சி ஆரம்பித்ததே நடிகர் விஜய்யின் நன்மைக்காகத்தான். இதனை விஜய் விரைவில் புரிந்து கொள்வார். தன்னுடைய புகைப்படத்தையும், பெயரையும் பயன்படுத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் சொல்லியிருக்கிறார். அவர் […]

The post “நடிகர் விஜய்யை சுற்றி பல கிரிமினல்கள் உள்ளனர்…” – தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புகார்.. appeared first on Touring Talkies.

]]>
தனது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் கூறியிருந்த நிலையில் அந்த கட்சியில் இருந்து எஸ்.ஏ.சி.யின் மனைவியும் விஜய்யின் தாயுமான ஷோபாவும் விலகியுள்ளார்.

இந்த நிலையில் இந்த நிகழ்வுகள் பற்றிப் பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய எஸ்.ஏ.சி., “நான் அரசியல் கட்சி ஆரம்பித்ததே நடிகர் விஜய்யின் நன்மைக்காகத்தான். இதனை விஜய் விரைவில் புரிந்து கொள்வார்.

தன்னுடைய புகைப்படத்தையும், பெயரையும் பயன்படுத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் சொல்லியிருக்கிறார். அவர் என் மீது நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும். நானும் அதைப் பார்க்கிறேன்.

விஜய் ரசிகர் மன்றம் என்பது நான் 1993-ம் ஆண்டு துவக்கிய அமைப்பு. நடிகர் விஜய்யின் முதல் ரசிகனே நான்தான். அதனால்தான் நான் ரசிகர் மன்றத்தைத் துவக்கினேன். ரசிகர் மன்றம் துவக்கியபோதும் அவரிடத்தில் அனுமதி கேட்கவில்லையே..? இந்த ரசிகர் மன்றத்தை ஒரு இயக்கமாக மாற்றியபோதும் நான்தான் நிறுவனராக இருந்தேன். அப்போது அவர் எதுவும் சொல்லவில்லையே..?

இப்போது இந்த இயக்கத்தை என் விருப்பத்தின்படி அரசியல் கட்சியாக மாற்றியுள்ளேன். இந்த இயக்கத்தில் இருக்கும் விஜய்யின் ரசிகர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமே என்பதற்காக பல ஆண்டுகளாக யோசித்து, யோசித்து இன்றைக்கு ஒரு முடிவெடு்த்து இதைச் செய்திருக்கிறேன்.

எல்லா வீடுகளிலும் நடக்கும் தந்தை மகன் மோதல்போல் எங்களுக்கு இடையேயும் அவ்வப்போது சண்டை வரும். நாங்கள் இருவரும் இப்படி பேசாமல் இருப்பது அவ்வப்போது நடப்பதுதான். ஒரு சாதாரணமான விஷயம்தான்.

தற்போது விஜய்க்கே தெரியாத ரகசியம் ஒன்று அவரை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது.  விஜய் ஒரு சிறிய விஷ வளையத்தில் தற்போது சிக்கியுள்ளார் அதிலிருந்து அவரை காப்பாற்றவே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

விஜய்யை சில கிரிமினல்கள் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்களால் விஜய்யை சுற்றி ஒரு ஆபத்தான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது என்னை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கைகூட அவராக வெளியிட்டது இல்லை. அவரைச் சுற்றியிருப்பவர்கள் சொல்லித்தான் வெளியிட்டிருக்கிறார்..” என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

The post “நடிகர் விஜய்யை சுற்றி பல கிரிமினல்கள் உள்ளனர்…” – தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புகார்.. appeared first on Touring Talkies.

