Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ashok selvan – Touring Talkies https://touringtalkies.co Fri, 17 May 2024 11:10:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ashok selvan – Touring Talkies https://touringtalkies.co 32 32 தக் லைஃப்-ன் டெல்லி, ஜெய்சல்மேர் ஷூட்டிங் ஓவர்! அடுத்த ஷூட்டிங் இங்க தானாம்.. https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a/ Fri, 17 May 2024 11:10:01 +0000 https://touringtalkies.co/?p=43187 இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் இந்த ஆண்டிலேயே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படம் ஜூலை மாதத்தில் வெளிவரவுள்ளது. அதற்குப் பின்னர் கல்கி 2898 ஏடி படம் ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.இதற்கிடையில், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் 30 ஆண்டுகள் கழித்து இணைந்துள்ள தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் திரிஷா, சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் […]

The post தக் லைஃப்-ன் டெல்லி, ஜெய்சல்மேர் ஷூட்டிங் ஓவர்! அடுத்த ஷூட்டிங் இங்க தானாம்.. appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் இந்த ஆண்டிலேயே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படம் ஜூலை மாதத்தில் வெளிவரவுள்ளது. அதற்குப் பின்னர் கல்கி 2898 ஏடி படம் ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.இதற்கிடையில், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் 30 ஆண்டுகள் கழித்து இணைந்துள்ள தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் திரிஷா, சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது ஜெய்சல்மார் மற்றும் டெல்லியில் தொடர்ந்த படப்பிடிப்புகளை மணிரத்னம் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் ஆரம்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர், பாங்காக் மற்றும் செர்பியாவில் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் நடைபெறவுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று, இந்த ஆண்டின் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டில் கமல்ஹாசனின் பல படங்கள் ரிலீசாக இருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post தக் லைஃப்-ன் டெல்லி, ஜெய்சல்மேர் ஷூட்டிங் ஓவர்! அடுத்த ஷூட்டிங் இங்க தானாம்.. appeared first on Touring Talkies.

]]>
தக் லைஃப் படத்தில் இணையும் அசோக் செல்வன்? மணிரத்னம் போட்ட ப்ளான்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%af%81/ Thu, 09 May 2024 12:31:43 +0000 https://touringtalkies.co/?p=42586 தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான்-ஐ தொடர்ந்து கால் சீட் பிரச்சனையால் ஜெயம் ரவி‌ விலகி விட்டார். அதன்பின் ஜெயம் ரவியிடம் சமாதானம் பேசி இந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக எவ்வளவோ முயற்சி செய்தார்களாம். ஆனால் ஜெயம் ரவி எதையும் ஏற்காமல் நடிக்க மறுத்துவிட்டாராம். மணிரத்தினத்தின் தக் லைப் படத்தில் சிம்பு நடிக்க வந்தது பிடிக்காமல் ஜெயம் ரவி அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் முன்பில் இருந்தே பிரச்சனை […]

The post தக் லைஃப் படத்தில் இணையும் அசோக் செல்வன்? மணிரத்னம் போட்ட ப்ளான்… appeared first on Touring Talkies.

]]>
தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான்-ஐ தொடர்ந்து கால் சீட் பிரச்சனையால் ஜெயம் ரவி‌ விலகி விட்டார். அதன்பின் ஜெயம் ரவியிடம் சமாதானம் பேசி இந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக எவ்வளவோ முயற்சி செய்தார்களாம்.

ஆனால் ஜெயம் ரவி எதையும் ஏற்காமல் நடிக்க மறுத்துவிட்டாராம். மணிரத்தினத்தின் தக் லைப் படத்தில் சிம்பு நடிக்க வந்தது பிடிக்காமல் ஜெயம் ரவி அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் முன்பில் இருந்தே பிரச்சனை நீடிப்பதாக சொல்லப்படுகிறது.

இருந்த போதிலும் மணிரத்தினம் சிம்புவை மட்டும் விட்டுக் கொடுக்கவே இல்லை.யார் போனாலும் பரவாயில்லை சிம்பு இந்த படத்தில் வேண்டுமென்று அடம்பிடித்து இப்படத்தில் நடிக்க வைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பொழுது ஜெயம் ரவி கதாபாத்திரத்திற்கு வளரும் இளம் நடிகரான அசோக் செல்வனை தேர்ந்தெடுத்துள்ளார் மணிரத்தினம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் சூட்டிங் இப்பொழுது டெல்லியில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post தக் லைஃப் படத்தில் இணையும் அசோக் செல்வன்? மணிரத்னம் போட்ட ப்ளான்… appeared first on Touring Talkies.

