Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
actor radharavi – Touring Talkies https://touringtalkies.co Wed, 27 Mar 2024 09:31:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png actor radharavi – Touring Talkies https://touringtalkies.co 32 32 70 வயதிலும் ஹீரோவாக நடிக்கும் டத்தோ ராதாரவி. https://touringtalkies.co/70-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b9%e0%af%80%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ Wed, 27 Mar 2024 09:31:56 +0000 https://touringtalkies.co/?p=40305 1976 ஆம் ஆண்டு ‘மன்மதலீலை’ படத்தில் அறிமுகமாகி, வில்லன், கதாநாயகன், குணச்சித்திரம் , நகைச்சுவை என பலவிதமான பாத்திரங்களில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர், டத்தோ ராதாரவி. எழுபது வயதை கடந்த ராதாரவி, இப்போது ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர், ‘கடைசி தோட்டா’. இந்தப் படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக, ராதாரவி நடித்துள்ளார். ஒரு நாளில் நடக்க கூடிய மர்மங்கள் நிறைந்த க்ரைம் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் […]

The post 70 வயதிலும் ஹீரோவாக நடிக்கும் டத்தோ ராதாரவி. appeared first on Touring Talkies.

]]>
1976 ஆம் ஆண்டு ‘மன்மதலீலை’ படத்தில் அறிமுகமாகி, வில்லன், கதாநாயகன், குணச்சித்திரம் , நகைச்சுவை என பலவிதமான பாத்திரங்களில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர், டத்தோ ராதாரவி. எழுபது வயதை கடந்த ராதாரவி, இப்போது ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர், ‘கடைசி தோட்டா’.

இந்தப் படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக, ராதாரவி நடித்துள்ளார். ஒரு நாளில் நடக்க கூடிய மர்மங்கள் நிறைந்த க்ரைம் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

இந்தப் படத்தில் இன்னொரு முக்கியமான வேடத்தில் வனிதா விஜயகுமார் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு அசிஸ்டண்ட் போலீஸ் கமிஷ்னர் வேடமாம். ஸ்ரீகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நகைச்சுவை காட்சிகளில் வையாபுரி, கொட்டாச்சி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசைமைக்க, பாடல்களை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார். விவி பிரசன்னா, கானா சுதாகர், டெய்ஸி ஆகியோர் பாடியுள்ளனர். மோகன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லோகேஷ்வரன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.சுவாமிநாதன் தயாரிப்பில், நவீன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்கிறார், இயக்குநர்நவீன் குமார்.

The post 70 வயதிலும் ஹீரோவாக நடிக்கும் டத்தோ ராதாரவி. appeared first on Touring Talkies.

]]>
“மக்கள் சினிமா பார்த்தால்தான் நாங்கள் வாழ முடியும்” – நடிகர் ராதாரவி பேச்சு..! https://touringtalkies.co/we-can-live-only-if-people-watch-cinema-actor-radharavi-speech/ Thu, 22 Sep 2022 10:42:12 +0000 https://touringtalkies.co/?p=24634 ‘சுறா’, ‘அழகர் மலை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் நகைச்சுவை திரைப்படம் ‘லோக்கல் சரக்கு’. உபாசனா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, சென்றாயன், வையாபுரி, ரெமோ சிவா, சாம்ஸ், வினோதினி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தினை தயாரித்ததோடு பாடல்களுக்கு இசையமைத்தும் உள்ளார் தயாரிப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ். இந்த ‘லோக்கல் சரக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழா […]

The post “மக்கள் சினிமா பார்த்தால்தான் நாங்கள் வாழ முடியும்” – நடிகர் ராதாரவி பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
‘சுறா’, ‘அழகர் மலை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் நகைச்சுவை திரைப்படம் ‘லோக்கல் சரக்கு’.

உபாசனா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, சென்றாயன், வையாபுரி, ரெமோ சிவா, சாம்ஸ், வினோதினி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தினை தயாரித்ததோடு பாடல்களுக்கு இசையமைத்தும் உள்ளார் தயாரிப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ்.

