Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
banaras movie – Touring Talkies https://touringtalkies.co Thu, 10 Nov 2022 16:45:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png banaras movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 பனாரஸ் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/banaras-movie-review/ Wed, 09 Nov 2022 16:43:11 +0000 https://touringtalkies.co/?p=26926 காதலை முன்னிலைப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தை என்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஜையீத் கான் மற்றும் சோனல் மோன்டோரியோ கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். இந்துக்களின் புனித ஸ்தலமான காசியை கதைக் களப் பின்னணியாக கொண்டு இன்னிசையுடன் கூடிய காதல் […]

The post பனாரஸ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
காதலை முன்னிலைப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தை என்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ஜையீத் கான் மற்றும் சோனல் மோன்டோரியோ கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

இந்துக்களின் புனித ஸ்தலமான காசியை கதைக் களப் பின்னணியாக கொண்டு இன்னிசையுடன் கூடிய காதல் காவியமாக உருவாகியிருக்கிறது இப்படம். கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

காதல் கதைகள் பல வகை உண்டு. அந்த வகைகளில் ஒன்றாக இந்தக் காதலை டைம் மிஷின் பாணியில் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெயதீர்த்தா.

1998-ம் ஆண்டு வெளியான ‘ரன் லோலா ரன்’ என்ற ஜெர்மன் திரைப்படம் உலக சினிமாக்களையே கலக்கியெடுத்தது. நாம் செய்யும் ஒரு செயலில், சில நிமிட தாமதத்தினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பலவித உதாரணங்களின் மூலமாக திரில்லர் பாணியில் சொல்லியிருந்ததார்கள். இந்தப் படத்தின் கதைக் கருவிலேயே முறையான அனுமதியில்லாமல் பல மொழிகளில் படங்கள் வெளியாகிவிட்டன. இந்தப் படமும் அது போன்ற ஒன்றுதான்.

நாயகி சோனல் மோண்டோரியோ கல்லூரி மாணவி. டிவி சேனலில் வி.ஜே. யுடியூப் சேனலும் நடத்துகிறார். “இவரிடம் ஒரு வாரத்திற்குள்ளாக நெருங்கிக் காட்டுகிறேன்” என்று தன் நண்பர்களிடம் சவால் விடும் நாயகன் ஜயீத்கான், சோனலிடம், தான் எதிர் காலத்தில் இருந்து டைம் மெஷின் மூலம் நிகழ் காலத்துக்கு வந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சோனல்தான் தன் மனைவியாக இருப்பதாகவும் சொல்லி அவரைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறார்.

நம்ப முடியாத கதையாக இருந்தாலும் தன்னைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் சொல்கிறாரே என்றெண்ணி நாயகி அவர் மீது ஆர்வங்காட்ட.. இதையே அட்வான்ட்டேஜாக எடுத்துக் கொள்ளும் ஹீரோ, நாயகியுடன் ஏடாகூடா சூழலில் ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்து தன் நண்பர்களிடம் காட்டி தனக்குத்தானே பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

ஆனால், இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பாக.. நாயகி சோனலுக்கு அவமானமாகிறது. கல்லூரிக்குக்கூட வராமல் காசியில் இருக்கும் தனது சித்தி வீட்டுக்குச் சென்று விடுகிறார் சோனல்.

“யாரையும் காயப்படுத்தி, அவமானப்படுத்தக் கூடாது. அது நம்மை உடன் இருந்து கொல்லும்” என்று நாயகனின் அப்பா அவருக்கு அட்வைஸ் செய்ய.. சோனலிடம் மன்னிப்பு கேட்பதற்காக காசிக்குப் பயணப்படுகிறார் நாயகன் ஜையீத்கான். அங்கே அவர் சோனலை சந்தித்தாரா..? தன் மன்னிப்பை தெரிவித்தாரா?.. என்பதுதான் இந்தப் படத்தின் முடிவுரை…!