]]>
‘நான் கடவுள் இல்லை’ – எஸ்.ஏ.சந்திரசேகரின் அடுத்த அதிரடி..! https://touringtalkies.co/naan-kadavul-illai-movie-news/ Sun, 08 Nov 2020 04:45:00 +0000 https://touringtalkies.co/?p=9852 தனது மகனான நடிகர் விஜய்யின் ரசிகர்களை நம்பி அரசியல் கட்சியைத் துவக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கோலிவுட்டிலும் படு பிஸியாகவே இருக்கிறார். இப்போது அவர் ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தின் தலைப்பே சர்ச்சையை அளிக்கிறது. இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாகவும், சாக்சி அகர்வால் நாயகியாகவும் நடிக்கின்றனர். கூடுதல் போனஸாக இனியாவும் படத்தில் இருக்கிறாராம். இதில் வில்லனாக சமுத்திரக்கனி நடிக்கிறார். இப்போதே இந்தப் படத்தின் படப்பிடிப்பில் முக்கால் பங்கு முடிந்துவிட்டது. இந்த மாதத்திற்குள் மொத்தமும் […]

The post ‘நான் கடவுள் இல்லை’ – எஸ்.ஏ.சந்திரசேகரின் அடுத்த அதிரடி..! appeared first on Touring Talkies.

]]>
தனது மகனான நடிகர் விஜய்யின் ரசிகர்களை நம்பி அரசியல் கட்சியைத் துவக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கோலிவுட்டிலும் படு பிஸியாகவே இருக்கிறார்.

இப்போது அவர் ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தின் தலைப்பே சர்ச்சையை அளிக்கிறது.

இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாகவும், சாக்சி அகர்வால் நாயகியாகவும் நடிக்கின்றனர். கூடுதல் போனஸாக இனியாவும் படத்தில் இருக்கிறாராம். இதில் வில்லனாக சமுத்திரக்கனி நடிக்கிறார்.

இப்போதே இந்தப் படத்தின் படப்பிடிப்பில் முக்கால் பங்கு முடிந்துவிட்டது. இந்த மாதத்திற்குள் மொத்தமும் முடிந்துவிடுமாம்.

எல்லாம் சரி.. கட்சியும் ஆரம்பிச்சாச்சு.. இதனாலேயே மத்திய, மாநில அரசுகள் கண்ணில் விளக்கெண்ணெய் போட்டு தேடுவார்கள்.

படத்தின் தலைப்பில் ‘கடவுள்’ என்றும் வைத்திருக்கிறார். பிரச்சினை சென்சாரில் வருமா.. அல்லது வெளியில் இருந்து வருமா என்பது தெரியலையே என்று சொல்லி சிரிக்கிறார்கள் சினிமாத் துறையினர்.

ஆனால் எஸ்.ஏ.சி.யோ மிகவும் கூலாக இருக்கிறார். ஏனெனில் படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷ் இ்ப்போது பா.ஜ.க.வில் முக்கியப் புள்ளியாக இருக்கிறார். அவரை வைத்து எதையும் சமாளித்துக் கொள்ளலாம் என்றுதான் தெம்பாக இருக்கிறாராம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

The post ‘நான் கடவுள் இல்லை’ – எஸ்.ஏ.சந்திரசேகரின் அடுத்த அதிரடி..! appeared first on Touring Talkies.

]]>
“விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்தேன்…” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி..! https://touringtalkies.co/director-sac-interview-about-actor-vijay/ Sat, 07 Nov 2020 05:49:50 +0000 https://touringtalkies.co/?p=9778 நடிகர் விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ‘அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்று கட்சி ஆரம்பிக்க விண்ணப்பித்துள்ள செய்தி, தமிழகத்தில் கோடம்பாக்கத்தையும், அரசியல் வட்டாரத்தையும் ஒரே சேர உலுக்கியது. இந்தச் செய்தியினைத் தொடர்ந்து வந்த விஜய்யின் மறுப்பு அறிக்கை.. தொண்டர்களுக்கு எச்சரிக்கை என்பதையும் தாண்டி அனைவராலும் கவனிக்கப்பட்ட ஒரு விஷயம்.. ‘நடிகர் விஜய்க்கும், அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகருக்குமான உறவு தற்போது சுமூகமாக இல்லை. இருவருக்குமிடையே கடந்த சில வருடங்களாக பேச்சுவார்த்தையே இல்லை’ என்ற செய்திதான். இந்த […]

The post “விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்தேன்…” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ‘அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்று கட்சி ஆரம்பிக்க விண்ணப்பித்துள்ள செய்தி, தமிழகத்தில் கோடம்பாக்கத்தையும், அரசியல் வட்டாரத்தையும் ஒரே சேர உலுக்கியது.