இந்த லோக்கல் சரக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நேற்று காலை நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் ராதாரவி, சினேகன், இசையமைப்பாளர் தீனா,  சங்கர் கணேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.

இந்த விழாவில் நடிகர் ராதாரவி பேசுகையில், “லோக்கல் சரக்கு என்று தலைப்பு வைத்திருப்பதால் இந்தப் படம் நன்றாக ஓடும். சரக்கு போட்டுவிட்டால் படம் புரியாது. லோக்கல் சரக்கு இல்லையென்றால் எந்த அரசையும் நடத்த முடியாது.

குடியை நிறுத்த முடியும் என்று சொன்னால் இரவு நிறுத்தினேன்; மீண்டும் காலையில் ஆரம்பித்தேன்” என்பார்கள். நாங்கள் அப்படி பழகிவிட்டோம். ஒரு முறை குடிக்கப் பழகிவிட்டு அதை விடமுடியாமல் மீண்டும், மீண்டும் குடிக்கிறார்கள். சினிமா தியேட்டருக்கு மக்கள் தற்போது வருவதே இல்லை. ஆனால், டாஸ்மாக் அப்படியா? கூட்டம் அதிகமாக இருக்கும். சினிமாவில் டிக்கெட் வாங்குவதுபோல மது வாங்குகிறார்கள்.

தமிழகத்தில் தற்போது ஒரேயொரு ஆள்தான் படம் வாங்குகிறார் என்று சொல்கிறார்கள். அதனால்தான் கமல் படம் 100 நாட்கள் ஓடுகிறது. நான் 100 நாட்கள் பார்த்தே ரொம்ப நாள் ஆகிறது.

தவறான தலைப்பை வைத்தால்தான் மக்கள் பார்க்கிறார்கள். நல்ல தலைப்பை வைத்தால் பார்க்க மாட்டார்கள். மக்கள் சினிமா தியேட்டருக்கு வந்து படம் பார்த்தால்தான் நாங்கள் வாழ முடியும். அப்படிதான் இது மாதிரி நிகழ்வுகளில் பேச முடியும்.

சினிமா விமர்சனத்தை 3 நாட்கள் கழித்தெல்லாம் எழுத வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் எழுதலாம். இப்போதெல்லாம் முதல் காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே விமர்சனம் செய்கின்றனர்.. உலகம் அவ்வளவு வேகமாக உள்ளது..” என்றார்.

The post “மக்கள் சினிமா பார்த்தால்தான் நாங்கள் வாழ முடியும்” – நடிகர் ராதாரவி பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
“நடிப்பில் உன்னை ஏறி மிதிச்சிருவேன்..” – கமல்ஹாசனிடம் சவால் விட்ட ராதாரவி https://touringtalkies.co/i-would-have-stepped-on-you-in-acting-radhakrishnan-challenged-kamal-haasan/ Sat, 20 Feb 2021 07:38:28 +0000 https://touringtalkies.co/?p=13208 நடிகர் ராதாரவிக்கும், நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையில் இருக்கும் கோபதாபங்கள் கோடம்பாக்கம் அறிந்ததுதான். இந்தப் பிரச்சினை எதனால் எழுந்தது என்பது குறித்து நடிகர் ராதாரவி சமீபத்திய ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேட்டியில் நடிகர் ராதாரவி பேசும்போது, “கமல்தான் என்னை கே.பாலசந்தரிடம் சொல்லி ‘மன்மத லீலை’ படத்தில் அறிமுகம் செய்ய வைத்தார். இதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். அப்போதெல்லாம் நானும் அவரும், ‘வாடா’.. ‘போடா’.. என்று பேசக் கூடிய அளவுக்கு நண்பர்களாகத்தான் இருந்தோம். இந்த நடிகர் சங்கப் […]

The post “நடிப்பில் உன்னை ஏறி மிதிச்சிருவேன்..” – கமல்ஹாசனிடம் சவால் விட்ட ராதாரவி appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ராதாரவிக்கும், நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையில் இருக்கும் கோபதாபங்கள் கோடம்பாக்கம் அறிந்ததுதான்.