]]>
‘சபா நாயகன்’ படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு! https://touringtalkies.co/new-song-release-from-sabha-nayagan/ Sun, 17 Dec 2023 00:40:22 +0000 https://touringtalkies.co/?p=38899 இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் ‘சபா நாயகன்’. இந்த படத்தில் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், ஷெர்லின் சேத், விவியாசாந்த், அக்சயா ஹரிஹரன், துளசி சிவமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் […]

The post ‘சபா நாயகன்’ படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் ‘சபா நாயகன்’. இந்த படத்தில் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், ஷெர்லின் சேத், விவியாசாந்த், அக்சயா ஹரிஹரன், துளசி சிவமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘சிக்கிக்கிட்டா’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கு.கார்த்திக் எழுதியுள்ள இந்த பாடலை லியோன் ஜேம்ஸ் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post ‘சபா நாயகன்’ படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>
அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள ‘போர் தொழில்’ படத்தின் டிரைலர் ! https://touringtalkies.co/por-tholil-sarath-ashok/ Wed, 31 May 2023 00:28:26 +0000 https://touringtalkies.co/?p=33000 ‘தெகிடி’, ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் அசோக் செல்வன். இவர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில்  ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடிக்கிறார். ரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க  கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேறைப் பெற்றுள்ளது. திரைப்படம் வருகிற ஜுன் 9-ந்தேதி […]

The post அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள ‘போர் தொழில்’ படத்தின் டிரைலர் ! appeared first on Touring Talkies.

]]>
‘தெகிடி’, ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் அசோக் செல்வன். இவர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில்  ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடிக்கிறார். ரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க  கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேறைப் பெற்றுள்ளது.

திரைப்படம் வருகிற ஜுன் 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

The post அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள ‘போர் தொழில்’ படத்தின் டிரைலர் ! appeared first on Touring Talkies.

]]>
அசோக் செல்வன், சரத்குமார் நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் போஸ்டர்! https://touringtalkies.co/poster-release-of-ashok-selvan-and-sarathkumar/ Wed, 17 May 2023 07:13:26 +0000 https://touringtalkies.co/?p=32548 ‘தெகிடி’, ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்ற  அசோக் செல்வன்,  ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடிக்ருகிறார். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் […]

The post அசோக் செல்வன், சரத்குமார் நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் போஸ்டர்! appeared first on Touring Talkies.

]]>
‘தெகிடி’, ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்ற  அசோக் செல்வன்,  ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடிக்ருகிறார். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் கவுதம் மேனன், வெங்கட் பிரபு, நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

The post அசோக் செல்வன், சரத்குமார் நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் போஸ்டர்! appeared first on Touring Talkies.

]]>
நித்தம் ஒரு வானம் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/niththam-oru-vaanam-movie-review/ Wed, 09 Nov 2022 17:37:37 +0000 https://touringtalkies.co/?p=26825 இந்தப் படத்தை ரைஸ் ஈஸ்ட் நிறுவனம், Viacom 18 ஸ்டுடியோஸ்ஸூடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் அசோக் செல்வனுடன் அபர்ணா பாலமுரளி, ரிது வர்மா, ஷிவாத்மிகா ராஜசேகர், ஷிவதா, அழகம்பெருமாள், காளி வெங்கட், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுத்து, இயக்கம் – ரா.கார்த்திக், இசை  – கோபி சுந்தர், ஒளிப்பதிவு – விது அய்யனா, படத் தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – கமல்நாதன், பாடல்கள் – கிருத்திகா நெல்சன், நடன இயக்குநர் – லீலாவதி குமார், நிர்வாகத் தயாரிப்பு […]

The post நித்தம் ஒரு வானம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இந்தப் படத்தை ரைஸ் ஈஸ்ட் நிறுவனம், Viacom 18 ஸ்டுடியோஸ்ஸூடன் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் அசோக் செல்வனுடன் அபர்ணா பாலமுரளி, ரிது வர்மா, ஷிவாத்மிகா ராஜசேகர், ஷிவதா, அழகம்பெருமாள், காளி வெங்கட், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ரா.கார்த்திக், இசை  – கோபி சுந்தர், ஒளிப்பதிவு – விது அய்யனா, படத் தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – கமல்நாதன், பாடல்கள் – கிருத்திகா நெல்சன், நடன இயக்குநர் – லீலாவதி குமார், நிர்வாகத் தயாரிப்பு – S.வினோத் குமார், ஒலிக் கலவை – T. உதயகுமார், உடை வடிவமைப்பாளர் – நவதேவி ராஜ்குமார், சண்டை பயிற்சி இயக்கம் – விக்கி, புகைப்படங்கள் – ஷேக், பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (D’One), விளம்பர வடிவமைப்பு – ஏஸ்தெடிக் குஞ்சம்மா, ப்ரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ் – G.கண்ணன், நிர்வாக மேற்பார்வை – மோகன் கணேசன், விஷூவல் புரோமோஷன்ஸ் – Feed Of Wolf.