இந்தச் செய்தியினைத் தொடர்ந்து வந்த விஜய்யின் மறுப்பு அறிக்கை.. தொண்டர்களுக்கு எச்சரிக்கை என்பதையும் தாண்டி அனைவராலும் கவனிக்கப்பட்ட ஒரு விஷயம்.. ‘நடிகர் விஜய்க்கும், அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகருக்குமான உறவு தற்போது சுமூகமாக இல்லை. இருவருக்குமிடையே கடந்த சில வருடங்களாக பேச்சுவார்த்தையே இல்லை’ என்ற செய்திதான்.

இந்த நிலைமையில் இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் சேனலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியில் நடிகர் விஜய்யின் ஆரம்பக் காலத்தில் இருந்து உடனிருந்து அவரை எப்படி வழி நடத்தினேன் என்பது பற்றி சொல்லியிருக்கிறார்.

“விஜய் என் மகன் என்பதால் என்னிடமிருந்த பல நல்ல குணங்கள் அவரிடமும் இருக்கு. ஆரம்பக் காலத்தில் நான் அவரை வைத்து இயக்கிய பல படங்கள் தோல்வியடைந்தாலும் ‘ரசிகன்’ படம் சில்வர் ஜூப்ளி கொண்டாடியபோதுதான் திரையுலகமே விஜய்யை திரும்பிப் பார்த்தது.

அப்போது பார்த்தவர்களெல்லாம் சொன்னது.. ‘அவருக்கென்ன.. அவங்கப்பா பணக்காரர். மகனை ஹீரோவாக்க சொந்தக் காசு போட்டு படமெடுக்கிறாரு’ன்னு சொன்னாங்க. ஆனால் அது உண்மையில்லை.

விஜய்க்குள்ள ஒரு நடிகன் இருக்கிறான் என்பதை அவரது முதல் படத்திலேயே நான் உணர்ந்து கொண்டேன். அந்த நடிகனை வெளியே கொண்டு வர வேண்டும். இந்தத் தமிழ்த் திரையுலகத்திற்கு ஒரு நல்ல நடிகனை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் தோல்வி கிடைத்தாலும் பரவாயில்லை என்று தொடர்ச்சியாக அவரை வைத்து படமெடுத்தேன்.

‘ரசிகன்’ படத்தில் இருந்து அவரை திரையுலகத்தினர் அடையாளம் கண்டு கொண்டார்கள். அதுதான் அவருக்கு நான் செய்த வேலை. அது ஒரு மகனுக்கு அப்பா செய்த கடமையல்ல. ஒரு நடிகனுக்கு ஒரு தயாரிப்பாளர் செய்த கடமையாக நினைத்து செய்தேன்.

அது மட்டுமல்ல.. இந்தத் திரையுலகத்தில் எப்படி இருக்க வேண்டும்.. தயாரிப்பாளர்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் நான்தான் அவருக்குக் கற்றுக் கொடுத்தேன்.

விக்ரமனின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஏதோ ஒரு விஷயத்திற்காகக் கோபப்பட்டு விஜய் ஸ்பாட்டில் இருந்து கிளம்பி வந்துவிட்டார். இது பெரிய இஷ்யூவாகிவிட்டது. சேம்பரில் மீட்டிங்கிற்கு கூப்பிட்டார்கள்.

