Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
andhra – Touring Talkies https://touringtalkies.co Sat, 12 Aug 2023 02:25:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png andhra – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஆந்திராவிலும் சிறப்பு காட்சிகள் ரத்து! இது வேற படம்.. வேற காரணம்! https://touringtalkies.co/special-shows-canceled-in-andhra-too-this-is-a-different-film-for-a-different-reason/ Sat, 12 Aug 2023 02:25:45 +0000 https://touringtalkies.co/?p=35244 அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டில் வெளியான திரைப்படம் ‘வேதாளம்’. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘போலா ஷங்கர்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படம் நேற்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முழுதும் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படத்தின் அதிகாலை ரசிகர் சிறப்பு காட்சிக்கு ஆந்திர அரசு தடை விதித்துவிட்டது. வன்முறை காட்சிகள் அதிகம் என்று கூறி, இங்கிலாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட சில நாடுகளில் […]

The post ஆந்திராவிலும் சிறப்பு காட்சிகள் ரத்து! இது வேற படம்.. வேற காரணம்! appeared first on Touring Talkies.

]]>
அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டில் வெளியான திரைப்படம் ‘வேதாளம்’. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘போலா ஷங்கர்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

இப்படம் நேற்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முழுதும் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படத்தின் அதிகாலை ரசிகர் சிறப்பு காட்சிக்கு ஆந்திர அரசு தடை விதித்துவிட்டது.

வன்முறை காட்சிகள் அதிகம் என்று கூறி, இங்கிலாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட சில நாடுகளில் ரஜினியின் ஜெயிலர் படம் தடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் சிரஞ்சிவீயின் திரைப்படத்துக்கு அதிகாலை காட்சிக்கு ஆந்திராவில் தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநில  அரசின் சார்பில், ““திரைப்படத்தின் ஷூட்டிங் 20 சதவீதம் அந்தந்த மாநிலத்தில் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்போதுதான் மாநில அரசின் சலுகைகள் வழங்க முடியும்.  ஆனால் ‘போலா ஷங்கர்’ திரைப்படம் முழுக்க முழுக்க தெலுங்கானாவில் எடுக்கப்பட்டது. ஆகவேதான் இந்த சலுகை மறுக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது சிரஞ்சீவி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

The post ஆந்திராவிலும் சிறப்பு காட்சிகள் ரத்து! இது வேற படம்.. வேற காரணம்! appeared first on Touring Talkies.

]]>
167 பள்ளிகளை தத்தெடுத்த பிரபலநடிகை! https://touringtalkies.co/akshmi-manchu-adopted-167-schoolsll/ Tue, 25 Jul 2023 04:19:50 +0000 https://touringtalkies.co/?p=34691 தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்த மோகன் பாபுவின் ஒரே மகள் லட்சுமி மஞ்சு.  குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் நுழைந்த இவர்,  2008 ஆம் ஆண்டு ‘The Ode’ என்ற ஆங்கில திரைப்படம் மூலம்  நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் சில ஆங்கில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி உள்ள அக்னி நட்சத்திரம் […]

The post 167 பள்ளிகளை தத்தெடுத்த பிரபலநடிகை! appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்த மோகன் பாபுவின் ஒரே மகள் லட்சுமி மஞ்சு.  குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் நுழைந்த இவர்,  2008 ஆம் ஆண்டு ‘The Ode’ என்ற ஆங்கில திரைப்படம் மூலம்  நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் சில ஆங்கில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி உள்ள அக்னி நட்சத்திரம் படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படி இவர் படங்களில் பிஸியாக பணியாற்றி வந்தாலும் சமூகப் பணிகளிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் டீச் ஃபார் சேஞ்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  சுமார், 167 பள்ளிகளை தத்து எடுத்து இருக்கிறது.

இதன் நோக்கம் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதுதான். இந்த அமைப்பின் மூலம் புதுமையான கற்பித்தல் முறைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் 16,497 மாணவர்கள் தற்போது பயன் அடைந்து இருக்கிறார்கள்.

The post 167 பள்ளிகளை தத்தெடுத்த பிரபலநடிகை! appeared first on Touring Talkies.