நம்முடைய தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது போன்ற பயணம் தொடர்பான படங்கள் அரிதாகத்தான் வரும். எப்போதெல்லாம் நாம் சோர்வாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்கிறோமோ அப்போது  பயணம் செல்வது நம்முடைய எண்ணங்களை நேர்மறையாக்கும். இப்படியொரு பயணக் கதைதான் இந்த நித்தம் ஒரு வானம்’ படம்.

இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு நல்ல உணர்வைத் தரக் கூடிய படமாக இருக்கும். இந்தப் படத்தில் மூன்று வித்தியாசமான நிலப்பரப்பில் மூன்று வித்தியாசமான உணர்வுகளை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

3 கதாநாயகிகள் படத்தில் இருந்தாலும், இது ஒரு காதல் கதை போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் இதை எல்லாம் தாண்டி நம் வாழ்வின் தருணங்களை கொண்டாடும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளது.

நிறைய பாசிட்டிவான விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளது. படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் படம் முடித்து வெளியேறும்போது புத்துணர்ச்சியோடும், புன்னகையோடும் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இந்த ‘நித்தம் ஒரு வானம் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் போலும்..!

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வுகளைப் போல இன்பங்களும், துன்பங்களும் சேர்ந்தே வரும். இன்பம் வரும் வேளையில் அதை அனுபவிப்பது போலவே துன்பம் வந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு அடுத்து நகர்தலைச் செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு துன்பத்தைக் கண்டு துவண்டுபோய் அதையே நினைத்து வாழ்க்கையை நாமே ரணமாக்கிக் கொள்ளக் கூடாது என்பதைத்தான் இந்தப் படம் நமக்கு உணர்த்துகிறது.

அசோக்செல்வன் ஐ.டி. ஊழியர். அநியாயத்திற்கு சுத்தம் பார்ப்பவர். வீட்டில் அனைத்தும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். வீட்டில் வளர்க்கும் நாயுடன்கூட தள்ளியே இருப்பவர். அலுவலக மீட்டிங்கில் உயரதிகாரிகூட ரூல்ஸை பாலோ செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.

இப்படிப்பட்டவருக்கு பெண் கிடைத்து திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. திருமணத்திற்கு முதல் நாள் மணமகள் தற்செயலாக தனது முந்தைய காதல் கதையைச் சொல்ல.. அசோக்செல்வன் மணமகளிடம் நீ செய்ததுதான் தப்பு என்று சரியாக அட்வைஸ் செய்கிறார்.

மணமகள்  அசோக் சொன்ன சரியான அட்வைஸை புரிந்து கொண்டு திருமணத்திற்கு முதல் நாள் காதலனுடன் சென்றுவிட.. திருமணம் நின்று போகிறது.

இதனால் பெருத்த அவமானத்திற்குள்ளாகும் அசோக் தனது குடும்ப நண்பியான டாக்டர் அபிராமியின் மருத்துவமனைக்கு வருகிறார். அவரோ தன்னிடம் சிகிச்சைக்கு வந்த இரண்டு பேரின் கதைகளை அசோக்கிடம் கொடுத்துப் படிக்கச் சொல்கிறார்.

மிக, மிக சுவாரஸ்யமாக இருக்கும் அந்தக் கதைகளைப் படிக்கும் அசோக்செல்வனுக்கு அந்தக் கதைகளின் முடிவுகளை அறிய பெரும் ஆசைப்படுகிறார். அந்தக் கதைக்குச் சொந்தக்காரர்களைத் தேடிப் பயணப்படுகிறார் அசோக்.

அப்போது வழியில் நட்பாகும் ரிதுவர்மாவும் அசோக்குடன் நட்பாக இருவரும் அந்தக் கதையின் மாந்தர்களைத் தேடிச் செல்கிறார்கள். அவர்களை இவர்கள் சந்தித்தார்களா.. இந்தச் சந்திப்பு அசோக்கின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் இந்த நித்தம் ஒரு பயணம் படத்தின் சுவையான திரைக்கதை.

அசோக் செல்வனுக்கு என்ன மச்சமோ தெரியவில்லை..? கடைசியாக அவர் நடித்த படங்களிலெல்லாம் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகிகள் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் இவருக்கு 3 நாயகிகள்.

நார்மலான ஒருவன், அப்பாவி, மிக மிக அப்பாவி என்று அசோக் செல்வனுக்காகவே வித்தியாசமான கேரக்டர் ஸ்கெட்ச்சில் அவரது கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஏற்ற நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார் அசோக்செல்வன்.