நான் விஜய்யையும் அழைத்துக் கொண்டு வந்தேன். அங்கே அவரை உட்கார வைத்தேன். ஏன்னா.. நான் தயாரிப்பாளர் சங்கத்தில் துணைத் தலைவர். எனக்கும் பொறுப்பு இருக்கு. அதே சமயம் இன்னொரு தயாரிப்பாளரையும் நான் மதிக்கணும்.

தயாரிப்பாளர், இயக்குநரிடம் சொல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பியதே தவறு. இதனால் ஷூட்டிங் நின்று போனது. அதற்கு யார் பொறுப்பாவது.. ஒரு தயாரிப்பாளரா இன்னொரு தயாரிப்பாளரின் கஷ்டத்தை என்னால் உணர முடிந்தது. அப்போது விஜய்யை அங்கே மன்னிப்பு கேட்க வைத்தேன்.

இதேபோல் ‘கோயம்புத்தூர் மாப்ளை’ படத்தின்போதும் ஒரு சம்பவம். வி.ஜி.பி. பக்கத்தில் ஷூட்டிங் நடத்தியபோது ரோட்டிலேயே விஜய்யை அமர வைத்து மேக்கப் போட்டிருக்கிறார்கள். இதனால் கோபமான விஜய், அங்கேயிருந்தும் யாரிடமும் சொல்லாமல் கிளம்பி வந்துவிட்டார்.

தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எனக்கு போன் வந்தது. நான் தயாரிப்பாளர், இயக்குநர், விஜய் மூவரையும் என் வீட்டிற்கு நேரில் வரவழைத்து பேசினேன். அப்போதும் விஜய்யை அவர்களிடத்தில் மன்னிப்பு கேட்க வைத்தேன். அன்றைய நாள் படப்பிடிப்பு ரத்தாகி அந்தத் தயாரிப்பாளருக்கு பணம் நஷ்டமாகிவிட்டதே.. அதற்கு நாம்தான் பொறுப்பேற்றாக வேண்டும்..

இப்படி பல விஷயங்களை விஜய்க்கு ஆரம்பக் காலத்திலேயே உணர்த்தியதால்தான் இன்றைக்கு அவர் தயாரிப்பாளருக்கு பிரச்சினை தராத, ஒழுக்கமான ஒரு ஹீரோவாக இருக்கிறார். இதில் எனக்கு ரொம்பப் பெருமைதான்..” என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

The post “விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்தேன்…” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி..! appeared first on Touring Talkies.

]]>
“அப்பா கட்சியில் சேரக் கூடாது…” – தனது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை..! https://touringtalkies.co/should-not-join-the-my-fathers-party-actor-vijay-warns-his-fans/ Thu, 05 Nov 2020 15:26:20 +0000 https://touringtalkies.co/?p=9736 “தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் பெயரில் நான்தான் கட்சி ஆரம்பிக்க தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன்…” என்று நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில்.. நடிகர் விஜய் இதற்கு உடனடியாக எதிர் விளக்கமளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதுதான் : “இன்று என்‌ தந்‌தை திரு.எஸ்‌.ஏ.சந்திரசேகர்‌ அவர்கள்‌ ஓர்‌ அரசியல்‌ கட்சியை ஆரம்பித்துள்ளார்‌ என்பதை ஊடகங்களின்‌ வாயிலாக அறிந்தேன்‌. அவர்‌ தொடங்கியுள்ள கட்சிக்கும்,‌ எனக்கும்‌ நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும்‌ இல்லை என […]

The post “அப்பா கட்சியில் சேரக் கூடாது…” – தனது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
“தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் பெயரில் நான்தான் கட்சி ஆரம்பிக்க தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன்…” என்று நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில்.. நடிகர் விஜய் இதற்கு உடனடியாக எதிர் விளக்கமளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இதுதான் :

“இன்று என்‌ தந்‌தை திரு.எஸ்‌.ஏ.சந்திரசேகர்‌ அவர்கள்‌ ஓர்‌ அரசியல்‌ கட்சியை ஆரம்பித்துள்ளார்‌ என்பதை ஊடகங்களின்‌ வாயிலாக அறிந்தேன்‌. அவர்‌ தொடங்கியுள்ள கட்சிக்கும்,‌ எனக்கும்‌ நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும்‌ இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும்‌ பொதுமக்களுக்கும்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌.