]]>
ஆந்திராவில் ரஜினியை கொண்டாடிய என்.டி.ஆர் குடும்பம் https://touringtalkies.co/andhra-ntr-family-heartly-welcome-to-rajinikanth/ Sun, 30 Apr 2023 06:34:04 +0000 https://touringtalkies.co/?p=32037 தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராகவும், தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி ஆந்திராவின் முதல்வராகவும் இருந்தவர் என.டி.ராமாராவ். சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள என்.டி.ஆர், தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.மற்றும் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்தார். இந்நிலையில் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவு செய்த அவரது குடும்பம் இதற்காக பிரம்மாண் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டை என்.டி.ஆர் மகன் பாலகிருஷ்ணா கவனித்துக்கொண்டார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று கடந்த சில தினங்களுக்கு […]

The post ஆந்திராவில் ரஜினியை கொண்டாடிய என்.டி.ஆர் குடும்பம் appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராகவும், தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி ஆந்திராவின் முதல்வராகவும் இருந்தவர் என.டி.ராமாராவ். சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள என்.டி.ஆர், தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.மற்றும் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்தார்.

இந்நிலையில் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவு செய்த அவரது குடும்பம் இதற்காக பிரம்மாண் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டை என்.டி.ஆர் மகன் பாலகிருஷ்ணா கவனித்துக்கொண்டார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் பாலகிருஷ்ணா அறிவித்திருந்தார்.அதன்படி என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆந்திராவின் விஜயவாடாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் என்.டி.ஆர் மருமகன் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பங்கேற்க வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு என்.டி.ஆர் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், என்.டி.ஆர் மகள், ‘தலைவா, வணக்கம்… நன்றி! என்று கூறி ரஜினிகாந்துக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post ஆந்திராவில் ரஜினியை கொண்டாடிய என்.டி.ஆர் குடும்பம் appeared first on Touring Talkies.

]]>
வாரிசுடு, படத்துக்கு பிரச்சினை இல்லை!: சொல்கிறார் திருப்பூர் சுப்ரமணியம் https://touringtalkies.co/varisudu-the-film-has-no-problem-tirupur-subramaniam-says/ Fri, 18 Nov 2022 12:47:00 +0000 https://touringtalkies.co/?p=27292 யு டியுப் சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார், திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியன். அப்போது அவர், “வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, விஜய் நடிக்கும் வாரிசு படம் வெளியாகிறது. இதே படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வாரிசுடு என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், ‘நேரடி தெலுங்கு படங்களுக்குத்தான் அதிக திரையரங்குகளை அளிக்க வேண்டும். டப்பிங் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது’ என்ற குரல் எழுந்திருக்கிறது. இதனால் வாரிசுடு  படம் அந்த இரு […]

The post வாரிசுடு, படத்துக்கு பிரச்சினை இல்லை!: சொல்கிறார் திருப்பூர் சுப்ரமணியம் appeared first on Touring Talkies.

]]>
யு டியுப் சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார், திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியன். அப்போது அவர், “வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, விஜய் நடிக்கும் வாரிசு படம் வெளியாகிறது. இதே படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வாரிசுடு என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், ‘நேரடி தெலுங்கு படங்களுக்குத்தான் அதிக திரையரங்குகளை அளிக்க வேண்டும். டப்பிங் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது’ என்ற குரல் எழுந்திருக்கிறது.

இதனால் வாரிசுடு  படம் அந்த இரு மாநிலங்களில் வெளியாகுமா  என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

இது தேவையற்ற கேள்வி.

எந்த ஒரு மாநிலத்திலுமே அந்த மொழி படங்களுக்குத்தான் முன்னுரிமை தருவார்கள். கேஜிஎப்

இங்கு கே.ஜி.எப். வெளியானபோதுதான் பீஸ்ட் வெளியானது. ஆனால் பீஸ்ட் படத்துக்குத்தானே அதிக திரையரங்குகள் கிடைத்தன.. அதே போல காந்தாரா படம் இங்கே வெளியானபோதும், வேறு தமிழ்ப் படங்களுக்குத்தானே அதிக திரையரங்குகள் கிடைத்தன..

குறைவான திரையரங்குகள் கிடைத்தாலும் அந்த இரு மாநிலங்களில் வாரிசுடு வெளியாகும்.  எந்த படத்தை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதற்கான திரையரங்குகள் அதிகரிக்கும்.. அவ்வளவுதான்” என்றார் திருப்பூர் சுப்ரமணியம்.

The post வாரிசுடு, படத்துக்கு பிரச்சினை இல்லை!: சொல்கிறார் திருப்பூர் சுப்ரமணியம் appeared first on Touring Talkies.

]]>