அந்த கோவை வட்டார தமிழ் பேசி அபர்ணாவை ஏமாற்றும் கதாப்பாத்திரம் மிக சிறப்பு. சுத்தமே வாழ்க்கையாக நினைத்து வாழும் மெயின் ஹீரோ கேரக்டரில் தெருவுக்கு 4 பேர் இருக்கிறார்கள். இதனாலேயே இவரையும் நம்மால் ரசிக்க முடிந்திருக்கிறது.

படத்தில் 5 ஹீரோயின்கள் இருந்தாலும்  படம் முழுவதும் அசோக் செல்வனுடன் பயணிக்கும் ரிது வர்மாதான் அதிகக் காட்சிகளில் தென்படுகிறார். அந்த அழகு முகமும், நடிப்பும் கடைசிவரையிலும் நம்மை திரையைவிட்டு அகலவிடாமல் செய்திருக்கிறது.

ஷிவாத்மிகா ராஜசேகரின் அமைதியான, அடக்கமான காதலி கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் மல்லிகாவை ஞாபகப்படுத்தியிருக்கும். சற்றேறக்குறைய அனைவரின் எதிர்பார்க்குரிய காதலி இவராகவே இருக்கிறார்.

இப்போது இந்தக் கதாப்பாத்திரத்தில் என்று காண்பிக்கப்படும் ஷிவதா நாயரின் சிரிப்பான முகமும், தைரியமாக பேசும் வசனங்களும், உடல் மொழியும் அசோக் செல்வனையே அசைத்துப் பார்க்கிறது. இதனால்தான் ஷிவதாவுடன் பேசி முடித்தவுடனேயே நான் ஊருக்குப் போகிறேன் என்று துடிக்கிறார் அசோக்செல்வன்.

இவர்கள் மூவரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார் கோவை அம்மணி அபர்ணா பாலமுரளி. என்னவொரு அலட்சிய நடிப்பு.. காதலித்துதான் கல்யாணம் செய்வேன் என்பதை தனது தந்தையிடம் சொல்லும் அழகும், தந்தையிடம் அடிக்கடி கிண்டலாக பேசும் பாவனையும், மணமகள் தோற்றத்திலேயே நடுரோட்டில் நடப்பதும், பஸ்ஸ்டாண்டில் வந்து ஸ்டைலாக அமர்வதும்.. இந்தப் படம் அபர்ணாவுக்காக நேர்ந்துவிடப்பட்டது என்றே சொல்லலாம்.

இவருடைய அப்பாவான அழகம் பெருமாளுக்கு இது நிச்சயமாக பேசும் படம்தான். இப்படியொரு அப்பாவும், மகளும் உலகத்தில் இருக்கிறார்கள் எனில் அவர்கள் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான்.

படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் இயக்குநரின் இன்னொரு கண்ணாகவே இருந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா.

ஒடிசாவில் ஆரம்பித்து சென்னை, கொல்கத்தா, சண்டிகர், இமயமலை அடிவாரம் என்று திரைக்கதை போகும் அத்தனை இடங்களையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். தரனின் பின்னணி இசை படத்துக்கு உறுதுணையாய் இருந்திருக்கிறது.

இந்தப் படத்தில் சிறப்பம்சமே வித்தியாசமான திரைக்கதைதான். பொதுவாக மன நல மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லியனுப்புவார்கள்.

ஆனால் இந்தக் கதையில் தான் சந்தித்த கதாபாத்திரங்கள் உன்னைவிட கஷ்டப்பட்டவர்கள்.. துன்பப்பட்டவர்கள். வாழ்க்கை என்னும் நதியில் அடித்துச் செல்லப்பட்டவர்கள். அவர்களைப் பார்த்தாவது உனக்கு வந்ததும், நீ பட்டதும் சாதாரணம் என்று நினைத்து அடுத்தக் கட்டத்தை நோக்கிச் செல் என்பதை டாக்டர் அபிராமியின் மூலமாக சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரா.கண்ணன்.

கற்பனையாக கதையெழுதி, அதையும் படத்திற்காக நிஜக் கதைகளாக மாற்றி, அந்த நிஜக் கதையில் படத்தின் நாயகனையே நடிக்க வைத்திருக்கும் இந்த வித்தியாசமான முயற்சி உண்மையில் சிறப்புதான்.

சென்னையில்  இருந்து இமயமலைவரையிலும் செல்லும் இந்தப் பயணத்தின் மூலமாக வாழ்க்கை என்றால் என்ன என்பதை நாயகனுக்குச்  சொல்லிக் கொடுப்பதுபோல படம் பார்க்க வந்திருக்கும் ரசிகர்களுக்கும் ஒரு பாடத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

எனக்கு வந்தது தற்காலிகமான தடைதான். கெடுதிதான். கஷ்டம்தான். அடுத்து என் வாழ்க்கையில் ஒரு வசந்தம் வரும் என்ற நேர்மறை சிந்தனையையும், நம்பிக்கையும் நமக்குள் விதைத்திருக்கிறது இந்தப் படம்.