இதன்‌ மூலம்‌ அவர்‌ அரசியல்‌ தொடர்பாக எதிர்காலத்தில்‌ மேற்கொள்ளும்‌ எந்த நடவடிக்கைகளும்‌ என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்‌.

மேலும்‌ எனது ரசிகர்கள்‌, எனது தந்‌தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில்‌ இணைத்துக் கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம்‌ என கேட்டுக் கொள்கிறேன்‌. அக்கட்சிக்கும்‌ நமக்கும்‌ நமது இயக்கத்திற்கும்‌ எவ்வித தொடர்பும்‌ கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்‌.

மேலும்‌ என்‌ பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய்‌ மக்கள்‌ இயக்கத்தின்‌ பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும்‌ விவகாரங்களில்‌ ஈடுபட்டால்‌ அவர்கள்‌ மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்பதையும்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌…”

இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

The post “அப்பா கட்சியில் சேரக் கூடாது…” – தனது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யின் பெயரில் கட்சி ஆரம்பித்தார் அவரது அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர்..! https://touringtalkies.co/all-india-thalapathy-makkal-iyakkam-party-announcement-news/ Thu, 05 Nov 2020 15:09:02 +0000 https://touringtalkies.co/?p=9730 இன்று மாலை வரையிலும் அமைதியாக இருந்த திரைத்துறை, அரசியல் துறை இரண்டையும் கலந்து கட்டி அடித்ததை போன்ற ஒரு செய்தி திடீரென்று மாலை வேளையில் வெளியானது. ‘அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடிகர் விஜய்யின் பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதன் தலைவராக பத்மநாபன் என்பவரும், பொதுச் செயலாளராக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளராக விஜய்யின் அம்மா ஷோபாவும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், […]

The post நடிகர் விஜய்யின் பெயரில் கட்சி ஆரம்பித்தார் அவரது அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர்..! appeared first on Touring Talkies.

]]>
இன்று மாலை வரையிலும் அமைதியாக இருந்த திரைத்துறை, அரசியல் துறை இரண்டையும் கலந்து கட்டி அடித்ததை போன்ற ஒரு செய்தி திடீரென்று மாலை வேளையில் வெளியானது.

‘அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடிகர் விஜய்யின் பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இதன் தலைவராக பத்மநாபன் என்பவரும், பொதுச் செயலாளராக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளராக விஜய்யின் அம்மா ஷோபாவும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், உடனடியாக இதை மறுத்து நடிகர் விஜய்யின் தரப்பு, இந்தச் செய்தியில் உண்மை இல்லை என்றும் விஜய் எந்த அரசியல் கட்சியையும் தொடங்கவில்லை என்றும் விளக்கமளித்தது.

விஜய்யின் மேலாளர் இதனை மறுத்த 5-வது நிமிடத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலமாக பேட்டியளித்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “அந்தக் கட்சி பதிவு செய்தி உண்மைதான். நான்தான் ‘அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய சொந்த முயற்சி. இது விஜய்யின் அரசியல் கட்சி அல்ல. இதற்கும் விஜய்க்கும் சம்பந்தமே இல்லை..” என்று கூறினார்.

இந்தப் புதிய அரசியல் கட்சியின் அறிவிப்பு நடிகர் விஜய்யின் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post நடிகர் விஜய்யின் பெயரில் கட்சி ஆரம்பித்தார் அவரது அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர்..! appeared first on Touring Talkies.

]]>