நாயகன் ஜயீத் கான் அறிமுகம் என்றே சொல்ல முடியாதபடிக்கு பழுத்த அனுபவசாலி நடிகரைப் போல நடித்திருக்கிறார். அறிமுகக் காட்சியிலேயே படபடவென்று பொரிந்து தள்ளும் அந்த வசனங்களை கவர்ந்திழுக்கும்வகையில் பேசி நடித்திருக்கிறார்.

காசிக்கு வந்த பின்பு தன்னை அறியாமலேயே சோனலை அவர் காதலிக்கத் துவங்கும் தருணத்தில் இருந்து அவரது காதல் நடிப்பும், சண்டைக் காட்சிகளில் வேகமான ஆக்சன்களும், பொறுப்பை உணர்ந்து கொண்ட இளைஞனுக்குரிய நடிப்பையும் காண்பித்து நடிப்பில் குறையில்லாமல் செய்திருக்கிறார்.

நாயகியான சோனல் அப்படியொன்றும் அசத்தும் அழகி இல்லையென்றாலும் அவருடைய முகவெட்டு கேமிராவுக்கு ஏற்றது. மாநிறத்தில் அடுத்த வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கிறார்.

படத் துவக்கத்தில் நாயகன் ஜயீத் அவிழ்த்து விடும் கட்டுக் கதைகளை ஆச்சரியத்துடன் கேட்டு உண்மையென்று நம்பும் அவர் நடிப்பு சிறப்புதான். இதேபோல் மன்னிப்பு கேட்டு வந்து நிற்கும் நாயகனின் சீற்றத்துடன் தனது கோபத்தைக் காட்டு்ம் இடத்திலும் இன்னொரு நடிப்பையும் காண்பித்திருக்கிறார். இவருக்கான டிரெஸ்ஸிங் சென்ஸ் சூப்பர். கடைசிவரையிலும் திரையில் அழகாய் ஜொலிக்கிறார் நாயகி சோனல்.

நாயகனின் அப்பாவாக தேவராஜூம், நாயகியின் சித்தப்பாவாக அச்யுத் குமாரும் ஆளுக்கொரு பக்கமாக நம்மைக் கவர்கிறார்கள். இதில் அச்யுத் குமார் கடைசிவரையிலும் திரையில் இருப்பதால் கொஞ்சம் கூடுதலாக ஈர்க்கிறார். இவருடைய மனைவியாக நடித்தவரை திரையில் பார்த்த மொத்த ஆண்கள் கூட்டமும் இப்போது இணையத்தில் தேடுகிறது. ஆண்ட்டி அப்படியொரு அழகு..!

ஜயீத்தின் பனாரஸ் நண்பராக வரும் சுஜய் சாஸ்திரி தனது படபட பேச்சில் நம்மைத் தொடர்ந்து கவனிக்க வைக்கிறார். துவக்கத்தில் காமெடியன் போல தெரிந்தாலும் தனது காதல் கதையைச் சொன்ன பின்பு டிராக் மாறி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இடம் பிடிக்கிறார். கிளைமாக்ஸில் நம்மை கண் கலங்கவும் வைத்திருக்கிறார்.

படத்தில் இன்னொரு கதாபாத்திரமாகவே வருகிறது பனாரஸ்’ என்ற காசி மாநகரம். இந்த நகரத்தை இதுவரையிலும் யாரும் காட்டியிருக்காத வகையில் காட்டி நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தி. காசியை இதுவரையிலும் பார்த்திருக்காவர்களுக்கும் பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது இந்தப் படம்.

இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் அழகு தமிழில் பாடல்கள் ஒலித்து காதுகளுக்கு இனிமை சேர்க்கின்றன. ‘மாயகங்கா‘, ‘இலக்கண கவிதை எழுதிய அழகே…’ ஆகிய பாடல்கள் கேட்க வைத்திருக்கின்றன. பின்னணி இசை டைம் மிஷின் நேரத்தில் ஒளிப்பதிவுடன் சேர்ந்து நம்மை பதைபதைக்க வைத்துள்ளது.