“எல்லோரும் ஒரு நாள் சாகத்தான் போறோம். அதுவரை வழியில் பார்த்து “ஹாய்” சொல்றவருக்கு நாமும் பதிலுக்கு “ஹாய்” என்று சொல்றதுல என்ன தப்பு இருக்கு..?” என்ற ஒரு வசனத்தின் மூலமாகவும் நமது மனித மனத்தின் எண்ணத்தை மேம்படுத்த வைக்கிறது இத்திரைப்படம்.

படம் துவக்கத்தில் சற்று மெதுவாக நகர்ந்தாலும் அந்த 2 கதைகளின் முடிவில் படம் பறக்கிறது. அசோக் செல்வனைவிடவும் தியேட்டர் ரசிகர்கள்தான் அந்த 2 பேரின் தற்போதைய வாழ்க்கையைப் பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த ஏக்கத்தை ரசிகனுக்குக் கொடுத்திருக்கும் இந்தப் படக் குழுவினருக்கு நமது வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..!

நித்தம் ஒரு வானம் – வாழ்க்கையை கொண்டாட சொல்கிறது..!

RATING : 4.5 / 5

The post நித்தம் ஒரு வானம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
அசோக் செல்வன்-அபர்ணா பாலமுரளி நடித்த ‘நித்தம் ஒரு வானம்’ நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது https://touringtalkies.co/niththam-oru-vaanam-movie-will-release-on-november-14/ Sat, 22 Oct 2022 17:41:30 +0000 https://touringtalkies.co/?p=25856 ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து தயாரிக்கும், ‘நித்தம் ஒரு வானம்’ படம் வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. நல்ல கதையம்சம் கொண்ட ஃபீல் குட் படங்கள் எப்போதும் சினிமா பார்வையாளர்களின் முதல் தேர்வாக இருக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக உருவெடுத்திருக்கிறது ‘நித்தம் ஒரு வானம்.’ இந்தப் படத்தில் அசோக்செல்வன், ரித்துவர்மா மற்றும் அபர்ணா பாலமுரளி & ஷிவாத்மிகா ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை: […]

The post அசோக் செல்வன்-அபர்ணா பாலமுரளி நடித்த ‘நித்தம் ஒரு வானம்’ நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து தயாரிக்கும், ‘நித்தம் ஒரு வானம்’ படம் வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது.

நல்ல கதையம்சம் கொண்ட ஃபீல் குட் படங்கள் எப்போதும் சினிமா பார்வையாளர்களின் முதல் தேர்வாக இருக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக உருவெடுத்திருக்கிறது ‘நித்தம் ஒரு வானம்.’

இந்தப் படத்தில் அசோக்செல்வன், ரித்துவர்மா மற்றும் அபர்ணா பாலமுரளி & ஷிவாத்மிகா ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசை: கோபி சுந்தர், ஒளிப்பதிவாளர்: விது அய்யனா, படத் தொகுப்பு : அந்தோணி, கலை இயக்கம் : கமல்நாதன், பாடல்கள் : கிருத்திகா நெல்சன், நடன இயக்குநர்: லீலாவதி குமார், நிர்வாகத் தயாரிப்பாளர்: S. வினோத் குமார், ஒலிக்கலவை: T. உதயகுமார், ஆடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார், சண்டை பயிற்சி இயக்கம் : விக்கி, புகைப்படங்கள்: ஷேக், பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா D’One, சதீஷ், விளம்பர வடிவமைப்பு: ஏஸ்தெடிக் குஞ்சம்மா, புரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ்: G கண்ணன், தயாரிப்பு கட்டுப்பாடு: மோகன் கணேசன், விஷுவல் புரோமோஷன்ஸ்: Feel the Wolf.

வாழ்க்கையின் பயணத்தை மிகவும் பாசிட்டிவான முறையில் கையாண்டுள்ள இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். படம் பார்த்து முடித்து திரையரங்குகளில் இருந்து பார்வையாளர்கள் வெளியேறும்போது நிச்சயம் கதை குறித்து பாசிட்டிவாக உணர்வார்கள்.“என இயக்குநர் Ra. கார்த்திக் நம்புகிறார்.