இந்தப் பிரச்சினை எதனால் எழுந்தது என்பது குறித்து நடிகர் ராதாரவி சமீபத்திய ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பேட்டியில் நடிகர் ராதாரவி பேசும்போது, “கமல்தான் என்னை கே.பாலசந்தரிடம் சொல்லி ‘மன்மத லீலை’ படத்தில் அறிமுகம் செய்ய வைத்தார். இதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். அப்போதெல்லாம் நானும் அவரும், ‘வாடா’.. ‘போடா’.. என்று பேசக் கூடிய அளவுக்கு நண்பர்களாகத்தான் இருந்தோம்.

இந்த நடிகர் சங்கப் பிரச்சினையின்போதுதான் எனக்கும் அவருக்கும் இடையில் மனத்தாங்கல் ஏற்பட்டது. ஒரு விழா மேடையில் அவர் பேசும்போது, மேடையில் இருந்து அத்தனை பேரையும் அவர்கள் வகிக்கும் பதவியைச் சொல்லி அழைத்தார். ‘இயக்குநர்கள் சங்கத் தலைவர் அவர்களே’.. ‘பெப்சியின் தலைவர் அவர்களே’.. என்றெல்லாம் அழைத்துப் பேசியவர், என்னை மட்டும் ‘ராதாரவி அவர்களே’ என்று மட்டும் சொல்லி அழைத்தார்.

இதைக் கேட்டபோது எனக்குள் சுருக்கென்றானது. கோபம் வந்தது. அதே மேடையில் நான் பேசும்போது ‘சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே’.. ‘சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களே’ என்றெல்லாம் இருக்கிற நடிகர்களையெல்லாம் அவர்களுடைய பட்டப் பெயர் சொல்லி அழைத்துவிட்டு கமல்ஹாசனை மட்டும் ‘கமல்ஹாசன் அவர்களே’ என்று மட்டும் குறிப்பிட்டேன்.

அந்த விழா முடிந்து கீழே இறங்கும்போது கமல் என் கையைப் பிடித்து இழுத்து ‘மத்தவனெல்லாம் சூப்பர் ஸ்டாரு.. நான் மட்டும் கமல்ஹாசனா..?’ என்று கேட்டார். ‘அப்போ மத்தவனெல்லாம் சங்கத் தலைவருங்க.. நான் மட்டும் சாதாரண ராதாரவியா..?’ என்று கேட்டேன். ‘நான் உன் பிரெண்ட்டுடா’ என்றார். ‘அதுனாலதான் நானும் சாதாரணமா கூப்பிட்டேன்’ என்று சொல்லிவிட்டேன்.

இதற்குப் பிறகு கமலுடன் நான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கைக் குறைந்து, கடைசியாக நடிக்கவே முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. கமல்ஹாசனின் படங்களில் நாசர் நடித்த கேரக்டர்களில் நான்தான் நடித்திருக்க வேண்டும். ஆனால், கமலுடன் ஏற்பட்ட இந்தப் பிரச்சினைகளினால்தான் அவர் என்னை அழைத்து வாய்ப்புக் கொடுக்கவில்லை.

இதன் பிறகு ரோட்டரி கிளப் சார்பா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ‘சிவாஜி’ ராம்குமாரின் அழைப்பின்பேரில் நாங்களெல்லாம் மதுரைக்கு ரயிலில் சென்றோம். எங்களுடன் கமலும் வந்தார்.

அப்போது நானும் கமலும் மட்டும் கொஞ்ச நேரம் தனியா பேசினோம். அப்போது, “ஏன்.. ஒய்.ஜி.மகேந்திரனை இப்பல்லாம் கூப்பிடுறதே இல்லை. அவர் நல்ல நடிகர்ய்யா.. அவரைக் கூப்பிட்டு நடிக்க வைய்யா…” என்று கேட்டுக் கொண்டேன். அப்போது “என்னைய மட்டும் உன்கூட நடிக்க வைச்சுப் பாரு.. உன்னை ஏறி மிதிச்சிருவேன்…” என்று கமலிடம் அப்போதே சவால்கூட விட்டேன்.