இரண்டாம் பாதியில் வரும் அந்த டைம் லூப் காட்சிகள் இந்தக் கதைக்குத் தேவைதானா என்ற கேள்வியும் எழுகிறது. முதல் காட்சியையும், இந்தக் காட்சிகளையும் இணைக்கும்விதமாகத் திரைக்கதை எழுதி முடித்திருந்தால் படம் அறிவியல் புனைவாகவே இருந்திருக்கும்.

ஆனால் கடைசியில் இதற்கு அச்யுத்குமார் மூலமாக கெமிஸ்ட்ரி ரியாக்ஷன் என்ற கதையை வைத்துவிட்டதால் ஏன், எதற்கு என்ற கேள்விகளும் எழுகின்றன. ஆனால், இது எல்லாவற்றையும் காதல் என்ற மாயக் கயிற்றால் கட்டி கடைசிவரையிலும் பார்க்க வைத்திருப்பது இயக்குநரின் திறமைதான்.

பனாரஸ் – காதலில் ஒரு பட்டுதான்..!

RATING : 3.5 / 5

The post பனாரஸ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“பனாரஸ்’ படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்” – அறிமுக நாயகன் ஜையீத் கான் நம்பிக்கை https://touringtalkies.co/we-will-win-peoples-hearts-with-banaras-movie-debutant-zayed-khan-hopes/ Tue, 25 Oct 2022 07:46:24 +0000 https://touringtalkies.co/?p=25987 ”இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக அற்புத படைப்பை உருவாக்கி இருக்கிறார். ‘பனாரஸ்’ படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்” என ‘பனாரஸ்’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் ஜையீத் கான் தெரிவித்துள்ளார். கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி, ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ‘பனாரஸ்’. என்.கே.புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த ‘பனாரஸ்’ படத்தைத் தயாரித்துள்ளார். இந்த ‘பனாரஸ்’ […]

The post “பனாரஸ்’ படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்” – அறிமுக நாயகன் ஜையீத் கான் நம்பிக்கை appeared first on Touring Talkies.

]]>
”இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக அற்புத படைப்பை உருவாக்கி இருக்கிறார். ‘பனாரஸ்’ படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்” என ‘பனாரஸ்’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் ஜையீத் கான் தெரிவித்துள்ளார்.

கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி, ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ‘பனாரஸ்’.

என்.கே.புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த ‘பனாரஸ்’ படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்த ‘பனாரஸ்’ படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சுஜய் சாஸ்திரி, தேவராஜ், அச்யுத் குமார், பர்க்கத் அலி, சப்னா ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

பட வெளியீட்டிற்கு முன் ரசிகர்களின் முன்னிலையில் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கன்னட திரை உலகத்தின் ‘சேலஞ்சிங் ஸ்டார்’ தர்ஷன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன் ‘பனாரஸ்’ படத்தில் இடம் பெற்ற பாடல்களும், படத்தின் முன்னோட்டமும் வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டன.

நடிகர் தர்ஷன் பேசுகையில், ”பனாரஸ் படத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். படத்தின் நாயகனும், நண்பருமான ஜையீத் எனக்கு திரையிட்டு காண்பித்தார். தொடக்கத்தில் ஜையீத் பணக்கார தந்தையின் மகன் என்றும், திறமை இல்லாதவர் என்றும் நினைத்தேன். ஆனால் படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். மேலும் கதை மற்றும் இயக்கம் சிறப்பாக உள்ளது. அதனால் இந்த படம் நிச்சயமாக மாபெரும் வெற்றியைப் பெறும்” என்றார்.

படத்தின் நாயகனான ஜையீத் கான் பேசுகையில், ”இன்று என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். எனது வாழ்க்கையில் முக்கியமான இரண்டு சக்திகள் இங்கே என்னுடன் உள்ளனர். எனது மூத்த சகோதரர் மற்றும் எனது தந்தையைப் போன்ற தர்ஷன் இங்கே இருக்கிறார். தர்ஷன் தொடக்கம் முதலே எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.

இந்த தருணத்தில் என்னுடைய தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளிக்கிறேன். அவரை இழிவுபடுத்தும் செயலை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என உறுதியளிக்கிறேன். மேலும் எனது தந்தையினால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன்.