சென்னை, சண்டிகர், மணலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா என வித்தியாசமான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் வரும் நவம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

The post அசோக் செல்வன்-அபர்ணா பாலமுரளி நடித்த ‘நித்தம் ஒரு வானம்’ நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய கதையில் பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் https://touringtalkies.co/pa-ranjith-new-movie-starts-today/ Mon, 15 Aug 2022 11:12:58 +0000 https://touringtalkies.co/?p=23827 இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில்  கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய  படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்தப் படத்தில்  அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ‘O2’,  ‘தம்மம்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தமிழழகன், இந்தப் […]

The post கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய கதையில் பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில்  கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய  படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்கள்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்தப் படத்தில்  அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

O2’,  ‘தம்மம்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தமிழழகன், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

திரைக்கதை, வசனம் – தமிழ் பிரபா மற்றும் ஜெய்குமார், இயக்கம் – ஜெய்குமார், தயாரிப்பு – லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி, நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித், கலை இயக்கம் – ரகு, படத் தொகுப்பு – செல்வா R.K., உடைகள் – ஏகாம்பரம், புகைப்படங்கள் – ராஜா, பத்திரிகை தொடர்பு – குணா.

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

தமிழகத்தின் நகரங்கள், ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும், நட்பு, கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும்படியான கதையமைப்பில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

அரக்கோணம்  சுற்றுவட்டார பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது.  இன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

The post கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய கதையில் பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் appeared first on Touring Talkies.

]]>
மன்மத லீலை – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/manmatha-leelai-movie-review/ Tue, 05 Apr 2022 16:57:07 +0000 https://touringtalkies.co/?p=21578 ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றிய கதை இது. படத்தின் டிரெயிலரிலேயே “மாட்டிக் கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே!” – “இப்படிக்கு மாட்டிக் கொண்டவர்” என்று டைட்டில் கார்டு போட்டிருந்தபோதே இது ‘வேற மாதிரி’ படம் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. கூடுதலாக இந்தப் படத்திற்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் வேறு கிடைத்திருக்கிறது. இது போதாதா..? படத்தின் நாயகனான அசோக் செல்வனின் வாழ்க்கையில் அவரது திருமணத்திற்கு முன்பு 2010-ம் வரும் […]

The post மன்மத லீலை – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றிய கதை இது.

படத்தின் டிரெயிலரிலேயே “மாட்டிக் கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே!” – “இப்படிக்கு மாட்டிக் கொண்டவர்” என்று டைட்டில் கார்டு போட்டிருந்தபோதே இது ‘வேற மாதிரி’ படம் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. கூடுதலாக இந்தப் படத்திற்கு சென்சாரில் ஏ’ சான்றிதழ் வேறு கிடைத்திருக்கிறது. இது போதாதா..?

படத்தின் நாயகனான அசோக் செல்வனின் வாழ்க்கையில் அவரது திருமணத்திற்கு முன்பு 2010-ம் வரும் நடந்த ஒரு சம்பவும், திருமணத்திற்குப் பின்பு 2020-ம் வருடம் நடக்கும் ஒரு சம்பவமும்தான் இந்த மன்மத லீலை’ படத்தின் திரைக்கதை.

இந்த இரு காலகட்டத்தில் நடக்கும் ஒரே மாதிரியான ‘அடல்ட்’ சம்பவங்களும், அதன் விளைவுகளால் ஏற்படும் ரகளைகளும்தான் இந்த ‘மன்மத லீலை’ படம்.

2010-ம் வருடம் இணையத்தில் சாட்டிங் செய்கையில் சிக்கும் சம்யுக்தாவுடன் உறவு வைத்துக் கொள்ள ஆசையாய் வலை வீசுகிறார் அசோக் செல்வன். சம்யுக்தாவும் ஒரு நல்ல முகூர்த்த நாளில் “தனது அப்பா ஊருக்குப் போகிறார்” என்று சொல்லி அசோக் செல்வனை வீட்டுக்கு அழைக்கிறார்.

இருவரும் இணைந்து மது அருந்துகிறார்கள். சண்டையிடுகிறார்கள். பின்பு சமாதானமாகிறார்கள். கடைசியில் படுக்கையில் இணைகிறார்கள். ஆனால் விடிந்த பொழுதில் சம்யுக்தா “அப்பா” என்று சொன்ன ஜெயப்பிரகாஷ் வீட்டுக்கு வந்துவிட அவரிடமிருந்து தப்பிக்க பெரும்பாடு படுகிறார்கள் சம்யுக்தாவும், அசோக் செல்வனும்.

இந்தத் தப்பித்தல் முடியாமல் போய், கடைசியில் வில்லங்கத்தில் முடிகிறது. இதன் பின் என்ன ஆகிறது என்பது சஸ்பென்ஸ்.