ரஜினிதான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கொடுத்திருக்கார். கமல் கொடுக்கலை. ஆனாலும், கமலின் புகைப்படங்கள்தான் என் வீட்டில் அதிகமாக இருக்கும்.

கமல் ஒரு மிகச் சிறந்த நடிகர். சிவாஜிக்குப் பிறகு நான் பெரிதும் மதிக்கும் நடிகர்ன்னா அது கமல்தான். ஆனால் கமல் மட்டுமே தமிழ் சினிமாவுக்கு அத்தாரிட்டி கிடையாது. அவர் மட்டுமே தமிழ் சினிமாவுக்கான டிக்சனரி கிடையாது.. தமிழ்ச் சினிமாவில் இருக்கும் சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர் அவ்வளவுதான்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ராதாரவி.

The post “நடிப்பில் உன்னை ஏறி மிதிச்சிருவேன்..” – கமல்ஹாசனிடம் சவால் விட்ட ராதாரவி appeared first on Touring Talkies.

]]>
“நடிகர் விஜய் 2026-ல் நிச்சயமாக அரசியலுக்கு வருவார்”-ராதாரவியின் கணிப்பு https://touringtalkies.co/actor-vijay-will-definitely-enter-politics-in-2026-radharavi-predicts/ Thu, 18 Feb 2021 05:00:11 +0000 https://touringtalkies.co/?p=13142 “நடிகர் விஜய் 2026-ம் ஆண்டில் நிச்சயமாக அரசியலுக்கு வருவார்…” என்று உறுதியுடன் சொல்கிறார் நடிகர் ராதாரவி. இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “விஜய் அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் நான்தான் அவருக்கு அப்பாவாக நடித்தேன். அன்றிலிருந்து இன்றுவரையிலும் நான் அவரை நன்கு அறிவேன். அவரை நான் ‘விஜிம்மா’ என்றுதான் கூப்பிடுவேன். அவரும் இப்போது அரசியலுக்கு வருவதற்கு ஆர்வமாக்ததான் இருக்கிறார். சூழ்நிலைதான் சரியாக அமையவில்லை. ஆனால், நிச்சயமாகச் சொல்கிறேன்.. 2026-ம் ஆண்டில் விஜய் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார். […]

The post “நடிகர் விஜய் 2026-ல் நிச்சயமாக அரசியலுக்கு வருவார்”-ராதாரவியின் கணிப்பு appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் 2026-ம் ஆண்டில் நிச்சயமாக அரசியலுக்கு வருவார்…” என்று உறுதியுடன் சொல்கிறார் நடிகர் ராதாரவி.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “விஜய் அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் நான்தான் அவருக்கு அப்பாவாக நடித்தேன். அன்றிலிருந்து இன்றுவரையிலும் நான் அவரை நன்கு அறிவேன். அவரை நான் ‘விஜிம்மா’ என்றுதான் கூப்பிடுவேன்.

அவரும் இப்போது அரசியலுக்கு வருவதற்கு ஆர்வமாக்ததான் இருக்கிறார். சூழ்நிலைதான் சரியாக அமையவில்லை. ஆனால், நிச்சயமாகச் சொல்கிறேன்.. 2026-ம் ஆண்டில் விஜய் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார். அரசியலில் மிகப் பெரிய இடத்துக்குப் போவார்.. இது எனது நம்பிக்கை..” என்று சொல்லியிருக்கிறார்.

The post “நடிகர் விஜய் 2026-ல் நிச்சயமாக அரசியலுக்கு வருவார்”-ராதாரவியின் கணிப்பு appeared first on Touring Talkies.