‘பனாரஸ்’ படத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த படத்திற்காக நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம். ஒவ்வொருவரும் இந்தப் படத்தைப் பார்த்து என்னை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

இத்திரைப்படம் நவம்பர் 4-ம் தேதி அன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தமிழில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது.

காசியை கதைக்கள பின்னணியாக கொண்டு அமானுஷ்ய விசயங்களுடன் கூடிய காதல் கதை என்பதால், ‘பனாரஸ்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

The post “பனாரஸ்’ படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்” – அறிமுக நாயகன் ஜையீத் கான் நம்பிக்கை appeared first on Touring Talkies.

]]>
பஞ்ச் வசனத்துடன் வெளியான ‘பனாரஸ்’ படத்தின் ட்ரால் பாடல்..! https://touringtalkies.co/troll-song-of-the-film-banaras-released-with-punch-lyrics/ Sun, 18 Sep 2022 06:12:24 +0000 https://touringtalkies.co/?p=24559 இயக்குநர் ஜெயந்திராவின் இயக்கத்தில், சயத் கான் மற்றும் சோனால் மாண்டெய்ரோ நடித்துள்ள பான் இந்தியா படமான ‘பனாரஸ்’ வருகிற நவம்பர் மாதம் 4-ம்  தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்போது ‘பனாரஸ்’ படத்தில் இருந்து ‘ட்ரால்’ என தலைப்பிடப்பட்டுள்ள புதிய பார்ட்டி பாடல் வெளியாகியுள்ளது. அஜ்னேஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜெஸ்ஸீ கிஃப்ட் பாடியுள்ளார். ஜெஸ்ஸீ கிஃப்ட்டின் கிறங்கடிக்கும் குரல் பார்ட்டி பாடலுக்கு கூடுதல் […]

The post பஞ்ச் வசனத்துடன் வெளியான ‘பனாரஸ்’ படத்தின் ட்ரால் பாடல்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ஜெயந்திராவின் இயக்கத்தில், சயத் கான் மற்றும் சோனால் மாண்டெய்ரோ நடித்துள்ள பான் இந்தியா படமான ‘பனாரஸ்’ வருகிற நவம்பர் மாதம் 4-ம்  தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இப்போது ‘பனாரஸ்’ படத்தில் இருந்து ட்ரால்’ என தலைப்பிடப்பட்டுள்ள புதிய பார்ட்டி பாடல் வெளியாகியுள்ளது.

அஜ்னேஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜெஸ்ஸீ கிஃப்ட் பாடியுள்ளார். ஜெஸ்ஸீ கிஃப்ட்டின் கிறங்கடிக்கும் குரல் பார்ட்டி பாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது.

இளைஞர்கள் பார்ட்டியில் நிச்சயம் இந்த பாடலும் இனி இடம் பிடிக்கும். பாடலில் இடம் பெற்றுள்ள ‘பணம் முக்கியமில்லை’ என்ற பன்ச் லைன் இப்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்த ’பனாரஸ்’ திரைப்படம் ஒரு புதிரான காதல் கதையை கொண்டது. படத்தின் புரோமோஷன் மற்றும் விளம்பர உத்திகள் மக்களிடையே படம் குறித்தான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது ட்ரால் பார்ட்டி’ பாடல் ‘லஹாரி’ யூ டியூப் சேனலில் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் பாடல் காட்சி சையத் கானின் நடனத் திறமையை வெளிக்கொண்டு வந்திருப்பதுடன் கேட்பவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. பாங்காங்கில் ஒரு பெரிய கூட்டத்தில் இளைஞர்களை உற்சாகப்படுத்தும்வகையில் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

யூ டியூப் தளத்தில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வரும் நாட்களில் யூடியூப் தளத்தில் நிச்சயம் இந்த பாடல் சாதனை படைக்கும் என்று படக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

The post பஞ்ச் வசனத்துடன் வெளியான ‘பனாரஸ்’ படத்தின் ட்ரால் பாடல்..! appeared first on Touring Talkies.

]]>