இன்னொரு பக்கம் 2020-ம் ஆண்டில் மனைவியும், மகளும் மாமனார் வீட்டுக்குப் போயிருக்கும் சூழலில் அசோக் செல்வனின் வீட்டு வாசலில் முகவரி மாறி ஒரு பெண் மழையில் நனைந்தபடி வந்து நிற்கிறார்.

அவளைப் பார்த்தவுடனேயே அசோக் செல்வனுக்கு இவளை அடைந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வர.. அவரை வீட்டுக்குள் அழைத்து அமர வைத்து கூல் செய்கிறார்.இந்த சிறிது நேர பழக்கமும் கடைசியில் கட்டிலில் போய் முடிகிறது.

மறுநாள் காலையில் அசோக் செல்வனின் மனைவி ஸ்முருதி வெங்கட் வீட்டுக்கு வந்து நிற்க.. பத்து வருஷத்துக்கு முன்பு சம்யுக்தா வீட்டில் நடந்த அதே களேபரம் இப்போது அசோக் செல்வனுக்கு மீண்டும் அவரது வீட்டிலேயே நடக்கிறது. இந்தக் களேபரமும் மீண்டும் ஒரு வில்லங்கத்தில் போய் முடிகிறது.

முதல் வில்லங்கத்திற்கும், இரண்டாவது வில்லங்கத்திற்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பது கடைசியாகத்தான் தெரிய வருகிறது. அது என்ன.. கடைசியில் ஜொள்ளு மன்னன் அசோக் செல்வனின் கதி என்னவாகிறது என்பதுதான் இந்த மன்மத லீலை’ படத்தின் திரைக்கதை.

படம் முழுக்க அசோக் செல்வன் தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்றவாறு நடித்திருக்கிறார். அந்த வயதில் அந்தக் கல்யாண குண’த்தில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் பேசுவார்களோ.. நடிப்பார்களோ.. அப்படியே நகல் எடுத்ததுபோல நடித்திருக்கிறார்.

சம்யுக்தா-ஜெயப்பிரகாஷின் உண்மையான உறவு முறையைத் தெரிந்து கொண்ட அசோக்செல்வன், “உனக்கு காதலனா இருக்கலாம்னு நினைச்சேன்… இப்படி கள்ளக் காதலன் ஆக்கிட்டீயேடி..?” என்று சொல்லும் காட்சியில் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்திருக்கிறார்.

ஜெயப்பிரகாஷிடம் சம்யுக்தாவைப் பற்றி அசோக் சொல்லும்போது, “இவளை உஷார் பண்ணலாம்னு நினைச்சா.. கடைசீல இவதான் என்னை உஷார் பண்ணிட்டா” என்று சொல்லும்போதும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

’உன்னைப் பார்க்கும்போது என் ஃபியூச்சர் ஞாபகம் வருது..” என்ற சம்யுக்தாவிடம், “இன்னும் ரெண்டு பெக் போட்டா செத்துப் போன உன் ஆயா எல்லாம் ஞாபகம் வருவாங்க…” என்று ரொமாண்டிக் ப்ளஸ் காமெடியில் கலகலப்பூட்டியிருக்கிறார் அசோக் செல்வன்.

நடிகைகளில் ஸ்மிரதி வெங்கட் அடக்கமான, ஆனால் அழகான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். வெறுத்துப் போன கணவன் கேரக்டரில் ஜெயப்பிரகாஷின் நடிப்பைப் பார்த்தால் பாவமாகத், தோன்றியது.

சம்யுக்தா ஹெக்டேவும், ரியா சுமனும் தங்களது உடல் அழகை அவ்வப்போது காட்டியபடியே நடித்திருக்கிறார்கள். இதில் சம்யுக்தா அப்பாவி என்றால் ரியா சுமன் வில்லியாகியிருக்கிறார். ஆனால், சம்யுக்தாவை குளோஸப் காட்சிகளில்தான் பார்க்க முடியவில்லை. எப்படி இவரை இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் ரியா சுமன் கச்சிதமான தேர்வு. கட்டிலுக்கு அடியில் படுத்தபடியே டென்ஷனில் இருக்கும் அசோக் செல்வனின் கால்களை வருடி டென்ஷனை ஏற்றும் அந்தக் குறும்புக்கு ஒரு மார்க் போடலாம்.

அடல்ட் ஒன்லி படம் என்பதால் எக்கச்சக்கமாக சீன்ஸ்கள் இருக்கும் என்றெண்ணி தியேட்டருக்கு வரும் விடலைப் பசங்களை ரொம்பவே ஏமாற்றியிருக்கிறார் இயக்குநர்.

சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் இருவருக்கும் அசோக் செல்வன் கொடுக்கும் இரண்டு ‘அழுத்தமான’ ப்ரெஞ்ச் கிஸ்கள்தான் படத்தில் இருக்கும் இரண்டு அடல்ட் டைப் சீன்கள்.. மற்றபடி வேறெதுவுமில்லை.