]]>
“நயன்தாராவுக்குத்தான் வேறு இடத்தில் சம்பந்தம் இருக்கு…” – ராதாரவியின் குத்தல் பேச்சு..! https://touringtalkies.co/actor-radharavi-comment-about-actress-nayanthara/ Fri, 18 Dec 2020 05:24:11 +0000 https://touringtalkies.co/?p=11185 மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு சினிமா மேடையில் பேசும்போது நடிகை நயன்தாராவை நடிகர் ராதாரவி தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதனால் நடிகர் ராதாரவியை அப்போது அவர் இருந்த தி.மு.கழகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தார்கள். இந்த நீக்கத்தைத் தொடர்ந்து தி.மு.கழகத்தில் இருந்து விலகிய ராதாரவி, பாரதீய ஜனதா கட்சியில் போய்ச் சேர்ந்தார். இந்த நிலையில் நயன்தாராவை கிண்டல் செய்த விவகாரம் பற்றி சமீபத்தில் ராதாரவி பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில், “நான் நயன்தாராவைப் பத்தி […]

The post “நயன்தாராவுக்குத்தான் வேறு இடத்தில் சம்பந்தம் இருக்கு…” – ராதாரவியின் குத்தல் பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு சினிமா மேடையில் பேசும்போது நடிகை நயன்தாராவை நடிகர் ராதாரவி தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக பெரும் சர்ச்சை கிளம்பியது.

இதனால் நடிகர் ராதாரவியை அப்போது அவர் இருந்த தி.மு.கழகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தார்கள். இந்த நீக்கத்தைத் தொடர்ந்து தி.மு.கழகத்தில் இருந்து விலகிய ராதாரவி, பாரதீய ஜனதா கட்சியில் போய்ச் சேர்ந்தார்.

இந்த நிலையில் நயன்தாராவை கிண்டல் செய்த விவகாரம் பற்றி சமீபத்தில் ராதாரவி பேட்டியளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில், “நான் நயன்தாராவைப் பத்தி தவறான அர்த்தத்தில் எதையுமே சொல்லலையே.. ‘அவங்க கவர்ச்சியாவும் நடிக்கிறாங்க. சீதை வேஷத்துலேயும் நடிக்கிறாங்க. ரெண்டுக்குமே கச்சிதமா பொருந்துறாங்க’ன்னுதான் சொன்னேன். எனக்கும் நயன்தாராவுக்கும் சம்பந்தமே இல்லையே.. ஆனால், அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது அவங்களுக்கு வேற இடத்துல சம்பந்தம் இருக்குன்னு.. இதைத்தான் பெண்களை அவமானப்படுத்தி பேசிட்டேன்னு சொல்லி தி.மு.க.வில் இருந்து என்னைத் தற்காலிகமா நீக்கிட்டாங்க. ‘எதுக்குப்பா தற்காலிகமா நிக்குறீங்க..? நிரந்தரமாவே நீக்குறீங்களேன்’னு சொல்லிட்டு நானே வெளில வந்துட்டேன்..” என்று பேசியிருக்கிறார் நடிகர் ராதாரவி.

The post “நயன்தாராவுக்குத்தான் வேறு இடத்தில் சம்பந்தம் இருக்கு…” – ராதாரவியின் குத்தல் பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
“நீங்க மட்டும் திருடலையா..?” – நடிகர் ராதாரவியின் காட்டமான கேள்வி..! https://touringtalkies.co/actor-radhavai-interview-about-actors-assocaition-crisis/ Mon, 16 Nov 2020 09:36:07 +0000 https://touringtalkies.co/?p=10091 சரத்குமாரும், ராதாரவியும் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தபோது சங்கப் பணத்தில் கையாடல் செய்துவிட்டதாக தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நடிகர் ராதாரவி.. “நீங்க மட்டும் திருடலையா…?” என்று எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு வீடியோ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ராதாரவி இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார். அப்போதைய நடிகர் சங்கத்திற்கும், இப்போதைய நடிகர் சங்கத்திற்கும் உள்ள வித்தியாசம் பற்றிய கேள்விக்கு ராதாரவி பதிலளிக்கையில், “அப்போ இருந்த காங்கிரஸ்ல வ.உ.சிதம்பரனார் இருந்தார். இப்போ இருக்குற காங்கிரஸ்ல ப.சிதம்பரம் இருக்கார். […]

The post “நீங்க மட்டும் திருடலையா..?” – நடிகர் ராதாரவியின் காட்டமான கேள்வி..! appeared first on Touring Talkies.

]]>
சரத்குமாரும், ராதாரவியும் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தபோது சங்கப் பணத்தில் கையாடல் செய்துவிட்டதாக தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நடிகர் ராதாரவி.. “நீங்க மட்டும் திருடலையா…?” என்று எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்.

