Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
arulnithi – Touring Talkies https://touringtalkies.co Fri, 26 May 2023 12:50:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png arulnithi – Touring Talkies https://touringtalkies.co 32 32  விமர்சனம்: கழுவேத்தி மூர்க்கன்  https://touringtalkies.co/kazhuvethi-moorkan-review/ Fri, 26 May 2023 02:47:06 +0000 https://touringtalkies.co/?p=32798 கரடு முரடான மூர்க்க சாமியும், பொறுப்பான பூமி நாதனும் இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அதை கண்டு கொள்ளாமல் நண்பர்களாய் பழகி வருகின்றனர். இவர்களின் நட்பு அரசியல் தலைவர்களின் ஆதாயத்திற்கு தடையாய் நிற்க இதில் பூமி கொல்லப்படுகிறான். அந்தப்பழி மூர்க்கன் மீது விழுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை! கிடுக்கு மிடுக்கான உடல் மொழியுடன் அனல் பறக்க மூர்க்கனாய் வரும் அருள்நிதி ஆக்ஷனில் மிரட்டுகிறார். இந்தப்படம் அவரது சினிமா கேரியரில் இனி ஆக்ஷன் […]

The post  விமர்சனம்: கழுவேத்தி மூர்க்கன்  appeared first on Touring Talkies.

]]>
கரடு முரடான மூர்க்க சாமியும், பொறுப்பான பூமி நாதனும் இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அதை கண்டு கொள்ளாமல் நண்பர்களாய் பழகி வருகின்றனர். இவர்களின் நட்பு அரசியல் தலைவர்களின் ஆதாயத்திற்கு தடையாய் நிற்க இதில் பூமி கொல்லப்படுகிறான். அந்தப்பழி மூர்க்கன் மீது விழுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை!

கிடுக்கு மிடுக்கான உடல் மொழியுடன் அனல் பறக்க மூர்க்கனாய் வரும் அருள்நிதி ஆக்ஷனில் மிரட்டுகிறார். இந்தப்படம் அவரது சினிமா கேரியரில் இனி ஆக்ஷன் படங்களை அவர் பக்கம் இழுத்து வரும். பூமியாக சந்தோஷ் பிரதாப். அவரால் இயலும் வரைக்கு அவர் நல்ல நடிப்பை கொடுத்து இருந்தாலும் அவர் உடல் மொழி அந்தக் கதாபாத்திரத்தோடு ஒட்டவில்லை. இன்னும் நல்ல தேர்வாக தேர்ந்து எடுத்து இருக்கலாம்.

துஷாரா விஜயனின் திமிரான நடிப்பு ரசிக்க வைக்கிறது. ஆனால் அவரது காதலை இன்னும் ஆழமாக காட்டி இருக்கலாம். இதர நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கின்றனர்.

இரு சமுதாயங்களை பற்றிப் பேசும் கதை என்பதால் மிக மிக கவனமாக கையாள வேண்டிய ஆளுமை இயக்குனருக்கு தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ஆளுமையாக இருந்து படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குநர் கவுதம் ராஜ். முதல் பாதியில் சில இடங்களில் ஏற்கனவே நாம் பார்த்து பழகிய காட்சிகள் இருந்தாலும் இரண்டாம் பாதி முழுக்க அனலின் உச்சமாக இருக்கிறது. டி இமானின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது.

மொத்தத்தில் ரசிக்க வைக்கும் படம்.

The post  விமர்சனம்: கழுவேத்தி மூர்க்கன்  appeared first on Touring Talkies.

]]>
2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த அருள்நிதி பட டீசர் https://touringtalkies.co/arulnithi-movie-teaser-crossed-2-million-viewers/ Sun, 23 Apr 2023 19:11:17 +0000 https://touringtalkies.co/?p=31847 கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் […]

The post 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த அருள்நிதி பட டீசர் appeared first on Touring Talkies.

]]>
கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.

இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இப்படத்தின் டீசரை நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்த டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது

The post 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த அருள்நிதி பட டீசர் appeared first on Touring Talkies.

]]>
அருள்நிதியின் ‘தேஜாவு’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு https://touringtalkies.co/arulnidhis-tejaavu-movies-release-date-announced/ Sat, 11 Jun 2022 07:36:23 +0000 https://touringtalkies.co/?p=22567 ரெட் கார்பெட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.விஜய் பாண்டி தயாரிப்பில், P.G. மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் P.G.முத்தையா இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தேஜாவு’. இப்படத்தில் அருள்நிதி நாயகனாக நடித்துள்ளார். மேலும் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், ‘மைம்’ கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, P.G.முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத் தொகுப்பாளராக அருள் E.சித்தார்த், சண்டை பயிற்சியாளராக பிரதீப் […]

The post அருள்நிதியின் ‘தேஜாவு’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
ரெட் கார்பெட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.விஜய் பாண்டி தயாரிப்பில், P.G. மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் P.G.முத்தையா இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தேஜாவு’.

இப்படத்தில் அருள்நிதி நாயகனாக நடித்துள்ளார். மேலும் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், மைம்’ கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, P.G.முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத் தொகுப்பாளராக அருள் E.சித்தார்த், சண்டை பயிற்சியாளராக பிரதீப் தினேஷும், கலை இயக்குநராக வினோத் ரவீந்திரனும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தினை அறிமுக இயக்குநரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் படக் குழுவினர் வெளியீட்டிற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் படத்தின் நாயகனான அருள்நிதியின் பிறந்த நாளான வரும் ஜுலை 21-ம் தேதியன்று இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

The post அருள்நிதியின் ‘தேஜாவு’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>