படத்தின் முதல் பாதியில் அசோக் செல்வன் சம்யுக்தாவையும் ரியா சுமனையும் ‘மேற்படி’ சமாச்சாரத்தில் மடக்குவதற்காக பேசும் பேச்சுக்கள் அனைத்தும் அடல்ட் கேட்டகிரியில் அடங்கியிருக்கிறது.

உண்மையில் இடைவேளைக்குப் பிறகுதான் ரகளையே ஆரம்பமாகிறது. இரண்டு சம்பவங்களிலும் கூடல்’ முடிந்த காலையில் நடக்கும் சம்பவங்கள்தான் பரபரவென்று இருக்கிறது. இதில் அதிகமான நடிப்பைக் காட்டி டென்ஷனைக் கூட்டியிருக்கிறார் சம்யுக்தா.

சம்யுக்தா – அசோக் செல்வன், ரியா சுமன் – அசோக் செல்வன் என்று இந்த இரண்டு ஜோடிகளின் கள்ளக் காதல் விஷயத்தை அடுத்தடுத்து ஒரு சீக்வல் ஆர்டரில் குழப்பமில்லாமல் காட்டியிருக்கிறார்கள். இதற்காக படத் தொகுப்பாளர் வெங்கட் ராஜனுக்கு நமது பாராட்டுக்கள்..!

ஆனால், இடைவேளைக்கு பின்புகூட ஒரே மாதிரியான சம்பவங்கள் இரண்டு முறை நடப்பதாகக் காட்டுவதால் கொஞ்ச நேரத்தில் சலிப்புத் தட்டுகிறது.

ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனின் ஒளிப்பதிவில் சம்யுக்தா, ரியா சுமன் இருவரின் உடல்களையும் எக்ஸ்ரே எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. பிரேம்ஜியின் பின்னணி இசையும் இந்தக் காமக் கலைக்கும், காமக் கதைக்கும் பெரிதாகக் கை கொடுத்திருக்கிறது.

ஆனால் முடிவுதான் முற்றுப் பெறாத வகையில் முடிக்கப்பட்டிருக்கிறது. “கெட்டவன் வாழ்வான்…” என்று காட்டியிருப்பது இயக்குநரின் தேர்வாக இருக்கலாம். ஆனால் இந்தக் கதைக்கு இது தவறானது.

ஏற்கெனவே நாளுக்கு நாள் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெண்களுக்கெதிரான வன்முறைகளும், அடக்குமுறைகளும் அதிகரித்தே வருகின்றன.

இந்த நேரத்தில் இது போன்ற கள்ளத் தொடர்பு கதைகளை நியாயப்படுத்துவதுபோலவும், அவைகளை செய்பவர்கள் அதிலிருந்து தப்பித்து ஹீரோ போல இருப்பதாகக் காட்டுவதும் அயோக்கியத்தனம்.

அதோடு பெண்களும் விரும்பி மது அருந்துவது போல காட்சிகளை வைத்திருப்பது பச்சை முட்டாள்தனம். இயக்குநர் வெங்கட் பிரபு திரைப்படத்தில் என்ன சொல்கிறோம் என்பதைத் தெரிந்து செய்திருக்க வேண்டும். நாட்டுக்கு நல்லது செய்யலைன்னாலும் பரவாயில்லை.. கெடுதல் செய்யாதீங்க இயக்குநர்களே..!!!

இப்போதுதான் மாநாடு’ படத்தில் ஒரு சிறந்த புதுமையான கதை, திரைக்கதையில் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு இப்படியொரு கேவலமான படத்தைக் கொடுத்திருக்க தேவையில்லை. முதலில் இப்படியொரு படமே எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் உருவாக்கிய மன்மத லீலை’ திரைப்படம் உளவியல் ரீதியாக அந்த மனிதனுக்குள் ஏற்படும் காம எண்ணங்களை அனைவரும் புரிந்து கொள்வதுபோல காட்சிப்படுத்தியிருப்பார். அதனால்தான் அந்தப் படம் இப்போதும் பேசப்படுகிறது.

அதே தலைப்பை சட்டத்தின் துணையோடு வைத்துக் கொண்டு, இப்படியொரு கேவலமான கதையில் இதை உருவாக்கியிருக்க வேண்டாம்.

வெங்கட் பிரபுவுக்கு நிறைய இயக்கத் திறமைகள் உண்டு. இனி வரும் காலங்களில் அந்தத் திறமையை நல்ல வழியில் காட்டினால் திரையுலகத்துக்கும் நல்லது. அவருக்கும் நல்லது..!

The post மன்மத லீலை – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>