ஒரு வீடியோ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ராதாரவி இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

அப்போதைய நடிகர் சங்கத்திற்கும், இப்போதைய நடிகர் சங்கத்திற்கும் உள்ள வித்தியாசம் பற்றிய கேள்விக்கு ராதாரவி பதிலளிக்கையில், “அப்போ இருந்த காங்கிரஸ்ல வ.உ.சிதம்பரனார் இருந்தார். இப்போ இருக்குற காங்கிரஸ்ல ப.சிதம்பரம் இருக்கார். அது மாதிரிதான் அப்போ இருந்த நடிகர் சங்கமும்.. இப்போ இருக்குற நடிகர் சங்கமும்.

நான் நடிகர் சங்கத்துல பொறுப்புக்கு வந்தப்போ அந்த இடமே சுடுகாடு மாதிரியிருந்துச்சு. நான் வந்த பின்னாடிதான் டான்ஸ் கிளாஸ், ஜிம், வாலிபால், ஷட்டில் காக் இதையெல்லாம் கொண்டு வந்தேன். எப்பவும் கூட்டம், கூட்டமா.. கலகலப்பா இருந்தது அந்த இடம்.

ஒரு தாயா.. புள்ளையா எல்லார்கிட்டேயும் பழகினோம். இப்போ எல்லாம் போச்சு. சினிமாவை வைச்சு எதையும் கணக்குப் போடக் கூடாது. இவங்க எதையும் பார்மெட்ல செய்யலை. இப்பவே அதற்கான அறிகுறிகள் தெரியுது.

இப்போ ஐசரி கணேஷ் வந்திருக்காரு. நிச்சயமாக நடிகர் சங்கத்தைக் கைப்பற்றுவாருன்னு நினைக்கிறேன். அவர் வர வேண்டியவருதான். வரணும். நல்ல மனுஷன். கொடை வள்ளல். எல்லாருக்கும் நல்லது செய்யுற குணமுடையவர். அவங்கப்பாவும் நாடக நடிகர். அவரும் நாடக நடிகர். அதுனால அந்த நல்ல குணம் அவர்கிட்ட இருக்கு.

நம்ம வாழ்க்கையே ஒரு தற்காலிகமானதுதான். இதுல நடிகன்ற போஸ்ட்டு அதைவிட தற்காலிகமானது. நடிகர் சங்கத் தலைவர்ன்ற பதவி அதைவிட தற்காலிகமானது. அதை அவங்க புரிஞ்சுக்கணும்.

நடிகர் சங்கத்துல நான் 9 வருஷம் தலைவராக இருந்திக்கிறேன். 6 வருஷம் கமிட்டி மெம்பரா இருந்திருக்கேன். 6 வருஷம் செயலாளரா இருந்திருக்கேன். பெப்சியின் செயலாளார 7 வருஷம் இருந்திருக்கேன். இப்போ டப்பிங் யூனியன்ல் 35 வருஷமா பொறுப்புல இருக்கேன். நான் இப்போ வேணாம்ன்னு சொல்லிட்டுப் போனாலும் விட மாட்டாங்க. எல்லாருக்கும் தேவையானதை செஞ்சதாலதான் என்னை வைச்சிருந்தாங்க.

அதுல திருடு போயிருச்சு.. இங்க திருடு போயிருச்சுன்னு சொல்றவங்க சொல்லுவாங்க. நாம செவி சாய்க்கக் கூடாது. நான் சைலண்டா இருக்கேன். ஆனால், அவங்க சைலண்ட்டா இருக்க மாட்டேன்றாங்க.

ஆ.. ஊ..ன்னா சரத்குமாரை பத்தி பேசுறாங்க. அவரைப் பத்திப் பேசக் கூடாது. அவர் நடிகராக, ஹீரோவாக நடித்தவர். கோடில சம்பளம் வாங்கினவர். ச்சும்மா எதுக்கெடுத்தாலும் ‘சரத்குமார் திருடிட்டாரு’.. ‘சரத்குமார் திருடிட்டாரு’ன்னு சொன்னால் எப்படி.. அப்போ நீ திருடலையா..? ‘ஐயோ நாங்க அப்படி பண்ணலை.. நாங்க நடிச்சுக்கிட்டிருக்கோம்ன’்னு சொல்றாங்க. அப்போ நாங்க மட்டும் என்ன செரைச்சுக்கிட்டா இருக்கோம்..? அப்படீன்னு பதில் சொல்லியிருக்கேன்.

இப்பவும் சொல்றேன்.. கடைசியா நடந்த நடிகர் சங்க தேர்தல் மீட்டிங்ல நான் ஒண்ணு சொல்லிட்டு வந்தேன். ‘எங்களைத் தேர்ந்தெடுத்தீங்கன்னா அதுனால எங்களுக்கு நஷ்டம்தான். ஆனால், எங்களைத் தேர்ந்தெடுக்கலைன்னா எங்களுக்கு லாபந்தான்’னு சொன்னேன்.

நிறைய பேர் கடைசி நேரத்துல பணம் வாங்கிட்டுத்தான் ஓட்டு போட்டாங்க. ரித்திஷ் தம்பிதான் பணம் கொடுத்தார். அவங்க ஜெயிச்சாங்க. இப்போ மூணே வருஷத்துல ஆட்டம் காட்டிருச்சு. கம்பியெல்லாம் வெளில தெரியுது. கட்டிடம் கட்டினால்தான் எனக்குன்னு வேகமா பேசுனாங்க.. அதெல்லாம் வெட்டி, வீறாப்பு..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ராதாரவி.

The post “நீங்க மட்டும் திருடலையா..?” – நடிகர் ராதாரவியின் காட்டமான கேள்வி..! appeared first on Touring Talkies.

]]>
“கூட்டிக் கழிச்சுப் பாரு; கணக்கு சரியா வரும்’ – டயலாக் எப்படி வந்தது..?” நடிகர் ராதாரவியின் விளக்கம் https://touringtalkies.co/radharavi-explains-his-dialogue-in-annamalai-movie/ Fri, 09 Oct 2020 10:32:51 +0000 https://touringtalkies.co/?p=8531 தமிழ்ச் சினிமாக்களில் பல்லாண்டுகளாக நினைவில் நிற்கும்படியான வசனங்கள் இடம் பெற்றிருப்பது ஒரு சில திரைப்படங்களில்தான். அந்த ஒரு வசனமே அந்தப் படத்தின் பெயரைச் சொல்லும் என்பதை போல புகழ் பெற்ற வசனங்களும் உண்டு. அந்த வகையில் ‘பாட்ஷா’ படத்தில் இடம் பெறும் ‘நான் ஒரு தடவை சொன்னா’ என்ற வசனம்போல் ரஜினியின் ‘அண்ணாமலை’ படத்தில் இடம் பெறும் ‘கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்கு சரியா வரும்’ என்ற டயலாக்கும் பெரும் பெயரைப் பெற்றது. ஆனால் இந்த டயலாக்கை […]

The post “கூட்டிக் கழிச்சுப் பாரு; கணக்கு சரியா வரும்’ – டயலாக் எப்படி வந்தது..?” நடிகர் ராதாரவியின் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>

தமிழ்ச் சினிமாக்களில் பல்லாண்டுகளாக நினைவில் நிற்கும்படியான வசனங்கள் இடம் பெற்றிருப்பது ஒரு சில திரைப்படங்களில்தான். அந்த ஒரு வசனமே அந்தப் படத்தின் பெயரைச் சொல்லும் என்பதை போல புகழ் பெற்ற வசனங்களும் உண்டு.

அந்த வகையில் ‘பாட்ஷா’ படத்தில் இடம் பெறும் ‘நான் ஒரு தடவை சொன்னா’ என்ற வசனம்போல் ரஜினியின் ‘அண்ணாமலை’ படத்தில் இடம் பெறும் ‘கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்கு சரியா வரும்’ என்ற டயலாக்கும் பெரும் பெயரைப் பெற்றது. ஆனால் இந்த டயலாக்கை பேசியவர் அந்தப் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ராதாரவி.

இது குறித்து சமீபத்தில் ஒரு தனியார் யுடியூப் சேனலுக்கு ராதாரவி அளித்த பேட்டியில் இந்த வசனம் வெளிவந்த விதம் பற்றிய கதையை சுவாரசியமாகச் சொல்லியுள்ளார்.

அவர் இது பற்றிப் பேசும்போது, “பொதுவா நான் நடிக்கிற படங்கள்ல என்னோட மேக்கப், தோற்றம், மாடுலேஷன் இதையெல்லாம் சொந்தமா அமைச்சுக்குவேன். இயக்குநர்களும் என்கிட்ட அதை விட்ருவாங்க.. ஏன்னா.. என்னோட கேரக்டர் நல்லாயிருக்கணும்.. ரசிகர்கள்கிட்ட அது நல்லா ரீச் ஆகணும்ன்னு நினைப்பேன்.

அப்படித்தான் இந்த ‘அண்ணாமலை’ படத்துலேயும் நினைச்சேன். மேனரிசமா மார்லன் பிராண்டோ ‘காட்பாதர்’ படத்துல செஞ்ச மாதிரி தலைல சொரியறதை செய்யணும்ன்னு செஞ்சு பார்த்தேன். அப்புறம்தான் இதை ‘நாயகன்’ல கமல் செஞ்சுட்டாரேன்னு தோணுச்சு.. சரின்னு அப்படியே கையைப் பின்னாடி கொண்டு போய் அடிக்கடி முதுகைத் தேய்க்கிற மாதிரி பேசுறதை மேனரிசமா வைச்சுக்கிட்டேன்.

அப்புறம் ரஜினி ஸார் அடிக்கடி என்கிட்ட ‘இதுல டிரேட் மார்க்கா வர்ற மாதிரி ஏதாவது டயலாக்கை பிடிங்க’ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு. நானும் அது பத்தியே யோசனை செஞ்சுக்கிட்டிருந்தேன். அந்த யோசனைல வந்ததுதான் நிழல்கள் ரவிகிட்ட நான் பேசுற அந்த ‘கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்கு சரியா வரும்’ என்ற டயலாக். இது நல்லாயிருந்ததால படம் முழுக்க வைச்சுக்கிட்டாங்க..

ஆனால், இந்த டயலாக் என்னோடதுல்ல.. ‘படிக்காத மேதை’ படத்துல வந்த வசனம்தான். அந்தப் படத்துல சிவாஜி அப்பாவை வீட்டைவிட்டு துரத்திருவாங்க. அவருக்கு வேற வேலையும் தெரியாது. எங்க போறதுன்னு தெரியாம இருக்கிறவரை துரைசாமின்ற நடிகர் மம்மட்டி வேலைக்குக் கூட்டிட்டு வருவாரு.. அதைப் பார்த்திட்டு சிவாஜி அப்பா.. ‘இதை வைச்சு என்ன செய்றது’ன்னு அப்பாவியா கேப்பாரு. அப்போ துரைசாமி அதை வைச்சு எப்படி மண்ணு தோண்டுறதுன்னு சொல்லிக் கொடுத்திட்டு.. ‘வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்.. தெரியாததையெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டி வரும். கத்துக்கிட்டுத்தான் ஆகணும்.. கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்கு புரியும்’ன்னு சொல்லுவாரு..

அந்த டயலாக் இந்த நேரத்துல எனக்கு சட்டுன்னு ஞாபகம் வந்தது.. உடனேயே அப்படியே பக்குன்னு பிடிச்சுட்டேன். இத்தனை வருஷம் கழிச்சும் இன்னிக்கும் ஒரு வில்லன் நடிகர் பேசுன டயலாக்குக்கு இத்தனை மாஸ் இருக்குறதை நினைச்சா ரொம்பவும் பெருமையா இருக்கு..” என்றார் பெருமையோடு..!

The post “கூட்டிக் கழிச்சுப் பாரு; கணக்கு சரியா வரும்’ – டயலாக் எப்படி வந்தது..?” நடிகர் ராதாரவியின் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>